The
Visit to these Ellora Jain caves was a part of the “Elephanta, Ajanta and Ellora
Heritage Walk” organized by Enthisai Historical Heritage Walk Group, from December
23rd to 26th December 2023.
எல்லோரா
குடைவரைத் தொகுப்பில் 34 குடைவரைகள் மட்டும் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவைகள் ஆகும்.
இவை மஹாரஷ்டிர மாநிலத்தில் UNESCO நிறுவனத்தால்
அங்கீகரிக்கப்பட்ட 5 உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்று ஆகும். எல்லோரா குடைவரைத்
தொகுப்பில் முதல் 12 குடைவரைக்கள் பௌத்தமதத்திற்காக பொயு 6 - 8 ஆம் நூற்றாண்டுகளில்
குடையப்பட்டதாகவும், 13 - 29 வது குடைவரை 17 குடைவரைகள் சிவன் மற்றும் மஹாவிஷ்ணுவிற்காக பொயு
7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் குடையப்பட்டதாகவும், 30 ல் இருந்து 34 வரையுள்ள 5 குடைவரைகள் சமண
சமயத்திற்காக பொயு 9 - 11 ஆம் நூற்றாண்டுகளில் குடையப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
இக்குடைவரைத் தொகுப்புகளுல் 16 ஆம் எண் குடைவரை
சிவனுக்காக் “கைலாசநாதர் கோயில்” என மேலிருந்து கீழாகக் குடையப்பட்டது.
இக்குடைவரையைப் பற்றிய தகவல்கள், இக்கட்டுரை ஆசிரியரின் ஜோதிர்லிங்க யாத்திரையின்தகவல்களுடன் ஏற்கனவே இவ்வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இப்பதிவில் சமண
சமய குடைவரைகளைப் பற்றி காண்போமே…
சமணசமயத்தைச் சார்ந்த 5 குடைவரைகளில் இரண்டு
மட்டுமே அளவில் பெரியதும் இரண்டு தளங்களைக் கொண்டும் காணப்படுகின்றன. மற்ற மூன்று
குடைவரைகள் அளவில் சிறியதாகவும், முகமண்டபம் மற்றும் கருவறையுடன் மட்டுமே
காணப்படுகின்றன. தீர்த்தங்கரர் சிற்பத்தொகுதிகள் மண்டப சுவரில் காணப்படுகின்றன.
The
Ellora group of caves consists of 34 caves of which 12 caves belong to
Buddhism, hewed during 500 – 750 CE, 17 Hindu Caves both for Saivam and
Vaishnavam, and hewed between 600 to 870 CE and lastly, the 5 Caves from 30 to 34
belongs to Jainism hewed during 800- to 1000 CE. These Jain caves are located
about a KM away from the Hindu cave No.
29. Of the 5 Caves, details of two important caves are given below. Cave No. 32 is hewed from top to bottom,
similar to Cave No. 16, Kailasanathar Temple.
CAVE 32 & 30
பொயு 10-11 ஆம் நூற்றாண்டைச்
சார்ந்த இக்குடைவரை இருதளங்களாக சமண சமயத்தின் திகம்பர பிரிவுக்காக குடையப்பட்டது.
உள்ளூர் மக்களால் இந்திர சபை என்று அழைக்கப்படுகின்றது. மேலிருந்து கீழாக
கைலாசநாதர் கோயிலைப் போன்று குடையப்பட்டுள்ளது. கருவறை நான்குபுறமும் வாயில்களுடன்,
மண்டபம் போன்று குடையப்பட்டு உள்ளது. இருபுறமும், ஒற்றைக்கல் யானையும்,
மானஸ்தம்பமும் தாய்பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. கருவறையில் மஹாவீரர் சிற்பம்
காணப்படுகின்றது. குடைவரையின் பக்க சுவர்களில் சுபார்ஸ்வநாதர், கோமதீஸ்வரர்,
சங்கநிதி / பத்மநிதி மற்றும் சமண சமயம் சார்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.
இரண்டு தளங்களில்,
தரைத்தளம் முக மண்டபம், கருவறை என்ற அமைப்பில் மகாவீரருக்காக குடையப்பட்டுள்ளது.
பக்க சுவர்களில் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் தொகுப்புகளாக செதுக்கப்பட்டு
உள்ளது. கருவறையில் மஹாவீரர் சிம்மாசனத்தின் மீது அமர்ந்த நிலையில் தலைக்கு மேலே
முக்குடையுடன் காணப்படுகின்றார். இருபுறமும் சாமரதாரிகளும் காட்டப்பட்டுள்ளனர்.
இரண்டாவது தளம் அல்லது
மேல் தளம் பெரிய முக மண்டபம், தூண்களுடன் மஹாமண்டபம், கருவறை என்ற அமைப்பில்
குடையப்பட்டுள்ளது. மண்டபத்தின் பக்க சுவர்களில் செல்வத்தின் அதிபதியாக மதங்கா, வளமையின் சின்னமாக யக்ஷி
அம்பிகா, மஹாவீரர், பார்ஸ்வநாதர், போன்ற சிற்பத்தொகுப்புகளுடன், ஒரு சிற்பக்கூடம்
போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றது. கருவறையின் வாயிலில் துவாரபாலகர்கள் காத்து
நிற்க, கருவறையில் மஹாவீரர் சாமரதாரிகளுடன் காணப்படுகின்றார். பலவிதமான சிற்பங்களுடன்
செதுக்கப்பட்ட தூண்கள் மேலும் மேலும் பார்க்கத் தூண்டுகின்றது.
This is a double-storeyed cave temple
dedicated to the Digambara sect of Jainism, datable to the 10th -11th
Century CE. The temple locally known as Indra-sabha, because of the Matanga
figure, mistakenly identified with Indra. The gateway leads to an open
courtyard, having a monolithic elephant and a huge monolithic pillar. The pillar
with quadruple images on the top represents the glory of the Jain religion in all
four directions. The small hall having an entrance on all four sides houses a quadruple image of Lord Mahavira. The facade wall is also decorated with
sculptures. The walls are full of Suparshvanath, Gomateshwara, Matanga, and
Siddhika sculptures.
The main temple is double-floored.
The ground floor contains a verandah flanked by chapels, a big hall, an
antechamber, and a sanctum. The chapels in the verandah house Lord Mahavira and the
walls are decorated with sculptures of Jain deities. The wall of the hall
is decorated with many panels of Jain deities. Inside the small sanctum
is seen the image of Lord Mahavira seated on a lion's throne, with fly
whisk-bearers on both sides and umbrellas over his head.
The upper floor consists of a big
verandah, pillared hall, and a sanctum. The sidewalls of the verandah have huge
and beautiful sculptures of Matanga (God of wealth) and Ambica (Goddess of
Prosperity). The whole upper floor is termed a sculptural-picture gallery. The
walls are decorated with sculpture and the whole cave was also painted. The
sanctum houses Lord Mahavira and Jain deities guard the door. The most notable
feature of the upper floor is the varied and variegated designs of the pillars
CAVE 33
பொயு 10-11 ஆம் நூற்றாண்டைச்
சார்ந்த இக்குடைவரை இருதளங்களாக சமண சமயத்தின் திகம்பர பிரிவுக்காக குடையப்பட்டது.
இது ஜகன்நாத சபை என்று இங்குள்ள உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றது. இரண்டு தளங்களைக் கொண்ட இக்குடைவரையின்,
கீழ்தளத்தளம், முக மண்டபம், தூண்களுடன் மஹாமண்டபம், இடைநாழி மற்றும் கருவறை என்ற
அமைப்பில் குடையப்பட்டு உள்ளது. முகமண்டபத்தில் செல்வத்தின் அதிபதிகளான மதங்க மற்றும் சித்தைக்கா
எனப்படும் சிறபத்தொகுப்புக்கள்
காணப்படுகின்றன, மஹாமண்டப சுவர்களில் சமணசமய கடவுளர்களான, தீர்த்தங்கரர்
சிற்பத்தொகுதிகள் காணப்படுகின்றன. கருவறையில் மஹாவீரர் சிம்மாசனத்தின் மீது
அமர்ந்து இருக்க இருபுறமும் சாமரதாரிகள் காட்டப்பட்டு உள்ளனர். கருவறையில்
விலைமதிப்புமிக்க பொருள்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சதுர குழி ஒன்றும்
காணப்படுகின்றது. மண்டபத்தூண்களில் காணப்படும் சிற்பங்களின் அழகு மற்றும் நேர்த்தி
சிற்பிகள் அதிக கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டதைக் காட்டுகின்றது.
மேல் தளத்தில்
முகமண்டபமும், பெரிய தூண்களுடன் மஹா மண்டபமும், பின்புறசுவற்றை ஒட்டி கருவறையும்
காணப்படுகின்றது. மண்டப சுவர்களில் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்ட சமண சம
தீர்த்தங்கரர் சிற்பத்தொகுதிகள் காணப்படுகின்றன. மஹாமண்டபத்தில் 12 பெரிய
அலங்காரத்தூண்கள் காணப்படுகின்றன. தீர்த்தங்கரர் ஓவியங்களும் காணப்படுகின்றன.
The cave temple is known as
Jaganatha Sabha or Court of Jagannatha (Lord of the world). Dedicated to the Digambara sect of Jainism, is datable to the 10th -11th centuries CE. The main temple
is double-storied. The lower floor consists of a verandah, a pillared hall, an
antechamber, and a sanctum. The verandah is decorated with sculptures of Matanga (God
of Wealth) and Siddhaika ( Goddess of Prosperity ). While the wall of the hall is sculptured with Jain deities, the sanctum houses Lord Mahavira on a lion throne in a meditation pose. A low door cell on the rear wall and a square hole in the
floor were perhaps for concealing objects of value. The pillar designs are
striking and are distinguished by their perfect finish and meticulous
precision.
The upper floor consists of a
verandah flanked by chapels, a big-pillared hall, and a sanctum on the rear
wall. The upper floor is very beautifully carved and painted. The hall
consisting of twelve decorative pillars is decorated with Tirthankara panels
and paintings, on the walls.
Ref:
1.
Display boards
installed at the caves.
HOW TO REACH
The Ellora Caves is about 30 km from Aurangabad, 103 km from Ajantha,
173 km from Nashik, and 319 km from Mumbai.
Nearest Airport Aurangabad.
Nearest Railway Station is
Mukundwadi.
LOCATION OF THE CAVES:
CLICK HERE
--- OM SHIVAYA NAMA ---
No comments:
Post a Comment