Friday, 21 July 2017

The Five Monolithic Temples / The Five Rathas, an UNESCO World Heritage Site, Mahabalipuram / Mamallapuram, Chengalpattu District, Tamil Nadu. – A HERITAGE VISIT

 8th June 2017.
This 8th-century group of monuments is hewn out of solid rock to form five free-standing monolithic temples. These temples/rathas are associated with the five characters, the Pandavas of the historical epic Mahabharata without any basis. These are excavated during the reign of Narasimhavarman-I.


பஞ்சபாண்டவ ரதங்கள்.
வட தெற்காக உள்ள இரு தொடர்க் குன்றுகளில் செதுக்கப்பட்ட பஞ்சபாண்டவ ரதங்கள் என்ற 5 ரதகோவில்கள் மேலிருந்து கீழாக எவ்வித தவறும் நேராமல் செதுக்கப்பட்ட கோவில்கள். ஓரு ஒழுங்கு முறையின்றி சிதறிக் கிடப்பதைப் போன்று  இருக்கின்றது. ஏதோ ஒரு பெரிய திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டு இருக்கப்பட வேண்டும். முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.  குன்றுகளை பல விதங்களில் செதுக்கி ஒன்றுபோல மற்றொன்று இல்லாது முற்றிலும் மாறுபட்ட அமைப்புகளில் செய்யப்பட்டது. இந்த மாறுபட்ட அமைப்புகள் அடிபடையில் குன்றுகளைக் குடைவித்த பெரும் கற்சிற்பங்களே ஆயினும் பிற்கால கட்டிட அமைப்பின் முன்னோடிகளாக, அவற்றின் சரித்திரத்தை சரியாக அறிந்து கொள்ள உதவுகின்றன.

அறிஞர்கள் இவற்றை ஒவ்வொரு இந்து கடவுளுக்கும் உரியதாக கூறுகின்றனர். இவைகள் துர்கை, சிவா, விஷ்ணு, முருகன் ஆகிய கடவுளர்களுக்காக இருக்கலாம் என்று கருதுகின்றனர். திரெளபதி ரதத்தில் மட்டும் கருவறையில் கொற்றவையின் சிற்பம் இருக்கின்றது. தேவியின் அடியே இரு அடியார்களுள் ஒன்று அரிகண்ட சிற்பமாக உள்ளது. தன் தலையை தானே வெட்டி கொற்றவைக்கு பலி கொடுப்பதைப் போன்று…

தர்மராஜ ரதத்தில் மட்டும் வெளிபுற சுவர்களில் கடவுளர்களின் சிற்பங்கள் உள்ளது. அவைகளில் குறிப்பிடத்தக்கதாக  பைரவனாகச் சிவன், ஹரிஹரன், அர்தநாரீஸ்வரர், நரசிம்ம பல்லவ மன்னன், ஒரு பக்தை, கங்காள மூர்த்தி, பிட்சாடனர், வீனாதார சிவன், நடனகுருவாக சிவ பெருமான், சன்டேசனுக்கு அருளும் சிவன் ( இதை மனித முகத்துடன் உள்ள நந்தியாகவும் இருக்கலாம் என்று கருதுகின்றனர் ), கங்காதரனாக சிவன், கருடனுடன் விஷ்ணு, காலஹரமூர்த்தி, ரிஷபத்துடன் சிவன், கோவில் பாடகர், சிப்பந்தி ( பரிசாரகர்), சமயல்காரர், பூசாரி, அந்தகனைக் வென்ற சிவன், நந்தியுடன் சிவன், காளியமர்த்தனாக கண்ணன், சந்திரன், தட்சினாமூர்த்தி கூறலாம். பீம ரதம் சிகரம் அற்புதமான வேலைப்பாடு.

நகுல சகாதேவ ரத விமானம் கஜபிருஷ்ட அமைப்பில்.யானையின் முதுகைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. பிற்கால சோழர்கள் கட்டுமான கோவில்களில் அமைக்கப்பட்ட மூலவர் கஜபிருஷ்ட விமானங்களுக்கு இது முன்னோடியாக இருக்கின்றது.. இதன் அருகே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட யானை.

DRAUPADI RATHA... 
The first temple from the north is the most elegant of this group with 4 pilasters on four corners and has a niche crowned with makara thorana on three sides and on west two Dwarapalakas on either side of the doorway. In the sanctum the relief of Durga the supreme Goddess in Brahmanism with 4 arms standing on the buffalo- demon’s head. In the same panel two males in worshipping posture with kneeling and a man cutting his head to offer to Durga ( Arikandam or Navakandam ) and 4 dwarf bootha ganas.  In front of the ratha is a standing  Lion representing the vahana to Durga.

கருவறையின் வாயிலில் இரண்டு காவற் பெண்கள் உருவம் காணப்படுகின்றன. ஒருத்தி கையில் வாளையும் மற்றொருத்தி வில்லையும் ஏந்தி நிற்கின்றனர்.
 
கொற்றவை தாமரை மலர் மீது நான்கு கைகளுடன் நின்ற நிலையில் காணப்படுகிறாள். காலருகே இரண்டு அடியார்களில் ஒருவர் மலரால் அர்ச்சித்திடும் நிலையிலும் மற்றவர் வாளால் தன் தலையை அறிந்து கொள்ளும் காட்சியையும் காண்கிறோம்.
 
இக் கருவறை வெளிச் சுவர்களில் கொற்றவையின் சிற்பங்களே செதுக்கப்பட்டுள்ளன.




ARJUNA RATHA..
The next one is the Arjuna Ratha sharing the Draupadi Ratha’s platform. It is a replica of Dharmaraja Ratha. There are carved panels between pilasters on the four sides of Ground and first floors. In the corner panels there are standing Dwarapalakas In the center Lord Shiva is leaning on Nandhi in the south Indira an Airavata ( some experts have the opinion of Skanda or Muruga ) in the east and Vishnu leaning on Garuda in the north. In the other panels are Mithuna figures or Royal Couples. One of the panels on the east side shows a Rishi with his disciples. Alternating elephants and lions are carved all around the base as supports. The west of the temple projects a portico or a mukha mandapam supported by two pillars and two squatting line pilasters. A flight of steps, part of monolithic leads up to mukha mandapam. In the shrine guarded by the Dwarapalakas, there used to be a head crowned by a Trishul, this represents that the temple is dedicated to Lord Shiva. Behind the Ratha is a colossal monolithic Rishabam, which is in a semi-finished state.



BHIMA RATHA...
This temple is in rectangular shape with a country wagon-type curvilinear roof with paddy grass-type carvings. Supported by  4 Squatting lion pillars and 2 pilasters on the west. Since the temple is in rectangular shape the temple might be dedicated to Lord Vishnu.




DHARMARAJA RATHA...
This is the southmost temple highest of this group and has the pyramidal type vimanam with a square base.   The upper part consists of a series of diminishing tiers, each the rows of pavilions above a row of kudus arranged immediately above the brackets of pilaster. The outer wall has niches with carved images. The lower tier of the vimanam has standing figures between which are two pillars and pilasters supported by the squatting lions.

Among the eight sculptured panels on the four corner blocks, one each represents Harihara the inscription in Pallava Grantha characters above reads as Sri Narasimha, the title of Narasimhavarman –I and possibly his son Mahendra II ). Some of the sculptures are Harihara, Brahma, and Brahma Sastha or Skanda as Gurumurthi, three show four-armed Shiva one of them with elaborate matted hair, and another portrays Narasimhavarman himself, with inscriptions in Grantham as Trilokya-Vardhana-Vidhi, Ardhanareeswarar a combination of Shiva and Parvathi,  Gangadhara and another form of Shiva, Vishnu leaning on Garuda,, Shiva dancing on Apasmara one of the earliest representation of Nataraja known as Vrishabhantikamurti,  Shiva resting his hands on the shoulder of Arjuna to whom he presented Pasupata weapon or Chandeswara, Veenadhara Dakshinamurti, Krishna, Shiva carrying sa nake, Natya Dakshinamurti with Bharata or Nandhi in human form, Gangalamurti, Somaskanda with Brahma and Vishnu, etc, The details of the inscription is as follows..

Narasimhavarman-I’s inscription ( SII Volume –XII, No 15 A.R. Nos. 512-528 of 1907).  Like the Mahendravādi and Siyamangalam labels of the Pallava king Mahendravarman I, the birudas of Narasimhavarman-I are engraved in Pallava Grantha characters on the Dharmaraja Ratha. As usual, the list of surnames commences with the actual name of King Sri Narasimha. The birudas give an indication of the king's power, wealth, valor, personal charm, ambition, liberality, etc. The temple is called 'Atyantakama Pallavēśvaragriham' in a label engraved in florid characters resembling those found in the Gaņēśa rock-cut temple in the same village attributable to Paraměśvaravarman-I, it may be presumed that the work on this 'ratha' was continued in the reign of Parameśvaravarman and also in that of his son Rājasimha, considering the architectural evolution noticeable here from the simple rock-cut cave temple of Mahendravarman-I's time. This Ratha is described in the Memoir of the Archaeological Survey of India, No. 33, p. 25 ff.

This is an inscription in Pallava Grantha characters ( SII Volume XII, No 19 ) on the third story of the Dharmaraja Ratha west side, giving the name of the temple as Atyantakāma Pallavēśvara graham. Since the script of this label approximates closely to that of No. 20 below but differs from that of the other labels in the same Ratha, Atyantakama referred to here may be taken as a biruda of Paramēśvaravarman-I. The Dharmaraja ratha is described in the Memoir of the Archaeological Survey of India, No. 33, pp. 25 ff.

தர்மராஜ இரதம்
தர்மராஜ இரதம் என்னும் அத்யந்தகாம பல்லவேச்சுர கிரகத்தில் மூன்று தளங்கள் உள்ளன. மூன்று தளங்களிலும் சிவன், திருமால் ஆகிய தெய்வங்களின் உருவங்கள் பல உள்ளன. கீழிருந்து இரண்டாம் தளத்திற்கு செல்ல படிகள் இல்லை. ஆனால் மூன்றாம் தளத்திற்கு செல்ல இரண்டாம் தளத்தின் கிழக்குப் பகுதியில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படிகளின் புறச்சுவரில் 'மாமல்லன்' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த இரதத்தின் கீழ்த்தளத்தின் நடுவில் உள்ள கருவறையைச் சுற்றி வருவதற்கு வழி அமைக்க முனையப்பட்டு இப்பணி பாதியிலேயே நின்றுவிட்டது. கீழ்த்தளத்தில் நான்கு பக்கங்களிலும் சிம்மத்தூண்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு தளத்திலும் ஒரு கருவறையாக மூன்று கருவறைகள் கொண்ட கோயிலாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தளத்திலும் கிழக்குப் பகுதியாக வலம் வந்தால் அடுத்தடுத்து உள்ள இறை உருவங்களைக் காணலாம்.

இந்த இரதத்தின் கீழ்த் தளத்தில் காணப்படும் இறை உருவங்களாவன 1. அர்த்தநாரி என்றழைக்கப்படும் மாதொருபாகன், 2.சுப்ரமணியர். 3. சிவபெருமான், 4. நரசிம்மனின் உருவம், 5.சிவபெருமான், 6. பைரவர். 7. நான்முகனான பிரமன், 8. அரிகரன் ஆகியோர் உருவங்கள் உள்ளன. இரண்டாவது தளத்தில், 1. கையில் மணி எந்திய அடியார், 2. அடியார், 3. சிவபெருமான், 4. காலசம்கார மூர்த்தி, 5. வீணையுடன் உள்ள பெருமான், 6. சிவன் திருமால் ஆகிய இருவரின் உருவமான அரிகரன். 7. சிவபெருமான் நந்திகேசுவரின் அருகில் நிற்கும் உருவம், 8. கண்ணன், பாம்பின் மீது காளியமர்த்தன. நடன உருவம், 9. சிவனின் உருவம். ஆகியவை காணப்படுகின்றன.



Arthanareeswarar
Bairavar


Hariharan

NAKULA SAHADEVA RATHA...It is an apsidal one with ornamental features as in the Dharmaraja, Arjuna, and other Rathas.  This has also a Porch  or a mukha mandapam supported by two lion pillars. The roof is of Gajabrushta ( elephant’s back ). On the east side is a monolithic elephant.

சகதேவ இரதம்
மேற்கண்ட நான்கு இரதங்களும் ஒரே வரிசையில் காணப்படுகின்றன. இதன் எதிரே தனித்து காண்கின்ற இரதம் சகதேவ இரதம் என்றழைக்கப்படுகிறது. இக்கோயில் இந்திரனுக்காக எடுக்கப்பட்டதாகும். இக்கோயில் தூங்கானை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பை கஜபிருஷ்டம் ( யானையின் பின்பகுதி ) என்று வடமொழியில் அழைப்பர். இதனை விளக்கும் வகையில் இதனருகிலே நின்ற நிலையிலே ஒரு யானை செதுக்கப்பட்டுள்ளது. கருவறை முழுமையாக செதுக்கப்படவில்லை. மேலும் சுவர்களில் சிற்பங்கள் ஏதுமில்லை. கருவறை முன் உள்ள மண்டபத் தூண்களை குத்திட்டு அமர்ந்த சிங்கங்கள் தாங்கி நிற்பது போலச் செதுக்கப்பட்டுள்ளன.
 
Ref:    1. Mahabalipuram by ASI and Mamallapuram by S Swaminathan,
             translated by  Narasayya ).
          2. South Indian Inscriptions Volume -XII, 
          3. காஞ்சிபுரம் மாவட்ட தொல்லியல் கையேடு.



LOCATION OF THE FIVE MONOLITHIC TEMPLES: CLICK HERE
… to be continued Arjuna's Penance, Mahabalipuram, A Heritage Visit. Part – 5.
---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment