Sunday, 21 January 2024

Ellora Shiva and Vishnu Caves / Ellora Caves / எல்லோரா குகைகள் / Ellora, Aurangabad, Maharashtra State, India.

The Visit to the Cave Nos 14, 15, 21 and 29 of Ellora Hindu caves dedicated to Shiva and Maha Vishnu, was a part of “Elephanta, Ajanta and Ellora Heritage walk” organized by Enthisai Historical Heritage Walk Group, from December 23rd to 26th December 2023.


எல்லோரா குடைவரைத் தொகுப்பில் 34 குடைவரைகள் மட்டும் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவைகள் ஆகும். இவை மஹாரஷ்டிர மாநிலத்தில் UNESCO நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 5 உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்று. எல்லோரா குடைவரைத் தொகுப்பில் முதல் 12 குடைவரைக்கள் பௌத்தமதத்திற்காக பொயு 6 - 8 ஆம் நூற்றாண்டுகளில் குடையப்பட்டதாகவும், 13 - 29 வது குடைவரை 17 குடைவரைகள் சிவன் மற்றும் மஹாவிஷ்ணுவிற்காக பொயு 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் குடையப்பட்டதாகவும், 30 ல் இருந்து 34 வரையுள்ள 5 குடைவரைகள் சமண சமயத்திற்காக பொயு 9 - 11 ஆம் நூற்றாண்டுகளில் குடையப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இக்குடைவரைத் தொகுப்பில் 16 ஆம் எண்குடைவரை சிவனுக்காக் “கைலாசநாதர் கோயில்” என மேலிருந்து கீழாகக் குடையப்பட்டது. இக்குடைவரையைப் பற்றிய தகவல்கள், இக்கட்டுரை ஆசிரியரின் ஜோதிர்லிங்க யாத்திரையின் தகவல்களுடன் ஏற்கனவே இவ்வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.


Uma Maheswarar

The Ellora group of caves consists of 34 caves of which 12 caves belongs to Buddhism, hewed during 500 – 750 CE, 17 Hindu Caves both for Saivam and Vaishnavam and hewed between 600 to 870 CE and lastly the 5 Caves from 30 to 34 belongs to Jainism hewed during 800- to 1000 CE. The 17 Hindu caves are starts from No 13. Of the 17 Caves, details of 4 important caves are given below. The details of the Cave No 16, ie Kailasanathar Temple was covered during my earlier JyotirLinga Yatra, in 2016.

This is one of the 5, UNESCO World Heritage Sites of Maharashtra State in India. The rest are, Ajanta Caves, Chhatrapati Shivaji Maharaj Terminus, Elephanta Caves and The Victorian and Art Deco Ensemble

Ravana Anugraha Murti 

CAVE 14
இக்குடைவரை தேவநாகரியில் “இராவண்-கி-கை” – அல்லது தமிழில் இராவண அனுக்கிரகமூர்த்தி குகை என அழைக்கப்படுகின்றது. இக்குடைவரை 13.60 X 8.69 மீட்டர் என்ற அளவில் குடையப்பட்டு உள்ளது. இது சக்தி வழிபாட்டை முன்னிலைப்படுத்தி குடையப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. கருவறையைச் சுற்றிவர பாதையுடன் குடையப்பட்டு உள்ளது. கருவறையின் வாயிலில் பறக்கும் நிலையில் கந்தர்வர்களும் மிகப்பெரிய அளவில் துவார பாலகர்களும் செதுக்கப்பட்டு உள்ளனர். மண்டபத்தில் ஒருபகுதி சிவன் ( சிவன் & பார்வதி, இராவண அனுக்கிரக மூர்த்தி, நடராஜர், ) மற்றும் அதன் எதிர்பகுதியில் மஹாவிஷ்ணுவின் சிற்பங்களும் ( வராக அவதாரம் ) இடம்பெற்றிருக்கின்றன. பெண் தெய்வமான சக்தி மகிஷனைவதம் செய்யும் மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தொகுப்பு அதிகமாக இடம் பெற்று இருப்பதால் இக்குடைவரை சக்திக்காக குடையப்பட்டு இருக்கலம் எனறு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இராவணன் கயிலாயத்தை சிவன் மற்றும் பார்வதியுடன் தூக்கமுயற்சிக்கும் சிற்பமே பிரதானமாகக் கருதப்படுகின்றது.      

The cave is locally known as "Ravan Ki Khai" because of the sculpture of Ravana shaking the Kailasha is a popular theme adopted at Ellora. This cave temple ( measures 13.60 X 8.69m ) was probably dedicated to Sakti cult. The sidewalls of the hall are scooped into several compartments containing the sculptural compositions of Hindu Mythology. The sanctum is separated from the back wall by a circumambulatory passage, opening into a hypostyle hall. The sanctum door is flanked by Fly whisk-bearers, gigantic guards and river Goddesses respectively.

The disposition of the panels show Vaishnava theme on one side and Shaiva theme on the other side showing religious harmony. The wall of the hall also contains a panel of seven-divine mothers / saptamatrikas. emphasis on female divinities suggests prevalence’s of Shakti worship.


Maha Vishnu as Bhuvarahar

Uma Maheswara


Anthakasura Vatha
Natarajar

Mahishamardini
 Mahishamardini



CAVE 15
இக்குடைவரை மஹாவிஷ்ணுவிற்காக குடையப்பட்டு உள்ளது. இக்குடைவரையில் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளது. இக்குடைவரை பொயு 8 ஆம் நூற்றாண்டில் குடையப்பட்டதை ராஷ்டிரகூட அரசர் தன்டிதுர்காவின் கல்வெட்டில் இருந்து  ( பொயு 758-756 ),  அறியமுடிகின்றது.

குடைவரையின் முன்பு மண்டபத்துடன் நாட்டிய மேடை ஒன்றும் காணப்படுகின்றது. இக்குடைவரை இரண்டு தளங்களைக் கொண்டது. கீழ்தளம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிறபங்கள் ஏதும் இன்றி காணப்படுகின்றது. முதல்தளம் மஹாவிஷ்ணுவிற்கான குடைவரை, கருவறை மிகப்பெரிய அளவிலான துவாரபாலகர்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. பெரிய அளவிலான தூண்களுடன் உள்ள மண்டபத்தில் சிவன் ரிஷபத்தின் மீது அமர்ந்து காணப்படுகின்றார். குடைவரையின் மூன்று பக்கங்களும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ளன.  மேலும் சிவனின் பல்வேறு கோலங்களும் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானவை, சிவன் ரிஷபத்தின் மீது அமர்ந்துள்ள காட்சி, லிங்கோத்பவர், திரிபுராந்தகர், நடராஜர் போன்றவைகள் ஆகும்.

The cave temple locally known as "Dasavatara Cave" because of the various incarnations of Vishnu depicted here, belongs to circa 8th century CE. The whole temple is planned on a grand scale, executed on elevated platform and entered through a rock-cut gateway, which leads to a courtyard. At the middle of courtyard is a small raised square hall called Natya Mandapa ( Hall of Dance ), containing the famous inscription of Dantidurga, a Rashtrakuta ruler ( 758-756 CE. ).

The main structure is double storied. The ground floor has massive, square sectioned pillars with four cells and is plain and devoid of any sculpture. The upper floor is dedicated to Lord Siva. The sanctum door is very beautifully carved and is guarded by two huge doorkeepers / dwarapalakas. In the huge pillared hall is Rishabam ( Vehicle of Shiva ) seated majestically. The sidewalls are divided into several compartments and sculptured panels have been brought in bold relief. The Northern side sculptures on belong to Shaivite theme while those on the Southern side belong to Vaishnavism.











Kalasamhara Murti




 Lingithbavar
 Tripuranthagar
Bhuvaraha murti
 Trivikrama Avatar
 Narasimha fights with Hiranyakasipu


CAVE 21
பொயு 7 ஆம் நூற்றாண்டில் சிவனுக்காக குடையப்பட்ட இக்குடைவரை “ராமேஷ்வரா” என்றும் அழைக்கப்படுகின்றது. இக்குடைவரை தாய்பாறையில் செதுக்கப்பட்ட சிவலிங்கத்துடன் கூடிய கருவறை, சிற்பங்களுடன் தூண்கள், ரிஷப மேடை, மஹாமண்டபம் என்ற அமைப்பில் குடையப்பட்டுள்ளது. ரிஷபமேடை திறந்த வெளியில் இருக்க சுற்றிலும் கடவுளர்களின் மிகப்பெரிய சிற்பங்கள் காணப்படுகின்றன. கைப்பிடி சுவரில், யானை மற்றும் ஆணும் பெண்ணுமான காம சிற்பங்கள் மிக நேர்த்தியாகவும், கற்பனைத்திறனுடனும் செதுக்கப்படுள்ளன. வாயிலில் ( குகையின் இரு பக்கமும் ) உள்ள கங்கை மற்றும் யமுனை நதிச் சிற்பங்கள் எல்லோரா கட்டிடக்கலையின் உச்சமாக கருதப்படுகின்றது. மண்டபத்தின் சுவர்கள் பகுதி பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவைகளில் மகிஷாசுரமர்த்தினி, சிவன் பார்வதி, பிரம்மா, வீரபத்திரர், இராவண அனுக்கிரகமூர்த்தி, நடராஜர், சப்தமாதர்கள், விநாயகர், எலும்பும் தோலுமான உருவங்கள் ( பிருங்கி முனிவர்..?) சிற்பத் தொகுப்புகளாக செதுக்கப்பட்டு உள்ளன. கருவறையின் முன்பு விதானத்தில் சூரியன் காணப்படுகின்றார்.  

This cave temple, locally known as "Rameshwara" is dedicated to Lord Shiva. Excavated in 7th century CE, with a raised platform, it has a courtyard and hall consisting sculptured pillars on both sides of Sanctum containing a Siva-Linga inside. The Rishaba platform, which is in the middle of the courtyard, is massive and decorated with figures of Gods and Goddess. The richly carved pillars and pilasters support the beautiful facade. On the outside of the parapet wall a long frieze of elephants and amorous couples are carved with great beauty and rich Imagination. A panel of River Goddess executed outside the cave is really a masterpiece of Ellora Art. Elaborately carved door frame with floral decoration, guarded by massive figures and sculptured chapels is the main attraction of this cave. The sculptured chapels consisting of a number of figures of Gods and Goddess in Hindu mythology reveal religious and social aspects of ancient India.


 Dwarapalakas

 Suryan

 Ashta matrikas
Ashta matrikas
Ashta matrikas
Nataraja
 Skeletons
Skeletons
Skeletons
Nataraja
  Veena Dakshinamurthy ( Shiva )
 Ashta matrikas Group
Ashta matrikas Group
Ashta matrikas Group


  
Veerabhadra with Dakshan

Shiva as Kalyana Sundarar with Parvati

 Mahishasuramardini
Sculpture on the pillar capital
Sculpture on the pillar capital
The River Goddess Ganga executed outside the cave is really a masterpiece of Ellora Art
The River Goddess Yamuna executed outside the cave is really a masterpiece of Ellora Art

CAVE 29
எல்லோர குடைவரைகளுள் சிவன் மற்றும் மஹாவிஷ்ணுவிற்கான குடைவரைகளுள் கடைசி குடைவரை இது. இக்குடைவரை 37.50 X 40.50 மீட்டர் என்ற அளவில், கங்கை மற்றும் யமுனை நதிப்பெண்கள் சிற்பங்களுடன் குடையப்பட்டு உள்ளது. நதிப்பெண்களை தவறுதலாக சீதை என எண்ணி சீதா-கி-நாகினி மற்றும் டூமர்-லெனா என்றும் தமிழில் சீதா குடைவரை என்று அழைக்கப்படுகின்றது. சிவனுக்காக குடையப்பட்ட குடைவரையில் இருக்கும் சிற்பத்தொகுப்புகள் அனைத்தும் அளவில் மிகப் பெரியவைகளாகக் காணப்படுகின்றன. இக்குடைவரை பொயு 8 ஆம் நூற்றாண்டில் குடையப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 26 குழிவான பட்டை தூண்களும், அரைத்தூண்களும் மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. மஹாமண்டபம் மூன்று பகுதிகளாக்கப் பிரிக்கப்பட்டு மூன்று பக்கங்கங்களிலும் இருந்து வர படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு புறமும் வாயில்களுடன் உள்ள கருவறையில் தாய்ப்பாறையில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வாயில்களிலும் பக்கத்திற்கு இருவராக எட்டு துவாரபாலகர்கள், பணிப் பெண்களுடன் மிகப்பெரிய அளவில் விதானத்தைத் தொடும் உயரத்தில் காணப்படுகின்றனர்.   

முகமண்டபம், சுற்றுப்பதை சுவர்கள், முழுவதையும் அழகான சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. சிற்பங்களை செதுக்கிய சிற்பியின் கலை மற்றும் கற்பனைத்திறமையும், சரியான விகிதத்தில் கலந்து செய்து இருப்பது அவருடைய திறமையை எடுத்துக் காட்டுகின்றது. கிழக்கில் இருக்கும் பலகனியில் இருந்து மழைகாலத்தில் மழைநீர் அருவிபோல கொட்டுவது ஒருவித பரவசத்தைத் அடையச் செய்கின்றது.  

This cave temple ( 37.50 X 40.50 m ) locally known as "dumar-lena" or "sita-ki-nahani", after a beautifully cut figure of river goddess Yamuna mistakenly named as Sita. It is dedicated to Siva and impresses the visitor by its sheer massiveness and enormous figure sculptures.

Datable to 8th century CE, the temple has a unique ground plan. The 26 fluted pillars with the corresponding pilasters support the whole structure. The main hall is divided into central nave and two aisles on either side. The hall is entered through three porticos on the South, North and West respectively. The sanctum containing a Siva-Lingam in the back wing of the cave has four entrances on the cardinal directions. Huge doorkeepers, accompanied by female attendants, guard each side. The doorkeepers are very tall reaching almost to the roof of the cave.

The walls of the portico and verandah are carved with beautiful sculptures. The artist has chiseled out the sculptures with beautiful compositions and great imagination and skill. The proportionate figures have beautiful hairdo, fine-thin drapery and striking ornaments. During monsoon the stream becomes active and water cascades down on the eastern side of the cave, offering a fantastic view of the water fall from the eastern balcony.


Andhakasura vadha
Ravana anugraha murti  - Ravana shaking the mount kailash
 Nataraja

Huge doorkeepers, accompanied by female attendants, guard each side. The doorkeepers are very tall reaching almost to the roof of the cave.

Huge doorkeepers, accompanied by female attendants, guard each side. The doorkeepers are very tall reaching almost to the roof of the cave.
Huge doorkeepers, accompanied by female attendants, guard each side. The doorkeepers are very tall reaching almost to the roof of the cave.
Shiva as Kalyana Sundarar with Parvati
 A Lady sculpture - A proportionate figures have beautiful hairdo, fine-thin drapery and striking ornaments.



Ref:
1.  Display boards installed at the caves.
3.  UNESCO Heritage convention Web site : https://whc.unesco.org/en/list/243/

NOTE:
The Cave will be closed on TUESDAYs
Cave will be kept opened between 06.00 hrs to 18.00 hrs ( Sunrise to Sunset )

HOW TO REACH
The ellora Caves is about  30 KM from Aurangabad, 103 KM from Ajantha, 173 KM from Nashik and 319 KM from Mumbai.
Nearest Airport Aurangabad .
Nearest Railway Station is Mukundwadi.

LOCATION OF THE CAVES    : CLICK HERE

--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment