Monday, 24 July 2017

Mahishamardini and Seshasayee Vishnu Cave, Mahabalipuram / Mamallapuram, an UNESCO World Heritage Site, Chengalpattu District. Tamil Nadu.

... a continuation post to Arjuna's Penance, Mahabalipuram, A Heritage Visit – Part – 5.
8th June 2017.
The Mahishamardini cave consists of a long hall with a triple cell. The facade of this cave shows four pillars and two pilasters. The pillars are polygonal with bulbous cushions. Capital and square abacus. Pillars are supported by squatting lions that rise from the angles of stylobate in the small mandapa projecting from the central cell which is flanked by Dwarapalakas. At either side of the hall are two large panels, representing Seshasayi Vishnu and the other Mahishamardini. The central cell was intended for Shiva Linga and his vahana Rishabam.

MAHISHAMARDINI
Mahishamardini is shown eight-armed, riding her lion, equipped with all weapons and using the bow with its string pulled up to her ear. She is attended by hosts of ganas and Amazon yoginis and is in a war-like posture using the huge club. The umbrellas held over the vanquished and the victor are very suggestive. The contours of the Mahisha- demon have been powerfully delineated and the battle- scene is full of animation, the enthusiasm of the ganas and the dispirited attitude of the Asuras being delightfully contrasted. This is one of the most remarkable representations of Mahishamardini.

அர்த மண்டபத்தில் வலது சுவரில் படைப்பு சிற்பமாக மகிசாசுரனை சம்ஹாரம் செய்பவதை காட்டுகின்றது.  புராணத்தில் கூறப்படும் எட்டு ஆயுதங்களில் ஏழு மட்டும் தான், வில்லை நாணேற்றித் தயாராக இருக்கும் இரு கைகள், மற்ற கைகளில் சங்கு, மணி, சக்கரம் முதலியவற்றைக் காண்கிறோம். இடது தோல் பின்புறம் அம்பறாத்தூளி அம்புகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஒரு அம்பு எய்தப்பட்ட நிலை. எட்டு கணங்கள் தங்களுக்கு இடப்பட்ட பணியைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள். சிற்ப்பத்தில் அவர்களுடைய இயக்கம் தெரிகின்றது.  துர்கையின் தெய்வீகத்தன்மையை தெரிவிக்கும் வெண்கொடையை ஒரு கணம் கையில் ஏந்தி உள்ளது. மற்றொன்று சாமரம் வீசுகின்றது. பலவித ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு இருக்கும் மற்ற கணங்களில் கட்டுடலுடன் ஒரு  பெண் உருவும் காணப்படுகின்றது.

மகிஷாசுரனும் அவனுடைய படை கணங்களின் தோற்றம் போரில் பின் வாங்கும், அதுவும் வேகமாக  முகத்தில் குரோதத்துடன் வெளிக்காட்டும் நிலையை அற்புதமாக செதுக்கப்பட்டு உள்ளது. மகிஷனின் இடுப்பில் இருக்கும் ஆடையின்  நிலயைக் காணும் போது வேகமாக ஓடுவது போலவே தெரிகின்றது. மகிஷனின் கணங்களின் முகத்தில் பீதியையும் துர்கையின் கணங்களின் முகங்களில் மகிழ்ச்சியையும் காணமுடிகின்றது. மகிஷன் கையில் கதையை பிடித்து இருக்கும் தோரணை இன்னும்  போரிட சித்தமாக இருப்பதைக் காட்டுகின்றது. மகிஷனின் எருமை தலையும் மனித உடலும் அற்புதமாகச் சிற்பி செதுக்கி உள்ளார். 
 


SESHASAYI VISHNU
Vishnu on his serpent couch is represented in yoga-nidra and the great calm in this figure is expressly heightened by the fury of Madhu and Kaitabha shown brandishing their weapons. The ayudha-purushas of Vishnu including the beautiful youths Sudarsana ( discus) and Nandaka ( sword), the charming amazon Kaumodaki( club), the dwarfish Panchanjaya ( conch) are all shown first taking the permission of the lord and then proceeding against the demons.

தெற்குச் சுவரில் அரவணை மீது துயிலும் அநந்தசயன விஷ்ணு. இரு கரங்கள் கொண்ட விஷ்ணு ஆதிஷேசன் என்ற 5 தலை பாம்புப் படுக்கையில் சயனித்திருக்கின்றார். வலது கை நீண்டு இருக்க இடது கை மடக்கி வைக்கப்பட்டு உள்ளது. இடது கை கடக முத்திரையில் உள்ளது. தலையும் மார்பும் சற்றே தூக்கி உள்ளன. இடது முழங்கால் சிறிதே மடங்கி இருக்க  மற்ற உறுப்புக்கள் நேராகவே உள்ளன.

விஷ்ணுவின் பாதங்களின் கீழ் அழகிய உருவைக் கொண்ட பூதேவி கூப்பிய கரங்களுடன் காட்ச்சியளிக்கின்றாள். சங்கு சக்கரம், வாள், கேடயம் ஆகியவை ஆயுத புருஷர்களாக இருவர் கீழும்  இருவர் மேலுமாக காணப்படுகின்றனர். கால்களுக்கு அருகில் மது, கைடபன் என்ற இரு அரக்கர்கள் ஏதே சதித் திட்டம் வகுத்துக்கொண்டு இருப்பது போல  உள்ளது. வலது புறத்தில் உள்ளவன் தாக்க திட்டமிட்டுள்ளான். மற்றொருவனின் பின் கை முதுகை ஒட்டி உள்ளது. விஷ்ணு சயனித்து இருந்தாலும் விழித்தே உள்ளது போலக்காணும் உருவம் தன்னிகரற்றது. அவருடைய சாய்ந்த நிலையும் அசுரர்களின் அச்சுறுத்தும் பாங்கும் ஒன்றுக்கொன்று மாறுபாடாக அமைந்திருப்பினும் மொத்தத்தில் நடந்து கொண்டு இருக்கும் நாடகத்தை உணர்த்துகின்றது.

Ref:    1. Mamallapuram by Prof Swaminathan and 
             Translated by KRA Narsaiah
              2. காஞ்சிபுரம் மாவட்ட தொல்லியல் கையேடு


… to be continued Varaka Cave ( II ) Mandapam, Mahabalipuram / Mamallapuram – a Heritage visit Part-7

---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment