4 Pillar mandapam with 5-tier Rajagopuram
Moolavar
: Sri Jagannatha Perumal
Thayar
: Thirumangaivalli Thayar
Some
of the important features of this temple are…
The
temple is facing east with temple tanks. Dwajasthambam, balipeedam, and a short deepasthambam are immediately after the 5-tier
Rajagopuram.
In
the outer prakaram, sannadhi for Thayar Sri Thirumangai Valli, Lakshmi
Narasimhar, Andal, and Manavala Mamunigal.
In the kostam, Vinayagar as Thumbikai Alwar, Perumal in sitting posture, and Durgai. Umbrellas are chiseled above Perumal and Vinayagar. The sanctum
vimana has stucco images of Hayagriva, Lakshmi Narasimha, and Garuda. Perumal in this temple is called Sri Jagannatha Perumal in a sitting
posture with his consorts Satyabhama and Rukmini, which is a rare
feature. Urchavars of Jagannatha Perumal with Satyabhama and Rukmini,
Bhrigu Maharishi, and Markandeya Maharishi are in front of the moolavar. Urchavar is kept in the artha mandapam. Garuda Bhagavan is facing Sri
Jagannatha Perumal in the maha mandapam.
பிரகாரத்தில், தாயார், ஆண்டாள், லக்ஷ்மிநரசிம்மர் சன்னதிகள் இருக்கின்றன. கோவிலின் கருவரை கோஷ்டத்தில் பெருமாளும் விநாயகரும் வெண்கொற்றக்குடையின் கீழ் உள்ளனர்.
Sri
Thirumazhisai Alwar, the 4th of 12 Alwars, is in a
separate sannadhi in the maha mandapam. This is the birthplace
of Sri Thirumazhisai Alwar. The story goes like this.
Thirumazhisai Alwar was born to Bhargava Rishi and Kanakangi on the Thai month, Maham star day. He was born like a blind person without limbs. So he was thrown into the bamboo forest. Perumal and Thayar came to earth and gave Limbs
& life. The childless tribe couple, Thiruvalan and Bangaya Selvi, took
him to their home. Later, they had a child by the name Kanikannan, and he became the
disciple of Sri Thirumazhisai Alwar. Thirumazhisai Alwar went to Kanchipuram and served at Sonna Vannam Seitha Perumal temple at
Thiruvekka and spent his final years at Kumbakonam, and attained moksha.
12 ஆழ்வார்களுள் 4வதாக போற்றப்படும் ஆழ்வார் திருமழிசை ஆழ்வாரின் அவதார ஸ்தலம் தான் இது. பார்கவ மகரிஷிக்கு மகனாக ...பிண்டமாக உயிரும், கை கால்கள் இல்லாமல் பிறந்தவர். அதனால் இவர் மூங்கில் காட்டிற்குள் வீசப்பட்டார். பெருமாள் அவருக்கு உயிரும் கை கால்களும் வழங்கினார். பின்பு திருவாளன், பங்காயசெல்வி என்ற தம்பதிகளால் வளர்க்கப்பட்டார். அவர்களுக்கு பிறந்த கனிகண்ணனுடன் சேர்ந்து காஞ்சிபுரம் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவிலில் சேவை செய்தார். பின்பு அந்திமகாலத்தில் குடந்தையில் காலத்தைக் கழித்தார்.
திருமழிசை ஆழ்வார் முதலில் ஒரு சிவபக்தர். அவர் தவத்தை மெச்சி சிவ பெருமான் அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க அவர் எனக்கு மோட்சம் வேண்டும் என்று கேட்டார். இது தான் தர முடியாது என்றும் விஷ்ணு ஒருவரே தர வல்லவர் என்று கூறினார். அப்படியானால் நான் தைக்கும் ஊசியின் பின்புறம் சிறு நூல் சுழன்று கொண்டே இருக்க அருளவேண்டும் என்று கேட்டார். அதனால் கோபம் அடைந்த சிவ பெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறியை அவர் மீது ஏவினார். ஆனால் திருமிழிசை ஆழ்வாரோ தன் வலது பாத கட்டை விரலில் உள்ள கண்ணிலிருந்து தண்ணீரை வரவழைத்து அந்த தீப் பொறியை அடக்கினார். அவரது பக்தியை மெச்சி அவருக்கு ‘பக்தி சாரன்’ என்ற பட்டத்தை அருளினார். மகாமண்டபத்தில் திருமழிசை ஆழ்வாருக்கு தனியாக ஒரு சன்னதி இருக்கின்றது.
ARCHITECTURE
The sanctum sanctorum consists of the sanctum, ardha mandapam, and maha mandapam. The sanctum sanctorum is on a pada bandha adhistanam with jagathy, threepatta kumudam, and pattikai. The bhitti starts with vedikai. The pilasters are of Brahmakantha plasters with kalasam, kudam, palakai, and vettu pothyal. The prastaram consists of valapi, kapotam with nasi kudus and viyyalavari. The sanctum sanctorum was built with stone from adhistanam to prastaram. The superstructure above the prastaram was built with bricks. Eka tala, greevam, and Vesara sigaram are above the prastaram. Maha Vishnu's various forms are on the tala and greeva koshtams.
HISTORY AND INSCRIPTIONS
The
sanctum walls have the 12th - 15th-century inscriptions of Kulothunga Chozha-III, Koperunsingan, and Vijayanagara rulers (Harihara Raya-II, 1377 – 1404 CE, and Virupaksha Raya-II, 1465 – 1485 CE). The oldest inscriptions belong to Kulothunga-III's period (1179 – 1216 CE). Also, there is a 12th-century inscription belonging to Vijaya Ganda Gopala, a chieftain. The
inscriptions mainly record the donations of the burning of Perpetual lamps and land to this temple. The Thirumazhisai was
called Charukuravalli Chaturvedi Mangalam, Pakkaturaivalla Chaturvedi Mangalam, Mahisaram, and Mahakshethram.
கருவறை சுவற்றில் 12ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரையான கல்வெட்டுக்கள் உள்ளது. அவைகள் குலோத்துங்க சோழன்-III (1179 – 1216 பொயு), விஜயநகர அரசர்கள் ஹரிஹரராயா- II (1377 – 1404 பொயு), விருபாக்ஷராயா-II (1465 – 1485 பொயு) காலத்தைச் சேர்ந்தவை. மேலும் விஜயகண்டகோபாலன் என்ற மந்திரியின் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும் உள்ளது. கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட தானங்களைப் பற்றி ( விளக்கு, நிலம் ) கூறுகின்றது.
Koperunjinga’s 19th reign year, a
fragmentary inscription (SII- Volume XIII, No. 208, A. R. No. 13 of 1911), records
a gift, after purchase, by two bhattas of the village, of some house-sites to
the god Tirumaliśai Emberumān at Tirumali[śai] alias Pukkaturaivallava chaturvēdimańgalam.
பொயு 18 ஆம் நூற்றாண்டு ஜகநாதப் பெருமாள் கோயில் விளக்குத் தூண்
அருகில் கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு தூண் அமைத்தவன்
பெயர் திருவநாதன் என்று உள்ளது.
The 18th-century inscription on the pillar in front of the lamp Stone in the mandapa of the Jagannatha Perumal
temple mentions the donor’s name as Thiruvanathan.
பொயு 18 – 19 நூற்றாண்டு கிழக்குச் சுவர் கல்வெட்டு அரசன் பெயர், மன்னன்
ஆட்சியாண்டு எதுவும் இல்லை. தமிழ் சுழற்சியாண்டு பிங்கள இடம் பெறுகிறது.
எழுத்தமைதி நோக்க 18-19-ஆம் நூற்றாண்டுக்குட்பட்ட காலமாக
கருதலாம். சோமாசி காரமயற்கார் பரம்பரையில் வந்த ஒருவன் கோயிலுக்கு தானமளித்து
அதனைக் கல்வெட்டாகவும் வெட்டி வைத்துள்ளான். மற்றொரு கல்வெட்டு இருவரி மட்டும்
உள்ளது. காஞ்சிபுரத்தில் நந்திக்குத் தந்த பங்கு சுட்டப்படுகிறது.
The 18th – 19th century inscription on the east wall
of the central shrine without the King’s name and year mentions the Pingala Tamil
cyclic year, the donor's name, and a place name. Another inscription with two lines
mentions the shares given to Kanchipuram Nandi.
பொயு 18 – 19 ஆம் நூற்றாண்டு கோயில் வடக்கு மண்டபம் மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு
பிரிட்டிஷார் ஆட்சியின்போது வெட்டப்பட்டிருக்க வேண்டும். கோவிந்தப்ப ஐயங்கார்
என்பவர் ஜகநாதர் கோயிலுக்கு நிலக்கொடை வழங்கினார். கொடையைப் பெற்ற பிராமணர்,
பெருமானுக்குரிய திருநக்ஷத்திர விழாக்கள் ஒழுங்காக நடைபெற கடமை ஆற்ற
வேண்டும். மேலும் அருகே உள்ள மற்றொரு துண்டு கல்வெட்டு
திருமழிசை ஆழ்வாரின் திருநட்சத்திர விழா நடத்த வழங்கிய கொடையைச் சுட்டுகிறது.
The 18th-19th century inscription on the western wall of the north mandapa in
the same temple. May have been inscribed during the British period. Th inscription
records the donation of the land by Govindappa Aiyyangār to the Perumal temple.
Another fragment inscription mentions the celebration of Tirumalisai Alwar’s Tirunatshathira Vilza (festival).
பொயு 13 ஆம் நூற்றாண்டு மூன்றாம் குலோத்துங்கனின், கருவறைத்
தெற்குச் சுவரில் உள்ளகல்வெட்டு மூன்றாம் குலோத்துங்கனுடைய
அதிகாரியாக இருந்த நீலகங்கன் மூன்றாம் இராசராசன் ஆட்சியின்போது சிற்றரசர் போலவே
ஜயங்கொண்ட சோழ மண்டலத்தில் செயல்பட்டுள்ளார். இந்தக் கல்வெட்டிலும் மன்னன் பெயர்
குறிப்பிடப்படாமல் நீலகங்கன் கோயிலுக்கு ஆணை அனுப்பியுள்ளான். அரசுக்குரிய வரி
விலக்கு நீக்கி, மனையும் மனைப்படைப்பையும் சந்தனக்கொல்லையும்
விலக்கு அளித்து 307 பங்கு மானியம் அளித்துள்ளான்.
முன்னதாகப் புத்தூர் ஆழ்வார் சந்தனக்கொல்லை விலைக்கு வாங்கி எம்பெருமானுக்கு
அளித்துள்ளார். ஆணை (ஓலை) என்பது திருஉத்திரவு என வந்துள்ளது.
13th Century CE Kulothunga Chozha’s reign inscription on the South
wall of the Jagannatha Perumal temple at Tirumalisai, records an order of the
temple at Tirumalisai. Emperumān registers a grant of land to the temple of
Jagannatha at Panchanadi Vanan a chaturvēdi mangalam. Puttulār alvār previously
donated sandal wood, land, and house site to the temple. Nilayangaraiyan was
one of the officers of Rājarāja III. At the end of the Chōla period, he
issued (without consulting the king) many orders to the temple authority and sabha members.
பொயு 15 ஆம் நூற்றாண்டு விஜய நகர அரசர் தேவராயனின், ஜகநாதர் கோயில் மேற்கு
மண்டபம் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு மிகவும் சிதைந்து
காணப்படுகின்றது.
The 15th-century Vijayanagara dynasty, Devarayar II’s reign
inscription on the north wall of the western Mandapa is found badly damaged.
மூன்றாம் குலோத்துங்கனின் 30 ஆம் ஆட்சியாண்டு, பொயு
1207, மேற்கு மண்டபம் தெற்குச்சுவரில் உள்ள கல்வெட்டின்
விளக்கம். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியின் இறுதிக் காலத்தில்
பேரரசு வலிமை குன்றியது. சிற்றரசர்களும் அதிகாரிகளும் அதிகாரம் செலுத்த
முற்பட்டனர். நீலகங்கரையன் என்ற அதிகாரி திருமழிசை வாரியனுக்கும் கரணத்தானுக்கும்
ஆணை ஒன்றை அனுப்பி வைக்கிறான். திருமழிசை எம்பெருமானுக்கு மன்னனின் 30 ஆட்சியாண்டின்போது திருவிடையாட்டமாக நிலம் விட்டதைக் குறிப்பிட்டு,
திருவாழி ஆழ்வாரை (திருமழிசை ஆழ்வார் என்க)யும் எழுந்தருளுவித்த தான
விவரத்தைக் கல்வெட்டாகவும் வெட்டுமாறு குறிப்பிட்டுள்ளான்.
மேற்படி தானக் கல்வெட்டின் தொடர்ச்சியாக இரண்டுவரி பாடல்
கல்வெட்டு காணப்படுகிறது. பாடல் வெண்பாவில் அமைந்துள்ளது. வேந்தர்க்கு இல்லாத
சிறப்பு நீலகங்கரையனாகிய புலவனுக்கும் இருப்பதாகக் கூறும் அவ்வெண்பா வருமாறு.
வேந்தர்க்கு வாய்க்குமோ மேலாய
மாலைவழி
போந்துமடங் கென்று புலவனுக்கு வாய்த்த புண்யம்
ஊராள விட்டா னுயர்நீல கங்கனேழு
பாராளும் பஞ்சன் பதம்.
நீலகங்கரையனுக்குப்
பஞ்சநதிவாணன் என்ற பெயரும், திருநீர்மலையில் சாசனமும் உண்டு.
The Chozha King Kulothunga Chozha III’s 30-year reign 1207 CE
inscription on the west wall of the Jagannatha Perumān temple at Tirumalisai. The
inscription records the gift of the land to the temple under the orders of the
Nilagangaraiyan. A two-line song praises this Nilagangaraiyan’s fame in venba verse.
Nilagangaraiyan Fort is greater than a king.
Neelagangarayan is also called Panchanathivanan, and a sasanam is also available at Thiruneermalai.
(மொத்தம் 26 கல்வெட்டுகளில் 7 கல்வெட்டுகள்
மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள கல்வெட்டுகள், இந்தப்பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டு
உள்ளது)
References
1. South Indian Inscriptions Volume - XIII
2. Annual Report on South Indian Inscriptions, Year 1911.
3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள்
தொகுதி - XXX,
4. திருவள்ளூர் மாவட்ட
கல்வெட்டுகள் தொகுதி – II.
Inscriptions on the sanctum wall
LEGENDS
There is also an interesting story about Sri Thirumazhisai Alwar. Initially, he was a devotee of Lord Shiva and had done penance to attain Moksha. Lord Shiva said that Vishnu could only give Moksha and asked him for some other boon. Thirumazhisai Alwar asked for a small thread to keep rolling into the needle that he used to stitch the torn clothes. On hearing this, Lord Shiva got angry, and the fire came from the third eye to burn Thirumazhisai Alwar. (Thirumazhisai Alwar had a third eye on his right foot toe given by Perumal). The water came from the third eye of Thirumazhisai Alwar, and the fire was extinguished. Pleased by the devotion of Thirumazhisai Alwar, Shiva gave the title of ‘Bhakthi Saran’.
TEMPLE
TIMINGS:
The
temple will be kept open from 07.30 hrs to 12.00 hrs and from 16.30 hrs to
20.30 hrs.
CONTACT
DETAILS:
The
landline number is 044 26810542
E-mail address: thirumazhisaialwar@gmail.com
HOW TO REACH:
Frequent buses are available from
Poonamallee, and buses from various parts of the city to Thiruvallur
pass through Thirumazhisai.
LOCATION OF THE TEMPLE: CLICK
HERE
கல்வெட்டுகளின் தொடர்ச்சி….
மூன்றாம் குலோத்துங்க சோழனின் 24 ஆவது ஆட்சியாண்டு பொயு 1201, ஜகநாதர் கோயில் மேற்கு
மண்டபம் தெற்குச்சுவரில் உள்ள கல்வெட்டு, நீலகங்கரையன் என்ற
அதிகாரி திருமழிசை எம்பெருமான் கோயிலுக்கு வரிவிலக்கு அளித்த நிலக்கொடை குறித்த
ஆணையை (ஓலை என்று சாசனத்தில் உள்ளது) அனுப்பி வைக்கிறான். அரியப்பா கிழான்சேரி
கிராமத்தில் நிலமும் பல்வேறு வரிவகைகளும் கோயில் திருப்பணிக்காக வழங்கப்பட்டன.
திருமழிசை ஆழ்வாருக்குத் திருவிடையாட்டமாக நிலம் விடப்பட்டது. முதலீடு என்ற
பொருளில் உடல் என்ற சொல் கல்வெட்டில் உள்ளது. இவ்வூரிலே என்பது இவூரிலே என
இடைக்குறையாக வந்துள்ளது.
The Chozha King, Kulōttunga dēvā III’s 24th reign year 1201 C.E,
inscription on the south wall of the west mandapam, records an order of
Nilagangaraya recording that gift of (the tax) Ponvarimadai in the hamlet of
Arayanpakkiläncheri, to the temple of Tirumalisai Alvar. Mentions various taxes: ponvari, chekka, kadamai, etc.
தெலுங்குச் சோழர், விஜய கண்ட
கோபாலனின் 24 ஆம் ஆட்சியாண்டு பொயு 1280, மேற்குமண்டபம் தெற்குச்சுவரில் உள்ள கல்வெட்டு திருமழிசை
ஜகநாத பெருமாள் கோயிலுக்கு நிலக்கொடை வழங்கும் போது வேறு சில கோயில்களுக்குரிய 5
வேலிநிலம் கூறப்படுகிறது. சோறுடையான்சேரி தேவநிலம் 2 வேலி, திருவிடையாட்டம் 2 வேலி,
மேலிருவேலி சுப்பிரமணியர் நிலம் ½ வேலி,
அனைக்கரைச்சேரி 2 வேலி பல்வேறு வரிகளும்
அகத்தீஸ்வரர் கோயிலுக்கு இருந்த விபரமும் கல்வெட்டில் உள்ளது.
The Telugu
Chozha Vijayagandagōpāla’s
30th year of reign, 1280 CE, inscription on the west wall of the
Jagannathaperumāļ temple, records a gift of the land to the temple at
Tirumalisai Emperumāņ by Panchanadhivāņan Arunagiri perumal, Perumal
Nilagangairayan. The inscription also mentions Agattēśvarar and Subramanya
Pillaiyār.
விஜயநகரப் பேரரசு, இரண்டாம் அரிகரனின்,
பொயு 1391, மேற்கு மண்டபம் வடக்கு குமுதத்ததில் உள்ள
கல்வெட்டு தீத்தகைக்கோன் வென்று மாலையிட்டான் நினைவாக 8 பணம் தந்து விலைக்கு வாங்கி, கோயிலுக்கு நிலம்
தரப்பட்டது. நிலத்தை விற்கவோ ஒற்றிவைக்கவோ நில உரிமையாளனுக்கு உரிமையுண்டு மனை
இரண்டும் வழங்கப்படுகிறது. ஆவணத்தைத் திருமழிசை உடையான் எழுதியுள்ளார்.
The Vijayanagara king Ariyanna Udaiyar II’s Tamil year Sukala 1391 C.E.,
inscription on the west wall of the temple, records the gift of two houses in
pon parappina Tiruvidi to the temple in memory of a certain Tirukkaikōn
Venrumālaiyittān.
விஜயநகர அரசர் இரண்டாம்
ஹரிஹரனின் பொயு 1377 – 1404, மேற்கு மண்டபம் மேற்கு குமுதத்ததில்
உள்ள கல்வெட்டு, மாங்காடு நாட்டு திருமழிசையான புக்கதுறை சதுர்வேதி
மங்கலத்து திருமழிசை விண்ணகர் எம்பெருமானுக்குக் காணிவிலை பிரமாணம் செய்து தந்த
விபரம் இக்கல்வெட்டில் உள்ளது. கோயிலுக்குத் தென்கிழக்கில் விற்கப்பட்ட
இந்நிலத்தின் நாற்பால்எல்லைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கோயிலுக்குரிய
இந்நிலத்தையொட்டி, தனிநபர் சிலரின் நிலங்களும்
கூறப்பட்டுள்ளன. ஒரு நிலத்தின் பெயர் இலங்கேஸ்வர விளாகம் ஆகும். நாலு மங்கல வீதி
நடுவீதி, வல்லங்கிழான், கண்ணாளன் குழி
போன்றவை காண்கிறோம். நிலத்தின் அளவு 1300 குழியாகும். குகை
என்பது சைவ மடமாகும்.
The Vijayanagara dynasty, Harihara II’s 1377 – 1404 inscription on the
western kumudam of the western mandapa. Tirumalisai got another name, Agaram
Pukkadurai Chaturvēdimangalam in those days. The Vishnu temple was called
Tirumalisai Vinnagar emperumān. 1300 kuli lands donated to be Visnu temple.
Mentions Nālumangala Vithi, Vallańkilan. Gugai Mearisvate Saiva mutt.
விஜயநகரப் பேரரசு அரசன்
விருப்பன்ன உடையாரின் கர வருடம்,, மேற்கு மண்டபம் தெற்கு குமுதத்ததில்
உள்ள கல்வெட்டு திருமழிசை எம்பெருமானுக்கு இரண்டாயிரம் வேலி நிலம்
திருவிடையாட்டமாக வழங்கப்பட்டது.
The Vijayanagara King Vira Pratāpa Dēvaraya Virupakkharāyā’s khara cyclic Tamil
year unfinished inscription on the west wall of the mandapa in the same temple
mentions the Khara cycle Tamil year mentions land name Irandāyira Vēli parru in
Jayangonda Sõlamandālam.
விஜயநகர அரசர்?: விருப்பன்னன்?
உடையாரின், மண்டபம் குமுதப்படையில் முழுமையின்றி
உள்ள கல்வெட்டு முந்தைய சாசனத்தின் தொடர்ச்சியாகத்
தெரிகிறது. செகநாத பெருமானுக்கு மங்கல வீதியின் மேல் சிறகில் வீட்டு மனையும்
நிலமும் வழங்கப்பட்டுள்ளது. நின்றை என்பது திருநின்றவூராகும்.
This is a continuation of the previous inscription, recording the gift of lands
and house site to the temple of Tirumalisai Emperuman in Puliyūr kõttam in
Jayangonda chōlamandalam. The land boundaries are mentioned (Kilaimangala Vidi,
Araiyan Killanchēri Vasalverappu, Mēlsiragu are referred to). No. 16, the inscription
also associates this inscription.
விஜயநகரப் பேரரசு அரசன்
விருப்பன்னனரின் மேற்கு மண்டபத்தின் மேற்கு, தெற்கு ஜகதியில் உள்ள
சாசனம், முந்தைய இரு கல்வெட்டுகளின், தொடர்ச்சியாகவே
தெரிகிறது. திருப்பணியின் போது கற்கள் மாறி மாறி விட்டிருக்கலாம். திருவிடையாட்ட
நிலத்தின் எல்லைகள் மிக விரிவாக இதில் உள்ளன. குலசை என்ற ஊர் எங்கிருந்தது என்பது
தெரியவில்லை.
The Vijayanagara king Viruppanna’s inscription on the Southern wall of the
western mandapa in the same temple seems to be a continuation of the above
inscriptions. This inscription records Vinnagaram peruman alias Jaganāthar got
tax-free lands. The land boundaries are referred to elaborately.
மூன்றாம் குலோத்துங்கனின் 6 ஆம் ஆட்சியாண்டு பொயு
1222, மேற்கு மண்டபம் தெற்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு அதிகாரியாய் இருந்த நீலகங்கன் கோயில் தானத்திற்கு ஏற்பாடு செய்து ஓலை
அனுப்பியுள்ளான். எம்பெருமானுக்கு மூன்றரைவேலி இரண்டு மா நிலம் திருவிடையாட்டமாக
வழங்கப்படுகிறது. ஆதித்த நாமத்துக்காணி நிலமாகவும் வழங்கி, பல்வேறு
வரிகளையும் கங்கரையன் நீக்கியுள்ளான். கல்வெட்டின் நடுவில் ஆறாவது தைமாத முதல் வரி
நீக்க உத்தரவு உள்ளதால் மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆறாவது ஆட்சியாண்டெனலாம்.
அல்லது மூன்றாம் இராசராசன் காலமாகக் கொண்டால் பொ.ஆ. 1222 எனக்கொள்ளலாம்.
அரசனுக்குரிய வரிகள் கோயிலுக்கு வழங்கப்பட்டன. பல சமயங்களில் நிலக்கொடைகள்
தரப்பட்டன. முதல் தடவையில் 3½ வேலி இரண்டுமாவும், இரண்டாம் முறை நாலுவேலி ஒன்பது மாவும் வழங்கப்பட்டன. பாலாற்று வென்றான்
திருவீதி, பொன்பரப்பினார் திருவீதி நிலத்தின் எல்லைகளாக
இருந்தன. பாலாற்று வென்றான் பெயரும் பலசாசனங்களில் உள்ளன. குலசேகர சம்புவராயனை
இப்பெயர் சுட்டும். திருவோத்தூர் கல்வெட்டொன்றிலும் செய்யாற்றை வென்றான் என்ற
பெயர் உள்ளது. காண்க வரலாற்றில் திருவேத்தூர் கல்வெட்டுகள்.
The Chozha King Kulothunga Chozha III’s 6th year of reign 1222 CE unfinished inscription on the same wall in the same shrine, records as order of
Nilagangan and registers gift of taxes on certain lands to the Jagannatha
temple. Mentions the streets Pālarruvenrān tiruvīdi and Ponparappinār tiruvīdi at Tirumalisai.
தெலுங்கு
சோழர் விஜயகண்ட கோபால தேவனின் 16 ஆம் ஆட்சியாண்டு, பொயு
1266, மேற்கு மண்டபம் குமுதப்படையில் உள்ள கல்வெட்டு, மன்றாடி பிச்சன் என்பவனும் நெய்தல்வாயிலில் அல்லாளன் ஆகியோர் திருமழிசை
எம்பெருமாள் கோயிலில் 3 விளக்குகள் வைக்க 12 பசுக்கள் வழங்க, மச்சக்கோன் மகன் நம்பி அதனைப்
பெற்றுக்கொண்டு தினமும் முன்னாழி நெய் அளக்கச் சம்மதித்து உடன்படிக்கை
செய்துள்ளான். ஒருவிளக்கிற்கு 4 பசுக்கள் வீதம் ஒருநாழி நெய்
வழங்கப்பட்டுள்ளது. (பிற்காலச் சோழர் வலிமை குன்றியிருந்த
காலத்தில் அதிகாரிகள் எழுச்சி பெற்றனர். சோழர் வீழ்ச்சிக்குப் பின் தனியரசு
செலுத்த முற்பட்டவர்களில் தெலுங்குச் சோழரும் அடங்குவர்.)
The Telugu Chozha Vijayakanda Gopala’s 16th year of reign, 1266
CE, inscription on the north wall of the Jagannātha Perumal temple at Tirumalisai, records the gift of three lamps to the
temple of Tirumalisai-Emperuman at Tirumali-sai in Māngādu nādu, a Sub-division of Puliyur kõttam alias Kulõttunga chōla valanādu in Jayangonda Chōla mandālam. A shepherd, namely Pichanan, native of Tirumalisai, donated three
perpetual lamps to the temple. Nambi manrādi got 12 cows from him and supplied 3 nali daily to the temple for lighting purposes.
மூன்றாம் குலேத்துங்கனின் 30 ஆம் ஆட்சியாண்டு, பொயு
1209, மேற்கு மண்டபம் உட்சுவரில் உள்ள கல்வெட்டு, திருமழிசை எம்பிரானுக்கு ஒரு சந்திவிளக்கு வைத்து எரிக்க மலையாளன் ஆவின்
நின்றான் சோழமாணிக்கப் பல்லவரையன் ஒரு காசு கோயில்பட்டரிடம் வழங்கினான்.
பட்டர்களின் பெயர்களும் சாசனத்தில் உள்ளன.
The Kulothunga Chozha’s 30th year of reign 1209 CE inscription on
the wall of the outer prakara in the Central shrine, records that Sõla Manikka
Pallavaraiyan alias Malaiyālan Avin ninran gifted one Kasu to the temple.
Brahmana for lightining purpose. Temple Battars supplied ghee to sandi vilakku.
தெலுங்குச்சோழர் விஜயகண்ட கோபாலனின் 30 ஆம் ஆட்சியாண்டு மேற்கு மண்டபம் வடக்குச்சுவரில் உள்ள, பஞ்சநதிவாணன்
நீலகங்கரையன் ஆணை (ஓலை) கல்வெட்டாக வெட்டப்பட்டது. ஆற்றுழாள் திருவக்கரை உடையான்
என்பவன் கண்டன் அண்ணங்காறனார் நாயக்கன் பலரிடமிருந்து நிலங்களை விலைக்கு வாங்கி,
திருமழிசை எம்பெருமான் கோயிலுக்கும் திருநீர்மலை
வண்ணப்பெருமானுக்கும் வரிகள் நீக்கி இறையிலியாகத் தந்துள்ளான். துர்க்கைப்பட்டி,
பிடாரிப்பட்டி, பள்ளிச்சந்த நிலங்கள்
தவிர்த்து பிறநிலங்களே தானமாக வழங்கபட்டன. பஞ்சநதீஸ்வரமுடைய நாயனாரும் பஞ்ச நதிவாண
விண்ணகர் கோயிலும் கூறப்பட்டுள்ளது. திருவக்கரை, நடுவில்
நாட்டில் உள்ள சிவத்தலமாகும். திருநீர்மலையில் உள்ள கல்வெட்டுகள் சில
நீலகங்கரையனைர்க் குறிப்பிட்டுள்ளன.
The Telugu Chozha Vijaya Ganda Gopala’s 30th year of reign,
inscription on the west mandapam north wall, records an order of
Nilagangaraiyar, to gift lands in the village at Valattu Valvittanallūr, the
eastern hamlet of Tirumalisai, to the temples of Nirvannaperumal at Tirunirmalai
and Tirumalisai Emperuman. Also, two more temples are referred to in this
inscription.
முழுமையில்லாத ஜெகநாதர்
பெருமாள் கோயில் மேற்கு மண்டபம் வடக்குச் சுவரில் உள்ள சிதைந்த
முழுமையில்லாத கல்வெட்டு திருநாமத்துக்கு உடலாகவும் சாத்துப்படி
அமுதுப்படிக்குமாகத் திருநாமத்துக்காணியாகக் கொடையாளி நிலம் அளித்துள்ளான்.
கார்த்திகை வரி முதலியன நீக்கி சர்வ மாநியமாக நிலம் விடப்பட்டுள்ளது.
திருமடைவிளாகமும் கூறப்படுகிறது. உடல் என்பது முதலீடு ஆகும்.
The damaged and unfinished inscription on the south mandapa wall of the
central shrine in the same temple records a certain person giving land sarvamanyam for food and other purposes to the temple. The land tax was
remitted.
மூன்றாம் குலோத்துங்கனின் 16 ஆம் ஆட்சியாண்டு பொயு
1199, கோயில் மேற்கு மண்டபம் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு
நீலகங்கரையன் என்ற அதிகாரி திருமழிசை திருமேற்கோயில்
எம்பெருமானுககுத் திருவிடையாட்டமாகப் பல இடங்களில் 1650 குழிநிலம்
விட்டு, வரிநீக்கியுள்ளான். பிள்ளையார்
திருச்சுரக்குலோத்துங்க சோழக் கண்ணப்பன், நல்ல நாயனார்,
பஞ்சநதிவாணன் என்ற பலபெயர்கள் நீலகங்கரையனுக் கிருந்ததை இச்சாசனம்
கூறுகிறது. கொடையாளியாக இருந்துள்ளான். இக்கல்வெட்டில் இவ்வூர், இவூர் இரண்டும் காண்கிறோம். இரண்டாவதை இடைக்குறை என்று இலக்கணத்தில்
குறிப்பிடுவர். சோழர் காலத்தில் புக்கதுறைவல்ல சதுர்வேதி மங்கலம் என்று திருமழிசை
வழங்கப்பட்டது. செங்கல்பட்டிலிருந்து மதுராந்தகம் செல்லும் வழியில் ஒரு புக்கதுறை
ஏன்ற ஊர் தற்போதும் உள்ளது. ஆறு அல்லது நீர்நிலையை ஒட்டிய ஊர்புக்கதுறையாகும்.
திருமழிசை என்ற ஊரின் பிடாகையாக
(உட்கிராமம்) அரியப்பாகிழான்சேரி இருந்தது. இங்கே பால்வண்ணீச்சுரமுடையார் என்ற
பெயரில் சிவன்கோயில் இருந்தது. இக்கோயிலுக்கு 500 குழி தேவதான நிலம், பாதிரிச்செறுவில்
வடக்கடைய 500 குழியும் பிடாரிபட்டி நிலம் 250 குழியும் நீக்கி திருமழிசை எம்பெருமாள் கோயிலுக்கு வழங்கப்பட்டது.
திருவாழி ஆழ்வார் எழுத்தருளவும் வகை செய்யப்பட்டது. பல்வேறு வரிகள் கோயிலுக்கு
வழங்கப்பட்டன.
முதலாம் இராசராசன் பிறந்த ஐப்பசி சதயத்து
நாளில் தானம் வழங்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் இடம் பெறும்பிடாரி
குத்தம்பாக்கத்தில் உள்ள துறையாத்தம்மனைக் குறிப்பிடும எனலாம். பஞ்சநதி வாணன்
பேரில் சிவாலயமும் விண்ணகரும் இருந்ததை ஊர்க்கல்வெட்டு முந்தைய கல்வெட்டில் கண்டோம்.
The Kulothunga Chozha III’s 16th year of reign, 1199 CE
inscription on the west wall of the Jagannāda Perumal temple at Tirumalisai. (Chōla
King Vira Rajendra Chola deva. Regnal Year. 16 , 1199 C.E.)
The inscription records the gift of 1650 Kuli of
land by Prince (Pillaivar) Kulōttunga Kannappanalla nāyanar Panchanadivānan
Vilagangarāyan to the temple of Tirumalisai Alwar at Tirumalisai alias
Pukkaturai Vallava Chaturvedimangalam in Mangādu nādu.
தெலுங்கு சோழர் விஜய
கண்டகோபாலதேவனின் 26 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1276, மேற்கு
மண்டபம் தெற்குச்சுவரில் உள்ள, கல்வெட்டு, பஞ்சநதிவாணன்
திருவண்ணாமலைப் பெருமாள் இலங்கேஸ்வரன் என்பவன் திருமழிசை எம்பெருமானுக்குத்
திருவிடையாட்டமாக அரியாக்கிழான் சேரியில் சிவன் கோயிலுக்குரிய தேவதான நிலம்
நீங்கலாக இரண்டு வேலி நிலம் வழங்குகிறான். மேலும் அரசனுக்குரிய காசுகடமை, பட்டிகுற்றம், கார்த்திகை பச்சைவெட்டி, அரிமுக்கை, வெட்டிக்காசு உட்படவரிகளைக் கோயிலுக்கே
வழங்க ஆணையிட்டுள்ளான். திருவாழி ஆழ்வார் எழுந்தருள்வித்து, திருமலையில்
(கோயிலில்) கல்வெட்டு வெட்டவும் ஆணைபிறப்பிக்கப்பட்டது.
The Telugu Chozha Viajaganda Gopala’s 26th year of reign 1276 CE
inscription on the north wall of the Jagannatha Perumal temple at Tirumalsai,
records the gift of land by Panchanadivanan Thiruvannamaliperumāl
elankesvarar-deva to the temple of Tirumalai Emperuman at agaram Tirumalisai in
Māngādu-nādu, a subdivision of Puliyurkötttam in Jayangonda Chōla mandālam. The
donor paid some taxes and gifted them to the temple of Tirumalisaivate Windows
Emperuman.
18 ஆம் நூற்றாண்டு, ஜெகநாதப் பெருமாள் கோயில் உள்சுவரில் உள்ள இச்சிறிய
கல்வெட்டு சுவாமிமலை அம்மான் அய்யன் ஒருவர் பிரதிஷ்டை செய்ததாகத் தெரிகிறது.
இதற்காக 2 வராகன் காசும் தந்துள்ளார்.
The 18th-century inscription on the inner wall of the
central shrine in the same temple records that a certain Amman Ayyangār installed
the deity in the temple. He also gifted two Varagan. The letter is in modern
characters.
விஜயநகர அரசு அரசர் அரியண
உடையாரின் பொயு 1377 – 1400, மேற்கு மண்டபம் தெற்கு ஜகதியில்
உள்ள கல்வெட்டு விஜய நகர மன்னன் இரண்டாம் அரிஹரன் ஆட்சியின்போது
திருமழிசை விண்ணகர் ஜகநாதனுக்குத் திருமழிசை மகா ஜனங்கள் (பிராமணர் சபையார்)
காணிவிலைப் பிரமாணம் செய்து தந்துள்ளார்கள். கல்வெட்டின் இறுதிப் பகுதி
கிடைக்கவில்லை. திருமழிசை விண்ணகர் என்ற தமிழ்ப் பெயர் ஜகநாதன் என வடமொழியாக்கப்பட்டது.
விஜயநகர அரசர் காலம் எனலாம்.
The Vijayanagara King Ariyanna Udaiyar’s (Vijayanagara king Harihara Udaiyār) 1377 – 1400 CE, inscription on the south and west base of the same
temple, records the sale of land to the temple of Jagannatha by the assembly
(Mahajanangal) of Tirumalisai alias Pukkaturai Valle Chāturvēdimangalam.
காடவ அரசர் கோப்பெருஞ்சிங்கனின்
வடக்கு மண்டபம் மேற்குக் குமுதத்தில் உள்ள கல்வெட்டு, திருமழிசை எம்பெருமானுக்குச் சிலர் மனைகள் வழங்கி உள்ளனர்.
என்பதைப்பதிவு செய்கின்றது. விநாயகர் திருமேனியும்
செய்யப்பட்டுள்ளது.
The Kadava King Kōpperinsingadēva’s 12th year of reign, inscription
on the North mandapam west side kumudam, records the donation of house sites to
the temple and mentions the Vinayaga deity.
Reference
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள்
தொகுதி - XXX,
திருவள்ளூர் மாவட்ட
கல்வெட்டுகள் தொகுதி – II.