The
visit to this Trimurti Rock Cut Cave Temple,
was a Part of the “Mamallapuram Heritage Visit”, under the title – “Known
Mamallapuram, Unknown places - தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள்” organized by SASTRA & Chithiram Pesuthada Groups on 19th
March 2023. This is one of the group of monuments of
Mamallapuram a UNESCO Heritage site of Tamil Nadu. This Rock cut cave is assignable to the Pallava King Parameswaravarman-I, ( 672 - 700 CE ) and on typological ground Mamalla Style.
This Trimurti Rock
Cut Cave mandapa is excavated for Murugan, Shiva, Maha Vishnu, and a Koshta for
Durgai. The front facia of this rock-cut cave is with prastaram which consists
of valapi, Kapotam with nasikudus, and Vyyalavari. The Hara elements are above
the prastaram. All three sanctums are in a row with Dwarapalakas. The Centre
Shiva’s Shrine has little protruding front compared to Murugan and Maha Vishnu
Shrines. This Rock Cut Cave is believed to be a completed cave shrine in all
respects. The respective deities are chiseled on the back side wall of the
sanctum sanctorum is a special one. This Cave’s Sculptures are on par with the beauty of the Sea Shore temples and all Rathas.
This is the surprising and unexpected new experiment of Atyantakama, keeping
all three deities Maha Vishnu, Shiva, and Murugan in place of Brahma in a row
and Durgai in a koshtam.
திரிமூர்த்தி மண்டபம்.... கருவறையின் முன்பு
அர்த்தமண்டபம் / முகமண்டபம் போன்ற அமைப்பு ஏதும் காணக் கூடவில்லை. மூன்று
கருவறைகளும் வரிசையாக உள்ளன. முதலில் வடப்புறத்தில் உள்ள கருவறையில் முருகன்
உருவமும், நடு கருவறையில் சிவனின் உருவமும், மூன்றாவது கருவறையில் திருமாலின் உருவமும் உள்ளன. மேலும்
தென்கோடியில் ஒரு மாடத்தில் / கோஷ்டத்தில் செதுக்கப்பட்டுள்ள துர்கை சிற்பம்
எழிலிலும் சிற்பக்கலையிலும் மற்ற அனைத்தையும் புறம் தள்ளுகின்றது.
இந்தக் குடைவரைக் கோவில், அனைத்து ரதங்கள்.
கடற்கரைக் கோயில்கள் ஆகியவை சேர்ந்த தொகுப்பை மாமல்லபுர சிற்பக் கலையின் உன்னதம்
என்றே கூறலாம். இதன் அமைப்பு பஞ்ச பாண்டவ ரதங்களின் எழிலை ஒத்துள்ளது. மாமல்லபுரம்
குடைவரைக் கோயில்களுள், இக்கோயில் ஒன்றுதான் பெரும்பாலும் முற்றுப்பெற்ற நிலையில்
உள்ளது. கடவுளர்களின் உருவங்கள் கருவறைச் சுவரில் நேரடியாகவே குடைந்துள்ளது
இக்கோயிலின் ஒரு சிறப்பம்சமாகும்.
மூன்று மூர்த்திகளுக்கும் அவரவர்களுத் தனியாக கருவறை,
கூடுதலாக துர்கைக்குத் தனியாக ஒரு மாடம்
என அமைக்கப்பட்டுள்ளது. பல்லவன் அத்யாந்தகாமன், ராஜசிம்மனின் புது முயற்சியில்
பிரம்மாவுக்கு பதிலாக முருகன். அத்துடன் ஆச்சர்யம் அவனது சோதனை முடிந்துவிடவில்லை.
கருவறைகளில் வழிபட நேரடியாக புடைப்புச் சிற்பங்கள். தொடர்ந்து மேலே முகப்பிலும்
கபோதம், கூடுகளுடனான அலங்காரங்கள். இவை எல்லாம் கலந்து அக்கோவிலின் கம்பீரமான
எழில் மிகு தோற்றம் பரவசம் அளிக்கிறது.
எல்லாச் சிற்பங்களும் ஒரே மாதிரியாக, வலது கரம்
அபயம் அளித்துக் கொண்டு, இருக்க, இடது கரம் இடுப்பில் வைத்தபடி ( கடி ஹஸ்தத்தில் )
செதுக்கியது போற்றத்தக்கது, சிற்பக் கலையின் நியதி, வரைமுறைகளை ஒத்து
வடிவமைக்கப்பட்டுள்ளன. உயிரோட்டம், அமர்ந்திருக்கும் பக்தர்கள் மூலம் நமக்குத்
தெளிவாகிறது.
Maha
Vishnu Shrine... In Maha Vishnu
Shrine, Maha Vishnu is in standing posture holding Changu and Chakra in the
upper hands and lower right hand in abhaya hastam and left hand in kadi hastam.
He wears Greeda makuta, ornaments in the ears, on the neck, Yanopaveetha, and Utharabandham.
Two bhuta ganas and two devotees are on both sides. All are in raised hands
symmetrically.
விஷ்ணு
கோவில்... இரு
வாயிற்காப்போரும் பல்லவர் காலத்து வைணவ முறையில் உள்ளனர். அரச தோற்றத்துடன்
இளைஞர்களாக, முறைப்படி உடை அணிந்து, கிரீட மகுடம் அணிந்து, புன்னகையுடன்
வரவேற்றபடி குறுகலான பிறைகளில் காட்டப்பட்டுள்ளனர். சிற்பக்கலை முறைகளை மீறி இருப்பவை
விஷ்ணு அறையில் உள்ள தேவ கணங்கள்தாம்.
Shiva’s
Shrine... In this rock-cut
cave, Shiva is in a sama Banga standing posture, holding accamala and Mazhu in
the upper hands. Lower right hand is abhaya hastam and left hand is kadi
hastam. Shiva is with jada makuta, wearing padra kundala in ears, ornaments on
the neck, and vastra yagnopaveetha. The devotees at his feet are doing pooja
with flowers. The Dwarf Shiva ganas are on the top, and one hand is in raised
condition. Dwarapalakas are on both sides entrance of the sanctum sanctorum. A
Latter period Shiva Lingam without avudayar is installed in the sanctum
sanctorum.
சிவன்கோயில்…
வாயிற் காப்போர்கள் இருவரும்
குறுகலான மாடத்தில் ஒருக்களித்தபடி நிற்கின்றனர். ஜடாமகுடம், பூநூல், கையில்
வலைகள், காதில் பத்ரகுண்டலம் அணிந்து காணப்படுகின்றார். கருவறை சுவற்றில் சிவனின்
உருவம் சமபங்க நின்றநிலையில் காட்டப்பட்டு உள்ளது. ஜடாமகுடம், காதில்
பத்ரகுண்டலம், கழுத்தில் பூநூல் மற்றும் ஆபரணமும் காட்டப்பட்டு உள்ளது. அடியவர்கள்
இருவரும் சிவனை மலர்களால் அர்சித்து வணங்கும் காட்சி அருமை. மேலே இருபுறம்
பூதகணங்கள் காட்டப்படுள்ளனர். கருவறையின் தரை தளத்தில் சமீபகாலத்திய சிவலிங்கம்
ஆவுடையார் இன்றி காணப்படுகின்றது.
Murugan
Shrine… Murugan as Brahma Sastha is in standing posture with one head
and 4 hands. The upper hands are holding a lotus flower and Kamandalam or an
accamala. Lower hands are in abhaya hastam and left hand is in kadi hastam. He
wears Greeda makuda, padra kundalam and Channaveeram. The devotees are at his
feet and Ganas are with raised hands. The Dwarapalakas seem to be aged with beards,
holding flowers (..?) in their hands.
முருகன்
கோவில்... ஒற்றை முகத்துடன் காணும்
முருகன், புடைப்புச் சிற்பமாக பிரம்ம சாஸ்தா உருவில் காணப்படுகின்றார். முருகனின்
நின்ற உருவம் எழில்மிகு தோற்றமாக உள்ளது. நான்கு கைகள் இருக்கின்றன. இப்படித்தான்
பிரம்மனுக்கு முருகன் வேதோபதேசம் செய்தார் என்பதைக் காட்டுகின்றது.
சமபங்க நிலையில் தெய்வ உருவம் இருக்கவேண்டிய
சாஸ்திரப்படி, வலது கை அபய ஹஸ்தமாகவும், இடது கரம் கடி ஹஸ்தமாகவும், . மேல் இடது கை தாமரையும், மற்றொன்றில்
கமண்டலமும் ( அட்சர மாலையாகவும் இருக்கலாம் ) காட்டப்பட்டு உள்ளன.
சன்னவீரம் என்று கூறப்படும் உருத்திராட்ச மாலை
மார்பின் இரு பக்கங்களில் இருந்தும் குறுக்காக அணிவிக்கப்பட்டுள்ளது. மேலுள்ள தேவ
கணங்கள் ஒரு கையில் நைவேத்தியப் பாத்திரத்துடனும் மற்றொரு கையில் தண்டுடனும்
காணப்படுகிறார்கள்.
முருகனின் காலடியின் இருமருங்கிலும் ஜடாமுடி
தரித்த இரண்டு அடியார்கள் துணியால் ஆன பூணூல் அணிந்து, முழங்காலிட்டு
அமர்ந்துள்ளனர். ஒரு கரத்தை வணங்கும் வகையிலும், மற்ற கரத்தை மார்பிலும்
வைத்துள்ளனர். மேற்பகுதியின் இரு புறத்திலும் கணங்கள் காணப்படுகின்றனர். தென்புறக் கணத்தின் கையில்
கிண்ணம் ஒன்று உள்ளது. இருமருங்கிலும் சடைமுடி தரித்த, பூணூல் அணிந்த தவ
முனிவர்கள் கருவறையைக் காவல் காக்கின்றனர்.
Durgai… Durgai is standing on Mahishan’s head in a sama Banga posture in a koshtam. She looks slim and elegant. Durgai is with 8
hands, holding Changu and Chakra in the upper hand, and various weapons on the
other hand. Wears Greeda makuda, padra kundala, on the neck and yagnopaveetha.
The dress knot frills are shown on both sides.
துர்கை..
தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்க
மகிஷாசுரனை வென்று, அவனது கொய்யப்பட்ட தலை மீது நிற்கும் எட்டு கைகள் கொண்ட துர்கை
இங்கு கிரீடமகுடம், காதுகளில் பெரிய பத்திர குண்டலங்கள், மார்புக் கச்சை,
சன்னவீரம், இடுப்பில் மடிப்புகளுடன் கட்டப்பட்டு இரு மருங்கிலும் முடிச்சுடன் உள்ள
ஆடை ஆகியவற்றுடன் காணப் படுகிறாள்.
அன்னை எட்டு கரங்களில் சக்கரம், சங்கு, அம்பு, கத்தி,
கேடயம் போன்ற ஆயுதங்களை ஏந்தி இருக்கின்றார். துர்கை இருக்கும் பிறை அழகாக அலங்கரிக்கப்
பட்டுள்ளது. பல்லவர் காலத்து மகரதோரணம் ஒரு சிறப்பம்சம். இரண்டு மகரங்களும் மேலே
தொங்கும் அலங்காரமான வால்களுடன் காணப்படுகின்றன. திருவாச்சி என்று தமிழில்
அறியப்படும் இந்த மகர தோரணம் மிகச் சிறப்பாக வடிக்கப்ப்ட்டுள்ளது.
Ref: 1. Kanchipuram Mavatta Tholliyal Kaiyedu.
2. Mamallapuram by
Prof. Swaminathan
3. SII Volume. XII
LOCATION
OF THE CAVE TEMPLE: CLICK HERE
---
OM SHIVAYA NAMA ---
No comments:
Post a Comment