Wednesday, 15 February 2023

Sri Kamakshi Samedha Sri Theertheeswarar Temple / Sri Rajarajeswaramudaiya Mahadevar Temple / சிவபுரம், Kanchipuram District, Tamil Nadu.

 

Moolavar    : Sri Theertheeswarar
Consort      : Sri Kamakshi
 
Some of the salient features of this temple are.....
The temple is facing east. Balipeedam and Rishabam are outside the temple.  In Koshtam Vinayagar, Dakshinamurthy, Lingothbavar ( Vishnu in Varaha avatar with four hands and Brahma flying on his vahana bird annam), Brahma and Durgai (Not standing on the Mahishasuran’s head). Vinayagar, Chandikeswarar and Rishabam with balipeedam are in the praharam.





ARCHITECTURE
The sanctum vimana was constructed completely with the stone of the Gajabirushta style.  The Dwarapalakas are at the entrance of the sanctum. They are not chiseled to the proportion ( considering the head body is not to that proportion and short) but look cute. On the right side Dwarapalaka’s  (near ) leg the relief of a snake swallowing an elephant or an animal. (similar to Rajarajecharam of Thanjavur Mukha mandapam dwarapalaka).

Lingothbavar - Brahma - Durgai 
Durga
 Lingothbavar– Vishnu – in Varaha avatar with 4 hands and Brahma flying on his vahana anna Paravai
A Complete stone Vimanam

HISTORY AND INSCRIPTIONS
Ref தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் தொகுதி-IV, Kanchipuram Mavattak kalvettukkaL Thokuthi- IV.
Rajaraja-I's 24th  reign year inscription records the sale of land and given to this temple as irayili, Sri Rajaraja Eswaramudaya Mahadevar in Jayangonda Chzhamandalathu ManaviRkottathu Urogadathu Villagers in lieu of the old irayili land. The periphery limits of both lands are given. This document was written by Vaikanasan Kesava Sankaranarayanan.
ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணவிற் கோட்டத்து புரிசைநாட்டு உரோடகத்து ஊரார்கள், இவ்வூர் ராஜராஜ ஈஸ்வரமுடைய மஹாதேவற்க்கு இறையிலி தேவதானமாக முன்னர் கொடையளித்த நிலம் நீக்கி மற்றோர் நிலத்தை இறையிலி தேவதானமாக விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. முன்னர் கொடையளித்த நிலத்தின் எல்லைகளும் அப்போது விற்ற நிலத்திற்கு எல்லைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்த சாசனத்தை ஊரார் சொல்ல எழுதியவர் வைகானஸன் கேசவ சங்கர நாராயணன் ஆவார்.
 
Rajendra Chozha-I's 9th reign year inscription records the donation of ornaments made out of Gold, studded with precious stones like diamond emeralds, etc, 80 Porpoo / golden flowers, bangles, Hara, etc to Adalvallar Abimana meri Vidangar ( Utsavar ). The weight of each ornament is also mentioned.
முதலாம் இராஜேந்திர சோழன் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது இக்கல்வெட்டு. ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடைய மஹாதேவர் கோயிலுக்கு அரசன் இராஜேந்திர சோழனே ஆபரணங்கள் செய்தளித்த தகவல் கூறப்பட்டுள்ளது. அணிகலன்களின் பெயர்களும் அவற்றின் எடையும் கூறப்பட்டதுடன், அணிகலன்களில் பதிக்கப்பட்ட மாணிக்கம், வயிரம், பச்சை, இளஞ்சிவப்புக்கற்கள், சிறிய மாணிக்கம் ஆகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆபரணங்களுடன் வெண்சாமரை, 80 பொற்பூக்கள் போன்றனவும், இக்கோயில் ஆடவல்லார் அபிமாந மேருவிடங்க தேவருக்கு திருவபிஷேகம் செய்த பொன்னும் பொன்னாலான திருமாலை, தோடு, வாகு வலையம், திருக்கைய்க்காறை நான்கு. திருக்காற்காறை இரண்டு, பாதசாயல் இரண்டு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட்ட பொன்னின் அளவுகளும் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. அதேபோல அத்தேவர் தேவியார்க்கும் திருமாலை, வாகு வலையம், பட்டிகை ஆகியனவும் அணிகலன்கள் கொடுக்கப்பட்ட விவரம் கூறப்பட்டுள்ளது. இஷபவாகன தேவருக்கும், அவர் தேவியார்க்கும் ஆபரணங்கள் மன்னன் பெயரிலேயே செய்தளிக்கப்பட்டிருக்கின்றன.

(1) ஸ்ரீராஜேந்திர சோழன் இட்ட பொற்பூ
(2) ஸ்ரீராஜேந்திர சோழன் பொன்னின் தளிகை
(3) ஸ்ரீராஜேந்திர சோழன் மண்டை
(4) ஸ்ரீராஜேந்திர சோழன் பட்டம்
(5) ஸ்ரீராஜேந்திர சோழன் வெண்சாமரை

Rajendra Chozha –I’s 15th reign year inscription.... 
முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. இவ்வூர் ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் கோயில் பண்டாரத்திலிருந்து சிங்காளந்தகச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையினர் நூறு கழஞ்சு பொன்னைப் பெற்றுக் கொண்டு அதற்கு வட்டியாக ஆண்டுக்கு 166 கலம் இரு தூணி நெல் கோயிலில் அளந்து கொடுப்பதாக சம்மதித்தச் செய்தி கூறப்பட்டுள்ளது. அதே போன்று கோட்டூர் எனும் சோழவிச்சாதிரச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையினர் 40 கழஞ்சுப் பொன் பெற்றுக் கொண்டு 66 கலம், 2 தூணி நெல் கோயில் பண்டாரத்தில் வந்து அளந்திட சம்மதித்துள்ளனர்.

The Pandya King Sadayavarman Sundara Pandyan-I’s 15th reign year inscription records … 
ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணவிற் கோட்டத்து புரிசை நாட்டு உரோடகம் என்ற இவ்வூரிலுள்ள ஸ்ரீ ராஜராஜ ஈஸ்வரமுடைய மகா தேவர் கோயிலில் சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு கூவம் என்ற தடாக சமுத்திர நல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் காராணை விழுப்பரையன் என்பவரின் மகள் ஆறைச்சியார் என்பவர் கொடையாக அளித்த ஒன்பது பணத்தையும் பெற்றுக்கொண்டு இக்கோயில் சிவபிராமணர்கள் விளக்கெரிக்க சம்மதித்தச் செய்திக் கூறப்பட்டுள்ளது.

The Pandya King Sadayavarman Sundara Pandyan-I’s 15th reign year inscription records … The Pandya king Sadayavarman's 1267 CE inscription records the endowment of burning Sandhi lamp by Mathur Village Chief Vadugan Vizhuparaiyan and Irungur Village Chief Vasudevan Karanai Vizhuparaiyan's daughters. In this inscription, the Sivapuram was mentioned as Oragadam. 
ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்து புரிசை நாட்டு உரோடகம் என்ற இவ்வூரிலுள்ள இராஜராஜீஸ்வரமுடைய மகாதேவர் கோயிலுக்கு சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு மாத்தூர் கிழவன் வடுகன் இரா விழுப்பரையனின் பெண் பிள்ளை (மகள்) உமையாண்டை என்பவள் கொடையளித்த ஒன்பது காசுகளையும் இக்கோயில் சிவபிராமணர்கள் சிலர் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க சம்மதித்தச் செய்தி கூறப்பட்டுள்ளது.

Rajendra Chozhan-I's period inscriptions record a channel dug to bring water from Koovam, la ake, burning of lamps, a deposit of gold, and paddy given for the interest earned. etc,. 
முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது இக்கல்வெட்டு. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்துக் கன்றூர் நாட்டு கூவமான மதுராந்தக நல்லூர் உடன் சேர்ந்த சிற்றரையர் பூதூரான ஸ்ரீ மதுராந்தக சேரியிலுள்ள ஏரிக்கு பாலாற்றிலிருந்து நீர் பாய்கிற வாய்க்காலை இவ்வூர் ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடைய மஹாதேவற்கு இறையிலி தேவதானமாகக் கொடை யளித்து ஊரார்கள் கல்லில் வெட்டுவித்தச் செய்தி கூறப்பட்டுள்ளது.

Rajathi Rajan-I’s 27th reign year inscription records… 
முதலாம் இராஜாதிராஜன் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்து புரிசைநாட்டு சிவபுரத்து ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடையார்க் கோயிலில் ஆதித்த வாரம் (ஞாயிறு)தோறும் இறைவனை ஆதித்த வாரப் பெரும்பலி எழுந்தருளச் செய்து சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டிருந்த பழந்தேவதானம் துப்புரவு பத்து என்ற நிலத்திலிருந்து காணிக்கடனாக ராஜகேசரி என்ற அளவால் நெல்லு முப்பத்துநாற்கலம் பெறப்பட்டு வந்தது. இதற்கு காலளவு பறி கூறியாக ஒவ்வொரு கலநெல்லுக்கும் முன்னாழி உரி நெல் வாசியாக ஏற்றி முப்பத்தைந்து கலநே பதக்கு எழுநாழி நெல் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதிலிருந்து,

(1) கனியமுதுக்கும் திருவமுதுக்கும் ஒராண்டுக்கு முக்கலநே முக்குறுணியும்
(2) திருவாராதனை செய்வார், திருஉண்ணாழிகை உடையார், மாணிகள் அறுவர், பதியார் 24 பேர், பஞ்சாசாரியர், வீணை வாசிப்பான், உடுக்கை வாசிப்பான், திருப்பதியம் பாடுவான், திருவாய்க் கேழ்வி உடையான், பாடவியன் உள்ளிட்ட உவச்சர் பதின்மர், கவரி பிணாக்கள் 12பேர், திருப்பள்ளித் தொங்கலிடுவார் நால்வர், கணக்கன், பண்டாரி, திருமெய்காப்பார் நால்வர், திருப்பள்ளித் தாமம் பறித்துக் தொடுப்பான்- ஆகியோருக்கு ஒருபங்குக்கு பதக்கு நெல் விதம் 55 பங்குக்கு ஓராண்டுக்கு 29 கலனே தூணிக்குறுணி நாநாழியும்
(3) விளக்குப் பிடிப்பார் நால்வர், கொடிப்பிடிப்பார் நால்வர், ஆகியோருக்கு நெல்லு இருகலன்,

ஆகமொத்தம் முப்பத்தைந்து கலன் பதக்கு ஏழுநாழி நெல் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.

Rajendra Chozha-I's 8th reign year inscription records the endowment of burning a perpetual lamp for which 180 Goats / Sheep are gifted by the King.
முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்து புரிசை நாட்டு உரோடகத்து ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடைய மகாதேவர் என்ற இறைவனுக்கு திருநந்தா விளக்கு இரண்டு எரிப்பதற்கு மன்னர் முதலாம் இராஜேந்திர சோழ தேவரே 180 ஆடுகள் கொடையளித்தச் செய்தி கூறப்பட்டுள்ளது.

Rajendra Chozha –I’s 21st reign year inscription records…. 
முதலாம் இராஜேந்திரசோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது இக்கல்வெட்டு. சோழ மண்டலத்து உய்யக் கொண்டார் வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு கடவூர் அரிந்தம நல்லூருடையான் நீலன் வெண் காடன் என்பவன் இக்கோயிலுக்குக் கொடுத்த பொன் துளைநிறை காசுகளை கழஞ்சாக மாற்றும் போது வந்த பொன் இருபத்தஞ்சு கழஞ்சு. இப்பொன்னுக்கு வைகாசி மாதம் முதல் ஓராண்டுக்கு ஒரு கழஞ்சுக்கு வட்டியாக ஒரு மாதத்திற்கு மஞ்சாடி பொன் நிறையுள்ள காசுகள் வீதம் 25 கழஞ்சுக்கு வட்டியாக வந்த பொன் 15 கழஞ்சு. இப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட சிலர் இப்பொன் கொண்டு ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் கோயில் இறைவனுக்கு நிலம் விலைக்கு வாங்கினர். இந்நிலத்திற்கு கட்ட வேண்டிய வரிகளையும், முதலாகச் செலுத்தப்பட்ட 25 கழஞ்சு பொன்னுக்கு வரியையும் தாங்களே செலுத்துவதாகக் கூறி, இந்நிலத்திற்கு நீர்பாய்ச்சும் உரிமைகள் பலவற்றையும் வரையறுத்துக் கூறி கையெழுத்திட்டுள்ளனர்.

இந்நிலம் ஸ்வாமி போகமாக அளிக்கப்பட்டதால் அந்நிலத்தி லிருந்து வரும் நெல்லு ஆண்டுக்கு நூற்றெண்பத்தேழு கலனே இரு தூணிப் பதக்கு. இந்நெல் கொண்டு கோயிலுக்கு செய்யும் நிவந்தம் கூறப்பட்டுள்ளது.

(1) இறைவனுக்கு உச்சியம்போதில் (மதியம்] அமுது படைக்கின்ற போது பக்கத்தில் திருச்சுற்று மாளிகையிலே உத்தமாக்கிரமமாக வேதம் ஓதும் பிராமணர் ஐவருக்கு ஒருவருக்கு அரிசி இருநாழி வீதம் ஐவருக்கும் நெல்லும், நெய்யும் புழுக்குக்கறி, மிளகுப்பொடி கலந்த கறி, மரக்கறி மூன்று, மிளகு, உப்பு, தயிர், பாக்கு வெற்றிலை, விறகு, ஐந்து இலையிட்டு உண்ணும் பிராமணன் ஒருவருக்கும் நெல்லு, புடவை முதல் ஆகியனவற்றிற்கு ஒருவர்க்கு ஆகும் செலவு வீதம் ஐவர்க்கு ஆகும் செலவுகள் மேற்கூறிய ஒவ்வொன்றுக்கும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அறுதியிட்டு கூறிய பின் கோயில் ஸ்ரீ காரியம் பார்ப்பார், உண்ணாழிகை உடையார் சிவ பண்டாரிகள், தேவகன்மிகள் ஆகியோர் கல்லில் வெட்டுவித்தனர்.

Rajendra Chozha –I’s 12th reign year inscription records…. 
முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்து புரிசை நாட்டு சிவபுரத்திலுள்ள ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடைய மஹாதேவர் கோயிலில் திருநந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு அமணிவல்லவன் ராஜராஜனான ராஜேந்திரசோழ இருங்கோளர் தேவியார் தேவன் பொன்னாலியார் என்பவள் கொடையளித்த தொண்ணூறு ஆடுகளைப் பெற்றுக் கொண்ட திருவுண்ணாழிகை உடையார்களும் சிவ பண்டாரிகளும் நித்தம் விளக்கெரிப்பதற்கு தேவையான உழக்கு நெய்யை கோயிலுக்கே கொண்டு வந்து கொடுப்பதாக ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளச் செய்தி கூறப்பட்டுள்ளது.

Rajendra Chozha –I’s, 8th reign year ( 1020 CE )inscription  records…. 
ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, மணையிற் கோட்டத்து புரிசை நாட்டு உரோடகத்திலுள்ள ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடைய மகா தேவர் கோயிலுக்கு, இக்கோயில் தேவதான ஊராகிய சிவபுரத்தினைச் சேர்ந்த நாராணன் செல்வன் மணவாட்டி (மனைவி) வாசவி என்பவள் ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்கு கொடையளித்த தொண்ணூறு ஆடுகளைப் பெற்றுக் கொண்ட திருவுண்ணாழிகையுடையார்களும் சிவபண்டாரிகளும் விளக்கெரிக்க சம்மதித்துத் தினந்தோறும் உழக்கு நெய்யை கோயிலுக்கே கொண்டு வந்து கொடுத்து விளக்கெரிப்பதாக ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளச் செய்தி கூறப்பட்டுள்ளது.

Rajendra Chozha –I’s, 13th reign year ( 1025 CE ) inscription  records…. 
ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்து புரிசை நாட்டு உரோடகத்திலுள்ள ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடையார் கோயிலுக்கு இக்கோயில் தேவதான நகரமாகிய சிவபுரத்தைச் சேர்ந்த சங்கரபாடியான் சாத்தன் மாகண்டனான சிவலோக சுந்தர மாயிலெட்டி என்பவர் இக்கோயிலில் இரண்டு திருநந்தா விளக்குகள் எரிப்பதற்கு கொடையளித்த 180 ஆடுகளையும் அக்கோயிலைச் சேர்ந்த திருஉண்ணாழிகை உடையார் களும், சிவபண்டாரிகளும் தேவகன்மிகளும் பெற்றுக்கொண்டு தினம் உரிய நெய் வீதம் கோயிலுக்குத் தாங்களே கொண்டு வந்து விளக்கெரிக்க சம்மதித்து கையெழுத்திட்டுள்ள செய்தி கூறப்பட்டுள்ளது.

Rajendra Chozha –I’s, 13th reign year ( 1025 CE ) incomplete inscription records…... 
கல்வெட்டு முழுமையாக இல்லை. உரோடகத்து ராஜராஜீஸ்வரம் உடையார் கோயிலில் உள்ள திரிபுரவிஜயரான சிவபுரச் செல்வர் மற்றும் இறைவி நம்பிராட்டியார் திருமேனிகளுக்கு தினமும் ஒவ்வொரு சந்தியின் போதும் திருவமிர்து, கறியமுது, நெய், தயிர், அடைக்காய் போன்றவை வைத்து வழிபாடு செய்வதற்காக நிலம் தானம் வழங்கப்பட்டுள்ளது.

Rajendra Chozha –I’s, 21st reign year ( 1033 CE ) inscription  records…. 
சோமன் குமரனான மதுராந்தக மாராயர் என்பவர், பாசாலி நாட்டு பாசாலி வீரன் உத்தம சோழன் கங்கை கொண்டார் என்பவரிடம் முப்பது காசுகளைக் கொடுத்து, காசு ஒன்றுக்கு ஒராண்டுக்கு வட்டி ராஜகேசரி என்னும் மரக்காலால் பதக்கு வீதம், முப்பது காசுகளுக்கு வட்டியாக வந்த ஐங்கல நெல்லை, சிவபுரத்து கோயிலில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் திருவேட்டைத் திருவிழாவில் இறைவன் எழுந்தருளுகின்ற போது பெருந்திருவமிர்து படைப்பதற்காகக் கொடையளித்துள்ளார். 

அக்கொடை மூலம் அரிசி ஒரு கலம், நெய் இருநாழி, எண்ணை இரு நாழி, தயிர் பதக்கு, கறியமுது நான்கு, மிளகு உழக்கு, கடுகு உழக்கு, சர்க்கரை நாழி, விறகிடுவானுக்குத் தரப்படும் செலவு ஆகியவற்றிற்கு மேற்குறிப்பிட்ட ஐங்கலம் நேர் ஆனது பற்றியும் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு நெல் தேவைப்பட்டது என்ற விவரமும் தரப்பட்டுள்ளது.

Rajendra Chozha –I’s, 13th reign year ( 1025 CE ) inscription  records…. 

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்து புரிசை நாட்டு உரோடகத்திலுள்ள ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடையார் கோயிலில் இரண்டு திருவிளக்குகள் எரிப்பதற்கு வைத்த 180 ஆடுகளைப் பெற்றுக் கொண்ட திருவுண்ணாழிகை உடையார்கள், தேவகன்மிகள் மற்றும் சிவபண்டாரிகள் ஆகியோர் தினம் உரிய நெய்வீதம் கோயிலுக்கே கொண்டு வந்து விளக்கெரிப்பதாக சம்மதித்த செய்தி கூறப்பட்டுள்ளது.

இவ்விளக்கெரிக்க 180 ஆடுகளைக் கொடுத்தவர் அந்நகரக் கரணத்தான் பிராமணன் வலியடக்கி தோளனான ஆயிரபட்டன் என்பவராவார். இந்நகரத்தின் கணக்கு எழுதும் காணியை (உரிமையை) விலைக்கு வாங்கி எழுதுவதற்கு திருவிளக்கெரிக்க 180 ஆடுகள் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. அவர் பெயரைக் குறிப்பிடும் போது நகரக் கணக்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் கணக்குக் காணியை விலைக்கு வாங்கி பதவியில் அமர்ந்த பின்னர் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது என்பது தெரியவருகிறது.

Rajendra Chozha –I’s, 26th reign year ( 1038 CE ) inscription  records…. 
கன்றூர் நாட்டு சோழவிச்சாதிர சதுர்வேதிமங்கலத்து சபையார், ஜெயங் கொண்ட சோழமண்டலத்து மனையிற் கோட்டத்துப் புரிசை நாட்டு உரோகடத்து ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்க் கோயிலுக்கு நிலம் ஒன்றினை இறையிலி தேவதானமாக பத்து இராசராசன் காசு பெற்றுக்கொண்டு நிலவிலையாவனம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலத்தினைப் பெற்ற இவ்வூர் உண்ணாழிகை சபையார் இறைவனுக்கு அமுது படைக்கும்போது சிவயோகி ஒருவருக்கு உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

மன்னர் பெயர் தெரியாத 16 மற்றும் 26 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டுக்கள்...
3 கல்வெட்டுகளும் தொடக்கம் இல்லாமலும் சிதைந்தும் முழுமை யடையாமலும் உள்ளன. இருப்பினும் சில விவரங்கள் அறியப்படுகின்றன.

Rajendra Chozha –I’s, 11th reign year ( 1023 CE ) inscription  records…. 
ஐயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர் வேளூர் நாட்டு, நீர் வேளூர் ஊர் சபையார், புரிசை நாட்டு உரோடகடத்து ஸ்ரீராஜராஜஸ்வர முடைய கோயில் நிர்வாகிகளிடமிருந்து 400 காசுகள் பெற்றுக் கொண்டனர். இதில் காசு ஒன்றிற்கு வட்டியாக "ராஜகேசரி" என்னும் அளவையால் பதக்கு நெல்லாக 400 காசுக்கு 66 கலம் இரு தூணி நெல்லினை ஒவ்வொரு வருடம் கோயில் திருமுற்றத்தில் அளித்திட சம்மதம் தெரிவித்துள்ளனர். வெண்கூடல் சபையினர் 500 காசுகள் பெற்றுக் கொண்டு 83 கலம் 1 தூணி வருடந்தோறும் வழங்கிடச் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதேபோன்று மதுரை மழலைமங்கலம் சபையினரும் நெல் வழங்கிடச் சம்மதித்துள்ளனர்.

Rajendra Chozha-I's, 13th reign year inscription, this place was called Urogadam and during the 13th century, this place was renamed as Sivapuram. His 21st reign year inscription mentions Shiva as Rajarajeswaramudayar of Purisai Nadu. 

Rajathi Rajan's 27th reign year inscription records the staff working in the temple and also mentions the Rajakesari measurement. 

Ref
தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் தொகுதி-IV, Kanchipuram Mavattak kalvettukkaL Thokuthi- IV.

Rajarajan period inscriptions – highlighted Rajaraja's name  

TEMPLE TIMINGS
The temple will be kept open between 07.30 hrs to 12.00 hrs and 15.00 hrs to 19.00 hrs.

CONTACT DETAILS :
The temple is being maintained by Mr Dhamodaran, a retired VAO his mobile number is 9965886184 and he promised to open the shrine at any time for darshan.

LOCATION OF THE TEMPLE:    CLICK HERE
 
  Rishabam in Mandapam
 Chandikeswarar
 Dwarapalaka on the right side Dwarapalaka - not in proportion 
 Dwarapalaka - not in proportion – relief of snake swallowing an animal

Dwarapalaka
What is this chakra – with lotus relief...?
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment