The visit to these Hero stones installed in front of
Sri Amabalabvanar temple at Manur, Tirunelveli was a part of “Tirunelveli
Heritage Walk”, organised by the CultureCircuits, on 11th to 13th
July 2025. Thanks to Balakumaran GS and Krishnakumar TK for arranging this walk.
This Hero stone group consists of 4 Hero Stones, of which two have
inscriptions. The Hero stones and inscription details are given below. Thanks to Saravanamanian PA.
நடுகற்தொகுப்பு...
முற்காலப்
பாண்டியர்களின் (முதல் இராஜசிம்ம பாண்டியன், பராந்தக
நெடுஞ்சடையன்) அமைச்சர்களாகவும் படைத் தலைவர்களாகவும் விளங்கிய, வைத்திய குலத்தவர் என அழைக்கப்பட்ட, சிற்றரசர்கள்
ஆட்சி செய்த பகுதி களக்குடி நாடு எனவும் அவர்களின் தலைநகரம் கருவந்தபுரம் (இன்றைய உக்கிரன் கோட்டை) என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது.
திருநெல்வேலி
மாவட்டத்து இன்றைய மானூர், உக்கிரன் கோட்டை ஆகிய
பகுதிகளே அன்றைய களக்குடி நாடாக இருந்துள்ளது. சைவம், வைணவம்,
சமணம் ஆகியவை இவ்விடத்தில் சிறப்புற இருந்துள்ளன. பராந்தக நெடுஞ்சடையன்
களக்குடியில் அரண்மிகு பெரிய மாளிகைகள் கட்டியதையும் பராந்தக வீரநாராயணன்
இவ்விடத்திலே உக்கரனை வென்றதையும் பாண்டியர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. இந்த
தொகுப்பில் உள்ள நடுகற்கள் அப்போரில் இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்டு இருக்கலாம்.
இந்த நடுகற்தொகுப்பில் நான்கு நடுகற்களும், அதில்
இரண்டு நடுகற்கள் கல்வெட்டுக்களுடனும் மற்ற இரண்டு நடுகற்கள் கல்வெட்டுக்கள்
இன்றியும் காணப்படுகின்றது.
நடுகல் - 1
இந்த நடுகல்
தொகுப்பில், முதலில் உள்ள நடுகல், ஏறத்தாழ முற்றிலும் புதைந்த நிலையில் தலையின் ஒரு பகுதி மட்டுமே காணப்படுகின்றது.
நடுகல் – 2
இந்த தொகுப்பில்
இரண்டாவதாக உள்ள நடுகல்லில், வீரன் வலது கையில்
கேடயமும், இடது கையில் வாளும் காணப்படுகின்றது. இடுப்புவரை புதைந்து காணப்படும் இவ்வீரன் போரின் போது இறந்துபட்டு
இருக்கலாம் என்பதை வாளும் கேடயமும் காட்டுகின்றது. மேலும்
வீரனின் வலது விலாப்பகுதியில், அம்பும் காட்டப்பட்டு
இருக்கின்றது. இடது
கையில் வாள் காட்டப்பட்டு உள்ளதால், இவ்வீரன் இடதுகைப்
பழக்கும் உள்ளவனாக இருக்கலாம்.
இந்த நடுகல்லில்
வாளின் அருகே வட்டெழுத்து எழுத்துகளில் இரு வரிக் கல்வெட்டு காணப்படுகின்றது. இந்த நடுகல் வீரன்
கையில் வாளேந்தியவாறு காணப்படுகிறது. கல்வெட்டு வாசகம் வீரனின் பெயராக இருக்கலாம்.
“..மதிவாகம்
யாசகன்”
நடுகல்- 3.
நடுகல் தொகுப்பின் மூன்றாவது
நடுகல்லில் உள்ள வீரன் திரிபங்க நிலையில், கையில்
ஒரு ஆயுதத்தைத்(?) தாங்கியவாறு காட்டப் பட்டுள்ளான். மேலும் இடுப்புக்கு கீழ் ஆடை அதில் குறுவாள் ஒன்றும் செருகி
காணப்படுகின்றது. தலையில், கொண்டை இடது
புறமாகவும், காதில் குண்டலங்களுடனும். காட்டப்பட்டு
இருக்கின்றார். இவ்வீரனின் இடது வயிறு மற்றும்
விலாப்பகுதியில் எதிரியின் அம்பு தைத்து காணப்படுகின்றது.
12-13ம்
நூற்றாண்டு எழுத்தமைதியுடன் தமிழ் கல்வெட்டு இந்நடுகல்லின் மேற்புறத்தில் மூன்று
வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. வளைஞ்சிலன் இளையன் என்பான் ஊர் அழியாது காக்கும்
பொருட்டு தன்னுயிர் நீத்தான் எனும் தகவலைத் தருகிறது.
“ஶ்ரீ
இவ்வூரழியா
மல் பட்ட வளைஞ்
(சி)ல னி(ளை)யாந் காடந்”
நடுகல் – 4.
இந்த நடுகல் வீரனின்
தொடை வரை புதைந்து காணப்படுகின்றது. வீரனின்
இடது புறமாக கொண்டை, கழுத்தில் அணிகலன்கள், இடுப்பில் ஆடையுடனும் வீரன் காணப்படுகின்றான். இடது
கையில் வில் மற்றும் வலது கையில் அம்புடனும் காட்டப்பட்டு இருக்கின்றான் கல்வெட்டு
எதுவும் காணப்படவில்லை. எதிரியின் அம்பு, வீரனின் இடதுபுற இடுப்பில் தைத்து காணப்படுகின்றது.
Ref
Mr. Saravanamanian.
HOW TO REACH
The temple is about 500 meters away from
Sankarankoil, Puliangudi, to Tirunelveli.
The temple is about 17.3 km from Tirunelveli
Junction, 40.5 km from Sankarancoil, 52.8 km from Tenkasi, and 57.5 km from
Kovilpatti.
The nearest Railway Station is Tirunelveli
Junction.
LOCATION OF THE HERO STONES: CLICK HERE
--- OM SHIVAYA NAMA---








No comments:
Post a Comment