Friday 21 April 2023

Sri Rajagopalaswamy Temple / மணிமங்கலம் இராச கோபாலசாமி கோயில், Manimangalam, Kanchipuram District, Tamil Nadu

During our last visit to this temple ( THE ADYAR - a cultural mapping CLICK HERE ),  we could not see the sanctum since the entrance was locked. This time the Battar was kind enough to open the door for us, when we went little late.



Moolavar     : Sri Rajagopala Swamy
Thayar        : Sri Sengamalavallai

Some of the salient features of this temple are...
The temple is facing east with an entrance arch. Kodimaram, balipeedam and Garudan are in front of the mandapam. The moolavar is in standing posture with conch on his upper right hand and disc on the left upper hand, which is reverse of the usual posture. The lower right hand with vara hastham and left hand holds a gatha. Sridevi and Bhoodevi are on both sides.

In koshtam, Vinayagar, Yoga Narasimhar, Perumal with prayoka chakra, Paramapatha Narayanan sitting under the hood of adhiseshan with prayoga chakra, Vishnu Durgai, which are  unique feature of this temple.

In the praharam sannidhi for Sengamalavalli Thayar and Andal and a 4 Pillars utsava mandapam. In the thorana above koshtam reliefs of Dakshinamurthy, Kalinga Narthanar, Lakshmi, etc,. In the boothavari reliefs of Sita in captivity, Geethopadesam etc,.



HISTORY AND INSCRIPTIONS
The temple was built during 10th Century, Rajaraja-I's period or before. The inscriptions recorded from this temple belongs to  Chozhas and Vijayanagaras. Inscriptions ref: Tholliyal Nokkil Kanchipuram Mavattam, Sa Krishnamurthy. 

மணிமங்கலம் என்ற ஊர் ரத்னகிரஹார அல்லது ரத்னகிராமா என வடமொழியில் வழங்கப்பட்டுள்ளது. மணி-ரத்னம். மங்கலம் - கிராமம். கிராமமே ஊருமாகும்.

இராஜகோபால் பெருமாள் கோயில், வண்டுவராபதி பெருமாள் கோயில் எனவும் வழங்கப் பட்டுள்ளது. இக்கோவிலில் இருந்து 25 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. முதலாம் இராஜன் என்ற இராசகேசரி காவத்தில் ஊர்ப்பெயர் லோகமாதேவி சதுர்வேதி மங்கலம் என மாற்றப்பட்டது. ஸ்ரீகத் துவாரபுரி தேவர் என்று வடமொழிப் பகுதியில் இறைவன் பெயர்
 
மணிங்கலம் கிராமத்தில் 4000 குழி நிலம் விலைக்கு வாங்கப்பட்டுக் கோயிலுக்கு அளிக்கப்பட்டது. துவாபுரி தேவர்க்குச் சபை விற்றுத் தந்ததில் மேல்பிடாகை மாகனூர் பெரியபுத்தேரி கலிச் சங்காலு குளத்தூர் 2000 குழி ஆகும். எஞ்சியவை மணிமங்கலத்தின் தெற்கு, அமணிப்பாக்கமாகும். மேலூர் கல்வெட்டில் இடம்பெறுகிறது. இறையிலி செய்யும் நிலத்திற்கு எச்சோறு வெட்டிவெய்தி காணம் எப்பேர்பட்டதும் காட்டப் பெறாதோம் என்றும் காட்டினார் மன்றத்தில் இறுத்தி தண்டிக்கப்படுவர் என்றும் உள்ளது.
 
இராசராசனின் 25ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு கருவறை வடக்கு மேற்குச் சுவரில் உள்ளது. செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டு மணிமங்கலமான ராஜசூளாமணி சதுர்வேதிமங்கலத்துச் சபையின் தீர்மானம் கல்வெட்டில் இடம்பெறுகிறது.
 
திருவோணத்து நாளில் ஊர் பிரம்மஸ்தானத்து சபை கூடியது. ஸ்ரீமத் துவராபதியான காமகோடி விண்ணகர் ஆழ்வார்க்குத் திருவமுதுக்கும் அர்ச்சநாபோகத்துக்கும் 100 காசு முதலீடாக வைக்கப்படுகிறது. அக்காசுகொண்டு 2200 குழிநிலம் வாங்கி இறையிழிச்சித் தரப்படுகிறது. எல்லைகள் கூறும்போது பெருநல்வதி, ஆலைமேடு, மனையறுதி வாய்க்கால். கண்டிலேரி, பாவைதுறை வாய்க்கால் மற்றும் திருவையோத்தி தேவர் நிலம் கூறப்படுகிறது.
 
உள்பிரகாரத்தின் வெளிப்புறக் கிழக்குச் சுவரில் 'திருமாது புவி' யென்ற பெமய்க்கீர்த்தியுடன் கூடிய கல்வெட்டுள்ளது. ரோகிணி நாளில் பிரம்மஸ்தான மண்டபத்தில் சபை கூடி ஸ்ரீமத் துவரா பதியான ஸ்ரீகாமக்கோடி விண்ணகராழ்வார் கோயிலுக்கு நிலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேனாபதிகள் ஐயங்கொண்ட சோழ பிரம்மாதிராஜர் தாயார் காமக்கவ்வையன் பக்கம் ஸவம் கொண்டு (பொருள் கொண்டு) சபை இறையிழிச்சித் தருகிறது. ஊர்க்கணக்கன் அலங்காரன் சீராமன் வரைவு எழுதியுள்ளான். இறைவன் பெயர் காமக்கோடி விண்ணகராழ்வார். தானம் தந்தவர் பெயர் காமக்கவ்வையள்,
 
'திருவளர்' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி உள்ள வீரராஜேந்திரனின் கல்வெட்டு மண்டபத்தின் வடபுறச் சுவரில் உள்ளது. உத்தரநாளில் பிரம்மஸ்தானத்து பெரிய பண்டபத்தே சபை கூடியது. ஜீவிதமுடைய சேநாபதிகள் பிரம்மாதிராஜனுடைய தமப்பநார் மஞ்சிப்பயநாரான ஐயசிங்க குலாந்தக பிரம்மராயர் முதலீடு அளித்து இறையிலியாக நிலம் வழங்க ஏற்பாடு செய்கிறார். நிலத்தின் எல்லைகள் கூறும்போது பெருந்தூம்பு, பாரதவாய்க்கால், பெரியேரி, உருத்ரம கிரமவித்தன் தோட்டம் ஆகியவை கூறப்படுகின்றன.
 
தந்தை, தாய் மகன் மூவரும் இக்கோயிலுக்குத் தானம் புரிந்துள்ளனர் என்பது சிறப்பாகும். கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள சோமேசர் கோயிலில் தந்தை தாயாருடன் மகனும் தானம் தந்தமை மூன்று கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு இருக்கின்றது.
 
25-1-1118இல் வெள்ளிக் கிழமையன்று அளித்த தானம் குறித்த கல்வெட்டு மண்டபத்தின் மேற்குக். சுவரில் உள்ளது. முதலாம் குலோத்துங்களின் 48 ஆவது ஆட்சியாண்டில் குலோத்துங்க சோழவள நாட்டுக் குன்றத்தூர் நாட்டு மணிமங்கலமான பாண்டியன் இருமடிவென்று கொண்ட சோழசதுர்வேதிமங்கல மகாசபை கூடி சில முடிவுகளை எடுத்துள்ளது. எம்பெருமான் கோயில் பெருமாள் கோயில் அழைக்கப்பட்டுள்ளது.
 
இராஜேந்திர சோழவளநாட்டு அம்பத்தூர் நாட்டு நுளப்பியாற்றுக் கிழான் கூறப்படுகிறர்.  தானம் தந்த நாள் சதைய நாளாகும். தண்டகநாடு, குண்டூர், இராயூர், நாணமாலை ஆகிய ஊர்கள் இடம்பெறுகின்றன. 1050 குழிநிலம் இறையிலியாகத் தரப்படுகின்றது. சபையில் நின்று ஐய்யக்கி வண்டுவராபதி பிச்சன் பணிக்க, பணியால் வேளான் பேரான் ஒப்பமிட்டுள்ளான்.
 
மண்டபத்தின் தென்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு நடுவிற்கோயிலான புரவுவரி விண்ணகராழ்வார் கோயில் ஸ்ரீகாரியம் செய்கின்ற அள்ளூர் கேசவபட்டன் அரணைப்புறத்துத் திருவாய்க்குல பத்தன் என்பவன் ஆழ்வார்க்கு ஸ்ரீபலி எழுந்தருள மூவரிடமிருந்த 2166 குழி நிலம் பெற்றுள்ளதைக் குறிப்பிடுகின்றது.
 
விக்ரம சோழனுடைய நான்காவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு அம்பத்தூர் நாட்டு நுளப்பியாறு கிழான் கேசவன் மற்றும் சிலர் நிலங்கள் வாங்கி  கோயிலுக்கு அளித்ததைக் குறிப்பிடுகின்றது. கல்வெட்டில் புல்வாய்ப்பாப்பான் குளத்தூர் இடம் பெறுகின்றது. வண்டுவராபதி திருவாய்க்குலத்தாழ்வார்க்கு ஜன்ம நட்சத்திரம் உரோகினி என்பதால் மாதந்தோறும் உற்சவர் புறப்படுவதற்கும் திருமஞ்சனம் அமுது செய்தருளுகைக்கும் நிலம் வழங்கப்படுகின்றது. மணிமங்கலமுடையான்  இலக்குவணன், இராமதேவன் அகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
 
விக்ரம சோழனுடைய 13 ஆவது ஆட்சிகல்வெட்டு எம்பெருமானுக்குத் திருவிடையாட்டமாக நிலம் விட்டதைக் கூறுகிறது. இலக்குவணன் பஞ்சநெதி ஆளும் பிரான் மகாஜனப் பிரியன் என்ற ஊர்க்கணக்கனும் சபையாரும் இறையிலிச்சித் தருகின்றனர்.
 
'பூமருவிய திருபாது' என்று தொடங்கும் இரண்டாம் இராசராசனுடைய கல்வெட்டில் கோயிலில் ஸ்ரீகாரியம் செய்கிற இராயூர் விஷ்ணுபட்டன், ஸ்ரீவைஷ்ணவ காரியம் செய்கிற அரட்ட முக்கிதாசன் பெயர்கள் உள்ளன. ஊற்றுக்காடான அழகிய சோழநல்லூர் மங்கலங்கிழாந் வேளாந் மலைகுநிய நின்றான் என்பவன் மாதவபட்டனிடம் பொன்னிட்டு நிலம் வாங்கியுள்ளான். சபை இறையிழிச்சித் தருகிறது. நிலத்தில் செம்பாதி அபூர்வி ஸ்ரீவைஷ்ணவராய் வந்தவற்கு உணவிடச் செலவிடவேண்டும். மணிமங்கலமுடையான் ஆனந்தன் போதன் வேளான் சீராமதேவன் வரைவு எழுதி ஒப்பமிட்டுள்ளான். இவ்வூர்த் தச்சக்காலில் செம்பாதியுடைய தச்சன் வடுகநாதன் திருவாய்க் குலமான தொண்டை நாட்டாசாரியன் கல்வெட்டு வெட்டியுள்ளான். ஊர் நடுவில் திருமுற்றத்தில் சபை கூடி முடிவு எடுத்துள்ளது.
 
மண்டபத்தின் தென்புறச்சுவரில் மூன்றூம் குலோத்துங்கனின் 12 ஆம் ஆட்சியாண்டும் கல்வெட்டு (4-12-1189) உள்ளது. கீழ்மாங்காடு நாட்டுத் திருச்கரத்துக் கண்ணப்பன் தூசி ஆதி நாயகன் நீலகங்கரையன் வன்னி நாயகநான உத்தமநிதிக் கண்ணப்பன் காசிட்டுக் கொண்டு விட்ட நிலம் அலங்காரப்பட்டி குழி 600 ஆகும். சபை இவனிடம் பொன் பெற்றுக்கொண்டு இறையிலிச்சித் தருகிறது. அரணைப்புறத்துத் தோணையபட்டன் பணிக்க, கணக்கன் ஆடல்வல்லான் சிவவாக்கிய தேவநான உத்தமபிரியன் ஆவணம் எழுதி உள்ளான்.
 
மண்டபத்தின் கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு திருச்சுரக் கண்ணப்பன் பஞ்சநெதி நீலகங்கரையன் கார்த்திகை மாதத்து பொலிட்டாகப் பழங்காசு 17 அளிக்க, அதனைப் பெற்ற வைஷ்ணவக் கண்காணி அரட்டமிக்கிதாசன் மற்றும் நடுவிற்கோயில் திருவடிப் பிடிக்கும் ஸ்ரீதர பட்டன் இருவரும் விளக்குகள் நான்கு எரிக்க உடன்படுகின்றனர். வண்டுவராபதி கோயிலில் இரண்டு விளக்கும்,  நடுவிற் கோயிலில் 1 விளக்கும் திருவயோத்திக் கோயிலில் ஒரு விளக்கும் எரிக்க உடன்பட்டனர்.
 
மூன்றாம் இராசராசனுடைய 13 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட மூன்று கல்வெட்டுகள் கிழக்குச் சுவரில் உள்ளன. அருளாளபட்டன், முத்துவலிச் சீரிளங்கபட்டன், மீஞ்சூர் எம்பெருமான் அடியான் விளங்கவந்தார். பெருங்குன்றத்துக் கண்ணந்தைகுப்பன் ஆகியோர் விளக்குகள் வைக்கக் காசுகள் அளித்துள்ளனர்.
 
இராஜகோபால் கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டு, தேவராயரின் ஆட்சியில் சக ஆண்டு 1357 இல் வெட்டப்பட்டதாகும். குலோத்துங்கசோழ வளநாட்டுக் குன்றத்தூர் நாட்டு மணி மங்கலமான கிராமசிகாமணி சதுர்வேதிமங்கலத்து வண்டுவராபதியெம்பெருமான் கோயில் தானத்தார் மதகு உடைந்ததால் அன்றாடம் நடக்கும் வாசிபடாத நற்பணம் 300க்கு 2000 குழி நிலத்தைச் சிறு நாச்சியார் மகளார் பாட்டிமா நாச்சியார்க்கு விற்று, சர்வமான்யமாக நில விலைப் பிரமானம் பண்ணிக் கொடுத்துள்ளனர். இந்நிலத்தின் வருவாயை நாச்சியார், கோயிலுக்கு அளித்துள்ளார்.
 
12 அடி கோலால் குழி இரண்டாயிரம் அளக்கப்பட்டது. இந்நிலத்திலிருந்து வரும் கடமை, பொன்வரி எம்பெருமான் தன்மமாகக் காலைச்சந்திக்கு நாள் ஒன்றுக்கு முரிவன் மரக்காலால் அமுதுபடி குறுணி, நெய்அமுது உழக்கு, கறியமுது, தயிரமுது, எரி கரும்பு, இலையமுது, அடைக்கா யமுது அளிக்கவகை செய்யப்பட்டது. கட்டளை நிறைவேற்ற உடன்பட்ட தானத்தார் பிரசாதத்தில் நாள் ஒன்றுக்கு இருநாழி துயிலமந்தான் பட்டரே கொடுக்க உடன்பட்டார். பாட்டிமாநாச்சி யார்க்கு வழங்க தானத்தார் சம்மதித்தனர் எனலாம். கோயில் கணக்கு மணிமங்கலமுடையான் வடமலைதாதர் துயிலமந்தான் பட்டர் ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர். சீராம பட்டரும் தெய்வப் பெருமாள்பட்டரும் சான்றாளர்களாக ஒப்பமிட்டுள்ளனர். நிலத்தை வாங்கி, காலை அமுது படிக்காக வழங்கிய பாட்டிமா நாச்சியார் திருவேளூரில் பதியுளார் என்பதால் தேவரடியார் எனலாம்.
 
மூன்றாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று (கி. பி. 1229) கோயில் பிரகாரம் கட்டியதைக் கூறுகிறது. 1234 இல் வண்டுவராபதி எம்பெருமானுக்குப் புலிமுகம் கொண்ட படிக்கட்டுகளைப் பிரமப்பிரியனும் அகோலமல்ல தேவனும் கட்டியுள்ளனர்.
 
மன்னன் பெயர் ஆட்சியாண்டு சகஆண்டு தெரியாத ஒரு கல்வெட்டு கருவறைத் தென் புறச் சுவரில் உள்ளது. ருத்ரோத்காரிவருஷம் மார்கழி மாதம் 2 ஆம் தேதி ரோகிணியுள்ள நாளில் கல்வெட்டு வெட்டப்படுகிறது, 16-17 ஆம் நூற்றாண்டு எனலாம். வண்டுவராபதி எம்பெருமானுக்குத் திருப்பணிப்பிள்ளை அதிகாரி ஆர்மல்லு நாய்க்கரும் அஞ்ஞூற்று நாற்பது சபையும் தானத்தாரும் --திருப்பள்ளி எழிச்சி சிறப்புவகை அதிகாரி சிறப்பு 1, சபையார் சிறப்பு 1, ஸ்ரீபுண்டரீகர் சிறப்பு 1, - மணிமங்கலம்முடையார்கள் சிறப்பு 1, அகம்படியார் சிறப்பு:1, திருக்கைக்கோளர் சிறப்பு 1, எம்பெருமான் அடியார் சிறப்பு 2, எண்ணெய் வாணியர் சிறப்பு 1, நாவிதர் சிறப்பு 1, என இவையாவும் சந்திராதித்தவரை நடத்த வேண்டும். நடத்தாத பொழுது விஷ்ணு துரோகியும் சிவத்துரோகியுமாவர் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
 
திருப்பள்ளி எழுச்சிக்காக மேற்படியாக வந்த இராசகரம் (வரி என்க), கொண்டு சபையும் தானத்தாரும் கட்டளை நிறைவேற்ற வேண்டும். அதிகாரி, சபை, தலா ஒரு காசு வரி தரவேண்டும். புண்டரீகர் சிறப்பு என்பது கோயில் சார்பாக வரி தருதலாகும். வெள்ளாளர் வேறு: அகமுடையார் வேறு கைக்கோளர் வேறு. இம்மூவரும் முதலியார் என வழங்கப்படுவார்கள். எம்பெருமான் அடியார் மட்டும் இரண்டு பணம் செலுத்த வேண்டும்.
 
கல்வெட்டில் வரும் சிறப்பு என்ற சொல் பல பொருள்களில் இடம்பெறினும் இங்கே இராசகரத்தின் பொருட்டு என்பதால் பணத்தைக் குறிப்பிடுகிறது.

கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டு சகம் 1450 எனலாம். சில மண்டபங்களை ஏற்படுத்தியும் தோப்புச்சாலை, மரம் உண்டாக்கியும் பயிர் செய்யவும் மேலே குறிப்பிட்ட சிந்தையதேவ மகாராஜாவே ஏற்பாடு செய்துள்ளார். வண்டுவராபதி கோயிலில் கங்கராஜாவின் மண்டபம், கயிலாசநாதர் கோயிலில் நரசயர் மண்டபம், தன்மீச்சரமுடையார் கோயிலில் சிந்த இராஜாவின்மண்டபம், வீற்றிருந்த பெருமாளுக்குக் குமார வஸப்பர் மண்டபம் எனப் பல மண்டபங்கள் கல்வெட்டில் உள்ளன. இம்மண்டபங்களையும் தோப்புச் சாலை மரங்களையும் பேணுவதற்கு வருடத்திற்கு 24 பணமும் வழங்கப்பட்டது. சந்தைக்குப்பம் என்ற ஊரவரைக் கட்டளை இடச் செய்யப்பட்டது. பண்டிராசாக்கள் சந்தான பரம்பரையும் நடத்தக் கடவோம் என்று இதிலும் வருகிறது.




LEGENDS
It was told that Sri Ramanujar had done service in this temple and if one worships Perumal of this temple, the eye related ailments will get cured.
   
LOCATION:CLICK HERE

 
 Dhakshinamurthy in the thoranam
 Kalinga narthanar in the thoranam
 Vinayagar 
Paramapatha Narayanan













A Jala with sculpture 
---OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment