Friday 5 January 2024

Theri Kaadu ( Kudiraimoli theri ) / தேரிக்காடு ( குதிரைமொழிதேரி ), Kuthiraimozhi, Thoothukudi District, Tamil Nadu.

The visit to this Therikadu in Thoothukudi District was a part of “Temples, Heritage Sites and archaeological excavation sites Visit around Thoothukudi”,  between Dec 1st and 2nd December 2023. 

Therikadu. This place spreads about 12 thousand acres of land with red colour sand, which is not commonly available anywhere. This sort of Sand desert is available in Tirunelveli and Thoothukudi Districts. The sand is like fine powder, how it was formed is not known to any one and there is no proper answer from the researchers also. It was learnt that this place has lot of quagmire / புதைகுழிகள், which are the death traps for those who venture in these areas. This red sand dunes changes their mound from one place to the another due to wind. It was learnt that during 1848, then the British Collector, took effort to grow Palm Trees and cashew trees to reduce of the movements of the sand dunes.

Like Adichanallur, excavations were carried out and found Muthumakkal Thazhi or Urns. In that, bones, stone tools, Iron Swords, artefacts are unearthed. From these, it was assumed that there must be a connection between Therikadu and Adhichanallur, which are about 10 KM distance.

Therikadu can be accessed from Thoothukudi, Tirunelveli and Thiruchendur.   

தேரி காடு
நாம் காணப்போகும் தேரிக்காட்டை திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்போது, குரும்பூருக்கு முன்னதாக வலது புறம் திரும்பி நாலுமாவடி, திசையன்விளை வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடையலாம். தாமிரபரணி ஆற்றிற்கு தெற்கு பகுதியில் கடம்பாகுளத்திற்கு தெற்கே, நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, நாதன்கிணறு, காயாமொழி, பரமன்குறிச்சி, நாசரேத் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காணப்படுகின்றது

இப்பகுதி சிவப்பு கலரில் மிருதுவான கற்கள் ஏதுமின்றி மணலால் நிறைந்து  காணப்படுகின்றது, இம்மாதிரியான சிவப்பு கலர் மணல் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இரண்டு மூன்று இடங்களில் மட்டுமே காணப்படுகின்றது. இச்சிவப்பு கலர் மணல் எவ்வாறு உருவானது என்ற கேள்விக்கு ஆய்வாளர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை என்பதே உண்மை. இப்பூமியில் புதைமணல் என்ற ஆபத்தான பகுதிகளும் இருப்பதாகக் கூறுகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த தேரிக்காட்டின் மணல் மேடுகள் சில சமயம், காற்றின் திசை மற்றும் வேகத்திற்கு ஏற்ப சுமார் 25 மீட்டர் உயரம் வரை உயர்ந்தும், ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடம் மாறியும் காணப்படும். அதனால் தேரிக்காட்டினுள்  திசை கண்டுபிடித்துச் செல்வது என்பது மிகவும் சிரமம்.

தேரிக்காடு முந்திரி செடிகள், பனை மரங்கள், மற்றும் மூலிகை செடிகள் ( விராலி ) நிறைந்து காணப்படுகின்றது. 1848–ம் ஆண்டு, ஆங்கிலேய ஆட்சியின் கலெக்டராக இருந்த இ.பி. தாமஸ் என்பவரின் முயற்சியால் மணல் மேட்டின் நகர்வை குறைக்க இம்மரங்கள் வளர்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

தாமிரபரணி ஆற்று நாகரிகத்தின் தேடலின் தொடர்சியாக மேற்பரப்பாய்வுகளும், அகழ்வாய்வுகளும் இத்தேரிக்காட்டில் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாய்வில், சில கற்கால கருவிகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கிடைத்ததாக கூறுகின்றனர். அங்கு கிடைத்த தாழிகளில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் மற்றும் இரும்பால் செய்யப்பட்ட கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் ஆகியவையும் கிடைத்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேரிக்காடு என்ற மணலும் மணல் சார்ந்த - பாலைவன நிலமான- தேரிக்காட்டையும் சேர்த்து 5 வகையான நிலங்களும் ( குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் & பாலை ) இருப்பது மிகவும் சிறப்பாகும்.

HOW TO REACH
Since Therikadu is not a particular place, may be accessed through Nalumavadi, Pudukudi, Kuthiraimozhi, Kayamozhi, Nazareth, Paramankurichi etc also Arunjunai Katha Ayyanar temple is part of Therikadu.

The Therikadu is about 14 KM from Thiruchendur,  38.2 KM from Thoothukudi and 45 KM from Tirunelveli.
Nearest Railway Station is Thiruchendur.     

LOCATION OF THERIKADU   : CLICK HERE

செம்மரம்

விராளி எனும் ஒரு மருத்துவ குணம் கொண்ட செடி ( எலும்பு தேய்மானம் சம்பந்தப்பட்ட )
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment