Sunday, 9 April 2023

Tiger Cave / Puli cave / Yazhi Cave, An UNESCO Heritage Site, Mamallapuram, Chengalpattu District, Tamil Nadu.

The visit to this Tiger Rock cut cave, was a Part of the “Mamallapuram Heritage Visit”, under the title – “Known Mamallapuram, Unknown places - தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள்” organized by SASTRA & Chithiram Pesuthada Groups on 19th March 2023.  This is one of the group of monuments of Mamallapuram a UNESCO Heritage site of Tamil Nadu.


This 8th-century Pallava period cave was hewed /chiseled out of a monolithic rock at Saluvankuppam. This cave is unfinished and the experts have different opinions of this Tiger cave. Yazhi ( Tiger ) heads are chiseled around the face with a rectangular mandapam, which are not similar to each other and look towards the center of the mandapam. On both sides of the center, two men are sitting on a lion and watching the stage. There is no statue nor inscription found in this monument. As per the experts, this might have been used for the King and his citizens gathered for Indra Vizha, A stage for the King to see functions, Kotravai Temple, Urchava mandapam Music concerts stage, Dancing stage, Open air auditorium, etc.


புலி குகை – சாளுவன் குப்பம்அத்யந்தகாமனின் எண்ணற்ற கலையுணர்வு எழுச்சிகளில் இதுவும் ஒன்று எனக் கொள்ளலாம். மற்ற எந்தக் கோவிலையும் போல் அல்லாது தனித்து நிற்கும் இதன் தன்மை, கட்டப்பட்டதன் நோக்கம் எதுவாக இருக்கலாம் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. இத்தொகுப்பு ராஜசிம்ம பல்லவன் காலத்தில் இந்திர விழா அல்லது கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் போது அரசர் அந்நிகழ்வுகளைக் காணத்தக்க வகையில் குடையப்பட்டு இருக்கலாம்  என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அரங்கமாக உள்ள இவ்வமைப்பின் முகப்பு அரை நீள்வட்ட வடிவில் பதினோரு யாளிகளின் ( புலி என்று தவறாக அழைக்கப்படுகின்றது ) தலைகளைக் கொண்டுள்ளது. அனைத்து யாளியின் தலைகளும் அரங்கத்தின் மேடையையே நோக்குவது போல உள்ளன. ஒரு யாளியைப் போல மற்றொன்று இல்லாது வடிவமைக்கப்பட்டுள்ளது  ஒரு தனி சிறப்பாகும். அரங்கத்தின் இரு மருங்கிலும், காவலாளிகள், பாயும் புலிகள் மீதிருந்து கண்காணிக்கின்றனர்,

இப்பாறையின் தெற்குப் பகுதியில் சில முடிக்கப்படாத சிற்பங்கள் உள்ளன. சுருட்டியிருக்கும் தும்பிக்கையுடனும் பெருங்காதுகளுடனும் கூடிய யானைகள் மீது அம்பாரிகளில் தெய்வ உருவங்களைக் காண முடிகிறது. தொடர்ந்து தெற்கில், முடிக்கப்படாத குதிரை உருவம் ஒன்றும் உள்ளது. இந்த உருவ அமைப்புகள் எதை விளக்க முயற்சி செய்கின்றன என்பதும் ஒரு புதிரே. அதே போலப் பாறையின் வடக்குப் பக்கத்தில் ஆரம்ப நிலையிலேயே நிறுத்தப்பட்ட ஒரு பெரும் சிம்ம உருவத்தையும் அதன் வயிற்றுப்பாகத்தில் ஒரு பிறையையும் / மாடத்தையும் காண்கிறோம். கடற்கரைக் கோவில்கள் வளாகத்தில் இருக்கும் சிம்மக்கோவில் போன்ற உருவத்தை உருவாக்க முயற்சி செய்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.




Ref: 1. Kanchipuram Mavatta Tholliyal Kaiyedu.
       2. Mamallapuram by Prof. Swaminathan
       3. SII Volume. XII

LOCATION OF THE TIGER CAVE: CLICK HERE 

These are the previous Visit details… A continuation post to my previous visit to Murugan Temple, Saluvan Kuppam, Mamallapuram - A Heritage Visit - Part -1. 
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment