The visit to this temple at Kempanapura was a part
of the Chozha period Temples Visit on the ancient trade route from Chamarajanagar to
Kollegal in Karnataka State (Ganga Padi). The temple was once on the Trade route, now it is
in the midst of the Coconut farm and about a KM away from the Village
Kempanapura.
Moolavar: Sri
Moolasthaneswara
Some of the salient
features of this temple are... The temple faces west with a small Rishabam on a pillar and a small deepasthambam. Moolavar is a little tall on square avudayar looks like the Chozha period. In the artha mandapam 3
Rishabas, Chandran, Suryan, Maha Vishnu, 2 Shiva Lingas and two Vinayagar.
ARCHITECTUREThe temple is in dilapidated condition and the sanctum sanctorum has become the habitation site
for the bats. The Temple consists of sanctum sanctorum, antarala, and ardha
mandapam. The artha mandapam was supported by 4 pillars and the ceiling is supported
by Chozha period vettu pothiyal. The Pillars has kalasam, Kumbam and palakai.
The temple doesn’t
follow any agama construction and looks like a dilapidated mandapa. There is no
Vimana over the sanctum sanctorum. The temple is covered completely with weeds,
plants, and shrubs.
HISTORY & INSCRIPTIONThe temple is believed
to be the oldest in Karnataka and Constructed by the Traders during Chozha King Rajaraja’s 6th
reign Year. As per the latter period inscription
of Traders Thisai Ainootruvar’s, this place was called “Mudikonda Chozha
Mandalathu Gangai Konda Chozha valanattu pathi- Nattu Velur alias Rajathi Raja
Chathurvedimangalam”. Later this place was utilized as a staying place of the
soldiers to safeguard the traders and was called “Eriveera Pattinam”. This place has become the Trading center
on the Trade route. The “Eriveera Pattinam” in Tamil, was translated to Kannada
as “Kempanapura” – a burning Torch which signifies the red colour).
The inscription in Hale Kannada records the following. The inscription belongs to Rajarajachozha-I’s
6th reign year. Rajaraja Chozha was mentioned in this inscription as
“Chozha Narayanan”.
கெம்பணபுரா தென்கிழக்காசியத்தின் திக்கு வரை தன் கிளைகளை பரப்பிய சோழ மெனும் விருட்சத்திற்க்கு கர்நாடகத்தில் விதையூன்றப்பட்ட நிலமிது தஞ்சையம்பதியின் சிவபாதசேகரன் கங்கபாடியின் சோழ நாராணயனாய் உருவெடுத்த ஊர். கெம்பணபுரா! திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிக குழுவின் 11 ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு இவ்வூரை "முடி கொண்ட சோழ மண்டலத்து கங்கை கொண்ட சோழ வளநாட்டு பதி- நாட்டு வேலூரான ராஜாதிராஜ சதுர்வேதி மங்கலம்”, என்று குறிப்பிடுகிறது. பின்னர் இவ்வூர் வணிக குழுக்களின் பாதுகாப்பிற்காக படைகள் தங்கும் முகாம் ஏற்படுத்தப்பட்டு எரிவீரபட்டினம் என பெயர் மாற்றம் பெற்றதையும் கூறுகிறது அக்காலத்தே இன்றைய சாம்ராஜ்நகரம்-கொள்ளேகால் செல்லும் சாலை வணிக குழுக்கள் பயணப்பட்ட பெருவழி பாதையாகவும் அவ்வாறு செல்லும் வணிகர்களுக்கும் அவரது வியாபாரப் பொருட்களுக்கும் பாதுகாப்பிற்காக வணிக குழுக்கள் ஏற்படுத்திய படைவீரர்கள் தங்குமிடமாக இந்த எரிவீரபட்டினம் திகழ்ந்தது எனலாம் இந்த பெயரே கன்னட மொழியில் மொழி பெயர்ப்பு செய்து கெம்பணபுராவாகியது என கருதலாம் ( கெம்பு –எரியும் நெருப்பு சிவப்பு வண்ணத்தை குறிப்பது )
சோழநாராயணனின் ஹள கன்னட மொழி கல்வெட்டு;-பெரும்பாலும் பாசி படிந்திருந்த்தும் ஒரு சில ஹள கன்னட எழுத்துக்களைக் கொண்டு அவை 10ம் நூற்றாண்டைச் சார்ந்தது என அடையாளம் காண முடிகின்றது.
கல்வெட்டு வரிகள்-; பதினைந்து வரிகள் கொண்டது1.ஸ்வஸ்திஸ்ரீ விமலாயஸ ப்ரஸ்திஆதன அனுபமித குணகாண2. வாசம் சதாவிஸ்தார ஆதன கிலமஹிப்ரஸ்து தானநென நெகுலதா
சோளநா3.ராயணன விஜயராஜ்யா பிருவித்தி சுகசங்கதா வினோத4. தம் சளுகதமிரே சகருபகால அந்த சம்வஸ்தரஹங்க 913 கரசம்5. வத்ஸம் ப்ரவர்தி சுத்துரே சத்வாச
அப்யந்தரத பௌஸ்ய மாசத6.....உத்தராயணசங்கிராந்தி யத்துவேஸ்வ7.ரண்யவத ஸ்ரீ சோமரசிபட்டரகர்கே கல்லூரி பல ...........15.சுந்தராம் ஷஷ்டிண சர்சஹஸ்ராணி நிஸ்வாயாம் ஜாயதெ கிரிமி
The
inscription praises Rajaraja Chozha and mentions the year as Saka 913 ( 991 CE
which is the 6th Reign year of Rajaraja-I ). The inscription records the
donation of 2 Kanthuka land situated at Polleya Giriherur, which belongs to
Kallur, and a land measuring 10 Kanthuka at Nellikundu in Bhokinur. The lands were gifted as Irayili for creating a nandavanam, feeding the Devotees and Vidhya Dhan ( Education ). These endowments were
entrusted to a Sivachariyar called Sri Somarasi Battaraka
கல்வெட்டு செய்தி-;செழிப்பும் வளமுடையதுமான விஜய ராஜ்ஜியத்தின் வெற்றி வேந்தன்... நற்கீர்த்தியினன்.. ஒப்புயர்வற்ற எண்ணிலடங்கா நற்குணங்களை தன்னகத்தே கொண்டு நாளும் பல்கி பெருகும் நற்பண்புகளின் பிறப்பிடம் தானடைந்த புகழினால் அரசர்களெல்லாம் தன் தாள் நிழலையடைந்து வணங்கி நிற்கும் படியான அரசரகளுக்கெல்லாம் அரசன் சோழநாராயணின் ஆட்சியில் இப்புவியெங்கும் நல்லமைதியும், ஞானமும் நிறைந்திருந்தது. சக வருஷம் 913 காரா புஷ்ய மாதத்து உத்திராயண சங்கிராந்தியன்று ( டிச.24. பொ.யு.991 ) கல்லூரை சேர்ந்த பொல்லேயா கிரிஹெரூரிலுள்ள நஞ்சை பூமியில் 2கந்துகா நிலத்தையும் நந்தவனம் மற்றும் போகினூரிலுள்ள நெல்லிகுண்டு என்னுமிடத்தில் 10 கந்துகா அளவுள்ள நிலத்தை இறையிலியாக கல்வி கொடையாகவும்( வித்யாதனம்) அடியார்களுக்கு உணவு அளிக்கவும், கோயில் புனரமைப்பு பணிக்காகவும் தானமாக வழங்கி இந்த அறப்பணியை மேற்கொள்ளசிவாச்சாரியார் ஸ்ரீ சோமராசி- பட்டாராகாவை நியமித்ததையும் இக்கல்வெட்டு உரைக்கின்றது.
இங்கு சோழ நாராயணன் எனக்குறிப்பிடுவது நமது இராஜராஜனைத்தான்.
சக வருடம் 913 என்பது பொ.யு.
991 ஆறாவது ஆடசியாண்டு இராஜராஜனின் 8 ம் ஆட்சியாண்டு
முதலாகத்தான் மெய்கீர்த்தி பயன்பாட்டிற்க்கு வந்ததை அறிகிறோம் பின்னர் மாளம்பி கல்வெட்டு
குறிப்பிடம்1004 குடகு ஹனசோகேவில் மனீஜா தலமையில் கொங்காள்வாருடன் போர் 1006ல் அப்ரமேயன் தலமையில் 18 தளபதிகளுடனான
கலியூர் போர் பின்னர் இராஜராஜனின் 29 வது ஆட்சியாண்டு
1012 பெலகுலா நாட்டின் மீது இராஜேந்திரன் மேற் கொண்ட தாக்குதல் ( பலமூரி கல்வெட்டு ) இவ்வாறு
இராஜராஜனின் 6 வது ஆட்சியாண்டு முதல் 29 வது ஆட்சியாண்டு வரை மைசூர், அதனை சுற்றியுள்ள
கங்க நாட்டிற்கு உட்பட்ட பகுதிகளை ஆட்சி செய்து வந்த கங்கர், சாளுக்கியர் நுளம்பர்
கொங்காள்வார், ஹொய்சாளர் தங்களது பகுதியைக் சோழர்கள் கவர்ந்து கொள்வதை தடுக்க போராடியதும்
கங்கபாடியை கைக்கொள்வது அவ்வளவு சுலபமாக நடந்தேறவில்லை என்பதும் மேற்கண்ட சான்றுகள் துணை கொண்டு அறிகிறோம்
( தமிழ் வர்ணனைகள் திரு ஜான் பீட்டர் )
There is also another Inscription in Devanagari
script tablet erected in front of the temple.
TEMPLE TIMINGS There is no door to the temple and always kept
open.
HOW TO REACH:This place Kempanapura is
on the bus route from Chamarajanagar to Kollegal. 16.3 km from Chamarajanagar, 30 Km
from Kollegal, 61.57 km from Mysore, and 172 km from Bangalore.
YOUTUBE LINKhttps://youtu.be/E_LXFSzQy7k--- OM
SHIVAYA NAMA ---
கெம்பணபுரா
பெரும்பாலும் பாசி படிந்திருந்த்தும் ஒரு சில ஹள கன்னட எழுத்துக்களைக் கொண்டு அவை 10ம் நூற்றாண்டைச் சார்ந்தது என அடையாளம் காண முடிகின்றது.
TEMPLE TIMINGS
YOUTUBE LINK
https://youtu.be/E_LXFSzQy7k
--- OM
SHIVAYA NAMA ---
No comments:
Post a Comment