Friday, 5 August 2016

Myths and Facts /சங்ககிரி கோட்டை – முரண்பாடுகளும் – உண்மைகளும் of Sankagiri Fort, Salem District, Tamil Nadu.

05th August 2016. 
MYTHS : Sankagiri Fort. சங்ககிரி கோட்டை

FACT :  Some books and articles claims this as Sankagiri Fort. Whether they means the Fort in the Town or on the Hill. We could not trace any such fort  or its remains any where on the hill.  

எல்லா புத்தகங்களிலும் வலைத்தளங்களிலும் சங்ககிரி கோட்டை, கோட்டை மதில் சுவர்கள் என்றே குறிப்பிடுகின்றது..அது குறிப்பது சங்ககிரி நகரத்தில் உள்ளதையா? அல்லது மலைமீது இருப்பதையா? மலை மீது என்றால் கோட்டை எங்கே? கோட்டை எதுவும் இல்லாத போது எதற்காக இத்தனை மதில் சுவர்களும் வாயில்களும். கோட்டை இருந்தது என்றால் அதன் எச்சம் எங்கே?

MYTHS : Sankagiri fort was used to store the Taxes collected  from Kongu Region.

சங்ககிரி கொங்கு மண்டலத்தின் தலை நகராக இருந்ததால் வரி பணத்தை பத்திரமாக வைக்க உபயோகப்படுத்தப்பட்டது.

FACTS :  There must be a strong room or a treasury to store the Taxes collected. When the mandapams, watch mandapams are constructed with stone structure, the taxes storing structures would have the same structure and should exist even for many years.  That means the taxes collected are not stored any where on the hill.   

அடுக்கடுக்காக மதில் சுவர்கள் கட்டப்பட்டு அதன் மேலே வைக்கும் அளவுக்கா வரிப்பணம் இருந்தது. அப்படியே வைத்துக்கொண்டாலும் அதை வைக்க ஒருஉறுதியான கட்டிடம் கட்டப்பட்டு இருக்கவேண்டுமே? மற்ற மண்டபங்கள் இருக்கும் போது கருவூலக்கட்டிடம் மட்டும் எங்கே சென்றது? அல்லது அதன் எச்சங்கள் எங்கே?  அப்படி எதுவும் இல்லை என்றால் இவ்வளவு அரன்கள் எதற்க்காக?
MYTHS: The fort wall with entrances are to protect the fort  and the treasure. (Taxes Collected ) 
கருவூலத்தைகாப்பதற்க்காக  கட்டப்பபட்டது தான் இந்த நுழைவாயில்களுடன் கூடிய மதில் சுவர்கள்

FACTS : Since there is no evidence of Fort or a treasury exists on the top of the hill, why the walls are build so strong.  All the walls are constructed during various periods. To protect what? Most of the entrances are with mandapams and pillars has the reliefs of Hindu religion related gods. My assumption is, the Fort entrance walls  with mandapam inside are constructed at the time of construction of the Chennakesava Perumal Temple on the top. Also the entrance stones has the reliefs related to Hindu temple architecture ( கங்கா யமுனா)  and the mandapams are used as a resting place for the pilgrims. The entrances with out mandapams might have built at a latter state during Tippu Sultan and East India English people.   

திப்புசுல்தான் மற்றும் ஆங்கிலேயர் காலத்திற்க்கு முன்பே ஒவ்வொரு கோயில்களுக்கு முன்பும் மண்டபத்துடன்  கூடிய வாயில்ககள் இந்து கோயில் கலைப் பாணியில் கட்டப்பட்டு இருந்திருக்கிறது. இந்து மதம் சம்பந்தப்பட்ட புடைசிற்ப்பங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இது எதை உணர்த்துகின்றது. இப்போது பெரிய கோவில்களில் உள்ளதைப்பொல வெளிப்பிரகாரம் மற்றும் உள்பிரகாரத்தை உணர்த்துகிறதா. பக்த்தர்கள் மலை ஏறும்போது இளைப்பாறி செல்வதற்க்காகவா. இதுதான் சரியாக இருக்குமோ?..
MYTHS : Morthitti vassal is used by a lady to give butter milk to the solders.
மோர்திட்டி வாசல் வழியாக மூதாட்டி காவலர்களுக்கு மோர் வழங்கினார் என்று நம்பப்படுகின்றது

FACTS  : Mor thitti vasal is on the west side of the hill at a height of 200 feet above the punishment area  and there is no approach  from West. She had given  the butter milk to the solders and not to the prisoners, Then she would have chosen the other entrances. 

கொலைக்களத்தின் மேலே 200 அடி உயரம் உடைய வாசலுக்கு கிழக்குப்பக்கம் இருந்து தானே வரமுடியும். மேற்கு பக்கம் செங்குத்தான பாறைகளை உடையதே. எப்படி சாத்தியம்?.காவலர்களுக்குத்தானே மோர் கொடுத்தார். எல்லோரும் உபயோகப்படுத்தும் வழியையே உபயோகித்து இருக்கலாமே?
MYTHS: Many authors claims that the Fort was constructed Chozhas and expanded by Hoysalas,  Pandyas, Vijayanagara kings, Madurai Nayaks, Mysore Udayars, Mysore Thalavais and Britishers.  Even though the 6,7 & 8th walls are constructed by Mysore Kings, it was believed that the hill top temples, mandapas and ponds existed more than 800 to 900 years before.
புத்ததகங்களிலும் வலைதளங்களிலும் இக்கோட்டை அரண்கள் கட்டப்பட்டது குறித்து மாறுபட்ட தகவல்கள் உள்ளது..800- 900 வருடங்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்..

FACTS:  From the temple available  on the top of the hill and after 2nd entrance ( Senna Kesava Perumal and Varadharaja Perumal ), The entrance walls  with mandapams might have been constructed by Hoysalas or Mysore Kings. The Kannada inscriptions are available at the base of the Veerabhadra temple and Chennakesava Perumal Temple proves their hand work. Hoysala symbol of Andabirundam relief is available in Sri Varadharaja Perumal Temple.  

சென்னகேசவ பெருமாள் மற்றும் வீரபத்திரர் கோவில்களில் கன்னட கல்வெட்டுகள் இருக்கின்றன. இதைக்காணும் பொழுது மைசூர் மன்னர்கள் காலத்திலும், வரதராசப்பெருமாள் கோவிலில் தூணில் ஹோய்சாலர்களின் சின்னமான கண்டபிருண்டம் இருப்பதை வைத்து ஹோய்சாலர்கள் காலத்திலும் கோவில்களும் ஆரம்ப மதில் சுவர்களும் கட்டப்பட்டு இருக்கவேண்டும்  என்று ஊகிக்க முடிகின்றது..


--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment