Saturday, 1 August 2020

Sri Masilamaneeswarar Temple / Masilamaniswara Temple / Maasilamaneeswarar Koil, வடதிருமுல்லைவாயில் ( Vada) Thirumullaivoyal, Chennai, Tamil Nadu.

This place is called Vada Thirumullaivoyal since there are two Thirumullaivoyals, and both are Thevara Paadal Petra Sthalam. To differentiate this place, it is called Vada Thirumullaivoyal. 


This is the 22nd Thevara Paadal Petra Shiva Sthalam in Thondai Nadu. In Periyapuranam, Sekkizhar describes how Sundarar arrived at this place and worshiped Lord Shiva. Also in his pathigam. Sundarar mentions that Lord Shiva, who wears Chandran on his Jadamudi, made him blind for Sangili Nachiyar.

    அங்குநாதர் செய்அருள் அது ஆக
        அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே
    பொங்கு காதல் மீளா நிலமையினால்
        போதுவார் வழிகாட்ட முன்போந்து
    திங்கள் வேணியார் திருமுல்லைவாயில்
        சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம்
    சங்கிலிக்காக என்கணை மறைத்தீர்
        என்று சாற்றிய தன்மையில் பாடி

As soon as Sundarar left for Thiruvarur and crossed the Limit (the place Kaladipet is believed to be the limit of Thiruvottiyur), he lost his eyesight. He worshiped Lord Shiva in this temple without seeing Lord Shiva. Sundarar has sung hymns in praise of Lord Shiva of this temple and asked Shiva, why he was made blind... for Sangili Nachiyar...? and requested Lord Shiva to remove his sorrows. 

    திருவும்மெய்ப் பொருளும் செல்வமும் எனக்குண்
        சீருடைக் கழல்கள்என்(று) எண்ணி
    ஒருவரை மதியா(து) உறாமைகள் செய்தும்
        ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
    முருகமர் சோலை சூழ்திரு முல்லை
        வாயிலாய் வாயினால் உன்னைப்
    பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய்
        பாசுப் தாபரஞ் சுடரே

Moolavar  : Sri Masilamaneeswarar, Sri Nirmalamaneeswarar,
                 Sri Pasupatheeswarar.
Consort    : Sri Kodiyidai Amman, Sri Lathamathyambal,
                 Sri Kodiyidai Nayagi.

Some of the features of this temple are….
The temple faces east, with a 5-tier Rajagopuram on the south side. At the entrance, there is Prasanna Vinayagar Sannadhi. The east side gate is kept locked. Dwajasthambam, Balipeedam, and Rishabam are on the east side. Rishabam is facing east since, as per Lord Shiva’s instruction, Rishabam went to help Thondaiman in the war against Onan and Vaanan. There is a scar on the top of the moolavar, and abhishekam is done only for avudayar. Sandalwood paste is applied on the Moolavar, and once a year, abhisheka will be done with hot water in the Chithirai month, Sathya Nakshatra day.  

In the koshtam, Ganapathy, Dakshinamurthy, Maha Vishnu, Brahma, and Durgai. There are two Vellerukku pillars in front of Moolavar Sannadhi. It is believed that these pillars were brought from the fort of the two Kurumbas, Onan and Vaanan, after its destruction.

In the outer praharam, Sri Valli Devasena Subramaniyar, Chozhapureeswarar (The structure is very old and the temple has no vimanam), Kusalavapureeswarar, Bhairavar, and Suryan. It is believed that all nine planets are positioned in coordination and are favorable to the Devotees in this temple, so there is no Navagraha Sannidhi. Since Suryan, Bhairavar, and Veerabhadra worshiped Lord Shiva to get rid of their sins, no separate pooja is conducted.

Ambal Sannadhi faces east, but the position is not in the usual position of the left side of the Moolavar. It was learned that there are three Ambal idols made by the same Sthapathy; the other two are in Thiruvotriyur and Melur near Ponneri. Shiva Temple. (Kodiyidai Amman, Vadivudai Amman, and Thiruvudai Amman). It is believed to be auspicious to have the darshan of all three Amman temples on Pournami day (especially if the full moon day falls on Friday), in order, ie, Melur Thiruvudai Amman in the morning, Thiruvottiyur Vadivudai Amman in the afternoon, and Vada Thirumullaivoyal Kodi Idai Amman in the Evening.

There are a lot of framed Photos in the inner praharam of both the Moolavar and Ambal temples. There is a 16-pillar mandapam similar to Thiruvalangadu. The same is now used for parking vehicles and for beggars.  (Our old treasure is being spoiled by miscreants.)


 Nalvar with Vinayagars


 Rasalingeswarar

The 15th-century Arunagirinathar also visited this temple and worshiped Lord Murugan. He has sung 3 Thiruppugazh songs in praise of Lord Muruga and also mentions the place as “Vadamullai” and Lord Shiva as “Masilamaniesar”. A portion of the 3 songs is reproduced as given below.

    அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
        தனநிவ்வி யேகரை யேறிட

        அறிவில்லி யாமடி யேனிட                          ரது சீர

அருவல்லை யோநெடு நாளின
        முருளில்லி லேயிடு மோவுன
        தருளில்லை யோஇன மானவை                 யறியேனே 

மணமொல்லை யாகி நகாகன
        தனவல்லி மோகன மோடமர்
        மகிழ்தில்லை மாநட மாடின                       ரருள்பால
    
மருமல்லி மாவன நீடிய
        பொழில்மெல்லி காவன மாடமை
        வடமுல்லை வாயிலின் மேவிய                    பெருமாளே
   
 வாதி னால்வரு காளியை வென்றிடு
        மாதி நாயகர் வீறுத யங்குகை
        வாரி ராசனு மேபணி யுந்திரு                      நடபாதர்
   
 வாச மாமல ரோனோடு செந்திரு
        மார்பில் வீறிய மாயவ னும்பணி
        மாசிலாமனி யீசர்ம கிழ்ந்தருள்                   பெருமாளே

ARCHITECTURE
The temple was built with stone from adhistanam to prastaram. From sanctum sanctorum to sigaram, the temple was built in Gajaprishta style. The temple consists of sanctum sanctorum, antarala, ardha mandapam, and maha mandapam. The sanctum sanctorum is on a gajaprisha pada bandha adhistanam with jagathy, vrutha kumudam, kandam, and pattikai. The bhitti starts with vedikai. The pilasters are Brahmakantha and vrudha pilasters with kalasam, kudam, palakai, and vettu pothyal. Kumbha panjaras are with Brahma kantha pilasters. Thattikai in the kumbha panjaras are kapota style. The prastaram consists of valapi and kapotam, with nasi kudus. The vimanam above bhumidesam is of gajaprishta style built with bricks. The vimanam is three talas. Shiva, Dakshinamurthy, Maha Vishnu and Brahma are in the tala and greeva koshtams. The sigaram is with 5 kalas.









HISTORY AND INSCRIPTIONS

The original temple existed before the 6th Century ie Thevara period, and is believed to have been reconstructed by Thondaiman after defeating Onan and Vaanan. (There is a Padal Petra Shiva Sthalam in Kanchipuram called Onanakanthan Thali, in which they built a Shiva temple and worshiped there.

வட திருமுல்லைவாயில் ஆவடியருகே உள்ள பாடல் பெற்ற தலமாகும். இங்கே எழுந்தருளும் இறைவனை மாசிலாமணியீஸ்வரர் என்று அழைப்பர். மூன்றாம் குலோத்துங்க சோழனாகிய திரிபுவன வீரதேவர் 31-ஆம் ஆட்சியாண்டு சாசனம், ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற் கோட்டத்துக் கானப்பேறூர் நாட்டில் திருமுல்லைவாயிலுடையார் என்ற பெயரில் திருமுல்லைவாயிலில் சிவன் கோயில் இருந்ததைக் குறிப்பிடுகிறது. பதிபாதமூலபட்டுடைய பஞ்சாரியன், தேவகன்மி, சீமாஹேஸ்வர கண்காணி செய்பவர் மற்றும் சீகாரியம் செய்வார் பொறுப்பில் கோயில் இருந்துள்ளது. சிதம்பரம் நடராசர் கோயிலும் இதேபோல் பல அமைப்புகளின் மேற்பார்வையில் இருந்ததை அங்குள்ள பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

Rajarajan-I's (985 - 1014 CE) 7th-year reign inscription (AR 698 of 1904) records the endowment of lighting a perpetual lamp and through a sale of 4000 kuzhi land to Villipakkam (now called Villivakkam) Vellalan. 3rd-year reign inscriptions (AR 681 of 1904) record the endowment of lighting a perpetual lamp by Nagan Velliyen for the same Thirumullaivoyal Herder who received 90 sheep/goats. Another 4th-year reign inscription (AR 682 of 1904) records the gift of Precious gems like emeralds, diamonds, Maragatham, and pearls to Pasupatha Devar and Astra Devar. Since the inscription is incomplete, the donor's name is not known.  Another 3rd-year reign inscription (AR 684 of 1904) records the gift of 1200 kuzhi land by Acharapakkam, Thirunalluzhan.  
 
மூன்றாம் குலோத்துங்கனின் 31 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1208, அர்த்தமண்டப வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு கோயில் தேவதானமான நிலமும் மடப்புறமான நிலமும் திருமுல்லைவாயில் கோயிலுடன் இணைந்த திருபுவன வீரமடத்தின் பொறுப்பில் தவசி காஸ்யபன் என்பவருக்கு இறையிலியாக வழங்க மன்னன் ஆணையிட்டுள்ளதைப் பதிவு செய்கின்றது.  இந்த ஆவணத்தில் பல அதிகாரிகள் ஒப்பம் இட்டுள்ளார்கள். தான நிலங்களின் எல்லைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பல்வேறு கோயில்களும், நீர்நிலைகளும் பல்வேறு நிலங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பரகேசரி நல்லூர் என்ற ஊர் கூறப்படுகிறது. வாணாதிராயர் என்பவர் பெரிய பொறுப்பில் இருந்துள்ளார் நிலங்களின் அளவுகள் கூறப்பட்டுள்ளன.
Kulothunga Chozha III’s 31st year of reign, 1208 CE inscription on the north wall of the ardha mandapam, records the grant of lands in Mudalai mēdu alias Parākēsarinallūr in Vadapaiyyūr and made tax-free by the king at the instance of Vānādarāyan as dēvadāna and madappura iraiyili to the temple of Tirumullaivāiyil Udaiyār and to the Tribhuvana Viran matha founded at the Tirumadaivilāgam by Tapasya Kāsyapan, a Siva brāhamana of the temple.

தெலுங்கு சோழன் பொத்தப்பிச் சோழனின்  4 ஆம் ஆட்சியாண்டு அர்த்த மண்டப வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு பொன்வரி உள்ளிட்ட வரிகள் கொள்ளும்போது 10 வேலி நிலத்துக்கு மேல் உள்ளவர்க்கே பொன்வரி முதலான வரிவிதிக்க வேண்டும் என்றும் குற்றப்பட்டி, சீகாரியப்பேறு முதலியவை கோயில் திருப்பணிக்கு முதலீடாகக் கொள்ளவும் உத்தரவிட்டு ஒப்பமும் இட்டு கோயிலுக்கு அனுப்பி உள்ளதைப் பதிவு செய்கின்றது.
The Telugu Chozha Pothappai Chozha’s 4th year of reign inscription on the north wall of the ardha mandapam records the order of the king to the effect that taxes like ponvari's etc. should be levied only on 10 vēli of land and that the levies kurrappațți and srikārya pēru were remitted for services in the temple of Tirumullaivāyil - Udaiya nāyanar.

மூன்றாம் இராசராசனின் 16 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1232, அர்த்த மண்டபச் சுவரில் உள்ள கல்வெட்டு,  அகரம் கோழிப்பதாகையான குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலச்சபை, 156 வேலி நிலத்தைக் கோயிலுக்கு. விலையாக 60 பழம்புள்ளி மாடைக்கு விற்றுள்ளதை பதிவு செய்கின்றது. நிலஎல்லை கூறும் போது ஐய்யப்பன் ஏரி, நின்றையூர் பெருவழி, போன்றவை சுட்டப்படுகின்றன. கோழிப் பதாகையுடையான் தழுவக்குழைந்தான் மத்யஸ்தன் ஆவான். (நின்றையூர் – திருநின்றவூர்).
The Chozha King Rājarāja III’s 16th-year-of-reign, 1231 C.E., inscription on the ardhamandapan wall records the sale of 156 vēli of land with irrigation rights, for 60 pullimādai, by the mahāsabhā of agaram as tirunāmattukāni to the deity. This details the boundaries of land. The record mentions the highway at Ninravür; pullimādai one of coin variety.

விஜயநகரப் பேரரசு இரண்டாம் ஹரிஹரனின் பொயு 1388 கருவறை வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு திருமுல்லைவாயில் உடைய நாயனார் பாடி வேட்டைவிழாவிற்காக வல்லங்கிழான் சோழ பல்லவதரையர் இறையிலி மான்யமாக 400 குழி நிலம் வழங்கியுள்ளதைப் பதிவு செய்கின்றது. வீதி உலாவுடன் உலகுய்ய கொண்டான் திருத்தோப்பில் உற்சவர் எழுந்தருள ஏற்பாடும் செய்துள்ளான். சிலர் ஒப்பமிட்டுள்ளனர். 32 அடிகோலால் நிலம் அளக்கப்பட்டது.  (இக்கல்வெட்டில் காலக்குறிப்பு தவறாக இருப்பதாகக் கல்வெட்டு தொகுதி கூறுகிறது. சரியான பொது ஆண்டு 1388 ஆகும்).
The Vijayanagara King Harihara II’s, 1388 CE, inscription on the north wall of the central shrine records the gift of 400 kuli of land made tax-free by the Ambattür to the deity for the conduct of hunting festivals on Sankrāma days, taking out the deity to the Ulaguyyakkoņdār tiruttõppu. It also mentions the measuring rod 32 adi Kōl.

விஜயநகரப் பேரரசு இரண்டாம் ஹரிஹரனின், பொயு 1400 ஆண்டு கருவறை வடபுற ஜகதிப்படையில் உள்ள கல்வெட்டு, திருமுல்லைவாயில் உடையார்க்கு ஆகுடி நாட்டின் கொல்லையில் நற்பாக்கிழான் கொற்றளப்பான் சூரிய தேவன் என்பவன் பல பூஜைபாத்திரங்களை வழங்கியுள்ளான். பாத்திரங்களின் எடைகளும் கூறப்பட்டுள்ளன. சூரியப்பிள்ளை என்பவர் திருவந்திகாப்பில் பயன்படுத்தும் நெய்க்காக 25 பணம் முதலீடாக வழங்கியுள்ளான். எடை என்பது இடை எனப்பேச்சு நடையில் உள்ளது. சிலவாக - செலவாக என்க.
The Vijayanagara king Hariharan II’s year1400 CE inscription on the north wall of the central shrine records the gift of some materials used in worship (Tirumuttu) such as Tiruvattanaikkäl tiruvēdikkāppu taligai in all weighing 200 palams, by Narppak kilan of Akudinādu to the deity. Sūriyappillai deposited 25 panam towards the supply of ghee when the tiruvandikkäppuvate Windoves ceremony is conducted.

சுந்தரபாண்டியனின்ன் ஆட்சியின் 17 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1267 – 68, ஆண்டு கல்வெட்டு, திருமுல்லைவாயில் உடைய நாயனார் பூசைக்கும் திருப்பணிக்கும் சந்தி அமுதுக்கும் திருவைகாசியில் சுவாமி எழுந்தருளவும் வேண்டி, விக்கிரம சோழவள நாட்டாரிடம் 148 காசை (மாடையை)ச் செந்தாமரைக்கண்ணன் என்பவர் முதலீடாக அளித்துள்ளதைப் பதிவு செய்கின்றது. ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படவேண்டிய பங்கும் கூறப்பட்டுள்ளது. இக்கொடை கல்லிலும் செம்பிலும் வெட்டுமாறு கூறப்பட்டுள்ளது. சித்திரமேழி வேளான் இதனை எழுதியுள்ளான். முதலீட்டை 148 காசில் பாதி பணம் தேவதானமாக நிலம் வாங்கப்பட்டது மீதி திருப்பணிக்குச் செலவிடப்பட்டது. நில வருவாயில் பாதியாக்கி அப்பாதியில் பாதிவரியாக விதிக்கப்பட்டது. மீதி கொண்டு திருப்பணி, திருவிழாக்களுக்கு செலவிடலாம் முதலாண்டு விளை நிலத்துக்குப் பாதி போகம் அப்பாதியில் பாதிவரியாகும்.
The Pandiya king Jatāvarman Sundrapāndiyan’s 17th year of reign, 1267C.Ε. inscription on the west wall of the central shrine records an agreement among the inhabitants of Pular-kōtttam, regarding a gift of 148 mādai by Sendāmaraikkannan for conducting a special service, called Vikkiraasolavaļanattār Sandi, the Vaikasi festivals, and for repairs in the temple of Tirumullaivāyil - udaiyanāyanar.

இக்கோயிலில் உள்ள சில கல்வெட்டுகள் மட்டுமே இப்பகுதியில் கொடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள கல்வெட்டுக்கள் இப்பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டு உள்ளது….

Reference
தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி - XXX
திருவள்ளூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி - II
Annual Report on South Indian Epigraphy Year 1904.

The Chozha King who constructed the temple 

LEGEND: 
The story of Moolavar and the Thondaiman's stucco image is above Prasanna Vinayagar Sannathi. As per the legend, Thondaiman, who was ruling Kanchipuram, came with his soldiers to kill Onan and Vaanan, the Kurumbas, who gave frequent trouble to the people with dacoity and robbery in this area. In the evening, when he was traveling in the Mullai forest, the creepers were obstructing his elephant’s leg, so Thondaiman tried to cut the creepers. When he cut the creepers, the sword hit the Shiva Linga, which was hidden inside the creepers, and blood oozed out. Seeing this, he felt guilty and tried to kill himself. But Lord Shiva gave darshan and blessed him. He further said that even though the sword was hitting, Lord Shiva came out pure like “Masilamani”, a gem without any mistakes. (The same story is being told at the Thirumazhisai Shiva Temple near Tiruvallur also.)

It is believed that devotees used to pray to Lord Shiva and Ambal for a Child boon, to remove Marriage obstacles, to get wealth, etc.
 
The Sthala Purana bas-relief
The Sthala Purana stucco image panel
Believed to be the vellerukku pillar in front of the sanctum sanctorum recovered from the Onan and Vaanan, the Kurumbas' palace.

POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on Pradosham, Maha Shivaratri, Chithirai Sathaya Nakshatra day, 10 days Brahmotsavam in Vaikasi (May - June), Thirukalyanam /Marriage function Vaikasi Visakam day, Theppotsavam / float festival in Masi (Feb- March), Vasantha Urchavam in Aani (June – July). 

TEMPLE TIMINGS
The temple will be kept open from 06.30 hrs to 12.00 hrs and from 16.00 hrs to 20.00 hrs.

CONTACT DETAILS :
The landline number is +91 44 2637 6151, and it may be contacted for further details.

HOW TO REACH :
All the buses from Koyambedu to Avadi and Pattabiram pass through this Place, Thirumullaivoyal. The temple is 1 km off the main road, after the famous Pachaiamman Temple.
The temple is 18.4 km from the Koyambedu Bus terminus,  19 km from Chennai Central, and 26 km from Chennai Airport.
The nearest Railway station is  3.3 km from Thirumullaivoyal, and Chennai Central is the Junction.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE



 Mullai creeper, Rishaba mandapam, Gajaprishta vimanam and Ambal's sanndi vimanam

 Rajagopuram


 The 16 Pillar mandapam
The 16 Pillar mandapam
Shiva and Parvati as Rishabaroodar - Murugan
in the 16 Pillar mandapam
 Maha Vishnu - Natarajar
in the 16 Pillar mandapam
Herder - Shiva and Parvati as Rishabaroodar
in the 16 Pillar mandapam
Natarajar - Durga
 in the 16 Pillar mandapam
 An erotic bas-relief in the 16 Pillar mandapam
An old photo of Rajagopuram

கல்வெட்டுக்களின் தொடர்ச்சி….

உத்தமசோழனின் 14 ஆம் ஆட்சியாண்டு, பொயு 984 ஆண்டு கருவறை மேற்கு மற்றும் தென்புற அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு, உத்தமசோழனுடைய  தாயாரும் கண்டராதித்த சோழனின் தேவியுமான செம்பியன் மாதேவியார் 9300 குழிநிலம் அம்பத்தூர் சபையாரிடம் விலைக்கு வாங்கி இறையிழிச்சி, கோயிலுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளதைப் பதிவு செய்கின்றது. நிலத்தின் விலை 85 கழஞ்சாகும். நிலம் எங்கெங்கு எவ்வளவு குழி என்ற விவரமும் சாசனத்தில் உள்ளது. வண்ணக்கன் ஆன வயனசுந்தரன் என்பவன் நிலத்தைப் பெற்றுக் கொண்டு தினமும் நாழி எண்ணெய் வழங்க வேண்டும். நீர்ப்பாய்ச்சும் உரிமை (தலைநீர், கடைநீர்) சுட்டப்படுகிறது.
The Chozha King Uttama Chōladeva’s 14th year of reign, 984 С.Е., inscription on the south wall of the central shrine, records that Sempiyanmādēviyar, the daughter of Malavaraiyar and wife of Gandarāditya Perumāl, purchased 9300 kuli lands and donated to the temple of the sabha; the above lands were sold 85 kalanju with iraiyili. The land boundaries and rights are mentioned.

முதலாம் சுந்தரபாண்டியனின் பொயு 1265 ஆம் ஆண்டு கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு புழற்கோட்டத்து நாட்டவரும் ஈக்காடுக் கோட்டத்து நாட்டவரும் திருமுல்லைவாயில் உடையார்க்குத் திருமஞ்சனத்துக்கும் சாத்துப்படி பூச்சுப்படிக்கும் முதலீடாகச் சில வரிகளைக் கோயிலுக்கு வழங்கியுள்ளதைப் பதிவு செய்கின்றது. சான்றாக ஊர்கடமை, ஆயம், மன்றாடிகள்மேற் சாதவரி மற்றும் எப்பேர்பட்ட புறக்கலனையால் வரும் வரிகளும் இறையிலி சர்வமான்யமாக வழங்கப்பட்டது. சித்தர மேழிபட்டன் ஒப்பமிட்டுள்ளான்.
The Pandya King Jatāvarman Sundrapāndiyan I’s 15th year of reign, 1265. С.Е., year inscription on the south wall, records the gift of the proceeds from certain taxes like ürkadamai, ayam, etc by the inhabitants (Nattavar) of Pularkõttam and Īkkādukõttam for repairs and unguents in the temple of Tirumullaivāyiludaiya nāyanār at Kānappērür nādu in Pular köttam in Jayangondasōlamandālam.

விசய கண்ட கோபாலனின் 35 ஆம் ஆட்சியாண்டு, கருவறைத் தெற்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு, மதுராந்தக பொத்தப்பிச்சோழன் திருமுல்லைவாயிலுடையார் கோயிலில் சித்திரைத் திருநாள் விழா, கண்டகோபாலன் சந்தி அமுது செய்வித்தல், பூசை செய்தல் ஆகிய செலவுகளுக்காகப் பொன்வரி, கடமை, நாட்டுவரி, காணிக்கை, உள்ளூர்ப் புறக்கலனை மற்றும் எப்பேற்பட்டவரிகளும் சர்வமானிய இறையிலியாக வழங்க வேண்டும் என்று ஆணையிட்டு ஒப்பமிட்டுள்ளதைப் பதிவு செய்கின்றது. ஆணை என்ற பொருளில் ஓலை இடம் பெற்றுள்ளது.
The King Vijayakanda Gopalan’s 35th year of reign inscription on the south wall of the central shrine, records the order of Madhurāntaka pottappichōlan granting the Village Tirumullaivāäyil free from the payment of taxes, such as ponvari, nāttuvuri kānikkai purakkalanai etc, for conducting a festival and for a puja and other food offerings to the deity Tirumullaivayil in Pularkõttam.

விஜயநகரப் பேரரசு இரண்டாம் ஹரிஹரனின் பொயு 1403 ஆண்டு, அர்த்த மண்டபத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, அம்பத்தூர் நாட்டு, அம்பத்தூர் வல்லங்கிழான் சோழப் பல்லவதரையன் அருளாளர் செய்ய நாராயண தேவன், வெண்ணயூர் நாட்டு உண்ணல் ஊரில் கரை நாலில் தன் விழுக்காடு நாலில் ஒருபங்கு நிலத்தைத் திருமுல்லைவாயில் உடைய நாயனார் கோயில் பங்குனி விழாவுக்காக வேண்டி திருநாமத்துக்காணியாக வழங்கியுள்ளதைப் பதிவு செய்கின்றது. விழாவில் திருவூடல் திருவிழா ஏழாம் நாள் விழாவாக நடத்தப்பட்ட விவரம் கூறப்பட்டுள்ளது. கொடையைக் கோயிலில் கல்வெட்டாக வெட்டவும் அறக்கட்டளையை நிறைவேற்றவும் உடன்பட்டு, கோயில் அலுவலர்கள் பலர் ஒப்பமிட்டுள்ளனர். சிற்றிலக்கியங்களில் திருவூடல் ஒன்றாகும். உமையம்மையின் ஊடலைச் சிவபெருமான் நீக்க முயல்வார். சுந்தரமூர்த்திநாயனார் ஊடல் தீர்க்க உதவுவார். காண்க திருவீழிமிழலை திருவூடல். சிவபெருமான் உமையம்மை இருவரின் ஊடல் இலக்கியம் இது ஆகும்.
The King Harihararāya II’s 1403 C.E. year inscription on the south wall of ardha mandapa records the gift of a share (Vilukkadu) of land in the Village Annalūr in Vennaiyūr nādu by Vallańkilān Sõlappallavadaraiyan Arulālanāthar seyya nārāyanadēvan of Ambattur to the deity. Tirumullaivāyil - udaiya nāyanār, in Kānappērūr-nādu in Vikkiramasõla valanādu for conducting the tiruvūdal festival on the seventh day of the festival in the month of Panguni.

விஜயநகரப் பேரரசு இரண்டாம் தேவராயரின் 35 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1424 ஆண்டு, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, திருமுல்லைவாயல் உடையார் திருக்கோயிலில் அசங்காதகண்டன் மண்டபத்தில் திருநாள் உற்சவம் நடத்தவும் காடவராயர் திருத்தோப்பில் நடைபெறும் திருநாள் சிறப்புக்கும் மூதலீடரக நிலம் வழங்கப்பட்தைப் பதிவு செய்கின்றது. ஒற்றி அரைசரும் அரசு பெருமாள் ஆன காடவராயரும் 4000 குழிநிலம் ஒதுக்கினர். அசங்காத கண்டன் அளவுகோலால் நிலம் அளந்து தந்தனர். கோயில் கல்வெட்டு வெட்டுவதுடன் நிலத்திடையே திரிசூலக்கல்லும் நட ஏற்பாடு செய்யப்பட்டது. ஒற்றி அரசர் திருப்பாலைவனம் கல்வெட்டிலும் இடம் பெறுகிறார். அரசு பெருமாள் காடவராயர் கோப்பெருஞ்சிங்கனின் மரபினன் ஆவான். நீராதாரமும் கூறப்படுகிறது. கல்வெட்டில் காலக்குறிப்பு பிழையாக இருப்பதைக் கூறி சரியான தேதி கூறப்படுகிறது.
The Vijayanagara King - Devaraya II’s 1424 CE year inscription on the south wall of the central shrine, records the gift of 4000 Kuli of land by Orri mannan alias Udaiyār Orri-arasar and Arasaperumal alias Kādavarāyar for conducting certain special festivals in the Kādavarāyar tiruttõppu (sacred grove) and at the Asaigādagandan - mandapa in the temple from the donors lake (periyeri). Asangadagandan-kōl (Measurerod) is also mentioned in this inscription.

மூன்றாம் குலோத்துங்கனின் 21 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1198 – 99, ஆம் ஆண்டு, அர்த்தமண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு திருமுல்லைவாயில் உடையார் கோயிலில் திருநந்தாவிளக்கு இரண்டு வைக்க, சிவபூதன் மதுசூதன் வானர்நாயன் 24 மாடையைக் கோயில் சிவப்பிராமணரிடம் வழங்கியுள்ளதைப் பதிவு செய்கின்றது. முதலீட்டைப் பெற்ற சிவப்பிராமணர்களின் பெயர்கள் சாசனத்தில் உள்ளன. சிவப்பிராமணர்கள் உறவினர்கள் என்பதுடன், திருமுல்லை வாயிலில் காணி உடையவர்களாக இவர்கள் இருந்தார்கள். தானம் தந்த சிவபூதன் மதிசுதன் வானவர் நாயகன் புலியூர் கோட்டத்து மாங்காடு நாட்டு, கோயப்பேட்டில் வாழ்ந்தவன் ஆவான். (கோயம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் என்ற புராதனக்கோயில் உள்ளது. அக்கோயிலிலும் மூன்றாம் குலோத்துங்கனுடைய சாசனங்கள் உள்ளன).
The Chozha King King Kulõttunga III’s 21st year of reign year 1198 CE, inscription on the north wall of the central shrine records the gift of 24 bujabala pudumādai, in the hands of the sivabrahmans of the temple by Sivabūdan madisūdan vanavar nāyakan of Köyambēdu in Māngādu nādu in Puliyür Köttam a subdivison of Jayangonda sõla mandalam, for burning two perpetual lanps in the temple of Tirumullaivāyil udaiyār in Kānappērürnādu in Pular köttam.

மூன்றாம் குலோத்துங்கனின் 24 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1201 – 02 ஆண்டு, அர்த்த மண்டபத் தெற்கு சுவரில் உள்ள,  சேதம் அடைந்த கல்வெட்டு திருமுல்லைவாயில் உடையார் கோயிலிலுக்கு பஞ்சொட்டி என்ற ஊரில் தேவதானமாக நிலம் விடப்பட்ட விவரம் மட்டும் கல்வெட்டில் உள்ளதைப் பதிவு செய்கின்றது  கொடையாளியின் பெயரும் நில எல்லைகளும் சாசனத்தில் இல்லை. சாசனத்தின் இறுதிப்பகுதி கிடைக்கவில்லை.
The Chozha King Kulõttunga III’s 24th year of reign, 1201 – 02 year incomplete and damaged inscription on the south wall of the ardha mandapam records the devadānam village Pañjetti and the deity Tirumullaivāyil udaiyār in Pular köttam.

முதலாம் இராசேந்திர
னின் 3 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1015 ஆண்டு, மகாமண்டபம் தெற்குத்தூணில் உள்ள கல்வெட்டு, ஊற்றுக்காட்டு நாட்டுப் பூசிப்பாக்கமாந பராந்தகநல்லூரைச் சேர்ந்த திருநல்லூழானுடைய பணிமகன் அறிவானன் என்பவன் திருமுல்லைவாயில் உடையார் கோயிலில் ஒரு மண்டபம் கட்டியுள்ளதைப் பதிவு செய்கின்றது. தற்போது உள்ள மகாமண்டபமே அம்மண்டபம் எனலாம். பணிமகன் என்பதை வேலைக்காரன் என்று கொள்ளாமல் அகம்படியான் என்றும் கூறலாம் அல்லது பாதுகாவல்வீரன் எனலாம். இசக்கன் மற்றொரு கல்வெட்டிலும் வருகிறான்.
The Chōla king. Rājēndra I’s 3rd year of reign, 1015 C.E., inscription on the pillar in the maha mandapam records the construction of the mandapa by Isakkan Arivalan, Vēlaikkaran and of Tirunallūlan of Parāntaganallür alias Pūsipakkam in Ürrukkādu nādu in Ürrukkādu Kōttam. Vēlaikkaranvate Windows means personal assistant.

விஜயநகரப் பேரரசர் இரண்டாம் புக்கராயரின் பொயு 1406 ஆண்டு, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி விழாவிற்கு அமுது செய்தருளும் பணிக்காக நெல்லு 50 கலம் வழங்கப்பட்தையும், வீர நாராயணன் இனக்கு நல்ல பெருமாளான ஒற்றி அரசர் சோமகிரகண புண்ணிய காலத்தில் கொடையை வழங்கினார். என்பதையும், அசங்காத கண்டன் கோலால் நிலம் 800 குழி வழங்கப்பட்தையும் பதிவு செய்கின்றது. முன்னதாக சீயநாயனார் ஆன ஒற்றி அரசர் திருவிளக்கு பட்டிக்கு விடப்பட்ட நிலமும் சுட்டப்படுகிறது. நிலக்கொடை கல்வெட்டாக வெட்டுவதுடன் சூலக்கற்களும் நடப்படுகின்றன. பயிண்டி அரசர் மகனார் அய்யலுப்பகடையார் என்பவரே திருப்பள்ளி எழுச்சிக்கு 20 கலம் அரிசி ஒதுக்கியுள்ளார். கல்வெட்டு எண் 14 மற்றும் 16 இரண்டும் சேர்ந்து ஒரே கல்வெட்டாகும்.
The Vijayanagara king Bukkaraya II’s year 1406 C.E, inscription on the south wall of the ardha mandapam records the gift of 800 kuli of lands in Vellanūr by Ayyāluppa kadaiyār, son of Payindi arsar to the temple of Tirumullaivāyil udiya nāyanār in Kānappērūr nādu, in Puler kõttam for the service of Tiruppalli eluchchi. The gift land is stated to have been formerly granted to the donor by Viranārāyana Innäkku nallaperumā! alias Orriarasar, on the occasion of a solar eclipse. It mentions the measuring rod aśańgādagandan kōl.

முதலாம் இராசேந்திரனின் 3 மற்றும் 4 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1016 ஆண்டு, மகாமண்டபத்தூணில் உள்ள கல்வெட்டு, ஸ்ரீபாசுபததேவரான முல்லை அழகரையும் அஸ்திரதேவரையும் எழுந்தருளிவித்து உற்சவம் நடத்தவும் திருவமுது படைக்கவும் கொடையளிக்கப்பட்தைப் பதிவு செய்கின்றது. மாணிக்கம் 44, மரகதம் 8, வயிரம் 32 பெற்பூக்கள் போன்றவை இறைவனுக்கு வழங்கப்பட்டன. சிதம்பரம் அருகே பாசுபதஈஸ்வரர் என்ற பெயரில் கோயில் உள்ளது. திருமுல்லைவாயில் கோயிலுக்கு விலை உயர்ந்த நவமணிகள் தனிநபர் வழங்கினார். மொத்தமாக 105 நவமணிகளும் பத்துப் பொற்பூக்களும் என்று கொள்ள வேண்டும்.
The Chozha King Rajendra Chola I’s 3rd and 4th year of reign year 1014 C.E., inscription on the pillar in the maha mandapam, records the gift of jewels with stones such has rubies, sapphire, diamonds and pearls in all 105 and ten flowers made of gold for the deities Mullai alagar alias Sri Pasupatadēva and Astradēvar in the temple of Tirumullaivāyil and refers to some provision for food offerings andvate Windows for the conduct of services like abhisheka and for taking out the deities in procession.

முதலாம் இராசேந்திரனின் 10 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1022 ஆண்டு மகா மண்டபத்தூணில் உள்ள  முதலாம் இராசேந்திர சோழனுடைய 'திருமன்னி வளர' என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. மெய்க்கீர்த்தி பகுதிக்குப் பின் பல இடங்களில் எழுத்துகள் சிதைந்துள்ளதால் பொருள் காண இயலவில்லை. 25 காசு முதலீடாக வழங்கப்பட்டது.
The Chozha king Rajendra Chozha I’s 10th year of reign, year 1022 CE, damaged inscription on the maha mandapam pillar starts with his meikeerthi, records 25 kasu gifted to the temple as capital.

முதலாம் இராசேந்திரனின் 20 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1032 ஆண்டு மகாமண்டபத்தூணில் உள்ள மூன்று துண்டு கல்வெட்டுகள், 20 ஆவது ஆட்சியாண்டு வருகிறது. மேலும் திருவமுதுக்குக் கொடை தந்ததாகத் தெரிவிக்கிறது.
The Chozha King Rajendra Chozha I’s 20th year of reign, 1032 CE, a 3-fragment inscription on the maha mandapam pillar records the reign year as 20 and an endowment of naivedyam.

முதலாம் இராசேந்திர சோழனின் 7 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1119 ஆண்டு, மகா மண்டபத்தூணில் உள்ள மெய்கீர்த்தியுடன் உள்ள கல்வெட்டு, வில்லிப்பாக்கத்து வெள்ளாளன் ஒரு விளக்கு வைக்க முதலீடு வழங்க அப்பொன்னைச் சபை பெற்றுக் கொண்டு விளக்கு வைக்க 4000 குழி நிலம் விற்றுத்தந்துள்ளதைப் பதிவு செய்கின்றது. புழல்கோட்டத்து கானப்பேறூர் நாட்டில் மேற்படி தானநிலம் இருந்துள்ளது. நிலத்தின் எல்லைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. எனினும் கல்வெட்டு சிற்சில இடங்களில் சிதைந்துள்ளது.
The Chozha King Rājēndra I’s 7th year of reign 1119 С.Е. damaged inscription on the 2nd pillar in front of the mandapa starts with his meikeerthi, records the deed about the sale of 4000 kuli of land, by the members of the sabha of Ambattür in Ambattür nādu in Pular kõttam to a Vellan of Villippakkam and entrusted to the authorities of the temple of Tirumullaivāyil udałyār for burning a perpetual lamp.

திருமாசிலாமணி ஈஸ்வரர் கோயில் அம்மன் சன்னதி நுழைவாயிலில் உள்ள பொயு 1727 ஆம் ஆண்டு, கல்வெட்டு அம்மன் சன்னதி கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் திரணமாளிகை ஆகியவை திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டதைக் குறிப்பிடுகிறது. கண்ணப்பமுதலியார், வீரராகவ முதலியார் கணக்குப்பிள்ளை சாதியில் தர்மாபிள்ளை ஆகியோரால் திருப்பணியும் கும்பாபிஷேகமும் நடந்த விவரம் தெரியவருகிறது.
The 1727 CE inscription at the entrance of the Amman Temple records the thirupani of the karpagraham, ardhamandapam and thinnai of the shrine of Kodiidai nāyagī by Muthiyappa Mudaliyar, Viraragava Mudaliyar and Dharmapillai. Muthiyappa Mudaliyar. Father of Kannappa Mudaliyar belonged to Vallańkilangodharm, and Dharmapillai was Kāśhiba godhram. They lived in our Ambattür town.

விஜயநகரப்பேரரசு அரசர் மல்லிகார்ஜுனர் ஆட்சியில், பொயு 1452 ஆம் ஆண்டு அர்த்த மண்டப நுழைவாயிலில் உள்ள கல்வெட்டு, அகரம் என்ற கோழிப்பதாகை சதுர்வேதி மங்கலசபை, திருமுல்லை வாயில் உடையார் கோயிலுக்குத் திருப்பூரத் திருநாள் செலவுக்காக இறையிழிச்சி சர்வமானியமாக நிலம் வழங்கியுள்ளதைப் பதிவு செய்கின்றது. எல்லைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சபை உறுப்பினர்களின கைஎழுத்துகள் இறுதியில் உள்ளன. காலக்குறிப்பு தவறாக உள்ளது என்பதைக் கல்வெட்டுத் தொகுதி குறிப்பிட்டு சரியான காலத்தைக் குறிப்பிட்டுள்ளது.
The Vijayanagara King Mallikarjuna’s reign year 1452 C.E, inscription at the entrance of the ardha mandapam of the central shrine records the gift of land as sarvamanyam by the members of the mahasabha of Kōlippadāgai alias Kulõttunga sõlachathur vēdimangalam for various offerings to the goddess Kodiyidi-nachchiyar on the occasion of Tiruppürattirunāļ.

மூன்றாம் குலோத்துங்கனின் 16-ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட முன் மண்டபக் கிழக்குச்சுவரில் உள்ள கல்வெட்டு, சிங்களாந்தக பணிமகன் கங்கனான பெரியநாட்டு உடையார் கோயிலுக்கு ஏதோ கொடை வழங்கியுள்ளார் எனத்தெரிகிறது. கல்வெட்டின் இறுதிப்பகுதி சிதைந்துள்ளதால் முழு விவரம் அறிய இயலவில்லை. பணிமகன் என்ற சொல் அகம்படியரைக் குறிக்க கூடும். போர்வீரனையும் குறிக்கக்கூடும்.
The Chozha king Kulõttunga III’s 16th year of reign, 1196 C.E. inscription on the east wall of the front mandapam, records the gift of (land or cash) something by Gangan alias Periyanāttu udaiyār for būjas in the temple of Tirumullaivāyil udaiyār. He was the panimagan. Panimangan means Agamudayar cast or soldier.

பொயு 15 ஆம் நூற்றாண்டு, விஜய நகரப்பேரரசு அரசன் இரண்டாம் தேவராயரின் முன்மண்டப நுழைவுவாயிலில் உள்ள கல்வெட்டு கோயில் நிலங்கள் தெடர்பான ஆணையை இது சுட்டுகிறது. சந்திரகிரி ராஜ்ஜியத்தில் உள்ள காஞ்சிபுரம், திருக்காளத்தி, திருஒற்றியூர், திருவாலங்காடு, திருப்பாலைவனம், திருமுல்லைவாயல் மற்றும் உள்ள சிவத்தலங்கள், வைணவத்தலங்களுக்கு இவ்வாணை பொருந்தும். தேவதானம், சருவமான்யம் தொடர்பாக சீவிதக்காரர், அதிகாரி, கடைக்கூட்டத்தார், தானத்தார், குத்தகை குலைந்து மகாபூசை முதலியவை பாதிப்படைவதைச் சுட்டுகிறது. பந்மாஹேஸ்வரரும் வயிரவநாயனாரும் இது தொடர்பாக மன்னரிடம் முறையிடமேலே குறிப்பிட்டவர்களிடம் குத்தகை விட தடை விதித்ததுடன் மகாபூசை, திருப்பணி, திங்கள் திவசம், திருநாள், நித்ய உற்சவம் தாழ்வற நடத்த வேண்டும் என மன்னர் ஆணையிடுகிறார். பன்மாஹேஸ்வரருக்கு இதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது. சோடிமுகம், பார்வை, அங்க சாலை, சம்படம் விசேஷதாயம், அரிசிகாணம், நல்எருது, நற்பசு, வெட்டி, கட்டாயம் முதலிய வரிகள் கூறப்படுகின்றன.
The 15th century Vijayanagara King Dēvarāy-II’s reign inscription at the entrance into the mahamandapa, records the royal order (irajakam) granting the proceeds from taxes like sodi angasālai and sampadam visēsha-udāyam arisikānam nallerudu narpasu, vetti and kattāyam in favour of the temple at Kanchi, Kālahasti, Tiruvorriyūr, Tiruvālańgādu, Tiruppalaivanam, Tirumullaivāyal and other saiva and vaishnava temples of Chandragiri for the conduct of daily services and festivals without break and stating that the temple lands should not be leasedout. It mentions misappropriation by Jividekkar, Officer, and Sattanathar. This order was issued at the instance of Vayiravanāyinār and the māhēśvarar of the temples who represented that the services and festivals in the temple were not conducted properly as the incomes from taxes and from the temple lands were misappropriated by the Jivitakārar, the state officials and the satthānathar.

உத்தமசோழனின் 14 ஆம் ஆட்சியாண்டு, பொயு 984 ஆண்டு, கருவறை மேற்குச்கசுவரில் உள்ள கல்வெட்டு, அவனுடைய தாயாரால் கி.பி.984-இல் திருமுல்லைவாயில் உடையார்க்குத் தேவதானமாக நிலம் அம்பத்தூர் நாட்டு வில்லிப்பாக்கத்தில் விடப்பட்தைப் பதிவு செய்கின்றது. புழற்கோட்டத்து வெண்ணையூர் நாட்டுத் திருமுல்லைவாயல் என ஊர் சுட்டப்படுகிறது. திருவமுதுக்காக நிவந்தம் ஏற்படுத்தி வருஷம் ஒன்றுக்கு ஆயிரத்து இருபத்தொரு கலனே இருதூணி நானாழி நெல் இதற்காக ஒதுக்கப்பட்டது. மூன்று திருவமுது இடப்பெறவேணும் என்று கூறும் கல்வெட்டு முழுமையின்றி உள்ளது. வேறோர் கல்வெட்டும் முழுமையின்றி உள்ளது. மற்றோர் கல்வெட்டொன்றும் செம்பியன் மாதேவியன் கொடையைச் சுட்டுகிறது.

மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை மற்றும் கல்வெட்டு தொகுதியில் இக்கல்வெட்டு இடம் பெறவில்லை.
The Chozha king Uttama Chōla’s 14th year of reign, 984 С.Е., an inscription on the west wall of the central shrine records a gift of dēvadhāna lands made tax-free by the king Uttamchōla for food offerings in the temple of Māsilāmanīśvarar udaiyadēvar. His mother donated the above lands. The land was located at Villivakkam in Ambattür nadu of Pular-kōttam. The sabha handed over 1021 kalam peddy per year to the temple for daily three times tiruamudhu (food offerings) in the temple. Daily one kuruni rice was fixed to the god for food offerings.

சோழ சிற்றரசர் கோபார்த்திவேந்திரவர்மரின் 5 ஆம் ஆட்சியாண்டு, 10 ஆம் நூற்றாண்டு, மகாமண்டபத்தில் உள்ள தனிக்கல், கல்வெட்டு, கோபார்த்திவேந்திரவர்மன் என வேந்தராதி பன்மர் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளார். பழைய எழில் மிகு எழுத்தில் கல்வெட்டு வெட்டப் பட்டாலும் சில எழுத்துகள் தவறாகவும் சில எழுத்துகள் விடுபட்டும் உள்ளன. மற்றோர் வேந்தராதி பன்மருடைய கல்வெட்டில் திருமுல்லைவாயில் இடம் பெற இதில் கலிகேசரி சதுர்வேதி மங்கலம் என ஊர்ப்பெயர் இடம் பெறுகிறது. மேலும் நாட்டின் பெயர் 'தன் கூற்று' என வருகிறது. மகாஸபையார் நிலம் விற்று ஒப்பம் இட்ட விபரம் இதில் உள்ளது. ஊரோம் என்றிருந்தது பிராமணர் சபையாக மாறியதைக் காண்கிறோம்.
The King-Parthivendravarman, a regional king of Chozhas, 5th year of reign, 10th century fragmentary inscription on a stone slab installed on the floor of the outer praharam, refers to Kalikēsari-chaturvēdimangalam, a dēvadāna village in Pularkōttam, which may probably be the surname of Tirumullaivāyil where the inscription is found. The king Pārthivēndra varman mentioned here is also perhaps different from and earlier than the Parthivendradhivarman vate to whom the records of this group belong.

முதலாம் இராசேந்திரனின் 3 ஆவது ஆட்சியாண்டு, பொயு 1015 ஆண்டு, மகாமண்டப தனித்தூணில் உல்ள கல்வெட்டு, திருமுல்லைவாயில் உடையார் கோயிலில் ஒரு நந்தா விளக்கு வைக்க 90 சாவாமூவாப்பேராடு வழங்கப்பட்டது. பேராடு செம்மறி ஆடாகும். ஆண்டொன்றுக்கு மொத்தம் 90 நாழி நெய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. திருமுல்லைவாயில் ஊர்ச்சபை தங்களுடைய பணியாள் இடையன் கருமாணிக்கத்திடம் ஆடுகளை வழங்கியுள்ளது. மாங்காடு நாட்டு உகும்பில்வல்லங்கிழான் நாகன் வெள்ளியேன் கொடையாளி ஆவான்.
The Chōla king  Rājēndra Chōla I’s 3rd year of reign, 1015 C.E., year inscription on the east wall of the Maha mandapam, records the gift of 90 sheep left in the hands of some shepherds by Nāganvelli of Ugumbil, in Māngādunādu, a district of Puliyūr köttam for burning a perpetual lamp daily in the temple of Tirumullaivāyil änder, at Tirumullaivāyal in Kānappērürnādu, a of Pular köttam.

சோழ சிற்றரசர் பார்த்திவேந்திராதிபநின் 13 ஆவது ஆடியாண்டு, 10 ஆம் நூற்றாண்டு இரண்டாம் திருச்சுற்று மேற்குப்புறம் தரையில் கிடக்கும் தனிக்கலில் உள்ள கல்வெட்டு, சோழநாட்டு ஆவூர்க்கூற்றத்து விளத்தூரைச் சேர்ந்த சிங்களன் வீர நாராயணன் 1 விளக்கெரிக்க 90 ஆடுகளை அளித்துள்ளான் என்பதிப்பதிவு செய்கின்றது.

(இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தரசோழன் பேரரசனாக இருந்த போது தொண்டை மண்டலத்தில் சோழரின் சிற்றரசனாகக் கோபார்த்திவேந்திரவர்மன் இருந்துள்ளான். இவனுடைய கல்வெட்டுகள் தொண்டை மண்டலத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. திருமுல்லை வாயில் கோயிலில் இவனுடைய 13-ஆவது ஆட்சியாண்டு சாசனம் உள்ளது).
The Chozha king-Koparthi Vēndranvarman, a Chozha regional king’s 13th year of reign 10th century inscription, on a slab built in to the floor of the mahā mandapa in front of the Amman temple, records  Singala Vīra nārāyana a native of Chōlanādu Vilattur village made agift of 90 sheep for burning a perpetual lamp in the temple of Mahādēva at Tirumullaivāyil a dēvadāna village in Pular köttam.

பொயு 15 ஆம் நூற்றாண்டு, விஜயநகர வேந்தர் இரண்டாம் தேவராயரின் நந்தி மண்டபம் அருகே தரையில் உள்ள  துண்டு கல்வெட்டு வயிரவ நாயினார் பெயரையும் சுட்டுகிறது.
The 15th-century Vijayanagara King Devarayar II’s period fragment inscription on the floor near Nandi mandapam mentions the King Devaraya of Vijayanagara and the name.

பொயு 15 ஆம் நூற்றாண்டு,   நந்தி மண்டபம் அருகே தரையில் உள்ள  துண்டு கல்வெட்டு  விஜயநகர அரசரின் கல்வெட்டாக இருக்கலாம்.
The 15th-century fragment inscription on the floor near the Nandi Mandapam may belong to a Vijayanagara king. 

பொயு 15 அம் நூற்றாண்டு இரண்டாம் திருச்சுற்று அருகேயுள்ள துண்டுகல்வெட்டு மிகவும் பொறிந்துள்ள துண்டுக் கல்வெட்டு செய்தி அறிய முடியவில்லை.
The 15th-century fragment inscription stone on the 2nd prahara is found badly damaged and couldn’t decipher anything.

முதலாம் இராசேந்திரனின் காலத்தைச் சார்ந்த கோயில் திருச்சுற்று அருகேயுள்ள மிகவும் சிதைந்த துண்டு கல்வெட்டு மெய்க்கீர்த்தியின் சிறு பகுதி இதில் உள்ளது.  
The Chozha King Rajendra I’s reign fragment and highly damaged inscription located near the compound wall records only the meykirtti.

சோழ அரசர் முதலாம் இராசேந்திர சோழனுடைய 3ஆட்சி ஆண்டு பொயு 1014 – 15 ஆண்டு அம்மன் சன்னதி மண்டபத்த்தின் தூணில் உள்ள கல்வெட்டு திருமுல்லைவாயில் அண்ணர் கோயிலின் உள்ளால் பாசுபத தேவர் மற்றும் அஸ்திரதேவரைத் தோற்றுவித்தவன் திருநல்லுழான இசக்கன் அறிவாளன் என்பதைப் பதிவு செய்கின்றது. இவன் திருவமிர்துக்காகப் பொன்னையும் தருகிறான். தஞ்சைவீரன் நாகன் அறியானும் அம்பத்துழான் சதுவன் ஒற்றியும் பொன் கொண்டு நிலம் வாங்கி இறையிலியாக ஆக்கித்தருகிறார்கள். இங்கே சுட்டப்படும் சிலைகள் உற்சவமூர்த்திகளான ஐம்பொன் சிலைகள் ஆகும். இக்கல்வெட்டில் சுட்டப்படும் நல்லுழான் இசக்கன் ஊர்க்கல்வெட்டு மற்றும் ஒரு கல்வெட்டிலும் இடம் பெறுகிறான்.
The Chozha king Rajendra I’s 3rd year of reign 1014 – 15 CE inscription on a pillar lying at the southern entrance to the mandapa, infront of the Lata Madhyamba shrine, records the gift of 1200 kuli of land by Tirunallūlān Isakkanarivālan of Achcharapakkam alias Sripārāntaka nallur in Ürrukkādu-nādu and Kõttam for food offerings to the deities Astredēva and Pasupatadēva in the temple of Tirumullaivāyal Annar. The land was purchased by the donor from the ūrār of Urodagam in Pulal-nādu, who also made it tax-free.

Reference
தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி - XXX.
திருவள்ளூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி - II.
Annual Report on South Indian Epigraphy Year 1904.


 A Lizard image on the compound wall
--- OM SHIVAYA NAMA ---

4 comments:

  1. Wow. You have written in great detail sir.

    ReplyDelete
  2. Your work will help all future generations to understand our tradition and culture. Thank you.

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot for visiting my blog and the comment....

      Delete