This is the 241st Thevaram Paadal
Petra Shiva Sthalam and the 124th sthalam on the south side of the river Kaveri in Chozha Nadu. In Periyapuranam, Sekkizhar records that when
Thirunavukkarasu Swamigal was sleeping at Thirumaraikadu, Lord Shiva asked him to
follow him to this temple at Thiruvaimur, since he was staying there.
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின்கண்
உன்னித் துயிலும் பொழுதின்கண் உமைஓர் பாகம் உடையவர்தாம்
பொன்னின் மேனி வெண்ணீறு புனைந்தா கோலப் பொலிவினோடும்
துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடரவா என்றார்.
Thirunavukkarasu Swamigal and Vallalar have sung
hymns in praise of Lord Shiva of this temple.
பாட அடியார் பரவக் கண்டேன்
பத்தர்கணங்கண்டேன் மொய்த்தபூதம்
ஆடல்முழவம் அதிரக்கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கையாளைக்
காடல் அரவார் சடையிற்கண்டேன்
கொக்கின் இதழ் கண்டேன் கொன்றைகண்டேன்
வாடற்றலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
....... திருநாவுக்கரசு சுவாமிகள்-“நீளுலகம்
காய்மூர்க்கரேனுங் கருதில் கதி கொடுக்கும்
வாய்மூர்க்கமைந்த மறைக்கொழுந்தே
....... திரு அருட்பாMoolavar : Sri Vaimoornathar
Consort : Sri Sheerobavasani,
Sri Paalinum Nanmozhiyal.
Some of the salient features of this temple are…..
The temple faces east with a 3-tier Rajagopuram.
Balipeedam and Rishabam are immediately after the Rajagopuram. In the koshtam, Vinayagar, Dakshinamurthy's right hand is on Rishabam, Lingothbavar, Brahma, and
Durgai. Thiagarajar Sannidhi is adjacent to the south side of Moolavar Sannidhi. Understood that abhishekam will be conducted two times a day (
around 6 AM and 6 PM ).
In the praharam, Nalvar and Bhairavar. In the inner
prakaram, Siva Suryan Vinayagar, Valli Devasena Subramaniar, Mahalakshmi,
Navagrahas (all are in one row), Neela Vidangar, Vedaranyeswarar, Nalvar,
Avudayar, Sathya Narayani Amman, Agora Bhairavar, Ananda Bhairavar,
Uththanda Bhairavar, Bala Bhairavar (Guru Bairavar, Chanda Bhairavar,
Krothana Bairavar, and Kapala Bairavars are in the form of Thandam), Siva
Suriyan, and Chandran. A bas-relief of Vanmiki Maharishi worshiping Lord Shiva
is above the jolly/ window (The King may be Rajaraja-III or Kulothunga
Chozha-III, worshiping Lord Shiva, wrongly written as Vanmiki Maharishi). Ambal
is in a separate temple, like Sannidhi, facing east with sanctum sanctorum and
Mukha mandapam.
ARCHITECTURE
The temple consists of the Sanctum Sanctorum, antarala, and ardha mandapam. Even though this is claimed as a Mada temple, this temple is
on ground level only. The Sanctum Sanctorum is on a simple pada bandha adhistanam
with jagathy, muppattai kumudam, and pattika. The Bhitti starts with vedika,
Vishnu kantha pilasters ( with square base, malaithongal, kalasam, thadi, kudam,
lotus petals mandi, Palagai, Vreerakandam, and Poomottu pushpa pothyal. The
prastaram consists of valapi (lotus petals), Kapotham, and Bhoomi desam.
Viyyalavari is in the Bhoomi desam.
The superstructure above Bhoomi Desam, 1st
thala, grevam, and sigaram are constructed with brick. No images are in the 1st
Thalam, and the Greeva koshtas have the images of Dakshinamurthy, Maha Vishnu, and
Brahma.
HISTORY AND
INSCRIPTIONS
This is one of the Mada Temples constructed by Ko
Chenkat Chozhan. Since Thirugnanasambandar has sung hymns in praise of Lord
Shiva of this temple, the original temple might have existed before the 7th Century, and the same was reconstructed as a stone temple by the Chozhas and further
extended by the Pandyas and Vijayanagara Nayakas.
The inscriptions recorded from this temple belong
to Rajarajan-III, Rajendra Chozha-III, Kulothunga Chozha-III, and Vikrama Chozha.
As per the inscriptions, this place was called Rajendra Chozhavalanattu
Vandazhai Velur Kootrathu Thiruvaimur, Chozha Pandya Chaturvedi Mangalam,
Rajendra Chozhavalanattu Vandazhai Velur Kootrathu Kattimankudi alias Chozha
Pandya Chaturvedi Mangalam,
Lord Shiva was called Thiruvaimur Udayar,
Thiruvaimur Udaya Nayanar, and Thiruvaimurudaya Perumanadigal.
Kulothunga Chozha-III’s 33rd reign-year inscription records that during Thiruvizha, Thiruvaimurudaya Nayanar
would be taken in procession to Thiru Thoppu. The King who attended the
Thiruvizha found that the street was very narrow. So, as per the King’s order, Lands were given for widening to the Thiruvaimur Udaya Nayanar Temple, Adhi
Chandeswarar, by the Thiruvaimur Perunguri Sabha. They also agreed to rectify
the 4 Mangala streets.
Kulothunga Chozha-III’s 12th reign
year inscription records that Rajendra Chozha Valanattu Idayalanattu Eechanur
alias Parameswara Chaturvedi Mangalam Sabha has given a tank / Kulam
and land as irayili for creating a “Narpathonnayiravar Thirunandhavanam” to
Thiruvaimur Udayar Temple Adhi Chandeswarar.
Rajaraja-III’s 20th reign year
inscription records the endowment of burning a Perpetual lamp by a Thevaradiyal
Vadugi Vambazhuththal, alias Thiruvaimur Manickam, for the same donation that was made (the details are not known). The interest earned is to be utilized for
supplying the oil. This endowment was done during Kulothunga Chozha-III’s 38th year of reign. Since this was not inscribed at that time, the same was inscribed now.
Most of the Chozha period inscriptions record the
endowment of burning perpetual lamps with ulakku oil, 91 nazhi oil per year,
Naivedyam, sacred bath, etc. For the same money, paddy, Gold, and
lands were donated to this temple. Some of them are received by the Siva
Brahmins/Bhattars of the temple, and one inscription mentions “Kaniudaya
Muppathu Vattathu Kaniudaya Sivabramins”. These inscriptions record
that lands are held by the Siva Brahmins as Irayili, ie, Tax-free. Also, there was
a madam in the village, and donations were also made to establish
images of the Monks.
மூன்றாம்
இராஜராஜனின்
29 ஆம் ஆட்சியாண்டு பொயு 1245 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின்
கிழக்குக் கோபுரத்தில் உள்ள கல்வெட்டு, காட்டூருடையான் செம்பொற்சோதி
என்பான் ஆளுடைய நாயகப் பிள்ளையாரை, 'வட்டணை' அமைதியில் எழுந்தருளுவித்து, சந்திதோறும்
ஒருவிளக்காக, மூன்று சந்திக்கும் மூன்று விளக்கெரிக்க
அறுநூறு காசு கொடுத்ததையும், அதனைப் பெற்றுக் கொண்டு,
திருவாய்மூருடையார் கோயிலில் பணிபுரியும் முப்பது வட்டத்துக்
காணியுடைய சிவப்பிராமணர்கள் விளக்கெரிக்க ஒத்துக் கொண்டதையும் இக்கல்வெட்டு கூறுகிறது.
திருவாய்மூர் இராசேந்திரசோழ வளநாட்டைச் சேர்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
மூன்றாம் குலோத்துங்கனின் 33 ஆவது ஆட்சியாண்டு பொயு 1210,
ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவரில்
உள்ள கல்வெட்டு, இராஜேந்திர சோழ வளநாட்டு வண்டாழை வேளூர்க்
கூற்றத்து கட்டிமான் குடியான சோழபாண்டியச் சருப்பேதிமங்கலத்துப் பெருங்குறிச்
சபையார் திருவாய்மூருடைய நாயனார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவருக்கு எழுதிக் கொடுத்த
ஆவணம் இது. திருவாய் மூருடைய நாயனார் திருவிழா நாளில் திருத்தோப்புக்கு
எழுந்தருளுகின்ற திரு வீதியின் அகலம் குறைவாக இருப்பதை நேரில் கண்ட அரசனின்
ஆணையின்படி, திருவீதியின் அகலத்தைப் பெரிதாக்குவதற்காகக்
கொடுக்கப்பட்ட நிலங்கள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றைக்
குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. மேலும் நாலு மங்கல வீதிகளையும் சபையாரே
சீரமைப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
மூன்றாம் குலோத்துங்கனின் 12 ஆம் நூற்றாண்டு, பொயு 1190 ஆம்
ஆண்டு தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவரில் உள்ள
கல்வெட்டு திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் பெயரில்
இராசேந்திர சோழவளநாட்டு, இடையளநாட்டு ஈச்சனூரான
பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், 'நாற்பத்தெண்ணாயிரவன்
திருநந்தவனம்' என்ற நந்தவனத்தினை அமைக்கக் குளமும்,
நிலமும், இறையிலி செய்து கொடுத்ததைத்
தெரிவிக்கிறது.
மூன்றாம் இராஜராஜனின் 29+1 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1246 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவரில்
உள்ள கல்வெட்டு, இராஜேந்திர சோழவளநாட்டுச் சிற்றாமூருடையான்
ஆதித்த தேவன் திருவையாறுடையான் என்பவன், திருவாய்மூருடையார்
கோயிலில் உள்ள வட்டணை ஆடலுடையாருக்கு (ஆடல்வல்லார்?) சித்திரைத்
திருநாளில் வழிபாட்டுக்குக் குங்குமம், கற்பூரம், பனிநீர், செங்கழுநீர்த் திருப்பள்ளித்தாமம்
ஆகியவையுள்ளிட்ட பொருட்களுக்கும், திருவிளக்கெண்ணெய்,
அமுதுபடி ஆகியவற்றுமாக 10,000 காசுகள்
கொடுத்ததையும், அதனை முதலாகக்- கொண்டு நிலம் விலைக்கு
வாங்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. பிற்பகுதி சிதைவுற்றுள்ளது.
மூன்றாம் இராஜராஜனின் 29 +1 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1246, ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு, இராசேந்திர சோழ வளநாட்டுச்
சிற்றாமூருடையான் அரயன் கம்பிக்காதன் பவழக்குன்றன் என்பான், வட்டணை ஆடலுடையாருக்குப் புரட்டாசி, சித்திரைத்
திருநாள்களில் வரும் திருக்காப்பு நாளன்று செய்யும் அமுதுபடி, சாத்துபடி, திருப்பள்ளித் -தாமம், திருவிளக்கெண்ணைச் செலவுகளுக்காகத்
திருநாமத்துக் காணியாக இறையிலி நிலமும், பண்டாரத்தில்
காசும் கொடுத்தமையைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
கல்வெட்டுக்களின் தொடர்ச்சி இப்பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டு
உள்ளது.
References
1. Annual Report on
South Indian Epigraphy, year 1960 – 61, 1961 – 62, and 1962 – 63.
2. தமிழ்நாடுக் கல்வெட்டுகள் வரிசை எண் 29, நாகபட்டிண மாவட்டக்
கல்வெட்டுகள்
LEGENDS
Lord Shiva asked Thirunavukkarasu Swamigal to follow
him to Vaaimur by saying, “Vaimuril iruppom thodarnthu vaa - வாய்முயூரில் இருப்போம் தொடர்ந்து வா” - There is a Shiva Sannidhi in parallel to Moolavar sannidhi
called “Apparukku Kaatchi Kodutha Shiva“ (Lord Shiva who gave darshan to
Appar).
எங்கே என்னை இருந்து இடம் தேடிக்கொண்டு
அங்கே வந்துஅடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாஎன்று போனார் அதுஎன் கோலோ
As per the legend, Thirunavukkarasu Swamigal’s hymns, to
open the temple doors of Thirumaraikadu, he sang hymns and stayed at the
temple. He was a little upset that the doors were opened only after he completed
10 poems of the hymns. But the doors closed for one poem of
Thirugnanasambandar’s Hymns. That night, Lord Shiva came in his dream and
told him to follow him since he was at Thiruvaimur. Thirunavukkarasu Swamigal
followed Lord Shiva and reached Thiruvaimur. In the meantime, Thirugnanasambandar searched for Appar. He also came to this temple. Lord Shiva
gave darshan to both.
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லாரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே
It is believed that there were Ashta Bhairavas in
this temple, but there are only 4. For the rest, Dhandas are kept. It is
believed that Indra’s son Jayanthan was relieved from the curse due to the grace of the Bhairavas. Special “Jayanthan poojas” are conducted on the Chithirai month's first Friday,
since it is believed that Jayanthan worshiped on that day. Suriyan also worshiped
Lord Shiva at this temple.
This is one of the Saptha Vidanga sthalam (Vidangar
– Neela Vidangar, Nadanam – Kamala Nadanam, seat – Rathna Simhasanam). The
Legend goes like this. Maha Vishnu worshiped Lord Shiva and Parvati with
Kandar as Somaskandar aka Thiyagarajar (but actually it is a Shiva Linga.. ?) for a child boon. Devendra obtained the
Murti and worshiped. Devendra wanted to gift something to Muchukunda
Chakravarthy for helping him win the war with Valasuran. When Muchukunda
Chakravarthy was asked what he wanted. Muchukunda said that he wanted only the
Thiyagarajar. Devendra made 6 more replicas of Thyagaraja, and told him that if he identified
the original, he would give away all the 7 Vigrahams. Muchukunda Chakravarthy
identified the original and obtained all 7 Vigrahams. He installed one in
this temple at Thiruvaimur. The other temples' details are... (The others are
Thiruvarur – Veedhi Vidangar, Ajapa Natanam, Nagapattinam (Nagai Karonam), Sundara Vidangar, Vici Nadanam, Thirukaravasal – Adi Vidangar, Kukkuda Nadanam,
Thirukkuvalai (Thiru Kolili) – Avani Vidangar, Brunga Nadanam, Thirunallar –
Nagara Vidangar, Unmatha Nadanam, Thiruvaimur – Nlla Vidangar, Kamalana Nadanam, and Vedaranyam (ThirumaraiKadu) – Bhuvai Vidangar, Hamsapada
nadanam.
POOJAS AND
CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are
conducted on Vaikasi Visakam in the month of Vaikasi (May – June), Vinayagar
Chathurthi in the month of Avani (Aug – Sept), Annabhishekam in the month of Aippasi (Oct – Nov), Thirukarthigai in the month of Karthigai (Nov – Dec),
Thiruvathirai in the month of Margazhi (Dec – Jan), Thaipoosam in the month of Thai
(Jan – Feb), Maha Shivaratri in the month of Masi (Feb – March), and monthly
pradoshams.
Special poojas are also conducted on Ashtami days
for Bhairavas. Special Abhishekam will be done to Thiagarajar on the 1st day
of Aippasi month.
TEMPLE TIMINGS
The temple will be kept open from 07.00 hrs to
11.00 hrs and from 17.00 hrs to 19.00 hrs.
CONTACT DETAILS
The mobile number +919751065108 may be contacted
for further details.
HOW TO REACH
The place is on the road diversion to Ettukudi on
the Nagapattinam to Thiruthuraipoondi.
The Thiruvarur to Vedaranyam bus passes through this
village
The temple at Thiruvaimur is 18 km from
Thiruthuraipoondi, 27 km from Thiruvarur, 30 km from Nagapattinam, 37 km from
Vedaranyam, 45 km from Mannargudi, and 328 km from Chennai.The nearest Railway Station
is Thiruthuraipoondi, and the Junction is Thiruvarur.
LOCATION OF THE TEMPLE: CLICK HERE
The second Heritage visit to this Sri Manathunai
Nathar Temple at Valivalam was a part of the “Mada Temples Heritage Walk in
Nagapattinam and Mayiladuthurai Districts”, organized by “Chozha Mandala
Varalatru Thedal Kuzhu – GCHRG, on 05th and 6th March
2022. Thanks to V Ramachandran,
Thasildar of Nagapattinam, who took us to all these Temples.
கல்வெட்டுக்களின் தொடர்ச்சி….6. மூன்றாம் இராஜராஜனின் 29 ஆம்
ஆட்சியாண்டு, பொயு 1245 ஆம் ஆண்டு தியாகராஜர் கோயிலில்
திருவாய்மூர்நாதர் சன்னதியின் முன்னுள்ள மண்டபத்தின் வடக்குச் சுவரில் உள்ள
கல்வெட்டு திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வரதேவர் பெயரால்
சண்டேஸ்வரப் பெருவிலையாக, நெய்வாயிலுடையான் ஆட்கொண்ட
வில்லியான பத்தாராய்ப் பணிவாற்கு, மூன்றுமா முக்காணி
அரைக்காணிச் சின்ன நிலத்தினை, நாலாயிரம் அன்றாடு
நற்காசுகளுக்கு விற்றுக் கொடுத்ததைத் தெரிவிக்கிறது. அந்நிலத்தினை இவர் கோயில் தானத்தாரிடம்
வழங்க, அவர்கள் அந்நிலத்தால் வரும் வருமானத்தில் இறை செலுத்தியது
போக மீதியிலிருந்து, இப்பத்தராய்ப் பணிவார் இக்கோயிலில் எழுத்ருளுவித்த,
திருஞானம் பெற்ற பிள்ளையாருக்குத் திருப்படிமாற்றும், பூசைச் செலவுகளும் செய்யச் சம்மதித்ததைக் குறிப்பிடுகிறது.
7. மூன்றாம்
இராஜராஜனின்
29 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1245 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின்
மகாமண்டப வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு திருவாய்மூருடையார்
கோயில், ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி செய்வார்களும், கோயிற் காரியம் செய்வார்களும், கோயிற்
கணக்கரும், ஸ்ரீ மாஹேஸ்வரரும் இசைந்து செய்த செயலைக் குறிக்க
எழுதத் தொடங்கப்பட்ட இக்கல்வெட்டு செய்திகளைத் தெரிவிக்கும் பகுதி வெட்டப்படுவதற்கு
முன்பே நிறுத்தப்பட்டுள்ளது.
8. மூன்றாம் குலோத்துங்கனின் 38 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1216
ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குப்பட்டியில்
உள்ள கல்வெட்டு இறையிலி நிலங்களில் தரமிலி வகையில், அளவு குறைந்தமையை ஈடுகட்ட வேறுசில தரமிலி வகை நிலங்களை, ஈசனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்து சபையார், திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வரருக்கு
அளித்ததைக்-குறிப்பிடுகிறது.
9. மூன்றாம் குலோத்துங்கனின் 38 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1216
ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குப்பட்டியில்
உள்ள கல்வெட்டு, இடையள நாட்டு ஈசனூரான ஸ்ரீபரமேஸ்வரச் சதுர்வேதி
மங்கலத்துப் பெருங்குறி சபையார், திருவாய்மூருடையார்
கோயிலில் அறுகழஞ்சுப் பொன் முதலாகப் பெற்றுக் கொண்டு, செங்கழுநீர்
ஓடைப்புறமான அறுமாமுக்காணி நிலத்திற்கு இறையிலி செய்தளித்ததைக் கூறுகிறது.
10. சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜனின் 20 ஆம் ஆட்சியாண்டு, பொயு
1236 அம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவரில்
உள்ள கல்வெட்டு, சிற்றாமூருடையான் அரையன் கம்பிக்காதனான
வீரராஜேந்திரப் பல்லவரையன், இக்கோயிலில் எழுந்தருளியுள்ள
வட்டணை ஆடலுடையாருக்குச் செய்கின்ற புரட்டாசித் திருநாளுக்கும், சித்திரைத் திருநாளுக்கும், அந்நாள்களில்
இறைவனின் ஊர்வலத்திற்கும், திருநீராட்டு (ஆடி அருளல்),
சாத்துபடி, திருப்பள்ளித் தாமம்,
அமுதுபடி ஆகியவற்றுக்குமாக, விலைக்கு
நிலம் வாங்கி, அளித்ததைக் குறிப்பிடுகிறது.
அந்நிலத்துக்குரிய வரிகள் இறுத்தது போக மீதியில் மேற்படிச் செலவுகள்
மேற்கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
11. மூன்றாம் இராஜராஜனின் 20 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1236 ஆம்
ஆண்டு, தியாகராஜர் கோயிலில் உள்ள வேதாரண்ய சுவாமி சன்னதி
மகாமண்டப வடக்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு, திருவாய்மூருடையார்
கோயில் சீபீடத்தின் முன்னர், முன்னாளில் தான்
எழுந்தருளுவித்த அழகிய வினாயகப் பிள்ளையாற்குக் காட்டூருடையான் செம்பொற்சோதி
வட்டணையுடையான் என்பார் திருப்படிமாற்றுக்கு திருநாமத்துக் காணியாக அளித்த
நிலக்கொடையைத் தெரிவிக்கிறது. இறை செலுத்தியது போக மீதமுள்ள வருமானம் இதற்காகச்
செலவிடப் பட வகைசெய்யப்பட்டது.
12. மூன்றாம் இராஜராஜனின் 20 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1236 ஆம்
ஆண்டு, தியாகராஜர் கோயிலில் உள்ள வேதாரண்ய சுவாமி சன்னதி மகாமண்டப
வடக்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு, திருவாய்மூருடையார் கோயிலின்
முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்கள், இக்கோயில்
தேவரடியாள் ஆன வடுகி வம்பு பழுத்தாள் ஆன திருவாய்மூர் மாணிக்கத்திடம் மூன்றாம்
குலோத்துங்கனின் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டில் திருநுந்தாவிளக் கெரிக்கப் பெற்ற
நிவந்தத்தைக் குறிக்கிறது. அந்நிவந்தத்திலிருந்து வரும் வட்டி (பொலிசை) கொண்டு
விளக்கெரிக்கப்பட்டதையும், இந்நிவந்தத்தைக் கொடுத்த போதே
கல்லில் வெட்டாததால், தற்போது வெட்டுவதாகவும்
குறிக்கப்படுகிறது.
13. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு, தியாகராஜர் கோயிலின் வடக்கு
அதிட்டானத்தில் உபானப்பட்டியில் உள்ள கல்வெட்டு, நிலக்கொடையைக்
குறிப்பதாக உள்ளது.
14. மூன்றாம் இராஜராஜனின் 2(..) ஆவது ஆட்சியாண்டு தியாகராஜர் கோயில் வடக்கு
அதிட்டானத்தின் உபானப்பட்டியில் உள்ள கல்வெட்டு, விளநாட்டு
ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், இவ்வூரிறைவனுக்குச் செய்த ஏதோ ஒரு ஏற்பாட்டைக் குறிப்பதாகத் தெரிகிறது.
15. மூன்றாம் குலோத்துங்கனின் 3(8), ஆவது ஆசியாண்டு பொயு 1216
ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயில் வேதராண்யர் சன்னதி மகாமண்டப
மேற்குக் குமுதத்தில் உள்ள பிற்பகுதி சிதைந்த கல்வெட்டு, திருவாய்மூருடையார்
கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர்க்கு ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப்
பெருங்குறி சபையார் செய்து கொடுத்த ஆவணமாகத் தெரிகிறது.
16. மூன்றாம் இராஜராஜனின் 8 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1224 ஆம் ஆண்டு
தியாகராஜர் கோயில் வேதாரண்யேஸ்வரர் சன்னதியின் வடக்குக் குமுதத்தில்
உள்ள கல்வெட்டு அரசூருடையான் களப்பாளராயர் உள்ளிட்ட சிலர்,
நந்தாவிளக் கெரிக்கவும், திருச்சென்னடைக்கும்,
திருநந்தாவனப்புறமாகவும், நிலக்கொடை
அளித்ததைக் குறிக்கிறது. நிலத்தின் அளவுகளும் எல்லைகளும் விரிவாகக்
கூறப்பெற்றுள்ளன. திருவாய்மூர் வராகன் குறிப்பிடப்படுகிறது.
17. மூன்றாம் குலோத்துங்கனின் 4 ஆவது ஆட்சியாண்டு, 1182 ஆம் ஆண்டு,
தியாகராஜர் கோயில் கருவறை மேற்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு,
திருவாய்மூருடையார் கோயில் முப்பது வட்டத்துக் காணியுடைய
சிவப்பிராமணர்கள் சிலர் பெரியகுடையான் வைத்தவன் தாமோதரனான குலோத்துங்க சோழக்
கச்சியராயன் என்பாரிடம் 100 காசுகள் பெற்றுக் கொண்டு,
அதன் பொலிசையால் தினம் ஒரு நொந்தா விளக்கெரிய நாள்தோறும் உழக்கு
நெய்யளக்க ஒத்துக் கொண்டதைக் குறிப்பிடுகிறது.
18. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு, சோழர் காலத்தைச் சார்ந்த, தியாகராஜர்
கோயில் கருவறை மேற்குப் பட்டியில் உள்ள கல்வெட்டு, இங்கண்
நாட்டு இங்கண் ஆன பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்துக் கரணத்தான் வரகூருடையான்
சக்கர . . டங்கொண்டான் மனைவியும், பொத்தூருடையான் உலகனாத தேவன்
உறவுடையாளுமான ஒருத்தி, திருவாய்மூருடையார் கோயில்
முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர் தில்லை நாயக ... வசம், [விளக்கெரிக்க?] தினந்தோறும் உழக்கு
நெய்யளிக்கும் வகையில் செய்த நிவந்தத்தைக் குறிக்கிறது.
19. பொயு 12 ஆம்நூற்றாண்டு சோழ அரசர் திரிபுவனச் சக்கரவத்தியின்,
தியாகராஜர் கோயிலின் கருவறை மேற்குப் பட்டியில் உள்ள கல்வெட்டு,
நந்தாவிளக்கெரிக்க வகை செய்ததைக் குறிக்கிறது. சீமாமேஹஸ்வரர்கள்,
காணியுடைய சிவப்பிராமணர்கள் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்.
20. இரண்டாம் (?) ராஜாதிராஜனின் 11 ஆவது
ஆட்சியாண்டு, பொயு 1177 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் கருவறை
மேற்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு நாயனார் திருவாய்மூருடைய
நாயனார் திருமுன்பிலும் (சன்னதி) திருக்காமக்கோட்டமுடைாள் திருமுன்பிலும், தம் முன்னோர்? தந்தை ஆகியோர் நன்மைக்காக,
சீர்த்தங்குடையான் வேளான் பட்டன் என்பான் இரு
திருநொந்தாவிளக்கெரிக்க 50 காசுகளை, ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிச் சபையாரிடம்
கொடுத்ததையும், அதனைப் பெற்றுக் கொண்ட சபையார், இக்கோயில் நிலங்களை உடைய காணியாளர்கள் செலுத்த வேண்டிய வரியினை அவர்கள்
செலுத்தவும், ஈடாகக் காணியாளர்கள் விளக்கெரிப்பதற்குத்
தேவையான நெய்யினைச் செலுத்தவும் ஒப்புக்கொண்ட செயலை இக்கல்வெட்டு
குறிப்பிடுகின்றது.
21. சோழர் மன்னன் விக்ரம சோழனின் 12 ஆவது
ஆட்சியாண்டு, 1130 ஆம் ஆண்டு தியாகராஜர் கோயில் கருவறை மேற்கு
ஜகதியில் உள்ள கல்வெட்டு ஊர்ச் சபைக்குச் சொந்தமான
பகுதியில் அமைந்த, திருவாய்மூருடையார் கோயிலுக்குரிய இறையிலி
நிலங்களுக்கான, உள்வரியினை நிர்ணயம் செய்ததைக்
குறிக்கிறது. அந்த நிலங்கள் யார் யாருடைய பொறுப்பில் [அடைப்பு] இருந்தன என்பதும் பட்டியலிடப்படுகின்றன.
அவற்றுள், பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலம், அமுதமங்கலம், ஆலங்குடி ஆகிய ஊர்களில் உள்ள
நிலங்களும், முதலாம் குலோத்துங்கன் காலத்தில்
கொடுக்கப்பட்டநிலங்களும் அடங்கும்.
22. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு, சோழர் காலத்தைச் சார்ந்த தியாகராஜர் கோயில் கருவறைத் தென்புறச் சுவரில் இணைத்துக்
கட்டப்பெற்றுள்ள கற்களில் உள்ள துண்டுக் கல்வெட்டுகள்,
அருமொழிதேவ வளநாடு, செம்பியன், திருமுகப்படி, மடபோகமாக, இராஜராஜ தேவர்கு ஆறாவது, ராஜராஜ
பேராறு, திருஞ்சானசம்பந்தந் திருநந்தவந்.. போன்ற வாசகங்கள் மட்டுமே காணக் கிடைக்கின்றது.
23. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு சோழர்கள் காலத்தைச் சார்ந்த, தியாகராஜர்
கோயிலின் தெற்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு, மேல்மலைப்
பழையனூர் நாட்டைச் சேர்ந்த கரதேவன் ஆன அமரகோனார், விளக்கெரிப்பதற்காக
நெய் அளக்கும் பொருட்டு சிவப்பிராணர்களிடம் நிவந்தம் அளித்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது.
24. இரண்டாம் இராசாதிராசனின் 12 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1178 ஆம்
ஆண்டு தியாகராஜர் கோயிலின் தென்புறச் சுவரில் உள்ள பெரிதும் சிதைந்துள்ள கல்வெட்டு தொடர்ச்சியாகப்
பொருள் தெரிந்து கொள்ளுமாறு இல்லை. கல்வெட்டின் காலம் குறிக்கும் பஞ்சாங்கக்
குறிப்புகளும், நந்தாவிளக்குக்குத் தினந்தோறும்
செலுத்தவேண்டிய நெய்க்காக நூறு காசுகளைச் சிவப்பிராமணர்களின் கொடுத்த செய்தியும்
தெரியவருகின்றன.
25. பொயு 10 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சார்ந்த தியாகராஜர்
கோயிலின் தென்புறச் சுவரில் உள்ள பழைய கல்வெட்டுகள் மீண்டும் பொறிக்கப்பட்டுள்ளன. அவையும் மாற்றி
மாற்றி வைத்துக் கட்டப்பட்டுள்ளன. கி.பி. 12ஆம்
நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளன.
26. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு, சோழ மன்னன் திரிபுவனச்சக்கரவத்தியின்
7 ஆம் ஆட்சியாண்டு, தியாகராஜர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச்
சுவரில் உள்ள பெரிதும் சிதைந்த கல்வெட்டு, நொந்தா விளக்கெரிக்க அறுபது காசுகள் கொடுத்து, நெய்யளக்கச் செய்த கொடை என்ற அளவில் தெரிய வருகிறது.
27. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு சோழ அரசரின் 24 ஆவது ஆட்சியாண்டு தியாகராஜர்
கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவரில் கல்வெட்டு, வண்டாழை
வேளூர்க் கூற்றத்துத் தேவதாந ஊர் ஒன்றின் (பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலம்?) பெருங்குறி சபையார்கள் எழுதிக் கொடுத்த ஆவணம். அரசனின் ஆணையாகச் செம்பிலும்
(கல்லிலும்] வெட்டுவித்ததாகத் தெரிகிறது.
28. மூன்றாம் இராசராசனின் 20 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1236 ஆம்
ஆண்டு, தியாகராஜர் கோயிலின் முகமண்டபத் தெற்குச் சுவரில் உள்ள
கல்வெட்டு, இராசேந்திர சோழவளநாட்டுக் கோட்டூருடையான்
செம்பொற்சோதி வட்டணையாடலுடையான், தான் திருவாய்மூருடையார்
கோயிலில் எழுந்தருளுவித்த அழகிய வினாயகப் பிள்ளையார் முன்பு மூன்று சந்தியிலும்
எரிப்பதற்காக 600 காசுகளை இக்கோயிலின் முப்பது வட்டத்துக்
காணியுடைய சிவப்பிராமணர்களிடம் கொடுத்ததையும், அதன் வட்டியிலிருந்து
அவர்கள் விளக்கெரிக்க ஒப்புக்கொண்டதையும் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
29. பொயு 10 ஆம் நூற்றாண்டு சோழ அரசர் இராசகேசரியின் 18 +1 ஆவது
ஆட்சியாண்டு, தியாகராஜ சுவாமி கோயிலின்
அர்த்த மண்டபத் தெற்கு அதிட்டானத்தில் உள்ள பிற்காலத்தே
கி.பி. 12,13 ஆம் நூற்றாண்டு எழுத்தமையில் மீட்டெழுதப்
பட்ட கல்வெட்டு. சிற்றாமூருடையான் என்பான், திருவாய்மூருடைய
பெருமானடிகளுக்கு நொந்தா விளக்கெரிக்க, மாதந்தொறும்
குறுணி நெய் வட்டியாகத் தர ஒப்புக்கொண்டதைத் தெரிவிக்கிறது.
30. பொயு 10 ஆம் நூற்றாண்டு சோழ அரசர் இராசகேசரியின் 2(3) ஆவது
ஆட்சியாண்டு, தியாகராஜர் கோயிலின் அர்த்த மண்டபத் தெற்கு
அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு, கி.பி.12,13 ஆம் நூற்றாண்டெழுத்தமைதியில் மீட்டெழுதப்பட்ட கல்வெட்டு.
திருவாய்மூருடைய மகாதேவர் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் பெயரில், பெருங்குறி மகாசபையார், நிலவிலையாகப் பத்துக்
காசும், இறைகாவலாக 30 காசும்
பெற்றுக் கொண்டு இறையிலி முற்றூட்டு செய்து கொடுத்ததைக் குறிக்கிறது. அந்நிலத்தில்
இருந்து வரும் நெல்லைக் கொண்டு, உச்சிச் சந்தி வழிபாடு,
அப்போதெரிக்கும் நொந்தாவிளக்கு, இருதிருவிழா
நாள்களில் அப்பமுது, அவலமுது ஆகியவை படைக்க அரிசி
ஆகியவற்றை எந்தெந்த அளவு கொடுக்க வேண்டுமென ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது.
இரண்டாம் பகுதி இக்கல்வெட்டினைத் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளது.
எனவே முன்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் எல்லைகளைக் குறிப்பதாகவும்,
அவற்றை இறையிலி செய்து கொடுத்ததைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
31. மூன்றாம் குலோத்துங்கனின்
33 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1211 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயில்
மகாமண்டப வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, [திருவாய்] மூர்க்கிழவன் திருச்சிற்றம்பலமுடையான் திவாகர... என்பார்,
பண்டாரத்திலிருந்து 1200 காசுகளைப் பெற்று, திருவாய் மூருடையார் கோயில் முப்பது வட்டத்துக்
காணியுடைய சிவப்பிராமணர்கள் வசம் கொடுத்து,
அதன் பொலிசை (வட்டி) யிலிருந்து, இரண்டு திருநாள்களில், திருக்களபத்துக்கும், திருமேற்பூச்சுக்கும், திருப்பள்ளித்தாமத்துக்கும், அரிசி, கறியமுது, உப்பமுது, மிளகு, நெய், தயிர், அடைக்காய் வெற்றிலையுள்ளிட்ட அமுதுபடிக்குத்
தேவையான ஏற்பாடுகளைச் செய்ததை இக்கல்வெட்டு
குறிப்பிடுகிறது. அமுதுபடிக்குரிய பொருட்களின் அளவுகளும் சொல்லப்பட்டுள்ளன.
32. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தைச்
சார்ந்த தியாகராஜர் கோயிலின் மகாமண்டப மேற்குச் சுவரில் உள்ள,
பெரிதும் சிதைந்த துண்டு கல்வெட்டுகள், பல்வேறு துண்டுகளாகச் சுவரில் கட்டப்பட்டுள்ளது. பெருங்குறிச்
சபையாரும், தானத்தாரும் ஈடுபட்டுச் செய்த ஏற்பாட்டினைக் குறிப்பதாகத்
தெரிகிறது. நில அளவுகள், இறையிலி செய்தமை
ஆகியவற்றிலிருந்து, நிலக்கொடையினைப் பற்றியதெனக்
கருதலாம். கையெழுத்திட்ட ஊர்க்கணக்கர் உள்ளிட்ட சிலரின் பெயர்களும் ஒருபகுதியில்
காணப்படுகிறது.
33. மூன்றாம் குலோத்துங்கனின் 26 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1204
ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப மேற்குக் குமுதத்தில்
உள்ள கல்வெட்டு, சிவப்பிராமணர் பாசையைச் சேர்ந்த வணிகன்
வைப்பூருடையான் திருநாகீசுரமுடை யானின் மனைவி, உடையநாச்சி
ஆகிய சிவன் பெருந்தேவி என்பாள், 600 காசுகளைத் திருவாய்மூருடையார்
கோயில் முப்பது வட்டத்து காணியுடைய வசம் கொடுத்து, அதன் பொலிசையிலிருந்து
மூன்று சந்தியிலும், ஒரு விளக்கெரிக்க தினந்தோறும்,
முச்செவிடு நெய்யளக்கச் செய்த ஏற்பாட்டையும், இரும்பு உள்ளீட்டுடன் கூடிய பித்தளை விளக்கினையும் அவரே அளித்ததையும்
குறிப்பிடுகிறது.
34. சோழர் மன்னன் வீர ராஜேந்திரனின் (மூன்றாம் குலோத்துங்கன்…?) (7) ஆவது ஆட்சியாண்டு, பொயு 118(4)ன் (மூன்றாம்
குலோத்துங்கன்), தியாகராஜர் கோயில் அர்த்தமண்டப உபபீடம்
தெற்குப் பட்டியில் உள்ள கல்வெட்டு, திருவாய்மூருடைய நாயனார்
கோயில் தேவரடியாரில் பூநங்கை என்பாள், சிவப்பிராமணர்களிடம்,
112 காசு கொடுத்ததையும், அதைப் பெற்றுக்
கொண்டு ஒரு திருநந்தா விளக்கெரிக்கும் பொறுப்பினை அவர்கள் ஏற்றுக் கொண்டதையும்
இக்கல்வெட்டு குறிக்கிறது.
35. சோழர் மன்னன் மூன்றாம் ராஜராஜனின் 35
ஆவது ஆட்சியாண்டு, பொயு 1251 ஆம் ஆண்டு தியாகராஜர் கோயில் அர்த்த
மண்டபம் உபபீட மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, இடையளநாட்டு
ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்து காணியாளனான நெய்தல் வாயிலுடையான்
ஆட்கொண்டவில்லி ஆகிய பத்தராய்ப் பணிவார் என்பவருக்கு, திருவாய்மூருடையார்
கோயில் தானத்தார் செய்து கொடுத்த நிலவிலை உறுதி ஆவணம் இது. 1400 அன்றாடு நற்காசுகளுக்குச் சண்டேஸ்வரப் பெருவிலையாக வாங்கிய இந்நிலத்தினை
அவன் கொடையாக அளித்து, அதற்குரிய வரிசெலுத்தியது போக
மீதமுள்ள வருவாயிலிருந்து வட்டணை ஆடலுடையார்க்குத் திருமார்கழித் திருவாதிரையன்று நடைபெறும்,
திருவெழிச்சி (ஊர்வலம்), திருநீராட்டு,
திருப்பள்ளித்தாமம், திருவமுது, திருவிளக்கெண்ணெய் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ளச் செய்த ஏற்பாட்டினைக்
குறிப்பிடுகிறது.
36. பொயு 13 ஆம் நூற்றாண்டு, மூன்றாம் ராசேந்திரனின் தியாகராஜர் கோயில் மகாமண்டபத்தின் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, .............. காடுடையானான கூத்தாடுவானான இராசேந்திரசோழக் காரைக்காடுடையான்
என்பான், திருவாய்மூருடையார் கோயில் திருமடைவளாகத்து
தெற்கில்த் திருவீதியின் வடசிறகில், மடமும் எடுத்து,
அம்மடத்தின் பணிசெய்ய திருமேனிகளும் (துறவியர்) ஏற்பாடு செய்து,
இறையிலியாக நிலமும் அளித்ததைக் குறிப்பிடுகிறது. இராவளர் முதலியார்
சோமனாத [தேவர்] மட அதிபதியாக இருக்கலாம்.
References1. Annual Report on
South Indian Epigraphy, year 1960 – 61, 1961 – 62, and 1962 – 63.
2. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் வரிசை எண் 29, நாகபட்டிண மாவட்டக்
கல்வெட்டுகள்.
This is the 241st Thevaram Paadal
Petra Shiva Sthalam and the 124th sthalam on the south side of the river Kaveri in Chozha Nadu. In Periyapuranam, Sekkizhar records that when
Thirunavukkarasu Swamigal was sleeping at Thirumaraikadu, Lord Shiva asked him to
follow him to this temple at Thiruvaimur, since he was staying there.
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின்கண்
உன்னித் துயிலும் பொழுதின்கண் உமைஓர் பாகம் உடையவர்தாம்
பொன்னின் மேனி வெண்ணீறு புனைந்தா கோலப் பொலிவினோடும்
துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடரவா என்றார்.
உன்னித் துயிலும் பொழுதின்கண் உமைஓர் பாகம் உடையவர்தாம்
பொன்னின் மேனி வெண்ணீறு புனைந்தா கோலப் பொலிவினோடும்
துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடரவா என்றார்.
Thirunavukkarasu Swamigal and Vallalar have sung
hymns in praise of Lord Shiva of this temple.
பாட அடியார் பரவக் கண்டேன்
பத்தர்கணங்கண்டேன் மொய்த்தபூதம்
ஆடல்முழவம் அதிரக்கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கையாளைக்
காடல் அரவார் சடையிற்கண்டேன்
கொக்கின் இதழ் கண்டேன் கொன்றைகண்டேன்
வாடற்றலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
காய்மூர்க்கரேனுங் கருதில் கதி கொடுக்கும்
வாய்மூர்க்கமைந்த மறைக்கொழுந்தே
Consort : Sri Sheerobavasani, Sri Paalinum Nanmozhiyal.
பத்தர்கணங்கண்டேன் மொய்த்தபூதம்
ஆடல்முழவம் அதிரக்கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கையாளைக்
காடல் அரவார் சடையிற்கண்டேன்
கொக்கின் இதழ் கண்டேன் கொன்றைகண்டேன்
வாடற்றலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
....... திருநாவுக்கரசு சுவாமிகள்
-“நீளுலகம்காய்மூர்க்கரேனுங் கருதில் கதி கொடுக்கும்
வாய்மூர்க்கமைந்த மறைக்கொழுந்தே
....... திரு அருட்பா
Moolavar : Sri VaimoornatharConsort : Sri Sheerobavasani, Sri Paalinum Nanmozhiyal.
Some of the salient features of this temple are…..
The temple faces east with a 3-tier Rajagopuram. Balipeedam and Rishabam are immediately after the Rajagopuram. In the koshtam, Vinayagar, Dakshinamurthy's right hand is on Rishabam, Lingothbavar, Brahma, and Durgai. Thiagarajar Sannidhi is adjacent to the south side of Moolavar Sannidhi. Understood that abhishekam will be conducted two times a day ( around 6 AM and 6 PM ).
The temple faces east with a 3-tier Rajagopuram. Balipeedam and Rishabam are immediately after the Rajagopuram. In the koshtam, Vinayagar, Dakshinamurthy's right hand is on Rishabam, Lingothbavar, Brahma, and Durgai. Thiagarajar Sannidhi is adjacent to the south side of Moolavar Sannidhi. Understood that abhishekam will be conducted two times a day ( around 6 AM and 6 PM ).
In the praharam, Nalvar and Bhairavar. In the inner
prakaram, Siva Suryan Vinayagar, Valli Devasena Subramaniar, Mahalakshmi,
Navagrahas (all are in one row), Neela Vidangar, Vedaranyeswarar, Nalvar,
Avudayar, Sathya Narayani Amman, Agora Bhairavar, Ananda Bhairavar,
Uththanda Bhairavar, Bala Bhairavar (Guru Bairavar, Chanda Bhairavar,
Krothana Bairavar, and Kapala Bairavars are in the form of Thandam), Siva
Suriyan, and Chandran. A bas-relief of Vanmiki Maharishi worshiping Lord Shiva
is above the jolly/ window (The King may be Rajaraja-III or Kulothunga
Chozha-III, worshiping Lord Shiva, wrongly written as Vanmiki Maharishi). Ambal
is in a separate temple, like Sannidhi, facing east with sanctum sanctorum and
Mukha mandapam.
ARCHITECTURE
The temple consists of the Sanctum Sanctorum, antarala, and ardha mandapam. Even though this is claimed as a Mada temple, this temple is on ground level only. The Sanctum Sanctorum is on a simple pada bandha adhistanam with jagathy, muppattai kumudam, and pattika. The Bhitti starts with vedika, Vishnu kantha pilasters ( with square base, malaithongal, kalasam, thadi, kudam, lotus petals mandi, Palagai, Vreerakandam, and Poomottu pushpa pothyal. The prastaram consists of valapi (lotus petals), Kapotham, and Bhoomi desam. Viyyalavari is in the Bhoomi desam.
The temple consists of the Sanctum Sanctorum, antarala, and ardha mandapam. Even though this is claimed as a Mada temple, this temple is on ground level only. The Sanctum Sanctorum is on a simple pada bandha adhistanam with jagathy, muppattai kumudam, and pattika. The Bhitti starts with vedika, Vishnu kantha pilasters ( with square base, malaithongal, kalasam, thadi, kudam, lotus petals mandi, Palagai, Vreerakandam, and Poomottu pushpa pothyal. The prastaram consists of valapi (lotus petals), Kapotham, and Bhoomi desam. Viyyalavari is in the Bhoomi desam.
The superstructure above Bhoomi Desam, 1st
thala, grevam, and sigaram are constructed with brick. No images are in the 1st
Thalam, and the Greeva koshtas have the images of Dakshinamurthy, Maha Vishnu, and
Brahma.
HISTORY AND
INSCRIPTIONS
This is one of the Mada Temples constructed by Ko Chenkat Chozhan. Since Thirugnanasambandar has sung hymns in praise of Lord Shiva of this temple, the original temple might have existed before the 7th Century, and the same was reconstructed as a stone temple by the Chozhas and further extended by the Pandyas and Vijayanagara Nayakas.
This is one of the Mada Temples constructed by Ko Chenkat Chozhan. Since Thirugnanasambandar has sung hymns in praise of Lord Shiva of this temple, the original temple might have existed before the 7th Century, and the same was reconstructed as a stone temple by the Chozhas and further extended by the Pandyas and Vijayanagara Nayakas.
The inscriptions recorded from this temple belong
to Rajarajan-III, Rajendra Chozha-III, Kulothunga Chozha-III, and Vikrama Chozha.
As per the inscriptions, this place was called Rajendra Chozhavalanattu
Vandazhai Velur Kootrathu Thiruvaimur, Chozha Pandya Chaturvedi Mangalam,
Rajendra Chozhavalanattu Vandazhai Velur Kootrathu Kattimankudi alias Chozha
Pandya Chaturvedi Mangalam,
Lord Shiva was called Thiruvaimur Udayar,
Thiruvaimur Udaya Nayanar, and Thiruvaimurudaya Perumanadigal.
Kulothunga Chozha-III’s 33rd reign-year inscription records that during Thiruvizha, Thiruvaimurudaya Nayanar
would be taken in procession to Thiru Thoppu. The King who attended the
Thiruvizha found that the street was very narrow. So, as per the King’s order, Lands were given for widening to the Thiruvaimur Udaya Nayanar Temple, Adhi
Chandeswarar, by the Thiruvaimur Perunguri Sabha. They also agreed to rectify
the 4 Mangala streets.
Kulothunga Chozha-III’s 12th reign
year inscription records that Rajendra Chozha Valanattu Idayalanattu Eechanur
alias Parameswara Chaturvedi Mangalam Sabha has given a tank / Kulam
and land as irayili for creating a “Narpathonnayiravar Thirunandhavanam” to
Thiruvaimur Udayar Temple Adhi Chandeswarar.
Rajaraja-III’s 20th reign year
inscription records the endowment of burning a Perpetual lamp by a Thevaradiyal
Vadugi Vambazhuththal, alias Thiruvaimur Manickam, for the same donation that was made (the details are not known). The interest earned is to be utilized for
supplying the oil. This endowment was done during Kulothunga Chozha-III’s 38th year of reign. Since this was not inscribed at that time, the same was inscribed now.
Most of the Chozha period inscriptions record the
endowment of burning perpetual lamps with ulakku oil, 91 nazhi oil per year,
Naivedyam, sacred bath, etc. For the same money, paddy, Gold, and
lands were donated to this temple. Some of them are received by the Siva
Brahmins/Bhattars of the temple, and one inscription mentions “Kaniudaya
Muppathu Vattathu Kaniudaya Sivabramins”. These inscriptions record
that lands are held by the Siva Brahmins as Irayili, ie, Tax-free. Also, there was
a madam in the village, and donations were also made to establish
images of the Monks.
மூன்றாம்
இராஜராஜனின்
29 ஆம் ஆட்சியாண்டு பொயு 1245 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின்
கிழக்குக் கோபுரத்தில் உள்ள கல்வெட்டு, காட்டூருடையான் செம்பொற்சோதி
என்பான் ஆளுடைய நாயகப் பிள்ளையாரை, 'வட்டணை' அமைதியில் எழுந்தருளுவித்து, சந்திதோறும்
ஒருவிளக்காக, மூன்று சந்திக்கும் மூன்று விளக்கெரிக்க
அறுநூறு காசு கொடுத்ததையும், அதனைப் பெற்றுக் கொண்டு,
திருவாய்மூருடையார் கோயிலில் பணிபுரியும் முப்பது வட்டத்துக்
காணியுடைய சிவப்பிராமணர்கள் விளக்கெரிக்க ஒத்துக் கொண்டதையும் இக்கல்வெட்டு கூறுகிறது.
திருவாய்மூர் இராசேந்திரசோழ வளநாட்டைச் சேர்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
மூன்றாம் குலோத்துங்கனின் 33 ஆவது ஆட்சியாண்டு பொயு 1210,
ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவரில்
உள்ள கல்வெட்டு, இராஜேந்திர சோழ வளநாட்டு வண்டாழை வேளூர்க்
கூற்றத்து கட்டிமான் குடியான சோழபாண்டியச் சருப்பேதிமங்கலத்துப் பெருங்குறிச்
சபையார் திருவாய்மூருடைய நாயனார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவருக்கு எழுதிக் கொடுத்த
ஆவணம் இது. திருவாய் மூருடைய நாயனார் திருவிழா நாளில் திருத்தோப்புக்கு
எழுந்தருளுகின்ற திரு வீதியின் அகலம் குறைவாக இருப்பதை நேரில் கண்ட அரசனின்
ஆணையின்படி, திருவீதியின் அகலத்தைப் பெரிதாக்குவதற்காகக்
கொடுக்கப்பட்ட நிலங்கள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றைக்
குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. மேலும் நாலு மங்கல வீதிகளையும் சபையாரே
சீரமைப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
மூன்றாம் குலோத்துங்கனின் 12 ஆம் நூற்றாண்டு, பொயு 1190 ஆம்
ஆண்டு தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவரில் உள்ள
கல்வெட்டு திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் பெயரில்
இராசேந்திர சோழவளநாட்டு, இடையளநாட்டு ஈச்சனூரான
பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், 'நாற்பத்தெண்ணாயிரவன்
திருநந்தவனம்' என்ற நந்தவனத்தினை அமைக்கக் குளமும்,
நிலமும், இறையிலி செய்து கொடுத்ததைத்
தெரிவிக்கிறது.
மூன்றாம் இராஜராஜனின் 29+1 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1246 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவரில்
உள்ள கல்வெட்டு, இராஜேந்திர சோழவளநாட்டுச் சிற்றாமூருடையான்
ஆதித்த தேவன் திருவையாறுடையான் என்பவன், திருவாய்மூருடையார்
கோயிலில் உள்ள வட்டணை ஆடலுடையாருக்கு (ஆடல்வல்லார்?) சித்திரைத்
திருநாளில் வழிபாட்டுக்குக் குங்குமம், கற்பூரம், பனிநீர், செங்கழுநீர்த் திருப்பள்ளித்தாமம்
ஆகியவையுள்ளிட்ட பொருட்களுக்கும், திருவிளக்கெண்ணெய்,
அமுதுபடி ஆகியவற்றுமாக 10,000 காசுகள்
கொடுத்ததையும், அதனை முதலாகக்- கொண்டு நிலம் விலைக்கு
வாங்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. பிற்பகுதி சிதைவுற்றுள்ளது.
மூன்றாம் இராஜராஜனின் 29 +1 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1246, ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு, இராசேந்திர சோழ வளநாட்டுச்
சிற்றாமூருடையான் அரயன் கம்பிக்காதன் பவழக்குன்றன் என்பான், வட்டணை ஆடலுடையாருக்குப் புரட்டாசி, சித்திரைத்
திருநாள்களில் வரும் திருக்காப்பு நாளன்று செய்யும் அமுதுபடி, சாத்துபடி, திருப்பள்ளித் -தாமம், திருவிளக்கெண்ணைச் செலவுகளுக்காகத்
திருநாமத்துக் காணியாக இறையிலி நிலமும், பண்டாரத்தில்
காசும் கொடுத்தமையைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
கல்வெட்டுக்களின் தொடர்ச்சி இப்பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டு
உள்ளது.
References
1. Annual Report on
South Indian Epigraphy, year 1960 – 61, 1961 – 62, and 1962 – 63.
2. தமிழ்நாடுக் கல்வெட்டுகள் வரிசை எண் 29, நாகபட்டிண மாவட்டக்
கல்வெட்டுகள்
LEGENDS
Lord Shiva asked Thirunavukkarasu Swamigal to follow him to Vaaimur by saying, “Vaimuril iruppom thodarnthu vaa - வாய்முயூரில் இருப்போம் தொடர்ந்து வா” - There is a Shiva Sannidhi in parallel to Moolavar sannidhi called “Apparukku Kaatchi Kodutha Shiva“ (Lord Shiva who gave darshan to Appar).
Lord Shiva asked Thirunavukkarasu Swamigal to follow him to Vaaimur by saying, “Vaimuril iruppom thodarnthu vaa - வாய்முயூரில் இருப்போம் தொடர்ந்து வா” - There is a Shiva Sannidhi in parallel to Moolavar sannidhi called “Apparukku Kaatchi Kodutha Shiva“ (Lord Shiva who gave darshan to Appar).
எங்கே என்னை இருந்து இடம் தேடிக்கொண்டு
அங்கே வந்துஅடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாஎன்று போனார் அதுஎன் கோலோ
அங்கே வந்துஅடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாஎன்று போனார் அதுஎன் கோலோ
As per the legend, Thirunavukkarasu Swamigal’s hymns, to
open the temple doors of Thirumaraikadu, he sang hymns and stayed at the
temple. He was a little upset that the doors were opened only after he completed
10 poems of the hymns. But the doors closed for one poem of
Thirugnanasambandar’s Hymns. That night, Lord Shiva came in his dream and
told him to follow him since he was at Thiruvaimur. Thirunavukkarasu Swamigal
followed Lord Shiva and reached Thiruvaimur. In the meantime, Thirugnanasambandar searched for Appar. He also came to this temple. Lord Shiva
gave darshan to both.
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லாரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே
உறைப்புப் பாடி அடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லாரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே
It is believed that there were Ashta Bhairavas in
this temple, but there are only 4. For the rest, Dhandas are kept. It is
believed that Indra’s son Jayanthan was relieved from the curse due to the grace of the Bhairavas. Special “Jayanthan poojas” are conducted on the Chithirai month's first Friday,
since it is believed that Jayanthan worshiped on that day. Suriyan also worshiped
Lord Shiva at this temple.
This is one of the Saptha Vidanga sthalam (Vidangar
– Neela Vidangar, Nadanam – Kamala Nadanam, seat – Rathna Simhasanam). The
Legend goes like this. Maha Vishnu worshiped Lord Shiva and Parvati with
Kandar as Somaskandar aka Thiyagarajar (but actually it is a Shiva Linga.. ?) for a child boon. Devendra obtained the
Murti and worshiped. Devendra wanted to gift something to Muchukunda
Chakravarthy for helping him win the war with Valasuran. When Muchukunda
Chakravarthy was asked what he wanted. Muchukunda said that he wanted only the
Thiyagarajar. Devendra made 6 more replicas of Thyagaraja, and told him that if he identified
the original, he would give away all the 7 Vigrahams. Muchukunda Chakravarthy
identified the original and obtained all 7 Vigrahams. He installed one in
this temple at Thiruvaimur. The other temples' details are... (The others are
Thiruvarur – Veedhi Vidangar, Ajapa Natanam, Nagapattinam (Nagai Karonam), Sundara Vidangar, Vici Nadanam, Thirukaravasal – Adi Vidangar, Kukkuda Nadanam,
Thirukkuvalai (Thiru Kolili) – Avani Vidangar, Brunga Nadanam, Thirunallar –
Nagara Vidangar, Unmatha Nadanam, Thiruvaimur – Nlla Vidangar, Kamalana Nadanam, and Vedaranyam (ThirumaraiKadu) – Bhuvai Vidangar, Hamsapada
nadanam.
POOJAS AND
CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on Vaikasi Visakam in the month of Vaikasi (May – June), Vinayagar Chathurthi in the month of Avani (Aug – Sept), Annabhishekam in the month of Aippasi (Oct – Nov), Thirukarthigai in the month of Karthigai (Nov – Dec), Thiruvathirai in the month of Margazhi (Dec – Jan), Thaipoosam in the month of Thai (Jan – Feb), Maha Shivaratri in the month of Masi (Feb – March), and monthly pradoshams.
Apart from regular poojas, special poojas are conducted on Vaikasi Visakam in the month of Vaikasi (May – June), Vinayagar Chathurthi in the month of Avani (Aug – Sept), Annabhishekam in the month of Aippasi (Oct – Nov), Thirukarthigai in the month of Karthigai (Nov – Dec), Thiruvathirai in the month of Margazhi (Dec – Jan), Thaipoosam in the month of Thai (Jan – Feb), Maha Shivaratri in the month of Masi (Feb – March), and monthly pradoshams.
Special poojas are also conducted on Ashtami days
for Bhairavas. Special Abhishekam will be done to Thiagarajar on the 1st day
of Aippasi month.
TEMPLE TIMINGS
The temple will be kept open from 07.00 hrs to 11.00 hrs and from 17.00 hrs to 19.00 hrs.
The temple will be kept open from 07.00 hrs to 11.00 hrs and from 17.00 hrs to 19.00 hrs.
CONTACT DETAILS
The mobile number +919751065108 may be contacted for further details.
The mobile number +919751065108 may be contacted for further details.
HOW TO REACH
The place is on the road diversion to Ettukudi on the Nagapattinam to Thiruthuraipoondi.
The Thiruvarur to Vedaranyam bus passes through this village
The temple at Thiruvaimur is 18 km from Thiruthuraipoondi, 27 km from Thiruvarur, 30 km from Nagapattinam, 37 km from Vedaranyam, 45 km from Mannargudi, and 328 km from Chennai.

The nearest Railway Station
is Thiruthuraipoondi, and the Junction is Thiruvarur.
LOCATION OF THE TEMPLE: CLICK HERE
The second Heritage visit to this Sri Manathunai
Nathar Temple at Valivalam was a part of the “Mada Temples Heritage Walk in
Nagapattinam and Mayiladuthurai Districts”, organized by “Chozha Mandala
Varalatru Thedal Kuzhu – GCHRG, on 05th and 6th March
2022. Thanks to V Ramachandran,
Thasildar of Nagapattinam, who took us to all these Temples.
கல்வெட்டுக்களின் தொடர்ச்சி….
6. மூன்றாம் இராஜராஜனின் 29 ஆம்
ஆட்சியாண்டு, பொயு 1245 ஆம் ஆண்டு தியாகராஜர் கோயிலில்
திருவாய்மூர்நாதர் சன்னதியின் முன்னுள்ள மண்டபத்தின் வடக்குச் சுவரில் உள்ள
கல்வெட்டு திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வரதேவர் பெயரால்
சண்டேஸ்வரப் பெருவிலையாக, நெய்வாயிலுடையான் ஆட்கொண்ட
வில்லியான பத்தாராய்ப் பணிவாற்கு, மூன்றுமா முக்காணி
அரைக்காணிச் சின்ன நிலத்தினை, நாலாயிரம் அன்றாடு
நற்காசுகளுக்கு விற்றுக் கொடுத்ததைத் தெரிவிக்கிறது. அந்நிலத்தினை இவர் கோயில் தானத்தாரிடம்
வழங்க, அவர்கள் அந்நிலத்தால் வரும் வருமானத்தில் இறை செலுத்தியது
போக மீதியிலிருந்து, இப்பத்தராய்ப் பணிவார் இக்கோயிலில் எழுத்ருளுவித்த,
திருஞானம் பெற்ற பிள்ளையாருக்குத் திருப்படிமாற்றும், பூசைச் செலவுகளும் செய்யச் சம்மதித்ததைக் குறிப்பிடுகிறது.
7. மூன்றாம்
இராஜராஜனின்
29 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1245 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின்
மகாமண்டப வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு திருவாய்மூருடையார்
கோயில், ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி செய்வார்களும், கோயிற் காரியம் செய்வார்களும், கோயிற்
கணக்கரும், ஸ்ரீ மாஹேஸ்வரரும் இசைந்து செய்த செயலைக் குறிக்க
எழுதத் தொடங்கப்பட்ட இக்கல்வெட்டு செய்திகளைத் தெரிவிக்கும் பகுதி வெட்டப்படுவதற்கு
முன்பே நிறுத்தப்பட்டுள்ளது.
9. மூன்றாம் குலோத்துங்கனின் 38 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1216 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குப்பட்டியில் உள்ள கல்வெட்டு, இடையள நாட்டு ஈசனூரான ஸ்ரீபரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், திருவாய்மூருடையார் கோயிலில் அறுகழஞ்சுப் பொன் முதலாகப் பெற்றுக் கொண்டு, செங்கழுநீர் ஓடைப்புறமான அறுமாமுக்காணி நிலத்திற்கு இறையிலி செய்தளித்ததைக் கூறுகிறது.
10. சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜனின் 20 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1236 அம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, சிற்றாமூருடையான் அரையன் கம்பிக்காதனான வீரராஜேந்திரப் பல்லவரையன், இக்கோயிலில் எழுந்தருளியுள்ள வட்டணை ஆடலுடையாருக்குச் செய்கின்ற புரட்டாசித் திருநாளுக்கும், சித்திரைத் திருநாளுக்கும், அந்நாள்களில் இறைவனின் ஊர்வலத்திற்கும், திருநீராட்டு (ஆடி அருளல்), சாத்துபடி, திருப்பள்ளித் தாமம், அமுதுபடி ஆகியவற்றுக்குமாக, விலைக்கு நிலம் வாங்கி, அளித்ததைக் குறிப்பிடுகிறது. அந்நிலத்துக்குரிய வரிகள் இறுத்தது போக மீதியில் மேற்படிச் செலவுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
11. மூன்றாம் இராஜராஜனின் 20 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1236 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலில் உள்ள வேதாரண்ய சுவாமி சன்னதி மகாமண்டப வடக்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு, திருவாய்மூருடையார் கோயில் சீபீடத்தின் முன்னர், முன்னாளில் தான் எழுந்தருளுவித்த அழகிய வினாயகப் பிள்ளையாற்குக் காட்டூருடையான் செம்பொற்சோதி வட்டணையுடையான் என்பார் திருப்படிமாற்றுக்கு திருநாமத்துக் காணியாக அளித்த நிலக்கொடையைத் தெரிவிக்கிறது. இறை செலுத்தியது போக மீதமுள்ள வருமானம் இதற்காகச் செலவிடப் பட வகைசெய்யப்பட்டது.
12. மூன்றாம் இராஜராஜனின் 20 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1236 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலில் உள்ள வேதாரண்ய சுவாமி சன்னதி மகாமண்டப வடக்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு, திருவாய்மூருடையார் கோயிலின் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்கள், இக்கோயில் தேவரடியாள் ஆன வடுகி வம்பு பழுத்தாள் ஆன திருவாய்மூர் மாணிக்கத்திடம் மூன்றாம் குலோத்துங்கனின் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டில் திருநுந்தாவிளக் கெரிக்கப் பெற்ற நிவந்தத்தைக் குறிக்கிறது. அந்நிவந்தத்திலிருந்து வரும் வட்டி (பொலிசை) கொண்டு விளக்கெரிக்கப்பட்டதையும், இந்நிவந்தத்தைக் கொடுத்த போதே கல்லில் வெட்டாததால், தற்போது வெட்டுவதாகவும் குறிக்கப்படுகிறது.
13. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு, தியாகராஜர் கோயிலின் வடக்கு அதிட்டானத்தில் உபானப்பட்டியில் உள்ள கல்வெட்டு, நிலக்கொடையைக் குறிப்பதாக உள்ளது.
14. மூன்றாம் இராஜராஜனின் 2(..) ஆவது ஆட்சியாண்டு தியாகராஜர் கோயில் வடக்கு அதிட்டானத்தின் உபானப்பட்டியில் உள்ள கல்வெட்டு, விளநாட்டு ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், இவ்வூரிறைவனுக்குச் செய்த ஏதோ ஒரு ஏற்பாட்டைக் குறிப்பதாகத் தெரிகிறது.
15. மூன்றாம் குலோத்துங்கனின் 3(8), ஆவது ஆசியாண்டு பொயு 1216 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயில் வேதராண்யர் சன்னதி மகாமண்டப மேற்குக் குமுதத்தில் உள்ள பிற்பகுதி சிதைந்த கல்வெட்டு, திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர்க்கு ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார் செய்து கொடுத்த ஆவணமாகத் தெரிகிறது.
16. மூன்றாம் இராஜராஜனின் 8 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1224 ஆம் ஆண்டு தியாகராஜர் கோயில் வேதாரண்யேஸ்வரர் சன்னதியின் வடக்குக் குமுதத்தில் உள்ள கல்வெட்டு அரசூருடையான் களப்பாளராயர் உள்ளிட்ட சிலர், நந்தாவிளக் கெரிக்கவும், திருச்சென்னடைக்கும், திருநந்தாவனப்புறமாகவும், நிலக்கொடை அளித்ததைக் குறிக்கிறது. நிலத்தின் அளவுகளும் எல்லைகளும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. திருவாய்மூர் வராகன் குறிப்பிடப்படுகிறது.
17. மூன்றாம் குலோத்துங்கனின் 4 ஆவது ஆட்சியாண்டு, 1182 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயில் கருவறை மேற்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு, திருவாய்மூருடையார் கோயில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்கள் சிலர் பெரியகுடையான் வைத்தவன் தாமோதரனான குலோத்துங்க சோழக் கச்சியராயன் என்பாரிடம் 100 காசுகள் பெற்றுக் கொண்டு, அதன் பொலிசையால் தினம் ஒரு நொந்தா விளக்கெரிய நாள்தோறும் உழக்கு நெய்யளக்க ஒத்துக் கொண்டதைக் குறிப்பிடுகிறது.
18. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு, சோழர் காலத்தைச் சார்ந்த, தியாகராஜர் கோயில் கருவறை மேற்குப் பட்டியில் உள்ள கல்வெட்டு, இங்கண் நாட்டு இங்கண் ஆன பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்துக் கரணத்தான் வரகூருடையான் சக்கர . . டங்கொண்டான் மனைவியும், பொத்தூருடையான் உலகனாத தேவன் உறவுடையாளுமான ஒருத்தி, திருவாய்மூருடையார் கோயில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர் தில்லை நாயக ... வசம், [விளக்கெரிக்க?] தினந்தோறும் உழக்கு நெய்யளிக்கும் வகையில் செய்த நிவந்தத்தைக் குறிக்கிறது.
19. பொயு 12 ஆம்நூற்றாண்டு சோழ அரசர் திரிபுவனச் சக்கரவத்தியின், தியாகராஜர் கோயிலின் கருவறை மேற்குப் பட்டியில் உள்ள கல்வெட்டு, நந்தாவிளக்கெரிக்க வகை செய்ததைக் குறிக்கிறது. சீமாமேஹஸ்வரர்கள், காணியுடைய சிவப்பிராமணர்கள் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்.
20. இரண்டாம் (?) ராஜாதிராஜனின் 11 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1177 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் கருவறை மேற்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு நாயனார் திருவாய்மூருடைய நாயனார் திருமுன்பிலும் (சன்னதி) திருக்காமக்கோட்டமுடைாள் திருமுன்பிலும், தம் முன்னோர்? தந்தை ஆகியோர் நன்மைக்காக, சீர்த்தங்குடையான் வேளான் பட்டன் என்பான் இரு திருநொந்தாவிளக்கெரிக்க 50 காசுகளை, ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிச் சபையாரிடம் கொடுத்ததையும், அதனைப் பெற்றுக் கொண்ட சபையார், இக்கோயில் நிலங்களை உடைய காணியாளர்கள் செலுத்த வேண்டிய வரியினை அவர்கள் செலுத்தவும், ஈடாகக் காணியாளர்கள் விளக்கெரிப்பதற்குத் தேவையான நெய்யினைச் செலுத்தவும் ஒப்புக்கொண்ட செயலை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
21. சோழர் மன்னன் விக்ரம சோழனின் 12 ஆவது ஆட்சியாண்டு, 1130 ஆம் ஆண்டு தியாகராஜர் கோயில் கருவறை மேற்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு ஊர்ச் சபைக்குச் சொந்தமான பகுதியில் அமைந்த, திருவாய்மூருடையார் கோயிலுக்குரிய இறையிலி நிலங்களுக்கான, உள்வரியினை நிர்ணயம் செய்ததைக் குறிக்கிறது. அந்த நிலங்கள் யார் யாருடைய பொறுப்பில் [அடைப்பு] இருந்தன என்பதும் பட்டியலிடப்படுகின்றன. அவற்றுள், பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலம், அமுதமங்கலம், ஆலங்குடி ஆகிய ஊர்களில் உள்ள நிலங்களும், முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கொடுக்கப்பட்டநிலங்களும் அடங்கும்.
22. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு, சோழர் காலத்தைச் சார்ந்த தியாகராஜர் கோயில் கருவறைத் தென்புறச் சுவரில் இணைத்துக் கட்டப்பெற்றுள்ள கற்களில் உள்ள துண்டுக் கல்வெட்டுகள், அருமொழிதேவ வளநாடு, செம்பியன், திருமுகப்படி, மடபோகமாக, இராஜராஜ தேவர்கு ஆறாவது, ராஜராஜ பேராறு, திருஞ்சானசம்பந்தந் திருநந்தவந்.. போன்ற வாசகங்கள் மட்டுமே காணக் கிடைக்கின்றது.
23. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு சோழர்கள் காலத்தைச் சார்ந்த, தியாகராஜர் கோயிலின் தெற்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு, மேல்மலைப் பழையனூர் நாட்டைச் சேர்ந்த கரதேவன் ஆன அமரகோனார், விளக்கெரிப்பதற்காக நெய் அளக்கும் பொருட்டு சிவப்பிராணர்களிடம் நிவந்தம் அளித்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது.
24. இரண்டாம் இராசாதிராசனின் 12 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1178 ஆம் ஆண்டு தியாகராஜர் கோயிலின் தென்புறச் சுவரில் உள்ள பெரிதும் சிதைந்துள்ள கல்வெட்டு தொடர்ச்சியாகப் பொருள் தெரிந்து கொள்ளுமாறு இல்லை. கல்வெட்டின் காலம் குறிக்கும் பஞ்சாங்கக் குறிப்புகளும், நந்தாவிளக்குக்குத் தினந்தோறும் செலுத்தவேண்டிய நெய்க்காக நூறு காசுகளைச் சிவப்பிராமணர்களின் கொடுத்த செய்தியும் தெரியவருகின்றன.
25. பொயு 10 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சார்ந்த தியாகராஜர் கோயிலின் தென்புறச் சுவரில் உள்ள பழைய கல்வெட்டுகள் மீண்டும் பொறிக்கப்பட்டுள்ளன. அவையும் மாற்றி மாற்றி வைத்துக் கட்டப்பட்டுள்ளன. கி.பி. 12ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளன.
26. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு, சோழ மன்னன் திரிபுவனச்சக்கரவத்தியின் 7 ஆம் ஆட்சியாண்டு, தியாகராஜர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள பெரிதும் சிதைந்த கல்வெட்டு, நொந்தா விளக்கெரிக்க அறுபது காசுகள் கொடுத்து, நெய்யளக்கச் செய்த கொடை என்ற அளவில் தெரிய வருகிறது.
27. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு சோழ அரசரின் 24 ஆவது ஆட்சியாண்டு தியாகராஜர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவரில் கல்வெட்டு, வண்டாழை வேளூர்க் கூற்றத்துத் தேவதாந ஊர் ஒன்றின் (பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலம்?) பெருங்குறி சபையார்கள் எழுதிக் கொடுத்த ஆவணம். அரசனின் ஆணையாகச் செம்பிலும் (கல்லிலும்] வெட்டுவித்ததாகத் தெரிகிறது.
28. மூன்றாம் இராசராசனின் 20 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1236 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் முகமண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, இராசேந்திர சோழவளநாட்டுக் கோட்டூருடையான் செம்பொற்சோதி வட்டணையாடலுடையான், தான் திருவாய்மூருடையார் கோயிலில் எழுந்தருளுவித்த அழகிய வினாயகப் பிள்ளையார் முன்பு மூன்று சந்தியிலும் எரிப்பதற்காக 600 காசுகளை இக்கோயிலின் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்களிடம் கொடுத்ததையும், அதன் வட்டியிலிருந்து அவர்கள் விளக்கெரிக்க ஒப்புக்கொண்டதையும் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
29. பொயு 10 ஆம் நூற்றாண்டு சோழ அரசர் இராசகேசரியின் 18 +1 ஆவது ஆட்சியாண்டு, தியாகராஜ சுவாமி கோயிலின் அர்த்த மண்டபத் தெற்கு அதிட்டானத்தில் உள்ள பிற்காலத்தே கி.பி. 12,13 ஆம் நூற்றாண்டு எழுத்தமையில் மீட்டெழுதப் பட்ட கல்வெட்டு. சிற்றாமூருடையான் என்பான், திருவாய்மூருடைய பெருமானடிகளுக்கு நொந்தா விளக்கெரிக்க, மாதந்தொறும் குறுணி நெய் வட்டியாகத் தர ஒப்புக்கொண்டதைத் தெரிவிக்கிறது.
30. பொயு 10 ஆம் நூற்றாண்டு சோழ அரசர் இராசகேசரியின் 2(3) ஆவது ஆட்சியாண்டு, தியாகராஜர் கோயிலின் அர்த்த மண்டபத் தெற்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு, கி.பி.12,13 ஆம் நூற்றாண்டெழுத்தமைதியில் மீட்டெழுதப்பட்ட கல்வெட்டு. திருவாய்மூருடைய மகாதேவர் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் பெயரில், பெருங்குறி மகாசபையார், நிலவிலையாகப் பத்துக் காசும், இறைகாவலாக 30 காசும் பெற்றுக் கொண்டு இறையிலி முற்றூட்டு செய்து கொடுத்ததைக் குறிக்கிறது. அந்நிலத்தில் இருந்து வரும் நெல்லைக் கொண்டு, உச்சிச் சந்தி வழிபாடு, அப்போதெரிக்கும் நொந்தாவிளக்கு, இருதிருவிழா நாள்களில் அப்பமுது, அவலமுது ஆகியவை படைக்க அரிசி ஆகியவற்றை எந்தெந்த அளவு கொடுக்க வேண்டுமென ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது.
இரண்டாம் பகுதி இக்கல்வெட்டினைத் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளது. எனவே முன்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் எல்லைகளைக் குறிப்பதாகவும், அவற்றை இறையிலி செய்து கொடுத்ததைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
31. மூன்றாம் குலோத்துங்கனின் 33 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1211 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயில் மகாமண்டப வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, [திருவாய்] மூர்க்கிழவன் திருச்சிற்றம்பலமுடையான் திவாகர... என்பார், பண்டாரத்திலிருந்து 1200 காசுகளைப் பெற்று, திருவாய் மூருடையார் கோயில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்கள் வசம் கொடுத்து, அதன் பொலிசை (வட்டி) யிலிருந்து, இரண்டு திருநாள்களில், திருக்களபத்துக்கும், திருமேற்பூச்சுக்கும், திருப்பள்ளித்தாமத்துக்கும், அரிசி, கறியமுது, உப்பமுது, மிளகு, நெய், தயிர், அடைக்காய் வெற்றிலையுள்ளிட்ட அமுதுபடிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அமுதுபடிக்குரிய பொருட்களின் அளவுகளும் சொல்லப்பட்டுள்ளன.
32. பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தைச் சார்ந்த தியாகராஜர் கோயிலின் மகாமண்டப மேற்குச் சுவரில் உள்ள, பெரிதும் சிதைந்த துண்டு கல்வெட்டுகள், பல்வேறு துண்டுகளாகச் சுவரில் கட்டப்பட்டுள்ளது. பெருங்குறிச் சபையாரும், தானத்தாரும் ஈடுபட்டுச் செய்த ஏற்பாட்டினைக் குறிப்பதாகத் தெரிகிறது. நில அளவுகள், இறையிலி செய்தமை ஆகியவற்றிலிருந்து, நிலக்கொடையினைப் பற்றியதெனக் கருதலாம். கையெழுத்திட்ட ஊர்க்கணக்கர் உள்ளிட்ட சிலரின் பெயர்களும் ஒருபகுதியில் காணப்படுகிறது.
33. மூன்றாம் குலோத்துங்கனின் 26 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1204 ஆம் ஆண்டு, தியாகராஜர் கோயிலின் மகாமண்டப மேற்குக் குமுதத்தில் உள்ள கல்வெட்டு, சிவப்பிராமணர் பாசையைச் சேர்ந்த வணிகன் வைப்பூருடையான் திருநாகீசுரமுடை யானின் மனைவி, உடையநாச்சி ஆகிய சிவன் பெருந்தேவி என்பாள், 600 காசுகளைத் திருவாய்மூருடையார் கோயில் முப்பது வட்டத்து காணியுடைய வசம் கொடுத்து, அதன் பொலிசையிலிருந்து மூன்று சந்தியிலும், ஒரு விளக்கெரிக்க தினந்தோறும், முச்செவிடு நெய்யளக்கச் செய்த ஏற்பாட்டையும், இரும்பு உள்ளீட்டுடன் கூடிய பித்தளை விளக்கினையும் அவரே அளித்ததையும் குறிப்பிடுகிறது.
34. சோழர் மன்னன் வீர ராஜேந்திரனின் (மூன்றாம் குலோத்துங்கன்…?) (7) ஆவது ஆட்சியாண்டு, பொயு 118(4)ன் (மூன்றாம் குலோத்துங்கன்), தியாகராஜர் கோயில் அர்த்தமண்டப உபபீடம் தெற்குப் பட்டியில் உள்ள கல்வெட்டு, திருவாய்மூருடைய நாயனார் கோயில் தேவரடியாரில் பூநங்கை என்பாள், சிவப்பிராமணர்களிடம், 112 காசு கொடுத்ததையும், அதைப் பெற்றுக் கொண்டு ஒரு திருநந்தா விளக்கெரிக்கும் பொறுப்பினை அவர்கள் ஏற்றுக் கொண்டதையும் இக்கல்வெட்டு குறிக்கிறது.
35. சோழர் மன்னன் மூன்றாம் ராஜராஜனின் 35 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1251 ஆம் ஆண்டு தியாகராஜர் கோயில் அர்த்த மண்டபம் உபபீட மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, இடையளநாட்டு ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்து காணியாளனான நெய்தல் வாயிலுடையான் ஆட்கொண்டவில்லி ஆகிய பத்தராய்ப் பணிவார் என்பவருக்கு, திருவாய்மூருடையார் கோயில் தானத்தார் செய்து கொடுத்த நிலவிலை உறுதி ஆவணம் இது. 1400 அன்றாடு நற்காசுகளுக்குச் சண்டேஸ்வரப் பெருவிலையாக வாங்கிய இந்நிலத்தினை அவன் கொடையாக அளித்து, அதற்குரிய வரிசெலுத்தியது போக மீதமுள்ள வருவாயிலிருந்து வட்டணை ஆடலுடையார்க்குத் திருமார்கழித் திருவாதிரையன்று நடைபெறும், திருவெழிச்சி (ஊர்வலம்), திருநீராட்டு, திருப்பள்ளித்தாமம், திருவமுது, திருவிளக்கெண்ணெய் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ளச் செய்த ஏற்பாட்டினைக் குறிப்பிடுகிறது.
36. பொயு 13 ஆம் நூற்றாண்டு, மூன்றாம் ராசேந்திரனின் தியாகராஜர் கோயில் மகாமண்டபத்தின் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, .............. காடுடையானான கூத்தாடுவானான இராசேந்திரசோழக் காரைக்காடுடையான் என்பான், திருவாய்மூருடையார் கோயில் திருமடைவளாகத்து தெற்கில்த் திருவீதியின் வடசிறகில், மடமும் எடுத்து, அம்மடத்தின் பணிசெய்ய திருமேனிகளும் (துறவியர்) ஏற்பாடு செய்து, இறையிலியாக நிலமும் அளித்ததைக் குறிப்பிடுகிறது. இராவளர் முதலியார் சோமனாத [தேவர்] மட அதிபதியாக இருக்கலாம்.
References
1. Annual Report on
South Indian Epigraphy, year 1960 – 61, 1961 – 62, and 1962 – 63.
2. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் வரிசை எண் 29, நாகபட்டிண மாவட்டக்
கல்வெட்டுகள்.

நாம் தமிழர்கள் தானே மொழி பெயர்ப்பு சரியாக இல்லை
ReplyDeleteஎது சரியில்லை.. எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.. இப்பதிவில் தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம் ..
Delete