Saturday, 18 April 2026

Sri Kesaveswarar Temple/ ஸ்ரீ கேசவேஸ்வரர் ஆலயம், Kailasanathar Koil Mettu St, Pillaiyarpalayam, Karuppadithattadai, Kanchipuram District, Tamil Nadu.

The visit to the Sri Kesaveswarar Temple at Pillaiyarpalayam was part of the Mahashivaratri 2026 darshan of Shiva Temples in and around Kanchipuram, on 15 February 2026. This Spiritual Tour was organised by Chithiram Pesuthada Group. Thanks to Suresh and Krishna.


The temple was once in the midst of a paddy field, now in the midst of housing plots, without a proper approach to the temple.

Moolavar: Sri Kesaveswarar

Some of the salient features of this temple are…
The temple faces east with an entrance from the south. Vinayagar and Murugan are on both sides of the entrance to the ardha mandapam. Balipeedam and Rishabam are in the ardha mandapam. Moolavar is on a round avudaiyar. No koshta images found in the Deva koshtams.

In the praharam, Chandikeswarar and Nagars with Vinayagar are on the back side of the temple.




ARCHITECTURE
The temple consists of the sanctum sanctorum, the ardha mandapam and a metacolour sheet mukha mandapam. The sanctum sanctorum is on a upanam and pada bandha adhistanam with jagathy, three patta kumudam and pattikai. The bhitti starts with vedikai. The pilasters are of Brahmakantha pilasters with kalasam, kudam, palakai and potyal. The prastaram consists of valapi and kapotam with nasi kudus. An eka tala nagara vimanam is on the bhumi desam. Dakshinamurthy, Maha Vishnu and Brahma are in the greeva koshtams. 




HISTORY AND INSCRIPTIONS
It is believed that the original temple was built in the Pallava period. Since this temple’s Sthala Purana was written by 18th-century Sivagnana Swamigal, the temple existed even in the 18th century. Then the Shiva Lingam alone existed on the same spot till 2018, and a new temple was built with bricks and cement by the devotees.

After the temple reconstruction, Maha Kumbhabhishekam was conducted on 07th February 2020.

LEGENDS
The 18th-century Sivagnana Swamigal had written this Kesaveswarar Temple’s sthala purana along with Vanmeeka Nathar Temple in Kanchi Puranam.

As per the Kanchipuranam, after Maha Vishnu snatched the fame and powers of celestial Deities, Indra worshipped Shiva to retrieve their lost power and fame. Shiva appeared and told Indra to take the form of a “small cell” and cut the string of the bow. As soon as Indra cuts the string, the bow gets straightened and cuts the head of Maha Vishnu. Hence, this place was called Kesavasthanam.

இந்திரன் வழிபட்ட அருள்மிகு வன்மீகநாதர் திருக்கோயில் வரலாறு
இந்திரன் விரைந்து காஞ்சியை அடைந்து கைலாசநாதர் திருக்கோயிலுக்குத் தென்மேற்கில் ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்துப் பூசித்த சிவபிரான் தோன்றியருளினார். இந்திரன் திருமால் கவர்ந்து கொண்ட கீர்த்தியைத் தேவர்கள் பெறும்படி அருள் செய்ய வேண்டும். என்று இறைஞ்ச சிவபெருமான், இந்திரனே, நீ புற்றினிடையில் செல்லுருவங் கொண்டு திருமாலினுடைய வில்நாணை அறுத்துப்பின் கீர்த்தியை அடைக என்று திருவாய்மலர்ந்தருள, இந்திரன் மீண்டும் அவ்வாறு நாணினையை அறுக்க. நாண் அறுந்து வில் நிமிர்ந்தமையால், அதன் மேல் கழுத்தை ஊற்றிக்கொண்டிருந்த திருமால் தலை அறுந்து விழுந்தது. அவ்விடம் சின்ன மாகேசவத்தானம் என்றும் பெயரை அடைந்தது. அங்குச் சென்னியாறு என்னும் ஓர் ஆறு ஓடும். இவ்வாறன பொழுது தேவர்கள் புகழைக் கைக்கொண்டு சென்றார்கள்.

காஞ்சி புராணம் - வன்மீக நாதப் படலம்
தேன் தாழ் பொலம் பூங் கடுக்கைச் செழுந்தார் விரைக்கின்ற தோ வான்தாழ் மிடற்றண்ணல் வைகுற்ற பலபத்தி ரஞ்சொற்றனம்[ள் மீன்தாழ் தடஞ்சூழ் அதன்பச்சி மத்திக்கின் விண்ணாட்டவர் கோன்தாழ நிலைபெற்ற வன்மீக நாதத்தின் இயல்கூறுவாம். 1

வண்டுகள் தங்குகின்ற பொன்னிற மலர்களைக் கொண்ட கொன்றையின் செவ்விய மாலை மணங்கமழ்கின்ற தோளினையும் மேகம் தாழ்வுற உயரும் நீலகண்டத்தையுமுடைய பெருமான் வைகுற்ற பல பத்திரேசர் பெருமையைக் கூறினோம். மீன்களைக் கொண்ட தடாகங்கள் சூழ்ந்த அதன் மேற்றிசையில் இந்திரன் வணங்க நிலைபெற்ற வன்மீக நாதேசத்தின் இயல்பினைக் கூறுவோம்.

திருமால் தலைஇழந்த வரலாறு
புத்தேளிர் முன் நாள் ஒருங்கே குழீஇக்கொண்டு புகழ்எய்துவான்
முத்தீ வளர்த்தோர் மகம்வேட்க லுற்றார்கள் மொழிகின்றனர்
இத்தால் வருங்கீர்த்தி எல்லாம் நமக்கும் பொதுத்தான்எனக்
கொத்தார்மலர்க்கூந்தல்பங்கன் துணைத்தாள் குறிக்கொண்டரோ. 2

தேவர் யாவரும் முன்னோர் காலத்தில் ஒருமனப்பட்டு ஓரிடத்திற் கூடிப் புகழ்பெறும் பொருட்டு முத்தீயை ஓம்பும் ஓர் யாகத்தை விரும்பித்தொடங்கலுற்றவர் தம்முட் கூறுகின்றனர்,'இவ்வேள்வியால் வரும்புகழ் முழுதும் நம்மவர் யாவர்க்கும் பொதுப்புகழ் ஆகும் என வரையறை செய்து கொத்துக்களமைந்த மலரணிந்த கூந்தலையுடைய உமையம்மையாரைப் பங்கினிலுடையோன் இரு திருவடிகளைக் கருத்திற் கொண்டு,

குருக்கேத் திரத்தே மகஞ்செய்யும் ஏல்வைக் கொழுங்
கொன்றைவெள், ளெருக்கோ டணைக்குஞ் சடைச்செம்ம
லார்தம் -மின் அருள்கூர்தலால், உருக்கூர் பளிக்குப் பறம்பிற்
பெருங்-கீர்த்தி உண்டாதலும், தருக்கான் முகுந்தன்
கவர்ந்தான் நடந்-தான் தடுப்பக் கொடான். 3

ஓடுந் திறங்கண்டு விண்ணோர் தொடர்ந்தெய்த லுற்றார் அவன்
பீடொன்று வில்லம்பு கைக்கொண்டு வெம்பூசல் பெரிதாற்றுபு
நீடும்பர் தம்மைப் புறங்கண்டு பின்நீ ளிடைச்சென்றுநின்
றீடின்றி எல்லீரும் ஒருவேற் குடைந்தீர்க ளெனநக்கனன். 4

ஓடும் நிலையை எண்ணித் தேவர் கைப்பற்றத் தொடர்ந்தோடினர். அம்மால் பெருமை பொருந்திய சார்ங்கம் என்னும் வில்லினையும் அம்பினையும் கையிற்கொண்டு கொடிய போரினைப் பெரிதும் ஆற்றித் தேவர் குழுவினைத் தோல்வியுறச் செய்து பின்னர் நெடுந்தொலைவிற் சென்று நின்று 'ஒப்பின்றி நீவீர் பல்லீருந்தனித்து நின்றேனாகிய எனக்குப் புறங் கொடுத்தீர்கள்' என இகழ்ந்து சிரித்தனன்.

நக்கான் முகத்தால் அவன் தேசுமுற்றும் நறுஞ்சாமையாய்
அக்காலை நீங்குற்ற வாற்றால் அடல்விற் கழுத்தூன்றுபு
மைக்காலம் அன்னான் நெடும்போது வாளாது நின்றான்குண
திக்காளி அன்னான் றன் நிலைகண்டுபுகழ் வெளவுதிறம்எண்ணினான். 5

இகழ்ந்து சீரித்த திருமாலின் ஒளி முழுதும் முகத்தின் வழியாக நறிய சாமை வடிவின் அப்பொழுது நீங்கியமையால் வலி அமைந்த வில்லைத் தரையிடையிட்டு ஓர் நுனியைக் கழுத்திற் பொருந்த ஊன்றியிட்டு கரிய மேகம் போலும் நிறமுடையோன் நெடும்பொழுது வறிதுநின்றனன். கீழத்திசைக்குத் தலைவனாகிய இந்திரன் அத்திருமாலின தளர்ச்சியைக் கண்டு புகழைக் கவரும் வழியைச் சிந்தித்தனன்.

பொருளிழப்பினால் தலையைச் சாய்த்தல் நிகழும்.

கச்சிப் பதிக்கண் விரைந்தெய்தி அங்கண் கடுக்கைப்பிரான் இச்சித்த
கயிலாய கிருதித் திசைக்கண் இலிங்கம்நிறீஇ நச்சித் தொழுங்காலை
எங்கோன் அணைந்தெனனை கவில்கென்றலும் பச்சைத் துழாய்
அண்ணல் கவர்கீர்த்தி விண்ணோர் பெறப்பாலியாய். 6

கச்சிமாநகரை விரைந்தடைந்து அவண கொன்றை மலரணிந்த பிரான் விரும்பிய கயிலாயத்திற்குத் தென் மேற்கில் சிவலிங்கத்தைத் தாபித்து விரும்பித் தொழுகையில் எம்பெருமான அணுகி விரும்பியது யாது சொல்லுக' என்ற அளவிலே 'பசிய துளவ மாலையை அணிந்த திருமால் கவர்ந்து கொண்ட புகழை யாங்கள் யாவரும் அடையுமாறு அருள் செய்வீராக'

என்னா நவின்றேத்து சசிகேள்வனுக் கெம்பிரான் ஓதுவான், வன்மீக நாப்பண் சிறுச்செல்லுருக்கொண்டு வார்வில்லுடை, அக்காணறத்தின்று பின்கீர்த்தி கொள்கென்ன அருள்செய்த- அம், பொன்காடர் கோமானும் விடைகொண்டு மீண்ட பொருக்கென்றரோ.

என்று கூறித் துதிக்கும் இந்திராணி நாயகனுக்கு எமது பெருமானார் அருள்வர். 'புற்றின் நடுவில் சிறிய செல்வடிவு கொண்டு நீண்டவில்லிற்பூட்டிய நாணியை அறும்படி அரித்துப் பின்னர்க் கீர்த்தியைக் கொள்க' என்றருள் செய்த அளவில் அமராவதியினர் தலைவனாகிய இந்திரனும் விடை கொண்டு விரைந்து மீண்டனன்.

சிறுசெல் எனற்பாலது வலித்தல் விகாரம் பெற்றது; "சிறுக்கட் பன்றி"(ஐங்கு, கேழற்பத்து 6.) என்புழிப்போல.

அவ்வாறு புற்றிற் கிளைத்தெய்தி அந்நா ணறத்தின்றுழிப்
பைவாய்ப் பணிப்பாயலான் சென்னி அறுபட்டு வீழ்ந்தவ்விடம்
இவ்வாய்மை யாற்சின்ன மாகேச வத்தானம் என்றாயதால்
செவ்வே குறைச்சென்னி யாறங்கண் ஓடுந் திருத்தக்கதே.  8

அங்ஙனமே புற்றிற்றோன்றி நாணியை அரித்திடும்பொழுது படமுடைய ஆதிசேடனைப் பாயலாகவுடையவன் சிரம் அறுபட்டு விழ அந்த இடம் இந்நிகழ்ச்சியால் சின்ன மாகேசவத்தானம் எனப்பெற்றது. செவ்விதாகக் குறை படுதலையுடைய சிரோந்தியென்னும் ஆறு அவ்விடத்தோடும் சிறப்பினது.

திருமால் தலைபெற்ற வரலாறு
ஆய காலையில் அவன்புடை நின்றும்அப் புகழைப்
பாய விண்ணவர் கவர்ந்துகொண் டோகையிற் படர்ந்தார்
மாயி ரும்புவி மிசைவளர் இருபிறப் பாளர்க் கேயும்
எச்சனாம் மாயவன் இன்மையின் உயங்கி. 9

அப்பொழுது திருமாலிடத்திருந்தும் அப்புகழை முப்பத்து முக்கோடி தேவர் எனப் பரவிய தேவர் கைப்பற்றிக்கொண்டு வகையிற் சென்றனர். மிகப் பெரிய பூமியில் தங்குகின்ற இருபிறப்பாளராகிய அந்தணர்க்குப் பொருந்தும் யாக வடிவினனாகிய திருமால் இல்லாமையால் வாட்டமுற்று,

மீட்டும் எய்தினன் காஞ்சியை விதியுளி வழிபட்
டீட்டும் அன்பினுக் கெம்பிரான் எதிரெழுந் தருளப்
பாட்டி சைப்பழ மறைகளாற் பரசினன் நவில்வான்
தோட்ட லர்க்குழற் சசிமுலை திளைத்ததோள் குரிசில், 10

இந்திரன் மீளவும காஞ்சியை அடைந்தனன். உரிய முறையில் வழிபாடு செய்து பெருக்கிய அன்பின் காரணமாக எமது பெருமான் காட்சி தந்தருளத் தரிசித்து இசையமைந்த பழைய வேதப்பாடல் களாற் றுதி செய்தனனாய இதழ் கொண்ட மலர்களை முடித்த கூந்தலை யுடைய இந்திராணியின் புணர்முலைப் போகங் கொள்ளும் தேயுடைய சூரிசிலாகிய இந்திரன் கூறுவான்

அறுபதம் முரன்றிசை முழக்கும் ஆய்இதழ்
நறுமலர்க் கடுக்கைசூழ் சடில நாயக
எறுழ்வலிச் சிலையினால் எச்ச னாகிய
சிறுமலர்த் துளவினான் சென்னி அற்றதால். 11

"வண்டுகள் ஒலித்திசையை எழுப்பும் அழகிய இதழ்களை யுடைய நறிய கொன்றை மலர் மாலை சூழும் சடைமுடிப் பெருமானே! பெருவன்மையுடைய வில்லால்யாக வடிவினனாகிய சிறிய மலர்த்துழாய் மாலையோன் தலை அறுபட்டது.

உறப்புறும் எங்களுக் குதவும் உண்டியும்
அறத்தொழில் பயிலிய மானர்க் கான்றவான்
துறக்கமும் இல்லையாய் விட்ட துட்கென
இறத்தலின் எச்சன் இவ் வுலகின் எம்பிரான். 12

எம்பெருமானே! வலிமை மிகுதற்குக் காரணமாக எங்களுக்குதவும் உண்டியாகிய அவியும், அறச் செயலாகிய வேள்வியைச் செய்கின்ற இயமானர்க்கு அமைந்த தூய சுவர்க்கமும் இல்லையாயின. அச்சந்தோன்ற இவ்வுலகில் யாக வடிவினன் இறத்தலின்,

விட்ட, அன்சாரியை தொக்கது. துட்கு - அச்சக் குறிப்பு,

ஆதலின் எச்சனுக் களித்தி சென்னியென்
றோதினன் வேண்டலும் உரைத்தல் மேயினான்
மாதர்வெண் குழச்சிறு மதிக்கொ ழுந்தினைப்
போதொடு மிலைச்சிய சடிலப் புங்கவன். 13

ஆதலின், திருமாலுக்குத் தலையை அளித் தருளாய் என்று வேண்டினன்; வேண்டவும், அழகிய வெள்ளிய இளைய சிறிய மதிக்கொழுந்தினை மலரொடும் சூடிய சடையுடைப் பெருமானார் கூறத் தொடங்கினார்.

எம்புடை வரம்பெறும் இரும ருத்துவ
உம்பரின் அவன் தலை ஒன்றிக் கூடுக
நம்பும்இவ் விருவரும் நந்தம் ஆணையால்
பம்பிய வேள்வியில் பாகம் எய்துக. 14

'எம்மிடத்து வரம்பெரும் அசுவினி தேவர்களாகிய இருமகுத்து வரால் அம்மாலின் தலை இணைந்து கூடுக. விரும்பத் தகும் இத்தேவ வயித்தியர் இருவரும் நம்முடைய ஆணையால் செறிந்த யாகங்களில் அவிப்பாகம் எய்துக.'

என்றருள் மழுவலான் சரணம் ஏத்திமற்
றொன்றிது வேண்டுவான் உடைய நாதனே
மன்றகின் அருளினால் புற்றின் வாய்எழூஉத்
தின்றுநா ணறச்செயுந் திறல்பெற் றேனரோ. 15

என்றருளும் மழுவலான் திருவடிகளைத் துதித்து மேலும் ஒன்றாகிய இதனை வேண்டுவான்: 'எங்களை அடிமையாக உடைய நாயகனே அறுதியாக நின்னுடைய அருளால் புற்றிடை எழுந்து நின்று நாணியை அறுக்கும் வலிமையைப் பெற்றேன்.'

ஆதலின் வெவ்வினைத் தொடக்க றுக்கும்இம்
மேதகு வரைப்புவன் மீக நாதம்என்
றோதவும் கண்டவர் பிறவி ஒவ்வும்
ஈதிநீ வரமென விடையின் ஏந்தலும். 16

'ஆதலின், கொடிய வினைத்தளையை அறுக்கும் இம் மேன்மை பொருந்திய தலம் வன்மீக நாதம் என்று போற்றப்பெறவும், கண்ட வர் பிறப்பொழியவும் நீவரம் ஈவாயாக' என விடையூர் அண்ணலும்,

தந்தனம் வரமெனச் சாற்றி நீங்கினான்
இந்திரன் மீண்டனன் இரும ருத்துவத்
தந்திரத் தலைவரால் எச்சன் றன்சிரம்
முந்துபோற் பொருத்தலும் முளரிக் கண்ணினான். 17

'தந்தோம் வரம்' எனத் திருவாய் மலர்ந்து மறைந்தனர். இந்திரனும் திரும்பினான். இருமருத்துவராகிய ஆயுள் வேதத் தலைவரால் திருமால் தனது தலை முந்து போலப் பொருந்துதலும் பதுமாக்கனாகிய திருமால்,

தெய்வத்தின் வளியினாற் சென்னி பெற்றெழூஉக்
கொவ்வைச்செவ் வாய்உமை கூறன் தாள்தொழு
தவ்வத்தன ஆணையால் அவியின் பாகம்அங்
குய்வித்தோர்க் கமைத்துத்தன் உலகம் புக்கனன். 18

இருதேவர் தம் வன்மையால் சிரம பெற்றெழுந்து கொவ் வைக் கனிபோலும சிவந்த இதழ்களையுடைய உமையம்மை கூறனாகிய பிரசன் திருவடிகளைத் தொழுது அத்தந்தையின் ஆணை வழி அங்குப் பிழைப்பித்த அவ்வைத்தியர்க்கு அவிப்பாகம் நியமித்துத் தனது வைசூந்த உலகிற்குச் சென்றனன்.

இகழகு முகுந்தனே இந்த வாறிழி
தகவுற இடும்பையில் தங்கு நீர்மையால்
உகலருஞ் செல்வத்தை உடம்பை அல்லது
புகழினை விரும்பலும் போதத் துன்பமே. 19

போற்றறகுரிய திருமாலே இங்கனம் தலையிழக்கும் இழிந்த நிலையை அடையத் துன்பத்தில் தங்கும் இயல்பினால் அழிதலில்லாத பெருஞ் செல்வத்தையோ, உடம்பையோ, அல்லது புகழினையோ விரும்புதலும் மிகவும் துன்பமாம்.
வன்மிக நாதப் படலம் முற்றியது
ஆகத் திருவிருத்தம் 1124

POOJAS AND CELEBRATIONS
Apart from oru kala pooja, special poojas are conducted on pradosham and Maha Shivaratri days.

 Maha Shivaratri Utsavar decoration
Maha Shivaratri Utsavar decoration

TEMPLE TIMINGS
Since oru kala pooja is conducted, the opening and closing times are unpredictable.

CONTACT DETAILS
The temple’s managing Trustee, A. S. Ravi, can be contacted on his mobile numbers +91 949216688, +91 8508625180, and +91 6380811261 for further details.

HOW TO REACH
The temple is 400 meters from Kailasanathar Temple, 2.0 km from Sri Vanmeeganathar Temple, and 3.1 km from Kanchipuram Railway Station.
The nearest railway station is Kanchipuram.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE


Nagars with Vinayagar on the back side of the temple under sthala vruksham
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment