Friday 25 December 2020

நடுகற்கள், தொண்டாமுத்தூர், கோயமுத்தூர், தமிழ்நாடு.

 கோவை , தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயிலுக்கு முன் மாடுமுட்டி  (மாடு பிடி வீர விளையாட்டில் இறந்ததாகவும் இருக்கலாம் ) இறந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்  சிற்பம் ஒன்று காணப்படுகிறது . சிற்பத்தில் வீரன் ஒருவனின் உருவமும் , அலங்கரிக்கப்பட்ட மாட்டின் உருவமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது . நின்ற நிலையில் காணப்படும் வீரன் இடது கையில் வாளை ஏந்தியவாறு , வலது கையால் மாட்டின் கொம்பை பிடித்தவாறு காணப்படுகிறான் . மாட்டின் முகம் நேராக காட்டப்பட்டுள்ளது . திமிலுடன் காணப்படும் மாட்டின் கழுத்தில் மாலை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது .  மாட்டினால் இவ்வீரனுக்கு மரணம் ஏற்பட்டு இருக்கவேண்டும் . இறந்த வீரனின்  நினைவாக இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது . 1846 என்று மாட்டின் கீழ் பாகத்தில்  பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .



சதிக்கல்

கோவை தொண்டாமுத்தூர் செல்லும் வழியில் மற்றொரு நடுகல் உள்ளது .  இதில் ஆண் பெண் இருவரின் உருவமும் சிற்பமாக பொறிக்கப்பட்டுள்ளது . ஆண்   இருகைகளால் வணங்கியநிலையிலும் ,   பெண் உருவம் கையில் மது குவளை ஏந்தியவாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .  இந்த சதிக்கல்  சந்திரன் சூரியன் உள்ளவரை நிலைத்திருக்கும் என்று பொருளில் சந்திரன் சூரியன்  பொறிக்கப்பட்டுள்ளது . போரில் அல்லது ஏதாவது சண்டையில் இறந்த வீரனுடன்  அவன் மனைவியும் சதி ஏறி அவனுடன் இறந்ததால் , அவர்கள் இருவரின் நினைவாக இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது .



No comments:

Post a Comment