14th
October 2019.
This
is the second visit to Kunnathur Lakshmi Narayana Perumal Temple on 14th
October 2019. This Perumal temple is a
part of the ancient Shiva and Amman temples of Kunnathur. During 1st
visit to this Sri Lakshmi Narayana Perumal Temple, the temple was preparing for
Maha Samprokshanam. As per the inscription, during the 12th Century, this
place, Kunnathur, was called Kundrathur (குன்றத்தூர்), which got corrupted to the present name of
Kunnathur. Now Kunnathur is also called “Air Compressor City”, which is used
for drilling bore wells.
Moolavar : Sri Lakshmi Narayana Perumal
Consort : Sri Lakshmi
Some
of the important features of this temple are...
This
temple is opposite the Sri Kundrapureeswarar Shiva Temple on a straight line
facing east. The Deepasthambham is in front of the temple. The entrance arch has a stucco image of Sri Lakshmi Narayanan. The bell tower is on the left side
of the praharam. Balipeedam and Garudalwar are in front of the sanctum
sanctorum. Moolavar
is in a sitting posture. There is no Thayar Sannidhi since Sri Lakshmi is
sitting on the left Lap of Sri Narayana Perumal.
ARCHITECTURE
The
temple complex consists of the sanctum sanctorum, antarala, and artha mandapam. The
sanctum sanctorum is on the Upana and adhistanam with theepatta kumudam. The
prastaram consists of valapi and kapotam with nasi kudus. The sanctum sanctorum walls have the Deva koshtas / niches and are empty
without idols.
HISTORY AND
INSCRIPTION:
The
temple has 19 Inscriptions. The inscriptions belong to Sundara Pandyan (1312 CE), Veerapandiyan (1289 CE), Hoysala King Veera Vallalan-III (14th
Century), and Vijayanagara period inscriptions from the 16th and 17th centuries. As per the inscriptions, this place was called Kundrathur, and
the temple was called Veerapandiya Vinnagaram.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின் 27 ஆம் ஆட்சியாண்டு,
பொஆ 1312 ஆம் ஆண்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கருவறை
தெற்குச் சுவரில் உள்ள வீரசோழ வளநாட்டு முகுந்தனூரான
விக்கிரம சோழச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் தங்களூர் அணைக்கு கல்லிட்டுப் பழுது
பார்க்க குன்னத்தூர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் பண்டாரத்தில் 200 பணம் கடன் பெற்றனர். அதற்கு 13 கலம் நெல்லும் 26
பணமும் வட்டியாகத் தந்நதனர். அதை வருடத்தில் இரு தவணைகளாகச்
செலுத்தினர். அதன்மூலம் இறைவன் திருநட்சத்திரமான திருவாதிரையில் தீர்த்தவிழா
எடுத்துப் பதினாறு வைணவர்கட்குச் சோறிட வேண்டும் என்றும் கூறினர். வட்டியை
விளையிலும், விளையாது ஒழியிலும் ஊர் கேடு போனாலும் அளிக்க
ஒப்புக் கொண்டதைப் பதிவு செய்கின்றது.
The Veerapandian period inscription speaks about getting a loan of 200 panam from the treasury of this temple by the Sabha of (Public of the Village) Veera Chozha Valanattu Mugunthanoor, also called Vikrama Chozha Chathurvedimangalam, to rectify the dam of their village. 13 kalam paddy and 26 panam will be given to this temple as interest. The interest has to be paid whether they get a yield from the field or not, or if anything happens to their village.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின்
22 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1307 ஆம் ஆண்டு, இலட்சுமி நாராயணப்
பெருமாள் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் பிறர் அளித்த கொடை ஒன்றை ஏற்றுக் கொண்ட
விபரத்தைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் வீரபாண்டியனின்
24 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1289 ஆம் ஆண்டு, இலட்சுமி நாராயணப்
பெருமாள் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, வீரசோழ வளநாட்டு அருளாளநாதன் திருவிடையாட்டம் முகுந்தனூரான விக்கிரமசோழச்
சதுர்வேதிமங்கலத்துச் சபையார் குன்னத்தூர்க் கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீஜெயந்தி
கொண்டாடவும், அந்நாளுக்கு உண்டான அமுதபடிக்கும், வெஞ்சனங்களுக்கும் ஆண்டுதோறும் எட்டுக்கலம் நெல் கொடுப்பதாகவும் குன்னத்தூர்
இறைவன் திருமுன் ஒப்புக்கொண்டதைப் பதிவு செய்கின்றது.
The Kongu Pandya king Veerapandya's 24th reign year inscription records the donation of Paddy and money, etc., to celebrate Sri Jayanthi of Perumal, the burning of Sandhya Deepam, the perpetual lamp, and Naivedyam.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின்
3 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1288 ஆம் ஆண்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, இராஜாதிராஜ
வளநாட்டுத் திருக்கழுமலை வளநாட்டு அகரம் குலோத்துங்கசோழச் சதுர்வேதிமங்கலத்து
புவனி முழுவதுடைச்சேரியைச் சேர்ந்த திருநடைமாடபட்டன் நாயகரான சந்திரசேகரபட்டனிடம் 12
பணம் பெற்று கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன்
அழகப்பெருமாள் சந்தியாதீபம் எரிக்க ஒப்புக் கொண்டதைப் பதிவு செய்கின்றது.
கொங்கு பாண்டிய அரசர் வீரபாண்டியனின்
15 ஆம் ஆட்சியாண்டு, பொஆ1280 ஆம் ஆண்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயில் அர்த்த மண்டபம் வடக்குச் சுவர் மேல் பகுதியில் உள்ள தமிழ் கிரந்த
கல்வெட்டு, குறுப்பு நாட்டு வியாபரிகளும் தாளூன்றியான விக்கிரம
சோழபுர நகரத்தார்களும் இணைந்து இலட்சுமி நாராயணப் பெருமாளுக்கு அமுதுபடிக்குத்
தினமும் காணத்தால் நாழி அரிசியாக ஆண்டுக்கு நெல் பத்துக் கலமும், கறியமுதுக்காகவும் வெஞ்சனத்திற்காகவும் ஆண்டு ஒன்றுக்குப் பத்துப் பணமும்
சித்திரை மாதம் விற்ற விலைப்படி கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். ஒரு குடியிருந்தாலும்
கொடுப்போம் என்றும், கொடுக்காத போது மண்கலம் தகர்த்து
வெண்கலம் பறித்துக் கொள்ளலாம் என்றும் எழுதித் தந்ததைப் பதிவு செய்கின்றது.
பல ஊர் வணிகர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
Thingalur, Vijayamangalam, and Kunnathur merchants had given an undertaking to this temple to give money, 10 panam and 10 kalam paddy per year for the daily Naivedyam and vegetables.
பொஆ 16 ஆம் நூற்றாண்டு இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகா மண்டப
வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு, குன்றத்தூர் வேளாளரில்
சாத்துவாயர் குலகேசன் அம்பலத்தாடுவான் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சந்தியா
தீபம் வைக்க இராசி பாலையன் புள்ளிப்பணம் 12 வைத்ததைப்
பதிவு செய்கின்றது. (கிருஷ்ண தேவராயர் (1509-1529), அச்சுததேவராயர் (1529-1542) காலத்தில் கொங்கு
நாட்டுப் பகுதியில் உயர் அலுவலனாக இருந்த பாலையதேவன் தன் பெயரில் வெளியிட்ட நாணயம்
பாலையன் புள்ளிப் பணம்).
References
1. ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 2
2. Annual Report on South Indian
Epigraphy, Year – 1967 - 68.
இப்பகுதியில் 6 கல்வெட்டுகளின் விபரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கல்வெட்டுக்கள் இப்பதிவின் கடைசியில்…
Inscriptions- Kuruppu Nattu Kundrathur
Inscriptions
Inscriptions
Inscriptions
Inscriptions
An inscription stone slab in front of the temple
TEMPLE TIMINGS
The
temple will be kept open from 07.00 hrs to 12.00 hrs, and from 18.00 hrs to
20.00 hrs.
CONTACT
DETAILS
Aravinthan
Bhattar may be contacted on his mobile 7010913709 for further details, and his
residence is in front of the temple.
HOW TO
REACH :
This
temple is on the Kunnathur to Nambiyur
road.
Kunnathur
is at the junction of Tiruppur to Gobichettipalayam and Erode/ Perundurai to
Tiruppur via Perumanallur.
Kunnathur is 40 km from Erode, 21 km from
Gobichettipalayam, and 28 km from Tiruppur
The nearest Railway Station is Tiruppur.
LOCATION OF
THE TEMPLE: CLICK HERE
கல்வெட்டுக்களின் தொடர்ச்சி….
பாண்டிய அரசன் வீரபாண்டிய தேவரின் 15 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1280 ஆம் ஆண்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகா மண்டப வடபுறச் சுவரில் உள்ள
கல்வெட்டு, தாளூன்றியான விக்கிரமசோழபுரத்து ஊரும் ஊராளிகளும்
குன்றத்தூர் வீரபாண்டிய விண்ணகர நாயனார் நாச்சியார் லட்சுமி நாராயணப் பெருமாள்
மடிமேல் வல்லியார்க்கு நந்தாவிளக்கு வைக்க மாதம் இரண்டு பணம் கொடுப்பதாக ஒப்புக்
கொண்டதைப் பதிவு செய்கின்றது.
பொஆ 17 ஆம் நூற்றாண்டு இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டப
நுழைவு கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, ஈரோட்டைச் சேர்ந்த
சமைய மந்திரி என்பவர் நம்மாள்வாரையும், எம்பெருமாள் வாரையும்
எழுந்தருளச் செய்ததைப் பதிவு செய்கின்றது.
பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின் 27
ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1312 ஆம் ஆண்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயில் மகாமண்டப நுழைவு கிழக்கு, வடபுறச் சுவரில்
உள்ள கல்வெட்டு, பாண்டி மண்டலத்துக் கருங்குடி நாட்டு விசையங்குடி
அரையன் சூரிய தேவனான குவலயத்தரையன் இறைவன் திருமுன்பு சந்தியா தீபம் வைக்க
பன்னிரண்டு பணம் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
பொஆ 14 ஆம் நூற்றாண்டு போசள அரசன் வீரவல்லாளனின்
இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டபம் கிழக்கு வடபுறச் சுவர் நுழைவு வாயிலில்
உள்ள கல்வெட்டு, இலட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் திருப்பணியின்
போது ஸ்நபன மண்டபத்தில் வடகிழக்குக் காலின் மேல் போதிகையைக் குன்றத்தூர் வேளாளரில்
கணவாளர் குல உடையாண்டான் அழகப்பெருமாள் தாதன்பிள்ளை ஆண்டானான காலிங்கராயன் தன்
தருமமாகச் செய்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின்
27 ஆம் ஆட்சியாண்டு, பொஆ1312 ஆம் ஆண்டு இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயில் மகாமண்டப கிழக்கு சுவர் நுழைவு இடப்புறம் உள்ள கல்வெட்டு குன்றத்தூர் வேளாளரில் தேவந்தை குல நக்காண்டான் இனியபிள்ளை என்பவர் ஒரு
விளக்கு எரிக்கப் பத்து பணம் கொடையாகக் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின் 27 ஆம் ஆட்சியண்டு, பொஆ 1312 ஆம் ஆண்டு, இலட்சுமி
நாராயணப் பெருமாள் கோயில் கிழக்குச் சுவரில் (நுழைவாயில்
இடப்புறம்) உள்ள கல்வெட்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன் அழகப்பெருமாள், சோழ மண்டலத்துக் குலோத்துங்கசோழ வளநாட்டு பெரும்போருடையான்
திருஞானசம்பந்தனிடம் இருபத்து நான்கு பணம் பெற்றுக் கொண்டு இரண்டு சந்தியா தீபம்
எரிக்க ஒப்புக்கொண்டதைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின் 28 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1313 ஆம் ஆண்டு, இலட்சுமி
நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டபம் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன்
அழகப்பெருமாள், மலையாளரில் தில்லைக்கூத்தனிடம் பன்னிரண்டு
பணம் பெற்றுக் கொண்டு ஒரு சந்தியா தீபம் எரிக்க ஒப்புக்கொண்டதைப் பதிவு
செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின் 28 ஆம் ஆட்சியாண்டு பொஆ1313 ஆம் ஆண்டு, இலட்சுமி
நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டபத் தென் சுவரில் உள்ள கல்வெட்டு, மலைமண்டலத்து ஏறாளபுரத்து வியாபாரி உமையன் காற்கரையான் கருணாலை என்பவர்
இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன்
அழகப்பெருமாளிடம் பன்னிரண்டு பணம் கொடுத்து இறைவன் திரு முன்பு தன் பெயரில் ஒரு
சந்தியாதீபம் எரிக்க வேண்டிக் கொண்டதைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசர் வீரபாண்டியனின் 12 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1277 ஆம் ஆண்டு, இலட்சுமி
நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டபம் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன்
அழகப்பெருமாள் கோயில் காணியுடையவராகக் குறிக்கப் பெறுவதைப் பதிவு
செய்கின்றது.
போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளனின், பொஆ 14 ஆம் நூற்றாண்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயில் மகாமண்டபத் தெற்குச் சுவர் அடிப்பகுதியில் உள்ள கல்வெட்டு, கோயில் காணியுடைய கருமாணிக்கன் அழகப்பெருமாள், பாரத்வாஜ
கோத்திரத் திருவேங்கடதாசன் ஆகியோர் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளதை பதிவு
செய்கின்றது.
போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளன்,
பொஆ 14 ஆம் நூற்றாண்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில்
மகாமண்டபம் தெற்கு, மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு நாயக்கர் வாசல் காரிய அதிகாரி தாண்டவன் இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயிலில் நந்தா விளக்கு வைத்ததைப் பதிவு செய்கின்றது.
பாண்டிய அரசன் வீரபாண்டியனின் 15 ஆம்
ஆட்சியாண்டு, பொஆ 1280 ஆம் ஆண்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயில் தனிக்கல்லில் உள்ள கல்வெட்டு, இலட்சுமிநாராயணப்
பெருமாள் நம்பிமர்க்கும், ஸ்ரீ வைஷ்ணவர்கட்கும்
வீரசோழவளநாட்டு ஸ்ரீநல்லூர் ஆன அமரபுயங்கரச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் எழுதிக்
கொடுத்த சாசனம். இலட்சுமி நாராயணப் பெருமாளுக்கு விளையிலும், விளையாதொழியிலும், ஊர் கேடு போனாலும் தவறாமல் நெல்
அளப்பதாகக் கூறியுள்ளதைப் பதிவு செய்கின்றது.
பொஆ 17 ஆம் நூற்றாண்டு இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டப
நுழைவு கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, ஈரோட்டைச் சேர்ந்த
சமைய மந்திரி என்பவர் நம்மாள்வாரையும், எம்பெருமாள்வாரையும்
எழுந்தருளச் செய்ததைப் பதிவு செய்கின்றது.
பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின் 27
ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1312 ஆம் ஆண்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயில் மகாமண்டப நுழைவு கிழக்கு, வடபுறச் சுவரில்
உள்ள கல்வெட்டு, பாண்டி மண்டலத்துக் கருங்குடி நாட்டு விசையங்குடி
அரையன் சூரிய தேவனான குவலயத்தரையன் இறைவன் திருமுன்பு சந்தியா தீபம் வைக்க
பன்னிரண்டு பணம் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
பொஆ 14 ஆம் நூற்றாண்டு போசள அரசன் வீரவல்லாளனின்
இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டபம் கிழக்கு வடபுறச் சுவர் நுழைவு வாயிலில்
உள்ள கல்வெட்டு, இலட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் திருப்பணியின்
போது ஸ்நபன மண்டபத்தில் வடகிழக்குக் காலின் மேல் போதிகையைக் குன்றத்தூர் வேளாளரில்
கணவாளர் குல உடையாண்டான் அழகப்பெருமாள் தாதன்பிள்ளை ஆண்டானான காலிங்கராயன் தன்
தருமமாகச் செய்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின்
27 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1312 ஆம் ஆண்டு இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயில் மகாமண்டப கிழக்கு சுவர் நுழைவு இடப்புறம் உள்ள கல்வெட்டு குன்றத்தூர் வேளாளரில் தேவந்தை குல நக்காண்டான் இனியபிள்ளை என்பவர் ஒரு
விளக்கு எரிக்கப் பத்து பணம் கொடையாகக் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின் 27 ஆம் ஆட்சியண்டு, பொஆ 1312 ஆம் ஆண்டு, இலட்சுமி
நாராயணப் பெருமாள் கோயில் கிழக்குச் சுவரில் (நுழைவாயில்
இடப்புறம்) உள்ள கல்வெட்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன் அழகப்பெருமாள், சோழ மண்டலத்துக் குலோத்துங்கசோழ வளநாட்டு பெரும்போருடையான்
திருஞானசம்பந்தனிடம் இருபத்து நான்கு பணம் பெற்றுக் கொண்டு இரண்டு சந்தியா தீபம்
எரிக்க ஒப்புக்கொண்டதைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின் 28 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1313 ஆம் ஆண்டு, இலட்சுமி
நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டபம் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன்
அழகப்பெருமாள், மலையாளரில் தில்லைக்கூத்தனிடம் பன்னிரண்டு
பணம் பெற்றுக் கொண்டு ஒரு சந்தியா தீபம் எரிக்க ஒப்புக்கொண்டதைப் பதிவு
செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசன் சுந்தரபாண்டியனின் 28 ஆம் ஆட்சியாண்டு பொஆ1313 ஆம் ஆண்டு, இலட்சுமி
நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டபத் தென் சுவரில் உள்ள கல்வெட்டு, மலைமண்டலத்து ஏறாளபுரத்து வியாபாரி உமையன் காற்கரையான் கருணாலை என்பவர்
இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன்
அழகப்பெருமாளிடம் பன்னிரண்டு பணம் கொடுத்து இறைவன் திரு முன்பு தன் பெயரில் ஒரு
சந்தியாதீபம் எரிக்க வேண்டிக் கொண்டதைப் பதிவு செய்கின்றது.
கொங்குப் பாண்டிய அரசர் வீரபாண்டியனின் 12 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1277 ஆம் ஆண்டு, இலட்சுமி
நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டபம் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன்
அழகப்பெருமாள் கோயில் காணியுடையவராகக் குறிக்கப் பெறுவதைப் பதிவு
செய்கின்றது.
போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளனின், பொஆ 14 ஆம் நூற்றாண்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயில் மகாமண்டபத் தெற்குச் சுவர் அடிப்பகுதியில் உள்ள கல்வெட்டு, கோயில் காணியுடைய கருமாணிக்கன் அழகப்பெருமாள், பாரத்வாஜ
கோத்திரத் திருவேங்கடதாசன் ஆகியோர் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளதை பதிவு
செய்கின்றது.
போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளன்,
பொஆ 14 ஆம் நூற்றாண்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில்
மகாமண்டபம் தெற்கு, மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு நாயக்கர் வாசல் காரிய அதிகாரி தாண்டவன் இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயிலில் நந்தா விளக்கு வைத்ததைப் பதிவு செய்கின்றது.
பாண்டிய அரசன் வீரபாண்டியனின் 15 ஆம்
ஆட்சியாண்டு, பொஆ 1280 ஆம் ஆண்டு, இலட்சுமி நாராயணப் பெருமாள்
கோயில் தனிக்கல்லில் உள்ள கல்வெட்டு, இலட்சுமிநாராயணப்
பெருமாள் நம்பிமர்க்கும், ஸ்ரீ வைஷ்ணவர்கட்கும்
வீரசோழவளநாட்டு ஸ்ரீநல்லூர் ஆன அமரபுயங்கரச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் எழுதிக்
கொடுத்த சாசனம். இலட்சுமி நாராயணப் பெருமாளுக்கு விளையிலும், விளையாதொழியிலும், ஊர் கேடு போனாலும் தவறாமல் நெல்
அளப்பதாகக் கூறியுள்ளதைப் பதிவு செய்கின்றது.
பொஆ 12 – 13 ஆம் நூற்றாண்டு இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில்
சுற்றுச் சுவரில் உள்ள கல்லில் உள்ள கல்வெட்டு, காலிங்கராயர்
என்ற அலுவலர் காலத்தில் குறுப்பு நாட்டு ஊரும் ஊராளிகளும் ஒரு ஊர் வரிகள்
அனைத்தும் கோயிலுக்கு அளிக்கும் வண்ணம் திருவிடையாட்ட இறையிலியாக அளிக்கப்பட்டது.
விசயமங்கலம், திங்களூர், குன்னத்தூர்
கணக்கு அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளதைப் பதிவு செய்கின்றது.
பொ ஆ 13 ஆம் நூற்றாண்டு, கொங்குப்பாண்டிய அரசன்
வீரபாண்டியனின்(?), இலட்சுமி நாராயணப்
பெருமாள் கோயில் தென்புற மதில் சுவரில் உள்ள கல்வெட்டு, இலட்சுமி
நாராயணப் பெருமாள் கோயிலுக்கு அமுதுபடி உள்ளிட்ட வகைக்காக வெள்ளிரவெளி என்று
பெயரிட்டு மக்களைக் குடியேற்றியதைப் பதிவு செய்கின்றது.
The Veerapandiyan period Kalingarayan inscription speaks about Naivedyam and the vegetable requirements for this temple, and Bhattars, or the Vaishnavas, the village Velliraveli was formed with a water pond and fields after transforming the forest.
References
1. ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 2
2. Annual Report on South Indian
Epigraphy, Year – 1967 - 68
---OM SHIVAYA NAMA---


No comments:
Post a Comment