Wednesday, 10 August 2016

Nadai Vaavi , Ayyangarkulam , Kanchipuram District, Tamil Nadu.

Continuation to the previous post……

07th August 2016.
NADAI VAAVI – AYYANGARKULAM, NEAR KANCHIPURAM.
This structure was built during the Vijayanagara period. This has an entrance arch with steps to the mandapam below the ground level. There is an arrangement to drain out the rainwater accumulated from the underground floor. The mandapa Pillars have beautiful reliefs.

Sri Varadaraja Swamy is fond of traveling in and around Kanchipuram to bless his devotees. Every year during Chitra Pournami day ( Full moon day ) Perumal used to visit here. The purchaser will be kept in the underground mandapam for about 5 minutes for pooja. After this Sri Varadaraja Swamy will return back to  Kanchipuram.

LOCATION OF THIS NADAI VAVI: CLICK HERE









--- OM SHIVAYA NAMA---

Sri Varadharaja Perumal Temple / வரதராஜப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம் , Kanchipuram / Vishnu Kanchi, Kanchipuram District, Tamil Nadu - 108 - DIVYA DESAM.

Continuation to the previous post……
 07th August 2016.
This Sri Varadharaja Perumal Temple, at Kanchipuram ( Vishnu Kanchi a part of Kanchipuram ) is one of the 108 Divya Desams of Maha Vishnu. This place is also called Thirukachi, Athigiri, Kovil, and Vezhamalai.





Sri Varadharaja Perumal Temple, mangalasasanam was done by Thirumangai Alwar, Bhoothathalwar and Peyalwar.

கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள்
நச்சிப் பாடகத்துள்,

எல்லா வுலகும் வணங்க விருந்த

அம்மான், இலங்கைக்கோன்
வல்லா ளாகம் வில்லால் முனிந்த

எந்தை, விபீடணற்கு

நல்லா னுடைய நாமம் சொல்லில்

நமோநா ராயணமே 

…. திருமங்கை ஆழ்வார் ( 1541 )
சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், - உறைந்ததுவும்,
வேங்கடமும் வெகாவும் வேளுக்கைப் பாடியுமே,
தாம்கடவார் தண்டுழா யார்.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி -(2307 )
என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்
ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்
ஆழியான் அத்தியூ ரான்.
….. பூதத்தாழ்வார் ( 2276 )
Moolavar : Sri Varadharaja Perumal, Athi Varadar, Dewarajaswamy
Thayar    : Sri Perundevi Thayar.

Some of the important features of this temple are …
The main sanctum faces west with a 130 feet 7 tier Rajagopuram. The main sanctum is called as hill, Athigiri, since Moolavar is on an elevated level of 10 meters with 24 steps. The Moolavar has a beautiful smiling face. The Utsavar is in the glass mandapam with fire wound scars on his face. 

There is another Devarajaswamy idol made of Athi wood kept in a silver box in the temple tank Ananthasaras mandapam. Pooja will be performed once in 40 years. During the Muslim invasion, the Utsavar was sent to Udayarpalayam, near Trichy, and later brought back with great difficulty. 

Thayar is in a separate temple and the vimana is called Kalyana Kotti vimanam. There is a Malayala Nachiyar sannidhi presumably built during the 14th century by Chera Kings.

 Nayak Period paintings  
  Nayak Period paintings  
Sri Varadarajaswamy on Garudalwar

ARCHITECTURE
The Vimana under the Moolavar is called Punyakoti Vimana, since if you do a Punyam it will grow Kodi ( crore ) times. The Itsavar is in the glass mandapam with fire wound scars on his face. It was said that the scars are due to, Perumal coming from the fire of Yagna performed by Brahma.

The temple has three prakaras, 32 sannadhis, 19 vimanas and a 389 pillared mandapas. There is also a 100 lion-faced pillared mandapam with sculptures associated with the epic Mahabharata and Ramayana. This was constructed during the Vijayanagara period. The hanging chains sculpted out of single rock stone, are worth watching. Nayaka period Painting are in the mukha mandapam ceiling.  







Hanging chain carved out of single stone 

HISTORY AND INSCRIPTIONS
காஞ்சிபுரம், தொண்டை மண்டலத்தின் நிர்வாகப் பிரிவுத் தலைமையிடமாகத் திகழ்ந்ததை சங்க இலக்கிய நூல்கள் மற்றும் இப்பகுதி கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்நகரம் கச்சி, கச்சிப்பேடு, காஞ்சி, காஞ்சிநகர், காஞ்சி மாநகர் என்ற பல்வேறு பெயர்களால் சுட்டப்பட்டுள்ளது. சங்க இலக்கிய நூல்கள் இந்நகரினை 'கச்சி' என்றழைப்பதே மிகப் பழமையானதாகும். இதன் பின்னர் 'காஞ்சி' என்ற பெயர் பெற்றது. 'காஞ்சி' மரம் சூழ்ந்த இடமாதலால் இப்பெயர் பெற்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வைணவ காஞ்சிப் பகுதி சின்னகாஞ்சிபுரம் என்றும், சிவ காஞ்சி பெரிய காஞ்சிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அருளாளப் பெருமாள் கோயில் அமைந்துள்ள வைணவக் காஞ்சி, காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியாகவும், இப்பகுதியினை அத்தியூர் மற்றும் திருஅத்தியூர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டதை இப்பகுதி கல்வெட்டுகள் பகர்கின்றன. 'அத்தி' மரங்கள் நிறைந்திருந்த பகுதி என்பதால் 'அத்தியூர்' என்ற பெயர் பெற்றது. அத்தியூரில் உள்ள குன்றுப் பகுதியில் தான் அருளாளப் பெருமாள் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே 'அத்திகிரி' என்றழைக்கப்பட்ட இவ்வூர் 'ஹஸ்திகிரி' 'ஹஸ்திபுர' என்று வடமொழிப்படுத்தப்பட்டது. 'யானை மலை' 'யானை நகரம்' என்பது இவற்றின் பொருள்களாகும். இக்கோயில் இறைவனை 'அத்தியூர் ஆழ்வார்', 'அத்தியூர் நின்றருளிய அருளாளப் பெருமாள், 'அத்திவரதர்' என்ற பெயர்களால் அழைக்கப்பட்டதை இக்கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இக்கோயில் இறைவனைப் பற்றிய முதல் குறிப்பு பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்களான பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் முதல் மூன்று ஆழ்வார்களான ஆகிய இம்மூவரில் பூதத்தாழ்வார் பாடிய 'திருவந்தாதி'யில் காணப்படுகிறது. எனவே பல்லவர் காலத்தில் 'அத்தியூர் அருளாளப் பெருமாள்' கோயில் இருந்துள்ளதை அறிய முடிகிறது. அக்கோயில் எவ்வகையில் அமைக்கப்பட்டிருந்ததை அறிந்து கொள்ள இயலவில்லை ஏனெனில் அக்கால கட்டப்பகுதிகள் இங்கு காணப்படவில்லை. ஆனால் பல்லவர் கால கட்டட அமைதியுடன் கூடிய மணற்கல்லால் ஆன இரு தூண்கள் குளத்தின் உள்ளிருந்தும் சுதர்சன சன்னதியின் அருகிலிந்தும் கண்டறியப்பட்டன. இத்தூண்கள் மட்டுமே பல்லவர்கால கோயிலின் எச்சங்களாக காணக்  கிடைக்கின்றன.

இக்கோயிலில் மொத்தம் 360 கல்வெட்டுகள் தமிழக அரசு தொல்லியல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளில் காலத்தால் முந்தையது முதலாம் இராசாதிராசனின் 32-ஆம் ஆட்சியாண்டு ( பொயு. 1050) கல்வெட்டாகும். இக்கோயில் அருளாளப்பெருமாள் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் பொயு 11-ஆம் நூற்றாண்டு சோழர் காலக் கட்டடக் கலைப் பாணியில் உள்ளது. எனவே இக்கோயில் பொயு.1050- ஆம் ஆண்டுக்கு முன்னர் சோழர் காலத்தில் இக்கோயில் கருவறை அர்த்தமண்டபம் ஆகியவை முதலில் கருங்கற்களால் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதன் பின்னர் ஏனைய திருச்சுற்றுகள், சன்னதிகள், மண்டபங்கள் விரிவாக்கம் அடைந்துள்ளதை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகின்றது.

இக்கோயிலில் பதிவு செய்யப்பட்ட 360 கல்வெட்டுகள், சோழர், பாண்டியர், ஹொய்சளர், காகதீயர்,  விஜயநகரத்தார் மற்றும், இவ்வரசுகளின் காலத்திலிருந்த சிற்றரசுகளான தெலுங்குச் சோழர், காடவராயர், சம்புவராயர் ஆகியோரின் பங்களிப்பை பதிவு செய்கின்றன. மற்றும் டெல்லி சுல்தானின் நீமேலன்மையும் கல்வெட்டாக காணப்படுகின்றது. சோழர் மற்றும் பாண்டியர் காலத்தைச் சார்ந்த பெரும்பான்மையான கல்வெட்டுக்கள், சந்தி விளக்கு மற்றும் நுந்தாவிளக்கு எரிக்க தானமளிக்கப்பட்ட  அறக்கொடைகளையும் அதற்கு அளிக்கப்பட்ட தானங்களைப் பற்றியும் பதிவு செய்கின்றன. விஜயநகரத்தார் காலத்தைச் சார்ந்த கல்வெட்டுக்கள் கோயிலின் விரிவாக்கம், தினசரி மற்றும் ஆண்டு முழுதும் நடத்தப்பட்ட பூஜைகள், திருவிழாக்கள், அச்சமயங்களில் இறைவனுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியங்கள், அவற்றிற்கான மூலப்பொருட்கள் என விரிவாக கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகின்றது. கிருஷ்ணதேவராயரின் காலத்தில் புண்ணியகோடி மற்றும் கல்யான கோடி விமானங்கள் தங்கத்தக்கடுளால் வேயப்பட்டதையும் அதற்குபின்பு விமான்ங்கள் பழுது பார்கப்பட்டதையும் பாடல் கல்வெட்டுக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் சிறப்புக்குரியதாகும். வைகளுள் சில கல்வெட்டுகள் மட்டுமே கீழே காண்போம். 

முதலாம் இராசாதிராசன் ( பொயு. 1018-1054 )
முதலாம் இராசேந்திரனின் மூத்த மகனான முதலாம் இராசாதிராசனின் 32- ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ( பொயு-1050 ) அருளாளப் பெருமாள் கோயில் நரசிம்மசாமி சன்னதி உட்புற வலதுச் சுவரில் இடம் பெற்றுள்ளது. அருமொழிதேவ வளநாட்டு கொழவைமங்கலத்து ஊர்த்தலைவன் அய்யன் செட்டியார் மகள் இராஜமாணிக்கத்தார் எனும் ஜெயங்கொண்ட சோழ வீர நுளம்ப மகாதேவியார் என்பவள் திருவத்தியூர் ஆழ்வாருக்கு காது ஆபரணம் ஒன்றும், விளக்கெரிக்க ஆடுகளும் தானமளித்துள்ள செய்தியைப் பதிவு செய்கின்றது.

முதலாம் குலோத்துங்கன் ( பொயு.1070-1120)
முதலாம் குலோத்துங்கனின் 45-ஆம் ஆட்சியாண்டில் சோழ மண்டலத்து விருதராஜபயங்கர வளநாட்டு மண்ணிநாட்டு வங்க முழையூர் உடையான் மும்முடிச் சோழன் எனும் அனுக்கப்பல்லவரையன் என்பவன் காலைச் சந்தி வழிபாட்டிற்கு தானமளித்துள்ளான். கோயில் மடைப்பள்ளி, மண்டபம், திருச்சுற்று மதில் ஆகியவற்றை முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவன் 'நரலோகவீரன்' ஏற்படுத்தியுள்ள செய்தியைப் பதிவு செய்கின்றது.

விக்கிரம சோழன் ( பொயு. 1118-1135 )
இம்மன்னனின் 8-ஆம் ஆட்சியாண்டில் ( பொயு. 1126 ) திருவிந்தளூர் நாட்டு தென் கஞ்சாறு என்னும் ஊரைச் சார்ந்த கஞ்சரம் வசிஷ்டன் குமாரசுவாமி என்பவன் அருளாளப்பெருமாள் கோயில் வளாகத்தில் ஸ்ரீரங்கசாயி எனும் விக்கிரம சோழ விண்ணகர் பெருமாள் இறைவனுக்கு நீராட்டுதலுக்காக வேண்டி 197½ கழஞ்சு பொன் அளித்து பாத்திரம் செய்தளித்திட தானமளித்துள்ளான்.

பொய்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகிய இரு வைணவ பெரியார்கள் பிறந்தது கேட்டை நாளாகும். வருடத்தில் வரும் 13 கேட்டை நாளுக்கும் வழிபாடு நடத்திட 750 கலம் நெல் தானமளித்து அந்நெல்லிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு இவ்வழிபாடு நடத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தானத்தை சோழ மண்டலத்து விருதராஜ பயங்கர வளநாட்டு மண்ணிநாட்டு வங்க முழையூர் என்ற ஊரைச் சேர்ந்த வேங்கடன் ஆதித்ததேவன் எனும் வங்கத்தரையன் என்பவன் அளித்துள்ளான். இம்மன்னன் தன்னுடைய பெயரில் எழுப்பியுள்ள விக்கிரமச் சோழ விண்ணகர் ஆழ்வார் சன்னதியில் தனது 11-ஆம் ஆட்சியாண்டில் விக்கிரம சோழ விண்ணகர் ஆழ்வார் திருவுருவினை எழுந்தருளிவந்துள்ளான். மேலும் இவ்விறைவன் வழிபாட்டிற்காக வேண்டி காலியூர் கோட்டம், காலியூர் நாட்டிலிருந்த வில்வலம் என்னும் ஊரின் பெயரை தனது பெயரால் அகளங்கநல்லூர் என்று பெயர் மாற்றம் செய்து தானமளித்துள்ளான்.

கிருஷ்ணதேவராயரின் பொயு 1524 ஆண்டு, அருளாளப்பெருமாள் கோயில் 'பாறை', கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 3, எண் 199 ) பேரருளாளார்க்கு தோசை அமுது செய்ய வேண்டி 3000 பணம் அளித்து இதிலிருந்து நிலம் வாங்கி தோசைப்பட்டியாக மன்னர் கிருஷ்ணதேவராயரால் அளிக்கப்பட்டுள்ளது. தோசைக்கு வேண்டிய அரிசி உளுந்து,  அளவுகளும் சொல்லப்பட்டு நாளொன்றுக்கு 51 தோசை என்பதும் குறிக்கப்பட்டுள்ளது கோயில் பண்டாரத்தார்க்குக் கல்வெட்டு வெட்டிக்கொடுக்கப்பட்டது  என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

தோசை கல்வெட்டு

மன்னர் பெயர் அறியப்படாத பொயு 16- 17 ஆம் நூற்றாண்டு அருளாளப்பெருமாள் கோயில் 'பாறை', வடக்குச் சுவரில் உள்ள கிரந்த கல்வெட்டு ( தொகுதி 3, எண் 222 ), கமலாநந்தன தாதய்யர் என்பவர் கோயிலுக்குத் தேவையான வாகனங்களைச் செய்தளித்துள்ளார். மேலும் கல்யாணகோடி, புண்யகோடி விமானங்களில் தடித்த பொன் தகடுகளைப் பதித்துள்ளார். 'தேவராஜார்ணவ' என்ற பெயரில் குளம் ஒன்றையும் வெட்டியுள்ளார். மண்டபம், கோபுரம், தோப்பு, பிரகாரம் முதலியவைகளும் நிர்மாணித்துள்ளார் என்ற செய்திகள் சமஸ்கிருத ஸ்லோகமாகச் சொல்லப்பட்டுள்ளது. 

கிருஷ்ணதேவராய மகாராயரின் பொயு 1514 ஆம் ஆண்டு, அருளாளப்பெருமாள் கோயில் 'பாறை', வடக்குச் சுவரில் உள்ள கிரந்த கல்வெட்டு ( தொகுதி 3, எண் 224 ), கிருஷ்ணதேவராயர் தனது தந்தை நரசநாயக்க உடையார், தாய் நாகாஜி அம்மன், ஆகியோரின் நினைவாக புண்யகோடி விமானத்திற்கு அபரஞ்சிப் பொன் ( தூயபொன் ) பூசிவித்தசெய்தி, கிருஷ்ணதேவராயரின் வம்சாவழி, அவரது திருப்பணிகள், தர்மச் செயல்கள் ஆகியவை வடமொழியில் சுலோகங்களாக உள்ளன.

ஸ்ரீரங்கதேவ மகாராயரின் பொயு 1571 ஆண்டு ( தொகுதி 3, எண் 201 ) அருளாளப்பெருமாள் கோயில் 'பாறை', கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, அடப்பம் சின்னச் செவ்வப்ப நாயக்கர் மகன் அச்சுதப்ப நாயக்கர் நலன் வேண்டி சோழ மண்டலத்து திருச்சம்பள்ளி சீர்மையில் உள்ள கழனிவாசல், தென்கரை வடைகுடி, வளையச்சேரி, இராசநாராயணன், சிலசிந்தாமணி ஆகிய ஐந்து கிராமங்கள் திருவத்தியூர் நின்றருளிய அருளாளப் பெருமாள் கோயிலுக்கு கொடையாக அளிக்கப்பட்டுள்ளன அதனைப் பெற்றுக்கொண்ட பண்டாரத்தார் வைகாசித் திருவிழா நடத்தவும் அதற்கான பொருள்கள், செலவு, ஊதியம் ஆகியவற்றைப் பட்டியலிட்டுக் கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர். படையல்களாக அப்பம், சுகியன், தோசை, வடை, இட்டலி முதலியவையும் அபிஷேகப் பொருள்களாக தேங்காய், இளநீர், சந்தனம், பன்னீர், கஸ்தூரி, குங்குமப்பூ, ஏலக்காய் முதலியவையும், வீதி உலாவின் போது தங்கிச் செல்லும் மண்டபங்களின் பெயர்களும் ஊழியர்களும் இதனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசரின் பெயர் அறியப்படாத பொயு 16 ஆம் நூற்றாண்டு அருளாளப் பெருமாள் கோயில் தாயார் சன்னதி தெற்கு சுவரில்  வெண்பா வடிவில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 3, எண் 293, ), கிருஷ்ணதேவராயரால் எழுப்பப்பட்ட புண்ணியகோடி விமானம் பழுதடைந்தது. ததாசாரியார் அவர்களால் சீர்படுத்தி மீண்டும் பொன்னால் பூச்சு பூசப்பட்டது. கல்யாணகோடி விமானமும் பொன்பூச்சு பூசப்பட்டது

பாடல்
எண்ணியகோடி பலன் செருமிம்மமத் தாத்தயங்கார்
புண்ணியகோடி திருபணி மாலைப் பணிநடுவே
நண்ணியகோடி பசும் பொன்னிழைத் தொருநாயகமாய்
புண்ணியகோடி விமானம் விளக்குப் பூதலத்தே

கிருஷ்ண தேவராயரின்  ஆட்சி ஆண்டு தெரியாத, அருளாளப் பெருமாள் கோயில் வெளிப்புறக் கோபுரம் நுழைவுவாயில் வலதுபுறச் சுவரில் உள்ள பாடல் கல்வெட்டு ( தொகுதி 3, எண் 305 ), கிருஷ்ணராயர் புண்ணிய கோடி விமானத்தில் பொன் வேய்ந்ததை சிறப்பித்துக் கூறுகிறது.

கல்வெட்டு :
1.திண்ணிய கோடி வைய்
2. வேல் சுரவூராயன் சிறந்த
3. செங்கோல் நண்ணிய
4. கோடி நவகோடி கால் ந
5. யந்து நிற்ப வெண்ணிய
6. கோடி பலத்தாற்றிருப்பணி
7. யெம்பெருமான் புண்ணிய
8. கோடி பொன் மேய்ந்தானுல
9. கிற் புகழ் நிற்கவே

பாடல் :
திண்ணியகோடி வைய்வேல் கிருஷ்ணராயன் சிறந்தசெங்கோல்
நண்ணியகோடி நவகோடிகால் நயந்து நிற்ப
வெண்ணியகோடி பலத்தாற் றிருப்பணி யெம்பெருமான்
புண்ணியகோடி பொன்மேய்ந்தானுலகிற் புகழ்நிற்கவே.

அரசரின் பெயர் தெரியாத பொயு 1614 ஆம் ஆண்டு அருளாளப்பெருமாள் கோயில் தாயார் சன்னதி தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 3, எண் 294 ), புண்யகோடி மற்றும் கல்யாணகோடி விமானங்கள் குடமுழுக்கு நடைபெற்றதைத் தெரிவிக்கிறது.

Ref:
காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி - 2 மற்றும் 3. வரதராஜ பெருமாள் கோயில் கல்வெட்டுகள் தொகுதி 1 மற்றும் 2. 

கல்வெட்டுக்களின் தொடர்ச்சி.. இப்பதிவின் கடைசியில்... 




Donors with his wives 
LEGENDS
As per legend when Brahma performed yagna or the ashwametha yagam Saraswati in the form of Vegavathy river tried to destroy the yagna. Sri Devarajaswamy emerged as thousands of suns and destroyed the demons, Sarabam, etc., and saved the Yagna and permanently stayed here.

Above Moolavar sanctum, there is another floor. The ceiling of this floor has Silver & Golden Lizards and sun and Moon reliefs. It is believed that Indra was installed after he was relieved from the curse of Goddess Saraswathi.  The walls have the Nayak-period paintings.


TEMPLE TIMINGS:
The temple is kept open for darshan from 06.30 hrs to 12.00 hrs and 16.00 hrs to 21.00 hrs.

HOW TO REACH :
The temple is very near to Kanchipuram Bus Stand and autos are available from there.

LOCATION OF THE TEMPLE : CLICK HERE 
 



 

 Glass mandapam where Utsavars is being kept

 Thayar Sannadhi Vimanam 



Inscriptions Continued ……
இரண்டாம் இராசராசன் ( பொயு. 1146-1163 )
இரண்டாம் இராசராசனின்  22-ஆம் ஆட்சியாண்டில் கூத்தனூரைச் சேர்ந்த சேட்டலூர் பொம்மன் என்பவரின் மகள் பேரருளாளன் கொற்றி என்பவள் தன்னுடைய ஆபரணங்களை விற்று 100 குழிநிலத்தினை வாங்கி, தன்னுடைய வாழ்நாள் மறைவிற்கு பின்னர் அந்நிலத்தினை அருளாளப் பெருமாள் கோயிலுக்கு வழங்கிட வழிவகைச் செய்துள்ளான்.

இரண்டாம் இராசாதிராசன் ( பொயு. 1163-1178 )
இம்மன்னனின் கல்வெட்டு ஒன்று மட்டுமே இரண்டாம் திருச்சுற்று வடபுறச் சுவரில் காணப்படுகிறது. இக்கல்வெட்டு இம்மன்னனின் 14-ஆம் (கி.பி. 1177) ஆட்சியாண்டைச் சார்ந்தது . இக்கல்வெட்டில் கங்கமண்டலத்து மகாமண்டலிகன் சோழ மாராசன் கட்டி நுளம்பன் புசபலவீரன் அகோமல்லரசன் திருநந்தவனம் அமைக்க நிலம் வாங்கித் தானமளித்துள்ளச் செய்தியைக் கூறுகிறது.

மூன்றாம் குலோத்துங்கன் ( பொயு.1178-1218 )
மூன்றாம் குலோத்துங்கனின் 35-ஆம் ஆட்சியாண்டில் ( பொயு 1134 ) அருளாளப் பெருமாள் கோயில் இரண்டாம் திருச்சுற்றில் அமைந்துள்ள ஆனந்தாழ்வார் சன்னிதியை கங்கநாட்டை ஆட்சிசெய்த சிற்றரசன் சீயகங்கன் என்பவன் கட்டியச் செய்தியை தருகிறது. இவனை கங்க குலத்தினன் என்றும், குவளாலபுர பரமேஸ்வரன் என்றும் ( குவளாலபுரம் என்பது தற்போதைய 'கோலார்' பகுதியாகும் ) கல்வெட்டு கூறுகின்றது.  இவனது பெயரில் "அமராபரணம்' சந்தி என்று ஏற்படுத்தியுள்ளதையும் இங்குள்ள கல்வெட்டொன்று தெரிவிக்கிறது.

மூன்றாம் இராசராசன் ( பொயு .1216-1256)
இம்மன்னனின் கல்வெட்டுகள் இக்கோயிலில் அதிகம் காணப்படுகின்றன. அதாவது 84 கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. இம்மன்னனின் காலத்தில் தொண்டைமண்டலப்பகுதி காடவராயர், தெலுங்குச் சோழர், சம்புவராயர், வாணகோவராயர் ஆகிய சிற்றரசுகள் சோழர் ஆட்சியின் கீழ்கட்டுப்பட்டு வரி செலுத்திவந்துள்ளனர். ஏனெனில் இவர்களின் கல்வெட்டுகள் சோழ மன்னன் இராசராசனது பெயரையும் ஆட்சியாண்டையும் குறிப்பிட்டுள்ளனர்.

கீழைக் கங்கர்
கீழைக் கங்க மன்னன் தனது 19-ஆம் ஆட்சியாண்டில் ( பொயு. 1230 ) இவனின் தேவியான சோமலாதேவி மகாதேவி என்பவள் உடையகாமம் என்ற ஊரினை அருளாளப் பெருமாள் வழிபாட்டிற்கு கொடையாக அளித்துள்ளாள். கலிங்க மன்னன் அணியங்க பீமதேவராகுதன் விளக்கெரிக்க மாடுகள் தானமளித்துள்ளான்.

போசளர்கள்
போசள மன்னன் விஷ்ணுவர்த்தன வீர நரசிம்மனின் அமைச்சர் அம்மண தண்டநாயக்கர், படைத்தளபதி மல்ல தண்டநாயக்கர் மகன் தண்டின கோப ஜெகதொப்பகண்ட கொப்பய தண்டநாயக்கன், வீர சோமேஸ்வர தேவராசாவின் அமைச்சர் போலாழ்வி தண்டநாயக்கன், போசளமன்னனின் படைத்தளபதி தண்டினகோப மாதய்ய தண்டநாயக்கர், படைத்தளபதி தண்டின கோபனின் சகோதரர்களான மல்ல மாதவ்யதண்ட நாயக்கன், கேசவ நாயக்கன், கொப்பய தண்ட நாயக்கர் ஆகியோர் இக்கோயிலுக்குத் தானமளித்துள்ளனர். போசள மன்னன் இரண்டாம் சோமேஸ்வரனின் பட்டத்து அரசி தேவிகா என்பவள் சாளுக்கிய வம்சத்தைச் சார்ந்தவள் என்று இம்மன்னனின் கல்வெட்டு ஒன்று பகர்கிறது.

தெலுங்குச் சோழர்
மூன்றாம் இராசராசனின் 5-ஆம் ஆட்சியாண்டில் நெல்லூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த தெலுங்குச் சோழ சிற்றரசன் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் எனும் எறசித்தரசன் என்பவனின் அமைச்சர் வயிரப்பநாயக்கன் என்பவன் தனது தாயார் காமசானியார் உடல் நலம் பெற வேண்டி 200 குழிநிலத்தினை திருநந்தவனமாக செய்வதற்கு தானமளித்துள்ளான். கண்டகோபாலருக்கு இருந்த தேவியருள் ஒருவர் கேத்தமல தேவியார் என்பதை கல்வெட்டு எண்-51 தெரிவிக்கிறது.

மதுராந்தகப் பொத்தப்பிச் சோழ மனுமசித்தரசன் திருக்காளத்திதேவன் எனும் கண்ட கோபாலன் அளித்த தானங்கள் பற்றி கூறும் கல்வெட்டுகள் மட்டும் 30 எண்ணிக்கைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவனின் படைத்தளபதி காமிநாயக்கன், தியாகசமுத்திர பட்டயார், நுளப்பியாற்றுழான் நாராயண நம்பி தாமோதரன் ஆகியோரும் அருளாளப் பெருமாள் கோயிலுக்கு கொடையளித்துள்ளனர். அல்லுந்திக்க மகாராஜ கண்ட கோபாலனின் 2, 3, 5, 6, 7 ஆகிய ஆட்சியாண்டுகளைச் சார்ந்த எட்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் இடம்பெற்றுள்ளன.

பிற்காலப் பல்லவர்
பிற்காலப் பல்லவர்களின் குறிப்பிடத்தக்கவன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் ஆவான். அவனின் கல்வெட்டுகள் 6 எண்ணிக்கைகள் இடம்பெற்றுள்ளன. நெல்லூர் நாட்டு மண்டகத் தளியைச் சேர்ந்த சந்திர செட்டி விளக்கெரிக்க 44 மாடுகள் தானமளித்துள்ளார். மலைமண்டலத்து அரசியல் அதிகாரியான நாராயணன் சங்கரன் என்பவன் தானமளித்துள்ளான்.
அருளாளப்பெருமாள் கோயில் கோபுரத்தினை சீர் செய்ய வேண்டி சோமங்கலம் கிராமத்தின் 'அரிப்பாடிகாவல்' வரி தவிர அனைத்து வரிகளையும் கடகன் எனும் நீலகங்கரையன் வழங்கிட கோப்பெருஞ்சிங்கனின் 15-ஆம் ஆட்சியாண்டில் ஏற்பாடு செய்துள்ளான். நெல்லூர் அன்னல தேவனின் மைத்துணி செவ்வக்கன் என்பவள் 15 நெல்லூர் மாடை அளித்து விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளாள்.

பிற்காலப் பாண்டியர்
சோழப்பேரரசுக்கு பின்னர் ஏற்பட்ட பிற்காலப் பாண்டியரில் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.


தொண்டைமண்டலப்பகுதி பிற்காலச் சோழர் காலத்தில், இப்பகுதியில் இருந்த சிற்றரசுகளானபிற்காலப்பல்லவர்சம்புவராயர்,  காடவராயர்வாணகோவராயர், தெலுங்குச் சோழர் ஆகியோரின் கட்டுப்பாட்டிலே இருந்துள்ளது. பிற்காலச் சோழர் காலக் கல்வெட்டுகளில் அச்சிற்றரசர்கள் அளித்துள்ள கொடைகள் பற்றிய கல்வெட்டுகளே இதற்குச்சான்றாகும்.

முதலாம் குலோத்துங்கனின் காலத்தைச் சார்ந்த, அருளாளப்பெருமாள் கோயில் பாறை வடக்குச்சுவரில் உள்ள கிரந்தக்கல்வெட்டு, மண்டபம், திருச்சுற்று மதில், தங்க ஆபரணங்கள், பத்து நந்தாவிளக்கு மற்றும் திருநந்தவனம் அமைக்க நிலம் ஆகியவை கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. தொண்டை மண்டலத்து மண்விற்கோட்டத்து மணவில் என்னும் ஊரைச் சேர்ந்தவன் நரலோகவீரன். இவன் தில்லை மற்றும் திருவதிகை கோயில்களில் பலதிருப்பணிகளை செய்துள்ளான். தேவாரப்பதிகத்தினைச் செப்பேடுகளில் எழுதுவித்து தில்லையில் வைத்தது இவனது சிறப்புப் பணியாகும்.

விக்ரம சோழனின் 11 ஆவது ஆட்சி ஆண்டு ( பொயு 1129 ), அருளாளப்பெருமாள் கோயில் இரண்டாம் திருச்சுற்றிலுள்ள கருமாணிக்க வரதர் சன்னதியின் உட்புறம் உள்ள  கல்வெட்டு ( தொகுதி 2, எண் 14 ), கருமாணிக்க வரதர் கோயில், விக்கிரமச்சோழ விண்ணகர் என்று அவனது பெயரில் இக்கோயில் எடுக்கப்பட்து   மேலும் இக்கோயிலில் விண்ணகராழ்வார் திருவுருவினை எழுத்தருவித்து அதன் வழிபாட்டிற்காக கலியூர் கோட்டத்து காலியூர் நாட்டு வில்வம் எனும் ஊரின் பழம்பெயரை மாற்றி அகளங்க நல்லூர் என்று பெயரிட்டு அவ்வூரினை தனமளித்துள்ள செய்தியைப் பதிவு செய்கின்றது. 

தெலுங்கு சோழர் தம்மசித்தி என்பவரின் பொயு 1205, ஆண்டு, அருளாளப்பெருமாள் கோயில் பாறை வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 2, எண் 38 ), கண்ட கோபாலன், ஸ்ரீதேவி ஆகியோரது மகனும், தெலுங்குச் சோழ மன்னன் மனும சித்தியின் தம்பியுமான தம்முசித்தி என்பவன் நெல்லூரில் முடிசூட்டிக் கொண்டபோது பண்டராஷ்ட்ராத்தின் முதன்மையான கிராமம் முட்டியம்பாக்கத்தை ( ஹஸ்திசைல  அத்திகிரி ) இறைவனுக்கு தானமளித்துள்ளதைப் பதிவு செய்கின்றது.

திரிபுவன வீரதேவர் மூன்றாம் குலோத்துங்கன்னின்  ) 25 ஆவது ஆட்சி ஆண்டு ( பொயு 1213 ), அருளாளப்பெருமாள் கோயில் பாறை தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 2 எண் 44 ),  இறை பணி செய்யும் திரிபுவனவீரந் பதியிலார் இரு நூறு நபர்களுக்கு வீட்டு மனையும், நிலமும் வழங்கிட வேண்டுமென்று இக்கோயில் வைணவக் கண்காணி செய்பவர்களுக்கு, மன்னரின் நேரடி ஆணை வழங்கியுள்ளதைப் பதிவு செய்கின்றது.

மூன்றாம் இராசராசனின் 25 ஆவது ஆட்சி ஆண்டு ( பொயு 1241 ),  அபிஷேக மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள இரு கல்வெட்டுக்கள் ( தொகுதி 2, எண் 116 & 117  ) காஞ்சிபுரம் மும்முடிசோழப் பெருந்தெரு, அருமொழித்தேவப் பெருந்தெரு இராசராசப்பெருந்தெரு, நிகரிலிச் சோழப் பெருந்தெரு எனும் கண்டகோபாலன் தெரு, கூறை வாணிகப் பெருந்தெரு ஆகிய பெருந்தெருக்களில் உள்ள  வியாபாரிகள், சாலியர் ( துணி வியாபாரம் செய்பவர்கள்) இத்தெருவில் குடியிருப்போர் ஆகியோர் செலுத்தும் வரிகளில் தேவதானம், திருவிடையாட்டம், பள்ளிச்சந்தம், பௌத்த பள்ளிச்சந்தம், ஆகிய வரிகள் தவிர்த்து ஏனைய வரிகள் பெருமாளுக்கு சாத்தப்படும் ஆடைக்களுக்காக வேண்டி இவ்வரியினை முதலீடாக கொண்டு செய்யப்பட வேண்டும் என்று நேரடி ஆணை வழங்கப்பட்டது. மேலும் இத்தெருக்களில் ஏற்றி இறக்கும் சரக்குகள் மீது கண்டகோபாலன் இலச்சினை பொறிக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளதைப் பதிவு செய்கின்றது.

போசாள மன்னன் இரண்டாம் சோமேஸ்வரனின், அபிஷேக மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 2, எண் 131 ), போசாள மன்னனின் முதல் பட்டத்தரசி தேவிகா என்பவள் சாளுக்கிய வம்சத்தைச் சார்ந்தவள் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

அல்லுன் திருக்காளத்திதேவ மகாராஜா கண்டகோபாலனின்,  இரண்டாம் திருச்சுற்று வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 2, எண் 176 ),  திருவத்தியூர் னாயனார் உகன்தருளிவிக்கிற பிள்ளை கோயிலை எடுப்பிக்கவும், அகரம் ஏற்படுத்தவும் திருநந்தவனம் அமைக்கவும் திருவத்தியூர் அகரம் கண்ட கோபாலபுரத்திலுள்ள 3500 குழி நிலம், மனை, வீடு ஆகியவற்றை தானமாக அளித்த செய்தியைப் பதிவு செய்கின்றது.

சுந்தர பாண்டியரின் 14 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1342 ),   அருளாளப்பெருமாள் கோயில் பாறையைச் சுற்றியுள்ளத் திருச்சுற்று கிழக்கு பக்கம் கீழ்ப்பகுதியில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 2, எண் 178 ), பாண்டிமண்டலத்து சேரன்மகாதேவியைச் சேர்ந்த மதுசூதனன் ஆபத்சகாயன் எனும் இராமசந்திர தேவன் என்பவன் திருவத்தியூர் அருளாளநாதனுக்கு தினமும் மூன்று திருமாலைகள் சார்த்துவதற்காக இக்கோயிலைச் சார்ந்த பச்சைவர்ண தாதரிடம் எண்பது முளைப்பணம் கொடுத்து வெண்குன்றக் கோட்டத்து அனுக்காவூர் நாட்டு சளுக்கிபற்றில் கம்பன்தாங்கல் என்கிற ஆபத்சகாயநல்லூர் கிராமத்தில் நானூறு குழி நிலத்தினை வாங்கி திருநந்தவனம் செய்ய ஏற்பாடு செய்துள்ள செய்தியைப் பதிவு செய்கின்றது. இந்நிலத்தினை அளக்க 'நாட்டுக்கோல்'/ கண்டரகண்டன் கோல் என்னும் அளவுகோலால் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இக்கோல் அளவு கல்வெட்டின் கீழே பொறிக்கப்பட்டுள்ளது.

கண்டரகண்டன் கோல்

ஸ்ரீவீரவேங்கடபதி மகாராயரின் பொயு 1582 ஆண்டு, அருளாளப்பெருமாள் கோயில் 'பாறை', கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 3, எண் 202 ), எட்டூர் திருமலை தாதாசாரியார் அருளாளப் பெருமாள் அக்னிஷ்டோயாகம் செய்து யாக சாலைக்கு எழுந்தருளவும் ஆடிமாத திருவிழாவுக்கும் புத்தாரப்பட்டு என்ற கிராம வருவாய் 350 பொன்னும் ஆவணி, புரட்டாசி, தை, மாசி, வைகாசி மற்றும் சித்திரை வசந்த தோப்புத் திருநாளுக்காக அதிகப் படியாக குன்றம் என்ற கிராம வருவாய் 350 பொன்னும் ஆக 700 பொன் வருவாய் கொடுத்துள்ளார். இப்பொன்னின் வட்டியை கொண்டு  இத்திருவிழாக்களை முறையாக நடத்த  கோயில் பண்டாரத்தார் ஒப்புக்கொண்டு இக்கல்வெட்டினை வெட்டிக்கொடுத்துள்ளனர். விழாச் செலவுகள், படையல்கள், ஊதியம் பிற பொருள்கள் பட்டியலிடப்பட்டு ஒவ்வொன்றுக்கும் உரிய பொன் கணக்கிடப்பட்டு பட்டியலாக  இக்கல்வெட்டுள்ளது. அன்றைய உணவு, அபிசேகப் பொருள்கள், வாசனைப் பொருள்கள், பூசைப் பொருள் அறிந்து கொள்ளும் வகையில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது.

ஸ்ரீரங்கதேவமகாராயரின் பொயு 1582 ஆண்டு அருளாளப்பெருமாள் கோயில் 'பாறை', வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 3 எண் 225 ), ஜெயங்கொண்ட சோழமண்டலமான தொண்டைமண்டலத்து படைவீட்டு ராசியத்திலுள்ள நகரியல் சீர்மை ராவுத்தநல்லூர் மற்றும் சந்திரகிரி ராசியத்திலுள்ள செங்கழுநீர்பட்டு சீர்மையிலுள்ள செறுக்கு பெத்துவூர் ஆகிய இரு ஊர்களின் வருவாயிலிருந்து 570 பொன்னினை திருவிழா நாட்களுக்குக் கொடையளித்த செய்தி மற்றும்  பேரருளாளர், அஷ்டபுஜத்தெம்பெருமான், சொன்னவண்ணம் செய்தபெருமாள், பெருந்தேவியார் சேரகுலவல்லி நாச்சியார், மகாலெட்சுமி சூடிக் கொடுத்த நாச்சியார் மற்றும் ஆழ்வார்களுக்கு நடைபெறும் சிறப்பு திருநாட்களின் வழிப்பாட்டிற்காக இப்பணம் கொடையளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, உறயடி விழா, வனபோசனம், தேர்த்திருவிழா, திருத்தோப்புக்கு எழுந்தருளுதல் முதலிய விழாக்களும் அவற்றின் செலவுகளும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.  வேங்கடபதி ராஜாவின் தளவாய் தொப்பூர் திருமலை நாயக்கர் அவர்களும், இக்கோயில் பண்டாரத்தார் மற்றும் கோயில் நிர்வாகியான எட்டூர் திருமலைகுமார தத்தாசாரி அய்யன் ஆகியோரிடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதைப் பதிவு செய்கின்றது.

அச்சுதராயரின் 16 ஆம் நூற்றாண்டு, அருளாளப்பெருமாள் கோயில் திருச்சுற்று வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 3, எண் 239 ) அச்சுதராயரும் அவரது மனைவி வரதாம்பிகா தேவியும் காஞ்சியில்ம் ( முத்து ) முக்தா துலாபாரம் கொடுக்கும் நிகழ்வில் அரசரின் சின்ன மகன் சின்ன வேங்கடாத்திரி பிராமணர்களுக்கு தானம் வழங்கிய செய்தி சமஸ்கிருத ஸ்லோகமாக உள்ளது.

சதாசிவராயரின் பொயு 1558 ஆம் ஆண்டு, அருளாளப்பெருமாள் கோயில் இரண்டாம் திருச்சுற்று கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 3, எண் 250 ), ஆரைவிடாய் ஜிக்கராஜாவின் மகன் ராமராஜா பேரருளாளர் கோயிலில் திருமார்கழித்திருநாள், தைத்திருநாள், ஆழ்வார் திருநாள், திருமுளைத் திருநாள் ஆகிய திருநாள் வழிபாடுகளை நடத்துவதற்கு சில ஊர்களின் வருமானங்களை அளித்துள்ளார். மேலும் இறைவன் திருவீதி உலா வரும் 25 ஏகாதேசி திருநாள்கள், உத்தியான துவாதேசி நாள், திருப்பவுத்தி திருநாள், ஸ்ரீஜயந்தி உறியடி நாட்கள் மகாலட்சுமி திருநாள், வன்னிமர நாள், திருக்கார்த்திகை நாள், பாடிவேட்டை நாள், ஊஞ்சல் திருநாள், வைகாசி வசந்தத்திருநாள் திருப்பளிஓடத் திருநாள், உகாதி தீவளிகை தோப்புத் திருநாள் என மொத்தம் 100 நாட்கள் வழிபாட்டுத் தேவைகளும், அமுதுபடிகளும் செய்யவேண்டி இவ்வூர்களின் வருவாய் தரப்பட்டுள்ளது. இவற்றை நிறைவேற்ற கோயில் கருவூலத்தார் ஒப்புக் கொண்டு அவருக்கு கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளனர்.  திருவிழாக்களின் நடைமுறைகள் தேவையான பொருள்கள், பணியாளர்கள் பற்றிய விவரங்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. ஒரு வருடத்தில் 100 நாட்கள்  விழா நடைபெறுவது பற்றி இக்கல்வெட்டில் சொல்லப்படுவது சிறப்பாகும்.

போசாள அரசர் மூன்றாம் வீரவல்லாளனின் 24 ஆம் நூற்றாண்டு அருளாளப் பெருமாள் கோயில் இரண்டாம் திருச்சுற்று வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 3, எண் 268), மன்னன் அரிஎனவல்லான் பந்தல்கீழ் வீரவல்லாளன் சிம்மாசனத்தில் தனது தேவியர்களுடன் அமர்ந்து, இருந்து சடகோபன் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.     அப்போது சாளுவமங்கு  இராசாவின் அமைச்சர் பொத்தரசனுக்கு பதினெட்டு நாட்டிலே விளைநில வருவாயில்  ஒருபங்கும், அவரது ஆளுகையின் கீழுள்ள ஊர்களில் மாடி வீட்டுக்கு இரண்டு பணமும், கூடவீட்டுக்கு ஒரு பணமும் பெறுவதற்கு அனுமதியளித்துள்ளார்.

அரசரின் பெயர் தெரியாத பொயு 1437 ஆம் ஆண்டு, திருச்சுற்று மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 3, எண் 282 ), அநபோத நாயக்கர் மகனும் சிங்க நாயக்கர் சகோதரனுமாகிய வஸந்தராயர் என்பவர் இரண்டாம் மற்றும் மூன்றாம் கோபுரங்களில் நான்கு துவாரபாலகர் சிற்பங்கள் வைத்தச் செய்தியைப் பதிவு செய்கின்றது. 

கிருஷ்ணதேவராயரின் பொயு 1517 ஆம் ஆண்டு, அருளாளப்பெருமாள் கோயில் தாயார் சன்னதி நுழைவுவாயில் இடதுபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 3, எண் 286 ), ஏகாம்பரநாதர் கோயில் இறைவனுக்குத் திருப்பள்ளி ஓடத்திருநாள் நடத்துவதற்கு கிறாமம் ஒன்றை கொடையாக அளித்துள்ளார். ஏகாம்பரநாதன் கோயிலுக்கு சிறிய விநாயகர் தேர் ஒன்றும், பேரருளாளர் கோயிலுக்கு கிருஷ்ணன் தேர் ஒன்றும் செய்தளித்துள்ளார். பேரருளாளர் தேர், சொன்னவண்ணம் செய்த பெருமாள் மற்றும் முத்திகுடுத்த நாயனார் கோயிலுக்கு மேலத் திருவீதியே வந்து ஒதியஞ் சந்தி வழியாக பெரிய திருவீதி வழியாக தேர் செல்லவும், இதே வழியாக திரும்பி வரவும் ஆணையிட்டுள்ளார்.  அதேபோன்று ஏகாம்பரநாதர் கோயில் தேர் முன்பு போலே முத்திகுடுத்த நாயனார் திருவீதி வழியாகச் செல்லவும் ஆணையிட்டுள்ளர் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

டெல்லி சுல்தான் ஆலம்கீர் பாஷா முகமதுவின் பொயு 1723 ஆண்டு, அருளாளப்பெருமாள் கோயில் 'பாறை', கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ( தொகுதி 3, எண் 214 ), மகா ராசராசமாராயர் சிதக்குனிராயர் கால்வாய் வெட்டிய செய்தியும் அதன் நீர் பரிவர்த்தனை விவரமும் சொல்லப்பட்டுள்ளது.

--- OM SHIVAYA NAMA---

 Athivardarar in the tank



OM SHIVAYA NAMA