Chamrajanagar
is a District Headquarters in the south part of Karnataka. This place was
originally called “Arikothara” during the 12th Century and later changed
to “Chamarajanagar” during the Chamaraja Wodayar period.
During
our recent visit to Chozha period Temples on the ancient trade route from
Chamarajanagar to Kollegal in Karnataka State (Gangapadi), our first visit
was to this Jinalaya at Chamarajanagar. Also, we saw the remains of a Jain
temple/Basadi at Ambale. As per the inscriptions, this Jain Temple at
Chamarajanagar was called “Punisa Jinalaya and “Thirikooda Basadi” and the
same is called “Sri Vijaya Paarthava Nandhaswamy Janabasadi”. The temple is
being maintained beautifully and is in worship.
சாம்ராஜநகர் கர்நாடகத்தின் தெற்குப்பகுதியில், தமிழகத்தின் எல்லையோர
மாவட்டத்தில் அமைந்த ஒரு
நகரம். மைசூர் மன்னர்
சாம்ராஜ உடையார் பெயரால்
தற்போது அழைக்கப்படுகின்றது. இப்பெயர்
மாற்றம் அடைவதற்கு முன்பு
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு
முன்பே சமண சமயத்தவர்கள்
அங்கு வாழ்ந்து வந்திருக்கின்றனர் மற்றும் அப்பகுதி
“அரிகொத்தாரா” என அழைக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை கர்நாடகத்தில்
தமிழக எல்லையோர மாவட்டங்களில்,
சோழச்சுவடுகள் மற்றும் வணிக
வழியைக் காணச் சென்றபோது
இரு இடங்களில் சமண
சமய சுவடுகளைக் காண
முடிந்தது. முதலில் நாங்கள்
சென்றது சாம்ராஜ்நகரின் மையப்
பகுதியில் அமைந்துள்ள இச்சமண
சமயக்கோயில் 12 ஆம் நூற்றாண்டுகளில் “திரிகூட பசதி”
என்றும், ”புனிசா ஜினலயா”
என்றும் அழைக்கப்பட்டு தற்போது
"ஸ்ரீவிஜய பார்த்தவ நந்தஸ்வாமி
ஜனபசதி" என அழைக்கப்படுகின்றது. கோயில் நல்ல
முறையில் பராமரிக்கப்பட்டு சமண
சமயத்தினரால் வழிபாடு நடத்தபட்டு
வருகிறது.
ARCHITECTURE
The
temple is facing north with an entrance mandapa. The Manasthamaba is after the
entrance mandapa and before 8 pillared mandapa. The temple complex consists of
Sanctum sanctorum, antarala, artha mandapam and mukha mandapam. The artha mandapa
has entrances from north and east with the shobana mandapam. A stucco image of
Parsvanath in sitting posture is on the top of Mukha mandapa. Moolavar Sri 1008
Parshvanath Bhagwan is in a sitting posture and Yaksha. Dharanendra and Yakshi
Padmavathy are in the artha mandapa. At the front, on the right side sannadhi
for Kshethra palaka Brahma Deva.
Ganga
period “Kotravai (Mahishamardhini)” and a Nisdhadi stone are installed on the
wall of the Temple. The architecture of this temple has the influence of Vishnu
Temples.
Kotravai and Nishadi Stone
கோயில் வடக்கு நோக்கி
கருவரை இடைநாழி, அர்த்தமண்டபம்,
திறந்த முகமண்டபம் என்ற
அமைப்பில் கட்டப்பட்டு உள்ளது.
கருவரையில் மூலவர் பார்ஸ்வநாதர்
அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டு
உள்ளது. அர்த்தமண்டபத்தில் பார்ஸ்வநாதரின் நின்றநிலை சிற்பம்,
அவரின் இயக்கன் தரனேந்தரா
மற்றும் பத்மாவதி சிற்பங்கள்
காணப்படுகின்றன. இக்காலத்தில்
இச்சமணபசதி மாற்றம் கண்டு
பெரும்பாலும் வைணவகூறுகளை உட்கொண்டுள்ளதை காண்கிறோம். முன்புறம்
பார்சவநாதரின் காவல் தெய்வங்களான
யக்ஷ்சன் யக்ஷ்சிக்கு மாற்றாக"
ஸ்ரீசேத்ரபால குதிரை பிரம்ம
தேவர்" சந்நிதி கோயிலின்
வலப்புறத்தில் அமைந்துள்ளது தற்காலத்திய
கருங்கல்லிலான மான ஸ்தம்பம்
ஒன்று முன் வாயில்
மண்டபத்திற்க்கும் 8 தூண்
மண்டபத்திற்கும் இடையே நிறுவப்பட்டுள்ளது கோயிலின் வெளிப்புற
சுவற்றில் கங்கர் காலத்திய
கொற்றவை( மஹிஷா) ஒன்றும்
சமணர் சிற்பங்களும் பதிக்கப்பட்டுள்ளதை காண்கிறோம்.
HISTORY AND
INSCRIPTIONS
The
inscriptions help us to decide the antiquity of the temple. The Hoysala King
Vishnuvardhan Bittiga, who was ruling the Gangawadi including Kongu, from the
capital at Talakadu and Kolalapura. It registers that a grant of Land
and oil from an oil mill, for this Thirikuda basadi named Punisa Jinalaya, which
he had caused to be erected, as also other basadis in “Arakottara” in “Enne
Nadu” by Punisa-dandadhipa. (A minister in charge of War & Peace (Shanthivigrahi), Punisamayya-II, (1117 CE). The record eulogizes the donor
whose genealogy is given as follows.
The
donor Thandanayaka Punisammayya-II is stated to have fought against the
Thodavas, Kongas, Malayalas, etc,. He held the office of “sandhivigrahi” also.
He got renovated basadis in Gangavadi. Ajita Munipatti of Dravidanvaya was the
religious preceptor of the donor. It may be noted that the donor's grandfather
Punisa Chamupa bears the epithet “Sasana-Vachaka-Chakravarti”.
The
record is dated Saka 1039 (1117 CE), Durmukhi, Jyestha ba 1, Mularkkaravara, which might mean moola nakshatra, and Arkkavara. And on the given thithi, this
nakshatra occurred. But the other details, of date, are not quite regular. The
given saka year was current and the day was Monday. After the mention of the
thithi, the letter va is engraved which normally would stand for the weekday, Vaddavara. Vaddavara may mean either Tuesday or Saturday. The given
details do not substantiate that. The corresponding date would be 1116 CE, May
29th, Monday.
Another
Veera Narasimhan –III’s inscription record is stated as Saka 1201, Vishu Pushya su 15, Sunday Uthrayana- sankramana.
The given thithi occurred on 1281 CE, December 25th when the weekday
was Thursday. The given Saka year also is a mistake, for
1203.
It
refers to the rule Hoysala Veera Narasimha-III, and registers the grant of income
from, Niru-kuli ( Water tax...?), nichandi (?), house tax, beduge, etc, due from
the devotees, to this basadi of Arakuthara
by all the gavundas, of the place including Bitti- Gavunda, son of Keta
Gavunda and Dase-gavunda son of Allala
Gavunda
வரலாறு & கல்வெட்டு
இங்கு காணப்பெறும் இரண்டு கல்வெட்டுகள் இக்கோயிலின் பழமையினை அறிந்து கொள்ள உதவுகிறது. ஹொய்சாள / போசாள மன்னன் விஷ்ணு வர்த்தனின் கீழ் போர் மற்றும் அமைதி (Sandhivigrahi)
துறையின் அமைச்சராக பணியாற்றிய இரண்டாம் புனிசமய்யா என்பவனின் 1117 ஆம் ஆண்டு கல்வெட்டு மற்றும் கோயிலின் மேற்கு பகுதியிலுள்ள மூன்றாம் வீர நரசிம்மனின் நிலக்கொடை மற்றும் வரிகளை தானமாக வழங்க கூறிய கல்வெட்டுமாகும்.
அக்காலத்தில் இந்த ஸ்தலமானது எண்ணெய் நாட்டிலுள்ள “அரகொத்தாரா” எனவும் இச்சமணக்கோயில் “புனிச ஜினாலயா” எனவும் அழைக்கப்பெற்று வந்ததையறிகிறோம். “புனிசராஜாதண்டதிபா” என்றும் “புனிசமய்யா” என்று குறிப்பிடப்படும் இவர் கட்டியதால் அவரின் பெயர் கொண்டு “புனிசஜினலயா” என வழங்கப்பட்டதை அறிகின்றோம். இவர் அமாத்ய குலத்தை சேர்ந்த தீவிர சமண சமயத்தினர் என்றும் திரவிடாண்யாவின் அஜித முனிபதி என்ற சமண அடியாரை தன் குருவாகக் கொண்டு பல சமண பசதிகளை (கோயில்) எழுப்பியும் பழுதடைந்தவற்றை சீரமைத்து சீரிய பணியாற்றியதை கங்கபாடியில் கிடைக்கும் கல்வெட்டு சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
மைசூருக்கருகே பசதி ஹொசகோட்டே என்னுமிடத்தில் மூலஸ்தான பசதி என்னும் கோயிலை இவர் மற்றும் இவரது மனைவி ஜக்கியப்பேவும் இணைந்து எடுப்பித்துள்ளனர். மேலும் ஹொய்சாள அரசின் கீழ் இவரது வம்சத்தினர் பரம்மரையாக தண்டநாயக்கர்களாக அமைச்சர்களாக பணியாற்றி வந்ததை வம்சாவளியை விவரிக்கும் இக்கல்வெட்டின் துணை கொண்டு அறியலாம் இவரது பாட்டனார் புனிச்சம்பய்யா சாசன- வாசக- சக்கரவர்த்தி என குறிப்பிடப்படுகிறார் மேலும் புனிசய்யா தனது மைந்தனுக்கு பிட்டிகா என பெயர் சூட்டியதிலிருந்து தன் அரசன் பால் வைத்திருந்த பற்றுதலை நாம் புரிந்து கொள்ள முடிகிறது விஷ்ணு வர்தனின் இயற்பெயர் பிட்டிகாதேவனாகும்.
தனது அரசனுடன் பல்வேறு போர்களின் இணைந்து சீரிய பங்காற்றியவன் தோடர்களையும் கொங்கர்களையும், மலையாளிகளயும் அடக்கி வெற்றி கண்டவன் தனது அரசனின் ஆணையின் பேரில் போலுவர்களை அடக்கியதோடு அயல் நாட்டிலும் நுழைந்து வசப்படுத்தினான் என இவனது பராக்கிரமங்களை இந்த பார்சவ நாதர் கோயிலிலுள்ள கல்வெட்டு விவரிக்கிறது.
TEMPLE TIMINGS
The Chamarajanagar Temple will be
kept open between 09.00 hrs to 10.00 hrs.
HOW TO REACH:
The temple at Chamarajanagar is in
the heart of the City.
The Temple is 650 meters from the Bus
stand, 1.3 km from the Railway station, 60 km from Mysuru / Mysore, and 181 km from Bangalore.
No comments:
Post a Comment