Saturday 20 May 2017

Sri Venugopalaswamy Temple / ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில், Sathyamangalam, Erode district, Tamil Nadu.

15th May 2017.
டணாயக்கன் கோட்டை மரபு நடையை முடிக்கும் போது மதியம் மணி 3 ஆகிவிட்டது. பின்பு பவுசியா இக்பால் ஏற்பாடு செய்து இருந்த மதிய உணவு உண்டு விட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம்  என்று ஆலோசித்தோம். டணாய்கன் கோட்டை ஸ்ரீ மாதவப்பெருமாள் கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மூலவரையும் கருடத்தூணையும்  காணலாமா என்று யோசித்தோம். எங்கள் வழி நடத்துனரும் ஆர்வலருமான  திரு ராமசாமி அய்யா மிகுந்த நேரம் பிடிக்கும் என்று கூறினார். மேலும் அதற்குப் பதிலாக சத்தியமங்கலம் சென்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மூன்று நிலைகளில் உள்ள பெருமாள் கோயிலைக் கண்டு விட்டு பின்பு கலைந்து செல்லலாம் என்று கூறினார். சிலர் நாங்கள் யானை தண்ணீர் குடிப்பதைக் காண வேண்டும் என்று கூறினர். எனக்கும் ஈரோட்டில் இருந்து சென்னை வர தொடர் வண்டியைப் பிடிக்க நேரம் இருக்காது என்பதால் திரு ராமசாமி அய்யா கூறிய யோசனைக்கு உடன்பட்டோம். சிலர் மட்டும் ஒருவண்டியில் யானையைக் காணச் சென்றனர் ( அவர்களும் பார்க்க முடியவில்லை என்பது பின்பு தெரியவந்தது ).


ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில்.
3 நிலை ராச கோபுரத்துடன்  கிழக்கு பார்த்த கோவில். கொங்கு நாட்டுக்கே உரிய கருடத்தூண் இங்கு இல்லை. உள்ளே நுழைந்த உடன் கொடிமரமும் பலிபீடமும் உள்ளது. பெருமாள் இங்கு மூன்று நிலைகளில் சேவை சாதிக்கின்றார். வேணுகோபால சுவாமியாக நின்ற நிலையிலும், லக்ஷ்மி நாராயணாராக அமர்ந்த நிலையிலும், அரங்கநாதராக கிடந்த நிலையிலும் அருள் பாலிக்கின்றார். திரு ராமசாமி அய்யா மாலிக்காபூர் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் உற்சவரும் நகைகளும் மதுரை, கன்னியாகுமரி, கேரளா, மைசூர் வழியாக வந்து இந்தக் கோவிலின் சுரங்க பாதை / பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறினார். ( ஆனால் கோயிலின் வலைதளத்தின் படி திப்பு சுல்தான் போர் காலங்களில் இந்த சுரங்க வழியை உபயோகப் படுத்தியதாக எழுதப்பட்டு இருக்கின்றது ) மண்டபத்தூண்களில் பல சிற்பங்களுடன் திப்பு சுல்தானின் சிற்பமும் உள்ளது மேலும். திப்பு சுல்தானின் பொருள் காப்பாளர் வரி வசூலில் ஒருபகுதியை இக்கோயிலுக்கு கொடுத்ததாகவும், அதற்காக அவருடைய உருவத்தை செதுக்கியதாகவும் வலைத்தளத்தில் கூறப்பட்டு உள்ளது.   இது பற்றிய முக்கிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
  
After Danaikan kottai heritage walk  we had our  packed lunch. It was 16.00 hrs when we completed our lunch. In the mean time there was a confusion, what to do  next. Somebody wants to see elephants ( But they could not reach the spot is a different  story ) and many of us wished to visit the Perumal temple at Sathyamangalam. Initially thought of visiting the Bhavani Sagar Dam Perumal temple where the original Perumal and Garudathoon  of Sri Madhava Perumal Temple was shifted. Since it was getting late and I have to catch the train at Erode, decided to  see Sri Venugopala Swamy Temple at Sathyamangalam  as per  our guide  Mr Ramaswamy’s suggestion.  Around 17.00 reached the temple  Mr Ramaswamy Explained the details of the temple.

Moolavar    : Sri Venugopalaswamy
Thayar       : Sri Kalyana Lakshmi.

Some of the important details are ....
The temple is facing east with a 3 tier Rajagopuram. The  KonguNadu special Garudathoon /Deepasthambham is not there in this temple. Balipeedam and Dwajasthambam are immediately after the Rajagopuram.

Perumal  in this temple are in three different postures and also called in three different names.  Sannadhis for Sri Venugopala Swamy, in standing posture,  Sri Lakshmi Narayana Perumal ( Thayar Lakshmi is on the lap of Perumal  in sitting posture and Sri Ranganathar in reclining posture. In addition to this sannidhis for Aadhavan, Vishwaksena, Anjaneyar, Andal, Iyappan and Chakkarathalwar.

HISTORY & INSCRIPTIONS
It was told that the temple is 1000 years old, without any inscriptions and  looks like 11th century temple.  On the main sanctum wall markings are done for the koshtam , but the same was not done latter. In the outer prakaram there is vamana statue with moon and sun on the top, may a periphery limit for the land donated to this temple.

It was also told that the Srirangam Ranganathar Urchavar  was moved to this temple via Madurai, Kanyakumari, Kerala, Mysore  during  Malik Kafur invasion. Mr Ramaswamy told that the  secret room/ passage below the ground in the mandapam, where the Ranganathar  idols were kept. ( Bust as per the temple's web site Tipu Sultan used this secret passage during war time )   

In the front mandapam is with number of bas-reliefs on the pillars, Tipu sultan’s relief holding a parrot in his hand is also there. The exact background story is not known. As per temples web site the treasurer of Tipu Sultan gave a portion of tax collected to this temple.
    
 Secret passage  - Believed that Sri Ranganathar’s idol ( Urchavar and the ornaments ) are kept here during Malik Kafur’s invasion

 Believed to be Tipu Sultan’s relief 

THE TEMPLE TIMINGS:
The temple will get open between 06.00 hrs to 12.00 hrs and 17.00 hrs to 20.00 hrs.

CONTACT DETAILS:
Land line number is +91 4295  221899
email address : sathyvenugopalswamy@gmail.com
Temple web site : Click here

HOW TO REACH:
About a KM from the main bus stand.
Sathyamangalam is about 70 KM from Coimbatore and 40 km  from Mettupalayam.
Bus facilities are available from Mettupalayam, Erode, Coimbatore etc,.

LOCATION:CLICK HERE


 Perumal as Sri Venugopala Swamy in Standing Posture 

 Perumal as Lakshmi Narayanar – in sitting Posture 

 Perumal in sayana kolam as Ranganathar   


 relief of lizard   


 Symbolic representation of solar and lunar eclipse   

 Symbolic representation of solar and lunar eclipse   

 Sarba mandalam relief  

Sarba / Naga bandham
 relief of 4 monkeys interlinked


 Vamana avatar of Perumal – a periphery limit stone for the land donated –till chandran and suriyan exists 
---OM SHIVAYA NAMA--- 

No comments:

Post a Comment