Showing posts with label Kallakurichi District. Show all posts
Showing posts with label Kallakurichi District. Show all posts

Friday, 20 December 2024

Raghunatha Puram, Rock Arts/Rock Paintings/பாறை ஓவியங்கள், Raghunatha Puram, Kallakurichi District, Tamil Nadu.

The visit to Rock Arts at Raghunatha Puram in Kallakurichi District, was a part of “Rock Arts of Nadu Naadu Visit, in Viluppuram and Kallakurichi Districts”, organised by திருவண்ணாமலை மாவட்ட வரலாற்றுஆய்வு நடுவம், on 17th November 2024. Thanks to Mr. Gandhirajan, the Rock Art expert, who guided us to understand Rock Arts (தமிழ் மூலம் திரு காந்திராஜன் அவர்கள்).


சமவெளிப் பகுதிக்கு அருகாமையிலேயே வடக்கு திசையில் அமைந்துள்ள பாறைக் குன்றில் ஓவியங்கள் காணப்படுகின்றன. பொதுவாக பாறை ஓவியங்கள் வாழ்விட குகை மற்றும் பாறை ஒதுக்குகளின் உட்புறத்தில் வரைவதுண்டு. இங்கு வரையப்பட்ட இடம் தங்குவதற்கான இடமல்ல, ஆனால் வழித்தடத்தில் பயணிப்போர் பார்வையில் படும்படியான இடமாக உள்ளது. அதே நேரத்தில் மழை நீரால் பாதிக்காவண்ணம் உள்ள பாறையினைத் தேர்ந்தெடுத்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்திலேயே வரைவதுண்டு. மிக அரிதாக கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணம் பயன்படுத்துயுள்ளனர். அந்த வகையில் இங்குள்ள ஓவியங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் வரையப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. இங்கு மனித உருவங்களின்றி விலங்கு உருவங்கள் மட்டுமே வரையப்பட்டுள்ளது.

இரண்டு விலங்குகள் காணப்படுகின்றது. அதில் ஒன்று மஞ்சள் வண்ணத்திலும் மற்றொன்று சிவப்பு வண்ணத்திலும் உள்ளன. மஞ்சள் வண்ண விலங்கு நிலகை போன்ற விலங்கினமாக இருக்கக்கூடும் (பெரிய ஆடு/மான் குடும்பம், ஆய்வுக்கு உரியது) சிவப்பு வண்ணத்தில் உள்ளது மாட்டின் உருவம். மஞ்சள் வண்ண விலங்கின் தலை மற்றும் கொம்புகள் சிறுத்தும் உடல் திமிலற்ற மாட்டின் வடிவத்தை ஒத்தும் கால்கள் சற்று மெலிந்தும் கணப்படுகின்றது. இதன் உருவம் அடர்த்தியான கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. அதன் உடம்பின் உட்புறம் உள்ளுருப்பைக் காட்டும் விதமாக மெல்லிய கோடுகளால் இரண்டு நீள்வட்ட வரைவு குறுக்கு கோடுகளுடன் நிரப்பபட்டுள்ளது. இவ்விலங்கின் பின் பகுதி சிதிலமடைந்து விட்டது. இங்கு காடப்பட்டிருக்கும் உள் உருப்பு போன்ற வரைவுகள் ஆலம்பாடி மற்றும் செத்தவரை ஓவியங்களில் உள்ளதைப் போன்ற வடிவில் ஒத்து காணப்படுகின்றது. இதற்கு சற்று மேலே உள்ள எருமை மாட்டின் உருவம் சிவப்பு வண்ணத்தில் நேர்த்தியான உடலமைப்பில் கோட்டோவியமாக காட்டப்பட்டுள்ளது. இதன் உடல் பகுதியில் வெறுமனாகவே உள்ளது. வளைந்த கொம்புகளுடன், நீண்ட வாலுடன் காணப்படுகின்றது.

இந்த ஓவியங்களுக்கு சற்று அருகில் மான் ஒன்றின் உருவம் நிற்கும் நிலையில் கழுத்தை வளைத்து முதுகுப் பகுதியை நாவால் வருடுவது போல காட்டப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான உடலமைப்பு மற்றும் அளவுகளுடன் காட்டப்பட்ட அரிய முயற்ச்சி. மேலும் மானின் உருவம் சிவப்பு வண்ணத்தில் கோட்டோவியமாக வரையபட்டு, உடல் பகுதியில் உடம்பின் புறக்கோட்டுக்கு இணையாக உடம்பின் உட்புறத்தில் சிவப்பு வண்ணத்தில் கோட்டோவியமாக காட்டப்பட்டுள்ளது. இவ்விரு சிவப்பு கோடுகளுக்கிடையே மஞ்சள் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களைக் கொண்டு புதிய முயற்ச்சியில் இந்த ஓவியத்தை அமைந்துள்ளது.

இங்குள்ள மற்றொரு விலங்கின் உருவம் இரண்டு கொம்புகளுடன் மான் போலவும், உடலமைப்பில் மாடு போல நீண்ட வாலுடன் காணப்படுகின்றது. (கூடுதல் ஆய்வுக்கு உரியது) (நீலான் - Boselaphs tragocamelus) என்பது ஆசியாவில் காணப்படும் ஒருவகை மான் இனமாகும். மான் இனங்களிலேயே நீலான் உருவ அளவில் மிகப் பெரியது. இதன் உடல் பகுதி சற்று நீல நிறத்துடன் இருப்பதால் இதை நீலான், நீலமான், நிலகை மான் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டுகின்றது. இந்த வகை மான் இனம் இந்தியா, தெற்கு நேபாளம், கிழக்கு பாகிஸ்தான் பகுதிகளில் வாழ்கின்றன. நீலான் தென்னிந்தியாவின் திறந்த வெளிக் காடுகள் மற்றும் மேட்டுப்பாளையம் வரை பரவி இருந்ததாகக் கூறுகின்றனர்.

இந்த நீலான் மானின் உருவம் கோட்டோவியமாக நேர்த்தியான உடலமைப்பில் சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இதன் உடற்பகுதியில் ஆங்காங்கே சிவப்பு வண்ணத்தால் வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும் சில விலங்குகளின் உருவங்களும், பறவை ஒன்றின் உருவமும் மங்கிய நிலையில் காணப்படுகின்றன.



Usually, the Rock Arts are drawn on elevated vantage points, where the movement of animals and enemies is spotted from a long distance. But this group of Rock Art is drawn on a rock in a plain area, which is viewed by the passerby. The specialty of this rock art is drawn with Red and Yellow ochre. Also, no human image is drawn.

In one place, two animals are drawn, in which one is drawn with yellow ochre and the other with red ochre. The yellow ochre may belong to the Goat or Deer family. The red ochre-drawn animal may be a bullock with short horns and without a hump. The legs are slim. Oval and cross lines are drawn to show its organs. This is very much similar to the Alambadi and Settavarai rock arts. A buffalo is drawn above with red ochre. The buffalo has curved horns and a long tail.  

Near the above group, a Deer is drawn with a double line of red ochre. Yellow ochre is used to fill the two lines. This deer with bulky like a bullock with two horns. As per the experts, this may be a variety of Neelan, rarely found in Asian countries. Also called Neelaman, Neelakai, Nilakaiman, etc. This variety of Deer lives in India, the southern part of Nepal, and the eastern part of Pakistan. It was also spread in Southern India, up to Mettupalayam. 

This Neelan Deer is drawn with red ochre. Apart from an outline, the inside of the body is also painted with red ochre, without community.  Apart from this, some animal and bird art is found faintly.   






LOCATION OF THE CAVE: CLICK HERE
11.7976274,79.2429361.



--- OM SHIVAYA NAMA ---

Wednesday, 18 December 2024

Thenkunam Rock Arts/Rock Paintings/பாறை ஓவியங்கள், Thenkunam, Kallakurichi District, Tamil Nadu.

The visit to Rock Arts at Thenkunam in Kallakurichi District was a part of “Rock Arts of Nadu Naadu Visit, in Viluppuram and Kallakurichi Districts”, organised by திருவண்ணாமலை மாவட்ட வரலாற்றுஆய்வு நடுவம், on 17th November 2024. Thanks to Mr. Gandhirajan, the Rock Art expert, who guided us to understand Rock Arts (தமிழ் மூலம் திரு காந்திராஜன் அவர்கள்). This place, Thenkunam, is near Elavanasur in Kallakurichi District. The Rocky Hill, where the Rock Arts are found in 4 places, is about 2 km from the Thenkunam Village.  


தேன்குணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவானசூர் அருகே உள்ள தேன்குணம் கிராமத்தின், மனிதர்கள் வாழ்விடப்பகுதிக்கு சற்று தள்ளி ஒரு சிறிய மலைக் குன்றில் நான்கு இடங்களில் சிவப்பு வண்ண பாறை ஓவியங்களும், பாறைக்கீறல்களும் காணப்படுகின்றது.

தொகுப்பு: I.
தற்போது கோவில் விமானம் உள்ள பாறையின் கிழக்கு பகுதியில் சில சிவப்பு வண்ண ஓவியங்கள் மிகவும் மங்கிய நிலையில் காணப்படுகின்றன.  இரண்டு மான்கள் எதிரெதிரே இருப்பது போல கோட்டோவியமாக சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இரண்டு மான்களும் கிளை இல்லா நீண்ட கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளது.  இதில் ஒரு மான் தெளிவாகவும் மற்றொன்று அழிந்த நிலையிலும் காணப்படுகின்றது. இம்மான்களுக்கு இடையே மேலிருந்து இரட்டை கோடுகள் வளைந்து வளைந்து பாறையின் கீழ்வரை செல்கின்றது இந்த வளைந்த இரட்டை கோடுகள் நீரோடையாகவோ அன்றி ஆறாகவோ காட்டியிருக்கலாம் என்றும் அவ்விரு மான்களும் நீர் அருந்த வந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. இதற்கு அருகில் அழிந்த நிலையில் சில விலங்கு போன்ற உருவங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் அடையாளம் காண இயலாத சில ஓவியங்களும் காணப்படுகின்றன.   

Group-I.
Steps are built to access the Selliamman Temple.  This rock art is found on a rock in front of the Selliamman Temple. In this red ochre rock art, Two Deer are standing opposite each other. The Horns are long without branches. One Deer is faintly visible.  Two lines are drawn with bends and curves between the Deer, from the top of the rock to the bottom. These two lines may represent a river. The Deer might have come for drinking water. Also, some undistinguished images are found in this group.




தொகுப்பு: II.
முதல் இடத்தில் இருந்து சுமார் 50 மீ. தொலைவில் வடக்கில் உள்ள சிறிய பாறை ஒதுக்கில் சில உருவங்கள் சிவப்பு வண்ணத்தில் கோட்டோவியங்களாக வரையப்பட்டுள்ளது. இதில் ஒரு மான் போன்ற உருவத்தைத் தவிர மற்றவை அழிந்த நிலையில் உள்ளன. இதில் 18 புள்ளிகளைக் கொண்டு மாலை வடிவில் ஒரு ஓவியம் வரையப்பட்டிருப்பது குறிப்பிட்தக்கது. தோற்றத்தின் அடிப்படையில் வேட்டைக்காக வைக்கும் கண்ணியைப் போல தெரிகின்றது. அது போல அலங்காரத்துக்காக கூட வரைந்திருக்கலாம்.

Group-II.
This is about 50 meters away from the Group-I rock arts on the same hill. This group of rock art was done with red ochre. Except for a Deer, the others are faintly visible. An art is found in the form of a garland with 18 dots. It may be for an ornamental or a catch for the animals.


தொகுப்பு: III.
இரண்டாம் இடத்தில் இருந்து மேற்கே சுமார் 50 மீ. தொலைவில் உள்ள திறந்த வெளி பாறை ஒன்றில் கற்கீரல் ஓவியங்கள் காணப்படுகின்றன.  இங்கு ஓவியங்கள் இரண்டு தொகுதிகளாக செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் மனித உருவம் ஒன்று விலங்குக்கு அருகே நடந்து வருவது போல காட்டப்பட்டுள்ளது. இவர்களது தலைப்பகுதிகளில் சில வட்டம் மற்றும் சில வடிவங்கள் காணப்படுகின்றது. இவ்வடிவங்கள் திட்டமிட்டே செதுக்கப்பட்டுள்ளன. இதன் காரணம் அறிய இயலவில்லை. வேட்டைச் சமூகத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகளாக இருக்கக்கூடும் (ஆய்வுக்கு உரியது).

Group-III.
This group is about 50 meters from group II, the rock arts. This is in the form of petroglyphs. This group consists of two sets of petroglyphs. In both groups, a Human in a walking posture is shown. On the top of their heads, some organized round patterns are chiseled. These may represent some weapons used for hunting. Further research is required on these petroglyphs.    




தொகுப்பு: IV.
சமவெளிக்கு சற்று உயரே கண்காணிப்புக்கு உகந்த பாறை ஒன்றில் சில ஓவியங்கள் சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன. இதில் சில ஓவியங்கள் அழிந்த நிலையிலும், மங்கிய நிலையிலும் காணப்படுகின்றன. இங்கு வரையப்பட்ட ஓவியம் ஒன்றில் பெரிய உருவத்தில் புலி போன்ற விலங்கு அமர்ந்த நிலையிலும் அதன் எதிர்புறம் சிறிய உருவத்தில் நாய் ஒன்றின் உருவமும் எதிர் எதிரே வரையப்பட்டுள்ளது. இதை வரைந்த ஓவியன் இரண்டு மாறுபட்ட குணமுள்ள விலங்குகளை அருகருகே காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை சராசரி உருவ அளவை விட பெரிதாகவும், சிறிதாகவும் காட்டப்பட்டுள்ளது. பாறை ஓவியங்களில் பொதுவாக புலியினை வரையும் போது வேட்டையில் இருப்பது போல அல்லது வேட்டைக்கு தயாராகும் நிலையிலையே காட்டப்படும். ஆனால் இங்கு அமர்ந்த நிலையில் பெரிய உருவமாகக் காட்டப்படுவதும், அதற்கருகே பயமின்றி வாலை உயரே தூக்கிய நிலையில் நாய் காட்டப்படுவது ஒரு காரணமாகத் தான் இருக்கக்கூடும். ஒருவேளை, வயது முதிர்ந்து நடக்க இயலாத நிலையில் உள்ள புலியாகக் கூட இருக்கலாம் ஆகையால் நாய் மிக அருகில் சென்று புலியின் முகத்துத்துக்கு நேராக முகம் வைத்து பார்ப்பது போல காட்டப்பட்டிருக்கலாம். அதுபோல இரண்டு விலங்குகளும் நல்ல நட்பில்கூட இருக்கலாம். இரு வெவ்வேறு சூழலில் வெவ்வேறு மனநிலையில் உள்ள விலங்குகளை ஒருங்கே காட்டுவது சிறப்பாகும்.

இவ்வோவியங்களுக்கு அருகே சில மனித உருவங்களும் மான்களும் கோட்டோவியங்களாக வரையப்பட்டுள்ளது. இரு மான்களுக்கு பின்புறம் வேடன் ஒருவன் உள்ளான். அதில் ஒரு மான் தலையைத் திருப்பி பின்னால் பார்ப்பதும்மற்றொன்று எதார்த்தமாகவும் காட்டப்பட்டுள்ளது.

இம்மான்களுக்கு சற்று அருகே சில மனித உருவங்கள் காணப்படுகின்றது. அவை கோட்டோவியங்களாக சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது.

இங்குள்ள இரண்டு மனித உருவங்கள் கோட்டோவியங்களாக வரைப்பட்டிருப்பினும், இதில் ஒரு மனித உடற்பகுதி குறுக்குக் கோடுகளுடன் காட்டப்பட்டு உள்ளது. அது மரக்கொடிகளை கயிறு போன்று கட்டியிருக்கலாம், மேலும் அவனது கையில் நீண்ட குச்சி ஒன்றும், அதன் முனைப்பகுதி *v* வடிவத்தில் உள்ளது, இது வேட்டைக்குப் பயன்படும் கருவியாக இருக்கக்கூடும். மற்றொரு உருவம் மிக எளிமையாக கையை விரித்த நிலையில் காட்டப்பட்டுள்ளது.

இந்த மலையில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியர்கள் தாங்கள் கண்ட காட்சியினை நேர்த்தியாக வெவ்வேறு இடங்களில் பதிவு செய்துள்ளனர். இம்மலையில் பாறைகள் அதிக அளவில் உடைக்கப்பட்டதால் பல ஓவியங்கள் அழிந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.

Group – IV.
This rock art was done in red ochre. In this group, a tiger-like animal and a dog-like animal are drawn with their faces close to each other. The Tiger is in a squatting position. These are a little larger than the actual animal's size. It is unusual and special to draw two different characters and animal behaviors close to each other.

Near the tiger, two deer and a group of human beings are drawn. In the two deer, one is looking at the Hunter, by turning its head, and the other one looks normal.

Two humans are drawn with little difference from the usual rock art. Some cross lines are drawn, which may represent some creepers that may be tied over the body. A man holds a long stick with a “V” shape at the end. This may be a weapon used for hunting.




LOCATION OF THE CAVE:     CLICK HERE
11°47'54.1"N 79°14'43.0"E


--- OM SHIVAYA NAMA ---

Tuesday, 17 December 2024

Gulam Dargha/Gulam Dhakka, Rock Arts/Rock Paintings/ பாறை ஓவியங்கள், and Rock Cupules, Near Pidagam, Kallakurichi District, Tamil Nadu.

The visit to Rock Arts at Gulam Dargha in Kallakurichi District, was a part of the “Rock Arts of Nadu Naadu Visit, in Viluppuram and Kallakurichi Districts”, organised by திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுநடுவம், on 17th November 2024. Thanks to Mr. Gandhirajan, the Rock Art expert, who guided us to understand Rock Arts (தமிழ் மூலம் திரு காந்திராஜன் அவர்கள்).


கள்ளக்குறிச்சி மாவட்டம், பிடாகத்தின் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையம் கிராமத்திற்கு சற்று தெற்கே வயல்வெளிகளுக்கு நடுவே சில பாறைகளை அடுக்கி வைத்ததைப் போன்ற அமைப்பு காணப்படுகின்றது. இந்த அமைப்பின் நடுவே திறந்த வெளியில் குலாம் என்பவரின் கல்லரை காணப்படுகின்றது. அதனால் இவ்விடம் குலாம் தர்கா எனவும், கிராம மக்களால் குலாம் தக்கா என அழைக்கப்படுகின்றது.

தென் பக்கமாக இருக்கும் பாறை ஒன்றில் சில சிவப்பு வண்ணத்தில் மங்கிய நிலையில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இவ்வோவியத் தொகுப்பில் மூன்று மனித உருவங்கள் காட்டப்பட்டுள்ளது. இவர்கள் கையில் வில் போன்ற ஆயுதமும் பிற ஆயுதங்களும் காணப்படுகின்றன. இவர்களது தலையில் விரி சடை போன்று தடிமனாக காட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு முன்னால் சில விலங்குகள் இருப்பது போல தெரிகின்றது. இங்கு இரண்டு மனித உருவங்களின் தலைக்கு மேல் உள்ள பகுதியில் நீள் சதுர பெட்டி போன்ற வடிவம் அதன் மேல் பக்கம் மாட்டு வண்டிக்கூண்டு போன்ற அமைப்புடன் வரையப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி நான்காக பிரிக்கப்பட்டு அதனுள் சிறு வட்டங்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் வடிவத்தில் ஆறு வட்டங்களும் அதனருகே சிறு வட்டப் புள்ளிகளும் காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது வடிவத்தில் நான்கு வட்டங்கள் மட்டும் வரையப்பட்டுள்ளது. தோற்றத்தில் இவை, கூத்துகளில் பயன்படுத்தப்படும் தலை அலங்காரம் போலவே தெரிகின்றது. இன்றளவும் தெருக்கூத்து, தெய்யம், கதகளிஎக்சகானம் போன்ற கிராமியக் கூத்துக்களில் இது போன்ற அலங்காரத்தைக் காணலாம். இத்தொகுப்பு ஓவியத்தில் காணப்படும் மனித உருவங்கள் கீழ்வாலையில் உள்ள மனித உருவங்களை ஒத்து காணப்படுகின்றது.    

இவ்வோவியங்களின் தோற்றத்தின் அடிப்படையில், இவை பிற்கால புதியகற்காலத்திற்கும், தொடக்க கால பெருங்கற்காலத்திற்க்கும் இடைப்பட்ட காலங்களில் வரையப்பட்டு இருக்கக்கூடும்.

This Group of Rock art is found in a natural cave, open to the sky at the centre, formed by the rocks at Peththanayakkan Palayam near Pidagam, in Kallakurichi District. A Muslim Saint, Gulam, was buried at the centre of the cave. Hence, this place is called Gulam Dargah and locally called Gulam Dhakka.

A group of Red ochre paintings is found on the south side rock. In this group, 3 humans are holding bowls and weapons. Some animals are also drawn near to them. The human figure’s heads are decorated with long spikes, similar to Rock art at Kilavalai in Viluppuram district. This type of head decoration may be seen even now with folk artists, Kathakali, Eksaganam, Theyyan, etc.  Above the Human arts, found two rectangles with a curved arch on the top. The first rectangle figure contains 6 rounds and points.  Where in the second one, 4 rounds are drawn. 

Based on the style of rock art, Experts believe that these might have been drawn between the early Stone Age and the New Stone Age.





Rock cupules
கற்குழிகள் (Cupules) மனிதன் உருவாக்கியவையில் மிகவும் பழமையானவையாகவும்,  இக்குழிகள் கல் அல்லது கல் சுத்தியலைக்கொண்டு பாறையில் அரைக்கோல வடிவில் கொத்தப்பட்டது. குலாம் தக்காவில் காணப்படும் இக்குழிகள் பாறையின் விளிம்பில் ஒரு ஒழுகங்கான முறையிலும் ஒரே அளவிலும் கொத்தப்பட்டு உள்ளது. இக்குழிகள் வானியல் தொடர்பானதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. ஆனால் அதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இக்குழிகள் கீழ் பழையா கற்காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Rock cupules are artificially made depressions on rock surfaces that resemble the shape of an inverse spherical cap or dome. They were made by direct percussion with hand-held hammer-stones, on vertical, sloping or horizontal rock surfaces. Cupules are widely believed to be the world's most common rock art motifs, related to astronomy, for playing, etc. But couldn’t conclude the purposes for which created for want of exact pieces of evidence.  As per the historians, these cupules may belong to the Lower Palaeolithic period. 




LOCATION OF THE GULAM DARGAH/GULAM DHAKKA: CLICK HERE
11°43'11.0"N 79°12'10.0"E /11.719717, 79.202782.

--- OM SHIVAYA NAMA---

Monday, 16 December 2024

Rock Paintings/Rock Arts/பாறை ஓவியங்கள், Sirunagalur, Kallakurichi District, Tamil Nadu.

The visit to Rock Arts at Sirunagalur Village in Kallakurichi District, was a part of “Rock Arts of Nadu Naadu Visit, in Viluppuram and Kallakurichi Districts”, organised by திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம், on 17th November 2024. Thanks to Mr. Gandhirajan, the Rock Art expert, who guided us to understand Rock Arts (தமிழ் மூலம் திரு காந்திராஜன் அவர்கள்).


இப்பாறை ஓவியம், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுநாகலூர், கிராமத்தின் வாழ்விடப்பகுதியை விட்டு சற்று தொலைவில், யுகாலிப்டஸ் மரக்காட்டின் நடுவே அமைந்துள்ள பாறையில் வெள்ளை சாந்து ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இவ்விடம் தற்போதும் ஆடுமாடு மேய்பவர்களின் தங்குமிடமாக பயன்படுகின்றது. பாறையின் மேலிருந்து தண்ணீர் வழியாமல் இருக்க பாறையின் முகப்பு பகுதியை வெட்டி உள்ளனர்.

இப்பாறை ஓவியம் கோட்டு ஓவியமாக இல்லாமல், ஒவியம் முழுமையும் வெள்ளை சாந்தால் நிரபப்பட்டு காணப்படுகின்றது. ஒரு மனிதன்  நின்ற நிலையில், கைகளை விரித்து ஆயுதம் ஏந்தி இருப்பது போன்று வரையப்பட்டு உள்ளது. இன்ன ஆயுதம் என்று இனம் காண முடியவில்லை. அம் மனிதனின்  எதிரே சிறிது தொலைவில் ஒரு விலங்கின் தலைப்பகுதி மட்டும் காணப்படுகின்றது. உடம்பு பகுதி காலப்போக்கில் அழிந்துபட்டு இருக்கலாம். அவ்விலங்கு கொம்புகள் இன்றி காணப்படுவதால் அது நாய், ஒநாய், அல்லது புலியாக இருக்கலாம்.

This Rock art is found in a shelter, a little away from the habitation site, in the midst of a man-made Eucalyptus tree forest. This Shelter is being used even now by the herders. The facade of the rock was cut to stop the rainwater from dripping inside the shelter.

The rock art is drawn with white ochre on the wall like rock of the shelter. A man and an animal are visible. A man is drawn in a standing posture and holding weapons in his hands. What type of weapon is not known? An animal’s head is found in front of him. Since no horns are found, this animal may be a wild animal, like a Dog, wolf, Hyena, or Tiger.  




LOCATION OF THE CAVES: CLICK HERE
11°40'43.2"N 79°09'16.8"E /11.678672, 79.154677

--- OM SHIVAYA NAMA ---

Saturday, 14 December 2024

Rock Arts /Rock Paintings/பாறை ஓவியங்கள், Poraiyar, Kallakurichi District, Tamil Nadu.

The visit to Rock Arts at Poraiyar Village in Kallakurichi District, was a part of “Rock Arts of Nadu Naadu Visit, in Viluppuram and Kallakurichi Districts”, organised by திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம், on 17th November 2024. Thanks to Mr. Gandhirajan, the Rock Art expert, who guided us to understand Rock Arts (தமிழ் மூலம் திரு காந்திராஜன் அவர்கள்).


கள்ளக்குறிச்சி மாவட்டம், பொறையார் கிராமத்தின் அம்மன் கோயிலில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் காட்டின் நடுவே பாறைக்குவியலில் இயற்கையாக அமைந்த குகைத்தளத்தின் சுவர் பகுதிபோன்ற பாறையில் இரண்டு மான் உருவங்கள் கோட்டோவியமாக செந்சாந்தால் வரையப்பட்டு இருக்கின்றது. இரண்டு மான்களில் ஒன்று மட்டும் முழு உருவத்துடனும், மற்றொன்று தலை மட்டுமே காணப்படுகின்றது. இரண்டு மான்களுக்கும் பின்பக்கம் ஆடு போன்று வளைந்த கொம்புகள் வரையப்பட்டு உள்ளது. கோட்டோவியம் தடிமனாக காணப்படுகின்றது.    

This rock painting is on a rocky hill, about a km from Poraiyar, Amman Temple. The Rock art consists of two Deer, drawn with red ochre. Out of two Deer, one is completely visible, and the other’s head is only visible. Both are drawn with thick lines.  



LOCATION OF THE CAVE: CLICK HERE
11°41'50.9"N 79°08'18.1"E /11.697463, 79.138350

A temple in the village 
--- OM SHIVAYA NAMA---

Wednesday, 11 December 2024

Korravai /Shri Poraiamman Temple/ ஶ்ரீ பொறையம்மன் கோயில்/Poraiyar, Kallakurichi District, Tamil Nadu.

The visit to this Korravai at Sirunagalur village in Kallakurichi District was part of the “Rock Arts of Nadu Naadu Visit, in Viluppuram and Kallakurichi Districts”, organized by திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம், on 17th November 2024.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சிறுநாகலூர் கிராமத்தின் அம்மன் கோயில் வளாகத்தில் இக்கொற்றவை வழிபாட்டில் இருக்கின்றார். சிற்ப அமைதி மற்றும் அக்காலத்தில் ஆட்சி செய்த மன்னர் காலத்தை கணக்கில் கொண்டு பார்க்கும் போது இக்கொற்றவை இரண்டாம் நந்திவர்மனின் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

சங்க இலக்கியம் தொல்காப்பியம், குருந்தொகை மற்றும் சிலப்பதிகாரத்தில் கொற்றவையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதன் படி கொற்றவை கானமர் செல்வி”, “காடு கிழாள்மற்றும் ஆமான் பாவை”- (மான் காட்டப்பட்டு இருப்பதால்) என்று அழைக்கப்படுகின்றாள். சங்க இலக்கியங்களின் படி போர்வீரர்கள் போரில் வெற்றி பெற தங்களையே பலி (அரிகண்டமாகவோ அன்றி நவகண்டமாகவோ) கொடுப்பர் என்ற குறிப்புகள் காணக் கிடைக்கின்றன அதை மெய்பிக்கும் வகையில் இருவீரர்கள் அரிகண்டம் மற்றும் நவகண்டம் கொடுப்பது போன்று காட்டப்பட்டு உள்ளது.
 
கொற்றவை மகிசனின் தலை மீது நிற்பது போலவும், 8 கரங்களுடன் காட்டப்பட்டு இருக்கின்றார். மேல் இருகரங்களில் சங்கு மற்றும் சக்கரமும், கீழ் இடது கரம் கடி ஹஸ்தத்திலும் காட்டப்பட்டு இருக்கின்றார். மற்ற கரங்களில் வாள், வில், அம்பு போன்ற ஆயுதங்கள் காணப்படுகின்றன. காது மற்றும் கழுத்தில் ஆபரங்கள் காணப்படுகின்றன. இடையில் அணிந்து இருக்கும் ஆடையின் முடிச்சு மற்றும் சுருக்கங்கள் மிகஅழகாகக் காட்டப்பட்டு உள்ளது. வாகனமாக மான் கொற்றவையின் பின்புறம் காட்டப்பட்டு உள்ளது. நிற்கும் தோரனை மிகவும் அழகாக, இடது காலை நேராக ஊன்றியும், வலது காலை சிறிது மடக்கியும் காணப்படுகின்றார்.



This Korravai was installed in an Amman temple at Sirunagalur Village in Kallakurichi District. Based on its iconography and History, it is believed to belong to the Pallava King Nandivarman-II period.

As per the Sangam period literature, Tholkappiyam, Kurunthogai, Pathitrupaththu, Silapathikaram, etc, the soldiers used to pray to Korravai before going to war. Some of them also sacrifice themselves, in the form ofாrikandam and Navakandam, to get victory in the war. Since Korravai temples will be in the midst of the forest, hence called “Kanamar Selvi”, “Kadu Kizhal”, “Aaman Pavai” (Deer as Vahana – மான்), etc.

This Korravai is in a standing posture on a buffalo’s head (Mahishan’s head) with 8 hands (Ashta Bhujam). She is holding Shankha and Chakra in her upper hands, and her lower left hand is in Kadi hastam. The other hands hold various weapons like a Sword, Shield, bow, arrow, etc. She wears ornaments in her ears and around her neck. The dress below her waist is beautifully shown with knots and frills. Both legs are not in a straight position; the left leg is firm on Mahishan’s head, and the right leg is slightly bent. Two soldiers are offering Arikandam and Navakandam on both sides of her legs. The Vahana Deer is shown on her back.      

 Arikandam
 Navakandam
 Vahana - Deer
LOCATION OF THE TEMPLE: CLICK HERE

A temple in the village 
A temple in the village - Saptakannis
--- OM SHIVAYA NAMA ---