Showing posts with label Maharashtra. Show all posts
Showing posts with label Maharashtra. Show all posts

Saturday 27 January 2024

Bibi-ka-Maqbara / बीबी का मक़बरा / பி பி கா மக்பாரா / பிபியின் கல்லறை– Aurangabad, Maharashtra State, India.

The Visit to this Bibi-ka-Maqbara, a mausoleum / grave built for Aurangzeb's wife and one of the world Heritage sites, at Aurangabad  was a part of “Ajanta & Ellora Heritage Walk”, organized by Enthisai Historical Heritage Walk Group - எண்திசை வரலாற்று மரபுநடைக் குழு, from 23rd to 26th December 2023. We have made this visit after visiting Ellora Caves. The total complex including the entrance arch / building was illuminated. This Historical monument  is being maintained by Archaeological Survey of India ( ASI  ).


THE HISTORY OF BIBI-KA-MAQBARA. 
இந்த பிபி கா மக்பாரா அல்லது ஒரு பெண்மணியின் கல்லறை, ஔரங்கசீப்பின் மனைவி ராபியா துரானியின் ஞாபகார்த்தமாக  ஔரங்கசீப்பின் மகன் ஆசம் ஷாவால் காம் நதியின் வடக்கு கரையில் கட்டப்பட்டது, இக்கல்லறை பொயு 1668 ஆம் ஆண்டு ஆக்ரா தாஜ்மஹாலின் கட்டிடக்கலைஞரான அஹ்மத் லஹௌரியின் மகன் அதாவுல்லாவால் வடிவமைக்கப்பட்டது. தாஜ்மஹாலின் அமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டு இருப்பதால் இது மினி தாஜ்மஹால் எனவும், தக்கானத்தின் தாஜ் எனவும் அழைக்கப்படுகின்றது.

தெற்குபகுதியில் இருக்கும் மற்றுமொரு கல்லறை, ஔரங்கசீப்பின் மனைவி ராபியா துரானியின் பணிப்பெண் ராபியா தௌரானியின் கல்லறறை என்று கருதப்படுகின்றது.

குலாம் முஸ்தபாவின் தாவரிக் நாமா, கணிப்பின் படி இக்கல்லறை ஆறு லட்சத்து அறுபத்து எட்டாயிரத்து இருநூற்று மூன்று ரூபாய், ஏழு அணாக்களால் ( Rs 6,68,203-7 - Rupees Six Lakh, Sixty Eight Thousand, Two Hundred and Three & Seven Annas ), பொயு 1651-1661, இல் கட்டப்பட்டது.

The beautiful mausoleum of Aurangzeb's wife, is believed to have been constructed by Prince Azam Shah in memory of his mother Rabis –Ud-dauranl alias Dilras Banu Begum between circa 1651-1661CE,  on the banks of north side of the river Kham. An inscription on the main entrance door records that, this mausoleum was designed and erected by Ata-Ulla, an Architect and Hanspat Rai, an Engineer. As the mausoleum architecturally resembles the Taj Mahal of Agra built in 1631-1653 CE, this is known as "Taj of Deccan" or “Mini Taj Mahal”.

There is another tomb adjacent to the southern part of platform believed to be the nurse of Rabia Daurani.

According to the "Tawarikh Namah" of Ghulam Mustafa, the cost of construction of the mausoleum was Rs. 6,68,203-7 (Rupees Six Lakh, Sixty Eight Thousand, Two Hundred and Three & Seven Annas) in 1651-1661 CE.

ARCHITECTURE
இக்கல்லறை மற்றும் திவான்-இ-அம், திவா-இ-காஸ் என்ற மசூதியும் 458 x 275 மீட்டர் என்ற அளவில் உயர்ந்த மேடைமீது முகலாயர் மற்றும் நிஜாம் கட்டிடக்கலையில் படி தெற்குப்புற நுழைவாயிலுடன் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயிலில் இருந்து அழகான தோட்டத்துடன், என்கோண வடிவ நீத்தொட்டி, 61 நீர்ஊற்றுக்களுடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலைப் போன்றே அமைக்கப்பட்டு உள்ளது. இக்கல்லறை கட்டுமானத்திற்குத் தேவையான பளிங்கு / சலவைக்கற்கள் ஜெய்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகின்றது.

இக்கல்லறை, கல்லறைக்குச் செல்ல மூன்றுபுறம் படிக்கட்டுகள், அதனுடன் நான்கு மூலையிலும் எட்டுப்பட்டை மினாரெட்டுகள், நடுவே குவிமாடத்துடன் கட்டப்பட்டுள்ளது. தெற்குபுறம் உள்ள மசூதி ஹைதராபாத் நிஜாம் நவாப் மிர் அக்பர் அலிகான் சிகந்தர் ஜா அசப் அலிஜா- III, என்பவரால் பொயு 1803 – 29ல் நிமானிக்கப்பட்டது.

கல்லறையின் கீழ் பகுதி மற்றும் குவிமாடம் வெள்ளை பளிங்கு கற்களாலும் நடுப்பகுதி பசால்ட் / எரிமலைப் பாறைகொண்டு கட்டப்பட்டு சுண்ணாம்பால் பூசப்பட்டு, சிக்கலான பூவேலைப்பாடுகளுடன் உள்ளது. ஜாலிவேலப்பாடுகள் மிகவும் நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. குவி மாடத்தின் நடுவே எட்டுப்பட்டை காட்சிக்கூடம் / கேலரி அற்புதமான வேலைப்பாடுகளுடனான சாளரங்களூடன் கீழே உள்ள கல்லறையைக் காண வசதியாக அமைக்கப்பட்டு உள்ளது. கீழே உள்ள கல்லறைக்குச் செல்ல தெற்குப்புறம் படிக்கட்டுகளும் உள்ளன.

The mausoleum stands within an enclosed area measuring 458 x 275 meters approximately. The main entrance is on the southern side of the outer wall, and at the centre of the three remaining walls are open pavilions, which were used as Mosque, Diwan-e-Am, and Diwan-e-Khas. These buildings contain beautiful paintings of Mughal and Nizam periods.

The mausoleum is built at the centre of a raised square platform of polished red porphyritic stone provided with a railing in trellis work at the edge. Four tapering octagonal minarets with domed pavilions at the top stand freely at the corners of the square platform. It was approached by a flight of steps from all the sides earlier, but at present it has no approach on the western side as a mosque is constructed by Nizam of Hyderabad in a latter period.

The lower part of the mausoleum along with its dome are constructed with white marble, while the middle portion is of basaltic trap plastered by a fine coat of lime, rendered with marble finish and adorned with stucco work. The doorway on the south leads to an octagonal gallery with low barricaded marble screen running around the interior enabling an imposing view to the grave  of the lower level. The interior portion of the mausoleum is decorated with beautiful carvings. There are windows of marble at the corner angles. Four little chattries with corresponding minarets in each are also seen at the corners of the dome.

A number of rooms with arched domes in diamond cut design are made beneath the platform from all sides. The walls and roof of these rooms are decorated with graffiti designs.

entrance arch / building
entrance arch / building







THE GRAVE OF RABIS-Ud-DAURANL
The grave is simple, devoid of any ornamentation, surrounded with marble screens of exquisite design. A flight of steps descend in to the basement of mausoleum from the southern side, where the grave of Rabis–Ud-Dauranl is enclosed by an octagonal screen made by delicately carved marble.


MUGHAL GARDEN
The Mughal garden, Living Water Management System, Pavements which are ornamented with little kiosks, finely worked brass plated doors, Stucco floral motifs on the shell lime plaster, rank Maqbara among the best of the “Beautiful Mughal buildings of Deccan”.


MOSQUE ( NIZAM )
The mosque is built on a raised platform of tomb to its west. It is believed to have been constructed by the 3rd Nizam of Hyderabad, Nizam Nawab Mir Akbar Ali Khan Sikander Jah Asaf Jah III during 1803-29 CE. The mosque is entered through an arched opening on the east while the side walls are closed using perforated brick work. Basalt is used as main component of construction of mosque which is further plastered with a fine coat of lime. The interior consists of rows of pillars with corner pilasters interconnected by a series of cusped arches. The whole floor area is divided into rectangles so that it can accommodate one person for offering namaz in one block. These rectangles are surmounted by an arch and can accommodate approximately 377 people at a time to offer prayer.



REF:
1.  Display boards at bibi-ka-Maqbara

TIMINGS
This mausoleum will kept open between 09.00 hrs to 21.00 hrs.

HOW TO REACH
This mausoleum is at Begumpura, a part of Aurangabad, in Maharashtra state.
This mausoleum is about 7 KM from Aurangabad Railway Station, 29 KM from Ellora Caves, 114 KM from Ahmednagar, 185 KM from Nashik and 343 KM from Mumbai.
Nearest railway Station and Airport Aurangabad.

LOCATION OF THE MAUSOLEUM : CLICK HERE

Ceiling dome








 View through the entrance arch / building
View through the entrance arch / building
--- OM SHIVAYA NAMA ---

Thursday 25 January 2024

Ellora Jain Caves / Digambara Jain Caves of Ellora / எல்லோரா குகைகள் / ஜெயின் குகைகள், Ellora, Aurangabad, Maharasahtra State, India.

The Visit to this Ellora Jain caves was a part of “Elephanta, Ajanta and Ellora Heritage walk” organized by Enthisai Historical Heritage Walk Group, from December 23rd to 26th December 2023.

எல்லோரா குடைவரைத் தொகுப்பில் 34 குடைவரைகள் மட்டும் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவைகள் ஆகும். இவை மஹாரஷ்டிர மாநிலத்தில் UNESCO நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 5 உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்று ஆகும். எல்லோரா குடைவரைத் தொகுப்பில் முதல் 12 குடைவரைக்கள் பௌத்தமதத்திற்காக பொயு 6 - 8 ஆம் நூற்றாண்டுகளில் குடையப்பட்டதாகவும், 13 - 29 வது குடைவரை 17 குடைவரைகள் சிவன் மற்றும் மஹாவிஷ்ணுவிற்காக பொயு 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் குடையப்பட்டதாகவும், 30 ல் இருந்து 34 வரையுள்ள 5 குடைவரைகள் சமண சமயத்திற்காக பொயு 9 - 11 ஆம் நூற்றாண்டுகளில் குடையப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இக்குடைவரைத் தொகுப்புகளுல் 16 ஆம் எண் குடைவரை சிவனுக்காக் “கைலாசநாதர் கோயில்” என மேலிருந்து கீழாகக் குடையப்பட்டது. இக்குடைவரையைப் பற்றிய தகவல்கள், இக்கட்டுரை ஆசிரியரின் ஜோதிர்லிங்க யாத்திரையின்தகவல்களுடன் ஏற்கனவே இவ்வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இப்பதிவில் சமண சமய குடைவரைகளைப் பற்றி காண்போமே… 

சமணசமயத்தைச் சார்ந்த 5 குடைவரைகளில் இரண்டு மட்டுமே அளவில் பெரியதும் இரண்டு தளங்களைக் கொண்டும் காணப்படுகின்றன. மற்ற மூன்று குடைவரைகள் அளவில் சிறியதாகவும், முகமண்டபம் மற்றும் கருவறையுடன் மட்டுமே காணப்படுகின்றன. தீர்த்தங்கரர் சிற்பத்தொகுதிகள் மண்டப சுவரில் காணப்படுகின்றன.    


The Ellora group of caves consists of 34 caves of which 12 caves belongs to Buddhism, hewed during 500 – 750 CE, 17 Hindu Caves both for Saivam and Vaishnavam and hewed between 600 to 870 CE and lastly the 5 Caves from 30 to 34 belongs to Jainism hewed during 800- to 1000 CE. These Jain caves are located about  a KM away from the Hindu cave No 29. Of the 5 Caves, details of two important caves are given below.  The cave No 32 is hewed from top to bottom, similar to Cave No 16, Kailasanathar Temple. 

CAVE 32 & 30
பொயு 10-11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்குடைவரை இருதளங்களாக சமண சமயத்தின் திகம்பர பிரிவுக்காக குடையப்பட்டது. உள்ளூர் மக்களால் இந்திர சபை என்று அழைக்கப்படுகின்றது. மேலிருந்து கீழாக கைலாசநாதர் கோயிலைப் போன்று குடையப்பட்டுள்ளது. கருவறை நான்குபுறமும் வாயில்களுடன், மண்டபம் போன்று குடையப்பட்டு உள்ளது. இருபுறமும், ஒற்றைக்கல் யானையும், மானஸ்தம்பமும் தாய்பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. கருவறையில் மஹாவீரர் சிற்பம் காணப்படுகின்றது. குடைவரையின் பக்க சுவர்களில் சுபார்ஸ்வநாதர், கோமதீஸ்வரர், சங்கநிதி / பத்மநிதி மற்றும் சமண சமயம் சார்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.

இரண்டு தளங்களில், தரைத்தளம் முக மண்டபம், கருவறை என்ற அமைப்பில் மகாவீரருக்காக குடையப்பட்டுள்ளது. பக்க சுவர்களில் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் தொகுப்புகளாக செதுக்கப்பட்டு உள்ளது. கருவறையில் மஹாவீரர் சிம்மாசனத்தின் மீது அமர்ந்த நிலையில் தலைக்கு மேலே முக்குடையுடன் காணப்படுகின்றார். இருபுறமும் சாமரதாரிகளும் காட்டப்பட்டுள்ளனர்.

இரண்டாவது தளம் அல்லது மேல் தளம் பெரிய முக மண்டபம், தூண்களுடன் மஹாமண்டபம், கருவறை என்ற அமைப்பில் குடையப்பட்டுள்ளது. மண்டபத்தின் பக்க சுவர்களில் செல்வத்தின் அதிபதியாக மதங்கா, வளமையின் சின்னமாக யக்ஷி அம்பிகா, மஹாவீரர், பார்ஸ்வநாதர், போன்ற சிற்பத்தொகுப்புகளுடன், ஒரு சிற்பக்கூடம் போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றது. கருவறையின் வாயிலில் துவாரபாலகர்கள் காத்து நிற்க, கருவறையில் மஹாவீரர் சாமரதாரிகளுடன் காணப்படுகின்றார். பலவிதமான சிற்பங்களுடன் செதுக்கப்பட்ட தூண்கள் மேலும் மேலும் பார்க்கத் தூண்டுகின்றது.  

This is a double storeyed cave temple dedicated to the Digambara sect of Jainism, datable to 10th -11th Century CE. The temple locally known as Indra-sabha, because of the Matanga figure, mistakenly identified with Indra. The gateway leads to a open courtyard, having monolithic elephant and a huge monolithic pillar. The pillar with quadruple images on the top represents the glory of Jain religion on all four directions. The small hall having an entrance on all four sides houses quadruple image of Lord Mahavira. The facade wall also decorated with sculptures. The walls are full of Suparshvanath, Gomateshwara, Matanga and Siddhika sculptures.

The main temple is double floored. The ground floor contains a verandah flanked by chapels, a big hall, an antechamber and sanctum. The chapels in verandah house Lord Mahavira and the walls are decorated with the sculptures of Jain deities. The wall of the hall is decorated with a number of panels of Jain deities. Inside the small sanctum is seen the image of Lord Mahavira seated on a Lion-throne, with fly whisk-bearers on both sides and umbrellas over his head.

The upper floor consists of a big verandah, pillared hall and a sanctum. The sidewalls of the verandah have huge and beautiful sculptures of Matanga ( God of wealth ) and Ambica ( Goddess of Prosperity). The whole upper floor termed as a sculptural-picture gallery. The walls are decorated with sculpture and the whole cave was also painted. The sanctum houses Lord Mahavira and Jain deities guard the door. The most notable feature of the upper floor is the varied and variegated designs of the pillars









Monolithic elephant sculpture

CAVE 33
பொயு 10-11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்குடைவரை இருதளங்களாக சமண சமயத்தின் திகம்பர பிரிவுக்காக குடையப்பட்டது. இது ஜகன்நாத சபை என்று இங்குள்ள உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றது. இரண்டு தளங்களைக் கொண்ட இக்குடைவரையின், கீழ்தளத்தளம், முக மண்டபம், தூண்களுடன் மஹாமண்டபம், இடைநாழி மற்றும் கருவறை என்ற அமைப்பில் குடையப்பட்டு உள்ளது. முகமண்டபத்தில் செல்வத்தின் அதிபதிகளான   மதங்க மற்றும் சித்தைக்கா எனப்படும் சிறபத்தொகுப்புக்கள் காணப்படுகின்றன, மஹாமண்டப சுவர்களில் சமணசமய கடவுளர்களான, தீர்த்தங்கரர் சிற்பத்தொகுதிகள் காணப்படுகின்றன. கருவறையில் மஹாவீரர் சிம்மாசனத்தின் மீது அமர்ந்து இருக்க இருபுறமும் சாமரதாரிகள் காட்டப்பட்டு உள்ளனர். கருவறையில் விலைமதிப்புமிக்க பொருள்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சதுர குழி ஒன்றும் காணப்படுகின்றது. மண்டபத்தூண்களில் காணப்படும் சிற்பங்களின் அழகு மற்றும் நேர்த்தி சிற்பிகள் அதிக கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டதைக் காட்டுகின்றது.

மேல் தளத்தில் முகமண்டபமும், பெரிய தூண்களுடன் மஹா மண்டபமும், பின்புறசுவற்றை ஒட்டி கருவறையும் காணப்படுகின்றது. மண்டப சுவர்களில் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்ட சமண சம தீர்த்தங்கரர் சிற்பத்தொகுதிகள் காணப்படுகின்றன. மஹாமண்டபத்தில் 12 பெரிய அலங்காரத்தூண்கள் காணப்படுகின்றன. தீர்த்தங்கரர் ஓவியங்களும் காணப்படுகின்றன. 

The cave temple is known as Jaganatha sabha or court of Jagannatha ( Lord of the world ). Dedicated to Digambara sect of Jainism, is datable to 10th  -11th centuries CE. The main temple is double storied. The lower floor consists of a verandah, a pillared hall, an antechamber and a sanctum. The verandah decorated with sculpture of Matanga ( God of Wealth ) and Siddhaika ( Goddess of Prosperity ). While the wall of the hall sculptured with Jain deities, the sanctum houses Lord Mahavira on Lion-throne in mediation pose. A low door cell on the rear wall and a square hole in the floor were perhaps for concealing objects of value. The pillar designs are striking and are distinguished by their perfect finish and meticulous precision.

The upper floor consists of a verandah flanked by chapels, a big-pillared hall and a sanctum on the rear wall. The upper floor is very beautifully carved and painted. The hall consisting of twelve decorative pillars is decorated with Tirthankara panels and paintings, on the walls.








Ref:
1.  Display boards installed at the caves.
3.  UNESCO Heritage convention Web site : https://whc.unesco.org/en/list/243/

HOW TO REACH
The ellora Caves ia about  30 KM from Aurangabad, 103 KM from Ajantha, 173 KM from Nashik and 319 KM from Mumbai.
Nearest Airport Aurangabad .
Nearest Railway Station is Mukundwadi.

LOCATION OF THE CAVES    : CLICK HERE















































Parshvanathar

Gomateswarar - Bahubali


Parshvanathar




Gomateshwara - Bahubali
Inscription
--- OM SHIVAYA NAMA ---