The Visit to this Sri Agastheeswarar Temple was a
part of the Shiva Temple, Maha Vishnu Temple, Jain Temple, and Buddhist temples at
Anakaputhur, Tharapakkam, Kolapakkam and Buddhavedu on 26th December
2021. This visit also combines the search for the Buddha idols unearthed near the
Agastheeswarar Temple.
This is one of the Thevara Vaippu Sthalam sung by
Thirunavukkarasu Swamigal. He has sung hymns in praise of Lord Shiva of
Agatheechuram along with Nandhikechuram, Mahalaechuram, Nagechuram,
Kodeechuram, Kondeechuram, Kukkudechuram,
Akkeechuram, Adakechuram, Ayaneechuram Aththeechuram, Siddheechuram and
Ramechuram.
நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச் சுரநாகேச் சுரநாக ளேச்சுராநன் கான கோடீச் சுரங் கொண்டீச் சுரந்திண் டீச் சுரங் குக்குடேச் சுரமகத்தீச் சுரங்கூ றுங்கால்ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர மத்தீக்சுரஞ் சித்தீக்கர மந்தண் கானல்ஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே…. திருநாவுக்கரசு சுவாமிகள் (
6-71-8 )Moolavar :
Sri AgastheeswararConsort :
Sri Anandavalli
Some of the salient features of this temple are….The temple is facing east with a 3 tier Rajagopuram.
Balipeedam, Kodimaram, and Rishabam are after the Rajagopuram. Moolavar is in a
raised sanctum sanctorum. Stucco Dwarapalakas are at the entrance of the sanctum
sanctorum. Moolavar is on a round avudayar. In koshtam, Vinayagar,
Dakshinamurthy, Maha Vishnu, Brahma and Durgai.
Prasanna Vinayagar, Sri Valli Devasena Subramaniar,
Murugan, Ayyappan, Chandikeswarar, Bairavar, Saniswaran and Navagrahas. Ambal
is in a separate sannidhi facing south. Ambal is holding Pasa angusam in the
upper hands and the lower hands are in Abhaya and Varada hastam.
ARCHITECTUREThe temple consists of sanctum sanctorum,
antarala, ardha mandapam and a mukha mandapam. The sanctum sanctorum is on a
padabandha adhistanam with three patta kumuda. The Original temple was
reconstructed with bricks and cement. A Two tier Vimanam is on the sanctum
sanctorum.
HISTORY AND
INSCRIPTIONSThe Original temple may belong to the Pallava period
and was reconstructed during various periods. The present temple was reconstructed
with bricks and Cement, during recent years. On 01st April 2010 Maha Kumbhabhishekam was conducted after maintenance.
LEGENDSIt is believed that this is one of the 108 Shiva
Lingas installed and worshiped in Thondai Mandalam by Agathiyar on the way to
Pothigai Hills to balance the earth during Shiva and Parvati’s celestial
wedding. It is also believed that Pandavas came to this temple and worshiped
Lord Shiva during their exile.
Devotees pray to Lord Shiva and Ambal to get cured
of chronic deceases for 45 days (one mandala), to remove marriage
obstacles and Child boon.
It is believed that the elephants carried water
and flowers required for Pooja. Hence this place was called Anaika Puthur,
which has been corrupted to the present name of Anakaputhur.
POOJAS AND
CELEBRATIONSApart from regular poojas, pradosham, New moon
days, Maha Shivaratri, Vinayagar Chaturthi etc,.
TEMPLE TIMINGSThe temple will be kept open between 06.00 hrs
to 10.00 hrs and 17.00 hrs to 20.00 hrs.
CONTACT
DETAILS
HOW TO REACH3.3 km from Pallavaram, 6.8 km from Gerugambakkam, 10 km from Porur, 11 km from Tambaram, 18 km from Koyambedu, and 23 km from Chennai Central.Nearest Railway station is Pallavaram / Tambaram
LOCATION OF
THE TEMPLE: CLICK HERE
Temple Tank...? ( in bad state )
ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சிவன் கோயில் சென்னையின்
ஒருபகுதியான அனகாபுத்தூரில் ஜவகர்லால் / பம்மல் சாலையில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் இறைவன் அகதீஸ்வரராகவும் அம்பாள் ஆனந்தவள்ளியாகவும் வணங்கப்படுகின்றனர்.
இக்கோயில் சிவன் அடியார்களால் தேவார வைப்புஸ்தலமாகவும் போற்றப்படுகின்றது.
திருநாவுக்கரசு
சுவாமிகள் சுரம் என்று முடியும் சிவதளங்களின் வரிசையில் அகதீச்சுரத்து இறைவனையும் புகழ்ந்து
பாடுகின்றார். அப்பாடலில் ஒன்று…
நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
சுரநாகேச் சுரநாக ளேச்சுராநன் கான
கோடீச் சுரங் கொண்டீச் சுரந்திண் டீச் சுரங்
குக்குடேச் சுரமகத்தீச் சுரங்கூ றுங்கால்
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர
மத்தீக்சுரஞ் சித்தீக்கர மந்தண் கானல்
ஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி
யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே
…. திருநாவுக்கரசு சுவாமிகள் ( 6-71-8 )
கோயில்
கிழக்கு நோக்கி மூன்று நிலை ராஜகோபுரத்துடனும் அதன் எதிரே திருக்குளத்துடனும் அமைந்துள்ளது.
ராஜகோபுரத்திற்கும் திருக்குளத்திற்கும் இடையே கிழக்கு மேற்காக வந்த காமாராஜர் சாலை எனப்படும் பம்மல் சாலை கோயிலை தெற்கு வடக்காக கோயிலுக்கும்
திருக்குளத்திற்கும் இடையே கடக்கின்றது. ராஜகோபுரத்தைத் தாண்டிய உடன் பலிபீடம், கொடிமரம்
மற்றும் இடபம் அமைந்துள்ளது. மூலவர் ஸ்ரீ அகதீஸ்வரர் வட்டவடிவுடன் உள்ள
ஆவுடையாரின் மீது காணப்படுகின்றார். கருவறை தேவ கோட்டங்களில் விநாயகர், தென்முகக்கடவுளான
தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் விஷ்ணுதுர்கை ஆகியோர் காணப்படுகின்றனர்.
பிரகாரத்தில்
பரிவார தெய்வங்களாக பிரசன்ன விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர், முருகன் ஐயப்பன், சண்டிகேசுவரர், பைரவர், சனீஸ்வரன்
மற்றும் நவகிரகங்களின் சன்னதிகளில் சேவை சாதிக்கின்றனர். அம்பாள் தனிசன்னதியில் தெற்கு
நோக்கி, அபய வரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கின்றார்.
கோயிலின் கட்டுமானம்.. கோயில் கருவறை,
அந்தராளம், அர்த்தமண்டபம் மற்றும் முக மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டு உள்ளது.
இருதள விமானம் கருவறைமீது அமைந்துள்ளது. கோயில் சமீப காலங்களில் செங்கல் மற்றும்
சிமெண்டால் புரணமைக்கப்பட்டு பழமையை இழந்து தற்காலத்தில் கட்டப்பட்டதைப் போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. கோயில் மிகுந்த சிரத்தையுடனும் அழகாகவும் பராமரிக்கப்படுகின்றது.
வரலாறு... தேவார பதிகத்தில் இக்கோயில் வைப்புத்தலமாக
கருதப்படுவதால், பல்லவர் காலத்தில் அதாவது 8 – 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு
இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து ஆகும். பழைய கட்டுமான எச்சங்கள்,
கல்வெட்டுக்கள் எதுவும் காணமுடியாததால் இக்கோயிலின் காலத்தை ஆதாரத்துடன் கணிக்கக்கூடவில்லை.
புரணமைப்பிற்குப் பிறகு 2010 ஆம் ஆண்டு மஹாகும்பாபிசேகம் நடத்தப்பட்டு உள்ளது. கோயிலின் திருக்குளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கோயில் நிவாகமும், அரசும் நடவடிக்கை எடுத்து குளத்தைச் சீர் செய்தால், கோயிலுக்கும், அதைச் சுற்றி உள்ள வீடுகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்கும்.
புராணத்தின் அடிப்படையில் இக்கோயிலில் உள்ள
மூலவர் சிவலிங்கம் அகத்திய முனிவரால் நிர்மாணிக்கப்பட்டு வணங்கப்பட்டது.
சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் திருமணம் நடந்த போது, தேவர்கள், ரிஷிகள்
மற்றும் முனிவர்களும் கயிலை மலைக்கு சென்றதால், வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது.
இறைவனின் ஆனைப்படி அகத்திய மாமுனி சமநிலைப்படுத்த தெற்கு நோக்கி
அனுப்பப்படுகின்றார். அப்படி செல்லும் வழியில் பல இடங்களில் சிவலிங்கங்களை நிர்மானம்
செய்து வழிபட்டதாக புராணம் கூறுகின்றது. அதன் அடிப்படையில் அகத்தியரால்
நிர்மானிக்கப்பட்ட சிவலிங்கமாக இக்கோயில் மூலவர் கருதப்படுகின்றார்.
இக்கோயில் இறைவன் ஒரு வரபிரசாதி. இறைவனை வணங்குவதால், தீராத வியாதிகள் தீர்வதாகவும்,
திருமணத்தடை அகல்வதாகவும், மற்றும் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
தினசரி பூஜைகள் தவிர, மாத பிரதோசம் மற்றும் மகாசிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து பேருந்து மூலமாகவும், பல்லாவரம் மின்தொடர் வண்டி நிலையத்தில் இருந்து சேர் ஆட்டோக்கள்
மூலமாகவும் இக்கோயிலை அடையலாம். ---OM SHIVAYA NAMA ---
சுரநாகேச் சுரநாக ளேச்சுராநன் கான
Consort :

மூலமாகவும் இக்கோயிலை அடையலாம்.
So far I had not been to this temple. Waiting to go to the temple with His blessings.
ReplyDeleteநன்றிங்க ஐயா
Deleteஇந்த குளத்தை மூடி சாலை அமைக்கப் போகிறார்கள்.
ReplyDeleteஅஹா.. தடுக்க வழியே இல்லையா.. சிவன் தான் முன்னெடுக்க வேண்டும்
Delete