Tuesday, 19 May 2020

Amareswara Temple / Tri Thasar Temple, Kanchipuram, Kanchipuram District, Tamil Nadu.

Maha Shivaratri 2020 – Kanchipuram  Shiva Temples  Visit- 25
21st February 2020.
The visit to this Amareswara Temple on Nimanthakara Othavadai St, Periya Kanchipuram was a part of the 2020 Maha Shivaratri Temples Visit, on 21st February 2020. After Sri Masathan Thali Temple’s Visit, our next destination was this temple.  Thanks to Babu of Kanchipuram for providing me the Daylight photographs and Alexander Rea’s pictures which are taken in 1909 CE. I also extend my sincere thanks to Veerasamy Ayya for providing details on Tri Thasar. How Alexander Rea mentions Lord Shiva’s name as Tripurantaka Eswarar is not known.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னாள் வரை அழகுடன் இருந்த இக்கோவில் புனரமைப்பு என்ற பெயரில் இப்போது தனது அடையாளத்தை இழந்து இருக்கிறது. 1909 இல் Alexander Rea என்ற தொல்லியல் நிபுணர் காஞ்சிபுரத்தின் பல கோவில்களை ஆவணப்படுத்தியுள்ளார், அவருடைய பல்லவ கட்டிடக்கலை கட்டுரையில் இக்கோவிலின் மொத்த சிற்ப தொகுதியையும் காட்டியுள்ளார், பல்லவர்களால் கட்டப்பட்ட இக்கோவில் கச்சபேஸ்வரர் கோவில் அருகில் உள்ள ஒரு தெருவில் உள்ளே உள்ளது, அங்கே இருப்பவர்களுக்கு அமரேஸ்வரர் கோவில் என்று மட்டும் தான் தெரியும், இந்த கோவிலின் பழைய பெயர் யாருக்குமே தெரியாது, பல்லவர்களின் சிறப்பான சோமாஸ்கந்தர் கருவறை, ராவண அனுகிரக மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவம், கங்காதர மூர்த்தி, மகிஷாசுர மர்த்தினி சிற்பங்கள் இருந்து இருக்கின்றன. இதுவும் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது. தேவர்கள் அனைவரும் காஞ்சிக்கு வந்து இக்கோயில் சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாற்றில் கூறப்படுகிறது. Thanks to Babu Mano for the details in Tamil. 


The 18th Century Sivagnana Swamigal had written this temple’s sthala purana in Kanchi Puranam. The sthala purana describes the war between Devas and Asuras. As per the advice of Ambal, Devas worshiped Lord Shiva, and the details are given in the legend. The sthala purana is reproduced as given below...

26. அமேரசப் படலம் (971 -991)
தெத்தேயெ வரிவண்டினம் முரலமதுச் சிந்துந்
தொத்தேர்மலர்ப் பொழில்சுற்றுசு வாயம்புவஞ் சொற்றாம்
முத்தார்துறை யதன்கீழ்த்திசை முப்பத்துமுக் கோடிப்
புத்தேளிரும் வழிபாடுசெ யமேரச்சரம் புகல்வாம்

தேவாசுரயுத்த வரலாறு
வரிவண்டின் முரலாமண மாலைக்கட வுளரும்
முரிநுண்ணிடைத் திதிமைந்தரும் முன்னாள் ஒருகாலத்
தெரிமண்டி யெனச்சீறி யெதிர்த்துப்பொர லுற்றார்
நரிபேய்கொடி சேனங்கழு குழலுங்கள ஞாங்கர்
சேனம் - பருந்து 
              ----------------------
தேவர்கள் சிவபூசை செய்தல்
என்று கூறினள் மறைந்தனள் உலகமீன் றெடுத்தாள்
அன்று மாலயன் தொடக்கமாம் அமரர்க ளெல்லாம்
நன்று நம்மறி விருந்தவா றென்றுளம் நாணிச்
சென்று சேர்ந்தனர் கச்சியந் திருநகர்த் தேத்து. 

திரித சேச்சரப் பெயரினாற் சிவக்குறி இருத்திக்
கரிய கண்டைன அருச்சைன கரிசற வாற்றிப்
பெரிது மாமிடல் பெற்றனர் வரங்களும் பெற்றார்
அரிவை பாகனுக் கினியதாம் அத்திருக் கோயில்

Moolavar : Sri Amareswara also called as Tri Thasar ( திரி தசர் )

Some of the salient features of this temple are...
The temple is facing east in an area of 30 Cents. Stucco images of Shiva and Murugan and a Maharishi in a sitting Posture are on the Rajagopuram. Also, Ambal is in a standing posture on the right and  Indra is standing on the left. Balipeedam and Rishabam with mandapam are immediately after the entrance arch. Moolavar is of Dhara Linga with 16 flat surfaces. Ambal Abirama Sundari is in a separate sannidhi. Somaskandar bas-relief is on the back side wall of Moolavar. In Koshtam Vinayagar, Dakshinamurthy, Maha  Vishnu, Brahma and Durgai. These Koshta murtis are made of sandstone and are different from the regular features, that only be seen in this temple.

Sculptures are in the form of the bas-relief of Ravana Lifting Kailash and Lord Shiva’s Dance are in the inner Mandapa. In prakaram Balipeedam, Nandhi, Vinayagar, Chandikeswarar and Sri Valli Devasena Subramaniar.

HISTORY
As per the architecture the original temple might have been built during 8th Century Pallava King Narasimha Varma-II ( 700 – 729 CE ) popularly known as Rajasimha. The temple was built with brick and pillars & sculptures are with sandstone. As per Alexander Rea, who documented this Pallava period Shiva temple in 1909, this temple had the sculptures of Oorthuva Thandava Murthy, Ravana Anugraha Murti, Gangadhara Murthy, Mahishasura Mardini panels. Now there is no trace of these sculptures and were damaged completely in the name of renovation.  Lord Shiva of this temple was also called Tripurantaka Eswarar.

LEGEND
As per the Sthala Purana, with the help of Ambal, the Devas/Amaras defeated Asuras. This made them think that they were superior and become arrogant. To teach a lesson Lord Shiva installed a very small துரும்பு / straw and asked Devas to destroy it. Nobody could succeed. Devas prayed to Ambal to give a solution for this. In turn, Ambal said that all powers and actions are vested with Lord Shiva. So she asked the Devas to go to Kanchipuram and worship Lord Shiva. Hence Lord Shiva is called Amareswara.

திரு வீரமணி அய்யாவிடம் இத்திருத்தல புராண விளக்கம் மற்றும் இறைவனின் பெயர் காரணம் பற்றி வினவிய போது.. அவரின் விளக்கம்.... 

காஞ்சிபுராணம் நூலுள் உள்ள " திருத்தல விளக்கம் " என்னும் பகுதியில் உள்ள விளக்கம் =
அமரேசம்: தேவரும் அசுரரும் பலயுகம் பொருது வெற்றி தோல்வி காணாராயினர். போர் முற்றுப்பெற உமையம்மையார் விரும்பச் சிவபிரானார் சிறிது ஆற்றலை அசுரரிடத்து வைத்துத் திருமால் முதலியோரைத் தோல்வியுறச் செய்தனர். பின்பு அம்மையார் கருத்தாகத் தேவரை வெற்றிகொளச் செய்தனர். வெற்றிக்குக் காரணம் தான் தாமென மயங்கிச் செருக்கிய திருமால் பிரமன் இந்திரன் முதலானோர் முன்பு :யட்சனாக வந்தபெருமானார், துரும்பை நிறுத்தி இதனை எறிய வல்லவர் வென்றவர் ஆவர் எனத் தனித்தனி முயன்று இயலாமையின் நாணிய அத்தேவர் முன்னின்றும் மறைந்தனர். திகைக்கும் தேவர்முன் உமையம்மையார் தோன்ற யாவரும் துதி செய்தனர்.

சிவனருளின்றித் துரும்பையும் அசைக்கமுடியாத நீவிர் தற்போகத்தினால் எழுந்தருளியிருந்த பெருமானைக் காணீர் ஆயினீர். எப்பொருளின் கண்ணும் விளங்கும் எவ்வகை ஆற்றலும் அவனருளிய ஆற்றலே என்னும் உண்மையை மறந்து தருக்கிய நீங்கள் பிழைதீரக் காஞ்சியிற் சிவபூசனை புரிமின்என அருளி மறைந்தனர். அம்மையார் அருளியவாறு காஞ்சியில் திரிதசர் ஆயதேவர்திரிதசேசரைத் தாபித்துப் பூசித்துப் பெருவலி பெற்றனர். இக்கோயில் பெரிய காஞ்சிபுரம் அமரேசர் கோயில் தெருவில் உள்ளது.

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 629 ஆம் பாடல் திரிதசர் என்ற சொல் பயின்றுளது
தேவர்கள் என்ற பொருளில் முப்பத்து முக்கோடி தேவர்கள்.

629. த்ரிதஶேஶ்வரி ( त्रिदशेश्वरी – சுமார் 30 தேவர்களுக்கு ஈஶ்வரி )
ஜீவர்களின் வாழ்வில் நான்கு தசைகளாம் பால்யம், கௌமாரம், யௌவனம், வார்த்தக்யம் என்பவற்றுள் மூன்றாவது தசையான யௌவனம் என்னும் தசைமட்டும் உள்ளவர்கள் தேவர்கள். அமிருதம் பருகியதால் அவர்கள் தோற்றம், வளர்ச்சி, தேய்வு, அழிவு என்ற நான்கு நிலைகளில் அழிவு இல்லாதவர்கள். 8 வஸுக்கள், 11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 2 விஶ்வே தேவர்கள் என்று 33 தேவர்கள், அதாவது சுமார் 30 பேர்கள் என்று குறிப்பதே இந்த நாமமாகும். இன்னொரு விதமாகப் பார்த்தால் விழிப்பு, கனவு, தூக்கம் என மூன்று நிலைகளும் மூன்று தசைகளாக் கருதினால், த் ரி+தஶ+ஈஶ்வர என்று இந்த நாமம் மேலும் பொருந்துகிறது.
திரிதசரை ஆள்பவள் தேவியாம் அன்னை
திரிதசை மூன்றில் செறிவாள் – புரித்தாள்
அரிதாம் அழியாமை ஆர்க்கவம ரர்க்கு
பரிந்துபா லிக்கும் பரை

திரிதசர் – தேவர்கள்; திரிதசை– விழிப்பு,கனவு, உறக்கமெனும் முந்நிலைகள்; ஆர்க்க – நிறைய; புரித்தல் – பூக்கச்செய்தல்
ஆக, திரி தசேச்சரர் என்பது, முப்பத்துமுக்கோடி தேவர்களின் தலைவரான சிவப்பரம்பொருள் என்பதாக விரியும். திரி மூன்று; தசம் பத்து;

TEMPLE TIMINGS
The temple will be kept open between 07.00 hrs to 12.00 hrs and 17.00 hrs to 20.00 hrs.

HOW TO REACH:
The temple is about 1.0 KM from Kanchipuram Bus Stand, 1.5 Km from Kanchipuram Railway station, 28.0 KM from Arakkonam, and 68 KM from Chennai.
Nearest Railway Station is Kanchipuram and Railway Junction is Arakkonam.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE























---OM SHIVAYA NAMA---

6 comments:

  1. அருமை யான பதிவு. தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அரிய தகவல்களுடன் அருமையான பதிவு நன்றி அய்யா.

    ReplyDelete
  3. Absolutely Amazing Post. Thank you for this amazing information!

    ReplyDelete