This is the 23rd Devaram Paadal
Petra Shiva Sthalam of Thondai Nadu at Thiruverkadu, a part of Chennai in Tiruvallur District. The temple is on the
banks of the river Cooum, which flows from north to south. Since the river flows from North to south and the Temple is situated on the banks, it is considered equivalent to Kashi. The Moorka Nayanar, one of the 63 Nayanmars, is
from this place.
Sekkizhar, in his Periyapuranam, describes Thirugnanasambandar’s
arrival at Thiruverkadu with his disciples after worshiping Lord Shiva at Sri Kalahastheeswarar of Kalahasti.
In this, Sekkizhar mentions the name of the Cooum River as “Pali”.
மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தினோடும்
மறைவாழ வந்தவர்தாம் மலையும் கானும்
முன் அனைந்த பதிபிறவும் கடந்து போந்து
முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன்மணிகள் பொன்வரன்றி அகிலும் சந்தும்
பொருது அலைக்கும் பாலி வடகரையில்நீடு
சென்னிபதி அணிந்தவர்தம் திருவேற்காடு
சென்று அணைந்தார் திருஞானம் உண்ட செல்வர்
Thirugnanasambandar has sung hymns in praise of Lord
Shiva of this temple.
ஆடல் நாகம் அசைந்தள வில்லதோர் வேடங் கொண்டவன் வேற்காடுபாடி யும்பணிந் தாரிவ் வுலகினில் சேட ராகிய செல்வரே
Moolavar :
Sri Vedapureeswarar, Sri VerkattunatharConsort :
Sri Balambigai, Sri Verkanni.
Some of the salient features of this temple are……The temple faces east with a 5-tier
Rajagopuram, and the temple pond with Neerazhi mandapam was constructed/renovated at a later stage. Dwajasthambam, balipeedam, and Rishabam are after the
Rajagopuram. In the koshtam, Sri Bala Vinayagar, Sri
Dakshinamurthy, Sri Lingothbavar, Sri Brahma, and Sri Durgai.
In the inner Prakaram Naalvar, 63var, Vinayagar,
Kasi Viswanathar, Visalakshi, Anabaya Chozhan, Sekkizhar, Balasubramaniam with
a Shiva Lingam in front, Chandikeswarar (there is also another Chandikeswarar
near the praharam wall), Kalyana Kolam of Lord Shiva and Parvati (in stucco),
Balambigai, Bhairavar, Chandran, Suryan, Navagrahas (are positioned in
octagonal shape and facing 8 directions on a Padma Peedam).
In the outer praharam, Shani Bhagavan, Moorka
Nayanar, and Arunagiri Nathar.
The 15th-century Saint Arunagirinathar worshiped Murugan of this temple
and also sang hymns. Lord Murugan has a bow and arrow, which is
very unique in this temple. Arunagirinathar mentions this place as “Velangadu”,
which is explained in the legend.
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரி கோல மாளம்போர் செயுமாய விழியாலேஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார ஆடம்பார் குவிநேய முலையாலேசாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய வேளங்கார் துடிநீப இடையாலேசாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீது காலந்தா னொழிவேது உரையாயோபாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத மாதம்பா தருசேய வயலூராபாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர பாசந்தா திருமாலின் மருகோனேவேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும் வீறங்கே யிருபாலு முறவீறுவேதந்தா வபிராம நாதந்தா வருல்பாவு வேலங்கா டுறைசீல பெருமாளே.
ARCHITECTUREThe temple consists of the sanctum, antarala, and ardha mandapam. The moolavar vimanam is of Gajaprishta/Gajabrushta type on a pada bandha adhistana with three patta kumudam. Deva koshtas and padra koshtas with virutha kumudam and prativari. The pilasters are with a square base, Vishnukantha body, kalasam, kudam, mandi, and palakai pothyal. The vimana is of eka tala with 5 kalasa.
HISTORY AND
INSCRIPTIONSThe temple existed before the 6th Century, and it is believed that the temple was re-constructed during the Anabaya Chozha period, and an idol of Anabaya Chozha is in the inner praharam. There were about 21 inscriptions recorded in this temple; some of them are fragments and damaged.
கல்வெட்டு எண் : 1முதலாம் குலோத்துங்க்கனின் 44 ஆம்
ஆட்சியாண்டு பொயு 1113, கருவறையின் வடக்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு
மூன்று மைப்பிரதிகளாக இருப்பினும் ஒரே கல்வெட்டாகும். முதலாம் குலோத்துங்கனுடைய மெய்க்கீர்த்தி
முதலில் இடம் பெறுகிறது. பாண்டிய குலாசனி வளநாட்டு ஆத்ரயன் கங்கைகொண்ட சோழ
விச்சாதிர பல்லவரையன் என்பவன் நிலங்களை விலைக்கு வாங்கி மூன்றாகப் பிரித்து 2/3
பாகம் மடப்புற நிலமாக வழங்க ஊரவை இறையிலியாக்கியுள்ளது. இதற்காகத்
தானம் தந்தவன் 16 காசுகளை அளித்துள்ளான். தற்போதுள்ள
நெய்தவாயில், இராஜராஜநல்லூர் என்றும் வழங்கப்பட்டுள்ளது.
போரூர் நாட்டு ஆண்டியார் ஞாயிறுகிழவன் ஆடவல்லான் திருவிசயாலயமுடையான், சபையில் உள்ளவர் வேண்ட, இச்சாசனத்தை எழுதியுள்ளான்.
சபை உறுப்பினர்களின் பெயர்கள் கல்வெட்டில் உள்ளன.The Chozha King Kulothunga Chozha I’s 44th year of reign 1113
CE inscription around the north-to-south side of the sanctum sanctorum north
side adhistanam starts with the prasasti 'Pugal māduviļanga' etc. The inscription records a gift of land by purchase from the
urar of Neydavāyil alias Rājarājanallūr in Vērkādnādu as madappuram by Atraian Gangai kondān Sõla Vichchādira Pallavaraiyan of Iraiyūr in Ārkkāttu Kürram in Pandi Kulāsani Valanādu for Tiruvērkādu udaiya Mahādēva. The land was also made tax-free by the ūrār instead of the 16 kāsu received by them from the
donor.
கல்வெட்டு
எண் : 2முதலாம் குலோத்துங்கனின் பொயு 12, நூற்றாண்டு கருவறை வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டின் தொடக்கப்
பகுதி இல்லாததால் அரசன் பெயர் ஆட்சியாண்டு அல்லது சக ஆண்டு அறிய முடியவில்லை.
ஊர்க் கல்வெட்டு எண் 1 -இல் இடம்பெறும் சிவப்பிராமணன்
மாக்கண்ணன் போன்றோர் இதிலும் வருவதால் முதலாம் குலோத்துங்கன் காலமாக இது
இருக்கலாம் என்று கருதுகிறேன். மடப்புறத்தார் உண்பதற்காக 3 காசில்
நிலம் விலைக்கு வாங்கி வழங்கப்பட்டுள்ளது. செம்பியன் சேகரன் என்பவன் ஆவணம்
எழுதியவன் ஆவான். சபை உறுப்பினர்களின் ஒப்பங்களைக் காண்கிறோம்.The Chozha king Kulothunnga Chozha I’s 12th CE inscription on the north wall of the central shrine registers that the Sabha members purchased land worth 3
kāsu. Sempiyan Jegan wrote this document. Sabha exempted tax for this
land.
கல்வெட்டு
எண் : 3முதலாம்
குலோத்துங்கன்?, பொயு 12 ஆம்
நூற்றாண்டு, கருவறையின் வடக்குச் சுவரில்
உள்ள கல்வெட்டின் தொடக்கப் பகுதி இல்லாததால் அரசன் பெயர், ஆட்சியாண்டு, சக ஆண்டு போன்றவை அறிய முடியவில்லை.
எனினும் கல்வெட்டு வாசக அடிப்படையில் பிற்காலச் சோழர் காலம் எனலாம்.
திருவேற்காடான மும்முடி சோழ நல்லூர்க்குச் சமைந்த வேளான்
சிங்கூருடையான், ஆதிச்சன் சென்னிக்கி விச்சாதிரன், நந்திமான், அம்பலமுடைய தேவன், மூலங்காத்த
பரந்தேவன், மலகந்தை கம்பசாமணன் ஆகியோர் திருவேற்காட்டின்
ஆற்றுக்குக் கீழ்க்கரையில் திருச்சிற்றம்பலநல்லூரில் 250 குழி
நிலம் விற்க முடிவு செய்தனர். பாணபுரத்து வாணியன் மங்கலங்கிழான் விலைக்கு
வாங்கினான். மங்கலங்கிழான் தூதுவன் கொம்மையன் எனவும் அழைக்கப்பட்டுள்ளான். சாசனம்
எழுதியவன் பேறூர் நாட்டு விசயாலயன் ஆவான். பேறூர் இன்றுள்ள போரூர் ஆகும்.The Chozha King-Kulõttunga I.?’s 12th CE inscription on the north
wall of the central shrine records a gift of land in Tiruchchirrambalanallür
on the east bank of the river in Tiruvērkādu by the donor Tüduvan Kommaiyan for a Sandi lamb to God Tiruvērkādu Udaiyar. The land was made tax-free by ürär of Tiruvērkādu.
கல்வெட்டு
எண் : 4முதலாம்
குலோத்துங்க(ன்)?னின், பொயு 12 ஆம் நூற்றாண்டு கருவறை வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, முதலாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டாகத் தோன்றுகிறது. சிதைந்த
நிலையில் மெய்க்கீர்த்தியின் முதல் வரிக்குப்பின் எல்லைகள் கூறப்பட்டுள்ளன.
மாங்காடு நாட்டு உய்யக் கொண்டான் சோழபுரத்தில் இருக்கும் வெள்ளாளன் கேசவன் ஆன
அத்தியூர் செல்வன் நிலம் விலைக்கு வாங்கி, நந்தா
விளக்கெரிக்க விளக்குப்பட்டியாக நிலம் விட்டுள்ளான். கோயில் பட்டர்கள் ஆவணத்தில்
ஒப்பமிட்டுள்ளார்கள். இக்கல்வெட்டு மூன்று துண்டுகளாகக் கல்வெட்டு
படியெடுக்கப்பட்டாலும் ஒரே கல்வெட்டு எனலாம். செல்வன் என்ற சொல் செல்வன் என வந்துள்ளது.Chōla -Kulõttunga I..?. CE 12th century, inscription on
the north wall of the central shrine, records a gift of land in Verkādu nādu by purchase by Kesavan Attiyūr Selvan, a Vellāla resident of Uyyakkondān Sõlapuram in Māngādu nādu for a perpetual lamp to the God Tiruvērkādu Udaiyär. The ürär (sabha) made the lands tax-free in place of a lamp and some money received from the donor.
கல்வெட்டு
எண் : 5சோழ அரசன் இரண்டாம்
இராசேந்திரனின் 17 ஆம் ஆட்சியாண்டு பொயு 1056, கருவறை
அதிட்டானம் வடக்கு, மேற்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு விளக்கெரிப்பதற்காக இரண்டாம் இராசேந்திரனுடைய மெய்க்கீர்த்தியுடன்
தொடங்கும் இக்கல்வெட்டு விரிவாக எழுதப்பட்டுள்ளது. டுள்ளது. கோயிலுக்கு உரிய
வருவாய், செலவு, கணக்கு அதிகாரிகளால்
கேட்டறியப்பட்டது. இரண்டு இடங்களில் மொத்தம் 29,300 குழி
நிலங்களில் இருந்து 1,357 கலம் நெல் நிவந்தம்
ஏற்படுத்தப்பட்டது. கோயில் விழாக்களுக்கான நிலங்களின் அளவுகள், வருவாய்கள் கூறப்பட்டுள்ளன. நந்நவனப் பராமரிப்பு, விளக்குப்பட்டியாக
விடப்பட்ட நில அளவு, வருவாய், திருமேனிகளுக்குரிய
அமுதுபடிக்கான நில அளவு, வருவாய் ஆகியவை ஆராயப்பட்டுக்
கூடுதல் வருவாய்க்கு ஏற்பாடு செய்யப்பட்டு, புதிய நிவந்தம்
ஏற்படுத்தப்பட்டது. விளக்குகள் மூவிதமாக அதாவது நந்தா விளக்கு, ஸ்ரீபலி விளக்கு, தூப விளக்குகள் கோயிலில்
ஏற்றப்பட்டுள்ளன. கோயிலில் இருந்த உற்சவ திருமேனிகளின் விவரமும்
சிவப்பிராமணர்களின் பெயர்களும் இக்கல்வெட்டில் காண்கிறோம். சகித திருமேனி -
தேவியுடன் கூடிய சிவன் உற்சவர் சிலை எனலாம். திருவொற்றியூர் உடையார் கோயிலில்
திருக்காவனம் ஜனவார் கற்பகத்தில் இருந்து அதிகாரிகள் கோயில் காரியம் தொடர்பாக
ஆய்ந்து முடிவெடுத்துள்ளனர்.The Chõļa King Rajendra Chōla II’s 17th year
of reign 1056 CE, inscription, on the north, west, south base of the central
shrine, commences with the prasasti 'Irattapādi ēļarai' etc., records that while adhikārigal Sõlamūvēnda Vēļār was examining the accounts of the temple from his camp in the
Tirukkavanam at Tiruvorriyür, he specified the details of various items of
expenditure (nivandam) out of the produces from lands in
Tiruchchirrambalanallur and Mummudi Cholanallür.
மீதமுள்ள கல்வெட்டுகள் இக்கட்டுரையின்
கடைசியில் கொடுக்கப்பட்டு உள்ளது
Reference
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி
– XXX, திருவள்ளூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி – II.
LEGENDS This is one of the temples where Lord Shiva gave
darshan in Kalyana Kolam to Agasthiyar, and the bas-relief is on the back side
of the moolavar wall. Since Lord Shiva gave darshan of his Kalyana Kolam to
Agasthiyar, Devotees believe that it
will be auspicious to celebrate their Sashtiapthapoorthi
and Sadhabishegam
In one of the legends, Lord Murugan imprisoned Brahma for not knowing the meaning of the Pranava mantra. Lord Shiva explained the necessity of Brahma for creation and the after-effects if he is not released. Lord Shiva's request was also turned down. Finally, Lord Murugan taught the meaning to Lord Shiva and released
Brahma. To get rid of the sin caused
by this, Lord Muruga came to this place, created a theertham, and worshiped
Lord Shiva (A Shiva Linga is in front of Him).
It is believed that the 4 Vedas worshiped Lord
Shiva in the form of Vel trees (acacia
nilotica); hence, this place was called "Velkadu/Velangadu," and the same was corrupted to the present name
of Verkadu.
Moorka Nayanar and Sage Parashara (a scholar in
astrology) worshiped Lord Shiva of this temple. The Moorka Nayanar, one of the
63 Nayanmars belonging to this place, was an ardent devotee of Lord Shiva. He used
to eat only after providing annadhanam to Shiva devotees. When all his wealth was exhausted, he started earning through gambling and continued the service. He was very strict and sometimes used
force to collect the money from the losers. Hence, he was called “Moorka
Nayanar”.
In another legend, Sthala Purana Adhiseshan worshiped Lord Shiva and promised that it would not bite anybody in this place, and this place was called "Visham Theenda Pathy".
POOJAS AND
CELEBRATIONSApart from regular poojas, special poojas are
conducted on Pradosham, Maha Shivaratri in Masi (Feb- March), Navaratri in
Puratasi (Sep-Oct), Thiruvathirai in Margazhi (Dec- January), and Panguni
Uthiram in Panguni (March – April).
TEMPLE TIMINGSThe temple will be kept open from 06.30 hrs to
12.00 hrs, and from 17.00 hrs to 20.30 hrs.
CONTACT
DETAILS :Landline Telephone numbers 044-2627 2430 and 2627 2487 may be contacted for further details.
HOW TO
REACH : Town buses are available from various parts of Chennai city, and routes 27C and 170 are available from Koyambedu Bus
Terminus.The temple is about 1 km from the Thiruverkadu bus
terminus near Devi Karumariamman Temple, and Autos are available from the Bus
Terminus to the temple.The temple is
12 km from Koyambedu, 20 km from Chennai Central, and 20 km from the airport.The nearest Railway station (Metro) is Koyambedu, and the railway junction is Central Station.
LOCATION OF
THE TEMPLE: CLICK HERE
கல்வெட்டுகள் தொடர்ச்சி….
கல்வெட்டு எண் : 6 & 7.சோழ அரசர் வீரராஜேந்திரனின்
4 ஆம் ஆட்சியாண்டு 239 ஆம் நாள், பொயு 1067, கருவறை அதிட்டானம் -
குமுதப்படை வடக்கு, மேற்கு இடங்களில், வெட்டப்பட்ட
கல்வெட்டு ஊர்க்கல்வெட்டு எண் 6 மற்றும் 7 எனப் படியெடுத்திருப்பினும் ஒரே சாசனத்தின் தொடர்ச்சியாகும்.
எயிற்கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்து மயானமுடையார் கோயிலில் கங்கைகொண்ட சோழன்
திருமண்டபத்தில் இருந்து திருவேற்காடு உடையார் கோயில் காரியம் ஆராயும் பணியில்
அதிகாரி ஈடுபட்டுள்ளார். ஆனி மாதம் நடைபெறும் திருவாதிரைத் திருநாள் விழா நடத்த
நிவந்தம் போதாமல் இருந்ததை அறிந்து கூடுதல் வருமானம் வரும்படி நிமந்தம்
உருவாக்கினார். மேலும் அரசுக்குரிய பல வரிகள் கோயிலுக்கு இறையிலியாக வழங்க ஏற்பாடு
செய்தார். கோயிலுக்கு 73 காசுகள் தந்து அதன் வட்டியாக 146
கலம் நெல் வரும்படி செய்தார். கோயில் சார்பாகக் கலந்து கொண்ட
பட்டர்களின் பெயர்கள், கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்
ஆகியவை கூறப்பட்டுள்ளன. பூந்தமலி என்றே இன்றுள்ள பூவிருந்தவல்லி கல்வெட்டில்
கூறப்பட்டுள்ளது. The Chōla king Vira-Rajendra Sōlan’s, year of reign 4, days
239, 1067 CE, inscription on the north and west walls of the central shrine, commences
with prasasti 'Viramētunaiyāgavum' etc., records that on representation to the officer who was
examining the accounts of the temple of Tiruvērkādu in Mummudi Solanallür in Vērkādu nādu from his camp in the Kanchipuram Tirumayānam udaiyār temple at Gangaikonda Chōla mandabam. The provision was made firmly by adhikārigal Sõļa mūvēnda vēļār for conducting the seven-day festival ending on the day of Tiruvādirai in Ani; having found it sufficient, he assigned the income from
various taxes, including Rājādhirājan taragu kuli, for the purpose and also for feeding the Srimāhēśvarās attending the festival.
கல்வெட்டு
எண் : 8 - 1.முதலாம்
குலோத்துங்கனின் 40 ஆம்
ஆட்சியாண்டு, பொயு 1110, கருவறை
வடக்குச் சுவரில் 'புகழ்மாது விளங்க' என்ற
மெய்க்கீர்த்தியுடன்' தொடங்கும் இக்கல்வெட்டு முதலாம்
குலோத்துங்கனுடைய நாற்பதாவது ஆட்சியாண்டின்போது வெட்டப்பட்டதாகும். திருவேற்காடு
உடையார்க்குத் திருச்சிற்றம்பல நல்லூரில் இருக்கும் வெள்ளூரடிக் கந்தமன் பெருமான்
நங்கை விளக்கெரிக்க கொடை அளித்துள்ளாள் இவளிடமிருந்து சிவப்பிராமணர்கள் பசுக்களைப்
பெற்றுக் கொண்டு நெய் வழங்க உடன்படிக்கை செய்துள்ளனர். கொடை குறித்த கல்வெட்டும்
வெட்டி வைக்கின்றனர். கோயில் பட்டர்களின் பெயர்களும் கல்வெட்டு வெட்டிய சிற்பியின்
பெயரும் சாசனத்தில் காண்கிறோம்.
நங்கை போன்று மயன் பெருமாள் என்பவரும் கோயிலுக்குப் பசுக்களை வழங்கி
நெய் அளிக்க சிவப்பிராமணர்களிடம் உடன்பாடு கண்டுள்ளார். ஆவணத்தில் பட்டர், வேளார் அகம்படி எனப் பல சாதி பிரமுகர்களும் ஒப்பமிட்டுள்ளனர். இதன்
தொடர்ச்சி 8-2 ஆக இருக்கலாம்.The Chozha King Kulothunga Chozha’s 40th year of reign, 1110
CE inscription on the north wall of the central shrine in the same temple, commences
with the meykkirtti. 'Pugal mādhu vilanga' etc. Records a
gift of cows for a perpetual lamp to god Tiruvērkādu Udaiyār by Kondama peruma nangai, native of Tiruchchirrambalanallür. Mayan also donated cows to the temple.
கல்வெட்டு
எண் : 8 - 2.சோழ அரசர் இரண்டாம்
இராசேந்திரன்? கருவறை அதிட்டானம் பட்டியில் உள்ள, தொடக்கம் கிடைக்காத இக்கல்வெட்டு பிற்காலச் சோழர் கல்வெட்டாகத் தோன்றுகிறது.
இக்கல்வெட்டில் இடம்பெறும் சிவப்பிராணர்கள் வேறு சோழர்களுடைய கல்வெட்டுகளில்
கூறப்பட்டுள்ளனர். எனினும் ஊர்க்கல்வெட்டு எண் 8-1 தொடர்ச்சி
போல் உள்ளது. எனவே கல்வெட்டின் காலம் பொ.ஆ. 1110 எனலாம்.
இக்கல்வெட்டில் இடம்பெறும் திருவிந்தளூரில் இருந்து செப்பேடு கண்டறியப்பட்டு,
தொல்லியல் துறை பதிப்பித்துள்ளது. கிளிநல்லூர் கிழவன் ஆதித்தன்
விளக்கெரிக்க தானம் தந்துள்ளான். சிதம்பரம் கல்வெட்டிலும் திருவிந்தளூர் இடம்
பெறுகிறது.The Chozha king Rajendran – II’s inscription on the north basement of the
central shrine in the same temple. Kiļinallūr Kilavan alias Adhithan, native of Indhalür, purchased land and donated it to the temple for lighting purposes.
கல்வெட்டு
எண் : 9.முதலாம்
குலோத்துங்கனின். 41 ஆம்
ஆட்சியாண்டு, பொயு 1114, கருவறை வடக்குச் சுவரில் முதலாம் குலோத்துங்கனுடைய
மெய்க்கீர்த்தியுடன் உள்ள இக்கல்வெட்டு திருவிளக்கு வைக்க ஏற்பாடு செய்த
விவரத்தைக் கூறுகிறது. பஞ்சநெதிவாணபுரத்து வாணியன் மங்கலகிழான் குலத்துணை கொம்மன்
என்பவன் நிலம் விலைக்கு வாங்கி இறையிலியாகக் கோயிலுக்கு வழங்க சிவப்பிராமணர்கள்
கட்டளை நிறைவேற்ற, சம்மதித்து ஒப்பமிட்டுள்ளனர். இவனே வேறோர்
கல்வெட்டிலும் வருகிறான்.The Chozha king Kulōttunga I’s 41st year of reign, 1114 CE inscription on the
north wall of the central shrine commences with the prasasti “Pugal mādu vilanga etc”, records a gift of land in Tiruvēṛkādu alias Mummudi sõlanallür by Tūduvan Kommaiyan the kiļān of Vaniyanmangalam in
Panchanādivanapuram the separte from Uyyakondan - Sõlapuram in Mangadu nādu for a perpetual lamp to god Tiruvērkādu Udaiyār. The land was made tax-free by the ūrār of Tiruvēṛkādu in place of a lamp sum received from the donor.
கல்வெட்டு
எண் : 10.விஜயநகரப்
பேரரசு அரசன் இரண்டாம் தேவராயரின் கருவறை வடக்குச் சுவரில் உள்ள 14 ஆம்
நூற்றாண்டு கல்வெட்டு, பெரிதும் சிதைந்துள்ளது. திருவேற்காடு
உடையார்க்கு நீலகங்கரையர் மரபில் வந்த சோழங்க தேவன் வரிச்சலுகையுடன் நிலம்
வழங்கியதாகத் தெரிகிறது. உரிமை குறித்து இருதிறத்தவர்க்குத் தீர்வையான விவரம்
உள்ளது.The Vījāyānaghra dynasty- King Dēvarāyar II’s 14th-century inscription on the north wall of the
central shrine mentions Tamil cycle year Bhava. An officer, Nilakańgaraiyan Sōlanga, disputed two groups
rite problem and donated land to the temple.
கல்வெட்டு
எண் : 11.பொயு 12 ஆம் நூற்றாண்டு இரண்டாம் இராசேந்திரனின் கருவறைத் தென்புறச் சுவரில்
உள்ள இக்கல்வெட்டில் அவனுடைய மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி மட்டும்
உள்ளது. பிற பகுதி முழுமையாகக் கிடைக்கவில்லை. கல்வெட்டு எண் 8-2 இல் இக்கல்வெட்டின் முற்பகுதி இல்லை. அக்கல்வெட்டு இக்கல்வெட்டின்
தொடர்ச்சியாக இருக்கலாம்.The Chōla Rājēndra II’s, 12th century, incomplete inscription, on the South
wall of the central shrine, begins with the prasasti Tirumādupuvi yennum etc., of about the 12th century C.E.
கல்வெட்டு
எண் : 12.முதலாம்
குலோத்துங்கனுடைய 35-ஆம் ஆட்சியாண்டு பொயு 1105 கருவறைத்
தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, நடுவு நாட்டு
திருமுனைப்பாடிப் பனையூர் நாட்டு உறத்தூர் வெளிப்பாக் கிழான் தேவன் சாத்தை
ராஜேந்திரன் என்பவன் விலைக்கு நிலம் வாங்கி, வரியிலியாக்கித்
திருவேற்காடு உடைய நாயனார் கோயிலுக்கு வழங்கியுள்ளான் என்பதை பதிவு செய்கின்றது. திருவேற்காடு தேவந் வேளான் உள்ளிட்டோர் சபையின் உறுப்பினர் ஆவர்.
நிலத்தின் எல்லைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.The Chozha King -Kulõttuńga I’s 35 years of reign, 1105
CE, inscription on the south wall of the central shrine commences with the
prasasti Pugal mādhu vilanga etc, records a
gift of land by purchase from the sabha of Tiruvērkādu as tax-free by Veppäkkiļān Dēvan sättai alias Rājēndran of Urattür in Tirumunaippādi Panaiyūr in Nadu nādu. Sabha members are mentioned.
கல்வெட்டு
எண் : 13 - 1.முதலாம் குலோத்துங்கனின் 38 ஆம் ஆட்சியாண்டு, 1108 பொயு,
கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, பஞ்சநெதிவாணபுரத்து
சங்கரப்பாடியான மங்கலங்கிழான் சாதுவன் கொம்மையன் என்பவன் திருவேற்காடு
ஊர்ச்சபையிடமிருந்து நிலங்களை விலைக்கு வாங்கி, திருவேற்காடுடைய
மகாதேவர் கோயிலுக்கு விளக்குபட்டியாக அளித்துள்ளான். வேளாளர்க்குரிய ஊரவை இங்கே
இருந்துள்ளது. ஊரவையில் இருந்த உறுப்பினரான வெள்ளாளர் பெயர்களும் இதில் உள்ளன.
கொடையாளியின் பெயரை முன்பே கண்டோம்.The Chozha King Kulõttunga I’s 38th
year of reign, 1108 CE inscription on the south wall of the central shrine, registers
a gift of land by Mangalmkiļān Sādhuvan Kommaiyan of Pañchanedhivānapuram from the village assembly (Üröm). The temple authority provided a perpetual lamp. The land name is Vilakkuppatti. Mentions the Vellala community and
their sabha.
கல்வெட்டு எண் : 14 - 1முதலாம் குலோத்துங்கனுடைய 41 ஆட்சியாண்டு
பொயு 1112, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள சாசனம்
மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. திருவேற்காடான மும்முடி சோழநல்லூர்
ஊர்ச்சபையார் கூடி எடுத்த தீர்மானம் இதில் உள்ளது. இக்கல்வெட்டின் தொடர்ச்சி எண் 14-2-இல் உள்ளது.The Chozha King Kulõttunga I’s 41st year of reign, 1112 CE, inscription on the
south wall of the central shrine, records Tiruvērkādu alias Mummudi Sõļanallür "Üröm assembled
and took a decision. They sold the lands to Ponnambala Küttan alias Kalingarājan of Arumpākkam. He gave a perpetual
lamp (nandāvilakku) to the temple. This inscription related to No. 14-2.
கல்வெட்டு
எண் : 14 - 2.முதலாம் குலோத்துங்கனுடைய 41 ஆட்சியாண்டு
பொயு 1112, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள இக்கல்வெட்டு 14-1-இன் தெடர்ச்சி போல் உள்ளது. ஊர்ச்சபையார் கூடி முடிவெடுத்த நிவந்தம் இதில்
இடம்பெறுகிறது. ஊரவை உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளன. நிலம் விலைக்குப் பெற்று, கொடையளித்த அரும்பாக்கிழான் பொன்னம்பலக் கூத்தனான காலிங்கராஜாவின்
பெயரையும் காண்கிறோம். அரும்பாக்கம் சென்னையில் உள்ள ஓர் பகுதியாகும்.The Chozha King Kulõttunga I’s 41st year of reign, 1112 CE, inscription on the
south wall of the central shrine, records that this inscription is related to or
continued from No. 14-1. The donor’s name is Ponnambala Kūttan alias Kālingarājan of Arumpākkam. Arumpākkam is located in Chennai district.
கல்வெட்டு
எண் : 15 - 1.இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறச் சுவரில், மெய்க்கீர்த்தியுடன்
தொடங்கும் இக்கல்வெட்டு திருப்பணி காரணமாக பல துண்டுகளாகப் பல இடங்களில்
இருந்தாலும் ஒரே கல்வெட்டு எனலாம். எனவே 15-1, 2, 3, 4, 5, 6, 7 என எண்ணிடப்பட்டுள்ளன. கல்வெட்டின் பகுதி முழுவதும் மெய்க்கீர்த்தியின்
ஒரு பகுதியாகும். எண் 3-ல் மெய்க்கீர்த்தியின் எஞ்சிய
பகுதியும் மன்னன் ஆட்சியாண்டு மற்றும் நில விற்பனையும் இடம்பெறுகிறது. எண்-2
துண்டு கல்வெட்டு பட்டர்களின் ஒப்பங்களைக் கூறுகின்றன. எண் 4
நில விற்பனையும் நிலம் வாங்கியவரின் பெயரும் ஊரும் பல்வேறு அமுது
வகைகளும் உள்ளன. எண் - 5 and 6 அடியார்களுக்கு வழங்கும் சட்டிச்
சோறும் பட்டர்களின் பெயர்களும் காண்கிறோம். எண்-7 திருவிளக்குகள்
எரிக்கும் நபர்களுடன் கோயில் பட்டர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் காண்கிறோம்.
இரண்டாம் இராசேந்திரனுடைய 8-ஆம் ஆட்சியாண்டு இதில் உள்ளன.The Chozha king Rajendra Chola II’s 8th year of reign inscription on
the central shrines of the temple commences with the prasasti 'Tirumādhu puviyenum perumādhar' etc. This inscription consists of seven bits. The temple official purchased the lands from a private
person. They provided various tiruamudu (food offering) to God. Tiruviļakku is also mentioned in this inscription.
கல்வெட்டு
எண் : 15 - 2.இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு க.எண்.15-1-இன் தொடர்ச்சியாக இதனைக் கருத வேண்டும். இரண்டாம் இராசேந்திரனுடைய எட்டாவது
ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. எண் 15-2 சாசனமும் தொடர்கிறது.The Chozha king Rajendra Chola II’s 8th year of reign inscription on
the central shrines of the temple is related to the previous (No.15-1) inscription?.
கல்வெட்டு
எண் : 15 – 3 &
4.இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு க.எண். 15-1-2-இன் தொடர்ச்சியாக இதனைக் கருத வேண்டும். எண் 15-3,4 சாசனமும் தொடர்கிறது.The Chozha king Rajendra Chola II’s 8th year of reign inscription on
the central shrines of the temple is related to the previous (No.15-1) inscription?.
கல்வெட்டு
எண் : 15 – 5 &
6.இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு க. எண். 15-3,4-இன் தொடர்ச்சியாக இதனைக் கருத வேண்டும்.The Chozha king Rajendra Chola II’s 8th year of reign inscription on
the central shrines of the temple is related to the previous (No.15-1) inscription?.
கல்வெட்டு
எண் : 15 - 7.இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு க. எண். 15-5,6-இன் தொடர்ச்சியாக இதனைக் கருத வேண்டும்.The Chozha king Rajendra Chola II’s 8th year of reign inscription on
the central shrines of the temple is related to the previous (No.15-1) inscription?.
கல்வெட்டு
எண் : 16.முதலாம் குலோத்துங்கனின் 46 ஆம் ஆட்சியாண்டு பொயு1115,
கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு திருவேற்காடான
மும்முடி சோழ நல்லூர்க்குச் சமைந்த தேவந் வேளான் உள்ளிட்ட ஊராரும் சேர்ந்து கோயில்
தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். தச்சந்திருவன், பொந்தன் போன்றோர் ஒப்பமிட்டுள்ளார்கள்.The Chozha king Chōla Kulottunga I’s 46th
year of reign 1115 CE inscription, on the south wall of the central shrine, is
slightly damaged. Records a sale of land by the temple authority. Their names
are mentioned. Tiruvērkādu was called Mummudi Sõlanallür.
கல்வெட்டு
எண் : 17.இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறக் குமுத்தில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டில்
மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி மட்டுமே உள்ளது. கல்வெட்டு எண் 18 இதன் தொடர்ச்சியாக இருக்கலாம்.The Chozha king Rajendra Chola II’s 8th year of reign inscription on
the south side kumudam of the temple is incomplete
and damaged. Mentions one portion of prasasti Rājēndra II. It is associated with inscription No. 18.
கல்வெட்டு
எண் : 18.இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறக் குமுத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு எண் 17 - இன் தொடர்ச்சியாக இருக்கலாம். எனவே தொடக்கப் பகுதி இல்லை. இரண்டாம்
இராசேந்திரன் ஆட்சியின்போது வெட்டப்பட்டிருக்கலாம். திருவேற்காடு உடைய மகாதேவர்
கோயிலில் திருவிளக்கு வைப்பதற்காக 15 கழஞ்சுப் பொன் முதலீடாகத்
திருப்பாச்சூர் அடிகள் பட்டர்களிடம் வழங்குகிறார். இதற்கு வட்டி இருகழஞ்சே கால்
ஆகும். இதைக் கொண்டு தினமும் விளக்கு எரிக்க பட்டர்கள் சம்மதித்து உடன்படிக்கை
செய்துள்ளார்கள். ஆவணத்தைத் திருவிசலூர் கிரமவித்தனேன் சீரனையன் எழுதியுள்ளான்.The Chozha king Rajendra Chola II’s 8th year of reign, 1060 CE, inscription
on the south side of the kumudam of the temple is related to
No. 17 inscription. So, the beginning portion is not available. Records that
the trustees of the temple received 15 money from Tiruppāchūradigal. The interest was 2% kalañju. The above interest was used for
perpetual lamp lighting. This document was written by Kirammavittan of
Tiruvisalür.
கல்வெட்டு
எண் : 19-1 & 2.சோழ அரசனின்
பொயு 12 ஆம் நூற்றாண்டு, கருவறை ஜகதியில் உள்ள இக்கல்வெட்டின் தொடக்கப் பகுதி கிடைக்கவில்லை. இதனால் அரசன் பெயர்
ஆட்சியாண்டு போன்ற விவரங்கள் அறிய முடியவில்லை. கல்வெட்டு எழுத்தமைதி மற்றும்
வாசகத்தையொட்டி பிற்காலச் சோழர் அல்லது பாண்டியர் சாசனமாக அனுமானிக்கலாம். கோயில்
பணியாளர் தினக்கூலி மற்றும் ஆண்டொன்றுக்கு ஆகும் பற்பல செலவுகள் இக்கல்வெட்டில்
காண்கிறோம். ஊதியமாக நெல் மட்டுமே உள்ளது. மடைப்பள்ளி வேண்டுவார்க்கு கலன்கள்,
பாத்திரங்கள் ஏழு கலனே இருதூணி குறுணி இருநாழி உட்பட மொத்தம் 1866
கலனே இருநாழி நெல்லாகும். திருவேகம்பப் பொற்கோயில் நவலோகநாதன்
மேற்படி கொடையை வழங்கியவன் ஆவான்.The Chozha King’s 12th-century inscription on the jagathi in
the central shrine; the beginning of the lines of the inscription is not available.
Anyhow, this is an important inscription. It is referred servants’ number of the
temple, their daily wages or kooli, and the yearly total amount. Some labourers got low
salaries. A few technical staff got higher income. We can see some music
instruments names.
கல்வெட்டு
எண் : 20.சோழ அரசர் மூன்றாம்
இராசராசனின் 3 ஆம் ஆட்சியாண்டு பொயு 1219, முன் மண்டபத்
தெற்குச் சுவரில் உல்ள கல்வெட்டு திருவேற்காடுடையார் கோயில்
திருவுண்ணாழிகை சபையார் தனி நபரிடமிருந்து முதலீடாகக் காசுகள் பெற்றுக் கொண்டு
அதன் வட்டி கொண்டு தினமும் விளக்கெரிக்க உடன்பட்டுக் கல்வெட்டு வெட்டி
வைத்துள்ளனர். முதலீடு வைத்தவர் ஈக்காட்டுக் கோட்டத்து கருப்புழான் சாத்தன் மகன்
ஆகாண்டையும் இவன் சிறிய தாய் நங்கையாண்டாளும் ஆவர். இவர் சாத்தன் இரண்டாம் தாரம்
போலும்.The Chozha King Rajarajan – III’s 3rd year of reign 1219 CE,
inscription on the South wall of the mandapa, records a gift of 5 palańkāsu for a sandi lamp by Ākāndai son of Karuppulan Sättan, in Ayalür in İkkättukköttam and formers mothers younger sister Nangai Andal, or
stepmother.
கல்வெட்டு
எண் : 21.19 ஆம் நூற்றாண்டு, வேதபுரீஸ்வரர் கோயில் கருவறை தெற்கு விதானத்தில் உள்ள முழுமை பெறாத இக்கல்வெட்டு நிலக்கொடையைக் குறிப்பிடுகிறது. மிகவும்
பிற்பட்டகால சாசனமாகும்.The 19th-century incomplete and damaged inscription on the south
side of the central shrine ceiling records certain person gifted 3 kāņi lands to the temple. It is in modern characters.
Reference
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி
– XXX, திருவள்ளூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி – II. --- OM SHIVAYA NAMA---
மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தினோடும்
மறைவாழ வந்தவர்தாம் மலையும் கானும்
முன் அனைந்த பதிபிறவும் கடந்து போந்து
முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன்மணிகள் பொன்வரன்றி அகிலும் சந்தும்
பொருது அலைக்கும் பாலி வடகரையில்நீடு
சென்னிபதி அணிந்தவர்தம் திருவேற்காடு
சென்று அணைந்தார் திருஞானம் உண்ட செல்வர்
The temple existed before the 6th Century, and it is believed that the temple was re-constructed during the Anabaya Chozha period, and an idol of Anabaya Chozha is in the inner praharam. There were about 21 inscriptions recorded in this temple; some of them are fragments and damaged.
கல்வெட்டு எண் : 1
முதலாம் குலோத்துங்க்கனின் 44 ஆம்
ஆட்சியாண்டு பொயு 1113, கருவறையின் வடக்கு அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு
மூன்று மைப்பிரதிகளாக இருப்பினும் ஒரே கல்வெட்டாகும். முதலாம் குலோத்துங்கனுடைய மெய்க்கீர்த்தி
முதலில் இடம் பெறுகிறது. பாண்டிய குலாசனி வளநாட்டு ஆத்ரயன் கங்கைகொண்ட சோழ
விச்சாதிர பல்லவரையன் என்பவன் நிலங்களை விலைக்கு வாங்கி மூன்றாகப் பிரித்து 2/3
பாகம் மடப்புற நிலமாக வழங்க ஊரவை இறையிலியாக்கியுள்ளது. இதற்காகத்
தானம் தந்தவன் 16 காசுகளை அளித்துள்ளான். தற்போதுள்ள
நெய்தவாயில், இராஜராஜநல்லூர் என்றும் வழங்கப்பட்டுள்ளது.
போரூர் நாட்டு ஆண்டியார் ஞாயிறுகிழவன் ஆடவல்லான் திருவிசயாலயமுடையான், சபையில் உள்ளவர் வேண்ட, இச்சாசனத்தை எழுதியுள்ளான்.
சபை உறுப்பினர்களின் பெயர்கள் கல்வெட்டில் உள்ளன.
The Chozha King Kulothunga Chozha I’s 44th year of reign 1113
CE inscription around the north-to-south side of the sanctum sanctorum north
side adhistanam starts with the prasasti 'Pugal māduviļanga' etc. The inscription records a gift of land by purchase from the
urar of Neydavāyil alias Rājarājanallūr in Vērkādnādu as madappuram by Atraian Gangai kondān Sõla Vichchādira Pallavaraiyan of Iraiyūr in Ārkkāttu Kürram in Pandi Kulāsani Valanādu for Tiruvērkādu udaiya Mahādēva. The land was also made tax-free by the ūrār instead of the 16 kāsu received by them from the
donor.
கல்வெட்டு
எண் : 2
முதலாம் குலோத்துங்கனின் பொயு 12, நூற்றாண்டு கருவறை வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டின் தொடக்கப்
பகுதி இல்லாததால் அரசன் பெயர் ஆட்சியாண்டு அல்லது சக ஆண்டு அறிய முடியவில்லை.
ஊர்க் கல்வெட்டு எண் 1 -இல் இடம்பெறும் சிவப்பிராமணன்
மாக்கண்ணன் போன்றோர் இதிலும் வருவதால் முதலாம் குலோத்துங்கன் காலமாக இது
இருக்கலாம் என்று கருதுகிறேன். மடப்புறத்தார் உண்பதற்காக 3 காசில்
நிலம் விலைக்கு வாங்கி வழங்கப்பட்டுள்ளது. செம்பியன் சேகரன் என்பவன் ஆவணம்
எழுதியவன் ஆவான். சபை உறுப்பினர்களின் ஒப்பங்களைக் காண்கிறோம்.
The Chozha king Kulothunnga Chozha I’s 12th CE inscription on the north wall of the central shrine registers that the Sabha members purchased land worth 3
kāsu. Sempiyan Jegan wrote this document. Sabha exempted tax for this
land.
கல்வெட்டு
எண் : 3
முதலாம்
குலோத்துங்கன்?, பொயு 12 ஆம்
நூற்றாண்டு, கருவறையின் வடக்குச் சுவரில்
உள்ள கல்வெட்டின் தொடக்கப் பகுதி இல்லாததால் அரசன் பெயர், ஆட்சியாண்டு, சக ஆண்டு போன்றவை அறிய முடியவில்லை.
எனினும் கல்வெட்டு வாசக அடிப்படையில் பிற்காலச் சோழர் காலம் எனலாம்.
திருவேற்காடான மும்முடி சோழ நல்லூர்க்குச் சமைந்த வேளான்
சிங்கூருடையான், ஆதிச்சன் சென்னிக்கி விச்சாதிரன், நந்திமான், அம்பலமுடைய தேவன், மூலங்காத்த
பரந்தேவன், மலகந்தை கம்பசாமணன் ஆகியோர் திருவேற்காட்டின்
ஆற்றுக்குக் கீழ்க்கரையில் திருச்சிற்றம்பலநல்லூரில் 250 குழி
நிலம் விற்க முடிவு செய்தனர். பாணபுரத்து வாணியன் மங்கலங்கிழான் விலைக்கு
வாங்கினான். மங்கலங்கிழான் தூதுவன் கொம்மையன் எனவும் அழைக்கப்பட்டுள்ளான். சாசனம்
எழுதியவன் பேறூர் நாட்டு விசயாலயன் ஆவான். பேறூர் இன்றுள்ள போரூர் ஆகும்.
The Chozha King-Kulõttunga I.?’s 12th CE inscription on the north
wall of the central shrine records a gift of land in Tiruchchirrambalanallür
on the east bank of the river in Tiruvērkādu by the donor Tüduvan Kommaiyan for a Sandi lamb to God Tiruvērkādu Udaiyar. The land was made tax-free by ürär of Tiruvērkādu.
கல்வெட்டு
எண் : 4
முதலாம்
குலோத்துங்க(ன்)?னின், பொயு 12 ஆம் நூற்றாண்டு கருவறை வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, முதலாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டாகத் தோன்றுகிறது. சிதைந்த
நிலையில் மெய்க்கீர்த்தியின் முதல் வரிக்குப்பின் எல்லைகள் கூறப்பட்டுள்ளன.
மாங்காடு நாட்டு உய்யக் கொண்டான் சோழபுரத்தில் இருக்கும் வெள்ளாளன் கேசவன் ஆன
அத்தியூர் செல்வன் நிலம் விலைக்கு வாங்கி, நந்தா
விளக்கெரிக்க விளக்குப்பட்டியாக நிலம் விட்டுள்ளான். கோயில் பட்டர்கள் ஆவணத்தில்
ஒப்பமிட்டுள்ளார்கள். இக்கல்வெட்டு மூன்று துண்டுகளாகக் கல்வெட்டு
படியெடுக்கப்பட்டாலும் ஒரே கல்வெட்டு எனலாம். செல்வன் என்ற சொல் செல்வன் என வந்துள்ளது.
Chōla -Kulõttunga I..?. CE 12th century, inscription on
the north wall of the central shrine, records a gift of land in Verkādu nādu by purchase by Kesavan Attiyūr Selvan, a Vellāla resident of Uyyakkondān Sõlapuram in Māngādu nādu for a perpetual lamp to the God Tiruvērkādu Udaiyär. The ürär (sabha) made the lands tax-free in place of a lamp and some money received from the donor.
கல்வெட்டு
எண் : 5
சோழ அரசன் இரண்டாம்
இராசேந்திரனின் 17 ஆம் ஆட்சியாண்டு பொயு 1056, கருவறை
அதிட்டானம் வடக்கு, மேற்கு ஜகதியில் உள்ள கல்வெட்டு விளக்கெரிப்பதற்காக இரண்டாம் இராசேந்திரனுடைய மெய்க்கீர்த்தியுடன்
தொடங்கும் இக்கல்வெட்டு விரிவாக எழுதப்பட்டுள்ளது. டுள்ளது. கோயிலுக்கு உரிய
வருவாய், செலவு, கணக்கு அதிகாரிகளால்
கேட்டறியப்பட்டது. இரண்டு இடங்களில் மொத்தம் 29,300 குழி
நிலங்களில் இருந்து 1,357 கலம் நெல் நிவந்தம்
ஏற்படுத்தப்பட்டது. கோயில் விழாக்களுக்கான நிலங்களின் அளவுகள், வருவாய்கள் கூறப்பட்டுள்ளன. நந்நவனப் பராமரிப்பு, விளக்குப்பட்டியாக
விடப்பட்ட நில அளவு, வருவாய், திருமேனிகளுக்குரிய
அமுதுபடிக்கான நில அளவு, வருவாய் ஆகியவை ஆராயப்பட்டுக்
கூடுதல் வருவாய்க்கு ஏற்பாடு செய்யப்பட்டு, புதிய நிவந்தம்
ஏற்படுத்தப்பட்டது. விளக்குகள் மூவிதமாக அதாவது நந்தா விளக்கு, ஸ்ரீபலி விளக்கு, தூப விளக்குகள் கோயிலில்
ஏற்றப்பட்டுள்ளன. கோயிலில் இருந்த உற்சவ திருமேனிகளின் விவரமும்
சிவப்பிராமணர்களின் பெயர்களும் இக்கல்வெட்டில் காண்கிறோம். சகித திருமேனி -
தேவியுடன் கூடிய சிவன் உற்சவர் சிலை எனலாம். திருவொற்றியூர் உடையார் கோயிலில்
திருக்காவனம் ஜனவார் கற்பகத்தில் இருந்து அதிகாரிகள் கோயில் காரியம் தொடர்பாக
ஆய்ந்து முடிவெடுத்துள்ளனர்.
The Chõļa King Rajendra Chōla II’s 17th year
of reign 1056 CE, inscription, on the north, west, south base of the central
shrine, commences with the prasasti 'Irattapādi ēļarai' etc., records that while adhikārigal Sõlamūvēnda Vēļār was examining the accounts of the temple from his camp in the
Tirukkavanam at Tiruvorriyür, he specified the details of various items of
expenditure (nivandam) out of the produces from lands in
Tiruchchirrambalanallur and Mummudi Cholanallür.
மீதமுள்ள கல்வெட்டுகள் இக்கட்டுரையின்
கடைசியில் கொடுக்கப்பட்டு உள்ளது
Reference
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி
– XXX, திருவள்ளூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி – II.
In one of the legends, Lord Murugan imprisoned Brahma for not knowing the meaning of the Pranava mantra. Lord Shiva explained the necessity of Brahma for creation and the after-effects if he is not released. Lord Shiva's request was also turned down. Finally, Lord Murugan taught the meaning to Lord Shiva and released
Brahma. To get rid of the sin caused
by this, Lord Muruga came to this place, created a theertham, and worshiped
Lord Shiva (A Shiva Linga is in front of Him).
கல்வெட்டுகள் தொடர்ச்சி….
கல்வெட்டு எண் : 6 & 7.
சோழ அரசர் வீரராஜேந்திரனின்
4 ஆம் ஆட்சியாண்டு 239 ஆம் நாள், பொயு 1067, கருவறை அதிட்டானம் -
குமுதப்படை வடக்கு, மேற்கு இடங்களில், வெட்டப்பட்ட
கல்வெட்டு ஊர்க்கல்வெட்டு எண் 6 மற்றும் 7 எனப் படியெடுத்திருப்பினும் ஒரே சாசனத்தின் தொடர்ச்சியாகும்.
எயிற்கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்து மயானமுடையார் கோயிலில் கங்கைகொண்ட சோழன்
திருமண்டபத்தில் இருந்து திருவேற்காடு உடையார் கோயில் காரியம் ஆராயும் பணியில்
அதிகாரி ஈடுபட்டுள்ளார். ஆனி மாதம் நடைபெறும் திருவாதிரைத் திருநாள் விழா நடத்த
நிவந்தம் போதாமல் இருந்ததை அறிந்து கூடுதல் வருமானம் வரும்படி நிமந்தம்
உருவாக்கினார். மேலும் அரசுக்குரிய பல வரிகள் கோயிலுக்கு இறையிலியாக வழங்க ஏற்பாடு
செய்தார். கோயிலுக்கு 73 காசுகள் தந்து அதன் வட்டியாக 146
கலம் நெல் வரும்படி செய்தார். கோயில் சார்பாகக் கலந்து கொண்ட
பட்டர்களின் பெயர்கள், கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்
ஆகியவை கூறப்பட்டுள்ளன. பூந்தமலி என்றே இன்றுள்ள பூவிருந்தவல்லி கல்வெட்டில்
கூறப்பட்டுள்ளது.
The Chōla king Vira-Rajendra Sōlan’s, year of reign 4, days
239, 1067 CE, inscription on the north and west walls of the central shrine, commences
with prasasti 'Viramētunaiyāgavum' etc., records that on representation to the officer who was
examining the accounts of the temple of Tiruvērkādu in Mummudi Solanallür in Vērkādu nādu from his camp in the Kanchipuram Tirumayānam udaiyār temple at Gangaikonda Chōla mandabam. The provision was made firmly by adhikārigal Sõļa mūvēnda vēļār for conducting the seven-day festival ending on the day of Tiruvādirai in Ani; having found it sufficient, he assigned the income from
various taxes, including Rājādhirājan taragu kuli, for the purpose and also for feeding the Srimāhēśvarās attending the festival.
கல்வெட்டு
எண் : 8 - 1.
முதலாம்
குலோத்துங்கனின் 40 ஆம்
ஆட்சியாண்டு, பொயு 1110, கருவறை
வடக்குச் சுவரில் 'புகழ்மாது விளங்க' என்ற
மெய்க்கீர்த்தியுடன்' தொடங்கும் இக்கல்வெட்டு முதலாம்
குலோத்துங்கனுடைய நாற்பதாவது ஆட்சியாண்டின்போது வெட்டப்பட்டதாகும். திருவேற்காடு
உடையார்க்குத் திருச்சிற்றம்பல நல்லூரில் இருக்கும் வெள்ளூரடிக் கந்தமன் பெருமான்
நங்கை விளக்கெரிக்க கொடை அளித்துள்ளாள் இவளிடமிருந்து சிவப்பிராமணர்கள் பசுக்களைப்
பெற்றுக் கொண்டு நெய் வழங்க உடன்படிக்கை செய்துள்ளனர். கொடை குறித்த கல்வெட்டும்
வெட்டி வைக்கின்றனர். கோயில் பட்டர்களின் பெயர்களும் கல்வெட்டு வெட்டிய சிற்பியின்
பெயரும் சாசனத்தில் காண்கிறோம்.
நங்கை போன்று மயன் பெருமாள் என்பவரும் கோயிலுக்குப் பசுக்களை வழங்கி
நெய் அளிக்க சிவப்பிராமணர்களிடம் உடன்பாடு கண்டுள்ளார். ஆவணத்தில் பட்டர், வேளார் அகம்படி எனப் பல சாதி பிரமுகர்களும் ஒப்பமிட்டுள்ளனர். இதன்
தொடர்ச்சி 8-2 ஆக இருக்கலாம்.
The Chozha King Kulothunga Chozha’s 40th year of reign, 1110
CE inscription on the north wall of the central shrine in the same temple, commences
with the meykkirtti. 'Pugal mādhu vilanga' etc. Records a
gift of cows for a perpetual lamp to god Tiruvērkādu Udaiyār by Kondama peruma nangai, native of Tiruchchirrambalanallür. Mayan also donated cows to the temple.
கல்வெட்டு
எண் : 8 - 2.
சோழ அரசர் இரண்டாம்
இராசேந்திரன்? கருவறை அதிட்டானம் பட்டியில் உள்ள, தொடக்கம் கிடைக்காத இக்கல்வெட்டு பிற்காலச் சோழர் கல்வெட்டாகத் தோன்றுகிறது.
இக்கல்வெட்டில் இடம்பெறும் சிவப்பிராணர்கள் வேறு சோழர்களுடைய கல்வெட்டுகளில்
கூறப்பட்டுள்ளனர். எனினும் ஊர்க்கல்வெட்டு எண் 8-1 தொடர்ச்சி
போல் உள்ளது. எனவே கல்வெட்டின் காலம் பொ.ஆ. 1110 எனலாம்.
இக்கல்வெட்டில் இடம்பெறும் திருவிந்தளூரில் இருந்து செப்பேடு கண்டறியப்பட்டு,
தொல்லியல் துறை பதிப்பித்துள்ளது. கிளிநல்லூர் கிழவன் ஆதித்தன்
விளக்கெரிக்க தானம் தந்துள்ளான். சிதம்பரம் கல்வெட்டிலும் திருவிந்தளூர் இடம்
பெறுகிறது.
The Chozha king Rajendran – II’s inscription on the north basement of the
central shrine in the same temple. Kiļinallūr Kilavan alias Adhithan, native of Indhalür, purchased land and donated it to the temple for lighting purposes.
கல்வெட்டு
எண் : 9.
முதலாம்
குலோத்துங்கனின். 41 ஆம்
ஆட்சியாண்டு, பொயு 1114, கருவறை வடக்குச் சுவரில் முதலாம் குலோத்துங்கனுடைய
மெய்க்கீர்த்தியுடன் உள்ள இக்கல்வெட்டு திருவிளக்கு வைக்க ஏற்பாடு செய்த
விவரத்தைக் கூறுகிறது. பஞ்சநெதிவாணபுரத்து வாணியன் மங்கலகிழான் குலத்துணை கொம்மன்
என்பவன் நிலம் விலைக்கு வாங்கி இறையிலியாகக் கோயிலுக்கு வழங்க சிவப்பிராமணர்கள்
கட்டளை நிறைவேற்ற, சம்மதித்து ஒப்பமிட்டுள்ளனர். இவனே வேறோர்
கல்வெட்டிலும் வருகிறான்.
The Chozha king Kulōttunga I’s 41st year of reign, 1114 CE inscription on the
north wall of the central shrine commences with the prasasti “Pugal mādu vilanga etc”, records a gift of land in Tiruvēṛkādu alias Mummudi sõlanallür by Tūduvan Kommaiyan the kiļān of Vaniyanmangalam in
Panchanādivanapuram the separte from Uyyakondan - Sõlapuram in Mangadu nādu for a perpetual lamp to god Tiruvērkādu Udaiyār. The land was made tax-free by the ūrār of Tiruvēṛkādu in place of a lamp sum received from the donor.
கல்வெட்டு
எண் : 10.
விஜயநகரப்
பேரரசு அரசன் இரண்டாம் தேவராயரின் கருவறை வடக்குச் சுவரில் உள்ள 14 ஆம்
நூற்றாண்டு கல்வெட்டு, பெரிதும் சிதைந்துள்ளது. திருவேற்காடு
உடையார்க்கு நீலகங்கரையர் மரபில் வந்த சோழங்க தேவன் வரிச்சலுகையுடன் நிலம்
வழங்கியதாகத் தெரிகிறது. உரிமை குறித்து இருதிறத்தவர்க்குத் தீர்வையான விவரம்
உள்ளது.
The Vījāyānaghra dynasty- King Dēvarāyar II’s 14th-century inscription on the north wall of the
central shrine mentions Tamil cycle year Bhava. An officer, Nilakańgaraiyan Sōlanga, disputed two groups
rite problem and donated land to the temple.
கல்வெட்டு
எண் : 11.
பொயு 12 ஆம் நூற்றாண்டு இரண்டாம் இராசேந்திரனின் கருவறைத் தென்புறச் சுவரில்
உள்ள இக்கல்வெட்டில் அவனுடைய மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி மட்டும்
உள்ளது. பிற பகுதி முழுமையாகக் கிடைக்கவில்லை. கல்வெட்டு எண் 8-2 இல் இக்கல்வெட்டின் முற்பகுதி இல்லை. அக்கல்வெட்டு இக்கல்வெட்டின்
தொடர்ச்சியாக இருக்கலாம்.
The Chōla Rājēndra II’s, 12th century, incomplete inscription, on the South
wall of the central shrine, begins with the prasasti Tirumādupuvi yennum etc., of about the 12th century C.E.
கல்வெட்டு
எண் : 12.
முதலாம்
குலோத்துங்கனுடைய 35-ஆம் ஆட்சியாண்டு பொயு 1105 கருவறைத்
தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, நடுவு நாட்டு
திருமுனைப்பாடிப் பனையூர் நாட்டு உறத்தூர் வெளிப்பாக் கிழான் தேவன் சாத்தை
ராஜேந்திரன் என்பவன் விலைக்கு நிலம் வாங்கி, வரியிலியாக்கித்
திருவேற்காடு உடைய நாயனார் கோயிலுக்கு வழங்கியுள்ளான் என்பதை பதிவு செய்கின்றது. திருவேற்காடு தேவந் வேளான் உள்ளிட்டோர் சபையின் உறுப்பினர் ஆவர்.
நிலத்தின் எல்லைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
The Chozha King -Kulõttuńga I’s 35 years of reign, 1105
CE, inscription on the south wall of the central shrine commences with the
prasasti Pugal mādhu vilanga etc, records a
gift of land by purchase from the sabha of Tiruvērkādu as tax-free by Veppäkkiļān Dēvan sättai alias Rājēndran of Urattür in Tirumunaippādi Panaiyūr in Nadu nādu. Sabha members are mentioned.
கல்வெட்டு
எண் : 13 - 1.
முதலாம் குலோத்துங்கனின் 38 ஆம் ஆட்சியாண்டு, 1108 பொயு,
கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, பஞ்சநெதிவாணபுரத்து
சங்கரப்பாடியான மங்கலங்கிழான் சாதுவன் கொம்மையன் என்பவன் திருவேற்காடு
ஊர்ச்சபையிடமிருந்து நிலங்களை விலைக்கு வாங்கி, திருவேற்காடுடைய
மகாதேவர் கோயிலுக்கு விளக்குபட்டியாக அளித்துள்ளான். வேளாளர்க்குரிய ஊரவை இங்கே
இருந்துள்ளது. ஊரவையில் இருந்த உறுப்பினரான வெள்ளாளர் பெயர்களும் இதில் உள்ளன.
கொடையாளியின் பெயரை முன்பே கண்டோம்.
The Chozha King Kulõttunga I’s 38th
year of reign, 1108 CE inscription on the south wall of the central shrine, registers
a gift of land by Mangalmkiļān Sādhuvan Kommaiyan of Pañchanedhivānapuram from the village assembly (Üröm). The temple authority provided a perpetual lamp. The land name is Vilakkuppatti. Mentions the Vellala community and
their sabha.
கல்வெட்டு எண் : 14 - 1
முதலாம் குலோத்துங்கனுடைய 41 ஆட்சியாண்டு
பொயு 1112, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள சாசனம்
மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. திருவேற்காடான மும்முடி சோழநல்லூர்
ஊர்ச்சபையார் கூடி எடுத்த தீர்மானம் இதில் உள்ளது. இக்கல்வெட்டின் தொடர்ச்சி எண் 14-2-இல் உள்ளது.
The Chozha King Kulõttunga I’s 41st year of reign, 1112 CE, inscription on the
south wall of the central shrine, records Tiruvērkādu alias Mummudi Sõļanallür "Üröm assembled
and took a decision. They sold the lands to Ponnambala Küttan alias Kalingarājan of Arumpākkam. He gave a perpetual
lamp (nandāvilakku) to the temple. This inscription related to No. 14-2.
கல்வெட்டு
எண் : 14 - 2.
முதலாம் குலோத்துங்கனுடைய 41 ஆட்சியாண்டு
பொயு 1112, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள இக்கல்வெட்டு 14-1-இன் தெடர்ச்சி போல் உள்ளது. ஊர்ச்சபையார் கூடி முடிவெடுத்த நிவந்தம் இதில்
இடம்பெறுகிறது. ஊரவை உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளன. நிலம் விலைக்குப் பெற்று, கொடையளித்த அரும்பாக்கிழான் பொன்னம்பலக் கூத்தனான காலிங்கராஜாவின்
பெயரையும் காண்கிறோம். அரும்பாக்கம் சென்னையில் உள்ள ஓர் பகுதியாகும்.
The Chozha King Kulõttunga I’s 41st year of reign, 1112 CE, inscription on the
south wall of the central shrine, records that this inscription is related to or
continued from No. 14-1. The donor’s name is Ponnambala Kūttan alias Kālingarājan of Arumpākkam. Arumpākkam is located in Chennai district.
கல்வெட்டு
எண் : 15 - 1.
இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறச் சுவரில், மெய்க்கீர்த்தியுடன்
தொடங்கும் இக்கல்வெட்டு திருப்பணி காரணமாக பல துண்டுகளாகப் பல இடங்களில்
இருந்தாலும் ஒரே கல்வெட்டு எனலாம். எனவே 15-1, 2, 3, 4, 5, 6, 7 என எண்ணிடப்பட்டுள்ளன. கல்வெட்டின் பகுதி முழுவதும் மெய்க்கீர்த்தியின்
ஒரு பகுதியாகும். எண் 3-ல் மெய்க்கீர்த்தியின் எஞ்சிய
பகுதியும் மன்னன் ஆட்சியாண்டு மற்றும் நில விற்பனையும் இடம்பெறுகிறது. எண்-2
துண்டு கல்வெட்டு பட்டர்களின் ஒப்பங்களைக் கூறுகின்றன. எண் 4
நில விற்பனையும் நிலம் வாங்கியவரின் பெயரும் ஊரும் பல்வேறு அமுது
வகைகளும் உள்ளன. எண் - 5 and 6 அடியார்களுக்கு வழங்கும் சட்டிச்
சோறும் பட்டர்களின் பெயர்களும் காண்கிறோம். எண்-7 திருவிளக்குகள்
எரிக்கும் நபர்களுடன் கோயில் பட்டர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் காண்கிறோம்.
இரண்டாம் இராசேந்திரனுடைய 8-ஆம் ஆட்சியாண்டு இதில் உள்ளன.
The Chozha king Rajendra Chola II’s 8th year of reign inscription on
the central shrines of the temple commences with the prasasti 'Tirumādhu puviyenum perumādhar' etc. This inscription consists of seven bits. The temple official purchased the lands from a private
person. They provided various tiruamudu (food offering) to God. Tiruviļakku is also mentioned in this inscription.
கல்வெட்டு
எண் : 15 - 2.
இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு க.எண்.15-1-இன் தொடர்ச்சியாக இதனைக் கருத வேண்டும். இரண்டாம் இராசேந்திரனுடைய எட்டாவது
ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. எண் 15-2 சாசனமும் தொடர்கிறது.
The Chozha king Rajendra Chola II’s 8th year of reign inscription on
the central shrines of the temple is related to the previous (No.15-1) inscription?.
கல்வெட்டு
எண் : 15 – 3 &
4.
இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு க.எண். 15-1-2-இன் தொடர்ச்சியாக இதனைக் கருத வேண்டும். எண் 15-3,4 சாசனமும் தொடர்கிறது.
The Chozha king Rajendra Chola II’s 8th year of reign inscription on
the central shrines of the temple is related to the previous (No.15-1) inscription?.
கல்வெட்டு
எண் : 15 – 5 &
6.
இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு க. எண். 15-3,4-இன் தொடர்ச்சியாக இதனைக் கருத வேண்டும்.
The Chozha king Rajendra Chola II’s 8th year of reign inscription on
the central shrines of the temple is related to the previous (No.15-1) inscription?.
கல்வெட்டு
எண் : 15 - 7.
இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு க. எண். 15-5,6-இன் தொடர்ச்சியாக இதனைக் கருத வேண்டும்.
The Chozha king Rajendra Chola II’s 8th year of reign inscription on
the central shrines of the temple is related to the previous (No.15-1) inscription?.
கல்வெட்டு
எண் : 16.
முதலாம் குலோத்துங்கனின் 46 ஆம் ஆட்சியாண்டு பொயு1115,
கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு திருவேற்காடான
மும்முடி சோழ நல்லூர்க்குச் சமைந்த தேவந் வேளான் உள்ளிட்ட ஊராரும் சேர்ந்து கோயில்
தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். தச்சந்திருவன், பொந்தன் போன்றோர் ஒப்பமிட்டுள்ளார்கள்.
The Chozha king Chōla Kulottunga I’s 46th
year of reign 1115 CE inscription, on the south wall of the central shrine, is
slightly damaged. Records a sale of land by the temple authority. Their names
are mentioned. Tiruvērkādu was called Mummudi Sõlanallür.
கல்வெட்டு
எண் : 17.
இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறக் குமுத்தில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டில்
மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி மட்டுமே உள்ளது. கல்வெட்டு எண் 18 இதன் தொடர்ச்சியாக இருக்கலாம்.
The Chozha king Rajendra Chola II’s 8th year of reign inscription on
the south side kumudam of the temple is incomplete
and damaged. Mentions one portion of prasasti Rājēndra II. It is associated with inscription No. 18.
கல்வெட்டு
எண் : 18.
இரண்டாம்
இராசேந்திரனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
பொயு 1060, கருவறைத் தென்புறக் குமுத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு எண் 17 - இன் தொடர்ச்சியாக இருக்கலாம். எனவே தொடக்கப் பகுதி இல்லை. இரண்டாம்
இராசேந்திரன் ஆட்சியின்போது வெட்டப்பட்டிருக்கலாம். திருவேற்காடு உடைய மகாதேவர்
கோயிலில் திருவிளக்கு வைப்பதற்காக 15 கழஞ்சுப் பொன் முதலீடாகத்
திருப்பாச்சூர் அடிகள் பட்டர்களிடம் வழங்குகிறார். இதற்கு வட்டி இருகழஞ்சே கால்
ஆகும். இதைக் கொண்டு தினமும் விளக்கு எரிக்க பட்டர்கள் சம்மதித்து உடன்படிக்கை
செய்துள்ளார்கள். ஆவணத்தைத் திருவிசலூர் கிரமவித்தனேன் சீரனையன் எழுதியுள்ளான்.
The Chozha king Rajendra Chola II’s 8th year of reign, 1060 CE, inscription
on the south side of the kumudam of the temple is related to
No. 17 inscription. So, the beginning portion is not available. Records that
the trustees of the temple received 15 money from Tiruppāchūradigal. The interest was 2% kalañju. The above interest was used for
perpetual lamp lighting. This document was written by Kirammavittan of
Tiruvisalür.
கல்வெட்டு
எண் : 19-1 & 2.
சோழ அரசனின்
பொயு 12 ஆம் நூற்றாண்டு, கருவறை ஜகதியில் உள்ள இக்கல்வெட்டின் தொடக்கப் பகுதி கிடைக்கவில்லை. இதனால் அரசன் பெயர்
ஆட்சியாண்டு போன்ற விவரங்கள் அறிய முடியவில்லை. கல்வெட்டு எழுத்தமைதி மற்றும்
வாசகத்தையொட்டி பிற்காலச் சோழர் அல்லது பாண்டியர் சாசனமாக அனுமானிக்கலாம். கோயில்
பணியாளர் தினக்கூலி மற்றும் ஆண்டொன்றுக்கு ஆகும் பற்பல செலவுகள் இக்கல்வெட்டில்
காண்கிறோம். ஊதியமாக நெல் மட்டுமே உள்ளது. மடைப்பள்ளி வேண்டுவார்க்கு கலன்கள்,
பாத்திரங்கள் ஏழு கலனே இருதூணி குறுணி இருநாழி உட்பட மொத்தம் 1866
கலனே இருநாழி நெல்லாகும். திருவேகம்பப் பொற்கோயில் நவலோகநாதன்
மேற்படி கொடையை வழங்கியவன் ஆவான்.
The Chozha King’s 12th-century inscription on the jagathi in
the central shrine; the beginning of the lines of the inscription is not available.
Anyhow, this is an important inscription. It is referred servants’ number of the
temple, their daily wages or kooli, and the yearly total amount. Some labourers got low
salaries. A few technical staff got higher income. We can see some music
instruments names.
கல்வெட்டு
எண் : 20.
சோழ அரசர் மூன்றாம்
இராசராசனின் 3 ஆம் ஆட்சியாண்டு பொயு 1219, முன் மண்டபத்
தெற்குச் சுவரில் உல்ள கல்வெட்டு திருவேற்காடுடையார் கோயில்
திருவுண்ணாழிகை சபையார் தனி நபரிடமிருந்து முதலீடாகக் காசுகள் பெற்றுக் கொண்டு
அதன் வட்டி கொண்டு தினமும் விளக்கெரிக்க உடன்பட்டுக் கல்வெட்டு வெட்டி
வைத்துள்ளனர். முதலீடு வைத்தவர் ஈக்காட்டுக் கோட்டத்து கருப்புழான் சாத்தன் மகன்
ஆகாண்டையும் இவன் சிறிய தாய் நங்கையாண்டாளும் ஆவர். இவர் சாத்தன் இரண்டாம் தாரம்
போலும்.
The Chozha King Rajarajan – III’s 3rd year of reign 1219 CE,
inscription on the South wall of the mandapa, records a gift of 5 palańkāsu for a sandi lamp by Ākāndai son of Karuppulan Sättan, in Ayalür in İkkättukköttam and formers mothers younger sister Nangai Andal, or
stepmother.
கல்வெட்டு
எண் : 21.
19 ஆம் நூற்றாண்டு, வேதபுரீஸ்வரர் கோயில் கருவறை தெற்கு விதானத்தில் உள்ள முழுமை பெறாத இக்கல்வெட்டு நிலக்கொடையைக் குறிப்பிடுகிறது. மிகவும்
பிற்பட்டகால சாசனமாகும்.
The 19th-century incomplete and damaged inscription on the south
side of the central shrine ceiling records certain person gifted 3 kāņi lands to the temple. It is in modern characters.
Reference
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி
– XXX, திருவள்ளூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி – II.
--- OM SHIVAYA NAMA---

No comments:
Post a Comment