The visit to Sri Nindra Narayana Perumal Koyil at Thiruthangal
was a part of “Tirunelveli Heritage Walk”, organised by the Culture Circuits,
from 11th to 13th July 2025.
This is one of the Divya Desam temples of Pandya
Nadau and 108 Divya Desam. Mangalasasanam was done by Tirumangai Azhwar (1399,
2068, 2673 (71), 2674 (120)) and Bhootathaazhwar (2251).
பேரானைக்
குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும்,
அராதென்
றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே (1399)
………….. திருமங்கை ஆழ்வார்
தமருள்ளம் தஞ்சை
தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும்
தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
மாமல்லை கோவல்
மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக்
கிடம். 70 (2251)
………….. பூதத்தாழ்வார்
Hill Temple
Moolavar :
Sri Ninra Narayanan
Thayar :
Sri Sengamala Thayar also called as
Annanayagi, Amirthanayagi,
Aanandhanayagi and
Jambavathi
PC - website
Base Level
Moolavar:
Sri Kolapiran
In the Cave
Moolavar :
Sri Ranganathar as Pallikonda Perumal
Consorts :
Sri Devi and Bhudevi
Some of the Salient features of this temple are….
The temple faces east on a small hill, with an
entrance arch on the roadside. The entrance steps are on the south side. Balipeedam
and dwajasthambam are on the base level.
PC - website
Maha Vishnu, on the top of the hill temple, is with
5 consorts in standing postures. The murtis inside the sanctum sanctorum are
Sri Vasudevan, Sridevi, Neeladevi, Bhoomadevi, Brigu Muni, Markandeya
Mahirishi, and Garudalwar with 4 hands holding Naga and amrita kalas, Arunan
(Suryan’s Charioteer), Anirudhan (Grand Son of Krishna), Ushai, and Jambavathi.
No abhishekam will be performed (Made out of stucco).
Chakarathalwar and Andal are in the praharam.
Sri Sengamala Thayar is in a separate sannidhi at one level below the top level. Dwarapalakis are at the entrance of the sanctum
sanctorum. Thayar is in a standing posture with abhaya hastam (A rare posture).
PC - website
ARCHITECTURE
The temple consists of the sanctum sanctorum, ardha
mandapam, and Maha mandapam. From adhistam to prastaram, the temple was built
with stone. The sanctum sanctorum is on a padabandha adhistanam with jagathy,
three patta kumudam, and pattikai. The bhitti starts with vedikai. The pilasters
are Brahma kantha pilasters with vettu pohyal. The prastaram consists of valapi,
kapotam, and madhalai. An eka tala ellipse / Oval shaped, “ayutha vesara”, vimanam
is on the square sanctum sanctorum. The eastern side of maha nasi is extended up
to ardha mandapam. Donors are on the mandapa pillars. Vimanam is called Devachandra
Vimanam
Donors
HISTORY AND INSCRIPTIONS
Thiruthangal was a Devadana
Brahmadeyam in Karunilakudi Nadu of Pandya Nadu.
In the northern
portion of this village, Thiruthangaal, a hillock known as Tangalgiri, 100 ft.
tall, accommodates the Sri Nindra Narayana Perumal Temple, which faces south;
climbing a flight of steps, one may reach the spacious Kalyana Mantapam. To the
west of this Mantapam, a cave temple having traces of the Pandyas art is
noticed. Here, the stupendous image of Pallikonda Perumal is housed. Sridevi
and Bhudevi serve at his feet, while sages Markandaya and Bhrigu occupy a
prominent place on either side. In this sanctum sanctorum, the presiding deity
Sri Nindra Narayana Perumal is in a standing posture and faces east.
Inscriptional remains
in the temple dated 1032 CE refer to the presiding deity as Ramaswamy. A lake
referred to as a Devendhra Vallaba Per-eri existed by the side of the temple. A
shrine was erected for installing the image of the Singha Perumal (Narasimha)
in the reign of Maravarman Kulasekhara Pandya (13th Century CE).
பொயு 12 ஆம் நூற்றாண்டு, பாண்டிய மன்னர்
குலசேகர பாண்டியரின் 9 ஆம் ஆட்சி ஆண்டு, நின்ற நாராயணப் பெருமாள் கோயில் முன்மண்டபம் வடசுவரில் உள்ள கல்வெட்டு,
பாண்டிய மன்னன் குலசேகரன் பெயரால் 'குலசேகரச்
சதுர்வேதிமங்கலம்' என்னும் சதுர்வேதி மங்கலம் ஒன்று
உருவாக்கப்பட்டதைப் பதிவு செய்கின்றது.
காலம் மற்றும் ஆட்சி
ஆண்டு அறிய இயலாத, நின்ற நாராயணப்பெருமாள்
கோயில் மகாமண்டபம் வடசுவரில் உள்ள கல்வெட்டு, கருநிலக்குடி
நாட்டிலமைந்திருந்த திருப்பனையூர் பொற்குடி புதுக்குளம், இருஞ்சோணாட்டு
குமணமங்கலம், சேந்தமங்கலம் ஆகிய ஊர்களின்
நான்கெல்லைகளுக்குட்பட்ட நிலப்பகுதிகள் ஒரூர் ஒரு புரவாக்கப்பட்டுப் பழம்பெயர்
நீக்கிப் பனையூர் பால் புகலோக கண்டநல்லூர் என்ற பெயரால் அழைக்கப்பட்டுள்ளன.
இப்புகலோக கண்ட நல்லூர் நத்தத்திலே குடியிருப்போராகவும், நிலம்
முன்னுடையோராகவும் இருந்தவர்களுக்குப் பழம் பெயர் தவிர்த்து, குலசேகரச்சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரால் பங்கும் மனையும் எழுதிப்
பிரமதேயம் செய்யப்பட்டமையாகப் பதிவு செய்கின்றது.
பொயு 12 ஆம் நூற்றாண்டு, பாண்டிய மன்னர்
குலசேகரரின் 13+5 ஆம் ஆட்சி ஆண்டு, நின்ற
நாராயணப்பெருமாள் கோயில் வடக்குச் சுவர் கீழ்வரிசை – 2ல்
உள்ள கல்வெட்டு, திருத்தங்கால் திருமலை மேல் நின்றருளுகின்ற பெருமாளுக்கு,
ஆரி நாட்டுப் பிரம்மதேயமாக இருந்த பராக்கிரம சதுர்வேதிமங்கலத்துச்
சபையார் தர்மதானமாக நிலக்கொடை அளித்ததைப் பதிவு செய்கின்றது.
பொயு 11 ஆம் நூற்றாண்டு, சோழ அரசர்
குலோத்துங்க சோழரின், நின்ற நாராயணப்பெருமாள் கோயில் முதல்
திருச்சுற்று மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு திருத்தங்கல் திருமலை மேல் நின்று
அருள் புரிகின்ற பெருமாள் கோயில் இறைவன் அம்மவாசை தோறும் எழுந்தருளப்பட்டு
புறப்பாடு செய்யப்பட்டுள்ளார். இந்தப் புறப்பாட்டிற்கான செலவினங்களுக்காக வேண்டி
ஒன்றரையே ஒருமா நிலம் நிலக்கொடையாக வழங்கப்பட்டிருந்துள்ளதைப் பதிவு செய்கின்றது.
நின்ற நாராயணப்
பெருமாள் திருக்கோயில் மேற்குப்புற கருவறை அதிட்டானத்தில் உள்ள 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தைச் சார்ந்த கல்வெட்டு பாடல்
கல்வெட்டாக உள்ளது. தோற்கருவி துளைக்கருவி ஒலி இசை நுட்பம் பற்றியறிந்தவனைப்
பற்றிக் குறிப்பிடுகின்றது.
கல்வெட்டு வாசகம்….
1. முத்தியா
வித்தத்
2. து
னாத உற்பத்தியே
3.தென்று
கேள்க தம் (மு)
4. ன்
தமக்கும் நாதத்து
5. ண்டகையும்
விதிமுரையும்
6. குறிப்பும்
அறிந்தவன் தோல்கருவியும்
7. துளைக்கருவியும்
பரதமும் அணைய
8. கண்டவரை
நிலையும்
Only 6 inscriptions are given here, and the rest are
given at the end of this article.
Ref
- Excavations of Archaeological Sites in Tamil Nadu (1969-1995).
- Virudhunagar District Inscriptions Volume I & II.
LEGENDS
When Maha Vishnu travelled to Srivilliputhur to
marry Andal, it had become night when he reached this place. So he stayed at
this place and decided to start the next day. Since Maha Vishnu stayed at this
place, this place is called Thiruthangal (Stay – தங்கல்).
The argument between all three Devis, Sridevi,
Bhoodevi, and Neeladevi, over who was the favourite of Maha Vishnu. To prove her
status, Sridevi came down to this Earth and did a penance on Maha Vishnu.
Satisfied with Sridevi’s devotion and penance, Maha Vishnu gave darshan to
Sridevi and accepted her as his favourite.
Hence, the place is called “Thiruthangaal”. Thiru means Goddess
Sridevi, and Thangaal means stayed. (Stay – தங்கல்). A place where Sreedevi stayed.
As per the legend, the demon Banasuran, after
getting a boon, started giving trouble to the Devas. Devas sought the help of Sengala
Thayar. Sengamala Thayar did a prayer to Maha Vishnu to kill Banasura.
Satisfied with the prayer, Maha Vishnu killed the Bansuran.
It is believed that Anirudha, the grandson of Lord
Krishna, and Usha, the daughter of the demon Banasura, got married at this place.
POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are
conducted on Aani Brahmotsavam, Aadipooram, Vasanthotsavam, Puratasi Garuda
Seva, Chitra Pournami, Krishna Jayanthi, Pavithra Utsav, and Navarathri, Karthikai
Deepam, and Vaikunda Ekadasi.
TEMPLE TIMINGS
The temple will be kept open from 06.00 hrs to
12.00 hrs and from 16.00 hrs to 20.00 hrs.
CONTACT DETAILS
The landline number +914652 232801, mobile number
of Dr.Vasudeva Bhattachariar +9199422 02668, +91 9487541111, and mobile numbers
of G.Radhakrishna Iyengar +9194864 61906 and +9163748 13215, may be contacted
for further details.
HOW TO REACH
The temple is on a small Hill. The temple is 450
meters from Thiruthangal, 3.7 km from Sivakasi, 22 km from Srivilliputhur, 36
km from Rajapalayam, 71 km from Madurai, and 103 km from Tirunelveli.
The nearest Railway Station is Thiruthangal.
LOCATION OF THE TEMPLE: CLICK HERE
Inscriptions continued….
பொயு 11 ஆம் நூற்றாண்டு, பிற்கால பாண்டிய
அரசர், சடையவர்மன் குலசேகரரின் 13+1+1 ஆம்
ஆட்சி ஆண்டு, நின்ற
நாராயணப்பெருமாள் கோயில் முதல் திருச்சுற்று மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு,
திருத்தங்கல் திருமலைமேல் நின்றருளுகின்ற பெருமாளுக்கும், பிராட்டியாருக்கும் திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிவந்தங்களுக்காக
வேண்டி, முத்தூற்றுக்கூற்றத்து அந்தனூரைச் சேர்ந்த
உய்யநின்றாடுவாரான காலிங்கராயரின் துணைவியார் சடகோபன் திருமங்கை நிலக்கொடை
வழங்கியுள்ளமையைப் பதிவு செய்கின்றது.
பொயு 11 ஆம் நூற்றாண்டு, பாண்டிய அரசர்,
கோனேரிமை கொண்டானின் 20 ஆம் ஆட்சி ஆண்டு,
நின்ற நாராயணப் பெருமாள் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள
கல்வெட்டு, இக்கோயில் மூலபருஷையரிடம் இறைவனின் நித்திய
பூசைக்காக கொடுக்கப்பட்ட தானத்தைப் பதிவு செய்கின்றது.
பொயு 11 ஆம் நூற்றாண்டு, பாண்டிய அரசர்,
குலசேகர பாண்டியரின் 13 ஆம் ஆட்சி ஆண்டு,
நின்ற நாராயணப் பெருமாள் கோயில் முதல் திருச்சுற்று மேற்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு, திருத்தங்கல் திருமலைமேல் நின்றருள்
புரிகின்ற பெருமாளுக்குச் செங்கழுநீர்த் திருப்பள்ளித் தாமஞ் சாத்தியருள வேண்டி
ஏரிப்பணி செய்வாரின் செலவுக்காக வேண்டி திருமங்கையாண்டாள் என்பவர் வழங்கியுள்ள
நிலக்கொடையினைப் பதிவு செய்கின்றது.
பொயு 11 ஆம் நூற்றாண்டு, பாண்டிய அரசர்,
குலசேகர பாண்டியரின் 9+1, ஆட்சி ஆண்டு,
நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் முதல் திருச்சுற்று
மேற்குச்சுவரில் உள்ள கல்வெட்டு, திருத்தங்கல் மலைமேல்
நின்று அருள் புரிகின்ற பெருமாளுக்குச் சோழ மண்டலத்திலுள்ள திருவழுந்தூரைச்
சேர்ந்த வில்லி திருமடமுடையான் என்பவர் திருநந்தா விளக்கொன்றுக்காக நிலக்கொடை
வழங்கியுள்ளதை பதிவு செய்கின்றது. இந்நிலம் சீதேவிப் பேரேரிக்கு மேற்கில் அமைந்திருந்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் குன்றக்காற்பாறைக் கோல் என்ற அளவுகோல் நிலமளக்கப்
பயன்படுத்தப்பட்டுள்ளமை இக்கல்வெட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
பொயு. 13 ஆம் நூற்றாண்டு, முதாலாம் சுந்தர
பாண்டியனின், 11 ஆம் ஆட்சி ஆண்டு, நின்ற
நாராயணப் பெருமாள் திருக்கோயில் முதல் திருச்சுற்று மேற்குச் சுவரில் உள்ள
கல்வெட்டு திருத்தங்கல் மலைமேல் நின்று அருள்புரிகின்ற பெருமாளுக்குத்
திருத்தங்கலைச் சேர்ந்தவரும் குண்டின்ய கோத்திரத்திற்குரியவருமான புருஷோத்தமன்
என்பவர், திருநொந்தா விளக்கொன்றுக்காக வேண்டி திருத்தங்கலின்
தென்பிடாகையான குடிவேலியில் கிணறும், நிலமும்
வழங்கியுள்ளார். குன்றக் காற்பாறைக்கோல் என்ற அளவுகோல் நிலமளக்கட் பயன்படுத்தப்பட்டுள்ளது
என்ற தகவலைப் பதிவு செய்கின்றது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு பாண்டியர் பிறகால பாண்டியர் சடைய வர்மன்
குலசேகரனின், 3+2 ஆம் ஆட்சி ஆண்டு, நின்ற
நாராயணப் பெருமாள் கோயில் முதல் திருச்சுற்று மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு,
திருத்தங்கலில் மலைமேல் நின்றருள் புரிகின்ற பெருமாளுக்கு ஆட்கொண்டி
என்பவரும் திருமகள் என்பவரும் முறையே 13, 12 ஆடுகளை
வழங்கியுள்ளமையைப் பதிவு செய்கின்றது.
பாண்டிய அரசர்
குலசேகரத்தேவரின் 9 ஆம் ஆட்சி ஆண்டு,
அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் வடபுற
அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு, திருத்தங்கல் மலைமேல்
நின்றருள் புரிகின்ற பெருமாளுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையைப் பதிவு செய்கிண்றது.
பொயு 9 ஆம் நூற்றாண்டு முற்கால பாண்டியர் முதலாம் வரகுண
பாண்டியரின் 38 ஆம் ஆட்சியாண்டு, நின்ற
நாராயணப் பெருமாள் கோயில் சன்னதி முன்மண்டப வெளிப்புர நுழைவாயிலுக்கு அருகே
தரையில் தளமாகப் பாவப்பட்டுள்ள கல்லில் உள்ள கல்வெட்டு, அளற்று
நாட்டு நல்லூர்க் கிழவன் வைத்த நந்தா விளக்கு ஒன்றை எரிக்க 100 சாவா மூவா பேராடுகளை காவலன் தேவன் காடன் மற்றும் வேலங்காடன் என்ற இருவர்
பெற்றதைப் பதிவு செய்கின்றது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு, பாண்டிய அரசர்
கோனேரிமை கொண்டானின் 7 ஆம் ஆட்சி ஆண்டு, அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் அர்த்தமண்டபம்
தென்சுவரில் உள்ள கல்வெட்டு, இவ்வூர் இறைவர்க்கும், சந்திபூசைக்கும் மற்றும் உள்ளகோயில் வைஷ்ணவர், நம்பு
செய்பவர்களுக்குமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தானத்தைப் பதிவு செய்கின்றது. இத்தானத்தை
மழவராயன் எனும் மந்திரி அரசனுக்குச் சொல்லி நடப்பித்ததாகக் குறிப்பிடுகின்றது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலத்தைச் சார்ந்த தொடக்கம் இல்லா, அருள்மிகு
நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் அர்த்த மண்டட தென் சுவரில் உள்ள கல்வெட்டு,
முன்கல்வெட்டில் சொல்லப்பட்ட ஆணையினை நடப்பித்த செய்தியினைப் பதிவு
செய்கின்றது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு, பாண்டிய அரசர்
சடாவர்மன் குலசேகரனின் 2 ஆவது ஆட்சி ஆண்டு, அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் மகா மண்டபத் தெற்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு சோறன் உய்ய நின்றாடுவான் குருகுலத் தரையன் தன் பேரால்
அமைத் பூசைக்கு ஆனையூரில் விலைக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட நிலத்தாநத்தை பதிவு
செய்கின்றது. மேலும் சுந்தர பாண்டியன் சந்திக்குரிய
பூசைக்குமாக வழங்கப்பட்ட வரி முதலியவற்றைத் தெரிவிக்கின்றது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலத்தைச் சார்ந்த, அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் மகாமண்டபம் தென்சுவரில்
உள்ள கல்வெட்டு திருமல்லி நாட்டுத் தடங்கண்ணிச் சிற்றூர் குருகுலத் தரையன்
இத்திருத்தங்கல் கோயில் திருமண்டபம் முதலான கோயில்ப் பகுதிகளை கருங்கல்லால்
அமைத்தான். அத்துடன் சுந்தரபாண்டியன் பூசைக்குத் தேவையான நித்தம் நானாழிப்
பிரசாதம் மற்றும் திருத்தம்பலமும் கொடுத்ததைத் தெரிவிக்கின்றது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு, பிற்கால பாண்டியர்
சுந்தர பாண்டியனின் 4+1, ஆட்சி ஆண்டு, நின்ற
நாராயணப் பெருமாள் கோயில் அர்த்தமண்டபம் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, கோவிலில் ராமாயணம் வாசிக்க திருவரங்க தேவன் குன்றெடுத்தான் எனும் இருவர்
நிலம் தானம் செய்தததைப் பதிவு செய்கின்றது.
பாண்டிய மன்னர்
குலசேகரரின் 6 ஆம் ஆட்சி ஆண்டு நின்ற நாராயணப்
பெருமாள் கோயில் அர்த்த மண்டபம் வடக்கு பகுதியில் உள்ள கல்வெட்டு, திருத்தங்கல் திருமலை மேல் நின்றருள் புரிகின்ற பெருமாள் திருக்கோயிலில் திருச்சுற்றில்
திருவரங்கதேவன் திருமண்டபம் என்ற பெயரில் மண்டபம் அமைக்கப்பட்டு நரசிங்கப்
பெருமாளுக்கு அமுதுபடி சாத்துபடி உள்ளிட்டு வேண்டும் நித்த நிவந்தங்களின்
செலவினங்களுக்காக வேண்டி நிலக்கொடையும் வழங்கப்பட்டிருந்தமையைப் பதிவு செய்கின்றது.
பாண்டிய மன்னரின்…… 11 ஆம் ஆட்சியாண்டு, நின்ற நாராயணப்
பெருமாள் கோயில் அர்த்தமண்டபம் தெற்கு பகுதியில் உள்ள கல்வெட்டு, கருநிலக்குடி நாட்டு ஆனையூரான தென்னவன் சிற்றூர் திருத்தங்கல் திருமலைமேல்
நின்றருள்கின்ற பெருமாளுக்குரிய தேவதான இறையிலியாக இருந்துள்ளது. இதன்படி வெட்டப்பட்டிருந்த கல்வெட்டின்படியே கடமையிறுப்பதை உறுதி
செய்யும் வாசகமாக இக்கல்வெட்டு காணப்படுகிறது.
பாண்டிய மன்னர்
சுந்தர பாண்டியரின் 17 ஆம் ஆட்சி ஆண்டு,
நின்ற நாராயணப் பெருமாள் கோயில் அர்த்தமண்டபம் தெற்கு பகுதியில்
உள்ள கல்வெட்டு திருத்தங்கலில் மலைமேல்
நின்றருள் புரிகின்ற பெருமாளுக்கு திருவீதி திருப்பணி செய்யும் பணியை
மேற்கொண்டிருப்பவர்களுக்கு மடப்புறமாக திருத்தங்கலில் தேவேந்திர வல்லபப்
பேரேரிக்குக் கிழக்கிலிருந்த சீதேவி வாய்க்காலுக்குத் தெற்கிலிருந்த நிலம் கொடையாக
வழங்கப்பட்டமையைப் பதிவு செய்கின்றது.
பாண்டிய மன்னர்
குலசேகரரின் 2 ஆம் ஆட்சி ஆண்டு, நின்ற நாராயணப் பெருமாள் கோயில் அர்த்தமண்டபம் தெற்கு பகுதியில் உள்ள
கல்வெட்டு, திருத்தங்கல் மலைமேல் நின்றருள் புரிகின்ற
பெருமாளுக்கு உய்ய நின்றாடுவானான குருகுலத்தரையன், ஆனையூரான
தென்னவன் சிற்றூரிலிருந்த நிலத்தை வழங்கியமையை இக்கல்வெட்டு பதிவு செய்கின்றது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு, பாண்டிய மன்னன்
முதலாம் சுந்தர பாண்டியனின் 7 ஆம் ஆட்சி ஆண்டு, நின்ற நாராயணப் பெருமாள் கோயில் அர்த்தமண்டபம் தெற்கு மண்டபத்தில் உள்ள
கல்வெட்டு, திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் சுந்தரபாண்டியனின்
பெயரால் சுந்தர பாண்டியன் சந்தி ஏற்படுத்தப் பட்டிருந்தமையைப் பதிவு செய்கின்றது.
இச்சந்திக்காக வேண்டி சிற்றூருடையான் சோறனுய்ய நின்றாடுவானான
குருகுலத்தரையன் ஆனையூருக்கு உட்பட்டிருந்த நிலங்களின் ஒரு பகுதியை ஊரிலிருந்து
பிரித்து தென்னவன் சிற்றூர் என்னும் பெயரால் திருத்தங்கல் கோயிலுக்கு
வழங்கியிருப்பதாகக் கருதலாம்.
பொயு 13 ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னர் சுந்தர பாண்டியரின் 12
ஆம் ஆட்சியாண்டு, அருள்மிகு நின்ற நாராயணப்
பெருமாள் திருக்கோயில் மகாமண்டபம் கிழக்குச் சுவர் தென்பாதியில் உள்ள கல்வெட்டு,
சுந்தரபாண்டியனின் அமைச்சராக இருந்த குருகுலத்தரையன் என்பவன்
இந்நின்ற நாராயணப் பெருமாள் கோயில் கருவறை அர்த்தமண்டபம் மகாமண்டபம் ஆகியவற்றைக்
கற்றளித் திருப்பணியாக்கி மன்னன் பெயரால் சுந்தரபாண்டியன் சந்தி நடக்க ஆனையூரில்
தென்னவன் சிற்றூரைத் தானமாக வழங்கியதைப் பதிவு செய்கின்றது.
அருள்மிகு நின்ற
நாராயணப் பெருமாள் திருக்கோயில் மகாமண்டபம் கிழக்குச் சுவர் வெளிப்புறச் சுவரில்
உள்ள கிரந்தக் கல்வெட்டு, ஸ்ரீ தனம்
வழங்கப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டாகத் தோன்றுகிறது.
பாண்டிய மன்னர்
ஸ்ரீவல்லபனின் 22+1 ஆம் ஆட்சியாண்டு, நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் மகாமண்டபம் கிழக்குச் சுவர்
வெளிப்புறம் வடபகுதியில் உள்ள கல்வெட்டு, திருத்தங்கல்
மூலபருஷையார் தங்களூருக்குரிய காசு கடமையை நெற்கடமையையும் திருத்தங்கல் மலைமேல்
நின்றருளுகின்ற பெருமாளின் திரு மாற்றுள்ளிட்டு வேண்டும் நிபந்தங்களுக்காக வேண்டி
கோயிலின் ஸ்ரீவைஷ்ணவர்களிடமும் பண்டாரிகளிடமும் இறுத்துவர வழிவகை
செய்யப்பட்டிருந்தமையைக் இக்கல்வெட்டு பதிவு செய்கின்றது.
பொயு 13 ஆ நூற்றாண்டு, பாண்டிய மன்னர்
சுந்தர பாண்டியரின் 4+1 ஆம் ஆட்சியாண்டு, நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் மகாமண்டபம் கிழக்குச் சுவர்
வெளிப்புறம் வடபகுதியில் உள்ள கல்வெட்டு, குண்டின
கோத்திரத்தைச் சேர்ந்த திருவரங்க தேவன் குன்றெடுத்தானும் இவன் தம்பி திருவரங்க
தேவனுய்யக் கொள்வானும் திருத்தங்கல் மலைமேலுள்ள நின்ற நாராயணப் பெருமாள்
கோயிலுக்கு இரண்டு மா நிலத்தை வழங்கியுள்ளனர். வைகாசித் திருவிசாக நன்னாளில்
பால்மாங்காயமுது செய்யவும் இறைவன் மண்டபத்தே ஏறியருளித் திருமஞ்சனம் செய்யவும்
வேண்டி இந்நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளதாக பதிவு செய்கின்றது.
பாண்டிய மன்னர்…… 13+6 ஆம் ஆண்டு, அருள்மிகு நின்ற
நாராயணப் பெருமாள் திருக்கோயில் முதல் திருச்சுற்று வடக்குச் சுவரில் உள்ள
கல்வெட்டு, இக்கோயில் இறைவர்க்கும் நித்தியபூசைக்கும்
மற்றும் உள்ள தேவைகளுக்குமாக நிலமும் நிலத்தால் வந்த வரிகளும் இக்கோயில்
சபையாரிடம் தானமாகக் கொடுக்கப்பட்ட செய்தியினைப் பதிவு செய்கின்றது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு, பாண்டிய அரசர்
சுந்தர பாண்டியனின் 20+1 ஆம் ஆட்சி ஆண்டு, அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் திருச்சுற்று வடக்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு, இவ்வூர் இறைவர்க்கு ஒரு நந்தா விளக்குக்காக
நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டதைப் பதிவு செய்கின்றது. இத்தானத்தைச் செய்தவன்
திருவரங்கச் செல்வனான திருமலையாழ்வான் என்பவனாவான்.
பாண்டிய அரசர்
கோனேரிமை கொண்டானின் 9 ஆம் ஆட்சியாண்டு,
அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் திருச்சுற்று
மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, இவ்வூர் இறைவர்க்கு
திருமடைப்பள்ளிப் புறமாக சடையன் குறிச்சியிலுள்ள நிலங்கள் தானமாக வழங்கப்பட்தைத்
தெரிவிக்கின்றது.
பாண்டிய அரசர்
சடாவர்மன் குலசேகரனின், 13+1+1, ஆட்சி ஆண்டு,
அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் முதல் திருச்சுற்று
மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, இவ்வூர் இறைவர்க்கு ஒரு
நந்தாவிளக்கு எரிப்பதற்காக இவ்வூரினனான முற்கலன் நாராயணனான சங்கர நாராயணன் என்பன்
நிலமும் கிணறு ஒன்றையும் நந்தா விளக்குப்புரமாகத் தானம் வழங்கிய செய்தியினைப்
பதிவு செய்கின்றது.
பொயு 927, ம்ஆண்டு சோழ அரசர் முதலாம் பராந்தகரின் 20 ஆம் ஆட்சியாண்டு, அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள்
திருக்கோயில் திருச்சுற்று தெற்கு மூலைத் தூண் கல்வெட்டு, இவ்வூர்
இறைவர்க்கு மல்லி நாட்டுக் காடனூர் கொற்றங்கிழவன் என்பவன் கொடுத்த திருநந்தா
விளக்கு எரிப்பதற்கு கொடுக்கப்பட்ட ஆடு
முப்பத்தொன்று என்பதைப் பதிவு செய்கின்றது.
பாண்டிய மன்னர்
சுந்தர பாண்டியனின் 8 ஆம் ஆட்சியாண்டு,
நின்ற நாராயணப் பெருமாள் கோயில் முதல் திருச்சுற்று மேற்குச்
சுவரில் உள்ள கல்வெட்டு, திருத்தங்கல் மலைமேல் நின்றருள்
புரிகின்ற பெருமாள், ஆவணித் திருநாளில் நெய்யாடலுக்கு
எழுந்தருளும் போது ஏற்படும் செலவினங்களுக்காக வேண்டி ஆத்திரையன் குன்றெடுத்தான்
ஸ்ரீவல்லபன் என்பவர் வழங்கிய 6 மா நிலக்கொடையைப் பதிவு
செய்கின்றது.
பாண்டிய மன்னர்
குலசேகரரின், 13+11 ஆம் ஆட்சியாண்டு, நின்ற நாராயணப் பெருமாள் கோயில் முதல் திருச்சுற்று மேற்குச் சுவர்
உட்பக்கம் உள்ள கல்வெட்டு, திருத்தங்கல் திருமலைமேல்
நின்றருள் புரிகின்ற பெருமாளுக்கு திருநாந்த விளக்கிற்காக வேண்டி நாராயணன்
என்பவருடைய துணைவியரான கொற்ற நாச்சியார் என்பவர் ஐம்பது ஆடுகளைத் தானமாக
வழங்கியுள்ள செய்தியைப் பதிவு செய்கின்றது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு, பாண்டிய மன்னர் குலசேகரரின்,
13+8 ஆம் ஆட்சியாண்டு, நின்ற நாராயணப்
பெருமாள் கோயில் முதல் திருச்சுற்று மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, திருத்தங்கல் மலைமேல் நின்றருள் புரிகின்ற பெருமாளுக்குச் சந்தியாதீபம்
ஒன்றெரிப்பதற்காக வேண்டி வெண்பு நாட்டிலிருந்த பிரம்மதேயமான ஸ்ரீவானவன் மகாதேவி
சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த பொன்னாழிக் கையன் என்பவருடைய துணைவியார்
உய்யவந்தாளச் சாணி என்பவர் 13 சாவா மூவா பேராடுகளை
வழங்கியதைப் பதிவு செய்கின்றது.
பொயு 1289 ஆண்டு, பாண்டிய மன்னர்
குலசேகரரின், 21 ஆம் ஆட்சியாண்டு, நின்ற
நாராயணப் பெருமாள் கோயில் முதல் திருச்சுற்று வடக்கு உள்பகுதியில் உள்ள கல்வெட்டு
திருத்தங்கல் மலைமேல் நின்றருள் புரிகின்ற பெருமாளுக்கு விளக்கெரிக்க வேண்டி 20 சாவா மூவா பசுக்கள் திருக்காமணிச் சடையன் குறிச்சி ஆயன் அரசனிராமனிடம்
வழங்கப்பட்டிருந்தமையைப் பதிவு செய்கின்றது.
பொயு.1235 ஆம்ஆண்டு பாண்டிய அரசர் சுந்தர பாண்டியரின் 17+1+1,
ஆட்சி ஆண்டு, நின்ற நாராயணப் பெருமாள் கோயில்
முதல் திருச்சுற்று வடக்குச் சுவர் மேற்பகுதியில் உள்ள கல்வெட்டு, இவ்வூர் இறைவர்க்கு திருநந்தா விளக்கெரிக்க மற்றும் நிலம் தானமாகக் கொடுத்த
செய்தியினைப்பதிவு செய்கின்றது.
பொயு 13 ஆம் நூற்றாண்டு, நின்ற நாராயணப்
பெருமாள் கோயில் பரமபத வாசல் நிலைக்கல்லில் உள்ள கல்வெட்டு, ஆனந்தூரைச்
சேர்ந்த புற்றிடங் கொண்டானான திருச்சிற்றம்பலப் பிரியன் என்பவர் நின்ற நாராயணப்
பெருமாள் கோயிலிலுள்ள பரமபத வாசல் நிலைக்கல்லைச் செய்வித்துள்ளமையைப் பதிவு
செய்கின்றது.
கொல்லம் 1060, பொயு 4885 ஆம் ஆண்டு, அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் சுக்கிரவாரக் குறட்டின்
கூரையில் உள்ள (விதானம்) கல்வெட்டு, இச்சுக்கிரவாரக் குறடு, நாகலாபுரம் ஜமீன்தாரால் செய்தளித்ததைப் பதிவு செய்கின்றது.
பொயு 1113 ஆம் ஆண்டு, பாண்டிய மன்னர்
சடாவர்மன் ஸ்ரீவல்லபனின் 23 ஆவது ஆட்சி ஆண்டு, அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில் செங்கமலவல்லித் தாயார்
சன்னதியின் நுழைவு வாயிலின் இடதுபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு இடையிடையே
சிதைந்துள்ளது. இக்கோயில் மூலபருஷையார் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கின்றது.
கம்மவார் கல்யாண
மண்டபத்தில் உள்ள 20 ஆம் நூற்றாண்டைச்
சார்ந்த கல்வெட்டு, திருத்தங்கல் மலை மீது நின்றருள் புரிகின்ற
பெருமாள் கோயிலில் சந்நிதியில் முகமண்டபம் மணவாள மாமுனி சன்னதி மரக்கொட்டகை
மண்டபம் கருட மண்டபம் ரெங்கநாதர் சந்நிதி முக மண்டபம் கோவிலுக்குள் தள வரிசை போன்ற
பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட ஏழு தர்மகர்த்தாக்களடங்கிய அறக்கட்டளையை செங்கமல
நாச்சியார்புரத்தைச் சேர்ந்த லால்குடி கோவிந்த நாயுடுவின் மகன் இராமானுஜதாஸ்
அமைத்ததைப் பதிவு செய்கின்றது.
Ref
1. Virudhunagar District Inscriptions Volume I &
II.
--- OM SHIVAYA NAMA---


















No comments:
Post a Comment