Sunday 14 January 2024

Elephanta caves / எலிபண்டா குகைகள், Elephanta Island, Maharasta State, India.

The Visit to this Elephanta caves was a part of “Elephanta, Ajanta and Ellora Heritage walk” organized by Enthisai Historical Heritage Walk Group, from December 23rd to 26th December 2023.


மஹாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, ஜவகர்லால் நேரு கப்பல்தளத்திற்கு அருகே உள்ள ஒருதீவுதான் எலிபண்டாதீவு. இத்தீவு கரபுரி என்றும் அழைக்கப்படுகின்றது. இக்குடைவரைகள் குடையப்படுவதற்கு முன்பே, இங்கு ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இரு காலக்கட்டங்களில் குடையப்பட்ட இந்துமதத்தைச் சார்ந்த 5 குடைவரைகளும் பௌத்த மதத்தைச்சார்ந்த 2 குடைவரைகளும் இத்தீவின் மலைகளில் காணப்படுகின்றன. இக்குடைவரைகள் ஆறாம் நூற்றாண்டை சார்ந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். போர்த்துகீசியர்கள் காலத்தில் இக்குடைவரைச் சிற்பங்கள் துப்பாக்கியின் இலக்கு பயிற்சிக்கு உள்ளாகி பெருத்த சேதத்தை சந்தித்தது. அதனுடைய எச்சங்கள்தான் நமக்கு தற்போது காணக்கிடைப்பது. இக்குடைவரைகளில் முதலாவது குடைவரையைத் தவிர மற்ற குடைவரைகளில் காண்பதற்கு சிறப்பாக ஏதும் இல்லை.   

இத்தீவில் கிடைத்த பசால்ட் கல்லால் செதுக்கப்பட்ட யானையின் பெயரால் இத்தீவு எலிபண்டா தீவு என போர்த்துகீசியர்கள் காலத்தில் அழைக்கப்பட்டு பின்பு அப்பெயரே நிலைத்துவிட்டது. ( தற்போது இந்த யானை சிற்பம் மும்பை வீரமாதா ஜிஜாபாய் போஸ்லே தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது ). இக்குடைவரைக் குகைகள் UNESCO நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக 1987ல் அறிவிக்கப்பட்டது. தற்போது மத்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படுகின்றது.

ஐந்து குடைவரைகளுள் முதலாவது, சிவனின் வேவ்வேறு வடிவங்களுக்காக குடையப்பட்ட அளவில் பெரியதும், இருபுறமும் உப சன்னதிகளைக் உள்ளடக்கிய வடக்கு நோக்கியது குடைவரை. இந்த முதலாம் திரிமூர்த்தி குடைவரை என அழைக்கப்படுகின்றது. இக்குடைவரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பெரிய மண்டபம், இரண்டு திறந்த மண்டபங்கள், நடுவே சிவலிங்கம் மற்றும் எட்டு துவாரபாலகர்களுடன் நான்கு பக்கமும் வாயில்களுடன் கூடிய சிவன் சன்னதிகளுடன் குடையப்பட்டது. குடைவரையின் நான்கு பக்கமும் யோகேஸ்வரர், ராவண அனுக்கிரமூர்த்தி, சிவன் & பார்வதி, அர்தநாரீஸ்வரர், மஹேஸ்வரர், கங்காதரர், கல்யாணசுந்தரர், அந்தகாசுரன்வதம், மற்றும் நடராஜர் ஆகிய ஒன்பது சிற்பத் தொகுதிகள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. குடைவரையின் மண்டபத்தூண்கள், அவற்றில் காணப்படும் கட்டுமானக்கலை, இறை உருவங்கள் புனிதத்தன்மையுடனும் உயிர்ப்புடனும், காணப்படுவது சாளுக்கியர்களின் கட்டிடக்கலை சாயலை நினைவூட்டுகின்றது. மேலும் துவாரபாலகர்கள், சிற்பத்தில் காணப்படும் பெண்கள், அவர்களின் சிகை அலங்காரங்கள் குப்தர்கால கலைப்பாணியை பறைசாற்றுகின்றது. அதிலும் சிறப்பாக மஹேஸ்வரமூர்த்தியின் சிற்பத்தொகுப்பு சிவனின் முத்தொழிலான ஆக்கல், காத்தல் அழித்தல் என காட்டப்பட்டு இருப்பது சாளுக்கியர்- குப்தர் சிற்பக்கலையின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றது. மண்டபத்தின் சுவர் மற்றும் விதானப் பகுதிகளில் முன்காலத்தில் பல்வேறு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு இருந்ததை, தற்போது காணப்படும் எச்சங்களில் இருந்து அறியமுடிகின்றது.
 

This is one of the 5, UNESCO World Heritage Sites of Maharashtra State in India. The rest are, Ajanta Caves, Ellora Caves, Chhatrapati Shivaji Maharaj Terminus and The Victorian and Art Deco Ensemble. This Elephanta Caves was declared as a Centrally Protected Monument vide notification No. 2704-a, dated 26.5.1909 and thereafter inscribed by the UNESCO as a World Heritage Site in 1987.

The Elephanta Island is named after a massive stone image of an elephant placed there, now displayed in the “Veermata Jijabai Bhosale Garden, Mumbai”. Elephanta Island originally known as Gharapuri, is famous for rock-cut caves which are seven in number, out of them five are on the western hill, while two are at the eastern top of the hillock.

Out of five caves, the largest one is exclusively carved with various manifestations of Sri Shiva, and is known as Trimurti cave. The cave is facing north. The main cave consists of a massive hall divided into five bays, a small sarvatobhadra shrine with two lateral open courts and two shrines on the east and west.

The Shiva shrine in the main hall is square with four entrances flanked by eight door keepers, one on either side. The four corners of the large hall have nine elegantly carved panels of Shiva including the Yogeshwara ( Lord of yoga ), Ravananugraha, Shiva-Parvati, Ardhanarishvara, Maheshmurti, Gangadhara, Kalyan Sundaramurti, Andhakasura vadha and Nataraja Shiva ( cosmic dancer ). The massive but graceful figures of divinities, guardians and certain architectural features such as the square pillar with cushion capitals suggest Chalukyan influence and depiction of mountains and clouds and the hairstyles of woman are reminiscent of Gupta art. The ceiling of the main cave is believed to have been originally painted with different colours which have been lost. The Maheshwara murti of Shiva is depicted on the southern wall in a recess with three aspects of creation, protection, and destruction revealing a masterpiece of Chalukyan-Gupta art.


 
A Shiva Sannidhi with 4 entrances and 8 Dwarapalakas in the cave no 1. 
A Shiva Sannidhi with 4 entrances and 8 Dwarapalakas in the cave no 1. 

The circular pedestal in the eastern open courtyard, marks the seat of Rishabam (bull) the vehicle of Shiva. On the eastern court, there is another sandhara prasada shrine with flaxing Shaiva-dwarapalakas and an interesting panel of Ashta matrikas (eight mother goddesses) on the left (western) wall of the temple is a representative piece of art, though badly eroded. The matrikas are flanked by Kartikeya and Ganesha on either side. Another small shrine and a large cistern is also located on the western courtyard. These caves are stylistically dated to mid-6th Century CE.

The other caves on the eastern hill of Elephanta are plain and are lesser ornamented. Of these, two caves ( Cave nos 2 & 5 ) are incomplete. The other antiquarian remains found at Elephanta include a stupa ( 2nd century BCE ) at the top of the eastern hillock, several rock-cut cisterns, water reservoirs, Kshatrapa coins of the 4th  century CE and some sculptures like Mahishasuramardini, four headed image of Brahma and Vishnu.

The Cave No 3 and 4 has few remains of the original cave. In that the Dwarapalakas and lintel sculptures are completely damaged.

MAHAYOGI SHIVA
மஹாயோகி சிற்பத்தொகுப்பு முகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இங்கு சிவன் பத்மாசனத்தின் மீதுமர்ந்து ஆழ்ந்ததியானத்தில் காணப்படுகின்றார். முகம் சிந்திக்கும் பாவனையில் காணப்படுகின்றது. கையில் இருக்கும் தண்டத்தை இரண்டு நாகங்கள் சுற்றி இருக்கின்றன. ஜடாமகுடத்தில் கிரீடமும், அதையும் தாண்டி, முடிக்கற்றைகள் தேளின் மீது புரண்டு காணப்படுகின்றது. சிற்பத்தொகுப்பில் சிவனின் இருபுறமும் பறக்கும் நிலையில் கந்தர்வர்களும், பிரம்மா, இந்திரன் மற்றும் மஹாவிஷ்ணு அவரர்களுக்குரிய வாகனங்களான, அன்னம், யானை மற்றும் கருடன் மீது அமர்ந்து காணப்படுகின்றனர். இதேபோன்ற சிற்பத்தொகுப்பு எல்லோராவின் 29ஆம் எண் குடைவரையில் லகுலீசராக ஆய்வாளர்களால் இனம் காணப்படுகின்றார். 

The much mutilated wall panel of Shiva depicted in yogic ( padmasana ) posture in deep meditation with contemplative expression on his face. Shiva is seated on a lotus, the stalk of which is held by two naga images. He wears jata mukuta, adorned with diadem and hair locks spread over shoulder. The flying celestial images, Brahma, Indra and Maha Vishnu riding on their vehicles swan, elephant and eagle ( Garuda ) respectively are shown either side of his head. Another similar depiction is reported in cave 29 at Ellora where Lakulisha is shown in meditation.



RAVANA ANUGRAHA-MURTI ( RAVANA SHAKING MOUNTAIN KAILASH )
இந்த ராவணஅனுக்கிரகமூர்த்தி புராண நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு சிற்பத்தொகுப்பாக வடிக்கப்பட்டு உள்ளது. சிவனின் தீவிர பக்தனான அசுரர் குல அரசன் ராவணன் புஷ்பவிமானத்தில் கைலாசமலயைக் கடக்கும் போது, கார்த்திகேயன் / முருகனால் தடுக்கப்படுகின்றான். அதனால் கோபமுற்ற இராவணன் கைலாசத்தை பெயர்த்து எடுத்து தன் நாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சிப்பதை இச்சிற்பத் தொகுப்பு மிக விரிவாக சித்தரிக்கின்றது.

இச்சிற்பத் தொகுப்பில் சிவன் எட்டு கரங்களுடனும் நெற்றிக்கண்ணுடனும் அமர்ந்த நிலையில் வலதுகால் மடித்து இடது கால் பத்மாசனத்தில் இருந்து தொங்கும் நிலையில் காட்டப்பட்டு இருக்கின்றார். பார்வதி சிவனின் இடப்புறம் அமர்ந்து காணப்படுகின்றார். சிவன் ஜடாமகுடம், பூநூல், இடுப்புக்கு கீழ் ஆடை, கைகள் மற்றும் கழுத்திலும் ஆபரணங்கள் காட்டப்பட்டு உள்ளது. சிவனின் மூன்றாவது நெற்றிக்கண் ஞானத்தின் முதிர்ந்த நிலையைக் காட்டுகின்றது. சிவனையும் பார்வதியையும் சுற்றி பிரபஞ்ச கணங்கள், தேவர்கள், பக்தர்கள் மற்றும் கந்தர்வர்கள் பறக்கும் நிலையில் காட்டப்பட்டு உள்ளனர். பிருங்கி முனிவர் எலும்பும் தோலுடனும், விநாயகர் மற்றும் மஹாவிஷ்ணு கருடன் மீது அமர்ந்து காணப்படுகின்றனர்.

Ravana, the demon King is the devout worshipper of Shiva but he was proud. One day Ravana is passing in Pushpak aircraft over the Kailash mountain. As Siva Parvati are residing on Kailasa, Kartikeya does not allow Ravana passage. Angered by it Ravana tries to shake the mountain with all his might. This episode is depicted here.

It is the most elaborate panel of Elephanta, showing the story of Ravana shaking ( Miting ) mountain Kailash, depicted below the mount Kailash where Shiva is sporting with his consort Parvati. Shiva is trinetra, eight armed, seated with his folded right leg in leisure and Parvati on the left, who's figure is mutilated due to weathering. The third aye of Shiva symbolizing his supreme knowledge of the universe. He is surrounded by several cosmic figures, ganas, devotees and family deities while flying figures are hovering above. The sage Bhringi with skeletal body and Ganesha are standing on the left whereas Vishnu on Garuda are shown on the right of Shiva. Bedecked Shiva wears jata mukuta, ekavall, armlet, sacred thread and adhovastra.





SHIVA-PARVATI
மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் சிவன் & பார்வதி சிற்பத்தொகுதி காணப்படுகின்றது. சிவனும் பார்வதியும் மேடை மீது அமர்ந்து இருக்க அதற்கும் கீழே உள்ள சிற்பங்கள் இன்னவென்று அறியமுடியாத அளவிற்கு சேதம் அடைந்து உள்ளது. சிவன் நான்கு கரங்களுடன், இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் இடதுபக்கம் சாய்ந்து காணப்படுகின்றார். நான்கு கரங்களும் சேதப்படுத்தப்பட்டு இருந்தாலும், அவரின் தலைக்கு பின்புறம் உள்ள ஒளிவட்ட அமைப்பு மட்டும் சேதம் அடையாமல் காணப்படுகின்றது. பார்வதி ஆடை அணிகலன்களுடன் வலதுகாலை மடித்து இடது காலைத்தொங்கவிட்ட வண்ணம் அமர்ந்து காணப்படுகின்றார். பார்வதின் முகபாவனை சிறிது நானம் கலந்த கோபத்துடன் காணப்படுகின்றது. இருபணிப்பெண்கள் இருகுழந்தைகளுடன் ( விநாயகர் மற்றும் கார்த்திகேயனாக இருக்கலாம் ) இருவருக்கும் இடையே நின்ற நிலையில் காணப்படுகின்றனர். சிவன் பார்வதியைச் சுற்றிலும், தேவர்கள், அவர்களின் தேவியர்கள், கந்தர்வர்கள், பறக்கும் வித்யாதரர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்களும் காணப்படுகின்றனர். மிகவும் அழிந்த நிலையில் ரிஷபம் மற்றும், பூத கணங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் மட்டுமே காணப்படுகின்றது  

The panel on the south-east corner of the hall, portrays Shiva-Parvati seated on a high platform in a cave, and below it there are several figures carved which are now totally lost. The four-armed Shiva seated with folded legs is slightly bending towards his left. His all four hands are broken and the face is completely mutilated, only the halo behind is intact. Parvati is seated with her right leg folded and the left hand is hanging down. She wore beautiful coiffure bedecked with gems and ornaments. A female acolyte is standing between Shiva and Parvati with a child who may be Karttikeya and another acolyte on the left appears to hold Ganesa. The panel is representing Parvati in the attitude of mana, that is in a somewhat affectionate but angry mood. She has slightly turned her face towards left, but the action is not clear. The god is surrounded by heavenly creatures, gods-goddesses, flying vidyadharas, and rishis. A faint outline of Rishabam and several playing ganas could be seen below the panel.


GANGADHARA-MURTHY
இச்சிற்பத்தொகுப்பு, பகீரதனுக்காக கங்கை சிவனின் முடிக்கற்றையின் ஊடாக தரையில் இறங்கும் புராண நிகழ்வை சித்தரிக்கின்றது. பகிரதனின் தவத்தைமெச்சி, மூன்று தலைகளுடன் கங்கையைத்தன் முடிக்கற்றையின் வழியே, பகீரதனின் முன்னோர்களான சாகராவின் சந்ததியர் மோட்சம் அடைய தரையில் இறக்கும் நிகழ்வே அப்புராணக்கதை. கங்கையின் மூன்று தலைகளும் மந்தாகினி, பகீரதி மற்றும் போகவதி ஆறுகளின் கூட்டு என்பதனையே சித்தரிக்கின்றது. இறைவனின் முடிக்கற்றையில் இருந்து கங்கை வருவதை பொறாமை கொண்டு தலையைத் திருப்பிக்கொள்ள சிவனின் சமாதானத்தால் பார்வதியின் முகத்தில் ஒருவித நானம் கலந்த கோபம் காணப்படுவதை மிக அழகாக சிற்பி செதுக்கியது போற்றத்தக்கது.  

The panel depicts Lord Shiva's central role in the great cosmic event of the descent of the river goddess Ganga from heaven. The descent of river Ganga is described in the Puranas ( Hindu Scriptures ) that King Bhagiratha, grandson of Sagara, performed severe austerities to propitiate the celestial river. Pleased with the King's penance, the goddess agreed to descend from the heaven but needed a terrestrial support to resist the force of her descent. Lord Shiva happy with king Bhagirath's sacrifices, agreed to receive the powerful Ganga who cascaded through his matted locks and revived Sagara's sons. Accordingly, river goddess is shown with three heads, representing three aspects of Ganga when she traversed the three worlds, namely Mandakini, Bhagirathi and Bhogavati. In the centre of this fine panel are the figures of Shiva and consort Parvati, Ganga, sister of Parvati and her rival is a triple headed diminutive shape above Shiva's crown. Parvati, jealous of her Lord's proximity to the river goddess is shown with her head slightly turned away from him, while one of Shiva's arms extends towards Parvati to reassure her. To the right of Shiva kneels the devout figure of King Bhagiratha.





ARDHANARISHWAR - SHIVA & PARVATI
மஹேஸ்வரமூர்த்தி சிற்பத்தொகுப்பின் அருகே உள்ள சிற்பத்தொகுதிதான், குறைந்த சேதாரத்துடன் காணப்படும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தொகுதி. சிவன் பார்வதிக்கு தன் இடதுபாகத்தைக் கொடுத்த புராணத்தை ஒட்டி செதுக்கப்பட்ட சிற்பத்தொகுதி. சிவன் ரிஷபத்தின் மீது சாய்ந்தநிலையில் வலது கை பல்லவ ஹஸ்தத்துடன் காணப்படுகின்றார். இடது பாகம் பார்வதி, பெண்மைக்கே உரிய நளினத்துடனும் ஆடை ஆபரணங்கள், சிகை அலங்காரம், நிற்கும் தோரணை, ஒல்லியான இடை, இடையின் வளைவு போன்றவை அழகாகக் செதுக்கப்பட்டு உள்ளது. பிரம்ம, மஹாவிஷ்ணு, யானைமீது இந்திரன், தேவர்களும் காட்டப்பட்டுள்ளனர். கார்த்திகேயன், வருணன் மஹரவாகனத்துடனும் கீழே காட்டப்பட்டுள்ளனர்.   .  

In the later panel to the left of the Maheshwara murti, is comparatively well preserved, only the lower portions being somewhat damaged. Shiva, one half of whose body is female, leans against the bull Rishabam, the upper hands holding a snake and a mirror. The fusion of the male and female bodies symbolizes the Divine Unity, in which all opposites are resolved. The swelling breast and the rounded curve of hip of the feminine body are to the right and the masculine chest and straight slim hips are to the left. The face itself is androgynous in an enigmatic way being both male and female. Brahma and Vishnu are at their usual places, the former being accompanied by Indra on his elephant. Below them is the war god Kumara, with elaborately dressed hair. In front of Vishnu is Varuna, god of the waters, riding on a makara, and below are two mutilated but superb figures of women, one of whom holds a chauri across her shoulders. Numerous other figures crowd the compartment so that it appears to be the most elaborate one in the cave temple.




ANDHAKASURA-VADHA
இந்த மிகவும் சேதம் அடைந்த சிற்பத்தொகுப்பு அந்தகாசுரனை சிவன் வதம் செய்யும் புராணக் கதையைச் சித்தரிக்கின்றது. தவத்தினால், அந்தகாசுரன் பிரம்மாவிடம் இருந்து, தன்னை யார் கொன்றாலும், தன்னிடம் இருந்து சிந்தும் ஒவ்வொரு இரத்ததுளியிலும், இருந்து அதிகபலம் வாய்ந்த அசுரன் வரவேண்டும் என வரம் பெற்றுக்கொள்கின்றான். இதை அறிந்த சிவன் சாமுண்டியை உருவாக்கி, சிந்தும் ஒவ்வொரு இத்தத்துளியையும் தரையில் விழாமல், கபாலத்தில் பிடித்துக்கொள்ள செய்கின்றார். அந்தகாசுரன் இறக்கும் தருவாயில் தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கின்றான், அவனுடைய பிரார்த்தனைக்கு செவிசாய்த்த இறைவன், அவனுடைய இறப்பிற்கு பிறகு அந்தகாசுரனை தன் கணங்களுக்கு தலைவனாக்குகின்றார். இப்புராணக்கதையே சிறபத்தொகுப்பாக செதுக்கப்பட்டு உள்ளது.     

This mutilated panel depicts the story of destruction of demon Andhakasura by Shiva. Andhakasura, a demon king enamoured by the beauty of Parvati, attempts to abduct the goddess. Shiva impaled the demon, but a boon from Brahma has made Andhaka invincible. Each drop of blood shed by the demon produce a mighty new demon, making it difficult for Shiva to destroy Andhaka. Then Shiva created the goddess Chamunda to hold Andhaka's blood in skull cup. Shiva was about to kill Andhaka, when the demon praised him and after many penances obtained his pardon. Andhaka was appointed as a chief commander of Shiva's ganas ( dwarf attendants ).

In this panel, Shiva dancing with destructive fury consumes the entire scene. Behind him, is the hide of the elephant-demon Nila, friend of Andhaka, whom Shiva has overcome by dancing him to death. The god is depicted furious face, has fangs, his eyebrows are knotted and his third eye is bulging in his forehead. His dramatic appearance with the elephant hide held in upper two hands, a fearsome three-quarter profile and an array of weapons in his several hands and skull cup in left lower hand, is a truly formidable work of art.



NATARAJA SHIVA
சிவனின் நடனத்தின் வேகத்தையும், சுறுசுறுப்பையும், மிக நேர்த்தியாக, ஒரு சிற்பத் தொகுப்பாக செதுக்கப்பட்டு உள்ளது. சிவன் இங்கு எட்டு கரங்களுடன், அதில் ஒருகை யானையின் தும்பிக்கை போன்ற முத்திரையுடன் லலித நடனத்தில் காணப்படுகின்றார். சிவனின் இத்தெய்வீக நடனத்தை கந்தர்வர்கள், ரிஷிகள், பிரம்மா மற்றும் மஹாவிஷ்ணு காண்பதைப் போன்று செதுக்கப்பட்டு உள்ளது. சிவன் முடியப்பட்ட ஜடாமகுடத்துடன், ஆடை, கழுத்து, காதுகளில் ஆபரணங்கள் அணிந்து காணப்படுகின்றார். மா பார்வதி சிவனின் இடது புறமும், அவரின் இரு குழந்தைகளான கார்த்திகேயன் மற்றும் விநாயகர் வலது புறமும் காணப்படுகின்றனர். இந்நிலையை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவிற்கு மிகவும் நேர்த்தியாக சிற்பி இத்தொகுப்பை செதுக்கி இருப்பது மிகவும் பாரட்டுக்குரியது.    

Shiva as Nataraja ( Lord of dance ) is one of the finest representations of the god as it is marked by tremendous force and dynamism. An eight-armed Shiva is depicted in a flexed posture as he presents a dance posture known as lalita (charming), a pose that is graceful and elegant. The god places his front arm in the gaja hasta-mudra, like an elephant's trunk, and the corresponding arm has three fingers of the palm straight and open. This celestial dance was witnessed by several celestial bodies, gandharvas, rishis, Brahma and Vishnu who are riding on their respective vehicles / Vahanas. His consort Parvati is also shown on the left and their son Ganesha on the right are spellbound at the right. A male musician with verdhvaka type drum is shown near the right leg. Shiva is shown with stylistically arranged matted hair, ekavali studded with gems, torque, ear pendants and plain bracelets. Out of eight hands all of them are broken except one of the left hand. Probably Shiva holds battle axe in the right hand and figure is damaged below the waist


KALYANASUNDARA MURTI. 
இந்த சிற்பத்தொகுதி சிவன் பார்வதியின் கல்யாணக் கோலத்தைச் சித்தரிக்கின்றது. இத்தொகுப்பில் பார்வதி வலதுபக்கம் காட்டப்பட்டு இருக்கின்றார். பார்வதி ஒருவித நானத்துடன் தரையை நோக்கிக்காட்டப்பட்டு இருப்பது மிக அருமை. மிக அதிக அளவில் சேதமடைந்து இருந்தாலும், மஹாவிஷ்ணு, தேவர், தேவதைகள், மற்றும் சந்திரனும் காணப்படுகின்றனர்.  

This panel showing Shiva's marriage to Parvati. In contrast to the Andhaka panel, it is full of lyrical charm and a gentle poetic quality. The handsome, benevolent face of the God is full of serenity. His one hand rests on a thick scarf tied across the hips while the other supports Parvati. She is to Shiva's right, indicating that the actual marriage has not yet taken place, for even in the present days the bride is to the right before marriage but as wife stands always to her husband's left. Her eyes are downcast, a shy figure, being pushed towards her husband by her father who is giving her away in marriage. Brahma, who squats at the bottom to our right, is officiating as the priest at the ceremony. Behind him is Vishnu, wearing a tall cap. To the extreme left the Moon God / Chandra, identified by a partially visible crescent behind him, carries an auspicious vase, while below him is a much mutilated Shauri bearer. Flying angels hover in the sky on clouds to watch the ceremony. Though the panel is greatly damaged, the figure of Parvati is carefully  executed and of fine proportions.


SHIVA TEMPLE ( EASTERN WING )
பிரதான குடைவரையின் கிழக்கு பகுதியில் மேலும் ஒரு சிறிய குடைவரை காணப்படுகின்றது. இக்குடைவரை கருவறை, மூடப்பட்ட இடைநாழி, மற்றும் முன்புறம் மண்டபத்துடன், அதற்கு செல்ல படிக்கட்டுகளும் குடையப்பட்டு உள்ளது. கருவறையின் வாயிலில் இரு துவாரபாலகர்கள் காட்டப்பட்டு உள்ளனர். கருவறையில் தாய்பாறையிலேயே வடிக்கப்பட்ட சிவலிங்கம் காணப்படுகின்றது. இக்குடைவரை 6ஆம் நூற்றாண்டில் குடையப்பட்டு இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இக்குடைவரையின் மேற்கு பகுதியில், விநாயகர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருடன் எட்டு மாதர் சிற்பங்கள் அவரவர் வாகனங்களுடன் செதுக்கப்பட்டு உள்ளனர். அந்த எட்டு மாதர்களில் கடைசியில் காட்டப்பட்டு உள்ள அம்பாள் மட்டும் சின்னத்துடன் காட்டப்பட்டு இருக்கின்றார். இந்த எட்டு மாதர்களும், சிவனின் அந்தகாசுரன் வதத்தின் போது கீழே சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்தையும் கபாலத்தில் ஏந்திய மாதர்கள் எனவும், அந்தகாசுரவத புராணத்துடன் சமபந்தப்பட்டவர்கள் என்பதும் நினைவுகூரத்தக்கது.   

Facing north, the temple is located on the east of main Trimurti cave sharing common forecourt, consists of a sanctum, covered vestibule and mandapa supported on four pillars, approached by a flight of steps followed by chandrashila. The sanctum has elaborated dwarashakhas, with two tall Shaiva dwarapalakas on either side little further to the entrance. This raised plinth of the temple has projected stairs on either side of the sopana with curved balustrades of vaulted corbel-like tarangas, a chandrashila at slightly lower level serving as the upapitha and two flanking lions on either side. The sanctum enshrines a lingam as an object of worship. Stylistically, the cave is contemporary to main cave and dated to 6th century CE.

To the western side of mandapa, eight mother goddess figures with their respective vahanas are carved in the rear wall with flanking Ganesha and Kartikeya on the right and left respectively, though these are mutilated. The only mother goddess, which is unique here being the last one having a dhwaja on the top. It may be recalled that they are associated with Shiva in his battle with Andhakasura, they collected the blood dripping from demon's body in the bowl.









SHIVA TEMPLE (WESTERN WING)
பிரதான குடைவரையின் மேற்கு பகுதியில் சிவனுக்கான தனியானதொரு குடைவரை சிறிய அளவில் காணப்படுகின்றது. கருவறை மிகச்சிறியதாகவும், சிவலிங்கம் தாய்பாறையிலும், தூண்களுடன் முகமண்டபமும், அதனை அடைய படிக்கட்டுகளும் செதுக்கப்பட்டு உள்ளது. வாயிலின் இருபுறமும் வாயிற்காப்போரும், அவர்களின் கால்களுக்கு அருகே இரு கணங்களும் காணப்படுகின்றனர். கருவறையின் பின்புறம் நர்த்தனம் ஆடும் சிவன் அவரைச்சுற்றி பிரம்மா, மஹாவிஷ்ணு, இந்திரன், யமன், பார்வதியுடன் காணப்படுகின்றனர். மேலும் இரு சிற்பத்தொகுதிகள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் கருவறை வாயிலின் இருபுறமும் காணப்படுகின்றது. இடதுபுறம் நாகர் தலைவன் தாமரை மலரை ஏந்தி நிற்க சிவன் இருகரங்களுடன் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். ஒரு கை தொடை மீதும் மற்றொரு கை உயர்ந்த நிலையிலும் காணப்படுகின்றது. அக்காலத்தில் அங்கு தங்கி இருந்த ஆச்சார்யர்களின் குடிநீர் தேவைக்காக பிரகாரத்தில் ஒரு நீர்த் தொட்டியும் வெட்டப்பட்டு உள்ளது

This small shrine is located in the western open courtyard of the main cave 1, consists of a small squarish sanctum and a pillared verandah or mandapa to the east, accessible by a flight of steps. The sanctum has small entrance on the back wall of verandah and contains a small Shiva linga. The entrance is flanked by two guardians with fat figures above and two demons below at his feet. Besides, a mutilated figure of six- armed dancing Shiva with galaxy of divine figures are carved around Shiva including Brahma, Vishnu, Indra, Yama, Parvati, etc. are carved on the south. There are two sculptured panels in this cave carved on both left and right wall of verandah, which though are badly mutilated. On the north wall or the right two armed Shiva is shown seated on a lotus the stem of which is held by Naga kings. His left hand rests on the thigh and the right is slightly raised. A large water cistern cut into the parent rock to the south of the courtyard was the main source of drinking water for the occupant acharyas.

 Dwarapalaka 


CAVE 2
This is an incomplete and unfinished cave.
 

CAVE 3
Facing east, the cave consists of a three cells in a row, being main shrine, it is large in size and placed in the centre, sharing a common verandah supported on six tall massive pillars on the front, which were restored by the ASI. The central shrine have a rock-cut pitha /peedam in the centre, once enshrining a linga which is missing now. The sanctum has elegantly carved trishakha doorway with large flanking dwarapalakas, though mutilated in condition but still preserved the essence of Rashtrakuta art. Another rectangular recess was on the left (north) now in ruined condition perhaps meant for residential purpose.




A view from Cave No 4, hole 

CAVE 4
This dilapidated cave is facing east, comprising four cells in the rear wall and an attached cell on the left side sharing a common long verandah. The façade of the cave is very dilapidated. The central shrine has plain trishakha doorway flanked by Shiva dwarapalakas with their acolytes on either side. The shrine is dedicated to Shiva, enshrining a linga placed over the moulded pitha / peedam. The figures carved on the either side of doorway are mutilated, but still preserve the distant connection of Gupta art. These caves are stylistically dated 6th Century CE.








CAVE 5
An incomplete cave  and damaged. Some of the portions of the ceiling and pillars are fallen down. 

Ref
1.  Display boards installed at the caves
2.  Unesco Heritage Convention Web Site https://whc.unesco.org/en/list/244/

NOTE
The Cave will be kept open between 09.00 hrs to 17.00 hrs.
The cave will be kept closed on MONDAY, and visitors are allowed.  

HOW TO REACH
Elephanta Island may be accessed through ferry service operating from Mumbai’s India Gate. The Journey will take about an hour.

LOCATION OF THE CAVES    : CLICK HERE
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment