26th August
2018.
This visit to the Jain Jinalaya was a part of Madras Day celebrations, to learn more about Tamil Jains and their
contribution to Madras, on 26th August 2018. This visit was
organized by Mr. Kombai Anwar, a Historian & a documentary filmmaker, and
led by Prof. Dr. Kanaka Ajithadass, from the Tamil Jain community. The original
plan of starting in two vans from Nageswara Rao Park was changed to one van
and the second van joined us at Thirumangalam. Visiting of 6 Jinalayas planned from
Puzhal to Thiruvallur was cut short to 5 Temples for want of time since the
visit was supposed to wound up by 12.00 hrs. The initial hiccup at the time of
starting had an impact on the end time also.
After Puzhal we
traveled on the single village roads with many potholes to reach our targeted places. Enjoyed the scenic beauty of the villages and
green green fields, after rain. At Puzhal Jinalaya Dr Kanaka Ajithadass
explained, what is Jainism, Jain’s contribution to the Tamil language & literature, Education, their culture,
Ahimsa, the food habits, the rituals
followed, etc,. He also explained the Iconography of the Jain
Tirthankara statues. It was said that some of the Digambara Jinalayas had been taken over by the North Indian Swethambara Jain,
sect. The lack of financial support by the Tamil Jains and the dwindling population ( 25 to 28 thousand Tamil Jains )
are the main reasons.
இந்த
வருட மெட்ராஸ் தினத்தை ஒட்டி 26ந்தேதி ஆகஸ்டு மாதம் 2018 அன்று சென்னை, மயிலாபூர் நாகேஸ்வரராவ்
பூங்காவில் இருந்து இரண்டு வேன்களில் சென்னை புழலில் இருந்து திருவள்ளூர் வரை உள்ள
சமண கோவில்களைக் காண வரலாற்றாலரும், டாக்குமென்டெரி பட தயாரிப்பாளருமான திரு கோம்பை
அன்வர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு, முனைவர் கனக அஜிததாஸ் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. சுமார் ஒரு மணி கால தாமதத்திற்க்குப் பிறகு ஒரு வேன் நாகேஸ்வரராவ் பூங்காவில் இருந்து கிளம்ப
மற்றொரு வேண் திருமங்கலத்தில் இணைந்து கொண்டது. இந்த காலதாமதம் மதியம் 12 மணிக்கு
முடிக்க வேண்டிய மரபு பயணம் இரண்டு மணி வரை நீடிக்க வைத்தது. இரட்டை ஏரி பகுதியில்
உள்ள மாங்காடு பாலாஜி பவனில் காலை உணவை முடித்துக் கொண்டு சுமார் 9.15 மணிக்கு புழல்
ஜீனாலயத்தைச் சென்றடைந்தோம்.
முனைவர்
கனக அஜிததாஸ் அவர்கள், புழல் ஜினாலயத்தில், சமண சமயம், தீர்த்தங்கரர்கள், சமண சமயத்தின்
கொள்கைகள், அவர்கள் பண்பாடு, உணவு பழக்கங்கள், அஹிம்சை, சமண முனிவர்கள் தமிழுக்கு ஆற்றிய
தொண்டு, குறிப்பாக சென்னைக்கு, திருவள்ளுவர், திருக்குறள், போன்றவற்றை எடுத்துரைத்தார்.
2000 வருட பழமை வாய்ந்த சில தமிழ் திகம்பரர் ஜினாலயங்கள் வட மாநில ஸ்வேதாம்பரர் பிரிவினரின்
கட்டுப்பாட்டில் சென்று விட்டதாகவும், அதற்குக் காரணம் பராமரிப்புக்கு ஆகும் செலவு
மற்றும் குறுகி வரும் தமிழ் சமண சமுதாயத்தின் மக்கட்தொகையும் (25000-28000) காரணம்
என்று கூறியது சிறிது வருத்தத்தை அளித்தது.
Sri Parshwanath
Jinalaya Manasthambam relief
PUZHAL
The Digambara old Jinalaya
dedicated to Sri Adinath, was taken over by the North Indian Swethambara
Jains. Sri Adinath was decorated and painted in north
Indian style. The Jinalaya retains the old mandapa with pillars, probably built
during the latter Chozha period. On the North side, there is a sripada, believed to
be one of a Jain monk’s footprints. A new big Jain Jinalaya was also constructed
with marble in the same premises.
Since the original Jinalaya
was taken over by the Swethambara sect, the Digambara sect constructed a new
Dravidian architecture Jinalaya for Sri
Parshvanath. A Manasthambam and Balipedam are in front. Four Parshvanath Tirthankaras facing on all 4 sides are installed. Daily abhishek and poojas are
performed. Iyakan and Iyaki ( male & female attendants ) images are also
worshiped in this Jinalaya. The Samana
poet Pulavar Jambukumaran, who was awarded twice for his literary works by the Tamil Nadu Government,
hails from this place. His classical Tamil literary works include Parshvanath
Kaviyam and Mahavir Kaviyan, and also he has credit for 70 Jain Tamil works. It was
told that Tamil Jains are living in considerable numbers in Vellalar Street of
Puzhal.
சுமார்
ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ ஆதிநாத பகவான் திகம்பரர் ஜினாலயம் தற்போது வட
மாநில ஸ்வேதாம்பர பிரிவு சமணர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன் மண்டப தூண்கள் தவிர
மற்ற இடங்கள் நவீனப் படுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீ ஆதிநாதர் வர்ணம் பூசப்பட்டு காணப்படுகின்றார். ஜினாலயத்தின் தென்புறம் ஒரு சமண முனிவரின் பாதமும் உள்ளது.
பழைய
திகம்பரர் ஜினாலயம், ஸ்வேதாம்பர ஜினாலயமாக மாற்றப்பட்ட பின்பு, தமிழ் சமணர்கள், தங்களுக்கென்று
ஒரு திகம்பர ஸ்ரீ பார்சுவநாதர் ஜீனாலயம் ஒன்றைக் கட்டிக் கொண்டு சென்று விட்டனர். இந்த ஜினாலயம் திராவிட கட்டிடக் கலையின் படி விமானம் அமைக்கப்பட்டு உள்ளது. உள்ளே நுழைந்த
உடன் பலிபீடமும், மானஸ்தம்பமும் உள்ளது. ( மானஸ்தம்பத்தின் முன்பு உள்ளே இருக்கும்
தீத்தங்கரரின் பெருமையையும், அவர் கூறிய தர்மம், அஹிம்சை ஆகியவற்றை மனதில் இருத்தி,
நினைத்து, தான் என்ற அகந்தையை, தற்பெருமை ஆகிவற்றை அகற்றி விட்டு உள் செல்லவேண்டும்
எனபதை வலியுறுத்துகின்றது) அடிப்பகுதி மற்றும் மேற்பகுதியின் நாற்புறமும் தீர்தங்கரர்
சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. கருவறையின் மத்தியில் நாற்புறமும் நோக்கிய படி ஸ்ரீ
பார்சுவநாதர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இயக்கன் இயக்கியும் வழிபாட்டில் இருக்கின்றனர்.
தினசரி பூஜைகளும் அபிசேகங்களும் நடைபெறுகின்றது. சமண கவிஞரும், தமிழக அரசால் இருமுறை
கவுரவிக்கப் பட்டவருமான புலவர் ஜம்புகுமாரன் அவர்கள் இந்த ஊரைச் சார்ந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது. இவர் படைப்பில் பார்சுவநாதர் காவியம், மகாவீரர் காவியம் மற்றும்
70 தமிழ் படைப்புகளும் அடங்கும்.
Old Adinath Jinalaya
Old Adinath Jinalaya Old Pillars
and Capital
Dravidian architecture Vimana of
Digambara Jinalaya
VILANGADUPAKKAM.
Mr. Poornachandran from
Puzhal also accompanied us to guide, the rest of the Jinalaya. Instead
of touching the main road we traveled
through the village roads. Vilangadupakkam
is about 7 KM from Puzhal.
The Jinalaya consists
of a sanctum and an Artha mandapam. Dwajasthambam
and balipeedam are immediately after the gate. A Dravidian architecture Vimana was built
above the sanctum. The stucco images of
Adinath, Neminath, and Parshvanath are on the Vimana. The Jinalaya is very old
and was subjected to many renovations. The pillars bear an ancient look. Moolavar Sri Mahavir is in artha Pariankasana sitting
posture on a lion throne. The lanchanam/ identification symbol lion is shown on the base. A halo with
jwalas, three umbrellas (முக்குடை), creepers of Ashoka tree, Whisk/ Chowry bearers ( சாமரதாரிகள் ) are also shown.
In addition to this,
there are 5 Tirthankars, kept in the right side mandapa, which are abandoned in nearby Villages and brought here. The Tirthankaras
include Mahavir from Pervallur, Sri Rishaba from Methavayil, and Parshvanath
from Vallur. Also, images of a Tirthankara without three umbrellas and a
Parshwanath are in the same Mandapa. Even though no Tamil Jains are living in
this Village, the poojas are conducted regularly through the Tamil Jain
Trustees.
புழலில்
இருந்து திரு பூர்ணச்சந்திரன் வழிகாட்ட எங்கள்
பயணம் விளாங்கட்டுப்பாக்கம் ஜினாலயத்தை நோக்கி நகர்ந்தது.. நெடுஞ்சாலைகளில் செல்லாமல் கிராமத்துச் சாலைகளிலேயே
சென்றது ஒரு அனுபவம், புழலில் இருந்து விளாங்காட்டுப்பாக்கம் 7 கிமி தூரத்தில் உள்ளது.
ஜினாலயம்
பழமையானது என்பதற்க்கு தூண்கள் மட்டுமே சாட்சிகள். மற்றபடி ஜினாலயம் பலமுறை புரணமைப்புக்கு
உட்படுத்தப்பட்டு உள்ளது. உள்ளே நுழைந்த உடன் கொடிமரமும், பலிபீடமும். ஜினாலயம் கருவறை,
இடைநாழி, அர்த்தமண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டு உள்ளது. கருவறையின் மீது திராவிடக்
கலைப்பானியில் அமைந்த விமானம். விமானத்தில் ஆதிநாத், நேமிநாத், பார்சுவநாத் ஆகியோருடைய
சுதைச் சிற்ப்பங்கள் பக்கத்துக்கு ஒன்றாக உள்ளன. கருவறையில் ஸ்ரீ மகாவீரர் தியான ஆசனத்தில்.
முக்குடை, அசோக மர இலை, சாமரதாரிகள், ஜுவாலையுடன் கூடிய ஒளிவட்டம், பீடத்தில்
சிம்ம லாஞ்சனம் ஆகியவை காட்டப்பட்டு உள்ளன.
முகப்பின்
வலது மண்டபத்தில் பக்கத்து ஊர்களில் இருந்து கிடைத்த பார்சுவநாத், ஆதிநாதர், மகாவீரர்
ஆகிய 5 தீர்த்தங்கரர் சிற்பங்கள் நிறுவப்பட்டு உள்ளது.
Sri Mahavir
VICHOOR
The Vichoor Village is
about 4 KM from Vilangadupakkam. The newly built Jinalaya is adjacent to a Vishnu Temple. The Jinalaya was built with a sanctum and a mandapam. This
big size Sri Adinath was found abandoned in a nearby tank. A Halo ring, three
umbrellas, an Ashoka tree along two Chowry (whisk) bearers are shown. A pillow on the back side of the
image indicates that this Tirthankara may belong to the latter period ie, the 14th
to 15th century. Like Vilangadupakkam, in this Village also no Jain
family is living and daily poojas are conducted by a Jain coming from a
long distance.
