The visit to this Rock Cut cave – 1, at Badami, was a part of the “Hampi, Badami, Pattadakal, Mahakuta and Aihole temples Heritage visit”
organized by வரலாறு விரும்பிகள் சங்கம் Varalaru Virumbigal Sangam – VVS and எண்திசை வரலாற்று மரபுநடைக்குழு, between 24th December to 28th December
2022. I extend my sincere thanks to the
organizers Mrs. Radha, Mrs. Nithya Senthil Kumar, and Mr. Senthil Kumar.
Monuments at Badami
Badami,
also known as Vatapi, was the capital of the Chalukyan empire ( 6th to 8th cent. CE.), which extended in the time of Pulikesin-II
from Kanchi in Tamil Nadu to the banks of the Narmada and from Orissa to the
west coast. After a set-back for a while owing to the attack of the Pallavas
under Narasimha Varman-I, the Chalukyan kings regained their territory and gave
impetus to the revival of Hindu religion and art under royal patronage Mahakuta,
Aihole, Pattadakal, and Badami became great centers of experimentation in temple
building
Attracted
by the scenic beauty and natural defenses provided by the majestically standing
hills and the vast sheet of water below. The Chalukyan kings shifted their
early capital from Aihole to Badami. The remains of which can still be seen in
the valley on the northern slopes. The natural gorge leading to the hill city embellished with temples and gateways is one of the major attractions of Badami
apart from the famous rock-cut Brahmanical and Jaina caves which contain some
of the finest sculptures known for their grace and vigour. The Chalukyan rulers
built several structural temples along the edge of the lake and hill-tops which
the visitor should not miss to see. Even while experimenting with temple building
they evolved the proto-type of the famous southern vimana style which is the Malegitti
Sivalaya. The lower Sivalaya and the upper Sivalaya represent.
The
curvilinear sikhara of the Yellamma temple represents the northern style. While
the Bhutanatha temples with stepped pyramidal roofs represent the Kadamba-nagara
type. Within a distance of 48 km. More than one hundred and fifty temples were
built by Chalukyan kings. The rock-cut temples-(caves - 1 to 4 are ornamented
with exquisitely carved animal and human figures, gods, and demi-gods. Floral
and geometric patterns and scenes recall the great episodes from the epics
and Puranas. Although the Chalukyans were Vaishnavites they encouraged the construction of Jaina and Saiva temples also. After the fall of the Chalukyan
empire the Rashtrakutas and Vijayanagar rulers and finally Tippu sultan
occupied Badami the fort walls and other edifices built by them can also be
seen here Badami abounds in many inscriptions, and some of which are
indispensable for writing the history of India. Among them, mention may be made
of the Pallava inscription on the boulder near the north gate and that of Mangalesha
in Cave 3. Here lived Prasanna Venkatadasa, a great Vaishnava saint of the 16th
century CE, who used to meditate and
sing devotional songs on a platform near the north gate.
வாதாபி குடைவரைகள்
வாதாபி- ஐஹொளே- பட்டடக்கல் கோயில் கட்டிடக்கலையின் தொட்டிலாக கருதப்படுகிறது. இப்பகுதியின் பிற்கால கோயில்களுக்கான மாதிரியை இந்த கோயில்களே உருவாக்கியது. வரலாற்று ஏடுகளில் வாதாபி, வாதாபிபுர, வாதபிநகரி, அகஸ்திய தீர்த்த என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ள வாதாபியில், நகருக்கு தென்கிழக்கே உள்ள செங்குத்தான மலையின் உச்சியில் நான்கு குடைவரை அமையப்பெற்றுள்ளது. மாலப்ரபா ஆற்று பள்ளத்தாக்கில் அமையப்பெற்ற இந்த மலைகள் மென்மையான மணற்கற்களால் ஆனவை. முதல் குடைவரை சிவனுக்காகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குடைவரை விஷ்ணுவிற்காகவும், நான்காவது குடைவரை சமண சமயத்திற்- காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இரு குடைவரைகள் வடக்கு தக்காண கலைப்பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காலம் 6-7ஆம் நூற்றாண்டாகும். மூன்றாவது குடைவரை நாகர, திராவிட கூட்டு கலப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வேசர கலைப்பாணி சிற்பங்களும் உள்ளன. இது மங்களேசன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும்.தூண்கள். முகமண்டபம், மகாமண்டபம் கருவறை பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியே இந்த நான்கு குடைவரைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த குடைவரையில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டு தகவல்கள் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக காணலாம்.
ROCK CUT CAVE – 1
About
60 feet from the ground level, Excavated
around 550 CE, Cave-1, is dedicated to God Shiva in Linga form. It consists of
an open porch / mukha mandapa, a pillared Hall, and a sanctum Sanctorum excavated into its rear wall. The side walls
of the porch / mukha mandapam have large-size relief sculptures of Harihara on the left and Ardhanari Shiva
on the right, supported on Pedestals that
have friezes of dwarf ganas in various moods. The Ceiling is adorned with a deeply
cut sculpture of coiled snake king Nagaraja. On either side of this are flying
Vidyadhara couples. The pillars that divide the porch from the inner hall/mandapam are fluted with beautiful cushion capitals / pothyals. Pillars carry
low-relief sculptures of deities and are decorated with pearl festoons,
foliation, medallions with mythical creatures, rows of swans, etc,.
Other
interesting themes include a two-armed Saiva Dwarapala on the left flank of the porch
entrance. A Rishaba-kunjara ( Bull – Elephant in one ), and Siva Parvati
mounting on Rishabam. Following the front contour of the rock, on the right
side, an east-facing small cave is excavated. It has Durga as Mahishamardini on
its rear wall Karthikeya on Peacock and seated Ganesha on flanking walls.
Rishaba-kunjara ( Bull – Elephant in one )
Beside this small cave is a unique
sculpture of eighteen-armed Shiva as Nataraja, “The King of dancers” Over the
façade of the cave are signatures of craftsmen such as “Ayvhasvami-kalkutti”.
குடைவரை எண்-1
தரை
மட்டத்தில் இருந்து 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த குடைவரையில் பதினெட்டு கரம் கொண்ட ஆடல்வல்லான் திருமேனி புடைப்பு சிற்பம் உள்ளது. இவரது கைகளில் சூலம், மழு. அரவம் காணப்படுகிறது. தாமரை பீடத்தின் மீது சதுர தாண்டவம் ஆடியவாறு உள்ளார். இவருக்கு அருகே மூத்த பிள்ளையான கணபதியார் காணப்படுகிறார். தந்தை நடனம் புரிவதை கண்டு மூத்த பிள்ளையும் களி நடனம் புரிகின்றார் போலும். ஆடல்வல்லானுக்கு பின்பிறம் இடபம் நின்று கொண்டிருக்கிறது. நடராஜருக்கு அருகே மகிசனை வதம் செய்த தேவியின் உருவம் காணப்படுகிறது, பின்னிரு கைகளில் சங்கும் சக்கரமும் உள்ளது. முன் வலது கையில் சூலாயுதம் உள்ளது, அதன் அடிப்பாகமானது ஈட்டி வடிவில் எருமையின் தலையை துளைத்துள்ளது. வலது காலை மகிசனின் தலையின் மீது அழுந்தி பதித்து. அசுரன் தப்பித்து போகாத வண்ணம் தேவி அவனது வாலினை தனது இடது கரத்தினால் இறுக பிடித்துள்ளாள்.
குடைவரைக்கு இடது புறத்தில் சூலாயுதம் தாங்கிய வாயில்காப்போரின் சிற்பம் உள்ளது. இவருக்கு கீழே இடபகுஞ்சரத்தின்
சிற்பமும் உள்ளது. முக மண்டபத்தில் அரியும் அரணும் (சங்கரநாராயணர்) இணைந்த திருமேனி உள்ளது. இத்திருமேனிக்கு பக்கவாட்டில் அவர்களுக்குரிய தேவியர்களான பார்வதி. திருமகளின் சிற்பங்களும் உள்ளது. இங்கே சிவனின் வாகனமான இடபம், காளை முகத்துடனும் மனித உடம்புடனும் காணப்படுகிறது. திருமகளுக்கு அருகே விஷ்ணுவின் வாகனமான கருடன் கைகளை காட்டியவாறு காணப்படுகிறார். இந்த சிற்பத்திற்க்கு கீழே உள்ள பீடத்தில் குள்ள பூதங்கள் பலவகை இசைக்கருவிகளை இசைத்தவாறு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் உள்ளன.
Shiva with Parvati----- Vishnu with Lakshmi
Sankara Narayan - on ( your ) left Shiva with Parvati and on the right side Maha Vishnu with Lakshmiமறுபக்கத்தில் உமையை ஒரு பாகமாக கொண்ட அர்த்தநாரி சிற்பம் திரிபங்க நிலையில் நின்றவாறு காணப்படுகிறது. அர்த்தநாரி அருகே பிருங்கி முனிவர் காணப்படுகிறார். பிருங்கிக்கும் அர்த்தநாரிக்கும் இடையே இடபம் நின்று கொண்டிருக்கிறது. அழகிய பெண்ணின் உருவம் ஒன்று கைகளில் கலயம் ஒன்றை தாங்கியவாறு காணப்படுகிறாள். இவளை பார்வதி தேவியின் சேடிப்பெண்ணாக கருதலாம். மண்டப விதானத்தின் நடுவே ஐந்துதலை அரவம் குடையாக அமைய இடுப்பு வரை மனித உருவமும் அதற்கு கீழே பாம்பின் உடலும் இணைந்து சுருள் வடிவத்துடன் நாக அரசனின் சிற்பம் உள்ளது. யக்ஷர், அப்சரஸ், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் உருவங்களும் காணப்படுகிறது. வேலைப்பாடமைந்த தூண்களில் அழகிய குறுஞ்சிற்பங்கள் உள்ளது. தாமரை பதக்கங்களும் காணப்படுகின்றன. சதுரவடிவ கருவறையில் மூலவராக சிவன் சதுர ஆவுடையின் மீது லிங்க திருமேனி உருவில் காணப்படுகிறார். எதிரே சிவனின் வாகனமான தலையிழந்த இடபம், சிவனை நோக்கி அமர்ந்தவாறு உள்ளது.
Ref
1. A Handbook on World Heritage Series Badami, published by Archaeological Survey of India.
2. A Handbook on Hampi, Badami, Pattadakal & Aihole issued by VVS in Tamil.
3. Temple architecture and Art of Early Chalukyas Badami, Pattadakal, Mahakuta, Aihole by George Michell
HOW TO REACH
The
Caves are about a km from Badami Bus Stand and autos are available to reach the
base of the caves.
The
Caves are about 21 km from Pattadakal, 34 km from Aihole, and 451 km from
Bengaluru.
Nearest
Railway station is Badami, about 5 km
LOCATION OF THE CAVE: CLICK HERE
No comments:
Post a Comment