Friday, 17 January 2025

Thirumalai Sri MalaiKoluntheeswarar Temple / திருமலை ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் குடைவரை சிவாலயம், Thirumalai, Alagamanagiri, Tamil Nadu.

கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினரால் 2024, டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப்பட்ட காரைக்குடி மரபு நடையின் ஒருபகுதியே இந்த  திருமலை சிவன் கோயில், சமணர் படுக்கை மற்றும் பாறை ஓவியங்கள் பதிவு இது. திருமலை சிவகங்கையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு வடக்கே தள்ளி அமைந்துள்ளது.  இக்குன்றில் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தளம், முற்கால பாண்டியர் குடைவரைக்கோயில் (குன்றத்து நாயனார் கோயில்), மற்றும், பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சார்ந்த கட்டுமானக் கோயில் (திருமலை பெருமாள்  கோயில்) ஒன்றும் உள்ளது.


The visit to this Thirumalai Sri Malai Kozhuntheeswarar Temple also known as Thirumalai Perumal Koil was a part of the Karaikudi Heritage Walk, on 14th December 2024, organized by Kumbakonam Vattara Varalatru Aayvu Sangam. The Thirumalai Hill consists of Rock Paintings, Jain Beds, an early Pandya period rock-cut cave Temple (Kundrathu Nayanar Koil), and a later Pandya period Shiva Temple (Thirumalai Perumal Koil).

Sri Malai Kozhuntheeswarar Temple, Thirumalai. (A Stone built up Temple)

Moolavar: Sri Malai Kozhuntheeswarar
Consort:   Sri Bagampiyal      

Some of the Salient features of this temple are…
This Sri Malaikoluntheeswarar Temple also known as Thirumalai Perumal Koil, a Shiva temple is on the middle of the Thirumalai Hill and steps constructed to climb up. The temple faces east with an open Mani Mandapam. Dwara Ganapati and Murugan are on both sides of the entrance to the sanctum sanctorum. Balipeedam and Rishabam are in front of Sanctum Sanctorum. Shiva Lingam is on a square avudayar, in koshtam Durga only.

In praharam Maveerar Karuvapandyar, Navagrahas, Mukkuruni Vinayagar, Ashtabhuja Durga/Korravai, Saptamatrikas, Vinayagar, Murugan, Kala Bairavar without Vahana, Suryan, Chandran, and Chandikeswarar.   

Ambal Bagampriyal is in a separate sannidhi facing south. Ambal is in a standing posture with abhaya and varada hastam. Nagars and some loose sculptures are in front of the temple.

Ashtabhuja Durga/Korravai
Chandikeswara
ARCHITECTURE
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர் காலத்தில் இக்குடைவரையினையொட்டி ஒரு பெரிய கட்டுமானக் கோயில் சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ளது. இக்கோயில் திருமலை பெருமாள் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. கட்டுமானக்கோயில்பாதபந்த அதிட்டனத்தின் மீது கருவரை கட்டப்பட்டு உள்ளதுகருவரையின் பிரஸ்தர பகுதிக்கு மேல் செங்கற்களால் ஒரு தள நாகரவிமானம் கட்டப்பட்டு உள்ளதுதள மற்றும் கிரீவ கோட்டங்களில்சுதைச் சிற்பங்களாக சிவன்தட்சினாமூர்த்திமஹாவிஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் காணப்படுகின்றனர்.

The temple complex consists of a Rock Cut Cave Temple and a Karrali built during Pandya’s period. The built-up stone temple consists of Sanctum Sanctorum, antarala, and ardha mandapam. The Sanctum Sanctorum is ona pada bandha adhistanam with jagathy, three patta kumudam, and pattikai. The Bhitti starts with vedika. Brahma kantha pilasters with kalasam, kudam, lotus petals mandi, palakai, and vettu pothyal. The prastaram consists of kostam with nasi kudus and Viyyalavari. The Vimanam is of eka tala and Nagara sigaram. Shiva, Dakshinamurthy, Maha Vishnu, and Brahma are on the tala and greeva kostas.





Rock Cut Cave Temple also known as Kundrathu Nayanar Koil…
Shiva and Parvati are as Uma Maheswarar in the Sanctum Sanctum Sanctorum. Both are in Rajalila asana sitting posture. In addition, a Murugan’s bas relief with a Devotee, a Dwarf Bhuta Gana, and his Vahanas a Male Sheep, & Peacock are on the ardha mandapam north side wall. A Vinayagar is at the entrance to the cave Sanctum Sanctorum.

ARCHITECTURE
முற்காலப் பாண்டியர் காலத்தினைச் சார்ந்த குடவரைக் கோயில் சிறிய கருவறை அதற்கு முன்பு அமைந்துள்ள முகமண்டபத்துடன் விளங்குகிறது. கருவறையில் சிவனும், பார்வதியும் அமர்ந்த நிலையில் உமாமகேஸ்வரராகி காட்சியளிக்கின்றனர். இவ்வுருவத்தின் மீது பிற்காலத்தில் சுதை பூசி வண்ணம் தீட்டியுள்ளனர். குடைவரையை இரண்டு தூண்களும், இரண்டு அரைத்தூண்களும் தரங்க போதியல்களுடன் தாங்கி நிற்கின்றனதூண்களில் மாலைத்தொங்கல் மற்றும் கலசங்களும் காணப்படுகின்றது. குடைவரை நுழைவாயிலின் இருபுரம், இறை சிற்பங்கள் யானைஉரிதேவர் என்னும் கஜசம்ஹாரமூர்த்தி, பெண்கள், சங்கநிதி மற்றும் பத்மநிதி புடைப்பு சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளது.

The Rock Cut Cave temple was excavated during the early Pandya period. The Cave Temple consists of a Sanctum Sanctorum and a Mukha Mandapam. The cave is supported by two pillars and two pilasters. The pillars and pilasters are square in shape with malai thongal, kalasam, and tharanga pothyals. Bas relief of Shiva and Parvati are in the Sanctum Sanctorum. They have been painted in recent years.

குடவரையின் முன்மண்டபத்தின் வடக்கு சுற்றில் இரண்டு கரங்களுடன் கூடிய முருகனது உருவம் நின்ற கோலத்தில் காணப்படுகின்றது. பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செய்யப்பட்டுள்ள முருகன் பெரிய மாலையும், ருத்திராட்ச மாலையும் அணிந்து விளங்குகின்றான். முருகனது வலது புறம் உள்ள சிறுபூதமும் அவனது கொடியாகிய சேவலின் உருவங்களும் காணப்படுகின்றன. இடது புறம் அடியார் உருவம் ஒன்று காணப்படுகின்றது. தலைக்கு மேல் குடை கவிழ்ந்த நிலையில் காணபடுகின்றது. பாதத்தின் அடியில் முருகனது வாகனங்களாகிய ஆட்டுக்கடாவும். மயிலும் காணப்படுகின்றன. இவ்வுருங்களுக்கிடையே மலர்க்கொத்து ஒன்று காணப்படுகின்றது. சிற்பங்கள் உள்ள இக்குடைவரைக் கோயில் குன்றத்து நாயனார் கோயில் என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது

Paintings of Dwarf Bhuta Ganas and an Andhanar doing pooja are done during 18th-century thirupani.

The north-facing Murugan Panel is in the form of a relief. Murugan is shown with two hands in a three-bangha standing posture. He wears an ornament over his neck, kundala in the ears, and Greeda makuta. Yagnopaveetha and Rudraksha mala are also shown. A devotee with folded hands is shown on his left. A dwarf Bhuta Gana is shown holding an umbrella to Murugan. Murugan’s vahanas, a male sheep and Peacock are shown at the bottom of the panel. A flower pot is also shown in between the Male Sheep and a Peacock.    










HISTORY AND INSCRIPTIONS
இக்குன்றில் காணப்படும் குடைவரைக் கோயில் முற்கால பாண்டியர் காலத்தில் குடையப்பட்டது. இக்குடைவரைக் கோயில் குன்றத்து நாயனார் கோயில் என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது. அதன் கீழே கிழக்கு நோக்கி காணப்படும் கட்டுமான சிவன் கோயில் 13ஆம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டது. இக்கட்டுமானக் கோயில் திருமலைப்பெருமாள் என்ற பெயரால் அழைக்கப்பட்ட்து. 
The north-facing Rock Cut Cave temple was excavated during the early Pandya period. The east-facing Thirumalai Perumal, the Shiva temple, was built by the later Pandyas in the 13th century.
 
கி.பி. 1233-இல் இக்கோயிலில் இருந்த ஐநூற்றுவன் திருக்காவணம் என்ற மண்டபத்தில் வணிகர்கள் கூடி பல வணிகப் பொருட்களுக்கு வரிநீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர்.
இதே காலத்தில் பஞ்சவன் மாதேவி பெருந்தருவைச் சேர்ந்த எண்ணெய் வாணிபம் செய்யும் வணிகர்கள் இக்கோயில் திருவிளக்கு எரிப்பதற்காகத் தாங்கள் வைத்திருந்த செக்காலை ஒவ்வொன்றிலிருந்தும் குறிப்பிட்ட அளவு எண்ணெயை தானமாக அளித்திருக்கின்றனர்.
The 1233 CE inscription records the Merchants assembled at Inootruvan Thirukavanam and a resolution was passed on the exemption of taxes for certain merchant goods. Another inscription of the same period records that the Oil merchants of Panchavan Mahadevi’s Peruntheru/big street gifted oil from their oil extractors to this temple for burning lamps.

இங்குள்ள கல்வெட்டுகளில் தேவரடியார் இருவரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களில் திருஞானசம்பந்த நங்கை என்பவள் ஆளுடைய பிள்ளையாரை (சம்பந்தர்) எழுந்தருளிவித்து வழிபாட்டிற்காக நிலங்கள் அளித்திருக்கின்றாள்.  திருவெங்காட்டு மங்கை என்ற மற்றொரு தேவரடியார் இக்கோயில் திருச்சுற்றைக் கட்டியிருக்கிறாள்.
Two of Thevaradiyar’s names are mentioned in an inscription. In that, Thirugnanasambandha Mangai established Aludaiya Pillaiyar and gifted lands for worship. Thiruvenkattu Mangai, another Thevaradiar constructed the praharam.

இக்கோயில் கல்வெட்டுகளில் சோழியர் பழங்காசு, வீரபஞ்சணம் காசுகள் குறிப்பிடப்படுகின்றன. மணப்படை வீட்டைச் சார்ந்த உடன் பிறந்த இருவர் இக்கோயிலில் பிள்ளையாரையும், திருவாதவூர் நாயனாரையும் பராக்கிரம பாண்டியன் காலத்தில் செய்வித்துள்ளனர். விக்கிரம பாண்டியன் காலத்தில் திருச்சிற்றம்பல பிள்ளையார் இக்கோயிலில் எழுந்தருளிவிக்கப்பட்டுள்ளார்.
The coin names Chozhiyar Pazhankasu and Veerapanchanam are mentioned in the inscriptions. Parakrama Pandya’s period inscription records that, two brothers of Manapadaiveedu established the images of Vinayagar and Thiruvathavur Nayanar.

கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட திருப்பணி ஓவியத்தில் மிகச் சிறிய பூதங்களும், பூசை செய்யும் அந்தணர் உருவங்களும் காணப்படுகின்றது.
கிபி 1233 சிவகங்கை வட்டம், திருமலையில் உள்ள ஆலயத்தில் "ஐநூற்றுவர் திருக்காவனம்" என்ற அரங்கு பொதுமக்கள் உபயோகத்திற்கு அமைக்கப்பட்டது.
The 1233 CE inscription records the establishment of a mandapa for the benefit of people called Inootruvar Thirukavanam.

கிபி 1265 அரண்மனை சிறுவயல், மும்முடி சோழீஸ்வர முடையார் கோயிலில் இருந்த திருகோட்டமுடைய நாச்சியாருக்கும், ஸ்கந்த தேவருக்கும் வழிபாடு செய்வதற்காக ஒரு பெண் தானங்கள் அளித்துள்ளார்.
1265 CE inscription records the endowment of Aranmanai Siruvayal Sri Mummudi Chozheeswaramadaiyar Temple Thirukamakottamudaiya Nachiyar and Skanda Devar by a lady.

கிபி. 1275 வீரபாண்டியன் காலத்தில் அரண்மனை சிறுவயல்,மும்முடி சோழீஸ்வரமுடையார் கோயிலில் ஒரு பெண், ஆவுடைய நாயனாரையும், அவரது தேவியரையும் எழுந்தருளச் செய்துள்ளார்
1275 CE, Veera Pandya period inscription records that the establishment of Avudaiya Nayanar and his consort by a lady at Aranmanai Siruvayal Chozheeswaramudaiyar Temple by a lady.

Ref
Sivagangai Mavatta Tholliyal Kaiyedu, published by Tamil Nadu Archaeological Department.

The Maha Shiva Manimandapam was built by the Sons of Perumal Konar and declared open by the Sivagangai Samasthana Queen Sakiya DSK Maduranthaki Nachiyar on 21 March 2011.  





LEGENDS
According to the legend, the Pandya Country was captured by Rajendra Chozha-I in the 11th Century. In the 12th century, Jadavarama Kulasekara Pandyan defeated the Chozhas and regained their kingdom. Jadavarma Kulasekara Pandya was an ardent devotee of Shiva, and as a part of thanksgiving, he constructed this temple, Shiva is named Sri Malai Kozhuntheeswarar. 

It is believed that Agasthiyar stayed on the Hills and worshipped Shiva of this temple.

As per Purana, Rama and Sita stayed on this hill during their exile.

Devotees worship Shiva and Ambal of this temple to remove marriage obstacles, Child boon, to get rid of prolonged diseases, Pitru dosha, etc.  

POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on Fridays, pradosam, Maha Shivaratri, Vinayagar Jayanthi, Amavasya, Pournami, Thai poosam, Thai Pongal Days, Karthigai Deepam, etc.

On Karthigai Deepam day, Deepam (about 80 kg) is lit on the top of the Pampara Malai. Devotees do Girivalam on Pournami and Karthigai Deepam Days.

TEMPLE TIMINGS
The temple will be open between 07.00 hrs to 11.00 hrs and 17.00 hrs to 19.30 hrs.

CONTACT DETAILS
The landline and mobile numbers +914575241233 and +919788843275 may be contacted for further details.

HOW TO REACH
Thirumalai is on the bus route from Sivagangai to Melur. The temple is on a Hill about 2 km away from the main road. Town buses are available from Sivaganga. Alternatively, on Sivaganga to Tirupattur, buses get down at Okkur, and from here, Minibuses are available. 
The temple is 20 km from Melur, 31 km from Sivaganga, and 44 km from Karaikudi.
The nearest Railway station is Karaikudi.  

LOCATION OF THE TEMPLE: CLICK HERE


An unfinished sculpture and Nagars
Abandoned Dakshinamurthy and Saptakannis 
 The temple tank with lotus
---OM SHIVAYA NAMA---

Wednesday, 15 January 2025

Jain Beds and Tamizhi Inscription, Pamparamalai/பம்பர மலை/திருமலை/Thirumalai, Sivaganga District, Tamil Nadu.

கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினரால் 2024, டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப்பட்ட காரைக்குடி மரபு நடையின் ஒருபகுதியே இந்த திருமலை சிவன் கோயில், சமணர் படுக்கை மற்றும் பாறை ஓவியங்கள் பற்றிய பதிவு இது. திருமலை சிவகங்கையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு வடக்கே தள்ளி அமைந்துள்ளது.  இக்குன்றில் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தளம் உள்ளது.
 

The visit to this Thirumalai Jain Beds, was a part of the Karaikudi Heritage Walk, on 14th December 2024, organized by Kumbakonam Vattara Varalatru Aayvu Sangam. The Thirumalai Hill consists of Rock Paintings, Jain Beds, an early Pandya period rock-cut cave Temple, and a later Pandya period Shiva Temple.

Believed to be the Jain Beds
Believed to be the Jain Beds
Believed to be the Jain Beds

JAIN BEDS WITH TAMIL BRAHMI INSCRIPTIONS.
Ancient Rock Paintings, which may date back to 4000 years, are found in Pampara Mlai, a part of Thirumalai Hills. Near these paintings, there is a natural cave, where a number of stone beds were scooped. On the overhanging boulder of this cave, a drip ledge is cut to let out the rainwater. Below this drip ledge, two Tamil Brahmi inscriptions are engraved. Which reads as…

"eru kadu ur kavithi kon koriya paliy”

means that these stone beds were made by Kavithi Kon a resident of Erukadur for the benefit of the Jain Monks who stayed in this cave.
Another inscription was mutilated and reads, as

"……..va karandai……”

The term Karandai refers to a cave in the Tamil language. The prefix of this inscription is damaged. Both of these inscriptions are dated back to 1 BCE. These inscriptions are preserved as a protected monument by the Tamil Nadu State Department of Archaeology 

சமணர் படுக்கைகளும் தமிழி கல்வெட்டுகளும், திருமலை.
இவ்வூர் சிவகங்கையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு வடக்கே தள்ளி அமைந்துள்ளது. ஊருக்கு அருகில் உள்ள சிறிய குன்று திருமலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இக்குன்றில் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தளம் ஒன்று உள்ளது.

திருமலையில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்
அண்மையில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை திருமலையிலுள்ள பஞ்சபாண்டவர் படுக்கைப் பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளது. திருமலைக் கோயிலின் பின்புறமுள்ள இரண்டு இயற்கையான குகைத் தளங்களில் கற்படுக்கைகள் செய்து சமண சமய முனிவர்கள் வாழ்வதற்கு உறைவிடம் ஏற்படுத்திக் கொடுத்ததைப் பற்றி இவை தெரிவிக்கின்றன.

"எக்காவொர் காவிதிகன் கொறிய பாளிங்

என்று எழுதப்பெற்றுள்ளது. எக்காட்டூரைச் சார்ந்த காவிதி கொற்றித் தந்த பாளிய (பாழி) என்பது இதன் பொருளாகும். இரண்டாவது கல்வெட்டு வாசகத்தின் முற்பகுதியும், பிற்பகுதியும் சிதைந்து கிடைத்துள்ள இக்கல்வெட்டு

“…….. வகாரண்டை…. '

என்று காணப்படுகின்றது. இக்கல்வெட்டுகள் இரண்டு கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கல்வெட்டுகளைத் தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலர்கள், திரு. சு. இராச கோபால், திரு வெ. வேதாசலம், திரு.சொ.சாந்தலிங்கம் ஆகியோர் கண்டறிந்தனர்.



ஆதாரம்
சிவகங்கை மாவட்டத்தொல்லியல் கையேடு

HOW TO REACH
This place Thirumalai is on the bus route from Sivagangai to Melur. The temple is on a hill, about 2 km away from the main road.
The temple is 20 km from Melur, 31 km from Sivaganga, and 44 km from Karaikudi.
The nearest Railway station is Karaikudi. 

LOCATION OF THE TEMPLE: CLICK HERE

Rock art on the top

---OM SHIVAYA NAMA---

Monday, 13 January 2025

Rock Arts/ Rock Paintings/ திருமலை பாறை ஓவியங்கள், Pamparamalai/பம்பர மலை/திருமலை/Thirumalai, Sivaganga District, Tamil Nadu.

கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினரால் 2024, டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப்பட்ட காரைக்குடி மரபு நடையின் ஒருபகுதியே இந்த திருமலை சிவன் கோயில், சமணர் படுக்கை மற்றும் பாறை ஓவியங்கள் பற்றிய பதிவு இது. திருமலை சிவகங்கையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு வடக்கே தள்ளி அமைந்துள்ளது. இக்குன்றில் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தளம் உள்ளது



The visit to this Thirumalai Jain Beds, was a part of Karaikudi Heritage Walk, on 14th December 2024, organized by Kumbakonam Vattara Varalatru Aayvu Sangam. The Thirumalai Hill consists of Rock Paintings, Jain Beds, an early Pandya period rock-cut cave Temple, and a later Shiva Temple.

This Rock Arts are on a small rocky Hill, at Pamparamalai a part of Thirumalai, in Sivaganga District, and is on the way to Melur from Sivaganga. The rocky Hill is a little away from the North side of the Road. Steps with handrails are provided to access the top of the Hill. The top of the Hill consists of a dilapidated temple base, Jain Beds and Rock Paintings.



ROCK ARTS/ROCK PAINTINGS
These ancient Rock Paintings are found on this hill which may be dated back to 4000 years. These rock Arts/Paintings are drawn with red Ochre. The Rock arts consist of Humans fighting with each other, and wild animals like Deer. Outlines are drawn and filled with red ochre.  
இவ்வூர் சிவகங்கையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு வடக்கே தள்ளி அமைந்துள்ளது. ஊருக்கு அருகில் உள்ள சிறிய குன்று திருமலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பாறை ஓவியங்கள்
திருமலையிலுள்ள குன்றின் மற்றொரு பகுதியில் இயற்கையாக குகைத்தளத்தில் பழங்காலத்துப் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன காவி வண்ணத்தில் இவை வரையப்பட்டுள்ளன கம்புகளைக் கொண்டு சண்டையிடும் மனிதர்கள், மான், கைகோர்த்துக் கொண்டு செல்லும் மனிதர்கள் ஆகிய உருவங்கள் இவற்றில் காணப்படுகின்றன. முதலில் உருவங்கள் வரையப்பட்டு பின்னர் வண்ணம் அளிக்கப்பட்டுள்ளது.



ஆதாரம்
சிவகங்கை மாவட்டத்தொல்லியல் கையேடு

HOW TO REACH
This place Thirumalai is on the bus route from Sivagangai to Melur. The temple is on a hill, about 2 km from the main road.
The temple is 20 km from Melur, 31 km from Sivaganga, and 44 km from Karaikudi.
The nearest Railway station is Karaikudi. 

LOCATION OF THE ROCK PAINTINGS: CLICK HERE


Honeycomb
Honeycomb


 A dilapidated temple base.

Steps that lead to the top of the hill



--- OM SHIVAYA NAMA---