Tuesday, 22 August 2023

Chozha Bronze Sculptures, Stone Sculptures and Copper inscription Plates of Madras Museum, Chennai, Tamil Nadu.

The display of antiques like Bronze & stone sculptures and inscriptions on stone & Copper plates at Madras Museum are brought from various parts of Madras Presidency, which spanned up to the present Uttara Karnataka. The antiques reflect the past history and social life of the people of that part of India. The antiques displayed are collected over a period, since 1938 CE, when the Madras Museum was started, by Dr.F.H.Gravely. The antiques belong to the early centuries before the Christian era to the recent times. Of these, the Buddha images brought from Amaravati in the present state of Andhra Pradesh are the earliest, dated around the 3rd Century BCE.

The collections are categorised as Bronzes of Shaivite and Vaishnavite, Jainism, Buddhism, Stone sculptures of all religions, Hero stones, Copper plates, etc, and displayed in different galleries. More than 1500 Bronze images are on display. Madras Museum is one of the largest and best collections of Metal images in the whole world.

In the Bronze images category, the Pallava bronzes, include the images of little Somaskanda (skanda missing), Vishapaharana, Kannappanayanar and Vishnu. The best Chola specimens include the figures of Nataraja, from Tiruvalangadu and Velankanni,  the Rama group from Vadakkuppanaiyur, Vishnu as Srinivasa, Tirumangai Alvar, Inscribed Kali, the world-famous Ardhanarisvara from Tiruvenkadu and Parvati. In fact some of them, for instance, the Tiruvalangadu Nataraja and Rama group, are so well executed to be real masterpieces of art, which we can be proud of our craftsmen of Pallava and Chozha periods.  

In the stone sculptures category, the early Buddhist sculptures range from about 200 BCE to 250 CE, and those of Jainism and Hinduism are from about 600 CE to recent times.

In connection with the 151st year of the Madras Museum, the displays are reorganised with improved Lighting for Visibility and safety measures on par with international museums. Tradition wooden enclosures are replaced with Aluminium enclosures for easy cleaning of the images, increased life of the enclosures with aesthetic look, 

Somaskandar

சென்னையின் மெட்ராஸ் தொல்பொருள் காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ள வெண்கலம் மற்றும் கற்களால் செய்யப்பட்ட தொன்மை வாய்ந்த சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் சுமார் 1938ல் Dr.F.H.Gravely என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவைகள் ஆகும். இவை கிறித்து காலத்திற்க்கு முன்பு முதல் சமீபகாலத்தைச் சார்ந்த தொல்பொருட்கள் ஆகும். அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியின் அதிகாரத்தில் இருந்த ( வடக்கு கர்நாடகா வரை ) இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவையே. இவை சைவம், வைணவம், புத்தம் மற்றும் சமண சமயம் சார்ந்த சிற்பங்கள் தனிதனி காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் அமராவதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிற்பங்கள் பொயுமு 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. வென்கல சிற்பங்கள் மட்டும் சுமார் 1500 க்கு மேற்பட்ட சிற்பங்கள் கட்சிப்படுத்தப்படுள்ளன. இதில் பல்லவர் காலத்தைச் சார்ந்த சோமாஸ்கந்தர், விஷபஹரனர், கண்ணப்பநாயனார் மற்றும் விஷ்ணு சிற்பங்கள் சிறப்பானவையாக கருதப்படுகின்றது. மேலும் சோழர் காலத்தைச் சார்ந்த நடராஜர், ஸ்ரீநிவாசர், திருமங்கை ஆழ்வார், காளி, ராமர் போன்ற சிற்பங்கள் சிற்பக்கலையின் உச்சமாக மதிப்பிடப்படுகின்றது. கற்சிற்பங்களுல் புத்தசமய சிற்பங்கள் பொயுமு 200 ல் இருந்து 250 காலத்தைச் சார்ந்தது. சமணம் மற்றும் இந்து சமய சிற்பங்கள் 7 ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்டவையே.

தொல்பொருள் காட்சியகம் ஆரம்பிக்கப்பட்ட 151வது வருடத்தின் கொண்டாட்டமாக ஒளி, பாதுகாப்பு மற்றும் காட்சிப்படுத்தலை உலகத்தரத்திற்கு இணையாக மாற்றம் செய்யப்பட்டது.

Somaskanda
The place where this Somaskanda was brought from is not known. Measures to a height of Shiva 50cm, Paravti  44 cm and Subrahmanya 29 cm. This Somaskanda Group belongs to the 10th century CE.  

Shiva is with 4 arms, holding Axe / Mazhu and antelope in the upper hands and the lower right hand is in Abhaya hastam and what is in the left hand is not known. Parvati is with two hands in abhaya and varada hastam. Kanda / Subrahmanya is standing between them with two hands holding flower buds.

The treatment of this image, especially the necklaces and faces, clearly marks it as of Chola type, despite the absence of the projecting elbow ornaments.  A usual crescent moon is shown on the jada makuda. The face of the antelope is facing towards Shiva. Subrahmania is shown as standing with a bend in the legs and wearing a karanda-makuta and padra-kundalas in the earlobes.

சோமாஸ்கந்தர்… இச்சிற்பம் எங்கு இருந்து கொண்டுவரப்பட்டது என்று தெரியவில்லை. இதில் சிவன் 50 செமி, பார்வதி 44 செமி மற்றும் சுப்பிரமணியர் 29 செமி உயரமுள்ளது.

சிவன் நான்கு கரங்களுடன் காணப்படுகின்றார். மேல் இரு கைகளில் மானும் மழுவும், கீழ் வலது கை அபய முத்திரையிலும்,  ஜடா முடி, அதில் பிறைச் சந்திரன், ஆகியவற்றுடன் காணப்படுகின்றார். பார்வதி இரண்டு கைகளுடன் அபய வரத முத்திரையுடன் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே கந்தர் கரண்ட மகுடத்தில் கைகளில் மலருடன் நின்ற நிலையில் காணப்படுகின்றார். இந்த சோமாஸ்கந்தர் தொகுப்பு சோழர் காலத்தைச் சார்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
    
Somaskandar
Somaskandar

Chandikesvara
This image of Chandikeswara was brought from Tiruvenkadu, Sirkali Taluk, Thanjavur District. This belongs to the 11th Century CE.

The Chandikevara is with two hands seated on a Bhadrasana. The right hand is in kataka posture suggesting the holding of a mazhu/ axe / parasu, the left hand mudra is not known. The left leg is folded and rests on the pedestal firmly and the right leg hangs down and rests on a lotus flower support. The right leg seems to have been below the ankle. He wears Yajnopavita, Udarabandha and padra kundala in the elongated earlobes. He is shown with jata makuta and a beautiful charm and grace on his face.

11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்த சண்டிகேஸ்வரர் தஞ்சாவூர் மாவட்டம் திருவென்காட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது.  

சண்டிகேஸ்வரர் இரண்டு கரங்களுடன், வலது கரத்தில் மழுபிடிக்கும் படியான முத்திரையுடன் அமர்ந்த நிலையில், இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு காணப்படுகின்றார். பூணூல், வயிற்று பட்டி/ உதரபந்தம், காதுகளில் பத்ர குண்டலம், ஜடாமகுடத்துடன் காட்டப்பட்டு உள்ளார்.  வசீகரமான முகத்தில் தவழும் புன்னகை அருமையாக காட்டப்பட்டுள்ளது.
   

Ardhanarisvara
This Ardhanarisvara was brought from Tiruvenkadu, in Thanjavur District, and measures to a height of 101 cm. And belongs to the 11th Century CE.

As the name indicates, Siva is represented here as half-male and half-female. The right half represents Siva and the left half is ParvatiShiva is in Jada Makuta with a crescent moon. He has three arms of which the lower arm rests on the head of the bull ( Pallava hasta) his vehicle, and the upper right has an axe / mazhu and the left hand is in kadaka hastam / holding a flower. The whole of the right side is adorned with ornaments particular to Siva. The right leg is bent and rests on the pedestal to match the height of the left side female part. The dress is shown up to the knee. Ornaments on the neck, yagnopavita and Utara bandham are shown common for both male forms. On the left side, the image has a karandamakuta. The drapery is up to the anklets and her leg is slightly bent, resting on the pedestal. The left side face, smooth small cheek, small eyes, earrings as badra kundala, and hand holding flower hasta belong to the female form ie Parvati. The inscription on the base of the image reads as “Tiruvenkadu”.

அர்தநாரீஸ்வரர்.. 101 செமி உயமுள்ள 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கருதப்படும் அர்தநாரீஸ்வரர் தஞ்சாவூர் மாவட்டம், திருவென்காடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. பீடத்தில் உள்ள கல்வெட்டும் திருவென்காட்டைச் சார்ந்ததை உறுதி செய்கின்றது.

அர்தநாரீஸ்வரர் மூன்றுகரங்களுடன், ரிஷபவாகனத்தின் மீது சாய்ந்தவாறு ரிஷபாந்திகராக மூன்று கரங்களுடன் காணப்படுகின்றார். சிற்பத்தின் இடதுபுறம் பார்வதி அம்மைக்குரிய அனைத்து அம்சங்களான, கரண்டமகுடம், பத்ரகுண்டல காதணி, ஆபரணம், சிறிய கண், வாய், சிறியமுகமைப்பு,  ஒற்றைக்கையில் மலர் ஏந்து முத்திரை, இடை ஆடை பாதம் வரை நீட்டி வடிக்கப்பட்டுள்ளது மிகச்சிறப்பு. இருவருக்கும் பொதுவாக கழுத்தில் ஆபரணம், பூணூல், உதரபந்தம் / வயிற்றுப்பட்டியும் காட்டப்பட்டு உள்ளது.
 
Shiva as Ardhanareeswarar / Rishabandhikar
 The Ambal side is with one hand
 Front side face view - Ambal side is small and the eye, padra kundalam
Shiva as Ardhanareeswarar / RishabandhikarBack side

Nisumbasudani
Brought from Turaikadu, Thanjavur District. Measures a height of 75 cm and belongs to the 10th Century CE.

The Goddess is destroying the demon Nisumbha. She is with 8 arms holding a Trident in kataka hastam, Cobra, Sword, Shield, bow, bell, dragger and a skull bowl. Her face is shown with considerable vigour"- Raudra-cum-Saumya expression. The right earring is a human form, while the left ear carries an owl.

நிசும்பசூதனி.. 75 செமி உயரமுள்ள 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நிசும்பசூதனி வென்கலச்சிற்பம் தஞ்சாவூர் மாவட்டம் துரைக்காடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.

நிசும்பசூதனி பீடத்தின் மீது அமர்ந்த நிலையில்வலது காலை நிசும்பன் மீது இருத்தி எட்டு கரங்களுடன் காணப்படுகின்றார். கரங்களில் சூலத்தை ஏந்தும் முத்திரை, பாம்பு, வாள், கேடயம், குருவாள், மணி, வில் போன்றவைகள் காட்டப்பட்டு உள்ளன. காதில் ஒருபுறம் ஆந்தையும் மற்றொரு காதில் பத்ர குண்டலமும் முகத்தில் ரௌத்ரத்துடன் வடிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. 

Nisumbasoothani

Parvati with attendant
Parvati is with an attendant, brought from Tiruvengimalai, Trichy District. Measures to a height 92 cm and belongs to 10th Century CE.

Parvati stands in a tribhanga posture with a dwarf attendant and is a masterpiece of the Cholas. She stands on an oval padmasana over a rectangular bhadrasana. Her right hand is in the posture of holding a flower and her left hand is placed on the head of her dwarf attendant (Vamanika). The modelling of the breasts, the disposition of the hands, especially that of the left hand which has pliability or flexibility in its gentle way of placing on the head of the attendant and the disposition of the strands of hair are superb.

பார்வதியும் பணிப்பெண்ணும்… 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பார்வதியும் பணிப்பெண்ணும் சிற்பத்தொகுப்பு 92 செமி உயரம் உடையது. திருச்சிக்கு அருகே திருஈங்கோய்மலையில் இருந்து கொண்டுவரப்பட்டது.

பார்வதி திரிபங்கமாக பத்மாசனத்தின் மீது நின்ற நிலையில் காணப்படுகின்றார். வலது கையில் மலர் ஏந்தி இடது கையை குள்ளப்பணிப்பெண்ணின் தலைமீது வைத்தவாறு காணப்படுகின்றார். அம்மையின் உடல் அமைப்பு, மார்பகங்கள், கைகளின் தொய்வு தன்மை, முடிக்கற்றை போன்றவைகள் அவரின் நளினத்தை மேலும் எடுப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

Parvati with her attendant

Tripurantaka
This Tripurantaka was brought from Tirukkodikkaval, in Kumbakonam Taluk, Thanjavur District. Measuring to a height of 100 cm and belongs to the 11th Century CE.

Shiva is depicted here as a Samharamurti after he destroyed the three asuras who dwelt in three forts made of metals with a smile on his face. There are two pairs of hands. He is standing on a padmasana. He is with 4 hands, while the upper hands hold the Mazhu ( broken and missing ) and antelope, and the lower hands hold the posture of a bow and an arrow. ( arrow and bow are missing ). The workmanship of the jata makuta and the ornaments are splendid.

திரிபுராந்தகர்… 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த 100 செமி உயரமுள்ள திரிபுராந்தர் வென்கலச்சிற்பம் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கோடிக்காவல் என்ற கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.

இத் திரிபுராந்தகர் மூன்று அசுரர்களையும் சம்ஹாரம் செய்தபின்பு, அவரின் முகத்தில் தவழும் புன்சிரிப்பு சோழர் சிற்பக்கலையின் உச்சமாக கருதலாம். நான்குகரங்கள், அவற்றின் மேல் இருகரங்களில் மழுவும் மானையும் பற்றியிருக்க கீழிருகரங்களில் வில்லையும் அம்பையும் பற்றுவதற்கான முத்திரைகளுடன் காட்டப்பட்டு இருக்கின்றார். தலை அலங்காரமான ஜடாமகுடம் திரிபுராந்தகரின் அழகைமேலும் கூட்டுகின்றது.  

Tripurantaka  
Vinadhara Dakshinamurti
This Dakshinamurti was brought from Tanjore District. Measuring to a height of 66 cm s and belongs to the 12th century CE.

Standing in three bangha posture. He is with 4 arms. While the upper hands are holding Mazhu and antelope and the lower hands are in kataka hastam, (for holding the vina ) postures.

The simple treatment of the image suggests affinity with those of the Chola type but the somewhat high relief of the ornamentation, especially the necklaces and the Lion-face clasp of the girdle, seem to preclude this. The snake and the crescent moon are inconspicuously shown on the right and left respectively of the top of the head-dress.   The breast and the back of the head of the antelope are facing towards Siva.

வீணாதார தட்சிணாமூர்த்தி… தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த வீணாதார தட்சிணாமூர்த்தி 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். உயரம் 66 செமி. 4 கரங்களை உடைய இவர், மேல் இரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தி, கீழ் இருகரங்கள் வீணை வாசிப்பதைப் போன்ற முத்திரையுடன் காணப்படுகின்றார். அணிகலன்களாக காதில் மகர குண்டலம், பத்ர குண்டலம், கழுத்தணிகள், பூணூல், உதரபந்தம் அணிந்து காணப்படுகின்றார். இடது காலை மடித்து முயலகன் மீது வைத்து, ஜடாமகுடம்  அதில் காணப்படும் பூரிமமும் அழகுற காட்டப்பட்டு உள்ளது, இந்த வீணாதாரர் சிற்பம் சோழர் காலத்தச் சார்ந்தது என்பதை நிருபிக்கின்றது.

Shiva as Veenadhara Dakshinamurthy

Vishapaharana
This bronze sculpture Vishapahara was brought from the Village Kilappudanur, Nannilam Taluk, Thanjavur District. Measuring to a Height of 62 cm. This Vishapaharana belongs to the 9th Century CE.

The style of this image, especially the high relief of the details of the headdress shows affinity with Somaskanda from Tiruvalankadu. The head-dress bears a Datura flower, moulded in the round as in that image and certain other Nataraja images on its left side and an imperfect crescent, apparently also designed in the round, on the right near the top. There are Makara kundalas in both ears. The inner of the two necklaces is very broad and plain. The outer one appears to have been designed with an ornamental centrepiece, but its surface is quite smooth. The sacred thread or the yagnopaveeta is divided into three, its broad central portion being looped over the right forearm. He also wears utharabandham. He is shown with 4 arms, the upper arm holds the mazhu and antelope,  the lower left is holding a snake and the right-hand holds the poison. The face and breast of the antelope are facing towards Siva.

விஷபஹரனா.. இவர் தஞ்சாவூர் மாவட்டம் கீலப்படனூர் கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர். 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர் 62 செமி உயரத்துடன் காணப்படுகின்றார். சோமாஸ்கந்த மூர்த்தியின் அமைப்பை ஒத்து காணப்படுகின்றார். இவர் வலதுகாலை தொங்கவிட்டு இடதுகாலை மடித்து சுகாசன நிலையில் அமர்ந்து காணப்படுகின்றார். மேலிரு கரங்களில் மானும் ( மான் சிவனை நோக்கி ) மழுவும் ஏந்தி, கீழ் இடது கையில் பாம்பையும், வலது கையில் ஆலகால விஷத்தை ஏந்தி காணப்படுகின்றார். அணிகலன்களாக, மகரகுண்டலம் இரு காதுகளிலும், கழுத்து மற்றும் கைகளில் ஆபரங்கள், பூணூல் வலது கீழ்கரத்தின்மீது வைத்தும், உதர பந்தமும் அணிந்து காணப்படுகின்றார்.
 
Shiva as Vishapaharana

Kali
This Kali’s image was brought from, Thiruvengadu, Thanjavur District. The image measures a height of 45.5 cm. This Kali belongs to the 10th Century CE.

Kali is seated on a high bhadrasana and has four hands. The upper right hand carry a trisula while the upper left carries an ankusa (?)/ a pasa / snake, the lower right is in abhaya hastam and the left-hand holds a bowl. She has a terrifying countenance having protruding tusks from the mouth. The restrained ornamentation of the image, the presence of skandhamala on the right side (an early characteristic feature) and the natural rendering of the head-dress, are noteworthy. The head is adorned with jvalakesa.

காளி… தஞ்சாவூர் மாவட்டம் திருவென்காடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இவர் 10 ஆம் நூற்றாண்டைச் சாந்தவர். 45.5 செமி உயரத்தில் காண்ப்படுகின்றார். நான்குகரங்களுடன் காணப்படும் காளி, மேல் இரு கரங்ளில் சூலம் மற்றும் பாம்பையும் ஏந்தி இருக்க கீழ்வலதுகரம் அபய முத்திரையிலும் இடது கரத்தில் கிண்ணத்துடன் காணப்படுகின்றார். கழுத்தில் கபால மாலை பூணூல் போன்றும், கோரைப்பற்கள் வாயின் இருபுறமும் நீண்டு பயமுறுத்தும் தோற்றத்துடன் காணப்படுகின்றார். தலையில் காட்டப்பட்டு இருக்கும் கேச பந்தம் பார்பதற்கு மிகவும் அழகாக காட்டப்பட்டுள்ளது.

Kali
Mahesvari
This was bought from Velankanniin Thanjavur District. Measures to a height of 50 cm. This Maheswarai belongs to the 10th Century CE.

Maheswari is one of the Group of Saptamatrikas and is considered as the female power of Shiva. Maheswari is holding an axe / mazhu and antelope in the upper hands the lower right hand is in abhaya mudra and the left hand holds a bowl. She is in sukhasana sitting posture with her left leg folded and right leg hanging on a Padma peeta. The hair is made to resemble a flame and is heart-like in form. The crescent moon and the Datura flower are shown. (கரு ஊமத்தை மலர்). A yajnopaveeta with all three strands joined together is seen on the trunk.

மஹேஸ்வரி.. இச்சிற்பம் 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. சப்தமாதர் தொகுதியில் சிவனின் அம்சமாக, நான்கு கரங்களில் மானும் மழுவும் மேல் இருகரங்களில் ஏந்தியும் கீழ்  வலதுகரம் அபய முத்திரையிலும், இடது கரத்தில் கிண்ணமும் ஏந்தி காணப்படுகின்றார். சுகாசனத்தில் அமர்ந்து வலதுகாலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்து அமர்ந்த நிலையில் இருக்கும் இவரின் கேசம் தீஜுவாலையைப்போன்று காணப்படுகின்றது. கேசத்தில் கருஊமத்தை மலரை சூடி, பூணூல் அணிந்து காணப்படுகின்றார்
Maheshwari

Maheshvari
This Maheswarai was brought from Tirukkodikkaval, Kumbakonam Taluk, Thanjavur District. It measures a height of 60 cm. This Maheswari sculpture belongs to the 10th Century CE.

Maheswari is Seated straight on a lotus pedestal, in sukhasana posture with the left leg bent and right leg hanging down, wearing jata makuta with a crescent moon on the right side and cassia flower/kondrai flower and snake on the left side. Siraschakra is present. She wears padre kundalas in the elongated earlobes. The third eye appears as a tilaka mark on the forehead and the face is charming. She wears two haras on the neck, Yajnopavita and uttarabandha. Katisutra is fashioned like a kirti mukha motif. She is with 4 hands, while the upper hand holds Sula and pasa / noose, the lower right hand is in abhaya hastam and the lower hand holds a bowl.

மஹேஸ்வரி..  10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இச்சிற்பம் தஞ்சாவூர் மாவட்டம் திக்குக்கோடிக்காவல் என்ற கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. சப்தமாதர் தொகுதியில் சிவனின் அம்சமாக கருதப்படுகின்றது. மூன்றாவது கண் திலகத்தைப் போன்றும், நான்கு கரங்களில் மானும் மழுவும் ஏந்தியும் கீழ் இருகரங்களில் வலதுகரம் அபய முத்திரையிலும், இடது கரத்தில் கிண்ணமும் ஏந்தி காணப்படுகின்றார். சுகாசனத்தில் அமர்ந்து வலதுகாலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்து காணப்படுகின்றார். கேசம் ஜடா மகுடமாக பிறை மற்றும் கொன்றை மலர் சூடி காணப்படுகின்றார். கழுத்து மற்றும் காதுகளில் ஆபரணங்கள் மற்றும் பூணூலும் அணிந்து காணப்படுகின்றார்.
 
Maheshwari

Kannappanayanar
This was brought from Tiruvalangadu, Tiruttani Taluk. This Kannappanayanar bronze belongs to the 10th Century CE.

Hair tied in kesa-bandha fashion with a band over it in the middle and a wheel ornament on either side in front. There are ornaments in the ears. All necklaces are short and uniform, the lowest one with a circular pendant. A quiver ambara full of arrows on the right shoulder, attached to a band passing around the left side of the waist, i.e., very much like a sacred thread / yagnopavita, but crossing the body in the opposite direction. A bow hangs from the left shoulder, and the dagger is tied to the belt on a pleated kilt ( Skirt dress ) in front of the right leg. A cloth showing below the kilt and reaching nearly to the knees.

கண்ணப்ப நாயனார்…  10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர். கேசம் கேசபந்தமாக முடியப்பட்டு, காதுகள், கைகள் மற்றும் கழுத்திலும் ஆபரணம் அணிந்து  காணப்படுகின்றார். வில் இடது தோளில் தொங்க வலதுபுற முதுகில் அம்புராத்தூளியில் அம்புகளும் காணப்படுகின்றன. அம்புராதூளியின் கயிறு பூணூல் போன்று காட்சியளிக்கின்றது. இரு கரங்களும் அஞ்சலி ஹஸ்தமாக காட்டப்பட்டு உள்ளது.

Kannappar

Pichadana murti / Bhikshatana murti
This Pichadanar is about 60 cm tall and belongs to the 10th Century CE.

In this, the Pichadana murti is in walking posture with the left leg straight and the right leg is little bend at the knee and wears footwear called pada koradu. A snake is tied to his hip. He is shown with 4 hands, the upper hands are holding damaru ( Missing ) and thanda with the backbone of Maha Vishnu ( Missing ), the bottom left hand is holding bhiksha bowl and the right hand is feeding the antelope. The Jadamudi is tied neatly. He wears ornaments on the neck, padra kundalas in the elongated earlobes, yagnopavita, tholvalai, and uttarabandha. A Dwarf bhoota is standing on his left side holding a big bowl on his head.

இந்த பிச்சாடன மூர்த்தி 10 ஆம் நூற்றண்டைச் சார்ந்தவர். நான்கு கரங்கள், அவற்றின் மேல் இரு கரங்களில் உடுக்கை, மற்றும் தண்டம் பிடிக்கும் முத்திரையாகவும்,  கீழ் வலதுகை மானுக்கு உணவளிக்க, இடதுகை கபால பாத்திரத்தை ஏந்தி காணப்படுகின்றார். கால்கள் நடக்கும் பாவனையில் காணப்படுகின்றது. ஆபரணங்களாக கழுத்தில் மாலைகள், காதுகளில் பத்ர குண்டலங்கள் அணிந்து, பூணூல் மற்றும் உதர பந்தமும் காட்டப்பட்டு உள்ளது.  பாம்பை இடுப்பில் கட்டி இருக்கின்றார். இடதுபுறம் நிற்கும் குள்ள பூத கணம் பிச்சை பாத்திரத்தை தலை மீது சுமந்தபடி காட்டப்பட்டு உள்ளது.

