Friday, 20 November 2026

Sri Agastheeswarar Temple/ ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில், Kilkodungalur/ Kodungalur [KIL], Tiruvannamalai District, Tamil Nadu.

The visit to this Sri Agastheeswarar Temple at Kilkodungalur was part of “Shiva, Vishnu and Kotravai Temples Visit, around Vandavasi” on 27th September 2026. I sincerely thank Mrs. Uma Jairam for taking me to this temple.

Moolavar  : Sri Agastheeswarar
Consort    : Sri Amirthavalli

Some of the salient features of this temple are…..
The temple faces east with an entrance mandapam. Balipeedam and Rishabam are on the east with a jala. The entrance to the ardha mandapam is from the south side. Moolavar is on a round avudaiyar. In the koshtam: Vinayagar, Dakshinamurthy, Lingothbavar, Brahma, and Durgai.

In the praharam, Vinayagar, Sri Kathri Andavar (A Shiva Lingam), Sri Valli Devasena Subramaniar, Nagars, Chandikeswarar, Ambal Temple, Bairavar, Saniswaran, and Suryan.

Ambal is in a separate temple with a sanctum sanctorum, antarala, and ardha mandapam. Ambal is in a standing posture with Abhaya Varada hastam.

Suryan and Bairavar

ARCHITECTURE
The temple consists of sanctum sanctorum, antarala, and ardha mandapam. The temple was built with stone from adhistanam to prastaram. The sanctum sanctorum is on a pada bandha adhistanam with jagathy, three patta kumudam, and pattikai. The bhitti is plain without vedikai, and the pilasters are Brahma kantha pilasters. The prastaram consists of valapi, kapotam with Nasi kudus. A one eka tala vimanam, greevam and vesara sigaram is over the bhumidesam. The tala and greeva koshtams are empty.   

HISTORY AND INSCRIPTIONS
The original temple belongs to the Pallava period and later received contributions from Cholas, Sambuvarayas, Pandyas and Vijayanagaras.

As per the inscriptions, this place was called Jayangnda Chozha Mandalathu Venkundara Kottathum Marudhadu Nattu Kodungalur. Shiva was called Aludaiyar Thiruvagastheeswaramudaiyar, Thiruvagatheeswaramudaiya Nayanar, etc.

பல்லவமன்னர் கம்ப விக்கிரமன் 32 ஆம் ஆட்சியாண்டு, பொ ஆ 901, திருஅகத்தீசுவரர் கோயில் விநாயகர் சன்னதி முன்புறம் உள்ள பலகை கல்லில் உள்ள கல்வெட்டு, காவீடு ஊரார் இவ்வூரைச் சார்ந்த காடந்தை நக்கன் சடையன் என்பானுக்கு நிலம் ஒன்றினை விற்றுக் கொடுத்தச் செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் மூன்றாம் இராசராசனின், 23 ஆம் ஆட்சியண்டு (பொ ஆ 1239), அகத்தீசுவரர் கோயில் தெற்கு நுழைவு வாயில் இடதுபுறச்சுவரில் உள்ள கல்பவெட்டு, ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூர் ஊரிலுள்ள திருவகத்தீசுரமுடையார் கோயிலைச் சார்ந்த சிவபிராமணர்கள் இருவர், இவ்வூரைச் சார்ந்த திணையான் என்பவனிடமிருந்து மூன்று பழங்காசுகள் பெற்றுக் கொண்டு சந்திவிளக்கெரிக்க சம்மதித்தச் செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் மூன்றாம் குலோத்துங்கன் 21 ஆம் ஆட்சியாண்டு, (பொ ஆ 1199), அகத்தீசுவரர் கோயில் தெற்கு நுழைவு வாயில் இடதுபுறச்சுவரில் உள்ள கல்வெட்டு, கொடுங்காலூர் திருவகத்தீசுவரமுடையார் கோயிலைச் சார்ந்த இரண்டு சிவபிராமணர்கள், இவ்வூரைச் சார்ந்தவரிடம் மூன்று பழங்காசுகள் பெற்றுக்கொண்டு சந்திவிளக்கெரிக்க சம்மதித்தச் செய்தியைப் பதிவு செய்கின்றது.

12 ஆம் நூற்றாண்டு, அகத்தீசுவரர் கோயில் தெற்கு நுழைவு வாயில் இடதுபுறச்சுவரில் உள்ள கல்வெட்டு, மருதாடு என்ற ஊரைச் சார்ந்த கோமாண்டி என்பவள் இக்கோயில் சுவற்றின் முதல் வரிசையினைத் தானமாக செய்து கொடுத்துள்ளாள் என்பதைப் பதிவு செய்கின்றது.

பொ ஆ11 ஆம் நூற்றாண்டு மூன்றாம் இராசராசனின், அகத்தீசுவரர் கோயில் தெற்கு நுழைவு வாயில் குமுதத்தில் உள்ள கல்வெட்டு, இக்கோயிலைச் சார்ந்த நான்கு சிவபிராமணர்கள், தக்ஷிணாமூர்த்தி இறைவன் முன் சந்திவிளக்கு வைக்க சம்மதித்துள்ள செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் மூன்றாம் இராசராசனின், 24 ஆம் ஆட்சியாண்டு பொ ஆ1240, அகத்தீசுவரர் கோயில் தெற்கு நுழைவு வாயில் குமுதத்தில் உள்ள கல்வெட்டு, பெருமாள் என்கிற செம்பியன் விழுப்பரையன் என்பவனிடமிருந்து திருவகத்தீசுவரமுடையார் கோயில் சிவபிராமணர்கள் காசு பெற்றுக்கொண்டு இக்கோயிலில் சந்தி விளக்கெரிக்க சம்மதித்துள்ளனர்.

சோழ அரசர் இரண்டாம் இராசாதிராசனின் 8 ஆம் ஆட்சியாண்டு பொஆ 1171, அகத்தீசுவரர் கோயில் தெற்கு நுழைவு வாயில் குமுதத்தில் உள்ள கல்வெட்டு கொடுங்காலூர் திருவகத்தீஸ்வரமுடையார் கோயில் இறைவன் அபிஷேகத்திற்காக வேண்டி இவ்வூரைச் சார்ந்த மன்றாடி இனத்தைச் சார்ந்த சீமன் அம்மை என்பவள் இரண்டு பாத்திரங்களைத் தானமாக வழங்கியுள்ளாள் என்பதைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் மூன்றாம் இராசராசனின் 15 ஆம் ஆட்சி ஆண்டு, பொ ஆ1231, அகத்தீசுவரர் கோயில் முன்மண்டபம் கிழக்குச்சுவரில் உள்ள கல்வெட்டு, பொன்விளைந்த களத்தூர் ஊரிலுள்ள திருவாலக் கோயிலைச் சார்ந்த கைக்கோளர் ஒருவர், மருதாடு நாட்டு கொடுங்கலூர் திருவகத்தீசுரமுடையார் கோயில் சிவப்பிராமணர்களிடம் மூன்று பழங்காசுகள் கொடுத்து, இக்கோயிலில் சந்திவிளக்கு ஒன்று எரிக்க ஏற்பாடு செய்துள்ளதைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் மூன்றாம் இராசராசனின் 15 ஆம் ஆட்சியாண்டு, பொ ஆ1231, அகத்தீசுவரர் கோயில் முன்மண்டபம் கிழக்குசுவரில் உள்ள கல்வெட்டு ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டுக் கொடுங்காலூர் திருவகத்தீசுரமுடையார் கோயிலைச் சார்ந்த சிவபிராமணர்கள் ஓய்மா நாட்டிலுள்ள ஆதனூர் ஊரைச்சேர்ந்த ஏறன் கண்டன் என்பவனிடமிருந்து காசுகள் பெற்றுக்கொண்டு, இக்கோயிலில் சந்தி விளக்கெரிக்கச் சம்மதித்துள்ளதைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் மூன்றாம் குலோத்துங்கன் 18 ஆம் ஆட்சியாண்டு, பொ ஆ1196, அகத்தீசுவரர் கோயில் முன்மண்டபம் கிழக்குசுவரில் உள்ள கல்வெட்டு, தேவந்தை மலையன் சீராம பெருமாள் என்பவன் ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டுக் கொடுங்காலூர் கோயில் இறைவனுக்கு சந்திவிளக்கெரிக்க 3 பழங்காசுகளை இக்கோயில் சிவபிராமணர்களிடம் வழங்கி விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளதைப் பதிவு செய்கின்றது.

Reference
1. Annual Report on South Indian Epigraphy, Year 1924,
2. தமிழ்நாட்டுக்கல்வெட்டுக்கள், தொகுதி – XIII, திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி - II

மீதமுள்ள கல்வெட்டுக்கள் இக்கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்டு உள்ளது.

LEGENDS
It is believed that the Shiva Linga was installed and worshipped by Agastheeswarar. As per the legend, during the celestial wedding of Shiva with Parvati, all the Gods, Devas, Maharishis, and Sages gathered at Mount Kailash. Due to this, the north side of the Earth lowered, and the south side went up. To balance the earth, Lord Shiva asked Agasthiyar to go south. From Mount Kailash towards Podhigai Hill, Agasthiyar established many Shiva Lingas and worshipped. It is believed that this temple is also one of them.

POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on pradosham and Maha Shivaratri,
 
TEMPLE TIMINGS
The temple will be kept open from 08.00 hrs to 10.00 hrs.

CONTACT DETAILS
The Gurukkal Baskar may be contacted on his mobile number +919655998203 for further details.
The Manager / Trustee Su Kanikumar’s mobile number is +919994284495

HOW TO REACH
The place Kilkodungalaur is on the Cheyur to Vandavasi Road. The temple is about 1.6 km from Kodungalur Junction, 13.3 km from Vandavasi, 23 km from Melmaruvathur, and 85 km from Tambaram.
The nearest railway station is Melmaruvathur.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE

 Kathiri Andavar sannidhi
Kathiri Andavar
 Nagalingeswarar

கல்வெட்டுக்களின் தொடர்ச்சி….
13 ஆம் நூற்றாண்டு, அகத்தீசுவரர் கோயில் முன்மண்டபம் கிழக்குசுவர் குமுதத்தில் உள்ள கல்வெட்டு, இரும்பிடைபாக்கம் என்ற ஊரைச் சார்ந்த சோமன் என்பவனின் மனைவி ஆண்டநாச்சி என்பவள் இக்கோயில் தக்ஷிணாமூர்த்தி இறைவன் வழிபாட்டிற்குத் தேவையான பாத்திரங்கள் (பரிக்கலம்), வட்டில், வட்டணைக்கால் ஆகியவற்றினை இக்கோயில் சிவப்பிராமணர்களிடம் வழங்கியுள்ளதைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் இரண்டாம் இராசாதிராசனின் 12 ஆம் ஆட்சியாண்டு, பொ ஆ 1175, அகத்தீசுவரர் கோயில் முன்மண்டபம் கிழக்குசுவர் குமுதத்தில் உள்ள கல்வெட்டு, ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து கொடுங்காலூர் திருவகத்தீசுரமுடைய கோயிலில் இருக்கும் க்ஷேத்திரபாலப் பிள்ளையார் (பைரவர்) வழிபாட்டின் போது அமுது படைக்க வேண்டி, 500 குழி நிலத்தினை சோழநாட்டு குலோத்துங்கசோழ வளநாட்டு முகை நாகங்குடை ஊரைச்சார்ந்த கண்ணன் பல்லவன் அணுக்கன் என்பவன் தானமளித்தான். மேலும் இவன் இக்கோயில் திருப்பள்ளியறை நாச்சியார் அமுது வழிபாட்டிற்கு 200 குழி நிலம் கொடையளித்துள்ளதைப் பதிவு செய்கின்றது.

சம்புவராய அரசர் இராசநாராயணனின் 6 ஆம் ஆட்சியாண்டு, பொ ஆ 1344, அகத்தீசுவரர் கோயில் மேற்கு மற்றும் தெற்கு குமுதத்தில் உள்ள கல்வெட்டு, ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டைச் சேர்ந்த கொடுங்காலூர் கோயில் திருவகத்தீசுவரமுடைய நாயனார் இறைவன் வழிபாட்டுக்கும், கோயில் திருப்பணிக்கும் வேண்டி இக்கோயில் திருமடைவிளாகத்தில் வசிப்போரிடம் வசூலிக்கப்படும் சில வரிகளை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைப் பதிவு செய்கின்றது.

விசயநகர அரசர் கிருஷ்ணதேவராயரின் சகம் 1438 ஆம் ஆண்டு, அகத்தீசுவரர் கோயில் கிழக்கு, வடக்கு மற்றும் மேற்குச் சுவர்களில் உள்ள கல்வெட்டு, ஜெயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு, உரத்திப் பற்று குலோத்துங்கசோழ நல்லூர் என்னும் கொடுங்கோலூர் திருவகத்தீசுவரமுடைய நாயனார் இறைவன் பூசைக்கும், கோயில் திருப்பணிக்கும் வேண்டி இக்கோயிலுக்குரிய நிலம் மற்றும் இக்கோயிலுக்கு திருநாமத்துக்காணியான மேலை கொடுங்காலூர் ஊரிலுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஆகியவை சறுவமானியமாக வழங்கப்பட்டுள்ள செய்தியைப் பதிவு செய்கின்றது.

சம்புவராய அரசர் இராசநாராயணன் திருமல்லிநாதனின் 29 ஆம் ஆட்சியாண்டு, பொ ஆ1366, அகத்தீசுவரர் கோயில் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, கொடுங்காலூர் கற்றளி உடைய நாயினார் சித்திரமேழி விடங்கர் இறைவனுக்குத் திருவிழா, கோயில் திருப்பணி மற்றும் பூசைக்காக வேண்டி மேல் கொடுங்காலூரில் வசூலிக்கப்பட்ட வரிகளை நீக்கி உரத்திப்பற்று நாட்டவர் வழங்கியுள்ளனர். கோயிலுக்கு இவ்வரிகளை சறுவமானியமாக வழங்கிட அரசன் ஆணையிட்டுள்ளான். இதே போன்று மேல்கொடுங்காலூர் அரச கோபாலீசுரமுடைய நாயனார் கோயிலுக்கு வழங்கி ஆணையிட்டுள்ளதை பதிவு செய்கின்றது.

சம்புவராய அரசர் இராசநாராயணனின் 6 ஆம் ஆட்சியாண்டு, பொ ஆ 1344, திருவகத்தீசுவரர் கோயில் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூர் திருவகத்தீசுவரமுடைய நாயனார் கோயில் சித்திரமேழி விடங்கர் இறைவன் பூசைக்கும், திருப்பணிக்கும் வேண்டி ஒரு குறிப்பிட்ட நிலம் ஒன்றினை வழங்கி, அந்நிலத்தின் மீது வசூலிக்கப்படும் வரியினை மேற்படி செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ள அரசன் ஆணையிட்டுள்ளதைப் பதிவு செய்கின்றது.

 Chitramezhi

பாண்டிய அரசர், பராக்கிரமபாண்டியனின் 5 ஆம் ஆட்சியாண்டு, பொ ஆ 1340, அகத்தீசுவரர் கோயில் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, கொடுங்காலூர் திருவகத்தீசுரம் உடையார் கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம், அதிட்டானம் முதல் தூபி வரை [காக்குநாயகன் எனும் மழவதரையன்] எடுப்பித்தச் செய்தியைத் தெரிவிக்கிறது. கல்வெட்டு வரிசை எண் 9 முதல் மிகவும் சிதைந்து காணப்படுகிறது. இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம் இக்கோயிலை கட்டியவரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளதைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் மூன்றாம் இராசராசனின் 23 ஆம் ஆட்சியாண்டு, பொ ஆ 1239, அகத்தீசுவரர் கோயில் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு திருவகத்தீசுவரமுடைய நாயனார் கோயில் சந்தி விளக்கு வைப்பதற்கு பழங்காசு கொடையாக அளித்தச் செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் மூன்றாம் குலோத்துங்கனின் 17 ஆம் ஆட்சியாண்டு, பொ ஆ 1195, அகத்தீசுவரர் கோயில் தெற்குச் சுவரில் உள்ள, கல்வெட்டு, ஜெயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூர் திருவகத்தீசுரமுடைய நாயனார் கோயிலுக்கு இவ்வூரைச் சார்ந்த திணையான் என்பவன் தானம் அளித்துள்ளதைப் பதிவு செய்கின்றது. கல்வெட்டு முழுமை பெறாததால் தானத்தின் விவரம் அறியமுடியவில்லை.)

பாண்டிய அரசர் திரிபுவன சக்ரவர்த்திகள் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 18 ஆம் ஆட்சியாண்டு, பொ ஆ 14 ஆம் நூற்றாண்டு, அகத்தீசுவரர் கோயில் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, திருவகத்தீசுரமுடைய நாயனார் கோயில் சித்திரமேழி விடங்கர் இறைவனுக்கு வைகாசி திருநாள் விழாச் செலவினங்களுக்கு, புவனேகவீர வளநாட்டு நாட்டவர் சிலவரிகளை நீக்கி கோயிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளனர் என்பதை பதிவு செய்கின்றது.

Reference
1. Annual Report on South Indian Epigraphy, Year 1924,
2. தமிழ்நாட்டுக்கல்வெட்டுக்கள், தொகுதி – XIII, திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி - II
--- OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment