Monday, 9 January 2017

Sri Neervanna Perumal, Sri Ranganathar, Sri Narasimhar and Sri Ulagalantha Perumal Temple, Thiruneermalai, Chennai, Kanchipuram District, Tamil Nadu.

 07th January 2017.
Our next destination was to Thiruneermalai Vishnu Temples where we had the darshan of Neervanna Perumal and Ramar at the base temple and Ranganathar, Yoga Narasimhar and Ulagalantha Perumal on the top of the Hill. 


This is one of the 108 Divya Desam Temples of Maha Vishnu and mangalasasanam was done by, Thirumangai Alwar. 
1079.   
காண்டாவனம் என்பது ஓர் காடு*  
அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க* முனே 
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும்* 
முன் உலகம் பொறை தீர்த்து 
ஆண்டான்* அவுணன் அவன் மார்வு அகலம் 
உகிரால் வகிர் ஆக முனிந்து*  அரியாய்  
நீண்டான்* குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம்*  
மா மலை ஆவது நீர்மலையே*  
1080.   
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து*  
அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்* 
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்*  
பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்* 
பல மன்னர் பட சுடர் ஆழியினைப்*  
பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்* 
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம்*  
மா மலை ஆவது நீர்மலையே.
1081.   
தாங்காதது ஓர் ஆள் அரி ஆய்*  அவுணன் தனை 
வீட முனிந்து அவனால் அமரும்* 
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து 
அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அமரில்*
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி*  
பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட* 
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்*  
மா மலை ஆவது நீர்மலையே.      
1082.   
மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு*  அணை கட்டி 
வரம்பு உருவ* மதி சேர் 
கோல மதிள் ஆய இலங்கை கெட*  படை 
தொட்டு ஒருகால் அமரில் அதிர*
காலம் இது என்று அயன் வாளியினால்*  
கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்* 
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம்*  
மா மலை ஆவது நீர்மலையே.   
1083.   
பார் ஆர் உலகும் பனி மால் வரையும்*  
கடலும் சுடரும் இவை உண்டும்* எனக்கு 
ஆராது என நின்றவன் எம் பெருமான்*  
அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய* அப் 
பேரானை முனிந்த முனிக்கு அரையன்*  
பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்* 
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம்*  
மா மலை ஆவது நீர்மலையே. 
...... திருமங்கை ஆழ்வார்

SRI NEERVANNA PERUMAL TEMPLE, THIRUNEERMALAI   

When Thirumangai Alwar came for worship Perumal, this place was completely surrounded by water and he waited till the water recede, on the other hill, to have the darshan of Perumal, hence Perumal of this temple is called as Neervanna Perumal.

Moolavar : Sri NeerVanna Perumal
Thayar    : Sri Animaamalar Mangai

This temple is facing east with a 3 tier Rajagopuram. Balipedam and Dwajasthambam are after the Rajagopuram. Moolavar is in  standing posture and urchavars are in mandapam. 

The entrance  to the sanctum is from south side with steps. Separate sannidhi for Thayar. Ramar is also in a separate sannidhi, in the maha mandapam facing east. There is a Hanuman stucco statue in the outer prakaram.

ARCHITECTURE
The temple consists of sanctum sanctorum, artha mandapam and a Maha mandapam. The Sanctum Sanctorum is on a upanam and prati bandha adhistanam with Jagathy, vrutha kumudam and prativari. The bhitti starts with vedikai. The pilasters are of Vishnu kantha pilasters with kalasam, kudam, mandi, palakai and pushpa Pothyal. The prastaram consists of Valapi, Kapotam with Nasi Kudus and Viyyalavari. 2 tier Nagaram - Vesara brick Vimanam is above the Adhi talam. Maha Vishnu's various forms are on the tala and greeva koshtams. 

HISTORY AND INSCRIPTIONS
As per the Kulothunga Chozha-III, Rajaraja-III, Pandyas, Telugu Chozhas, inscriptions, this place was called as Jayangonda Chozha mandalathu Puliyur Kottathu Surathur Nattu Thiruneermalai-ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துச் சுரத்தூர் நாட்டு திருநீர்மலை and Maha ishnu was called as Thiruneermalai Emperumal, Thiruneermalai Nayanar, Karuvannameni Emperuman- கருவண்ணமேனி எம்பெருமான்,  etc,. It is interesting to note that, some of the inscriptions records the gift given to a Shiva temple - Pammakka Nayanar Temple of Pammal, Near Thiruneermalai.

சோழ அரசர் வீரராசேந்திரனின்  ( மூன்றம் குலோத்துங்கன் ) 3 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1181 ), காலத்தைச் சார்ந்த நீர்வண்ணர் கோயில் தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டு திருநீர்மலை சிங்கப்பெருமாள் இறைவனுக்கு பூவிருந்தவல்லி நகரத்தைச் சார்ந்த வாணியன் ஆயிரவண்ணன் ஆள்கொண்ட வில்லி எனும் திருக்கச்சிநம்பி தாசன் என்பவன் ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளான். இக்கோயிலைச் சார்ந்த நம்பிமாரில் நயிமிசை யஜ்ஞ நாராயண பட்டன் என்பவன் கண்டகோபாலன் மாடை ஒன்று இவனிடமிருந்து பெற்றுக்கொண்டுச் சந்தி விளக்கு ஒன்று எரிக்கச் சம்மதித்துள்ளான் என்பதைப் பதிவு செய்கின்ரது. .

சோழ அரசர் வீரராசேந்திரனின்  ( மூன்றாம் குலோத்துங்கன் ) 4 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1182 ), காலத்தைச் சார்ந்த நீர்வண்ணர் கோயில் தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டு பூவிருந்தமல்லி நகரத்தைச் சார்ந்த வாணியன் ஒருவன் திருநீர்மலை நாயனார் நீர்வண்ணனுக்கு சந்தி விளக்கு ஒன்று வைத்துள்ளான் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் திரிபுவன சக்ரவர்த்திகள் வீரராசேந்திரனின்  ( மூன்றாம் குலோத்துங்கன் ) 12 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1190 ), காலத்தைச் சார்ந்த நீர்வண்ணர் கோயில் தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டு ஆமூர் கோட்டத்து புலிப்பாக்கம் எனும் சீலசிந்தாமணிச் சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த வடுகனாதன் மாரிப்பிள்ளை என்கிற அருமாதவன் என்பவன் திருநீர்மலை எம்பெருமானுக்குச் சந்தி விளக்கு வைக்க ஒரு மாடைப் பொன் அளித்துள்ளான். இக்கோயிலைச் சார்ந்த நைமிசை திருநீர்மலை நம்பி என்கிற பிரான் கோவிந்த பட்டன் என்பான் ஒரு மாடையைப் பெற்றுக்கொண்டு விளக்கெரிப்பதாகச் சம்மதித்துள்ளான் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் திரிபுவன சக்ரவர்த்திகள் வீரராசேந்திரனின்  ( மூன்றாம் குலோத்துங்கன் ) 12 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1190 ), காலத்தைச் சார்ந்த நீர்வண்ணர் கோயில் தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டு ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புழற் கோட்டத்து சுரத்தூர் நாட்டு திருநீர்மலை ஊரிலுள்ள திருநீர்மலை நாயனார், சிங்கப்பெருமாள், நாயனார் நீர்வண்ணன் ஆகியோருக்கு திருபுதியிதுக்கு அமுதுபடி, சாத்துபடி போன்றவற்றிற்காக ஊற்றுக்காட்டுக் கோட்டத்து தியாகவல்லி வளநாட்டு கண்ணனூர் ஊரில் உள்ள ஐந்தரை வேலி நிலத்தினை மூலதனமாகக் கொண்டு நடத்திடுவதற்கு திரையனூர் என்கிற குலோத்துங்கசோழச் சதுர்வேதிமங்கலத்து மகாசபையார் இந்நிலத்தினைத் திருவிடையாட்டமாக அளித்துள்ளனர் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது. 

சோழ அரசர் கோனேரிமை கொண்டான் திரிபுவன சக்ரவர்த்திகள்  மூன்றாம் குலோத்துங்கனின் 28 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1206 ), காலத்தைச் சார்ந்த நீர்வண்ணர் கோயில் தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டு ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்து கோவூர் என்கிற உலகமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து ஊராருக்கு மன்னன் அளித்த ஆணை. இவ்வூரிலிருந்த 75 வேலி நிலத்தினைத் திருநீர்லை திருமலையில் உள்ள ஸ்ரீநரசிங்கத்து எம்பெருமானுக்கும், மலை அடிவாரத்தில் உள்ள கருவண்ணமேனி எம்பெருமானுக்கும் தேவையான வழிபாட்டுச் செலவினங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கின்றது.

சோழ அரசர் திரிபுவன சக்ரவர்த்திகள் வீரராசேந்திரனின்  ( மூன்றாம் குலோத்துங்கன் ) 23 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1210 ), காலத்தைச் சார்ந்த நீர்வண்ணர் கோயில் ராமர் சன்னதி தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டு அணைக்கரைச்சேரி என்கிற சோழகங்கதேவ நல்லூர் ஊரைச் சார்ந்த பஞ்சநதிவாண நீலகங்கரையன் நல்லநாயன் என்றழைக்கப்பட்ட சோழகங்கதேவன் என்பவன் பம்மல் நக்க நாயனார்க் கோயிலுக்கு 10 வேலி நிலத்தினைத் தேவதானமாக வழங்கியுள்ளான் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் திரிபுவன சக்ரவர்த்திகள் வீரராசேந்திரனின்  ( மூன்றாம் குலோத்துங்கன் ) 34 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1212 ), காலத்தைச் சார்ந்த நீர்வண்ணர் கோயில் ராமர் சன்னதி தென்புற அதிட்டனத்தில் உள்ள கல்வெட்டு ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர் கோட்டம் என்கிற குலோத்துங்கசோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டுப் பிரிவிலுள்ள பம்மல் ஊர்க் கோயிலின் இறைவன் பம்ம நக்க நாயனாற்கு திருவைகாசி திருநாள் வழிபாட்டுச் செலவினங்களுக்காக, திருமடைவளாகத்தில் இருப்பவர்களிடம் வசூலிக்கப்படும் வரியினைப் பயன்படுத்திக் கொள்ள பஞ்சநதிவாணன் நல்லநாயன் என்கிற சோழகங்கதேவன் ஏற்பாடு செய்துள்ளான் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் திரிபுவன சக்ரவர்த்திகள் வீரராசேந்திரனின்  ( மூன்றாம் குலோத்துங்கன் ), காலத்தைச் சார்ந்த நீர்வண்ணர் கோயில் கோபுர வாயிலின் இடதுபுறம் உள்ள கல்வெட்டு ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டு மடப்புறம் தண்ணியாலத்தூர் என்கிற ஊரில் உள்ள பள்ளிப்படை அகரத்து விஸ்வேஸ்வர நாயனார் இறைவனுக்குப் பூசை மற்றும் கோயில் திருப்பணிகளுக்காக பஞ்சநதிவாணன் நீலகங்கரையன் என்பவன் 12 வேலி எட்டு மா அளவு நிலம் தானமளித்துள்ளான் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் திரிபுவன சக்ரவர்த்திகள்  மூன்றாம் இராசராஜனின் 6 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1222 ), காலத்தைச் சார்ந்த நீர்வண்ணர் கோயில் கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு புலியூர்க் கோட்டத்து மாங்காடு நாட்டு மலையம்பாக்கம் ஊரைச் சார்ந்த கையரையன் திருவகத்தீசுரமுடையான் என்பவனிடமிருந்து ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துச் சுரத்தூர் நாட்டு திருநீர்மலை எம்பெருமாள் கோயிலில் காணியுடைய நம்பிமாரில் பாரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்த அருளாள பட்டன் திருவேட்டை அழகியான் என்பவன் பழங்காசுகள் பெற்றுக்கொண்டு ஒரு திருவிளக்கெரிக்க சம்மதித்துள்ள செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் கோனேரிமை கொண்டான் திரிபுவன சக்ரவர்த்திகள்  மூன்றாம் இராசராசனின் 16 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1231 ), காலத்தைச் சார்ந்த நீர்வண்ணர் கோயில் தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டு பெருங்கனல் வட்டம்பாக்கம் ஊர்த் தலைவன் அருளாளப் பெருமாள் சீயன் என்பானிடமிருந்து திருநீர்மலை எம்பெருமாளுக்கு ஒரு சந்தி விளக்கு எரிப்பதற்காக இக்கோயிலைச் சேர்ந்த பாரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்த மலைக்கினிய நின்றான் என்பவன் ஒன்றே முக்கால் மாடை பொன் பெற்றுக்கொண்டு விளக்கெரிக்க சம்மதித்துள்ளான்.

சோழ அரசர் திரிபுவன சக்ரவர்த்திகள்  மூன்றாம் இராசராசனின் 16 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1232 ), காலத்தைச் சார்ந்த நீர்வண்ணர் கோயில் கிழக்கு சுவரில் உள்ள கல்வெட்டு மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் கண்டகோபாலன் என்பவன் திருநீர்மலை எம்பெருமானுக்கு 'திருவாழிபரப்பினான் சந்தி'யின் போது அமுதுபடி, சாத்துபடி, திருநந்தாவிளக்கு ஆகியவற்றிற்காகப் பத்து வேலி நிலம் தானமாக அளித்துள்ளான் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

பாண்டிய மன்னன் மாறவர்மன்  குலசேகர பாண்டியனின் 37வது ஆட்சி ஆண்டு ( பொயு 1304 ) நீர்வண்ணர் கோயில் ராமர் சன்னதி மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, பஞ்சநதிவாணன் திருவேகம்பன் என்கிற நீலகங்கன் என்பவன், தான் பிறந்த பங்குனி மாதம் ஹஸ்தம் நாளன்று ஜயங்கொண்ட சோழமண்டலத்து புலியூர் கோட்டம் எனும் குலோத்துங்க சோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டு பம்மல் என்னும் ஊர் கோயில் இறைவன் பம்மநக்க நாயனாருக்கு வழிபாடுகள் நடத்திடுவதற்கு புலியூர்க் கோட்டத்து கால்பாய் நாட்டு வடக்குப்பட்டு என்னும் ஊரிற்கு தனது பெயரால் குமாரகோபால நல்லூர் என்ற பெயரிட்டுத் தானமாக வழங்கியுள்ளான் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

பாண்டிய மன்னர் திரிபுர சுந்தர பாண்டியனின் 16  ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 13 நூற் ) நீர்வண்ணர் கோயில் ராமர் சன்னதி வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு, பம்மல் ஊரில் இருக்கும் வியாபாரி குன்றமுடையான் மெய்ஞ்ஞான வித்தகன் திருவெண்காடுடையான் என்பவன் பம்மனக்கர் நாயனார் வழிபாட்டிற்காகவும், திருப்பங்குனி, திருவைகாசி ஆகிய திருநாள்களில் வழிபாட்டுச் செலவினங்களுக்காகவும் கோயில் தானத்தாரிடம் தானம் வழங்கியுள்ளான். கல்வெட்டு முற்றுப்பெறாமல் உள்ளதால் தானத்தின் முழுவிவரம் அறிய இயலவில்லை.   

Ref :
தமிழ்நாட்டுக்கல்வெட்டுகள் தொகுதி -IX,  காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி -5. 

LEGENDS
It is interesting to note that the Urchavar is not belongs to this temple. The story goes like this… During Muslim's invasion the Chennakesava Perumal Temple of Chennai was brought here for safety reasons and kept along with this temple’s urchavars. While taking back they had taken the Neervanna Perumal’s urchavars.

TEMPLE TIMINGS:
The temple will be  opened between 08.00 hrs to 12.00 hrs and 16.00 hrs to 20.00 hrs.

CONTACT DETAILS:
The land line and mobile numbers are +91- 44-2238 5484,98405 95374,94440 20820.

HOW TO REACH:
Thiruneermalai is very near to Tambaram, Pallavaram, and Chrompet and Town buses are available.  

LOCATION OF THE TEMPLE     :CLICK HERE





THIRUNEERMALAI HILL TOP TEMPLES SRI RANGANATHAR, SRI NARASIMHAR AND SRI ULAGALANTHA PERUMAL TEMPLE, 
 

After darshan of Sri Neervanna Perumal temple, climbed up the hill. It took us almost 5 minutes to reach the hill top.  The Hill temple complex consists of 3 Sannidhis for Maha Vishnu, ie, Sri Ranganathar, in reclining posture, Narasimhar  and Thiruvikramar. 

Moolavar : Sri Ranganathar
Thayar    : Sri Ranganayaki

The Kalki mandapam at the end of the steps serves as the entrance of the temple. Sri Ranganathar sannidhi is facing south. Sri Ranganathar is in reclining posture, resting his head on Thayar’s lap under the 5 headed hood of Adhiseshan. The Thayar Sri Ranganayagi's sannidhi is one level below the Sri Ranganathar sannidhi on the left side of the entrance.

Kalki mandapam

SRI NARASIMHAR SANNIDHI
Sri  Narasimhar ( is in a peace mood ) also called as Bala Narasimhar, This Narasimhar sannidhi is on the back side of Sri Ranganathar shrine and facing east. Narasimhar is in sitting posture with two hands. The right hand is in abhaya hastam and left hand is in ahvana hastam. Utsavars Maha Vishnu with Sridevi and Bhudevi are in front of main deity.  

HISTORY AND INSCRIPTIONS
Rajaraja -III and Kulothunga-III, Telugu Chozhas period inscriptions are there on the south side wall of Sri Narasimhar Sannidhi, which are not legible to read due to painting and the recorded details are given below. 

சோழ அரசர் வீரராசேந்திரனின்  ( மூன்றம் குலொத்துங்கன் ) 5 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1183 ), காலத்தைச் சார்ந்த நரசிம்மர் சன்னதி தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டு குன்றத்தூர் நாட்டு நந்தம்பாக்கம் ஊர்த் தலைவன் விழுப்பரையன் என்கிற சோழன் என்பான் ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர் கோட்டம் என்னும் குலோத்துங்கசோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டு திருநீர்மலை நாயனார் நீர்வண்ணன் சன்னதியில் சந்தி விளக்கு ஒன்று வைப்பதற்கு 'கண்டகோபாலன் மாடை' ஒன்றுத் தானமளித்துள்ளான். இப்பொன்னினைப் பெற்றுக்கொண்ட இக்கோயிலைச் சார்ந்த பாண்டவதூத பட்டர் ஸ்ரீதர பட்டன் என்பவன் விளக்கெரிக்க சம்மதித்துள்ளான் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் திரிபுவன சக்ரவர்த்திகள்  மூன்றம் இராசராசனின் 19 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1235 ), காலத்தைச் சார்ந்த நீர்வண்ணர் கோயில் - நரசிம்மர் சன்னதி தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு இக்கோயில் சிங்கபெருமாள் சன்னதியில் ஒரு சந்தி விளக்கு எரிக்க கோவிந்த பட்டன் என்பவன் 'கண்டகோபாலன் மாடை' ஒன்று தானமாக வழங்கியுள்ளான். இக்கோயிலில் காணியுடைய கிருஷ்ணபட்ட சோமயாசி என்பவனின் மகன்கள் பாரத்வாஜி பட்டன், சிங்கப்பெருமாள் ஆகியோர் ஒரு மாடைப் பொன் பெற்றுக்கொண்டு விளக்கெரிப்பதாக உறுதியளித்துள்ளனர் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

சோழ அரசர் திரிபுவன சக்ரவர்த்திகள்  மூன்றம் இராசராசனின் 23 ஆம் ஆட்சி ஆண்டு ( பொயு 1239 ), காலத்தைச் சார்ந்த நரசிம்மர் சன்னதி தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, பெருங்கனல் வட்டம்பாக்கம் ஊரைச் சார்ந்த பட்டாலகன் என்பவன் திருநீர்மலை நாயனார் சிங்கபெருமாளுக்கு ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளான் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

தெலுங்கு சோழர் விஜயகண்ட கோபாலனின் 10 ஆம் ஆட்சி ஆண்டு  ( பொயு 1250 ) காலத்திச் சார்ந்த கல்வெட்டு  பெருங்கனல் ஊரைச் சார்ந்த வட்டப்பாக்கம் ஊர்த் தலைவனின் மகன் பட்டாலக தேவன் என்பவன் திருநீர்மலை சிங்கபெருமாளுக்கு ஒரு சந்தி விளக்கு எரிக்க ஒரு மாடைப் பொன் தானமளித்துள்ளான் என்ற செய்தியைப் பதிவு செய்கின்றது.

Ref :
தமிழ்நாட்டுக்கல்வெட்டுகள் தொகுதி -IX,  காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி -5. 
 

 Bala Narashimhar or Shantha Narasimhar
The Chozha period inscriptions

SRI ULAGALANTHA PERUMAL SANNIDHI 
This Sri Ulagalantha Perumal  Sannidhi is also on the back side of Sri Ranganathar sannidhi  and adjacent to Sri Narasimhar sannidhi. This sannidhi is also facing east.  Moolavar is in standing posture with left leg up in the air pointing towards sky. Right hand is pointing up. Utsavar Maha Vishnu is in abhaya varada hastam with Sridevi and bhudevi. 
   
 Ulagalantha Perumal

It was told that many famous  personalities marriages were held here which include  MSV.  It was a awesome view of the base temple with the big tank from the top of the hill.

 It is believed that this Kalki Mandapam was named after Kalki Krishnamoorthy, Husband of MS Subbu Lakshmi, the donors of this mandapam
Kalki Mandapam

LOCATION OF THE TEMPLE  COMPLEX   : CLICK HERE 
… to be continued ( Sri Rajagopalaswamy Temple, Manimangalam )

--- OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment