Thursday, 20 July 2017

Shore Temple, Mahabalipuram / Mamallapuram, an UNESCO World Heritage Site, Chengalpattu District, Tamil Nadu.

The visit to this Shore Temples at Mamallapuram was a Part of the “Mamallapuram Heritage Visit” under the title – “Known Mamallapuram, Unknown places - தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள்” organized by SASTRA & Chithiram Pesuthada Groups on 19th March 2023.  This is one of the group of monuments of Mamallapuram, a UNESCO Heritage site of Tamil Nadu.


Shore Temples… This temple complex consists of two Shiva Temples namely,  “Kshatriya Simha Pallava Isvara Gruham”, an east facing Temple, “Rajasimha Pallavesvara Gruham”, a west-facing temple, and a Maha Vishnu as Jala Sayana Perumal Temple called “Simha Pallava Vishnu Gruham” in the middle facing east. These temples are built during the Narasimha Varman-II alias Rajasimhan, periods.

கடற்கரைக் கோவில்..மாமல்லபுரம்…. கடலோரத்தில் எழில் ஓவியமாக எழுப்பப்பட்டுள்ள இரண்டு சிவன் கோவில்களையும் ஒரு விஷ்ணு கோயிலையம் உள்ளடக்கிய கடற்கரை கோவில் இரண்டாம் நரசிம்ம வர்மன் என்னும் இராஜசிம்மன் ( கிபி 700-728) காலத்தில் கட்டப்பட்டது. கடல் சீற்றத்தாலும் உப்பு காற்றினாலும் மேலும் சேதம் அடையாமல் இருக்க இந்திய தொல்பொருள் துறை சவுக்கு போன்ற மரங்களை வளர்த்தும், மராமத்து பணிகள் செய்தும் பாதுகாத்து வருகின்றது.


Kshatriya Simha Pallava Isvara Gruham
Shore temple is an example of a masonry temple of Rajasimha’s time. This shrine is called “Kshatriya simha Pallavesvara Gruham”.  Kshatriya simha is the surname of Narasimhavarman–II.

A damaged 16 faces fluted Thara Siva Lingam is at the center of Sanctum Sanctorum ( may be installed at a later date ). Somaskandar sculpture is on the back side wall of the sanctum sanctorum. The main shrine has an inner Prahara and a mukha mandapa. A Circumambulation path is around the sanctum sanctorum. One of the specialties of this temple is the presence of Vinayagar or Ganesha first time in a Pallava temple. In addition to that, there are panels of Mahisasura Mardhini, Arjuna’s dhabas, and some of the unidentifiable panels on the sanctum sanctorum wall.


The adhistanam is of prati bandha adhistanam with Padma jagathy, three patta Kumudam, and Vyyalavari. The 4-tier vimana (total 5 tiers, which includes the adi tala ) is somewhat narrow. The Prastaram consists of valapi, kapotam, and Vyyalavari. Hara elements are found on all the talas. A Dravida sigaram is on the Vimanam. There are usually rampant Lions at intervals dividing the carved panels of the outer walls of the temple, of which many are almost obliterated by the destructive agency of continuous spray of seawater.

“சத்திரியசிம்ம பல்லவேஸ்வர கிருஹம்” எனும் சிவன் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. நான்கு தளத்துடன் கூடிய உயரமான விமானம் மற்றும் நுழைவாயிலில் சிறிய கோபுரத்துடன் ( காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலைப் போன்று ) பத்ம ஜகதி, முப்பட்டை குமுதம், விய்யால வரியுடன் கூடிய பிரதிபந்த அதிட்டானத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. விமானம் ஆதி தளத்துடன் 5 நிலைகளாக, ஹார அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. சிகரம் திராவிட கட்டிடக்கலையின் அடைப்படையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கருவறையில் சேதம் அடைந்த பதினாறு பட்டைகளைக் கொண்ட தாராலிங்கமும், ( பிற்காலத்தச் சார்ந்ததாக இருக்கலாம் ) கருவறை சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பமும் காணப்படுகின்றது. இக்கோயிலின் மேலும் ஒரு சிறப்பு, வினாயகரின் சிற்பம் பல்லவர் கால கோயில்களில் முதல்முறையாக காணப்படுவது தான்.

கருவறை சுவர்களில், மகிசமர்த்தினி அர்ஜுனன் தபசு, மேலும்  இன்னவென்று அறிய முடியாத சிற்பத்தொகுதிகள் காணப்படுகின்றன. இவற்றை பாயும் சிங்கத்தூண்கள் பிரிக்கின்றன. இவை இடைவிடாத கடல் நீராலும், உப்புக்காற்றாலும் மிகவும் சேதம் அடைந்துள்ளன.



Rajasimha Pallavesvara Gruham
Adjoining this Vishnu temple and facing west is a shrine similar to but smaller than the main shrine dedicated to Sri Shiva, called Raja Simha Pallavesvara Temple.  The temple has a sanctum sanctorum and a porch. Dwarapalakas are on both sides of the entrance to the porch. 

The sanctum sanctorum is on a pada bandha adhistanam with three patta Kumudam. The prastaram consists of valapi, kapotam and vyyalavari.  A 3 tier Dravida Vimanam is on the sanctum sanctorum. The Hara elements are on each tala. The Somaskandar bas-relief panel is on the back side wall of the sanctum sanctorum.

மேற்கு நோக்கிய இராஜசிம்ம பல்லவேஸ்வர கிருஹம் எனும் கோயில் மூன்று தள விமானத்துடன் காணப்படுகின்றது. பாதபந்த அதிட்டானத்தின் மீது கருவறை கட்டப்பட்டுள்ளது. விமானம் ஆதி தளத்துடன் 3 நிலைகளாக, ஹார அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. சிகரம் திராவிட கட்டிடக்கலையின் அடைப்படையில் ஆறுபட்டையாக காணப்படுகின்றது. துவாரபாலகர்கள் கருவறையின் முன்பு நிலைக்காலில் காணப்படுகின்றனர். கருவறையின் பின் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பம் காணப்படுகின்றது.


 The front Temple  

Simha Pallava Vishnu Gruham
Behind the main Shiva Temple is a rectangular cell without superstructure, wherein is enshrined an image of Seshasayi Vishnu. On the outer floor are the Chozha inscriptions referring to this as a Vishnu temple. This Shrine is called by different names like Jala Sayana alias Kshatriya Simha Pallavesvara, Pallikondarulia Deva, and Raja Simha Pallavesvara. Pallikondaruliya deva refers the image of Seshasayi Vishnu. The Sanctum Sanctorum is on a pada bandha adhistanam with three patta Kumudam. The sanctum sanctorum is rectangular in shape, without a superstructure above the prastaram. Moolavar Seshasayi Vishnu is chiseled on the mother rock itself. The beauty of the Seshasaye Vishnu is a little less compared to the Pallava sculptures. Gajendra Moksha and Krishna killing asura in the form of horse sculpture panels are on the sanctum walls.

It is believed that the present Sri Thalasayana Perumal temple in the middle of the Mamallapuram Village is one of the 108 Divya Desam and the same was constructed in the 13th Century by the Telugu Chozha King Thikkanakanda Goplan.  But this Jalasayana Perumal was carved out of natural boulder during Narasimha Varman’s period and this present structure was built keeping Jalasayana Perumal as Moolavar during the Rajasimhan Period. From the Pallava Grantha inscriptions at the entrance of the sanctum sanctorum, this temple was called “Narapathi Simha Pallava Vishnu Gruham” and Narapathi Simha Pallava is another title of RajaSimhan.  In the book Avanthi Sundarika written by Thandi, it is mentioned that a sculptor called “Lalithalayan” rectified the hands of Jalasayana Perumal during Rajasimhan’s period. Hence we may presume that the Jalasayana Perumal Temple on the seashore is the Divya Desam sung by Thirumangai Alwar.
  

இரு சிவன் கோயில்களுக்கு இடையே கிழக்கு நோக்கி கட்டப்பட்ட கோயில் தான் “சிம்ம பல்லவ விஷ்ணு கிருஹம்” என அழைக்கப்பட்ட மகா விஷ்ணுக்கான கோயில். காலத்தால் அழிவுற்று, தற்போது அடித்தளம் மட்டும் எஞ்சியுள்ளது. இக்கோயிலின் நீள்சதுர கருவறையில் கிடந்தகோலத்தில் திருமால் சேவை சாதிக்கின்றார். காலத்தால் முந்தைய திருமால் சிற்பம் தாய் பாறையினின்று செதுக்கப்பட்டதாகும். சோழர் கால கல்வெட்டு ஜலசயன பெருமாள் என்றும், பள்ளி கொண்டருளிய பெருமாள் என்றும் அழைக்கின்றது.

The Shrine in between two vimanas is the Jalasayana Perumal Shrine

திவ்யதேசம்... ?
தெலுங்குச் சோழ மன்னன் திக்கணகண்ட கோபாலன் காலத்தில் (கி.பி.13ம் நூற்றாண்டு) எடுக்கப்பெற்ற ஸ்தலசயனப்பெருமாள் கோயிலும் மாமல்லபுரம் நகர பகுதியின் மத்தியில் உள்ளது. அந்த தலசயனப்பெருமாள் கோயிலே திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் செய்த கோயிலாகக கருதுகின்றனர்

ஆனால் முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்திலேயே கடலலைகள் மோதுமாறு மாமல்லபுரத்தில் கடற்கரைக்கு அருகே ஜலசயனப் பெருமாளை உருவாக்கி இருக்கின்றனர். பின்னர் அங்கு திருமாலுக்கும், சிவனுக்கும் ராஜசிம்மனால் கட்டுமானக்கோயில்கள் எடுக்கப்பட்டது. பள்ளி கொண்டருளிய திருமால் என்று சோழர்கால கல்வெட்டுக்களால் அறியப்படும் ஜலசயனப் பெருமாள் ஆலயத்தின் முகப்பு வாயிலில் உள்ள ‘‘நரபதி சிம்ம பல்லவ விஷ்ணு கிருஹம்என்ற பல்லவ கிரந்த கல்வெட்டால் இவ்விஷ்ணு ஆலயம் நரபதிசிம்மன் என்னும் ராஜசிம்மனின் பட்டப்பெயரால் எடுக்கப்பெற்றது என்பதையும் அறிகிறோம்.

ராஜசிம்மன் காலத்தில் லலிதாலயன் என்ற சிற்பி ஒருவன் அத்திருமேனியின் கைப்பகுதியை சீர்செய்தான் என்ற குறிப்பு தண்டி எழுதிய அவந்தி சுந்தரிகதா என்னும் நூலில் உள்ளது. திருமங்கை ஆழவார் காலத்தில் தற்போதுள்ள தலசயன பெருமாள் கோயில் கட்டப்படவில்லை என்பது உறுதியாகின்றது. நடமாடும் பெருமானொடு திருமாலும் திகழும் கடல்மல்லை தலசயனம் எனத் திருமங்கை மன்னன் குறிப்பிடுவது இத்திருக்கோயில்தானோ...?

THE PRAHARA SCULPTURE DETAILS
Three Balipeedas and a base of Dwajasthamba, are on the west side of the temple. Why they are installed in one place, that too on the back side of this temple complex, the reason is not known. The Balipeedas has the inscription and details are given in the History and Inscriptions column.
 






Tripurantaka… Around the Prahara there are a number of loose sculptures. One such loose sculpture is Shiva as Tripurantaka with Vishnu as an arrow. Maha Vishnu’s image is shown as the tip of the arrow. Shiva is in a sitting posture keeping his right leg folded and left leg on the ground.
  

Thirimukha Ekapada murti… This Shiva sculpture is on the side of the Pillar before Balipeedas with three heads, Maha Vishnu, Shiva, and Brahma with one leg. He is shown with 6 hands, holding various weapons like trishul, snakes, etc,. The lower right hand is in abhaya hastam and the left hand is in kadi hastam.

கடல்மல்லையில் பிரபந்தம் பாடிய திருமங்கையாழ்வார் ‘‘உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றானை...’’ என்று பாடியது இத்திருவுருவத்தினை கண்டுதானோ என எண்ணத் தோன்றுகிறது.


Nagaraja…. Nagaraja’s bas-relief sculpture is opposite to the Thirimukha Ekapadamurti. A Snake hood is shown above the head. Nagaraja is with 4 hands. The lower right hand is in abhaya hastam and the left hand is in kadi hastam.


Durga Lion…. A large sculpture of the Durga Lion is in the outer Prahara facing west with goddess Durga seated on the right hind leg of the Lion. Mahishasuramardini sculpture is inside the niche of the Lion’s chest. At the foot of the pedestal on which the Lion is seated a headless couchant deer.


Mahishasuramardini

Mini Shiva Shrine with well...  On the north side of the temple complex, there is a miniature Shiva shrine like Neerazhi mandapa, a well, and a Varaha sculpture,  about 4 feet below the ground level. In the mini shrine niche, sculpture of Shiva, on the Rishabam. In, the Varaha sculpture, the Varaha is in digging the earth posture ( may be connected to the Lingothbava Purana). On the peedam of the Varaha, Rajasimha Pallava’s, titles are inscribed on three sides.

கடற்கரை கோயிலின் வளாகத்தின் வடக்கு பகுதியில், அரைவட்ட வடிவில் ஒரு புஷ்கரணி, கிணறு, நீராழி மண்டம் அதன் மாடத்தில் சிவன் ரிஷபத்தின் மீது அமர்ந்துள்ள காட்சி மற்றும் ஒரு வாராகமும் தரைதளத்தின் கீழே சுமார் 4 அடி ஆழத்தில் காணப்படுகின்றது.  

வராகம் (பன்றி) ஒன்று பூமியைத் தோண்ட முற்படும் கோலத்தில் காட்சியளிக்கின்றது ( லிங்கோத்பவர் புராணத்தின் தொடர்பாக இருக்கலாம் ). அதன் பீடத்தின் மூன்று புறங்களிலும் ராஜசிம்ம பல்லவனின் பட்டப் பெயர்கள் பல்லவ கிரந்த கல்வெட்டுகளாகக் காணப்பெறுகின்றன.






An expansive Prahara / courtyard partly surrounded by an unfinished enclosure along a row of Rishabas, Shiva as Kiratharjuna fights with Arjuna for Pasupada ashthra, Dakshinamurthy, etc.,. Most of the panel sculptures on the Temple walls and separate panels, Lion Pillars on the Temple walls of Sanctums are beyond recognition due to erosion, by sea water particles.

HISTORY AND INSCRIPTIONS, MAMALLAPURAM SHORE TEMPLE
The name Mamallapuram was derived from the title of Narasimhavarman –I, also called Mamallan, who ruled between 630 to 670 AD. It was an old port city. The shore temple is part of the UNESCO World Heritage Site of Mamallapuran in Tamil Nadu. This temple was built between 700–728 AD, by  Rajasimhan alias Narasimha Pallava-II, After Tsunami in the year 2004,  a dike wall was constructed to avoid direct spraying of seawater on the temple structure.

Rajasimha’s Devanagari & Grantha inscription is on the east-facing Temple adhistanam. This inscription was identified in the year 1912, and published in Epigraphia Indica Volume 29, by Rangacharya. This inscription helped to identify Rajasimha who constructed the temple and his Meikeerthi/Titles. Some of the titles are not available in other inscriptions. (Thanks to Sankaranayaranan G). The details of the inscription are……

திருவுண்டாகட்டும் இணையற்றவனும் உலகிற்கே அணியானவனும் களங்கமற்றவனும் உலகில் நிலவைப் போன்றவனும், எதிரிகளை கசக்கியவனும், இணையற்ற வலிமையுடையவனும் குலத்திற்கே திலகத்தைப் போன்றவனுமானவனை எந்த மன்னர்கள் வணங்குகிறார்களோ அவர்கள் இன்பமுடையோர்.

கபடமற்றவன், பலவித நீதியுடையவன் பிறரால் வெல்லப்பெறாதவனும் ஒரே அரசனும், பிறைசூடிய பெருமானைத் தலையணியாகச் சூடியவனும் வியக்கத்தக்கவனும், பேரிடியும் பேரரசர்களாலும் தாங்கவொண்ணாதவனுமான அந்த அதியந்தகாமனை அண்டிய உலகோர் தமது விருப்பம் நிறைவேறியதைப் போல மகிழ்வர்.

திருவுடைய ராஜஸிம்ஹன் போரில் வெல்பவன் திருவைத் தாங்கியவன் பலவித விற்களை உடையவன் ஒரே வீரன் சிவனைத் தலையணியாகப் பூண்டவன் அவன் உலகை வெகுகாலம் காக்கட்டும்.

திருவுடைய வில்லை உடையவனும் கூற்றுக்கே கூற்றானவனும் கூற்றை அழித்தவளின் திருவடி போற்றுபவனும் அழகனும் போரில் பீமனையொத்தவனும் நற்பன்புகளுக்கு இருப்பிடமானவனுமானவன் வெல்கிறான்

(மன்னர்களே), திருவின் கொழுநனும் பெருஞ்சினமுடையோனும் போரில் வீரனும் விளங்கச்செய்பவனும், நிலையானவனும், உயர்ந்த ராமனையொத்தவனும் அர்ஜுனனுமானவனை வணங்குங்கள்.

பொருட்களை உள்ளபடி காண்பவனும் எதிரிகளுக்கு மல்லனும், மாமல்லனும் முக்கண்ணனின் பக்தனும் நண்பனும் அரசர்களின் சிங்கமானவனுமானவனை மன்னர்கள் வணங்குகின்றனர்.

இங்கு ராஜஸிம்ஹனுக்குத் தரப்பெற்ற பெயர்களில் சந்த்ரார்த்தசேகர சிகாமணி மற்றும் சிவசூடாமணி ஆகிய பெயர்கள் ஈசனின் உருவத்தை அவன் தலையால் தாங்கியிருக்க வேண்டும். என்கிற கருத்தைத் தருகின்றன. மல்லையில் உள்ள மற்றொரு கல்வெட்டும் சிரஸ்ஸரஸி சங்கர என்று குறிப்பிடுவதும் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது. ( முனைவர் திரு சங்கர நாராயணன் அவர்கட்கு நன்றி  )

Inscription on the Balipeedas.  ( SII – Volume, Pallavas No 198 ).. 
In the courtyard on the sides of balipeedam, there are inscriptions, which speak about the beauty, qualities, valor, and piety of Rajasimha ie, Narasimhavarman– II. The inscription is written in Sanskrit and one of these verses is identical to the last verse of the  Kanchi Kailasanathar Temple.

ABSTRACT
Records an eulogy of the king to whom all kings are said to have made obeisance. ‘The world of men having, obtained this king is happy as if it has obtained its desire’. Mentions the following epithets of the king: Apratima, Avanibhtsana, Akalanka, Dharanicandra, Arimardana, Atulabala, Kulatilaka, Atyantakama, Aparajita, Candrardhastkhara-Sikhamani, Candagani, Udayacandra, Rajasimha, Ranajaya, Sribhara, Citrakarmuka, Ekavira, Sivacidamani, Kalakala, Abhirama, Ranabhima, Gunalaya, Srivallabha, Abhimana, Ranavira, Yuddharjuna, Narendrasimha.

Rajaraja-I’s 25th reign year inscription records the endowment of creating a Nandavanam to Jalasayana Devar for the same Lands and Gold was gifted.  
Location                    : On the south base of the Shore temple.
King                         : Rajarajal
Date                         : 985-1014 CE; 25th  regnal year (1010 CE ).
Language and script  : Tamil & Tamil

Remarks:
It records a resolution (vyavasthai) made by the middle-aged citizens (Nagaram) and the village administrators (perilamani) of Mamallapuram which met in the flower garden to the south of the temple of Jalasayanadevar (Shore temple) in the presence of Pudukkudaiyan Ekadiran Aimbadenman, who was the settlement officer of the Amur kottam. Tiruvelarai Muvayirattu-erunrruvan, the karanam of this town, who worships the holy feet (of the god), wrote this contract according to the orders of the middle-aged citizens.

கல்வெட்டு இராஜராஜனின் மெய்கீர்த்தியுடன் துவங்குகிறது. மாமல்லபுரத்து பேரிளமணியும் (ஊர் நிர்ணகிகள்). நகரத்தாரும் இணைந்து ஐலசயனதேவர் கோவிலுக்கு தெற்கே பூந்தோட்டம் அமைக்க நிலம், வீட்டுமனை மற்றும் பொன் போன்றவற்றை தானமாக கொடுத்தனர். இத்தீர்மானம் ஆமூர் கோட்டத்தின் குடியேற்ற அதிகாரியாக இருந்த புதுக்குடையான் ஏகாதிரன் ஐம்பதென்மன் என்பவர் முன்னிலையில் செய்யப்பட்டதாக இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது இச்செய்தியை மாமல்லபுர நகரத்தைச் சேர்ந்த கரணத்தான் திருவடிகள் மணிகண்டனான திருவெள்ளறை முவாயிரத்து எழுநூற்றுவன் என்பவர் கல்வெட்டில் எழுதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Another Rajaraja-I’s 26th reign year Inscription records the gift of land and gold to the three temples
Location                   : On the north base of the Shore temple.
King                         : Rajaraja-l
Date                         : 985-1014 CE; 26th reginal year (1011 CE).
Language and script  : Tamil & Tamil

Remarks:
The inscription, which is unfortunately mutilated, mentions three temples, two of which were called after and consequently by Pallava kings. The first of these two is Jalasayana or Kshatriyasimha-Pallava-Isvara-deva. The second temple is Rajasimha-Pallava-Isvara-deva and the third temple is Pallikondaruliya-deva. The inscription seems to record a gift of gold by the middle-aged citizens (Nagaram) and the village administrators (perilamant Mamallapuram. Mamallapuram anagaram of Amur nadu and Amur kottam

கல்வெட்டு இராஜராஜனின் மெய்கீர்த்தியுடன் துவங்குகிறது. க்ஷத்திரிய சிம்ம பல்லவ ஈஸ்வரர் கோயில் அல்லது ஜலசயனர் கோயில், ராஜசிம்ம பல்லவ ஈஸ்வரர் கோயில், பள்ளிகொண்டருளிய கோயில் போன்ற கோயில்களுக்கு மாமல்லபுரத்தில் உள்ள நகரத்தாரும், பேரினமணியும் (ஊர் நிர்வாகிகள்), பத்தொன்பது கழஞ்சு பொன்னும், நிலத்தையும் தானமாக வழங்கியதாக இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. மாமல்லபுர நகரம், ஆமூர் நாட்டில் ஆமூர் கோட்டத்தின் ஒரு பகுதி என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழ்பகுதியில் உள்ள கல்வெட்டு சிதைந்துள்ளது.

Balipeeda
Balipeedas

Ref:
  1. Article on this temple in Sarasvatam by Dr Sankaranarayanan G.
  2. A Book on Mahabalipuram by Archaeological Survey of India
  3. A book on Mamallapuram by Prof S Swaminathan.
  4. Article by Facebook group VVS
  5. South Indian Inscriptions – SII Volume – XII, Pallavas.
LOCATION OF THE SHORE TEMPLE: CLICK HERE



---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment