The visit to Rock Arts at Thenkunam in
Kallakurichi District, was a part of “Rock Arts of Nadu Naadu Visit, in Viluppuram
and Kallakurichi Districts”, organised by திருவண்ணாமலை மாவட்ட வரலாற்றுஆய்வு நடுவம், on 17th November 2024. Thanks to Mr. Gandhirajan, the Rock Art expert, who guided us to understand Rock Arts (தமிழ் மூலம் திரு காந்திராஜன் அவர்கள்). This place Thenkunam
is near Elavanasur in Kallakurichi District. The Rocky Hill, where the Rock Arts is found in 4 places is about 2 km from the Thenkunam Village.
தேன்குணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவானசூர்
அருகே உள்ள தேன்குணம் கிராமத்தின், மனிதர்கள்
வாழ்விடப்பகுதிக்கு சற்று தள்ளி ஒரு சிறிய மலைக் குன்றில் நான்கு இடங்களில் சிவப்பு
வண்ண பாறை ஓவியங்களும், பாறைக்கீறல்களும் காணப்படுகின்றது.
தொகுப்பு: I.
தற்போது கோவில் விமானம் உள்ள பாறையின்
கிழக்கு பகுதியில் சில சிவப்பு வண்ண ஓவியங்கள் மிகவும் மங்கிய நிலையில் காணப்படுகின்றன.
இரண்டு மான்கள் எதிரெதிரே இருப்பது போல
கோட்டோவியமாக சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இரண்டு மான்களும் கிளை இல்லா
நீண்ட கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளது. இதில்
ஒரு மான் தெளிவாகவும் மற்றொன்று அழிந்த நிலையிலும் காணப்படுகின்றது.
இம்மான்களுக்கு இடையே மேலிருந்து இரட்டை கோடுகள் வளைந்து வளைந்து பாறையின் கீழ்வரை
செல்கின்றது இந்த வளைந்த இரட்டை கோடுகள் நீரோடையாகவோ அன்றி ஆறாகவோ காட்டியிருக்கலாம்
என்றும் அவ்விரு மான்களும் நீர் அருந்த வந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
இதற்கு அருகில் அழிந்த நிலையில் சில விலங்கு போன்ற உருவங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும்
அடையாளம் காண இயலாத சில ஓவியங்களும் காணப்படுகின்றன.
Group-I.
Steps are built to access the
Selliamman Temple. This rock art is
found on a rock in front of the Selliamman Temple. In this red ochre rock art,
Two Deer are standing opposite to each other. The Horns are long without
branches. One Deer is faintly visible.
Two lines are drawn with bends and curves between the Deer, from the top of
the rock to the bottom. These two line may represent a river. The Deer might
have come for drinking water. Also, some undistinguished images are found in
this group.
தொகுப்பு:
II.
முதல் இடத்தில் இருந்து சுமார் 50 மீ.
தொலைவில் வடக்கில் உள்ள சிறிய பாறை ஒதுக்கில் சில உருவங்கள் சிவப்பு வண்ணத்தில்
கோட்டோவியங்களாக வரையப்பட்டுள்ளது. இதில் ஒரு மான் போன்ற உருவத்தைத் தவிர மற்றவை
அழிந்த நிலையில் உள்ளன. இதில் 18 புள்ளிகளைக் கொண்டு மாலை
வடிவில் ஒரு ஓவியம் வரையப்பட்டிருப்பது குறிப்பிட்தக்கது. தோற்றத்தின் அடிப்படையில்
வேட்டைக்காக வைக்கும் கண்ணியைப் போல தெரிகின்றது. அது போல அலங்காரத்துக்காக கூட
வரைந்திருக்கலாம்.
Group-II.
This is about 50
meters away from the Group-I rock arts on the same hill. This group of rock art
was done with red ochre. Except for a Deer, the others are faintly visible. An art
is found in the form of a garland with 18 dots. It may be for an ornamental or
a catch for the animals.
தொகுப்பு:
III.
இரண்டாம் இடத்தில் இருந்து மேற்கே சுமார் 50 மீ.
தொலைவில் உள்ள திறந்த வெளி பாறை ஒன்றில் கற்கீரல் ஓவியங்கள் காணப்படுகின்றன.
இங்கு ஓவியங்கள் இரண்டு தொகுதிகளாக செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு
தொகுதிகளிலும் மனித உருவம் ஒன்று விலங்குக்கு அருகே நடந்து வருவது போல
காட்டப்பட்டுள்ளது. இவர்களது தலைப்பகுதிகளில் சில வட்டம் மற்றும் சில வடிவங்கள்
காணப்படுகின்றது. இவ்வடிவங்கள் திட்டமிட்டே செதுக்கப்பட்டுள்ளன. இதன் காரணம் அறிய
இயலவில்லை. வேட்டைச் சமூகத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகளாக இருக்கக்கூடும்
(ஆய்வுக்கு உரியது).
Group-III.
This Group is about 50 meters from group –II, rock arts. This is in the form of petroglyphs. This group
consists of two sets of petroglyphs. In both groups, a Human in walking posture
is shown. On the top of their heads, some organized round patterns are chiseled.
These may represent some weapons used for hunting. Further research is required
on these petroglyphs.
தொகுப்பு: IV.
சமவெளிக்கு சற்று உயரே கண்காணிப்புக்கு உகந்த பாறை
ஒன்றில் சில ஓவியங்கள் சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன. இதில் சில ஓவியங்கள் அழிந்த
நிலையிலும், மங்கிய நிலையிலும் காணப்படுகின்றன. இங்கு வரையப்பட்ட ஓவியம் ஒன்றில் பெரிய
உருவத்தில் புலி போன்ற விலங்கு அமர்ந்த நிலையிலும் அதன் எதிர்புறம் சிறிய
உருவத்தில் நாய் ஒன்றின் உருவமும் எதிர் எதிரே வரையப்பட்டுள்ளது. இதை வரைந்த
ஓவியன் இரண்டு மாறுபட்ட குணமுள்ள விலங்குகளை அருகருகே காட்டப்பட்டது
குறிப்பிடத்தக்கது. இவை சராசரி உருவ அளவை விட பெரிதாகவும், சிறிதாகவும்
காட்டப்பட்டுள்ளது. பாறை ஓவியங்களில் பொதுவாக புலியினை வரையும் போது வேட்டையில்
இருப்பது போல அல்லது வேட்டைக்கு தயாராகும் நிலையிலையே காட்டப்படும். ஆனால் இங்கு
அமர்ந்த நிலையில் பெரிய உருவமாகக் காட்டப்படுவதும், அதற்கருகே
பயமின்றி வாலை உயரே தூக்கிய நிலையில் நாய் காட்டப்படுவது ஒரு காரணமாகத் தான்
இருக்கக்கூடும். ஒருவேளை, வயது முதிர்ந்து நடக்க இயலாத
நிலையில் உள்ள புலியாகக் கூட இருக்கலாம் ஆகையால் நாய் மிக அருகில் சென்று புலியின்
முகத்துத்துக்கு நேராக முகம் வைத்து பார்ப்பது போல காட்டப்பட்டிருக்கலாம். அதுபோல
இரண்டு விலங்குகளும் நல்ல நட்பில்கூட இருக்கலாம். இரு வெவ்வேறு சூழலில் வெவ்வேறு
மனநிலையில் உள்ள விலங்குகளை ஒருங்கே காட்டுவது சிறப்பாகும்.
இவ்வோவியங்களுக்கு அருகே சில மனித
உருவங்களும் மான்களும் கோட்டோவியங்களாக வரையப்பட்டுள்ளது. இரு மான்களுக்கு
பின்புறம் வேடன் ஒருவன் உள்ளான். அதில் ஒரு மான் தலையைத் திருப்பி பின்னால்
பார்ப்பதும், மற்றொன்று
எதார்த்தமாகவும் காட்டப்பட்டுள்ளது.
இம்மான்களுக்கு சற்று அருகே சில மனித
உருவங்கள் காணப்படுகின்றது. அவை கோட்டோவியங்களாக சிவப்பு வண்ணத்தில்
வரையப்பட்டுள்ளது.
இங்குள்ள இரண்டு மனித உருவங்கள்
கோட்டோவியங்களாக வரைப்பட்டிருப்பினும், இதில் ஒரு மனித உடற்பகுதி குறுக்குக் கோடுகளுடன் காட்டப்பட்டு உள்ளது. அது மரக்கொடிகளை
கயிறு போன்று கட்டியிருக்கலாம், மேலும் அவனது கையில் நீண்ட
குச்சி ஒன்றும், அதன் முனைப்பகுதி *v* வடிவத்தில் உள்ளது,
இது வேட்டைக்குப் பயன்படும் கருவியாக இருக்கக்கூடும். மற்றொரு
உருவம் மிக எளிமையாக கையை விரித்த நிலையில் காட்டப்பட்டுள்ளது.
இந்த மலையில் வெவ்வேறு காலகட்டத்தைச்
சேர்ந்த ஓவியர்கள் தாங்கள் கண்ட காட்சியினை நேர்த்தியாக வெவ்வேறு இடங்களில் பதிவு
செய்துள்ளனர். இம்மலையில் பாறைகள் அதிக அளவில் உடைக்கப்பட்டதால் பல ஓவியங்கள்
அழிந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.
Group – IV.
This rock arts was done in
red ochre. In this group, a tiger-like animal and a dog-like animal are drawn
with their faces close to each other. The Tiger is in a squatting position. These
are a little larger than the actual animal's sizes. It is unusual and special
to draw two different characters and behavior animals close to each other.
Near to the tiger, two deer and a group
of human beings are drawn. In the two deer, one is looking at the Hunter, by
turning its head, and the other one looks normal.
Two humans are drawn with little
difference from the usual rock arts. Some cross lines are drawn, which may
represent some creepers may be tied over the body. A man holds a long stick
with a “v” shape at the end. This may be a weapon used for hunting.
LOCATION
OF THE CAVE: CLICK HERE
11°47'54.1"N
79°14'43.0"E
---
OM SHIVAYA NAMA ---
No comments:
Post a Comment