Tuesday, 4 April 2023

Adi Varaha Cave Temple ( 7th century ) / ஆதி வராகர் குடைவரைக் கோயில், மாமல்லபுரம் / Mamallapuram, Chengalpattu District, Tamil Nadu.

The visit to this Adi Varaha Rock Cut Cave Temple, one of the groups of monuments of Mamallapuram, a UNESCO Heritage site of Tamil Nadu was a Part of “Mamallapuram Heritage Visit” under the title – “Known Mamallapuram, Unknown places - தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள்” organized by SASTRA & Chithiram Pesuthada Groups on 19th March 2023. 
 

Hara elements on the facia of the cave

Adi Varaha Rock Cut Cave Temple is one of the Living temples of the Mamallapuram group of monuments. This is on the Southwest of Mahishasuramardhini Rock Cut Cave Mandapam. This cave is with a mukha mandapa built at a later date. Usually, this Adi Varaha Rock Cut Cave will be kept open only during pooja hours and the time is unpredictable. Even though the cave was excavated for Shiva, now a stucco image of Maha Vishnu’s one of the avatars Varaha with Bhoodevi is in the sanctum sanctorum. The Ardha mandapam has beautiful Sculpture panels of The Pallava King Simha Vishnu. Mahendra Varman with his wives, Shiva as Gangadhara, Maha Vishnu with Adishesan and Durgai. 

HISTORY AND INSCRIPTIONS
The original Pallava Grantha inscription records this cave was excavated for Shiva and that those who do not follow Ruda ( Siva ) are cursed 6 times. But the latest inscription records this Rock Cut Cave Temple as “Parameswara Varaha Vishnu Gruham”.

The inscription details on the floor…
The Pallava Grantha inscription on the floor of Varaha mandapa states that “Six times Cursed be those, in whose, hearts do not dwell Rudra ( Siva ), the deliverer from the walking on the evil path”.

This inscription ( SII Volume –XII, No 117 ) on the floor of the Varaha Cave Temple, is an imprecatory verse¹ engraved in Pallava-Grantha characters. It is also found in the concluding portion of some of the inscriptions at Mahabalipuram but sometimes with the substitute Vishnuh for Rudrah, cursing those in whose hearts does not dwell Rudra (Siva), the deliverer from the walking on the evil path'. In Mahabalipuram this verse is found at three other places, viz., the Gaņēśa temple and the Dharmaraja and Rāmānuja mandapas. The characters employed in all these cases are of the florid variety.




PC - Bhat

One more inscription, here, belongs specifically to the eighth-century reign of the Pallava king, Nandivarman-II (in his 65th regnal year!). It is in Tamil. What is significant is that it contains the earliest inscriptional reference to the town as ‘Mamallapuram’, in Sanskrit, this would be ‘Mahamallapuram’. ‘Mahamalla’ (‘Great Wrestler’) is the best-known title of the Pallava king, Narasimha-I. The details of the inscription are... 

This inscription ( SII Volume –XII, No 38 ) on two sides of a slab lying in the Courtyard of the Varaha cave Temple, is dated in the 65th  year of Nandibōdhuvarman ( Nandippõttavarman ) who belonged to the Pallava vamśa. It registers a gift of pasture land by Idaivalañjān Kandan, one of the Nagarattar of Mamallapuram, after purchasing it from Kon Kandan, son of Dan Paduvunar, the headman of Kunrattür in Amür kõttam. The villages of Kunrattür and Amür are near Mahabalipuram in the Chingleput district. The regnal year given in this record is the highest known date for Nandivarman- II.

This inscription ( SII Volume-XII, No 116 ) on the portal of niche to the right of the Varaha Cell in the Varaha Cave Temple, engraved in the Pallava-Grantha script, gives the oft-quoted verse enumerating the ten incarnations of Vishnu. 

[Matsya… Kurmo Var]aha[sca] Narasimha (Sca) Vamana[h] |
Ramo Rama[sca] Rama[sca] Buddha[h] Kalki ca te dasa ||

The ten avatars listed are Fish, Tortoise, Boar, Man-lion, Dwarf, Rama (Parasurama), Rama (Ramachandra), Rama (Balarama), the Buddha, and Kalki.

PC ( Bhat )
ஆதிவராக மண்டபம்
மகிஷாசுரமர்த்தினி குகையிலிருந்து தென் மேற்கில் ஆதிவராக மண்டபம் உள்ளது. இக்கோயிலில் இப்போதும் வழிபாடு நடந்து வருகிறது. இக்குகையின் முன்புறத்தில், பிற்காலத்தில் கட்டப்பட்ட முன்மண்டபம் ஒன்று உள்ளது. வழிபாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் வாயிற்கதவு பூட்டப்பட்டிருக்கும். மாமல்லபுரத்தில் முழுமையாகக் குடைவிக்கப்பட்டுள்ள குகைக்கோவில்கள் மிகச் சிலவே, அவற்றில் இக்குடைவரைக் கோயிலும் ஒன்றாகும். இக்கோவில் சிற்ப வடிவமைப்பில் தன்னிகரற்று விளங்குகிறது. இங்கு சில அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வராக மண்டபத்துச் சிற்பங்களிலிருந்து முன்னேற்றம் அடைந்த உருவங்கள் சிலவற்றை இங்கு காணலாம். இரு அரச குடும்பச் சிற்பங்களும் உள்ளன.

புதிராக விளங்கும் கல்வெட்டு ஒன்று, இக்கோயிலின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்துகிறது. ஆனால், நாம் மேலே குறிப்பிட்ட பிற்காலத்தில் கட்டப்பட்ட முக மண்டபம், குடைவரையின் மேலுள்ள ஹார பகுதியை மறைத்து விடுகின்றது. இப்போது கருவறையில் வழிபாட்டில் உள்ள சுதையால் செய்யப்பட்ட பூமாதேவியுடன் உள்ள வராக உருவம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டது.

பிற்காலத்தியக் கல்வெட்டு ஒன்று இக்கோவிலை 'பரமேஸ்வர வராக விஷ்ணு கிருகம்' எனக் குறிப்பிடுகின்றது. எனவே பரமேஸ்வரன் என்ற பட்டம் பெற்ற மன்னன் ஒருவனால் இக்குடைவரைக் கோவில் உண்டாக்கப்பட்டது என்று புலனாகிறது. முகப்பு மண்டபத்தில் மறைத்து கட்டப்பட்ட  சிம்மத் தூண்கள், உள் சுவர்களில் உள்ள சிற்பங்கள் போன்றவை வராக மண்டபத்தை ஒத்துள்ளன.

The Pallava King and the Queens. This panel belongs to Pallava King. The inscription above the panel reads as “Sri Simha Vishnu Pothraathiraja”, hence the King is presumed to be Simha Vishnu. He is sitting on the throne, in a sugasana posture. He looks with a broad chest. His right hand is in Chin mudra, which denotes that he attained atma gnanam. He is with greeda makuda and wearing kundalas in the ears and a mala on his neck. He is not wearing any rich ornaments, which identify him as a King. The Queens are shown with clothes and look elegant. They wear padra Kundalam and KaraNda makudas. One of the Queen is shown with a Chain on her neck. The details of the inscriptions are given below..

This inscription, also in Pallava-Grantha characters ( SII Volume XII, No 18 ) on the top of the niche in the South Wing of the Verandah, of Varaha Cave, gives the name 'Sri Mahendra Pötträthirājan'. The niche contains the standing image of a king accompanied by his two queens. It has been stated above that the king may be identified with Mahendravarman-II.

பல்லவ மன்னனும் ராணியரும்.... ஆதிவராக மண்டபத்து வடக்குச் சுவரில், நாம் காணும் சிற்பத் தொகுதி, பல்லவ மன்னனுடையது. மேலே 'ஸ்ரீ சிம்ஹவிஷ்ணு போத்ராதிராஜ' என்ற கிரந்தக் கல்வெட்டு மூலம், இது சிம்மவிஷ்ணுப் பல்லவன் எனக் கொள்ளலாம்.

உயர்ந்த அரியணையில் மன்னன் அமர்ந்துள்ளான். பரந்த மார்புடன், சுகாசன நிலையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மன்னனின் வலது கை சின்முத்திரையாகக் காட்டப்பட்டுள்ளதிலிருந்து சிம்மவிஷ்ணு ஆன்ம ஞானம் அடைந்தவன் என்பதை காட்டுகின்றது. இடது கை தொடை மீது வைக்கப்பட்டுள்ளது. தலையை கிரீட மகுடம் அலங்கரிக்கிறது. காதில் குண்டலங்களும் கழுத்தில் ஒரு மாலையும் தவிர, ஓர் அரசனுக்குரிய ஆபரணங்கள் எதுவும் சிற்பத்தில் இல்லை.

மன்னன் அமர்ந்திருப்பது அரச சம்பிரதாய முறைப்படி சமநிலையில் உள்ளது. அதேசமயம் ராணிகள் உயிரோட்டத்துடன் காணப்படுகின்றனர். இருவரும் மெலிதான உடைகளை அணிந்திருந்தாலும் அவை ஒரே மாதிரியாக இல்லை. பத்திர குண்டலங்களும், கரந்த மகுடமும் அணிந்துள்ளனர். இடது பக்கத்தில் உள்ள ராணி கழுத்தில் சங்கிலி அணிந்திருக்க, மற்ற ராணியிடம் அதுகூடக் காணப்படவில்லை. இருவருமே மரியாதை கலந்த நாணத்துடன் காட்டப்பட்டுள்ளனர்.


The Pallava King and his Queens  (another Panel)... The inscription above the panel records as “Mahendra Pothrathi Raja”. Hence it is presumed that the King is Mahendra Varman. Ornaments are shown on his neck and ears ( Padra Kundalam). The Queens are on his left side. The King holds the hands of a Queen and points the finger towards the temple. The queens are with shy smiling faces and the Queen’s expressions are expecting the Darshan of the temple. The detailed inscriptions are given below...

This inscription in Pallava-Grantha characters ( SII Volume XII, No 17 ) reads Sri Simhavinna pōtträthirājan It is engraved above a group of sculptures representing a king seated on a cushioned stool and flanked by two standing images of his queens. On a consideration of the paleography of this label, the late Mr. Krishna Sastri concluded that the king represented here was Narasimhavishnu, 'the conqueror of Vatapi'. Subsequent writers have, however, identified him with Simhavishnu, the father of Mahēndravarman-I. But the name Paramēśvara Mahāvarāha Vishnugriha applied to this cave in a record of the Chola king Rājēndradēva, proves clearly that it is connected with Paraméśvaravarman-I. Since a statue of Mahendravarman in a standing posture pointing to his two queens the deity inside the newly excavated cave is also found here, it may be inferred that the work on this cave was started by him. If so Paramēśvaravarman after whom the cave was called, must have completed the work started by his predecessor. The statues found in this cave may, therefore, be taken to represent Narasimha Vishņu, the Conqueror of Vatäpi and his son Mahendravarman-II.

பல்லவ மன்னனும் ராணியரும் (மற்றொரு சிற்பம்).... தென்புறச் சுவரில் உள்ள இச்சிற்பத்திலும் நின்று கொண்டிருக்கும் மன்னன் அதிக ஆபரணங்கள் அணியவில்லை. கழுத்து, மடிப்புகளுடன் அசைவுகளைத் தெரிவித்தபடி காட்சியளிக்கிறது இந்த உருவம். மன்னனின் இரு ராணியரும் இடப்புறம் நிற்கின்றனர். தன் தேவியை இடது கையில் பிடித்துக் கொண்டு வலது கையால் ஆலயத்தைச் சுட்டிக்காட்டும் அரசனின் தோற்றமும் அவனுடைய ஆடை அணிகலன்களின் அழகும் அவன் ஒப்பற்ற பேரரசன் என்ற நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளன.

ராணிகள் முந்தைய சிற்பத்தில் உள்ளது போலவே உடை அணிந்துள்ளனர். இருவரும் நெடிய கிரீடம் அணிந்து, கடிபந்தம், மாலை, ஒரு காதில் பெரிய பத்திர குண்டலம், மற்றொன்றில் மகர குண்டலம் அணிந்துள்ளனர். இச்சிற்பத்தின் மேற் புறத்தில் ஸ்ரீ மஹேந்த்ர போத்ராதி 'ராஜன்' என்ற கிரந்த கல்வெட்டு உள்ளதால், இதில் உள்ள அரசன், மகேந்திரப் பல்லவன் என்று கொள்ளலாம்.

மூவரும் இயல்பான அசைவுகளுடன் காணப்படுகின்றனர். அரசன் முகத்தில் ஆனந்தமும் பக்தியும் காணப்படுகிறது. ராணிகள், தெய்வ தரிசனத்துக்கு மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதும் புலனாகிறது.