அடுத்து
நாங்கள் சென்றது விளாங்காடுபாக்கத்தில் இருந்து 4 கிமி தூரத்தில் உள்ள விச்சூர் கிராமம்.
புதிதாக கருவறை மற்றும் மண்டப அமைப்பில் கட்டப்பட்ட ஜினாலயம் ஒரு பெருமாள் கோவிலின்
அருகே. கருவறையில் அந்த ஊரின் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆதிநாதர் தியானத்தில்
அமர்ந்த கோலத்தில் இருக்கின்றார். ஒளிவட்டம், அசோக மரக்கொடி, சாமரதாரிகள் காட்டப்பட்டு
உள்ளனர். ஆதிநாதரின் பின்புறம் திண்டு போன்ற அமைப்பு காட்டப்பட்டு இருப்பதால் இவர்
14 அல்லது 15ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்த ஊரில் சமண
சமயத்தினர் யாரும் இல்லாததால் பக்கத்து ஊரில் இருந்து வந்து பூஜைகள் செய்யப்படுகின்றது..
SOLIPALAYAM.
This Solipalayam
Village is about 12 KM from Vichoor and a part of Chozhavaram, on the Chennai
to Tirupati route. It was learned, that
this village was once a Jaina Village. The Jinalaya is dedicated to the 22nd
Tirthankara Neminath. Neminath was found from a pond in the Village and
installed in a small shrine constructed in the premises of a house. Neminath is
shown with a Triple umbrella / Mukkudai, branches of the Ashoka tree, and Chowry /whisk bearers. Since no Pillow-like projection is shown, this Neminath may belong
to the 12th to 13th century.
எங்களின்
அடுத்த இலக்கு விச்சூர் கிராமத்தில் இருந்து 12 கிமி தொலைவில் உள்ள சோழாவரம் பகுதிக்கு
உட்பட்ட சோலிபாளையம் என்ற கிராமம். ஒரு வீட்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட 22வது தீர்த்தங்கருக்கான
சிறிய ஜினாலயம். இவர் இந்த ஊரின் குளத்தில் இருந்து மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். சாமரதாரிகள்,
அசோக இலைக்கொடிகள், முக்குடை காட்டப்பட்டு உள்ளன. இயக்கியும் வழிபாட்டில் இருக்கின்றார்.
நேமிநாதர் 12ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.
Sri Neminath
CHINNAMBEDU
This place Chinnambedu/
a part of Siruvapuri is about 15 KM from
Chozhavaram/ Solipalayam. This small Jinalaya is dedicated to the 23rd
Tirthankara Sri Parshwanath. Sri Parshwanath is in standing Kayotsarga posture
without three umbrellas (Mukkudai ). A 5-headed snake is shown over Sri Parshwanath's
head. Samaratharis ( chowry/whisk bearers ), above chowry bearers a Lotus on the
right and a Conch on the left are also shown. The Lotus and the conch indicate
the Padma Nidhi and Sanga Nidhi, the treasure bearers. This Tirthankara may
belong to the 12th to 13th century. Yaksha and Yakshi
images are on a platform.
It was told that Jain
bas-reliefs are also available on the pillars of Sri Varadharaja Perumal temple. The Perumal temple is about 50 meters from the
Jinalaya. Parshvanath and Tirthankara
bas-reliefs are carved on the pillar of Thayar Sannidhi Mandapam. As per the
experts, these pillars might have been taken from a dilapidated Jain temple, or while
constructing both temples the pillars might have interchanged.
சோழாவரத்தில்
இருந்து காரனோடை வழியாக சிறுவாபுரி கிராமத்தின்
ஒரு பகுதியான சின்னம்பேடு கிராமம் தான் எங்களின் நிறைவு சமண சமய ஜினாலய காணல். சிறு ஜினாலயம். பார்சுவநாதர் 5 தலை பாம்பு குடையின் கீழ். காலின்
அருகே சாமரதாரிகள் இருவர், சாமரதாரிகளுக்கு
மேலே வலதுபுறம் தாமரையும் இடதுபுறம் சங்கும் காட்டப்பட்டு உள்ளது. இது ஒரு அபூர்வமான
அமைப்பாகும். செல்வத்தின் அதிபதிகளான பத்ம நிதியாகவும், சங்க நிதியாகவும் இவைகளைக்
கருதுகின்றனர். இது ஒரு அபூர்வனான அமைப்பு ஆகும். இவர் 12 அல்லது 13ம் நூற்றாண்டைச்
சார்ந்தவராக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இயக்கன் மற்றும் இயக்கியும்
வழிபாட்டில் உள்ளனர்.
சுமார்
50 மீட்டர் தொலைவில் உள்ள பெருமாள் கோவிலின் தாயார் சன்னதி மண்டபத் தூண்களில் தீர்த்தங்கரர்
புடைச் சிற்ப்பங்கள் இருப்பதாகக் கூறினர். இரு தீர்த்தங்கரர் மற்றும் பார்சுவநாதர்
சிற்பங்கள் காண முடிந்தது. இத்தூண்கள் சமண கோவிலில் இருந்தோ அல்லது இரு கோவிலுக்கும்
ஒரே சமயத்தில் தூண்கள் செதுக்கும் போது தூண்கள் மாறி இருக்கலாம் என்பது அறிஞர்கள் கருதுகின்றனர்.
கல்வெட்டுக்கள்
பார்சவநாதர் கோயிற் கருவறையின் கூரைப் பகுதியில் மிகவும் சிதைந்த நிலையில் கல் வெட்டுக்கள் காணப்படுகின்றன.
1. ........ சபையோம்......
2. .........விரிச்சிக.......
என்னும் சொற்களை மட்டுமே அறியமுடிகிறது.
Sri Parshvanath
Sripada
Perumal Temple Pillar
bas-relief Tirthankaras
Perumal Temple Pillar
bas-relief Tirthankaras
Perumal Temple Pillar
bas-relief Tirthankaras
Perumal Temple Pillar
bas-relief Tirthankaras
With the visit of Sri
Parshwanath Jinalaya of Chinnambedu (
Siruvapuri ), THE TAMIL JAINS & MADRAS – A MADRAS DAY HERITAGE VISIT
came to an end around 14.00 hrs, took a group photograph in front of the
Jinalaya. A Tamil song was rendered by
Miss Rashmi Raja, in front of the Jinalaya. After thanking Dr Kanaka Ajitha Dass, Mr Kombai
Anwar, and the co-participants, started our return journey to Madras ( Chennai ).
Thanks to all.
மெட்ராஸ் தினத்தின் ஒரு நிகழ்வான, மெட்ராஸில்
தமிழ் சமணர்களும் அவர்களின் பங்களிப்பும் என்ற எங்கள் பயணம் சிறுவாபுரி சின்னம்பேடு
கிராம ஜினாலயத்துடன் நிறைவு பெற்றது. ஜினாலயத்தின்
முன்பு எல்லோரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு ரேஷ்மா ராஜாவின் தமிழ் இசையுடன் கோம்பை அன்வருக்கும்
இந்த மரபு பயணத்தைப் நடத்திக் கொடுத்த முனைவர் அஜிததாஸ் அவர்களுக்கும்
நன்றி கூறி சென்னையை நோக்கிப் பயணித்தோம். நன்றி கலந்து கொண்ட அனைவருக்கும்.
---OM SHIVAYA NAMA---
மிக அருமை ஐயா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete