The
Visit to this Sri Adinatha and Mahavira Tirthankara Temple at Kolapakkam was a
part of Shiva Temples, Maha Vishnu Temple, Jain Temple, and Buddhist temple at
Anakaputhur, Tharapakkam, Kolapakkam and Buddhavedu on 26th December
2021. Initially, it was not planned to Visit this temple, but after Visiting Sri
Agastheeswarar Temple, on the way happened to see this Jain Temple. Another purpose of the visit was to see the Buddha sculptures unearthed in Kolapakkam Village, which were published long back. The details are given below.
Moolavar
: Sri Adinath and Mahavir.
The
Adinath Tirthankara image is a little large and Mahavira Tirthankara is a little small.
Samaratharis and Thindu are shown in both images. Mukkudi is missing for
Mahavira Tirthankara image.
Both the Tirthankaras are wrongly identified as Buddhas by the Archaeological Department. The news appeared in THE HINDU and the pictures taken at the time of finding are enclosed. Many debates have happened and ugly scenes were staged behind the identification and Publishing of these Tirthankaras as Buddhas. The sad part of it is, still some so-called Researchers still make the learners believe that these are Buddhas. HISTORYIt
is believed that there was a Jain temple existed in the same place where both idols
were found abandoned. It is also believed that these two idols belong to the 10th
century. However, the experts are of the opinion that these may belong to the 12th
to 13th Century. Both image’s faces are re-worked. Bhoomi puja was conducted on 16-10-2009 and this new temple
was constructed with the help of the villagers, and donors and consecrated on 25th
April 2010.
கொளப்பாகம் சிவன் கோயில் தரிசனம் முடிந்த பின்பு வரும் வழியே இந்த சமணர் கோயிலைக் காண நேர்ந்தது. ஆதி பகவான் மற்றும் மகாவீரர் இங்கு மூலவர்களாக இருக்கின்றனர். இருவரும் பின்புறம் திண்டுடனும், சாமரதாரிகளுடன் காணப்படுகின்றனர். ஆதிநாதர் பிம்பம் அளவில் சற்று பெரியது. மகாவீரரின் தலைக்கு மேலே முக்குடை காணப்படவில்லை.
இவர்கள் இருவரும் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சுமார் 1000ம் வருடங்களுக்கு முன்பு சமணர் கோயில் இருந்ததாகக் நம்பப்படுகின்றது. அந்த இடத்திலேயே ஊராரின் ஒத்துழைப்புடன் புதிதாக கோயில் அமைக்கப்பட்டு 2010ம் வருடம் ஏப்ரல் மாதம் 25ந்தேதி இப்பிம்பங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டன. இவர்கள் இருவரும் சுமார் ஆயிரம் வருடங்கள் பழமையானவர்களாக கருதப்படுகின்றனர். ஆனால் ஆய்வாளர்களின் கருத்து படி இவர்கள் 12
– அல்லது 13 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
இச்சமண
பிம்பங்கள் புத்தர் என அடையாளப்படுத்தப்பட்டது, திருடப்பட்டு மீண்டு வந்த வரலாறு….
இந்த சமணர் கோயிலுக்கு சென்று வந்த பின்பு இப்பதிவு எழுத
ஆரம்பித்தேன். அதற்காக வரலாற்றை தேடவேண்டி இருந்தது. அப்போது கிடைத்த விபரங்கள்
சிறிது அதிர்ச்சியையும் மனதைக் களங்கவும் வைத்தது. ஆதிநாதர், மகாவீரர் பிம்பங்கள்
மற்றும் இரு தூண்கள் கிடைத்த போது THE HINDU என்ற தினசெய்தித்தாளில் 2006 ஆம் வருடம் பிப்ரவரி 2ந்தேதி செய்தி வந்து
இருந்தது. அச்செய்தியில் இந்திய தொல்லியல் துறையின் மூத்த ( ASI ) அதிகாரியும்,
கல்வெட்டு ஆய்வாளர் ஒருவரும் இவ்விருபிம்பங்களையும் புத்தர் என
அடையாளப்படுத்தியதாக செய்தி வெளியிட்டு இருந்தனர். மேலும் அச்செய்தியில்
கொளப்பாக்கம் சிவன் கோயிலின் கல்வெட்டுக்களைத் தொடர்புபடுத்தி, மூன்று புத்த
விகாரங்கள் இருந்ததாகவும், சுமத்திரா மன்னர் விஜய மகராஜாவின் கொடையையும் மேற்கோள்
காட்டி இருந்தனர் ( பார்திவேந்திர மன்னனின் மற்றொரு பெயர் என்பது பிற்காலச் செய்தி
). இச்செய்தி தவறு என்றும் அவர்கள் புத்தர்கள் அல்ல, சமண தீர்த்தங்கரர்கள் தான்
என்று சுட்டிக்காட்டிய புத்த ஆய்வாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு அவை புத்தர்கள்
தான் என்றும் பதில் அளிக்கப்பட்டது..
மேலும் தஞ்சை பவுத்த சிற்பங்கள் ஆய்வாளர் திரு ஜம்புலிஙம் அய்யா எழுதிய கடிதத்திற்கு 2006 ஆம் வருடம் பிப்ரவரி 18ந்தேதி அதே THE HINDU செய்திதாள் மீண்டும் அந்த சிற்பங்கள் புத்தர் தான் என்று செய்தி வெளியிட்டு இருந்தது. மீண்டும் 2009 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 9ம் தேதி அந்த பிம்பங்கள் தீர்த்தங்கர்கள் என்று THE HINDU செய்தி வெளியிட்டு இருந்தது. அதில் பல
வாசகர்கள் அந்த பிம்பங்கள் தீர்த்தங்கரர்கள் என்று சுட்டிக்காட்டி இருந்ததாக கூறி இருந்தது. இதனிடையே தமிழ் சாமணர்களால் நடத்தப்படும் முக்குடை என்ற் மாத இதழில் அப்பிம்பங்கள் தீர்த்தங்கர்கள் தாம் என்று பிரசுரித்து இருந்தது. 2009 ஆம் வருடம் ஜூன் ஜூலை மாதவாக்கில் 4 ஆட்கள் வந்து
தங்களுக்கு எடுத்துச்செல்ல அனுமதி இருப்பதாகக் கூறி, ஒரு வேனில் அப்பிம்பங்களை
எடுத்துச்சென்று விட்டனர். மர்மமான முறையில் அவை மீண்டும் பழைய இடத்திற்கே திரும்ப
வந்து வேம்புலி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, போரூர் காரம்பாக்கம் ஸ்வேதாம்பரர் கோயில் நிர்வாகி ஸ்ரீ முனீஸ்சுவர்ட் ஸ்வாமி தங்களின் கோயிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக்கேட்டு இருந்தார் ( இதற்கு பின்னால் நடந்த அரசியல் நமக்கு தெரியாது ). பஞ்சாயத்து துணை தலைவர் திரு வி பரந்தாமன் அவர்களால் போரூர் காரம்பக்கம் ஸ்வேதாம்பரர் கோயிலுக்கு கொடுக்க சம்மதித்த நிலையில், ஊராரின்
தலையீட்டாலும் எதிர்ப்பாலும் அக்கோரிக்கை கைவிடப்பட்டது. திரு பரந்தாமன் அப்போதைய பஞ்சாயத்து துணை தலைவர் அவர்களால், பிம்பங்கள் எடுத்த
இடத்திலேயே கோவில் கட்டிக்கொள்ள ஊரார்வசமே
ஒப்படைக்கப்பட்டது. பின்பு 2010ல், அவ்விரு தீர்த்தங்கரர் பிம்பங்களும் புதிதாகக் கட்டப்பட்ட கோயிலில் பிரதிஷ்டை
செய்யப்பட்டன..
புத்தருக்கும் சமண தீர்த்தங்கரருக்கும் வித்யாசம் தெரியாமல்
அரசு தொல்லிய துறை அதிகாரிகளே இருக்கும் போது, அவர்களைப் பின்பற்றுபவர்களும்
அவர்கள் கூறியதே சரி என்று நம்பும் போது.. பொது மக்களாகிய நாம் எது உண்மை எது தவறு
என்று எடுத்துக்கொள்வது.. அந்த ஆதிநாதருக்கும் மகாவீரருக்கும் மட்டுமே வெளிச்சம்..
CONTACT PERSONS KP Udhaya Kumar +91 9884909599, N Ajithadass, A Mohan +9191761
36789, and Bharatraja may be contacted for Poojas and further details.
HOW TO REACHThis
Jain Temple at Kolapakkam is about 7 km from Anakaputhur Sri Agastheeswarar
Temple, 4.6 km from Porur, 6 km from Kovur, 7.7 km from Kundrathur, 11 km from
Guindy, and 20 km from Chennai Central.
LOCATION OF THE
TEMPLE: CLICK HERE
---
OM SHIVAYA NAMA ---
CONTACT PERSONS
Thank you for your brief history on these images, their status and the clarification. In the Hindu of 12.2.2006 the newsitem first appeared under the title "Buddha statues unearthed near Chennai". At that time explaining the iconographical aspects of Buddha I wrote to The Hindu that these images were not Buddhas. Again The Hindu of 18.2.2006 had a newsitem with the caption having double quote "They are Buddhas". Again I wrote to The Hindu in which I confirmed that I stood by my earlier letter. After some years I saw the newsitem entitled "Tirthankara sculptures return to Kolapakkam" on 9.8.2009. By this time these "Buddhas" became "Tirthankaras". If I am right I saw an article in Mukkudai confirming that they were Tirthankaras.
ReplyDeleteநன்றி அய்யா.. தேதிகளைச் சரியாக மாற்றி விட்டேன்
DeleteMahavira image in paper cutting looks rectangular clearly while your color pic shows its arch background...?
ReplyDeleteThe Mahaveera's image is reworked on the top ( broken portion ) made as an arch, take both pictures keep side by side and compare please..
Delete