Friday 21 April 2023

Sri Vaikuntha Perumal Temple / மணிமங்கலம் ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோயில், Manimangalam, Kanchipuram District, Tamil Nadu.

The Visit to this Sri Vaikunta Perumal temple was a part of The Adyar Cultural Mapping. During our last visit to this temple ( THE ADYAR - a cultural mapping CLICK HERE ),  we could not see the sanctum since the entrance was locked. This post is an updated post with History & Inscriptions, etc,.
 

Moolavar : Sri Vaikuntha Perumal

Some of the Salient features of this temple are....
The temple is facing east with balipeedam and Garudan. A metacolour shed mandapam is in front of the ardha mandapam. 
 
This a very simple temple with vimana or a Rajagopuram. Perumal is in a sitting posture with Sridevi and Bhoodevi. Perumal’s upper hands hold the conch and Disc and lower right hand in abhaya hastham and left hand fingers are closed and resting on the lap, which is unusual ( The reason also not known).

Vinayagar sannidhi is on the left side of the entrance.  As per the adhistanam and Virudha kumudam ( circular ), the  temple may belongs to Chozha period.

HISTORY AND INSCRIPTIONS
We could find 2 pillars with inscriptions and the temple belongs to Chozha Period. The temple also has the Pandya period inscriptions with their emblem. The inscription reference : Tholliyal Nokkil Kanchipuram mavattam by Sa Krishnamurthy.

மணிமங்கலம் என்ற ஊர் ரத்னகிரஹார அல்லது ரத்னகிராமா என வடமொழியில் வழங்கப்பட்டுள்ளது. மணி-ரத்னம். மங்கலம் - கிராமம். கிராமமே ஊருமாகும்.

வைகுந்தபெருமாள் கோயிலில் உள்ள தூணில் முதலாம் இராசராசனுடைய கல்வெட்டுகள் உள்ளன. முதல் கல்வெட்டு மன்னனுடைய 15 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டுப் பிரமதேயம் மணிமங்கலமாகிய உலோகமகாதேவி சதுர்வேதி மங்கலத்துப் பெருமக்கள் எடுத்த முடிவினைக் கல்வெட்டாக வெட்டி வைத்துள்ளனர்.

பல்வேறு நபர்களிடமிருந்து 800 குழி நிலத்தைப் பெற்று நுந்தா விளக்கு எரிக்கவும். பெருந்திருவமுது காட்டவும், தண்ணீர்ப் பந்தலில் தர்மம் செய்யவும் ஸ்ரீகார்யம் கரணப்பெருமக்கள் உடன்பட்டனர். ஸ்ரீகிருஷ்ணன் கோயிலும் சுட்டப்படுகிறது. பனங்காட்டேரிவதியின் மேல்சிறகு சாணூர மாத்தெரு என்ற இடம் சுட்டப்படுகிறது. சான்றாரை இச்சொற்றொடர் கட்டக்கூடும்.

முதலாம் இராஜராஜனுடைய 22ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு சிதைந்திருந்தாலும் சில முக்கிய விவரங்களைக் கூறுகிறது. சங்கராந்தி (பொங்கல்) எனப்படும் சங்கரமம் இரண்டு கூறப்படுகிறது. அதாவது தட்சிணாயண, உத்தராயண சங்கராந்தி எனலாம். இவ்விரண்டுக்குத் தலா தூணிப்பதக்கு (அரிசி?) வழங்கப்படுகிறது. சபையார் பணிக்க எழுதியவன் கடிகை மத்தியஸ்தன் அந்தக்கூர் ஸ்ரீமாதவன் ஆவான். காஞ்சியில் இருந்த கடிகையில் படித்தவன் போலும், இக்கல்வெட்டிலும் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலே இடம் பெறுகிறது.

முதல் குலோத்துங்கன் ஆட்சியின்போது (1082). இருமடிமென்கண்ட சோழச்சருப்பேதி மங்கலத்துச் சபையிடம் தேவதானமாக நிலம் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் இராசராசன் காலத்தில் விளக்கு வைக்கக் கொடை அளிக்கப்பட்டுள்ளது. மணிமங்கலத்தில் வாழும் சீரடி கண்ணன் மகன் ஏழுகிளைசிங்க மன்றாடியிடம் 90 ஆடுகள் விளக்கிற்காக வழங்கப்பட்டன.

கைலாசநாதர் கோயிலில் இருக்கும் கல்வெட்டு சகம் 1450 எனலாம். சில மண்டபங்களை ஏற்படுத்தியும் தோப்புச்சாலை, மரம் உண்டாக்கியும் பயிர் செய்யவும் மேலே குறிப்பிட்ட சிந்தையதேவ மகாராஜாவே ஏற்பாடு செய்துள்ளார். வண்டுவராபதி கோயிலில் கங்கராஜாவின் மண்டபம், கயிலாசநாதர் கோயிலில் நரசயர் மண்டபம், தன்மீச்சரமுடையார் கோயிலில் சிந்த இராஜாவின்மண்டபம், வீற்றிருந்த பெருமாளுக்குக் குமார வஸப்பர் மண்டபம் எனப் பல மண்டபங்கள் கல்வெட்டில் உள்ளன. இம்மண்டபங்களையும் தோப்புச் சாலை மரங்களையும் பேணுவதற்கு வருடத்திற்கு 24 பணமும் வழங்கப்பட்டது. சந்தைக்குப்பம் என்ற ஊரவரைக் கட்டளை இடச் செய்யப்பட்டது. பண்டிராசாக்கள் சந்தான பரம்பரையும் நடத்தக் கடவோம் என்று இதிலும் வருகிறது.

LOCATION OF THE TEMPLE :CLICK HERE 



--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment