Wednesday 19 September 2018

Ayyanar & Hero stones of Vellore, Arani and Thiruvannamalai at Vellore Fort Museum, Vellore, Vellore District, Tamil nadu.

09th September 2018.
The ASI Museum of Vellore Fort in Tamil Nadu has a wonderful collection of Hero and Sati Stones. The hero stones are in display in two building inside the Fort. These  memorial stones were brought from Vellore and Tiruvannamalai Districts ( There is no separate Museum in Thiruvannamalai ). Some of the Hero stones has inscriptions and some doesn’t have.  The Hero stones are erected for the heros, who was killed in war and some in the process of saving the cattle. Some of the heros are killed by hitting an arrow and some cases by multiple arrows.

The hero stones includes a Hero in worshiping posture.  It was a nice experience that, to see the Hero stones in sitting posture, like Ayyanar. The hero stones belongs to 06 century Pallava to the Nayak Period 16th Century.





வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள இரண்டாம் நந்திவர்மன் கால நடுகல்

பல்லவர் கால நடுகற்கள் கலைநயம் மிகுந்து காணப்படும், வீரர்கள் அணிந்த உடை, பயன்படுத்திய ஆயுதங்கள், பூசலில் எவ்வாறு இறந்தனர் என மிக நுட்பமாக இக்காட்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கும்.

தமிழ் மொழியின் வளர்ச்சி எழுத்துகளின் மாற்றம் எவ்வாறு இருந்தது என்பதை பல்லவர் கால நடுகல் கல்வெட்டுகள் முலம் அறிந்துகொள்ள முடியும்.

நாம் வாழும் ஊரின் தொன்மை என்ன?, எத்தனை நூற்றாண்டுகளாக மக்கள் இவ்வூரில் வாழ்ந்தனர், அன்றைய வாழ்க்கை முறைகள், சமுக சூழ்நிலைகள் எவ்வாறு இருந்தது என இவற்றை விவரிக்கும் சிறந்த வரலாற்று ஆவணங்களாகவும் பல்லவர் கால நடுகற்கள் திகழ்கிறது.

கல்வெட்டுகளில் அரசரின் ஆட்சியாண்டு, நாட்டின் பெயர், படையெடுத்து வந்தவர்கள் யார், எங்கிருந்து வந்தனர் படையை எதிர்த்து போர் புரிந்தவர் யார், அவர் எவ்வாறு இறந்தார், நடுகல் வைத்தவர் யார் என அனைத்து தகவல்களை கல்வெட்டில் அடங்கும்.

“ஶ்ரீ கோவிசை நந்தி விக்கிரம பரும
யாண்டு பன்னிரண்டாவது படுவூர்க்
கோட்டத்து அடையறு நாடு விசையாதித்த
இளகம்படிகள் முருங்கை மேற் படை வந்த
ஞான்று பொள்ளோர் கலத்திலுன்பான் மு
..தரையர் மருமகன் வினையத்தன் குதிரை
..ட்ட … ல் எறிந்து பட்டான்”

கல்வெட்டில் உள்ள தமிழ் மொழியின் எழுத்துக்களை உற்று நோக்கினால் வட்டெழுத்திலிருந்து மெல்ல மாறி நாம் தற்போது எழுதும் தமிழ் எழுத்துகள் போன்றே இக்கல்வெட்டில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன.

இரண்டாம் நந்திவர்மனின் 12ஆம் கிபி 743 ஆட்சியாண்டில் படுவூர் கோட்டத்தில் அடையாறு நாட்டை சேர்ந்த பாணத்தரையரின் மருமகன் வினையத்தன் என்ற வீரர் விசையாதித்த இளம்கம்படிகள் தலைமையில் வந்த பொன்நேரா படையை எதிர்த்து முருங்கை என்ற இடத்தில் போர் புரிந்து வினையத்தன் வீர மரணம் அடைகிறார்.

கையில் வாள் ஏந்தி வினையத்தன் குதிரையில் இருந்தபடியே போர் புரிந்து இறப்பது போன்று நடுகல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது, இப்போரில் வினையத்தன் மற்றும் அவர் பயன்படுத்திய குதிரையும் இறந்துவிடுகிறது இக்காட்சி வீரன் போரில் எவ்வாறு இறந்தான் என்பதை விவரிக்கிறது.

இறந்தவர்களின் நினைவாக மண்டலப்பட்டி செம்மரப்பட்டி என்ற பெயரில் நிலங்கள் தானமாக வழங்கப்படுகிறது.

களத்தில் இறந்த குதிரையின் வீரமும் போற்றப்பட்டுள்ளது என்பது இந்த நடுகல்லின் தனி சிறப்பு ஆகும். இப்போர் பல்லவர்களுக்கும் நுளமபர்களுக்கு இடையேயான நடந்த போராக கருதப்படுகிறது.

இதுப்போன்ற எண்ணற்ற பல்லவர் கால நடுகற்கள் பல வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளையும் தாங்கி நிற்கிறது. தற்போது வினையத்தன் நடுகல் வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது.

கல்வெட்டு தகவல்கள் நன்றி: திரு பொன் கார்த்திகேயன் & திரு சக்தி ஸ்ரீ. ஸ்ரீநிவாஸ் அவர்களின் முகநூல் பஹுதியில் இருந்து.. நன்றி.















---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment