கன்யாகுமரி மாவட்ட கோட்டைகள் மற்றும் கோட்டை சுவர்கள் – கரைக்கோட்டை
சுவரின் எச்சங்கள்.
பொயு.18-ம் நூற்றாண்டில்
கன்னியாகுமரிலிருந்து ஆரல்வாய்மொழி வரை நீண்ட கற்கோட்டைச் சுவர்
கட்டப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரியிலிருந்து பரமார்த்தலிங்கபுரம், மகாராஜபுரம், வட்டக்கோட்டை, இராமனாதிச்சன்புதூர் வழியாகச் சென்று இராமனாதிச்சன்புதூர் அருகேயுள்ள
குன்றின் மீதேறிச் சென்று ஆரல்வாய்மொழியை இக்கோட்டைச் சுவர் அடைகிறது. இடையிடையே
கண்காணிப்பு மேடைகள் உள்ளன. இக்கோட்டைச்
சுவர் வேணாட்டரசன் மார்த்தாண்டவர்மாவால் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இக்கோட்டைச்
சுவர் ஆங்காங்கு கிடைத்த கல், செங்கற்கள் ஆகியவைகளைக்கொண்டு கட்டப்பட்டது. தற்போது
காணப்படும் அக்கரைக்கோட்டைச் சுவரின் எச்சங்கள் உள்ள இடங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்து இருப்பது ஒரு கூடுதல் சிறப்பாகும்.
The
Karaikottai wall was constructed during the Venadu King Marthandavarma's period. The
wall was constructed from Aralvaimozhi to Kanyakumari, using the available
materials like stones, Bricks, etc. in that area. The wall has watch towers,
platforms for positioning the cannons. The remains are found in three places. It
is worth noting that all three places are in a straight line.
குமரி மாவட்டக்
கோட்டைகளில் கி.பி.1600-ல் கட்டப்பட்ட உதயகிரிக்கோட்டையும் பத்மனாபபுரம் கோட்டையும்
(மண்சுவர்கள்) பழமையானவையாகும். இதே காலகட்டத்தில் பத்மனாபபுரம் உதயகிரிக்கோட்டைகள் மற்றும் மருந்துக் கோட்டை, மய்ய கோட்டை,
வட்டக் கோட்டை ஆகிய கோட்டைகள் கட்டப்பட்டதை வாலாற்று ஆதாரங்கள்
தெரிவிக்கின்றன. பொயு. 1741-ல் குளச்சல் போருக்குப் பின்
வேணாட்டரசன் மார்த்தாண்ட வர்மா (பொயு.1729-1758) காலத்தில்
டச்சுப்படை வீரர் டிலெனாய் மேற்பார்வையில் கல்குளம் (பத்மனாபபுரம்) மற்றும்
உதயகிரிக் கோட்டைகளின் மண்கோட்டைச் சுவர்கள் அகற்றப் பட்டுக் கற்கோட்டைச்
சுவர்களாக மாற்றிக் கட்டப்பட்டன. இச்செய்தியை வேணாட்டரசர் வீரரவி ரவிவர்மாவின்
கி.பி. 1600ம் ஆண்டைச் சேர்ந்த நீட்டு (அரசாணை) ஒன்று
தெரிவிக்கிறது.
1. The remains of the Karaikottai wall, at Perumalpuram.
This portion of the wall was built with bricks and stones intermixed. LOCATION OF THE
REMAINS: CLICK HERE
2. The remains of the Karaikottai wall, at Murugan Kundram.
This portion of the wall was built with bricks and lime mortar.
LOCATION OF THE
REMAINS: CLICK HERE
3. The remains of the Karaikottai wall, at Ramanathichenputhur.
This portion of the wall was built with granite stones. Some portion of the wall is inside private property, and the wall was kept as it was.
LOCATION OF THE
REMAINS: CLICK HERE
HERO STONE
CONNECTED TO KARAIKOTTAI.
A Hero Stone with Maransadayan’s 27th reign year inscription is available at the
Padmanabapuram Palace Museum. This hero stone was erected at Aralvaimozhi for a
warrior called Ranakeerthi, who was killed during the Cheras' attack on the
Karaikottai. Part of the inscription is found damaged. Ranakeerthi was killed
by the arrow shot by Thozhuvur Kootrathu Perumur Thatham Perunthinai. The
Copper plate available at the Chennai Museum records that the Cheras were
defeated by the Pandyas and destroyed Vizhinjam. After that, the Cheras
attacked the Karaikottai. The Ranakeerthi might have died during that attack.
ஆரம்போலி (ஆரல்வாய்மொழி) யில் கிடைக்கப்பெற்ற இந்த
நடுகல் இன்று பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு
புறம் எழுத்துப்பொறிப்போடு மறுபுறம் வீரனொருவன் அம்பெய்யும் நிலையில் காணப்படும்
நடுகல் எழுத்துகள் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளன.
மாறஞ்சடையனது 27ம் ஆண்டினைச் சேர்ந்த இக்கல்வெட்டு சேரமானார் படை
விழிஞத்து கரைக்கோட்டையை முற்றுகையிட்ட போது இறந்துபட்ட இரணகீர்த்தி மற்றும்
உள்வீட்டுச் சேவகரொருவருக்காக நடுகல் எடுக்கப்பட்டச் செய்தியைத் தருகிறது.
சேரமானர் படை விழிஞசத்து வெளியே குழப்புற்ற நிலையில்
கரைக்கோட்டையை அழிப்பதற்காக முற்றுகையிட்டது. அப்போது கோட்டையிலிருந்த பாண்டியப்
பெருமானடிகளுக்கு பிரியமான இரணகீர்த்தி எனும் வீரனும் அமர்கழி மற்றும் உள்வீட்டுச்
சேவகனொருவனும் கோட்டை அழியாது காப்பதற்காக எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டனர். பலர்
இவர்களது கணைகளால் மடிந்த நிலையில் தொழுவூர் கூற்றத்து பெருமூர் தாதம் பெருந்திணை
என்பான் எய்த அம்பினால் குத்திப்பட்டான். அவன் நினைவாக வழங்கப்பட்ட நிவந்தங்கள்
குறித்த வரிகள் சிதைந்துவிட்டன.
இக்கல்வெட்டின் எழுத்தமைவு ஏறக்குறைய ஆனைமலை பராந்தக
நெடுஞ்சடையனது கல்வெட்டினை ஒத்து காணப்படுகிறது. மாறஞ்சடையனாயின பராந்தக
நெடுஞ்சடைய வரகுணனின் சென்னை அருங்காட்சியகச் செப்பேடு (ஶ்ரீவரமங்கலம்) அவனது 17ம் ஆண்டில்
வெளியிடப்பட்டது. அச்செப்பேடு அவன் சேரனை வென்றதையும் விழிஞத்தை அழித்ததையும்
குறிப்பிடுகிறது. அதன் பின் சேரன் விழிஞத்தை மீண்டும் கைப்பற்ற முனைந்த போது
இந்நிகழ்வு நடைபெற்றிருக்கலாம்.
பராந்தக நெடுஞ்சடையனின் காலம் பொயு 768 ஆக
கணிக்கப்பட்டுள்ளதால் இந்நடுகல் எடுக்கப்பட்ட காலம் பொயு 795 ஆகும்.
- ஶ்ரீ கோமாறஞ்சடையற்கு இ
- ருபத்தேழாமாண்டு சேரமா
- னார் படை விழுஞத்து புறத்து
- விட்டுழக்கக் கரைக்கோட்டை அழி
- ப்பான் வர பெருமானடிகளுள
- ன்பு மிக்குள இரணகீர்த்தியு
- ம் அமர்கழியும் உள்வீ
- ட்டினொற்றைச் சேவகர் கோட்
- டை அழியாமை காத்தெறி
- ந்து பலரும் பட்ட இ
- டத்து இரணகீர்த்தி உள்
- வீட்டுச்சேவகன் தொழுவூ
- ர்க் கூற்றத்துப் பெருமூர்
- த்தாதம் பெருந்திளை அ
- த்திரத்தாற் பலரோடுங்
- குத்திப்பட்டான் இரு
- பது கமாளி… “
(Thanks to
Saravanamanian for the details of Hero Stone Inscriptions)
--- OM SHIVAYA
NAMA---













No comments:
Post a Comment