Tuesday, 7 August 2018

Sri Adhinath Bhagwan Jinalaya / ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம், வெள்ளோடு / Vellode, Erode District, Tamil Nadu.

31st July 2018.
This Sri Adhinath Bhagwan Jinalaya is one of the living Temple of the 72 Jinalaya’s of Kongu region near Erode. As per the Ganga King Simhavaraman’s Cheppedu (436-458 AD), Jainism was spread and flourished in the Kongu region. This statement is supported by the inscriptions available in the Cave with Jain Beds and Cheppedu.
   
This Village Vellode is on the Erode to Chennimalai bus route. There are two stories behind the name of this Village. One is,  that there is a stream/canal with white sand, hence this place is called Vellode. The other Story is associated with the Sri Arudra Kapaleeswarar temple of Erode. The milk was brought from Pechiparai ( the present VOC Park) to the King's Palace. Every day at one particular place milk with a cane was toppled. So the king ordered to dig the place when the crowbar hit Shiva’s head / Kapala and blood oozed out & it burst into four pieces. Of the four, one piece falls here, hence  this place is called Vellode.

Sri Adhinath Jinalaya is facing in south. The sanctum sanctorum consists of the sanctum and artha mandapam. The artha mandapam was supported by simple pillars. A stucco vimana is on the sanctum. Nagars are at the entrance of the artha mandapam. Sri Adhinath Bhagwan is shown with Mukkudai, Ashoka leaves, Brabai over the head, and Samaratharis. As per the experts, the Jinalaya might have been constructed during the 11-12th Century CE. The Jinalaya comes under the control of Tamil Nadu HR&CE, with oru kala pooja. The Jinalaya is being maintained by Sri Anandraj of Vandavasi and presently looking after Madurai cultural Centre.

கங்க மன்னன் சிம்ஹவர்மன் செப்பேட்டின் ( 436-458 AD) படி கொங்கு மண்டலத்தில் சமணம் பரவியும் செழித்தும் இருந்தது. இன்றைய சமணக் குகை படுக்கைகளின் அருகே காணப்படும் பிராமி கல்வெட்டுக்களும் அதனையே உறுதி செய்கின்றது. கொங்கு மண்டலத்தில் கட்டப்பட்ட 72 சமண ஜீனாலயங்களில் இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு சில ஜீனாலங்களில் இதுவும் ஒன்று.  அவல் பூந்துறையை அடுத்து நாங்கள் சென்றது வெள்ளோட்டில் இருக்கும் ஸ்ரீ ஆதிபகவான் ஜீனாயத்திற்க்கு. பூந்துறை ஜீனாலயத்திற்கு பூசை செய்பவரே  இங்கும் செய்வதால் அவரையும் உடன் அழைத்துச் சென்றோம்.

இந்த ஊர் வெள்ளோடு என்று அழைக்க இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர். அதில் ஒன்று, இங்கு வெண்மையான மணல் ஒடை ஒன்று ஓடுவதால் ( மழை காலத்தில் மட்டும் தண்ணீர் ஓடும் ) வெள்ளோடு என அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.  மற்றொரு கூற்று. ஈரோடு ஸ்ரீ ஆருத்ரா கபாலீச்சுவரர் கோவிலைச் சம்பந்தப்படுத்தி.. பேச்சிப்பாறையில் இருந்து ஒரு அரசர் மாளிகைக்கு பால் எடுத்துச் செல்லும் போது ஒரு இடத்தில் மட்டும் தினமும் பால் சிந்துவதாகக் வேலையாட்கள் கூறினர். மன்னரின் உத்தரவுப்படி அந்த இடத்தை கடப்பாரையால்  அகழ்ந்த போது கடப்பாரை சிவலிங்கத்தின் மீது பட்டு இரத்தம் பொங்கியதாகவும், கபாலம் 4 பாகங்களாக வெடித்து நான்கு இடங்களில் விழுந்ததாகவும் கூறுவர். அப்படி விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று என்பதால் இந்த இடம் வெள்ளோடு என அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

ஸ்ரீஆதிநாத பகவானின் கோவில் தெற்கு நோக்கி கருவரை மற்றும் அர்த்த மண்டபத்துடன் காணப்படுகின்றது. அர்த்த மண்டபத்தின் வாயிலில் நாகர்கள் இருக்கின்றனர். அர்த்த மண்டபம் கற்பலகைகளால் ஆன மேல் தளத்தை அலங்காரம் ஏதும் அற்ற தூண்கள் தாங்குகின்றன. சுதை வேலைப்பாட்டால் அமைந்த விமானம் கருவரை மீது. .கருவரையில் ஆதிபகவான் அமர்ந்த நிலையில். முக்குடை, சாமரதாரிகள், அசோக இலைகள், பிரபை அகியவற்றுடன் காணப்படுகின்றார். இந்த ஜீனாலயம் கிபி 11-12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. தமிழக அரசின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வருகின்றது. வந்தவாசியைச் சார்ந்தவரும், மதுரை சமண பண்பாட்டு மையத்தின் காப்பாளருமான திரு ஆனத்ராஜ், அவர்களே வெள்ளோடில் இருக்கும் இக் கோவிலையும் கவனித்துக் கொள்கின்றார்.,

LOCATION OF THE TEMPLE: CLICK HERE




---OM SHIVAYA NAMA--

6 comments:

  1. Dear sir
    Mr Anantharaj, contact no please to visit the temple.
    With regards
    K Lakshmikanthan

    ReplyDelete
  2. Salutations to the author for Documentation of our History and Heritage for the benefit of the present and Future generations. Real service to the humanity, Thanks, regards

    ReplyDelete
  3. Thank you very much. the information is very useful when i look for some details around Kongunadu.

    ReplyDelete