Pichadanar

Nandhikeswara. 
This Nandhikeswara belongs to the 9th to 10th Century CE. He is standing in three bhanga posture with 4 hands. The upper hands are holding mazhu and antelope. The head of the antelope is turned to the opposite side. The lower hands are in Anjali hastam. A Jada makuta is shown on the head with Poornima. He wears ornaments on the elongated earlobes, neck, hands and anklets on the leg. A masterpiece of Chozha period Sculpture.

நந்திகேஸ்வரர் சுமார் 9- 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவராக கருதப்படுகின்றார். திரிபங்கமாக நின்ற கோலத்தில் காணப்படும் நந்திகேஸ்வரர் நான்குகரங்களுடன் காட்டப்பட்டு உள்ளது. மேல் இருகரங்களில் மானும் மழுவும் ஏந்தி இருக்க, கீழ் இரு கரங்கள் அஞ்சலி ஹஸ்தத்தில் காட்டப்பட்டு உள்ளது. தலையில் ஜடாமகுடத்தில் பூரிமத்துடன் காணப்படுகின்றார். காது, கழுத்து, கைகள் மற்றும் கால்களில் ஆபரணங்கள் அணிந்து காணப்படுகின்றார். சோழர்கால சிற்பக்கலையின் உச்சமாகக் கருதப்படுகின்றது.
  
Nadhikeswara

Natarajar
Natarajar in  Dynamic Display was brought from Thanjavur district and belongs to the 9th Century.

In the reorganised Bronze Gallery, a star display will be the cosmic effect on the Nataraja bronze. A diorama showcase with a cosmic background made of vinyl pasted on acrylic material and cosmic effect given by fibreglass light tips with audio commentary is the attraction. 70-watt halogen lamp generator will operate the Fibre optic lights and a changing light pattern of seven colours will enhance the display effect.

This figure of Natesa has four arms carrying damaru and agni in his upper hands with a beautiful smile on his face. The lower left is in Gajahasta and his lower right is in Abhaya. A coiled snake is on the right-hand side. Nataraja wears ornaments on the neck and yagnopavita and anklets. This image is noted for its vigour and it is one among the well-executed bronzes. The Prabha is with 39 jwalas and has interesting details.  The Jadamudi on both sides of the head and the cloth form the support to Nataraja with the Prabha.

9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்த நடராஜர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர். நடராஜரின் பின்புறம் இப்பிரபஞ்சவெளி போன்று ஒளி  அமைப்பு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

நடராஜர் 4 கரங்களுடன் காணப்படுகின்றார். மேல் இருகரங்களில் உடுக்கை மற்றும் அக்னியை ஏந்தியும், கீழ் இருகரங்கள் அபய மற்றும் கஜ ( யானை தும்பிக்கை ) ஹஸ்தத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. வலது கரத்தில் பாம்பு, கழுத்து, காதுகள், மற்றும் கால்களில் தண்டையும் ஆபரணங்களாக காட்டப்பட்டு உள்ளது. ஜடாமுடி மற்றும் அவர் அணிந்திருக்கும் வஸ்திரம் பிரபையுடன் ஒட்டி நடராஜரின் உறுதித்தன்மையைக் கூட்டுகின்றது. பிரபையில் மொத்தம் 39 ஜுவாலைகள் காட்டப்பட்டுள்ளன.   

Nataraja
Nataraja side View
Nataraja a closer look

SOME OF THE OTHER BRONZES ARE.. 

Shiva & Parvati as Uma Maheswarar
Alinganamurti
Sivakamasundari
 
Vaishnavi ( ?)
Ashthara Devar

Copper Plates
The copper-plate inscriptions acquired up to 1917 CE, numbering over 200 have been published in the form of a catalogue. Subsequently, about 400 inscriptions have been added. These inscriptions are mostly records of grants of villages or plots of cultivable lands to private individuals or public institutions, by the members of the different royal dynasties that ruled over South India. The grants range in date from the 3rd century CE to recent times. A large number of them belong to the Chalukyas, the Cholas and the Vijayanagar kings. Of special interest are the Maydavolu and the Hirahadagalli plates of the early Pallava dynasty and the large-sized grant acquired from Tiruvalangadu, issued by Rajendra Chola- I. The latter consists of 31 large plates strung on a ring to which is attached a seal showing the Chola emblems and Rajendra's legend in relief. This is not only interesting as an "epigraphical curio" but its contents, especially the genealogical portion are also valuable.

CHOLAS-1 UTTAMACHOLA PLATES
Five copper plates have been deposited in the Museum for a long time, and have no history. They are strung on a ring, the ends of which are secured by means of a seal bearing in relief a seated tiger facing the proper right. There are two fishes to the right of this. These three figures have a bow below, a parasol two chamaras ( fly-whisks ) at the top and a lamp on each side. Round the margin a sloka is engraved in Grantha characters, which has been translated, "This is the matchless edict of King Parakesarivarman, who teaches justice to the kings of the realm".

A portion of the inscription is in Sanskrit and the rest is in Tamil. The script used is a mixture of Grantha and Tamil.

The plates contain an edict issued by the Chola King Ko Parakesarivarman alias Uttama Choladeva, at Kachhippedu (Conjeevaram), at the request of his minister, to confirm the contents of a number of stone inscriptions, which referred to certain dues to be paid to the temple of Vishnu at Kachhippedu. The villagers of Kuram and Ariyarperumbakkam had to supply five hundred kadi of paddy per year as interest on two hundred and fifty kalanju of gold borrowed by them from the temple treasury. Similarly, the inhabitants of the villa near Conjeevaram got loans from the temple treasury and paid interest at the rate of five per cent per annum. A fresh grant was issued by this same king, which contains the arrangements made for the conduct of the Chittiral festival of the deity in the temple of Uragam, in Kachhippedu. Two hundred kalanju of gold were deposited with the residents of certain villages near Conjeevaram, who were asked to a yearly interest of fifteen kalanju of gold to meet the expenses. Arrangements were made for the several services in the temple are also described.

This Parakesarivarman was the uncle and predecessor of Rajaraja-I and the period may therefore be fixed as the tenth Century CE.

சோழர்கள்-1 - உத்தமச் சோழன் செப்பேடுகள்
நெடுங்காலத்திற்கு முன்பாக ஐந்து செப்பேடுகளைக் கொண்ட தொகுதி அருங்காட்சியகத்தில் ஒப்படைவு செய்யப்பட்டிருந்தது.

ஐந்து செப்பேடுகளும் ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டுள்ளன, வளையத்தின் இரு முனைகளும் பற்றவைப்பு செய்யப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. அம்முத்திரையில் புடைப்புருவாக வலம் நோக்கிய புலியின் உருவம் மற்றும் அதற்கு வலப்புறமாக இணைமீன்கள், இவற்றுக்கு கீழாக ஒரு வில், ஒரு வெண்கொற்றக் குடை மற்றும் இரு சாமரங்கள் குடையின் இருபக்கங்களிலும் காணப்படுகின்றன. முத்திரையில் வட்ட விளிம்பினை ஒட்டி கிரந்த எழுத்தமைதியில் "பரசேகரி மன்னனின் இந்த ஆணை ஈடிணையற்ற பொறிப்பு ஆகும். பல இராச்சியங்களுக்கு நீதியைப் போதிக்கும் நீதிமான் ஆவார் .

செப்பேட்டு வாசகங்கள் வடமொழி மற்றும் தமிழில் காணப்படுகிறது. இதில் கிரந்தம் மற்றும் தமிழ் எழுத்துக்கள் கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளன.

பல கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கச்சிப்பேட்டில் (காஞ்சிபுரம்) உள்ள- விஷ்ணு கோயிலுக்கு (மக்கள்) வழங்க வேண்டிய குறிப்பிட்ட நிலுவைகள் குறித்த அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க கோப்பரகேசரி வர்மனான உத்தமசோழனால் இவ்வாணை வெளியிடப்பட்டுள்ளது. கோயில் கருவூலத்திலிருந்து 50 கழஞ்சு பொன் கடனாகப் பெறப்பட்டதற்கு ஈடாக கூரம் மற்றும் ஆரியாபெரும்பாக்கம் கிராமத்தார்கள் ஆண்டுதோறும் 500 காடி நெல்லினை வட்டியாகச் செலுத்த வேண்டும். அதுபோலவே காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திார் கோயில் கருவூலத்திலிருந்து பெற்ற கடனுக்கு ஈடாக ஆண்டொன்றுக்கு ஐந்து சதவீத வட்டி செலுத்தப்பட வேண்டும். கச்சிப்பேட்டில் உள்ள உரகம் கோயிலுக்கு இது தவிர புதிய தானம் வழங்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள சிலகிராமங்களில் குடியிருந்தவர்களுக்கு இருநூறு கழஞ்சு பொன் முதலாக வழங்கப்பட்டு பதினைந்து கழஞ்க வட்டியாக செலவுகளை மேற்கொள்ள ஆண்டொன்றுக் பெறப்பட்டது. கோயிலில் செய்யப்பட்ட பல்வேறு சேவைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன.

இந்த பரகேசரிவர்மன் மதுராந்தக சோழன் முதலாம் ராஜராஜ சோழனுக்கு முன்னர் ஆட்சிப்பொறுப்பிலிருந்தவர் மற்றும் அவரது சிற்றப்பாவும் ஆவார். ஆகவே இவரது காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.

CHOLA KARANDAI TAMIL SANGAM,THANJAVUR.
One set of 57 copper plates with two seals intact.
These plates are reported to have been unearthed in a field in the village of Puttur in Papanasam taluk in Thanjavur District. The Karandai Tamil Sangam having learnt about the existence of these plates, secured them through the good offices of the local Firka Development Officer.

The first section of the charter comprising of three plates serially numbered contains the Sanskrit Text.

The second section of twenty-two plates independently numbered contains the details of the grant proper in Tamil.

The third set of thirty-two plates also independently numbered contains the list of all the Brahmana donees, the temples and other services- all that received shares of the granted land.

THE Seal: the ends of the ring are secured at the base of a 16-petalled lotus ( eight full-blown and eight partly visible ) supported on the thickened segment of the ring. The circular royal seal rising high from the base of the ring rests on the expanded lotus mentioned above. In the centre of the seal is the Chola tiger with its mouth open, seated facing the proper right on its hind legs with its forelegs raised and claws drawn out and with tail drawn through and reaching to very near its mouth. On its front are two fish, the Pandyan crest. Behind the tiger are a lamp stand, a flag, a dagger in a scabbard pointed downwards and a goad. A lamp stand, a flag and a goad are represented behind the fish. Over the fish and the tiger is a parasol ( chatra ) with a fly-whisk ( Chauri ) on either side of it. Underneath the right, a drum, a low chair standing perhaps for a Simhasana, a boar facing proper right and a swastika. All these symbols are figured in relief on a counter-sunken surface. Outside the surface bordered by a circle, the following legend in Sanskrit verse is found in embossed characters of the Grantha alphabet, starting just above the parasol and running around the margin of the seal in a clockwise direction: "Rajad-rajanya makuta sreni ratnesu sasanam/ etad Rajendra cholasya Parakesarivarmana://"

"This (is) Parakesarivarman Rajendrachola's edict ( to be borne ) on the glittering jewels of the row of royal diadems ( i.e., to be respected by them )".

சோழர்கள் கரந்தை தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர்
57 செப்பேடுகளைக் கொண்ட ஒரு தொகுதியாகவும், இரண்டு முத்திரைகளுடனும் கிடைத்துள்ளன.

இந்த செப்பேடுகள் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், புத்தூர் என்கிற கிராமத்தின் வயல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. கரந்தைத் தமிழ் சங்கம் அப்போதிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் நன்மதிப்புடன் இருந்ததினால் செப்பேடுகளை அவர்கள் வசமிருந்து பெற்றுச் சென்றனர். இந்த செப்பேடுகளில், முதல் மூன்று செப்பேடுகள் ஒரு தனித் தொகுப்பாக எண்களிடப்பட்டு வடமொழியில் உள்ளன.

இரண்டாவது தொகுப்பாக தனியாக எண்களிடப்பட்ட இருபத்தி இரண்டு செப்பேடுகள் தமிழில் கொடையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

மூன்றாவது தொகுப்பாக தனியாக எண்களிடப்பட்ட முப்பத்திஇரண்டு செப்பேடுகள் தொகுதியில் தானமாகப் அந்தணர்களின் பட்டியல், கோயில்கள் மற்றும் கோயில்சார் திருப்பணிகளுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முத்திரை : இந்த செப்பேட்டின் வளையத்தின் தடித்த இருமுனைகளும் பற்றவைப்பு செய்யப்பட்டு 16 இதழ்கள் கொண்ட தாமரை ( எட்டு இதழ்கள் முழுமையாக மலர்ந்த நிலையிலும், எட்டு பகுதியாக தெரியும் நிலையிலும் ) உள்ளன. மேற்குறிப்பிட்டதைப் போல தாமரை இதழ்கள் விரிந்த நிலையில் அதன்மீது அரச முத்திரை வைக்கப்பட்டுள்ளது. முத்திரையின் மத்தியில், வாய் திறந்த நிலையிலும், பின்னங்காலின் மீது வலம் நோக்கி அமர்ந்த நிலையிலும், நகங்கள் வெளிவந்த நிலையுடன் கூடிய முன்னங்கால்களுடன், அதன் நீண்ட வால் வாயருகில் வரும் வகையில் புலியின் உருவம் காட்டப்பட்டுள்ளது. புலியின் முன்புறத்தில் பாண்டியர்களின் சின்னமான இணை மீன்கள் காட்டப்பட்டுள்ளன. புலியின் பின்புறத்தில் ஒரு விளக்குத் தாங்கியும், கொடியும், கூர்முனை உடைய குறுவாளும், ஒரு அங்குலமும் உள்ளன. ஒரு விளக்குத்தாங்கி, ஒரு கொடி, ஒரு அங்குலம் ஆகிய மீனின் பின்புறத்தில் உள்ளன. மீன் மற்றும் புலி உருவத்திற்கு மேலாக வெண்கொற்றக்குடை மற்றம் வெண்சாமரமும் இருபுறமும் காட்டப்பட்டுள்ளன. மீன் மற்றும் புலிக்கு கீழாக சிம்மாசனம் போன்றதொரு நாற்காலி, வலதுபுறம் நோக்கிய வராக உருவம் மேலும் ஒரு ஸ்வஸ்திகம் ஆகியன காட்டப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்ட இச்சின்னங்கள் அனைத்தும் குழிந்த பகுதியில் புடைப்புருவமாக அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்பகுதியில் ஒரு வட்டமான விளிம்பும் விளிம்பினையொட்டி கிரந்த எழுத்துக்களில் சமஸ்கிருத வாசகங்கள் வெண்கொற்றக் குடைக்கு மேலாகத் தொடங்கி கடிகார சுற்றுப்படி வட்டமாக பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது “ராஜத் ராஜன்ய மகுட ஸ்ரேணி ரத்போசு சாசனம் / ஏதத் ராஜேந்திர சோளஸ்ய பரகேஸரிவர்மன://"

("ஸ்வஸ்திஸ்ரீ இது பரகேஸரிவர்மனான இராஜேந்திர சோழனின் சாசனமாகும், இது பட்டொளி வீசும் அரசனின் நெற்றிப் பட்டைகளைப் போல் திகழ்கிறது")   

Chozha's emblem








STONE SCULPTURES / IDOLS












--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment