Friday, 19 January 2024

Ajanta Caves / அஜந்தா குகைகள் / Satavahana Dynasty Rock Cut Caves / Buddhist Caves, Ajanta, Aurangabad, Maharashtra State, India.

The Visit to this Ajanta caves was a part of “Elephanta, Ajanta and Ellora Heritage walk” organized by Enthisai Historical Heritage Walk Group, from December 23rd to 26th December 2023.

Buddha's parinirvana sculpture


அஜந்தா புத்தமத குடைவரைகள் வாக்ஹோரா நதிப்பள்ளத்தாக்கில், இயற்கையாக குதிரை லாட வடிவத்தில் அமைந்த செங்குத்தான பாறையில் குடையப்பட்டுள்ளது. இக்குகைகள் ஆற்றின் கரையில் இருந்து சுமார் 76 மீட்டர் உயரத்தில் குடையப்பட்டுள்ளது. அஜந்தாவில் இருக்கும் முப்பது குடைவரைகள் இரு காலக்கட்டங்களில் குடையப்பட்டது. முதல் கட்டமாக பொயுமு 2ஆம் நூற்றாண்டில் இருந்து பொயு நான்காம் நூற்றாண்டு வரை ஆறு குடைவரைகள் ( 8, 9, 12, 13 & 15A – புத்த மதத்தின் ஹீனாயான பிரிவைச் சார்ந்தவை ) சாதவாகனர் ஆட்சிக்காலத்திலும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள குடைவரைகள் ( புத்தமதத்தின் மஹாயான பிரிவைச்சார்ந்தவை, குகைகள் 1, 2, 4, 6, 7, 11, 15, 16, 17, மற்றும் 20 - 24 )  பொயு 5-6 ஆம் நூற்றாண்டுகளில் வாகாடக பேரரசின் ஆட்சிக்காலத்திலும் குடையப்பட்டது. இக்குகைகளில் காணப்படும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வரையப்பட்ட ஒவியங்கள் இந்தியாவின் கலைத்திறனுக்கு காலம் கடந்தும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

சாதவாகனர் காலத்தைச் சார்ந்த ( புத்த மதத்தின் ஹீனாயான பிரிவைச் சார்ந்த குடைவரைகள் 8, 9, 12, 13 & 15A ) குடைவரைகள் அமைப்பில் மிகவும் சாதாரணமாகவும், அதே சமயத்தில்  சுவரிலும், விதானத்திலும் வரையப்பட்ட ஓவியங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றது. அவ்வோவியங்கள், புத்தரின் வாழ்கை வரலாறு, புத்தசமய ஜாதக கதைகள், அக்காலத்தில் நிலவிய சமுதாயப்பண்பாடு, அவர்களின் வாழ்க்கைமுறை, ஆடைகள், அணிகலன்கள், மற்றும் பலவிதமான அழகிய வடிவங்கள் என வரையப்பட்டு உள்ளது. இவ்வோவியங்கள் சாஞ்சி மற்றும் பாமத் போன்ற இடங்களில் காணப்படும் ஓவியங்களுக்கு நிகராகக் கருதப்படுகின்றது. இக்குடைவரைக் குகைகள் மரத்தால் கட்டப்பட்ட கோயில்களின் அமைப்பை ஒட்டி குதிரையின் லாட அமைப்பிலும் / தூங்கானை மாடம் விதானம் மரச்சட்டங்களால் செய்யப்பட்டதைப் போன்று குடையப்பட்டு உள்ளது. மேலும் இது புத்தபிக்குகள் தங்குமிடமாகவும், தொழும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டன. 5-6 ஆறாம் நூற்றாண்டுகளில் இந்தியா வந்த சீனப்பயணி யுவாங் சுவாங் இந்த குகைகளுக்கு நேரில் வராவிட்டாலும் இக்குகைகளைப்பற்றி தனது பயணக் குறிப்பேட்டில் குறிப்பிட்டு உள்ளார்.

இவ்வோவியங்கள் சொரசொரப்பான தளத்தின் மீது, சுண்ணாம்பு, மாட்டுச்சானம், தாவரத்தின் காய்ந்தபகுதிகள், மணல் மற்றும் மண் கொண்டு பூசப்பட்டு, அதன்மீது இயற்கையாகக் கிடைத்த கற்களின் வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்டது.     

கல்வெட்டு தகவல்களின் படி மஹாயான புத்தபிரிவைச் சார்ந்த சில குடைவரைக் குகைகள் வாகாடக பேரரசின் அரசர் ஹரிசேனாவின் ( பொயு 475 – 500 ) மந்திரி வராகதேவரால் குடையப்பட்டது. இக்குகைகள் அனைத்தும் 5 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு குடையப்பட்டன. 26 ஆம் எண் குகையில் உள்ள கல்வெட்டு ராஷ்ட்ரகூட மன்னர்களின் பங்களிப்பைச் சுட்டுகின்றது. இக்குடைவரைகளில் புத்தரின் பலவிதமான நிலைகள், பரிநிர்வான நிலை உட்பட சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளது. பலபுத்தர் சிற்பங்கள் அவரது உபதேச முத்திரையிலேயே காணப்படுவது ஒரு சிறப்பு ஆகும்.

Ajanta Caves ( 75 40° E: 20°30'N ) are famous for their murals which are the finest surviving examples of Indian art, particularly painting. These caves were excavated in horse-shoe shaped bend of rock scarp nearly 76 mtr. in height overlooking a narrow stream known as Waghpra.

The location of this valley provided a calm and serene environment for the Buddhist monks who retreated at these selected places during the rainy season. Each cave was connected to the stream by a flight of steps, which are now almost obliterated, albeit traces of some could be noticed at some places. In all 30 caves were hewn out of the living rock in different periods according to the necessity.

Out of these, five ( cave nos. 9, 10, 19, 26 and 29 ) are Chaitya-grihas and the rest are viharas. In date and style also these caves can be divided into two broad groups. Out of the 30 caves 6 caves belong to the earliest phase of Buddhism Le Hinayana. Caves 9 & 10 which are Chaitya-grihas and 8, 12, 13 & 15A which are Viharas belong to this phase. These caves are datable to the pre-Christian era, the earliest among them being Cave 10 dating from the second century B.C where the object of worship is a stupa. These caves are imitation of contemporary wooden constructions even to the extent of fixing of wooden rafters and beams to the ceiling even thought they are non-functional. These early caves were painted but nothing substantial has survived. Caves No.9 and 10 clearly show some vestiges of painting. The headgear, ornaments of the images in these painting resemble the bas-relief sculpture of Sanchi and Bahamut.

The addition of new caves could be noticed again during the period of Vakataka Dynasty ( Cave Nos, 1, 2, 4, 6, 7, 11, 15, 16, 17 and  20 to 24 ), the contemporaries of the imperial Guptas. These were caused to be excavated by the royal family and also the feudatories owing allegiance to the Vakatakas. Varahadeva, the minister of Vakataka king Harishena ( 475-500 CE ) dedicated Cave 16 to the Buddhist Sangha while Cave 17 was the gift of a prince ( who subjugated Asmaka ) a feudatory of the same king. A flurry of activity at Ajanta was between mid 5th century CE. to mid 6th  century CE. Hiuen Tsang, the famous Chinese traveler who visited India during the first half of 7th century CE. has left a vivid and graphic description of the flourishing Buddhist establishments here even though he did not visit the caves.

A solitary Rashtrakuta inscription in cave no. 26 indicates its centuries CE. The second phase departs from the earlier one with the pattern in layout as well as the centrality Buddha image, both in use during 8th - 9th introduction of new sculpture as well as in paintings.

All these caves which were once painted, but now the best examples of these exemplary paintings of Vakataka period could be noticed only in caves 1, 2, 16 and 17. The variation in style and execution in these paintings also are noticed, mainly due to different authors who followed contemporary style.

The main theme of the paintings is the depiction of various Jataka stories-different incidents associated with the life of Buddha, and the contemporary events and social life. The ceiling decoration invariably consists of decorative patterns, geometrical as well as floral. Apart from painted representations, Sculptural panels also adorn the beauty of the caves.

Ajanta paintings are the best examples of Tempera technique, executed after elaborate preparation of rock surface. After chiseling rock surface, different layers of clay mixed with ferruginous earth, sand, fibrous material of organic origin were applied very carefully. Then the surface was finally finished with a thin coat of lime wash. Over this surface, outlines are drawn boldly, then the spaces are filled with requisite colours in different shades and tones to achieve the three dimensional effect of rounded and plastic volumes. The colours and shades utilised also vary from red and yellow ochre, terra verte, to lime, kaolin, gypsum, lamp black and lapis lazuli, The chief binding material used here was glue.

These group of cave are being maintained by Archaeological Survey of India, Aurangabad Circle, The group of caves is inscribed by the UNESCO as a World Heritage Monument in the year 1983.

CAVE NO. 10
புத்த மதத்தின் ஒரு பிரிவான ஹினாயான பிரிவைச்சார்ந்த இக்குடைவரை 30.5 x 12.2 மீட்டர் அளவில் குடையப்பட்டுள்ளது. இக்குடைவரை பாகாடா என்ற இடத்தைச் சார்ந்த புத்தபிக்கு / துறவி தர்மதேவா என்பவருக்காக வஷிஸ்டபுத்ர கடகாடி கனககா என்பவரால் குடையப்பட்டது. மேலும் ஓவியங்கள் புத்தமத பக்தர்களால் செய்விக்கப்பட்டது. இக்குடைவரை மரச்சட்டங்களால் கட்டப்பட்டதைப் போன்ற தோற்றத்தில் குடையப்பட்டுள்ளது.
 
இக்குடைவரை பொயுமு 2 - 4 ஆம் நூற்றாண்களில் குடையப்பட்டதாக கருதப்படுகின்றது. அரைவட்ட வடிவில் அல்லது லாடவடிவில் 39 எட்டுப்பட்டை தூண்களுடனும், அதன் கடைசியில் ஸ்தூபியுடனும் குடையப்பட்டு உள்ளது. தூண்களிலும் சுவர்களிலும் அக்காலத்தச் சார்ந்த புத்தர் மற்றும் புத்தர் ஜாதகக்கதைகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. அனால் தற்போது பெரும்பாலான ஓவியங்கள் இனம் காணமுடியாத அளவிற்கு சிதைந்து காணப்படுகின்றது.    

This is earliest chaitya-griha (30.5 X 12.2m) at Ajanta, belonging to Hinayana Sect of Buddhism. On the basis of Inscriptions the cave was excavated by the gifts made by Vasisthiputra Katahadi, Kanahaka of Bahada, monk Dharmadeva while the paintings were by various devotees.

The predominantly wooden architecture and the paleographical evidence date this cave to circa 2nd century B.C.E. The chaitya is apsidal on plan consisting a nave flanked by two aisles by a colonnade of thirty-nine pillars. The Stupa placed at the apsidal end, is the biggest at Ajanta and is plain and hemispherical in shape.

The importance of this cave lies in its preserving the early specimens of Indian paintings. The paintings belong to two different periods; the earlier dated to 2nd century B. C.E,  and the latter to 4th  century CE. The plain octagonal pillars, ceilings and walls are painted with Buddhist themes, designs, and Jatakas, but nothing substantial has survived.












CAVE NO. 26.
இந்த புத்தர் குடைவரை பொயுமு 2 ஆம் நூற்றாண்டு – பொயு 4 ஆம் நூற்றாண்டு காலத்தச் சார்ந்ததாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. 19 எண் குடைவரையைப் போன்றே இக்குடைவரையிலும் அதிக அளவில் சிற்பத்தொகுதிகளும் சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்குடைவரை புத்தபிக்குகளின் பிரார்த்தனைக்காக குடையப்பட்டது. இக்குடைவரை, சுற்றுப்பாதையுடன், நீண்ட செவ்வக வடிவத்தில், அதன் உள் பகுதி அரைவட்டவடிவில் குடையப்பட்டு, அந்த அரைவட்ட பகுதியில் ஸ்தூபியை அமைக்கப்பட்டுள்ளது. இக்குடைவரையின் கூரை, மரச்சட்டங்களைக் கொண்டு கட்டப்பட்டதைப் போன்று செதுக்கப்பட்டு உள்ளது ஒரு சிறப்பான அமைப்பாகும்.

இக்குடைவரையில் செதுக்கப்பட்ட சிற்பத்தொகுதிகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது, புத்தரின் பரிநிர்வான நிலை சிற்பம். இச்சிற்பம், புத்தரின் ஆத்மா உடலில் இருந்து பிரிந்த பின்பு உள்ள நிலையை சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் கீழே அமர்ந்து உள்ளது, சீடர் சோக நிலையில் அமர்ந்து இருப்பது, புத்தரின் ஆவி பிரிந்து புத்தர் உருவத்துடன் மேலே செல்வது, மாரா யானை மீது அமர்ந்து இருப்பது, மாரா கௌதமரை அவனுடைய அசுர கணங்களைக் கொண்டு தாக்குவது, போன்றவற்றை அழகாகச்செதுக்கி இருப்பது நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது.  

This Buddhist, cave No 26  belongs to 2nd century BCE and the latter to 4th century CE. This cave is almost as crowded with sculpture as Cave 19. But this chaitya- hall is larger in size. It has a colossal reclining Buddha figure ...... representing Parinirvana ... in a grouping of kings and queens and monks. The same wall presents a relief of "The Temptation of the Buddha". A theme seen in mural in Cave 1-On the left is Mara seated on an elephant and assaulting Gautam with his demon forces. On the right is Mara's retreat. In the foreground his daughters are trying to tempt the Great Ascetic.

This chaitya- griha is hewed apsidal on plan consisting a nave flanked pillard hall for circumambulation. The Stupa placed at the apsidal end, is the biggest at Ajanta and is plain and hemispherical in shape. These caves exhibit the imitation of wooden construction to the extent that the rafters and beams are also sculpted even though they are non-functional. The Circumambulation path is divided in to sections and Buddha’s various postures  along with Bodhisattvas, whisk beares,  etc are sculpted. One of the Hall pillar has the british period inscription. 

 Buddha's parinirvana sculpture - Reclining posture of Buddha - - 7 meters ( 23 ft long )
Buddha's parinirvana sculpture

Buddha's relatives mourn the parinirvana of Buddha
Buddha's parinirvana sculpture - the foots are not on the pillow indicates the parinirvana
Buddha's parinirvana - the soul comes out of Buddha's body
Buddha's parinirvana sculpture - Reclining posture of Buddha - 7 meters ( 23 ft long )
Buddha's disciple mourn the parinirvana of Buddha
 Upper deck of the cave
The various postures of Buddha - out side the Cave 


















Stupi with Buddha's image


 Inscription
Inscription - Brahmi

Ref:
1.  Display boards at the entrance of the caves.
2.  UNESCO World Heritage, Convention web site https://whc.unesco.org/en/list/242/
3. Ajanta Murals by Archaeological Survey of India ( ASI )

NOTE
The caves will kept open from 6.00 hrs to 18.00 hrs 
The cave is closed on Monday

HOW TO REACH
The Ajanta Caves are  about 8 KM from Ajanta, 103 KM from Ellora Caves,  268 KM from Nashik and 414 KM from Mumbai.  
Nearest Railway Station is Mukundwadi.
Nearest airport Aurangabad

LOCATION OF THE CAVES    : CLICK HERE
 
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment