Showing posts with label Salem. Show all posts
Showing posts with label Salem. Show all posts

Thursday 17 May 2018

Bhodha Malai - a nature's Treasure with approximately 5000 Years old Dolmens and Neolithic Tools, A Heritage Trekking, இயற்கையின் கொடையும் சுமார் 5000 வருட பழமையான கற்திட்டைகளும் கற்கருவிகளும் – போதமலை மரபு மலையேற்றறம், Salem district, Tamil Nadu.

14th May 2018.
When Mr A T Mohan asked me to join with them for the trekking to Bhodha Malai to see the dolmens and Neolithic tools, I readily accepted, since I love to trek  the hills.  This is the second hill trekking on 13th May 2018  after Velliangiri Hills with a gap of one month.  It was learnt that the name of Bhohar  Hill  was turned to Bhodha hills ( Malai ). The Bhodha Malai is the part of eastern ghats, with moderate height , temperature and weather. The main cultivation is millets.  There are three villages Melur, Keelur and  another small Village has the population of  about 2500. During our visit we could hardly see a very few people, since most of the villagers migrated to near by towns like Namakkal, Salem in search of livelihood. Due to this the  villages bears deserted look.
 
View of Jarugumalai

சேலம் A T மோகன் அவர்கள் மே மதம் 13ந்தேதி போத மலைக்கு வருகின்றீர்களா, அங்கு கல்திட்டைகள் நிறைய இருக்கின்றன எனக்கூறியது தான் தாமதம். உடனே, தயங்காமல் நானும் வருகின்றேன் என்று ஒத்துக்கொண்டேன். இது நடந்தது ஒரு வாரத்திற்கு முன்பு, ஆனாலும் அந்த 12ந்தேதி ஞாயிற்றுக்கிழமையை ஆவலுடன் எதிர் பார்த்து தான் காத்திருந்தேன். வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்க்குப் பிறகு இந்த வருடத்திய இஅண்டாவது மலையேற்றம் இது.. போதமலை கடல் மட்டத்தில் இருந்து  சுமார் 1200 மீட்டர் உயரமும், மிதமான தட்ப வெட்ப நிலையையும் கொண்டது. இம்மலையில் மேலூர், கீழூர் என இரு கிராமங்கள் சுமார் 2500 மக்கட் தொகையைக் கொண்டது. ஆனால் இக்கிராமங்களில் வசதிகள் எதுவும் பெரியதாக இல்லாததால், பெரும்பாலோர் பிழைப்புக்குவழி தேடி சேலம் நாமக்கல் என புலம் பெயர்ந்து விட்டனர். மிக குறைந்த மக்களே மலை மீது ஆடு மாடு வளர்த்துக்கொண்டும் விவசாயத்தை கவணித்துக் கொண்டும் இருக்கின்றனர்.  பகலிலேயே ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு பலைவனத்தைப் போலத்தான் காட்சி அளித்தது


On reaching Salem through Yercaud Express from Chennai, Mr Siva picked me up from  Salem Junction  and we went to the assembling point of Panamarathupatti Bus stop.  After ensuring the arrival of all  participants including local Villagers Mr  Murthy, the organiser for Lunch & breakfast, Solan and Kumaresan, we  headed towards the Village Vedapatti, the starting point at  base of the hill. After head count ( 23 participants and 5 villagers including the organiser Mr Murthy ) started our trekking. The Villagers carried our food for the breakfast and groceries for preparing the Lunch. They lead us to the hill and the path was very narrow with stones strewn on the way.  Most of the stretch the path went through the rainwater route. The stones are the mixture of ordinary and iron ore stones.
 

ஏற்காடு எக்ஸ்பிரஸ்  இரயிலில் சென்னையில் இருந்து சேலம் பயணம். நண்பர் சிவா எனக்காக இரயில் நிலையத்தில் 5 மணியில் இருந்தே காத்து இருந்தார். அவருடன் வந்த திரு ராஜ்பன்னீர் செல்வத்துடன்  போத மலையின் அடிவாரத்து கிராமம் பனைமரத்துப்பட்டியை சென்றடைந்தோம். இங்கு இருந்துதான் மலையேற்றம் துவங்குகின்றது என்று கூறினர். மேலூர் கிராமத்தைச் சார்ந்த திரு மூர்த்தி  மற்றும் அவருடன் அவர் கிராமத்தைச் சார்ந்த சோலனும் குமரேசனும், எங்களுக்கான காலை உணவு, மதிய உணவுக்கு அரிசி பருப்பு என சமையல் சாமான்களைச் சுமந்துவர, எங்கள் மலையேற்றம் ஆரம்பித்தது. முதலில் பாதை சுமாராக இருந்தாலும், மலை ஏற ஏற, வழியெங்கும் சாதாரண மற்றும் இரும்புதாது மிகுந்த பாறைகள் மற்றும் கற்கள் சிதறிக்கிடந்தன. அவற்றின் ஊடே நடந்து செல்வது ஒரு சவாலாகவே இருந்தது. மலையேற்றப் பாதை பெரும்பாலும் ஒற்றையடிப் பாதையாகவும் ஆடுமாடுகள் மேச்சலுக்குச் சென்ற பாதைகளுமாகவே இருந்தது, சில தொலைவு மழை நீர் வழித்தடங்களில் நடக்க வேண்டி இருந்தது.



  
Around 08.30 hrs  stopped  our trekking for breakfast under a tamarind tree. A packet of Tamarind rice was served to every one  ( tamarind rice under a Tamarind tree....what a coincidence!!!).  After a brief rest,  we continued our trekking. The trekking path was not so steep. We could not see any body trekking down from the Village. After an hour of trekking further,  we happened to see a well with water,  boundary stone walls  for the land and heard the sound of dogs barking, which indicated that we are nearing  the village. Again took rest under a jackfruit tree for about 15 minutes and headed towards the Village.


சுமார் 8.30 மணியளவில் வழியில் இருந்த புளியமரத்தின் அடியே அமர்ந்து காலை உணவாக புளி சாதத்தை சாப்பிட்டோம். ( தொட்டுக்கொள்ள ஊறுகாயும், மிக்சரும் மெதுவாக மலையேறிய பின் தங்கிய நண்பர்கள் எடுத்து வந்ததால் அவர்களை மனத்திற்குள் திட்டிக்கொண்டே  சாப்பிட்டோம் !!!) இத்துடன் எனக்குப் பிடித்த புளியமரத்தின் கொழுந்து, பூ  இவைகளையும் விட்டு வைக்கவில்லை..யாரோ கூறியது புளியின் கொழுந்து சாப்பிட்டால் தண்ணீர் தாகம் அதிகமாக இருக்காது என்று. அது சரியாகவே இருந்தது. மேலே ஏற ஏற சிறிது குளுமையும் மலைகளுக்கே உரித்தான மரம் செடி கொடிகளில் மாற்றங்களும் தெரிந்தன. வழியெங்கும், பலா, தேக்கு, நெல்லி, புளி என பலவகையான மரங்கள் கண்களுக்கு ஒரு சொர்கத்தையே காட்டியது. சென்னை போன்ற நகரத்தை ஒப்பிடும் போது இது சொர்கமே... வண்டுகளின் ரீங்காரத்தின் ஊடே எழுந்த பலவித பறவைகளின் சப்தங்கள் இனிமையான  சங்கீதமாகவே இருந்தது. தண்ணீருடன் ஒரு கிணறு, தங்கள் நிலத்தின் எல்லையில் கட்டப்பட்ட சுவர்கள், நாய்களின் குரைப்பு, ஆடு மாடுகள் கழுத்தில் கட்டி இருந்த மணியின் ஒசை  முதலியவை நாங்கள் மலையின் உச்சியை அடைந்து விட்டோம் என்பதை உணர்த்தியது. மலையின் குளுமை, லேசாக வீசிய தென்றல் காற்று மனதை வருடி உற்சாகப்படுத்தியது..









Initially I thought the Village must be big, but to my surprise there are about 20 houses, spread here and there on the plain area of the hill. Had seen only three children playing and understand that they also came to the village for school vacation from plains. Some of the huts were paved with forest grass as roof and a few are covered with meta colour sheets ( may be rich people !!!).   It was learnt that, for giving power connection the transformers and the other materials  were  moved to the Village from the base of the hill, by the villagers themselves. The open lands are under preparation for cultivation and for water  crops depends on monsoon rain. After Visiting Vinayagar temple where the Neolithic tools are kept and worshiped, we went to a house of Mr Pallipurathar & Ammani, who hosted us in the Melur Village. A hot tea made of “koththamalli” / dhaniya  was served  without milk. ( This Kothamalli tea reminds my mother who used to offer me during my visits ). It was learnt that the Villagers do not use milk and will not milking  the cows also. The milk will be fed to the calf.


சமவெளியை அடைந்த உடன் நாங்கள் கண்ட மேலூர் கிராமம் அங்கொன்றும் இங்கொன்றுமாக  சுமார் இருபது வீடுகளே.. பெரும்பாலான வீடுகள் காட்டில் கிடைக்கும் புல்லைக்கொண்டே கூரை வேயப்பட்டு இருந்தது. ஒரு சில வீடுகள் மட்டும் புல் வேய்ந்து அதன் மீது தகர சீட்டுகள் பொருத்தப்பட்டு இருந்தது. முதலில் கண்டது அம்மன் கோவிலும் வினாயகர் கோவிலும் கிராமத்து பாணியில். வினாயகர் கோவிலில் சுமார் 3000 – 10000 வருடங்கள் பழமையான கற்கால கல் ஆயுதங்கள் வழிபாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகே பலாமரம் காய்களுடன்.  மூர்த்தி அவர்கள் எங்களை பள்ளிபுரத்தார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு அம்மனி அம்மா தயாரித்துக் கொடுத்த  கொத்தமல்லி காபி பால் இல்லாமல் அருந்தியது, என் அம்மாவை நினைவூட்டியது... மிக அருமை. இந்த மலைக் கிராமத்தில் ஆடு மாடுகளிடம் பால் கறப்பது இல்லை எனவும் அதன் குட்டிகளுக்கும் கன்றுகளுக்குமே விட்டு விடுகின்றனர் எனக் கேள்விப்பட்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது..



 Amman temple 
 Pillayar Temple  
 Pillayar with Neolithic tools 
Pillayar with Neolithic tools 
...to  be Continued Bhodha Malai Heritage Trekking Part - II
---OM SHIVAYA NAMA---

Saturday 7 October 2017

The First School and Church at Kunnur of Kalrayan Hills, – A Heritage visit, Salem District, Tamil Nadu,

1st October 2017.
The visit to this School and the Church at Kunnur, near Karumandurai was a part of Kalrayan Hills Heritage visit organized by the Salem Historical Research Centre ( SHRC ). Mr Perumal, who is working as a teacher in this  Kunnur Middle School led us and explained the functioning of the school.

E C BRAND
The land to this school and Church was donated by E C Brand ( Evelyn Constance). Evelyn, a Christian preacher came to Chennai in 1907, worked at Senthamangalam and Kolli Hills. Six years latter in the Year 1913 she married Jesimen Brand at Senthamangalam. After the demise of Jesimen Brand in the year 1929, E C  Brand came to Kalrayan Hills and constructed  the first Church at Karumandurai in 1948. She devoted her whole life towards  education and providing medicine  to the Tribal and  backward community of Kalrayan hills. Hence the people of Kalrayan Hills and Kolli Hills  called her fondly as “Amma” and she passed way in 1974.

GOVERNMENT TRIBAL SCHOOL WITH BOARDING
The 2 acres of  land for this school was donated by E C Brand. The School was started in the year 1964 through Harijan beneficiary Department of Salem. Mr Perumal said,  about 150 Tribal village students are studying in this school.






S D DHASON MEMORIAL CHURCH C S I PATHIRAMANGALAM-  KUNNOOR 
The  C.S.I, Church was  constructed in the recent years adjacent  to the school. The  2 acre land for constructing this Church was donated by E C Brand. The Church is simple in construction with a simple cross alter. The out side is maintained beautifully with a variety of  flowering plants and rose garden. 


---OM SHIVAYA NAMA---

Friday 6 October 2017

Sri Kariya Ramar Temple with 18th Century inscription Stone, at Kariya Kovil, near Karumandurai, of Kalrayan Hills, Salem District, Tamil Nadu.

1st October 2017.
For Lunch, we stopped at Kariya Ramar Temple at Kariya Kovil 11 Km from Karumandurai. An excellent hot launch contains  Sambar rice, curd rice, potato chips with SHRC’s special VADA was served by SHRC, thanks to the organizers. After Lunch we had the darshan of Sri Kariya Ramar.


Moolavar : Kariya Ramar with Seetha and Lakshmanan.

Some of the important features of this temple are…
The temple is facing east with an old wooden dwajasthambam / Deepasthambham and a stucco Hanuman with Ramar and Lakshmana on his shoulders. There is a three tier Rajagopuram at the entrance of the maha mandapam.

In sanctum Ramar with Seetha and lakshmanan. Bronze statues are in front. Urchavars are in the antarala. Palipedam and Garudan ( Instead of Hanuman ) are in artha mandapam. Sanctum vimanam is like a rajagopuram.  There is a Chariot kept in side a shed on the right side of the temple.

ARCHITECTURE
The temple consists of sanctum sanctorum, antarala, Artha mandapam and a maha mandapam. 

HISTORY  AND INSCRIPTIONS
Out side there are many statues of Nandi, rat, alien  like statues are scattered around. It was told that the rat was the symbol of Vanakovarayars who ruled that area. And also it was told the original temple might have been built during Vanakovarayars period. Moolavars belongs to 15th century ( Vanakovarayars period ).

The Historians also believed that this hill malayalis ( not the keralites ) came from Kanchipuram and settled in Kalrayan Hills during 7th Century to safe guard Kariya Ramar Temple.

INSCRIPTION STONES
There are two inscription stones erected in front of this Kariya Ramar Temple. In one tablet,  the inscriptions are damaged completely and not legible to read. The other one belongs to 18th century, which speaks about a land donated to this temple. The details are as follows.

Thallaaraiyak Gounder and Madurai Veeraiya Gounder donated a land to this Kariya Perumal temple situated at Melai Chemparakkai village.The inscription is also reproduced as given below…
முன்புறம்
1. (விரோகிறி வருஷம் மார்
2. கழி மாதம் 21 தள்ள
3. (ரயகவுண்டர் மேல்ம
4. வீரையகவுண்டர் மேல்ம யுள்பட 
5 (லைநாட்டாரும் கரிய
6 (பருமாளுக்கு மேலைச்
7. செம்பறக்கை திருவி
8. விளையாட்டாம்
9. படி நஞ்சை புஞ்சை
10. நாற்பாக்கெல்லை
11. யு(ம்சகலமும்
12. த்தி (சூரியர்வன ()
13.  (கு)தம் பண் (ணின)
14  வர் கெ (ங்கையிலே)
பின்புறம்
15. ()ராம் பசுவை
16. கொன்ற பா
17. வத்திலே (போ)
18. ()டைவர்கள்


Not legible to read

LEGENDS
As per the legend Kariya Ramar came from Kanchipuram to Kariya kovil with full of sandal wood trees. 

POOJAS AND CELEBRATIONS
Poojas are conducted as per tribal type and not as per agama. The pooja is being conducted by non Brahmin Malayali priest. During pooja,  the poojari covers his mouth with cloth / towel. Vibhuti was given as prasadam.

LOCATION:CLICK HERE







---OM SHIVAYA NAMA--- 

Nature's Treasure, Gift, treat, beauty of Kalrayan Hills, Salem District, Tamil Nadu.

1st October 2017.
During August 2017, Mr Prumal took us to see the hero stones erected at the base of the Kalrayan Hills. Most of the hero stones are located in the fields and middle of the beetle nut farms. After seeing the picturesque location requested him to take us to Kalrayan Hills also. The Heritage visit to Kalrayan Hills organized by Salem Historical research center  gave me the opportunity of seeing and enjoying the Nature’s beauty, gift, treat, heritage value etc.,  of Kalrayan Hills on 1st October 2017.


Enjoyed the less traffic roads with number of hairpin bends, lush green hills,  stepped fields on the hill slopes, Coffee plants, pepper plants on the silver oak trees, Valleys with paddy fields, Medicinal plants,  fresh and not much polluted air which refreshed our mind and body....


The Kalrayan hills is a treasure of heritage values with ten thousand years old Neolithic tools worshipped as Pillayar and Perumal by the tribal Villagers, Dolmens erected for the dead - also called as Kulla Pandi houses by the local people, Karkuvai, Hero stones, Sati stones, a 11th century Rajendra Chozha –I, Period Kal Chekku with inscriptions, inscription tablets and of-course tribal temples too. This gives us opportunity to learn the heritage Values of the hill, the customs, culture of the Tribal villagers and their way of life etc,.


I extend my sincere thanks to the Organisers Pon Venkatesh, Dr Ponnambalam, Periyar mannan, Kalai selvan, Jeevanarayanan, Our Guru Srinivasan, and the great Perumal ( the man behind this show ) and the advisers Mrs & Mr Veeraraghavan and Pandian, for given me the opportunity to join this Heritage visit with the hot and tasty afternoon lunch & SHRC’s special Vada. Thanks once again and will continue my journey in the forthcoming visits too…

 School children

ஆகஸ்டு மாதம் 2017, திரு பெருமாளுடன் கல்வராயன் மலை அடிவாரம் வரை நடுகற்களைக் காணச் சென்று இருந்தோம். மலையின் அடிவாரமே பாக்கு மற்றும் தென்னை மரத் தோப்புகளுடன் நிறைந்து மிகவும் அழகாக இருந்தது. மலையின் அடிவாரமே இப்படி இருந்தால் மலையின் மேலே இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும் என் கருதி திரு பெருமாளிடம்  கல்வராயன் மலைக்கு ஒருதடவை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டு இருந்தேன். அந்த வாய்ப்பு சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் மூலமாக அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி 2017ல் நடத்தப்பட்ட கல்வராயன் மலை மரபு நடையின் மூலம் கிடைத்தது.

உயர்ந்த மலைகள்,, வளைந்து நெளிந்து சென்ற அதிக போக்குவரத்து அற்ற சாலைகள், கொண்டை ஊசி வளைவுகள்,  பச்சை பசேல் என்ற புல் வெளிகள், மலைகளின்  சரிவில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட படி போன்ற அமைப்புடன் விளை நிலங்கள், பள்ளத்தாக்குகளில் நெல் வயல்கள், காபி தோட்டங்கள், அதில் ஊடு பயிராக வளர்க்கப்பட்ட மிளகு கொடிகள், அவை பற்றி வளர நடப்பட்ட சில்வர்ஓக் மரங்கள், மூலிகை செடிகள், கடுக்காய் மரங்கள் அப்பப்பா இன்னும் எத்தனையோ… இவற்றிற்க்கும் மேலாக  மாசினால் அதிகமாக பாதிக்கப்படாத காற்று, மிதமான தட்ப வெட்பம்.. அஹா.. அருமையாக இருந்தது.

வழி நெடுகிலும் அங்கங்கே காணப்பட்ட குக்கிராமங்கள், அவர்கள் வாழ்க்கை முறைகள்,  கேள்விப்பட்ட அவர்கள் பிறப்பு, திருமண, இறப்பு சடங்குகள் ஒரு பிரமிப்பை ஏற்ப்படுத்தியது. இதற்கும் மேலாக சதி கற்கள், கல்வெட்டுக்களுடன் கூடிய சோழர்கள் காலம் 11ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்லில் செதுக்கப்பட்ட செக்கு, எழுத்துக்களுடன் கூடிய பலகை கற்கள், வீர கற்கள், குள்ள பாண்டி வீடுகள் என்று மலை வாழ் மக்களால் அழைக்கப்படும் இறந்த மனிதர்களின் ஈம கல்திட்டைகள், கற்குவைகள், மலை வாழ் மக்கள் பிள்ளையார் எனவும் பெருமாள் எனவும்  கடவுளாகக் கருதி வணங்கும் சுமார் பத்தாயிரம் வருடத்திற்க்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் உபயோகித்த கல் ஆயுதங்கள் என நம் முன்னோரின் ஒரு வரலாறே இந்த மலையில் புதைந்தும் கொட்டியும் கிடக்கின்றது. இன்னும் தோண்ட தோண்ட என்ன என்ன கிடைக்குமோ…. அவற்றில் சில வைரங்களையே நாம் கண்டவை…  கோவில்களுக்கும் பஞ்சமில்லை..

பல இன்னல்களுக்கு இடையே இந்த மரபு நடையை நடாத்திய நம் சேலம் வரலாற்று ஆய்வு மைய பொறுப்பாளர்கள் பொன் வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், தளபதிகள் கலைச் செல்வன், ஜீவ நாராயணன், எங்கள் குரு சீனுவாசன், அன்பு நண்பர் பெருமாள் ( இவரின் நட்பை பெற நான் தவம் செய்து இருக்க வேண்டும் ), பெரியார் மன்னன், , ஆலோசகர்கள் பாண்டியன், அய்யா வீரமணி வீராசாமி என அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.. இவர்களின் விருந்தோம்பல் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள்.  கள்ளம் கபடம் அற்ற இவர்களுடன் தொடரும் என்பயணம். நன்றி.. நன்றி.. நன்றி... 










 Pepper plant 


 Still the native breed exists
 Cable & Dish TV too entered 

A simple function to release the Book on Kalrayan Hills by SHRC
---OM SHIVAYA NAMA---