Shiva as Gangadhara... This panel is on the north side. Standing in samabanga posture with right hand in abhaya hastam and left hand in Kadi hastam. The top right hand is holding a strand of hair to let the Ganga flow slowly. The Ganga is shown in the form of a lady in Anjali hasta and slowly descending to the earth through the strand of Shiva’s hair. Shiva is wearing a cloth yagnopaveetha and a snake is tied on the hip. Shiva is shown with a beautiful smile on his face.   

கங்காதரனாகச் சிவன்.... வடக்குச் சுவரில் முதலில் காணப்படுவது கங்கைவார் சடையுடன் கங்காதரனாக இருக்கும் சிவன். வலது கை அபய முத்திரையிலும், இடது கை இடுப்பின் மீது வைத்த நிலையிலும், பின் கைகளில் ஒன்று ருத்திராட்ச மாலையைத் தாங்கி நிற்க, மற்றொன்று தலை முடியின் ஒரு கற்றையை இழுத்துப் பிடித்தபடி கீழிறங்கும் கங்கையின் வேசுத்தைத் தணித்து நிறுத்தத் தயாரான நிலையிலும் உள்ளன. ஒரு பெண் உருவத்தில் சுங்கை அஞ்சலி முத்திரையில் ஆகாயத்திலிருந்து கைகூப்பி இறங்குகிறாள். இடுப்பில் உயிருள்ள நாகத்தை அணிந்துள்ள சிவன், வஸ்திரம் எனப்படும். துணியால் ஆன பூணூல் / யஞ்ஞோபவீதம் அணிந்துள்ளார்கம்பீரத்துடனும் புன்னகையுடனும் நிற்கும் சிவனது உருவம் தனியழகு.


Maha Vishnu Maha Vishnu looks majestic with 4 hands, holds Changu and Chakra in the upper hands the lower right hand is in abhaya hastam and the left hand is in kadi hastam. Two devotees are in Anjali hastam in a kneeled position.  An image with a serpent over the head is adjacent to this Maha Vishnu panel. Considering the serpent over his head, he must be Adhiseshan.

மஹாவிஷ்ணு..... ராஜ கம்பீரத்துடன் நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவின் உருவம், கிழக்குப்புறச் சுவரில் காணப்படுகிறது. தாமரையின் மீது நிற்கும் இந்த விஷ்ணுவின் பின்னிரு கைகள் சங்கு சக்கரங்களை ஏந்தியிருக்க, முன் வலது கரம் அபய முத்திரையிலும் இடது கரம் இடுப்பிலும் / கடி ஹஸ்தமாக இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன. முழங்காலிட்டு வணங்கிக் கொண்டிருக்கும் இரு பக்தர்கள். அடுத்துள்ள கோட்டத்தில் ஓர் உருவம் நின்ற நிலையில் இரு கரங்களுடன் காட்டப்பட்டு உள்ளது. தலையின் மீதுள்ள பாம்புப் படத்தை வைத்து, அது ஆதிசேஷன் எனத் தெரிகிறது. ஆதிசேஷனின் உருவம், குறுகிய இடமாயினும் அதற்குள் இவ்வுருவங்கள் அழகாகவும் நேர்த்தியாகவும் செதுக்கப்பட்டிருப்பது அருமையிலும் அருமை.

Maha Vishnu.
 Adhiseshan + Maha Vishnu.
SankaraNarayan Panel

Durgai…. The Durga panel is on the east side wall of the Ardha mandapam. Durga is standing in three banga posture on Mahishasuran’s head with 8 arms, holding various weapons and a parrot. This Durga panel is a little different from the other panels available at Mamallapuram. She is looking slim and elegant. She wears jada makudam, breast bands, yagnopaveetha, ornaments on the neck, and padra Kundala on the ears. Lion and Deer heads are shown on the top corners of the panel. Two devotees are at her feet and two female guardians dressed similarly to Durga are also in the panel.

துர்கை... அடுத்துள்ள கீழைச் சுவரில் கொற்றவையின் உருவைக் காண்கிறோம். தேவியின் தோற்றம், வராக மண்டபத்தில் இருப்பது போலன்றி வேறுபட்டிருக்கிறது. எட்டு கைகள் கொண்டு வசீகரமான தோற்றத்தில் விளங்கும் துர்கை அன்னையின் வலது கரங்களில் ஆழி, கத்தி, மணி, கபாலம் ஆகியவை காணப்படுகின்றன. இடது கரங்களில் சங்கம், கேடயம், வில், கிளி ஆகியவை காணப்படுகின்றன. துண்டிக்கப்பட்ட மகிஷாசுரனின் தலைமீது துர்கை நிற்கும் வடிவமைப்பானது, வழக்கமாகக் காட்டப்படும் உருவங்களில் இருந்து வித்யாசமாக சற்று மாறுபட்டு காணப்படுகின்றது. நெடிது உயர்ந்த நிலையில் இருப்பதால் தேவியின் உருவில் நளினம் அதிகமாகவே தென்படுகின்றது. இயற்கையாக மடக்கியுள்ள இடது கை மீது, எதன் மீதோ தன் தீவிர கவனத்தைச் செலுத்தியபடி ஒரு கிளி அமர்ந்துள்ளது. சடை மகுடம், பத்திர குண்டலங்கள், மார்புக்கச்சை, பூணூல் போல அமைந்த வைகாக்க்ஷம், போன்ற ஆபரணங்களை அணிந்துள்ள தேவி நின்று கொண்டிருப்பது மிக அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. சிற்ப நியதிகளைப் பின்பற்றி, சிங்கம், மான் முகங்கள் பின்புலத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் கொற்றவையின் சின்னங்களாகச் சங்க காலத்திலிருந்தே தமிழகத்தில் சிறப்புற்றிருந்தன என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

காலடியில் இருபுறமும் வீரர் இருவர் இந்த வெற்றித் தெய்வத்தை வழிபட்டு நிற்கின்றனர். அவர்களுக்கு அப்பால் தேவியை போலவே உடை அணிந்த காவல் பெண்கள் காணப்படுகின்றனர். தேவியின் வலப்புறம் உள்ள பெண் வலக்கையில் கத்தியும் இடக்கையில் கேடயமும் தாங்க, இடப்புறம் உள்ளவள் நீண்ட வில்லைக் கையில் தாங்கி நிற்கிறாள். மேலே இருபுறமும் கணங்கள் உள்ளன. கீழே இரு பக்தைகள் மண்டியிட்டுத் தொழுது கொண்டுள்ளனர்.


Gajalakshmi Panel… Gajalakshmi is sitting on a lotus pedestal. She is shown with two hands, holding a lotus flower. Wearing ornaments on the neck, ears, and Channaveeram like ornament. Two ladies are holding pots of water. While the left-side elephant is pouring water on Gajalakshmi, the right-side elephant is taking the pot from the hand of another lady. It is beautifully shown by the sculptor that the pot is with the lady and Elephant’s trunk. The extreme ladies are holding something in a basket with flowers.

கஜலக்ஷ்மி தொகுப்பு… இந்த தொகுப்பில் கஜலக்ஷ்மி தாமரை மேடைமீது இருகரங்களிலும் தாமரை மலரை ஏந்தி அமர்ந்து இருக்கின்றார். இருபுறமும் இருக்கும் பெண்கள் தண்ணீர்க் குடத்தை ஏந்தி நிற்கின்றனர். மேலே உள்ள யானைகளுள் ஒன்று லக்ஷ்மி மீது தண்ணீரை ஊற்றுகின்றது. அதே சமயத்தில் வலதுபுறம் உள்ள யானை தண்ணீர் குடத்தை மற்றொரு பெண்ணின் கையில் இருந்து வாங்குகின்றது, குடம் பெண்ணின் கையிலும் யானை துதிக்கையினால் குடத்தைப் பற்றி இருப்பது போலவும் செதுக்கியது மிக மிக அருமை. இங்கு சிற்பியின்  திறமை மிக அழகாக வெளிப்பட்டு இருக்கின்றது. கடைசியில் இருக்கும் இரு பெண்களும் கூடையில் மலர்களை ஏந்தி நிற்பது போல காணப்படுகின்றனர். அனைவரும் பத்ர குண்டலம் அணிந்து உள்ளனர்.
 

Ref: 1. Kanchipuram Mavatta Tholliyal Kaiyedu.
      2. Mamallapuram by Prof. Swaminathan
      3. South Indian Inscriptions, Volume. XII, Nos 15, 17, -23, 28, 38,             116 and 117. 

LOCATION OF THE CAVE TEMPLE: CLICK HERE




Ardha mandapam Simha Pillar
Ardha mandapam pillar Amalaka & Tharanga pothyal. 

--- OM SHIVAYA NAMA ---

2 comments:

  1. Alexander Rea’s picture doesn’t match with the adhivarahar temple sir

    ReplyDelete
    Replies
    1. The photos are changed Dr. Thanks a lot for pointing the mistake.

      Delete