Friday, 21 April 2017

Sri Amaneeshwarar Temple / தேவனாம்பாளையம் அமணீசுவரர் கோயில், Devanampalayam, near Pollachi, Coimbatore District, Tamil Nadu.

 A continuation post to Sri Theniswarar Temple at Vellalore….
14th April 2017
ஸ்ரீ தேனீஸ்வரர் தரிசனத்திற்குப் பிறகு எங்களுடைய அடுத்த இலக்கு தேவனம்பாளையம் ஸ்ரீ அம்மணீஸ்வரர் கோவில். இக்கோவில் கற்பகாநதியின் மத்தியில் மேற்கு நோக்கி கட்டப்பட்டது. இக்கோவில் ஒருகாலத்தில் சிவன் கோவிலாகவும் பின்பு அது சமணர்கள் காலத்தில் அது சமணர் கோவிலாகவும், பின்பு அவர்களுடைய வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் சிவன் கோவிலாகவும் மாற்றப்பட்டதாக குருக்கள் கூறினார். சமணர்கள் காலத்திய அம்மணீஸ்வரர் என்ற பெயரே நிலைத்துவிட்டதாகவும் கூறினார். அதற்கான ஆதாரமாக தூண்களில் காணப்பட்ட சிற்பஙகளைச் சுட்டிக்காட்டினார். எங்களுடைய ஊகமும் அதுவாகத்தான் இருந்தது. அதற்கு வலு சேர்ப்பது போல இருந்தது அவருடைய கூற்று. மேலும் ஆற்றின் நடுவே உள்ள பாறைகளில் இரண்டு இடங்களில் மருந்து அரைப்பதற்காக ஏற்ப்படுத்தப்பட்ட குழிகள் அதை மேலும் உறுதி செய்தது.
 
இக்கோவில் விக்கரம சோழன் ஆட்சிக்கு முன்பே கட்டப்பட்டது. அவருடைய ஆட்சி ஆண்டைச் சேர்ந்த பதினான்காம் நூற்றாண்டு (1302 & 1303 பொயு) கல்வெட்டுக்கள் கருவறையின் அதிட்டானத்தில் இருக்கின்றது. இக்கல்வெட்டுக்கள் 19 மற்றும் 20வது நூற்றாண்டுகளில் புதுப்பிக்கப்பட்டபோது கற்கள் மாற்றி கட்டப்பட்டுவிட்டது. ஆதனால் முழுவதும் தொடர்ச்சியாக படிக்க முடியவில்லை. இக்கல்வெட்டுக்கள் கோவிலுக்கு வழங்கிய கொடைகளைப் பற்றி கூறுகின்றது.
 
அர்த்த மண்டபத்தின் தூண்களில் சிவனின் ஊர்த்துவ தாண்டவமும், எதிர் தூணில் காளியின் உருவ சிலைகளும் எட்டு கரங்களுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அதை அருகே சென்று காணவும் எங்களுக்கு அனுமதி கிடைத்தது. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்…
 
இக்கோவிலுக்கு வருவதற்க்கு முன்பு வழியில் குத்துக்கற்கள் (மென்கிர்), சதிகற்களைக் காண்டோம். இக்கோவிலிலும் சதிகற்கள் இருந்தது. அவைகளைப்   பற்றி பின்பு கான்போம்…

After the darshan of Sri Theneeswarar at Vellalore, our next destination was the Sri Amaneeshwarar temple at Devanampalayam. On the way, we saw Menhirs at Mayiladumparai, two "Sati Stones" at Vadasithur & Kappalaankarai, which will be written separately.


Moolavar    : Sri Amaneehswarar
Consort      : Sri Akilandeswari
 
Some of the important features of this temple are…
The temple faces west in the middle of the Karpaka River. The Garuda thoon is in front. As per Gurukkal, there are 5 Shiva Lingas, of which 3 (three) are in the sanctum Sanctorum installed in a row, and two are outside. The centre of Shiva Linga is swayambhu. Sannidhis for Chandikeswarar and Dakshinamurthy are built separately at a later stage. There are no images in the koshtams / niches.
 
Ambal is in the maha mandapam facing east. There are 4 Vinayagars, called sathuranga Vinayagars, reliefs on the pedestal of Ambal and Athiri Maharishi are at the centre.
 
The protection deity of this temple, Varahi, is facing west. On every Ashtami day, “milakai / dry chillies ” are being offered.
 
ARCHITECTURE
The temple consists of the sanctum sanctorum, ardha mandapam, and maha mandapam. The sanctum sanctorum is on a simple pada bandha adhistanam with jagathy and muppattai kumudam. Brahma kantha pilasters are on the sanctum wall. The prastaram consists of valapi, kapotam, and viyyalavari. A two-tier nagara stucco nagara vimanam is over the bhumi desam. In addition, there is an open mukha mandapam at the front.
 
Ardha mandapam pillars have the images of Lord Shiva's Oorthuva Thandavam (as per Gurukkal Agora Thandava Murthy), and the opposite pillar has the image of Kali's Dance. Both have 8 hands. The other pillars have the image of a Vijayanagara Nayaka king (..?) image, who reconstructed this temple.
 
 Kali statue on the ardha mandapam pillar
Close-up view of Kali
 Lord Shiva Urthuva Thandavar, opposite to Kali 

 The Nayaka period person's image on the pillar, who constructed this mandapam

HISTORY AND INSCRIPTIONS
As per Gurukkal, originally the temple was constructed for Lord Shiva and later converted into a Jain temple. After Jainism slowly lost its power, the temple was again converted to a Shiva temple and retains the Jainism name of  Sri Amaneeshwarar. (People used to call Jain Gods Amana Swamy since the Jain Monks/Tirthankaras do not wear any dress). During the reconstruction of this temple, the stones were misplaced in many places. Due to this, the inscriptions do not have continuity.
  
As per the inscriptions recorded, the temple existed before the Vikrama Chozha period. The 14th-century (1302 & 1303 CE) inscription records the donations made to this temple. The 20th-century (1904 CE) inscription records the reconstruction / Jeernorthanam of this temple.  A 19th-century inscription is also there, which mentions the donations made to Devanampalayam Sri Mariamman temple.

The temple may belong to the 12th to 13th century Kongu Chozha period, and it was reconstructed later. The temple was also called the Kailayamudaiyar Temple.

20 ஆம் நூற்றாண்டு அமணலிங்கேசர் கோயில் முன்மண்டபம் மேற்குச் சுவர் நுழைவாயில் வலதுபுறம் உள்ள கல்வெட்டு தேவனாம்பாளையத்து பொன்னா கோத்திரத்தைச் சேர்ந்த கு. ஆ. பழனிச்சாமி கவுண்டர், கு. பெ. பழனிக்கவுண்டர், கு.சி. பழனிக்கவுண்டர் என்ற மூவரும் ஒன்றாகச் சேர்ந்து அமணீஸ்வரர் கோயில் முழுமையும் திருப்பணி செய்தனர் என்பதைப் பதிவு செய்கின்றது.
A 20th-century inscription on the west wall, right side of the entrance to the temple, records the complete thirupani of the temple, done by Ku. Aa. Palanisamy Gounder, ku. Pe. Palani Gounder, and ku. Si, Palani Gounder of Ponna gothra.

பொயு 13 ஆம் நூற்றாண்டு கொங்கு சோழன் விக்ரம சோழனின், அமணலிங்கேசர் கோயில் கருவறை கிழக்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு சிவன் கோயிலுக்குக் கொடைஞன் ஒருவன் ஓரச்சுக் காசு கொடையளித்தமையைப் பதிவு செய்கின்றது.
Kongu Chozha’s 13th century CE inscription on the sanctum sanctorum east side adhistanam records the gift of one achu kasu to this temple, by a devotee.

பொயு 13 ஆம் நூற்றாண்டு கொங்கு சோழன் விக்ரம சோழனின், அமணலிங்கேசர் கோயில் கருவறை கிழக்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு, குறுநீலி எனும் ஊரைச் சேர்ந்த வெள்ளாளன் சிவன் கோயிலுக்கு வாயில் நிலை செய்து வழங்கியமையைப் பதிவு செய்கின்றது.
Kongu Chozha’s 13th-century inscription on the sanctum sanctorum east side adhistanam records the gift of the entrance door by a Vellalan of Kuruneeli village.

கொங்கு சோழன் விக்ரம சோழனின் 30 ஆம் ஆட்சியாண்டு  பொயு 1303, அமணலிங்கேசர் கோயில் கருவறை கிழக்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு,  சோழன் தேவன் ஆன மண்டல முதலி என்பான் சிவன் கோயிலுக்கு வழங்கிய ஒரு கொடையைப் பதிவு செய்கின்றது.
Kongu Chozha Vikrama Chozha’s 30th reign year, 1303 CE, inscription on the sanctum sanctorum east side adhistanam records a gift to this temple by Chozha Devan alias Mandala Mudali.

கொங்கு சோழன் விக்ரம சோழனின் 29 ஆம் ஆட்சியாண்டு  பொயு 1302, அமணலிங்கேசர் கோயில் கருவறை வடக்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு குறுநீலி ஊரைச் சேர்ந்தவர் சிவன் கோயிலுக்கு வழங்கிய கொடையைப் பதிவு செய்கின்றது.
Kongu Chozha Vikrama Chozha’s 29th reign year, 1302 CE, inscription on the sanctum sanctorum north side adhistanam records a gift to this temple by a devotee belonging to Kuruneeli.

கொங்கு சோழன் விக்ரம சோழனின் 30 ஆம் ஆட்சியாண்டு  பொயு 1303, அமணலிங்கேசர் கோயில் கருவறை வடக்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு எக்கன் கோவனான நீதிபாலன் என்பான் சிவன் கோயில் அர்த்த மண்டபத்தின் ஒரு பகுதியை அமைத்துக் கொடுத்தமையைப் பதிவு செய்கின்றது.
Kongu Chozha Vikrama Chozha’s 30th reign year, 1303 CE, inscription on the sanctum sanctorum north side adhistanam records the construction of a portion of ardha mandapam by Ekkan Kovan alias Neethibalan.

கொங்கு சோழன் விக்ரம சோழனின் 29 ஆம் ஆட்சியாண்டு  பொயு 1302, அமணலிங்கேசர் கோயில் கருவறை வடக்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு  குறுநீலியைச் சேர்ந்த தேவன் கேசுவன், தேவன் பெம்மான் என்பவர்கள் சிவன் கோயிலுக்கு வழங்கிய கொடைப் பதிவு செய்கின்றது.
Kongu Chozha Vikrama Chozha’s 29th reign year, 1302 CE, inscription on the sanctum sanctorum north side adhistanam records the gift to this temple by Devan Kesavan and Devan Bommaan.

கொங்கு சோழன் விக்ரம சோழனின் 30 ஆம் ஆட்சியாண்டு  பொயு 1303, அமணலிங்கேசர் கோயில் கருவறை வடக்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு  கொத்தப்பிச் சோழன் என்பான் சிவன் கோயிலுக்கு (திருக்கற்றளிக்கு) வழங்கிய கொடையைப் பதிவு செய்கின்றது.
Kongu Chozha Vikrama Chozha’s 30th reign year, 1303 CE, inscription on the sanctum sanctorum north side adhistanam records the gift to this ThirukaRRali by Koththappi Chozhan.

கொங்கு சோழன் (விக்ரம சோழனின்?) 30 ஆம் ஆட்சியாண்டு  பொயு 1303, அமணலிங்கேசர் கோயில் கருவறை தெற்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டுசிவன் கோயில் கயிலாயமுடையார்.. கோயில் என அழைக்கப் பெறுகிறது. குறுநீலி (தேவனாம்பாளையத்துக்கு அருகில் உள்ள ஊர்) வெள்ளாளன் ஒருவன் இச்சிவன் கோயிலுக்கு வழங்கிய கொடையைப் பதிவு செய்கின்றது.
Kongu Chozha Vikrama Chozha’s 30th reign year, 1303 CE, inscription on the sanctum sanctorum south side adhistanam records the name of this temple as Kayilayamudaiyar Temple. Further records a gift by Vellalan of Kuruneeli, near Devanampalyam.

Ref
கோவை மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி 2.

 14th-century Vikrama Chozha period inscription
The 20th-century inscription about the reconstruction of the temple 

Lord Shiva is the kula Deivam for Puluva Gounder koottam,  thalaiyan koottam, a sub-section. Hence, most of the temple activities are carried out by them
 
LEGENDS
It is believed that the Sun worships Lord Shiva of this temple. To prove the same, the sun's rays fall on Moolavar, on no moon days / Amavasya day in the Tamil Month Masi (Uttarayana).
 
It was said that Lord Shiva was worshipped by Athiri Maharishi and Anusuya Devi, and they lived here. Patanjali was also born here. Ashtama Siddhars worshipped Lord Shiva, and their reliefs can be seen on the pillars.
 
POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on Athiri Maharishi's Guru poojas days on Thursdays, Karthigai Deepam, Pradosham, Aruthra Darshan, Masi Shivaratri, Chithirai Vishu, and Monthly Shivaratri. It was believed that Siddhars worshipped Lord Shiva on Shivaratri days.
 
TEMPLE TIMINGS:
The temple will be kept open from 07.00 hrs to 12.00 hrs, and from 16.00 hrs to 19.00 hrs.
 
CONTACT DETAILS:
Mr Muthuraman Sivachariyar and his mobile numbers are 9655559023 and 9715127040, and the landline number is 04259 264747.
 
HOW TO REACH:
34 km from Ukkadam bus stand
For the Route map: CLICK HERE
 
LOCATION OF THE TEMPLECLICK HERE




  Mandapam pillars, Rishabam  – dilapidated 
 Mandapam pillars, Rishabam  – damaged 
It is believed that these are the medicinal grinding pits, used by the Jain monks

---OM SHIVAYA NAMA---

4 comments: