Monday, 6 March 2017

Sri Parthasarathy Temple / ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி / Thiruvallikeni, Chennai, Tamil Nadu.

 05th March 2017.
Even though I had been to this temple earlier, this visit is a part of the Triplicane (Thiruvallikeni - thiru - alli - keniதிரு அல்லி கேணி) Heritage walk to learn about the historical point of view. The temple is being called in the name of Urchavar instead of Moolavar.


This is the 61st Divya desam of the 108 Divya desams of Lord Vishnu. 3 Alwars, Pey Alwar, Thirumazhisai Alwar, and Thirumangai Alwar (all three lived from the 5th Century to the 8th century) have sung Pasurams மங்கலாசாசனம் on this Lord. Also, they mention that the sea was near the temple, and corals & pearls were washed on the seashore. 

வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணியான் சென்று.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி -(2297 )

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ,
செற்றவன் றன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை,
பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்றன் தேர்முன்நின் றானை, சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. 
..... திருமங்கை ஆழ்வார் ( 1068 )

தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை?
…. திருமழிசை ஆழ்வார் ( 2416 )

Moolavar   : Sri Venkata Krishnan
Urchavar   : Sri Parthasarathy
Thayar      : Sri Lakshmi as Sri Vedavalli Thayar

Some of the important features of this temple are...
The temple faces east with a temple tank in front, and Neerazhi Mandapam has rainwater harvesting ducts (which might have been built during the Vijayanagar period). There is a 4-pillar and Vijayanagara period mandapam (the maha mandapa pillars have the relief of Vishnu’s avatars, Kannan and Krishna Leelas, since the temple is dedicated to Venkata Krishna, maybe 200  to 300 years old), Thirumangai Alwar with sword and shield, Thanvadhiri with Amirtha kalasam, is in front of the 5-tier Rajagopuram. Palipedam, Dwajasthambam, and Garudalwar Sannadhi are immediately after the Rajagopuram. Kannadi room (Mirror room) and Paramapatha vassal.

In the sanctum, the Panchaveera cult consists of Balarama, Venkatakrishnan, son, and grandson. The Moolavar is with a moustache (made with pachai karpooram – chamber), and the original moortham is without a moustache. The first naivedyam is being offered for Yoga Narasimhar, and the naivedyam will not contain chilli/ powder.

Sannadhis for Venkatakrishna facing east, Yoga Narasimha facing west (the bell in this sannidhi does not have a tongue since Narasimhar is in Yoga), Gajendra Varadhar (sitting on the back of Garuda), Varaha, Narasimhar, and Ranganathar. Sri Ranganathar is in a reclining position on Adhiseshan. The sanctum is rectangular in shape. Sannadhis of Varaha and Narasimha facing each other, Alwars in the elevated level of the sanctum mandapam.  Rukmini is on the right side of Varadhar.

Thayar Sri Vedavalli is in a separate sannidhi facing east on the right side of Moolavar. Sannadhi for Yoga Narasimhar, Ramar, Gajendra Varadhar and Andal are in the prakaram. The Temple chariot is the biggest in Chennai city with images of Ashta thik balakas, Vishnu’s avatars, dancing horses, yazhi, Garuda, etc. A 17th-century painting has also been found in recent years.

HISTORY AND INSCRIPTIONS
It is believed that the Moolavar sanctum was built during the Pallava Period. The earliest inscription dates to the Dantivarman Pallava Period, 808 CE. It states that the temple existed before. The inscription in fragment stones available is Dantivarman (779–830 CE), 23rd year of Rajaraja deva, Kulothunga III (1012 to 1044 CE) of Chozha period, Vijayanagara Kings (1586-1616 CE), Vijayanagara King Rangaraya Deva Maharaja-I (1578–1586 CE), Pandya King Maravarman aka Thirubhuvana Chakravarthy Kulasekara Deva, etc. The inscriptions are in  Tamil, Grantham and Telugu. These fragments are kept on display on the north side of the Moolavar sanctum wall.

பல்லவ மன்னர் தந்திவர்மனின் 12 ஆம் ஆட்சியாண்டு பொயு 808 ஆம் ஆண்டு, பார்த்தசாரதி கோயிலின் கருவறையின் நுழைவாயிலின் வடபால் ஒரு கல்லில் உள்ள கல்வெட்டு, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குலங்கிழார்கள் கருமாரச்சேரிப் புலத்தை அடகு வைத்தனர். அதற்கு நாற்பத்தைந்து காடி நெல் வட்டியும் அளிக்கவே, கோயிலில் திருஅமுது படைக்க முடியாமல் போயிற்று. புகழ்த்துணை விசையரயன் என்பான் முப்பது காடி நெல்லும் ஐந்து கழஞ்சு பொன்னுங் கொடுத்து அந்நிலத்தை மீட்டுத் தனதாக்கிக் கொண்டான். அந்நிலத்திலிருந்து நாற்பத்தைந்து காடி நெல்லுக்கு ஒவ்வொரு நாளும் இருநாழி தூய்மையான குத் தலரிசி பெற்று சங்கசர்மன், சட்டிசர்மன், இளைய சட்டிசர்மன் என்பார்கள் இரவு போனகம் கோயிலில் படைத்து வரலானார்கள். அவ்வாறு படைக்கத் தவறினால் அவிப் புறத்தும், அவரவர் புலத்தும் காரைகிழான் புலத்து இருந்தும் சுவாமி போகத்துக்குக் கொடுத்த திருவமுர்து காட்டவேண்டும். ஈழ விளக்கு ஒன்றும், வட்டில் ஒன்றும், லோகப்பானை ஒன்றும் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டதைப் பதிவு செய்கின்றது.

பொயு 1801 ஆம் ஆண்டு, பார்த்தசாரதி கோயிலின் உட்சுற்றில் அமைந்துள்ள சமையலறையின் நுழை வாயிலின் மேல் சுவரில் உள்ள கல்வெட்டு தொண்டை மண்டலம், னாயறு நாடு, புழல் கோட்டம், பொன்னேரி சீர்மையைச் சார்ந்த நெயிதவாயல் திருவமுடையா பிள்ளை மகன் நாராயண ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சன்னிதியில் திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்வித் ததை இக்கல்வெட்டு பதிவு செய்கின்றது.

பொயு 1842 ஆம் ஆண்டு, பார்த்தசாரதி கோயிலின் கிழக்கு நுழை வாயிலின் அருகில் உள்ள கல்லில் உள்ள கலவெட்டு, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் தேசாந்திரிகளுக்கு உணவு வழங்குவதற்கும் இந்து பிள்ளைகளுக்கு இந்நாட்டு சாத்திரங்களையும் ஆங்கில மொழியையும் கற்பிப்பதற்கும் பச்சையப்ப முதலியார் ஒரு லக்ஷம் வராகன் பணம் அளித்ததைப் பதிவு செய்கின்றது.

பொயு 14 ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலத்தைச் சார்ந்த, பார்த்தசாரதி கோயிலின் உட்பிரகாரத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கல்லில் உள்ள கல்வெட்டின் ஒரு பகுதியே கிடைத்துள்ளது. இராமநாதீசுரமு[டைய] நாய னார்க்குக் கொடை அளித்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது.

பொயு 14 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயிலின் உள்சுற்றின் வடக்குப் பக்கத்தில் உள்ள கல்லில் உள்ள கல்வெட்டு பஞ்சநெதிவாணன் நீலகங்கரையன் என்பவனால் அளிக்கப்பட்ட கொடையைப் பதிவு செய்கின்றது. இருவேறு கல்வெட்டுகளின் பகுதிகள் உள்ளன. 5-ஆம் வரி வேறொரு கல்வெட்டினதாகத் தெரிகிறது.

பொயு 13 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயிலின் மண்டபத்தில் உள்ள கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது. ஒரு சிவன் கோயிலைச் சேர்ந்த கல் வெட்டு. குலோத்துங்கசோழ வள நாட்டிலுள்ள திருப்பாசூர் பிரிதிய நாதன் என்பான் நாயனார்க்கு 2 மாடை வழங்க அதை காணி உடைய சிவ பிராமணரில் திருச்சிற்றம்பல பட்டனும் உலகாளுடையானா ... பெற்று சந்திராத் தவரை நாயனாருக்கு விளக்கெரிப்பதாக ஓப்பி சிலாலேகை எழுதிக் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.

பொயு 13 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சார்ந்த பார்த்தசாரதி கோயிலின் வெளிச் சுற்றின் தரையில் உள்ள கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தி யையும், ஒரு சந்தி விளக்குக்கு அளித்த கொடையையும் குறிக்கிறது.

மூன்றாம் குலோத்துங்கனின் 22 ஆம் ஆட்சி ஆண்டு பொயு 1200, ம் ஆண்டு, பார்த்தசாரதி கோயிலின் இரண்டாம் சுற்றில் ஒரு கல்லில் உள்ள கல்வெட்டு ஒரு சிவன் கோயிலைச் சேர்ந்தது. ஒரு பகுதியே உள்ளது. தேவரடியாள் ஒருத்தி சிறுகாலைச் சந்தியின்போது நாயனார் கோவிலில் ஆவின் ஐந்து ஆடி அருளுவதற்காகக் கொடுத்த கொடையைப் பதிவு செய்கின்றது.

(The balance inscriptions are given at the end of this article)

Ref: 
Chennai Managar Kalvettukal, by Dr Nagasamy.

The temple was used during the battles of Golkonda by the French and Dutch. Eminent personalities like  Sri Ramanuja, Swami Vivekananda (He had written a letter to one Mr Azhagiya Singar of this temple, who used to come to Madras and stayed at Ice House close to this temple), and Mahakavi Subramania Bharathi (who was hit by the temple elephant and fell ill and died later) have also worshiped lord of this temple. 



The 32-kal mandapam outside Parthasarathy Temple was built in the year 1851. This was constructed by Mannivakkam Somasundara Mudaliar during the years 1851 to 1855. Mudaliar, by his will dated 7th March 1848, appointed  Pondicherry  Srinivasa Pillai and Vannamamalai Satakopachariar as executors. Among the wishes expressed in the will is the construction of 32 Kal Mandapam outside Parthasarathy Swamy Pagoda. The estimated cost was Rs.20000/-. The mandapam was completed after his death. These photographs of Frederick Fiebig taken in the year 1851 must have been taken during its construction, as evidenced by the granite pillars, stones, sarams, and workers. The flooring of the mandapam was done by one Vijayarangam Pillai in 1905. A sculpture of Mudaliar, along with his wife, is there on one of the pillars of the Mandapam facing the temple. He was also on the board of Trustees of Pachaippas Trust during that time.

TEMPLE TIMINGS:
The temple kept open from 07.00 hrs to 12.30 hrs and from 16.00 hrs to 21.00 hrs

CONTACT DETAILS:
The temple office phone numbers are 044 28442462 and 28447042

HOW TO REACH:
Just a walkable distance from the MRTS railway station.
1.5 km distance from the Beach Road Bus stop.
Town buses are available from various parts of the city

LOCATION OF THE TEMPLE:  CLICK HERE











An Old Photograph

The balance inscriptions are....

பொயு 13 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சார்ந்த, பார்த்தசாரதி கோயிலின் வெளிச் சுற்றின் தரையில் உள்ள கல்வெட்டு, திரிசூலம் சிவன் கோயில் கல்வெட்டாக இருக்கலாம். கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது. சபா ஒன்றினால் திரிச்சுரமுடைய மஹாதேவர்க்கு நீர் வரி. அந்தராயம் ஆகிய வரிகள் தவிர்த்து கொடுக்கப்பட்ட நிலக்கொடையைப் பதிவு செய்கின்றது.

இரண்டாம் ராஜேந்திரனின், 12 ஆம் நூற்றாண்டுபார்த்தசாரதி கோயில், மணவாள மாமுனி சன்னதியின் தெற்குப் பக்கச் சுவரில் உள்ள கல்வெட்டு மருதுழான் உலகாளுடையான் என்பவன் நிவந்தமாக ஒன்றரை மாடை (பொன்)கொடை அளித்ததைப் பதிவு செய்கின்றது. கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது. கல்வெட்டின் முன்னர் ஒரு குத்து விளக்கின் படம் வரையப்பட்டுள்ளது.


பொயு 12 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயில் உள்சுற்றில் வடபுறம் தரையில் உள்ள கல்வெட்டு சிதைந்துள்ளது. திருவான்மியூரைச் சேர்ந்த கல்வெட்டாகக் காணப்படுகிறது. பசு ஒன்றும் நாகு மூன்றும் கொடையாக அளிக்கப்பட்டதைப் பதிவு செய்கின்றது.

பொயு 13 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயில் உள் சுற்றில் வடபுறம் தரையில் ஒரு கல்லில் உள்ள கல்வெட்டுப் பகுதி திருவான்மியூர்க் கோயிலைச் சேர்ந்தது. கழுமலவூரர் என்பாரிடமிருந்து பரிசாகப் பெற்ற புதிய நற்காசுகளைக் கொண்டு கோயிலுக்கு வேண்டிய நிவந்தங்களைச் செய்ததைப் பதிவு செய்கின்றது.

பொயு 14 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயில் உள்சுற்று வடபுறம் தரையில் உள்ள கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது. இது ஒரு சிவன் கோயிலைச் சேர்ந்த கல்வெட்டாகத் தெரிகிறது. சந்திவிளக்கு ஒன்று வைப்பதற்கு 15 பணம் கொடுக்கப் பட்டதைப் பதிவு செய்கின்றது.

பொயு 12- 13 ஆம் நூற்றாண்டு பார்த்தசாரதி கோயில் உள் சுற்றில் வடபுறம் தரையில் உள்ள கல்வெட்டின் ஒரு பகுதியே கிடைத்துள்ளது. இது சுபாலீச்சுரர் கோயிலைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

பாண்டியர் கால பொயு 13 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயில் உள்ள சுற்றில் வடபுறம் தரையில் உள்ள கல்வெட்டு ஒரு சிவன் கோயிலில் விளக்கு எரிப்பதற்கு நெய் கொடுப்பதற்காக ஆறு பசு கொடையாக அளிக்கப்பட்டதைக் குறிப்பதாக இருக்கலாம்.

பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயில் உள் சுற்றில் தென்புறம் தரையில் உள்ள திருவான்மியூர் உலகாளுடைய நாயனார்க்கு நுந்தாவிளக்கு வைப்பதற்கு 30 பசுக் களும் 1 காளையும் கொடையாக அளிக்கப்பட்டதைப் பதிவு செய்கின்றது.

பொயு 14 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயிலில் மண்டபத்துத் தரையிலுள்ள கல்வெட்டு வரிகளின் முன்னும் பின்னும் எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. நுந்தாவிளக்கு எரிப்பதற்காக 45 சாவா மூவா பேராடுகள் கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளதைப் பதிவு செய்கின்றது.

பொயு 12 – 13 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயில் கருவறையின் முன் உள்ள மண்டபத் தரையில் உள்ள கல்வெட்டு, இரண்டு நுந்தாவிளக்கு மற்றும் இரண்டு குத்து விளக்கு எரிப்பதற்காக இருபத்தாறு [ஆடுகள்] கொடையாக அளிக்கப்பட்டதைக் குறிக்கிறது.

பொயு 12 -1 3 ஆம் நூற்றாண்டு பார்த்தசாரதி கோயில் கருவறையின் எதிரில் உள்ள மண்டபத் தரைமீது உள்ள  கல்வெட்டு திருவான்மியூர் உலகாளுடைய நாயனாருக்கு பூசைக்கும், திருப்பணிக்கும் கொடை அளிக்கப்பட்டதைகப் பதிவு செய்கின்றது.

பொயு 12 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயில் உட்சுற்றின் வடபுறத் தரையில் உள்ள ஒரு கல்வெட்டு வேளச்சேரியைக் குறிக்கிறது. பத்து வேலி நிலம் வரி நீக்கி அளிக்கப்பட்டதைப் பதிவு செய்கின்றது.

பொயு 13 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயிலின் முன்னுள்ள குளத்தின் படிக்கட்டுகளின் ஒரு கல்லில் உள்ள கல்வெட்டு குன்றத்தூர் தட்டான் ஒருவன் தன் நிலத்தை விற்றுக் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.

பொயு 12 -13 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயில் கருவறையின் முன்னுள்ள மண்டபத் தரையில் உள்ள கல்வெட்டு இறைவனை ஒரு குறிப்பிட்ட நாளில் ஊர்வலம் எடுக்க வேண்டி நிலம் கொடையாக அளிக்கப்பட்டதைப் பதிவு செய்கின்றது.

பொயு 17 -18 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயில் முதற் சுற்றில் தாயார் சன்னதி தென் கிழக்குப்புற தரையில் உள்ள கல்வெட்டு ரோமானிய வரிவடிவத்தில் உள்ளது (1. SOSEVS, 2. HEPDEI, 3. ROS). கோயில் திருப்பணியின் போது இக்கல் பாவுகல்லுக்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம்.

பொயு 19 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயில் உட்சுற்றில் வடபுறத்தில் தரைமீது உள்ள கல்வெட்டின் முழு பகுதியும் உள்ளது. மகாமண்டலேசுவரர் சன்னிதியைக் குறிக்கிறது.

பொயு 16 ஆம் நூற்றாண்டு பார்த்தசாரதி கோயில் மணவாள மாமுனி சன்னதியின் வெளிப்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு செயங்கொண்ட சோழமண்டலத்து புலியூர்க் கோட்டத்து எழுமூர் நாட்டுத் திரு வல்லிக்கேணி தெள்ளிய சிங்கப்பெருமாள் ஸ்ரீகார்யகர்த்தரான கொப்பூரி ஓபு ராசைய்ய தேவமகாராசாவும் தானத்தாரும் சாசனம் பண்ணிக் கொடுத்தபடி திருக்கச்சி நம்பியை எழுந்தருளிச் செய்து அமுது வகைக்காகக் கொடை அளித்ததைப் பதிவு செய்கின்றது.

மூன்றாம் இராசராஜனின் 22 ஆம் ஆட்சி ஆண்டு, பார்த்தசாரதி கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டின் ஒவ்வொரு வரியின் துவக்கத்திலும் எழுத்துக்கள் அழிந்துள்ளன. மேற்படி கோயிலில் எழுந்தருளியிருக்கும் நாயனார்க்கு திருநந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்காக இரண்டு மாடை…(பொன்). அளித்ததைப் பதிவு செய்கின்றது.

பாண்டிய மன்னர் குலசேகரரின் 49 ஆம் ஆட்சியாண்டுபொயு 1309, பார்த்தசாரதி கோயில் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ஜயங்கொண்ட சோழமண்டலத்து, புழற்கோட்டமான விக்கிரமசோழ வளநாட்டு துடர்முள்ளிநாட்டு அயன்புரத்து அயன்புரங்கிழவன் தெள்ளியானான செழிய தரையனும், அரையன் நின்ற நம்பி என்பவரும், புலியூர்க் கோட்டத்து எழுமூர் நாட்டில் எழுந்தருளியுள்ள தெள்ளிய சிங்க நாயனார்க்கு நிலம் விற்றுக் கொடுத்ததைப் பதிவு செய்கின்றது.

விஜயநகர மன்னர் ஸ்ரீ வீரபிரதாப சதாசிவ தேவ மகாராயரின் பொயு 1564 ஆண்டு, பார்த்தசாரதி கோயில் உண்ணாழியின் வடக்குப் பக்கச் சுவரில் உள்ள கல்வெட்டு தெள்ளியசிங்கப் பெருமாளின் அடியானான நரசிங்க தாஸன் என்பவர், பள்ளி கொண்டபெருமாள், மகாலக்ஷ்மியார், பூதேவியார். நரசிங்கப்பெருமாள், வராக நாராயணப் பெருமாள், சேஷன். கிருஷ்ணன். ருக்மணிதேவி, பல .. [ள்]. ..மதன் அனுருத்திரன், ஸாத்திகை ஆழ்வார் ஆகிய சுவாமிகளை எழுந்தருளச் செய்ததையும், வேதவல்லி நாச்சியாற்கு உற்சவத் திருமேனி செய்தளித்ததையும்: பள்ளிகொண்டபெருமாள் கோயில், கிருஷ்ணன் கோயில், முன் மண்டபம், வேத வல்லி நாச்சியார் கோயில், திருவாய் மொழி மண்டபம், திருமடப்பள்ளி, அடைய வளைந்தான் திருமதில் ஆகியவைகளை எடுப்பித்ததையும், திருவாபரணங்கள் அளித்ததையும் பதிவு செய்கின்றது.

விஜயநகர மன்னர், ஸ்ரீ வீரவெங்கடபதி மகாராயரின், பொயு 1599 ஆம் ஆண்டு, பார்த்தசாரதி சுவாமி கோயில் உண்ணாழியின் வடக்குப் பக்கச் சுவரில் உள்ள கல்வெட்டு, ஸ்ரீகாரியதுரந்தரரான சேனமுதலியார், கோயில் தானத்தார். அதிகாரி கொப்பூரி ஒபராசய்யன், முத்திரை எதிராசர், சின்னனாச்சியண செட்டி குமாரன் சிக்கி .. யாரது தம்பி நாச்சியண செட்டியார் ஆகியோர், கேணியில் எழுந்தருளியிருக்கும் தெள்ளிய சிங்கப் பெருமாளுக்கு, சித்திரைத் திருநாளுக்கும், வசந்தத்திருநாளுக்குமாக திருவமிர்து படைப்பதற்கும். ஏனைய நிமித்தங்கட்கும் பணம் கொடையாக அளிக்கப்பெற்றதைப் பதிவு செய்கின்றது.

விஜய நகர அரசர் ஸ்ரீ வீரவெங்கடபதி தேவமகாராயரின் பொயு 1603 ஆம் ஆண்டு, பார்த்தசாரதி கோயில் தெற்குப் பக்கச் சுவரில் உள்ள கல்வெட்டு திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கப்பெருமாள் கோயிலில் எழுந்தருளப் பண்ணிய திருமழிசையாழ்வாருக்கு நாள்தோறும் திருவமுது படைப்பதற்காக இருபது வராகன் கொடையாக அளிக்கப்பட்டதைப் பதிவு செய்கின்றது.

விஜயநகர அரசர் ஸ்ரீ வீரவெங்கடபதி தேவமகாராயரின் பொயு 17 ஆம் நூற்றாண்டு, பார்த்தசாரதி கோயிலின் அழகியசிங்கப்பெருமாள் சன்னதியின் தெற்குப் பக்கச் சுவரில் உள்ள கல்வெட்டு, சிங்கமநாயக்க ராசெவ்வன் என்பார் தெள்ளிய சிங்கப்பெருமாளுக்கு ஆடித் திருநாளுக்கு ஆகும் செலவைத் தான் ஏற்றுக் கொண்டதைப் பதிவு செய்கின்றது.

ஸ்ரீ வீரவெங்கடபதி தேவமகாராயரின் 16 ஆம் நூற்றாண்டு கோயிலின் மண்டபத்தில் உள்ள கல்வெட்டு தெள்ளிய சிங்கப்பெருமாள் கோயில் மண்டபத்தில் எழுந்தருளிவிக்கப்பட்டிருக்கும் பாஷியகாரருக்குத் திருவமுது படைப்பதற்கும், அவ்வமுதில் தானத்தாருக்கு இரு நாழியும், தாசிரி நம்பிக்கு நாழியும் ஆக அளிப்பதற்கும் சாசனம் எழுதித்தந்ததைப் பதிவு செய்கின்றது.

விஜயநகர அரசர் ஸ்ரீ ரங்கராயரின் பொயு 1585 ஆம் ஆண்டுபார்த்தசாரதி கோயில் உண்ணாழியின் தெற்குப் பக்கச் சுவரின் அடிப்பகுதியில் உள்ள கல்வெட்டு விஜயநகர மன்னர் இராமராஜவேங்கடபதி ராஜுவின் தளவாய் திருமலைராயர் அளித்த கொடையைப் பதிவு செய்கின்றது

---OM SHIVAYA NAMA---

2 comments:

  1. Sir is there any epigraphica indica or inscription book where the temples inscriptions are transcribed and translated?

    ReplyDelete
    Replies
    1. This post is updated with inscriptions and the reference is also given. thanks for visiting our blog.

      Delete