Wednesday, 7 March 2018

Tirthankara, Anathur near Senji, Villupuram District, Tamil Nadu.

04th March 2018. 
This is a continuation post to the Ahimsa walk held at  Jain’s  beds at Uranithangal hill near Senji.  After everybody left, we started towards Anathur to see the Tirthankara through a Van.

Tirthankara relief was done on a boulder, close to the hill. We could not identify the Tirthankara, due to non availability/ visibility  of lanchanam at the base.  The relief is highly eroded or half finished. Samaratharis are shown on both sides. Thiruvasi with yazhi was visible faintly. Since there is no lanchanam It was told that two jains beds are there in the above hill. This Tirthankara relief may belongs to 4 -5th century.


We had seen an dilapidated temple with mandapam on the right side of the Tirthankara relief boulder. Constructed with stone up to roof and brick was used for the Vimanam. The Pillars are very simple. There are no reliefs on the Pillars and we could not identify, whether it is a Jeenalaya or a hindu temple. From the male and female reliefs available in the mandapam pillars, we may assume that the Temple with mandapam might have constructed during Nayakas period.
 
 Dilapidated temple

LOCATION:CLICK HERE

மாலை நேரம் கூட்டிற்கு திருப்பும் பறவைகள்  போல் அஹிம்சை நடையில் கலந்து கொண்ட அனைவரும் பறந்து விட எஞ்சிய இருந்த நாங்கள் மட்டும் ஆனத்தூரில் உள்ள தீர்தங்கரரைக் காண சிற்றுந்தில் பயணித்தோம்.

தீர்தங்கரர் மலையின் ஓரத்தில் கிடந்த பாறையில் புடை சிற்பமாக வடிக்கப்பட்டு இருந்தார். சாமரதாரிகள் இரு புறமும் காட்டப்பட்டு இருந்தனர். திருவாசியின் யாளி முகம் மட்டும் ஓரளவு காண முடிந்தது. சிற்பம் காலத்தினால் தேய்ந்தோ அல்லது முழுதும் முடிக்கப்படாமலும் இருக்கலாம். லாஞ்சனம் எதுவும் காணப்படாததால் இந்த தீர்தங்கரர் யாராக இருக்கலாம் என்று அனுமானிக்க முடியவில்லை. மேலும் மலையில் இரண்டு சமண படுக்கைகள் இருப்பதாகவும் கூறினர். தீத்தங்கரர் 4 – 5 நூற்றான்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

தீர்தங்கரர் சிற்பத்தின் அருகே  ஒரு பாழடைந்த மண்டபத்துடன் கோவில் ஒன்று இருந்தது. தூண்களில் சிற்பங்கள் எதுவும் காணப்படவில்லை. மேல்தளம் வரை கருங்கற்களாலும் விமானம் செங்கற்களாலும் கட்டப்பட்டு இருந்தது. இந்த கோவில் இந்து கோவிலாகவோ அல்லது சமண ஜீனாலயமாகவோ இருக்கலாம். மண்டபத்தில் கண்ட ஆண் பெண் உருவங்களை நோக்கும் போது நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது...

 The relief of Tirthankara on the boulder 

 Dilapidated temple

 Dilapidated temple


 Mandapam pillar reliefs ( Nayakas Period )

Nayakas period Mandapam pillar reliefs 
---OM SHIVAYA NAMA---

3 comments: